Friday, March 15, 2019

சீனிவாசனைத் தெரியாது.... ஆனால்.... !!!!! (பயணத்தொடர், பகுதி 79 )

வீட்டோடு மாப்பிள்ளைன்னா யாருக்கு மதிப்பு?  நம்ம வஞ்சுளாவோட ஆத்துக்காரர் ஒரு ஹென்பெக்டு ஹஸ்பெண்டாம் !!!
திருவிடைமருதூரில் இருந்து ராயாஸுக்குத் திரும்பி வரும்போது நடுப்பகல்   மணி ஒன்னு. இன்றைக்கு என்னவோ ரொம்பவே பசி எனக்கு. நிறைய சுத்தி, நிறைய நடந்துருக்கேனே.....
பகல் சாப்பாட்டில் எனக்கும் ஒரு தாலி :-)

'கொஞ்சநேர ஓய்வுக்குப்பிறகு  ஒரு  நாலு மணிக்குக் கிளம்பிப் போகலாமா'ன்னு கேட்டேன். சாய்ந்திரம்தானே போகணுமுன்னார் 'நம்மவர்'.

"அது அங்கே....   இப்பப் போறது சீனிவாசனைக் கண்டுக்கிட்டு வர..."

ஙேன்னு முழிச்சார்.  அதானே .... யாருக்குச் சட்னு புரியும்?  இன்னொரு பெயரை எடுத்துவிட்டேன்..... 'நாச்சியார் கோவில்'

முகம் பிரகாசமாச்சு. 'கல்கருடர் இல்லை.....  போகலா'முன்னார்.

நம்ம ரமேஷுக்கு ஒரு நாலேகால்  மணிக்கு ரெடியாகும்படி சேதி சொல்லியாச்சு.  இதுக்கிடையில் அவருக்கு எங்கெயாவது போகணுமுன்னால் போய் வரட்டுமே..... எப்போ கிளம்பச் சொல்வாங்களோன்னு  எங்கேயும் அகலவிடாம வச்சுருக்கணுமா?
நாலுமணிக்கு காஃபி வரவழைச்சுக் குடிச்சதும் காரிடோர்  ஜன்னல் வழியா மஹாமகக்குளத்தைக் க்ளிக்கிட்டுக் கிளம்பி  ஸ்ரீ சீனிவாசப்பெருமாள் திருக்கோவில் வாசலுக்குப் போய்ச் சேந்தப்ப  மணி நாலே முக்கால்.

ராயாஸில் இருந்து ஒன்பதரை கிமீ தூரம்.  இங்கே கும்மோணத்தில் இருந்து பத்து கிமீ சுற்றளவுக்குள்  சுத்திவந்தால் போதும்.....  கணக்கிலடங்காத கோவில்கள் கண்ணிலே படும்.  இவையெல்லாமே  பழையகாலத்தில் கட்டப்பட்டவைகளே....  புதுக்கோவில்கள்  ஒரு நாலைஞ்சு இருக்கலாம்.... நம்ம விட்டலன் கோவில் போல....  (ஆனால் விட்டலன் கோவில் பிரமாண்டம் தனி வகை, கேட்டோ!!! )

இதே நாச்சியார் கோவிலுக்குப் பக்கம் (அரை கிமீ தொலைவுதான்) ஒரு சிவன் கோவில் இருக்கு. பாடல் பெற்ற தலமும் கூட.  ஸ்ரீ சித்தநாதேஸ்வரர் திருக்கோவில் என்று பெயர். சித்தர்கள் வழிபட்ட கோவிலாம்.  எத்தனை முறை இந்த நாச்சியார்கோவிலுக்கு வந்துருந்தாலும்,  வேறெந்தக் கோவிலுக்கும்  போனதில்லை. அடுத்த முறை ஒரு எட்டு அங்கேயும் போய் வரணும்.

அஞ்சு நிலை ராஜகோபுரவாசலுக்குப் பக்கம் இருக்கும் புள்ளையாரைக் கும்பிட்டதும் கோவிலுக்குள் போறோம். வாசலைத் தாண்டியதும், உண்டியல், பலிபீடம், கொடிமரம், பெரியதிருவடியின் சின்னச் சந்நிதியை வணங்குமுன்  ச்சும்மாக் கண்ணை நேரா அனுப்பினாலும் போதும்...........அதோ தூரத்தில் இருந்து பெருமாள் நம்மைப் பார்த்துக்கிட்டே இருப்பார்! 
( கோவில்களில் இப்பெல்லாம் உண்டியல்கள் நல்ல உசரமும் பருமனுமா அங்கங்கே எழுந்தருளி இருப்பதைக் கவனிச்சீங்கதானே? காசே தான் கடவுளடா என்பதால் அதுக்கும் ஒரு கும்பிடு போட்டுட்டுப் போகலாம். காசு காசுன்னு கையைப் பிடிச்சு இழுக்காது என்பதால் பிரச்சனை ஒன்னும் இல்லை)

கருகருன்னு  மின்னும் பதினாறு பெரிய பெரிய தூண்களுடன் இருக்கும் முன்மண்டபம் கடந்து படிகளேறி  உள்ளே போய்  இன்னும் சில மண்டபங்களைக் கடந்து  போகணும்.  அர்த்தமண்டபத்தில் நம்ம கல்கருடர், கண்களை அகலத் திறந்தபடி இருக்கார்.  அவரை வணங்கிட்டு, இன்னும் நாலைஞ்சு படிகள் ஏறிப்போனால் நம்ம சீனு! கல்யாணக் கோலத்தில்.  ரெண்டே கைகள்!  தாலிகட்ட இது போதும்!
வகுளவல்லி நாச்சியார், இங்கே கும்மோணத்தாண்டை இருந்தாலும் அவள் 'மதுரை'தான்!  இடுப்பில் சாவிக்கொத்தோடு ஒரு எட்டு முன்னால்  நிற்பாள்.

கோவிலைப்பற்றியும் கோவில்கதைகளையும் ஏற்கெனவே எழுதி இருப்பதால்..... எல்லாம் இப்போதும் அதே அதே....

சரியாப் பத்து வருஷங்களுக்கு முன்



மூணு வருஷங்களுக்கு முன்



இது  சமீபத்துலே  ஒன்னரை வருஷத்துக்கு முன்..

இன்னும்கூட அங்கங்கே எழுதி இருக்கலாம்.  தளத்தில் தேடணும்.....

சரி போகட்டும். வாசிக்க விருப்பமும் நேரமும் இருந்தால் அந்த மூணையும் எட்டிப் பார்த்துடுங்க.  படங்கள்  வேற அங்கேதான் நல்லா இருக்கு(!!!)

எனெக்கென்னமோ அப்போ நல்லா வந்துருக்குன்னு தோணுது.  அப்ப இப்போ?

கலிகாலத்தில் பொம்மநாட்டிகள் பேச்சைத்தான்  புருஷாள் கேக்கவேண்டி இருக்குமாம். (க்க்கும்.... கேட்டுட்டாலும்.....) அதை எல்லோருக்கும் உணர்த்தவே எம்பெருமாள், இப்படி எல்லா அதிகாரத்தையும்  வஞ்சுளவல்லிக்குக் கொடுத்துட்டாருன்னு  ஒரு இடத்தில் வாசிச்சேன்...... 
மேலே படம்:  கூகுளார் அருளியது.  நம்ம  தில்லக்கேணி பார்த்தசாரதி கருவறையிலும் இப்படி ஒரு கூட்டம் இருக்கும் :-)

கருவறைக்குள் கூட்டமா நின்னுருக்கும்   பெருமாளின்  உற்றார் உறவினர் (மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள்) எல்லோரையும் தரிசனம் பண்ணி வச்சார் பட்டர் ஸ்வாமிகள்.  நமக்கு சடாரியும் தீர்த்தமும் லபிச்சது! இடுப்பில் சாவி இருக்கான்னு ஒருமுறை கவனமாப் பார்த்துக்கிட்டேன் :-)

பிரகாரங்களை வலம் வந்து க்ளிக்ஸும் ஆச்சு. தசாவதார சிற்பங்கள் புதுசா என்ன?




 நம்ம நம்மாழ்வார் சந்நிதியும், உடையவர் சந்நிதியும் எப்பவும் மூடியேதான் இருக்கும் நாம் போகும்போதெல்லாம். இந்த முறை நம்ம உடையவர் கருணை காட்டினார்.

ரொம்ப சாதாரணமான சின்ன சந்நிதி.  சிம்பிளா உக்கார்ந்துருக்கார். சட்னு பார்த்தால்.....  வட இந்தியக்கோவில்களில்  மலைகளில் இருக்கும் சந்நிதியில்  இருக்கறாப்போலதான்.....  வெளியே கொஞ்சம் சுத்தம் செஞ்சு, வண்ணம் பூசி இருக்கலாம்.  சிமென்ட்டு சாந்து குழைக்க நல்ல இடம் பார்த்தார் ஒரு தொழிலாளி.....  ப்ச்...


அடுத்தாப்லே சமையலறைன்னு......   பக்கத்துலே அன்னதானக்கூடம்....  ஓ...  இது மடப்பள்ளி இல்லை. அன்னதானத்துக்குச் சமைக்கும் இடம். என்ன சொன்னாலும்....   சுத்தம் போதாதுதான்.....

கோவில் நந்தவனத்துக்குள்ளும் போக ஒரு சான்ஸ் கிடைச்சது.   சுமார். ஆனால் உள்ளே ஒரு பழைய  கட்டடம் இடிஞ்ச நிலையில். சீரமைச்சால் அழகா இருக்குமுன்னு தோணுது......
இந்தக் கோவிலை நம்ம கோச்செங்கட்சோழன் (அஞ்சாம் நூற்றாண்டு) காலத்தில் கட்டினாராம்.

தலவிருக்ஷம் வஞ்சுளமரம்.  மேடையைச் சுத்திச் சின்ன கம்பிவேலி
உள்ளே ஒரு புழுக்கமா இருக்குன்னு ஜாலியா மரத்தடியில் உக்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் ஜோடிகள், இப்பவும் அப்படியே....  மேடைக்கு பெயின்ட் அடிச்சவங்க, இந்த ஜோடிக்கும் கொஞ்சம் வண்ணம் தீட்டி இருக்கலாம்....
மழைநீர் சேகரிப்புக்கு ஒரு அமைப்பு. ரொம்ப நல்ல விஷயம்.....  ஆனால் இது இருக்கும் அழகில்  சொட்டுத்தண்ணீர் உள்ளே போகாது... ஒரு மழை பெய்ஞ்சதும்  சேறும் சகதியுமாத்தான் ஆகும் ...ப்ச்....
பொதுவா  கோவில் அவ்ளோ சுத்தமா இல்லை.....   அறநிலையத்துறை பொறுப்பில் இருக்கும் கோவிலில் வேலை செய்யறவங்களும்,  அந்தத் துறையைப் போலவே அலட்சியமா இருக்கக் கத்துக்கிட்டாங்க.
கோவிலில் ஒரு அறிவிப்பு நோட்டீஸ் பார்த்தேன். சூப்பர்! ஆனா சனம் அதில்கூட.....  அழுக்கைத் தடவிட்டுப்போயிருக்கு.......  ச்சே.....



மணி அஞ்சே முக்காலாச்சு. போகலாமான்னார் 'நம்மவர்'.
வாசலில் பூக்காரம்மா !  கொஞ்சம் பூ வாங்கிக்கிட்டுக் கிளம்பினோம்.

தொடரும்........ :-)

22 comments:

said...

பெருமூச்சு விட்டுக்கறேன். எத்தனை வருஷமாச்சுமா இங்கெல்லாம் பார்த்து. நன்றி துளசி.

said...

அழகான கோவில். படங்கள் பார்த்து நானும் சென்ற உணர்வு.

said...

நாச்சியார்கோயில் கல் கருடன் தன் சன்னதியிலிருந்து வெளியே புறப்பட்டு வருகின்ற இந்த நன்னாளில் இப்பதிவினைக் கண்டதில் மகிழ்ச்சி. அவ்விழா இன்று மதியம் நடைபெறுகிறது.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ஒரு மூணுநாள் பயணம் குடும்பத்துடன் கிடைக்கட்டும்! அநேகமா நிறைய கோவில்களை தரிசித்துவிடலாம்!

எம்பெருமாளிடம் வேண்டுகின்றேன்.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

இன்றைக்கா? ஆஹா.....

எல்லாம் 'அவன்' அருள்!

said...

மிக அருமை, நன்றி.

said...

சிறு வயதிலிருந்து மிக பிடித்த கோவில் ...

said...

இதெல்லாமும் போகாத கோயில்கள்தான்.

மடைப்பள்ளி பேச்சு வழக்கில் இப்போ மடப்பள்ளியாவே ஆயிருச்சு. மடையன் என்னும் சொல்லுக்கு சமையல்காரன்னும் ஒரு பொருள் உண்டாம். மடையை திறந்து மூடுகின்றவன்னும் பொருள் உண்டாம். :)

அறநிலையத்துறை சரியா நடந்துக்கிறதில்லைங்குறது உண்மைதான். ஆனா அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பு. அந்த வகையில் இருந்துட்டுப் போகட்டும். இல்லைன்னா வேற யார் கிட்ட கொடுக்கிறது? எல்லா சாதியினருக்கும் எல்லா இனத்தவருக்கும் பொதுவா ஒரே நிறையில் வைக்கும் வேறு எந்த அமைப்பு இருக்கு? அப்படி ஒன்று இல்லாத பட்சத்தில் அறநிலையத்துறைதான் இருக்குறதுல சிறந்ததுங்குற முடிவுக்கு வரவேண்டியிருக்கு.

said...

படங்களில் ஆலயம் உள்ளே க்ளீனா இருக்கு அழகா பராமரிக்கிறாங்க .அந்த தண்ணி சேமிக்கும் இடத்தில இலையெல்லாம் குமிஞ்சிருக்கே ?
அந்த மரத்தடி ஜோடிகளுக்கு பெயிண்ட் அடிச்சா அழகா இருக்கும் .யாரோ மஞ்சள் புடவை மட்டும் வச்சிருக்காங்க .ப்ரேயர் ரிக்வஸ்ட் போர்டும் நோட்டீசும் நல்ல ஐடியா ஆனா அழுக்கு பண்ணாட்டி நம் மக்களுக்கு தூக்கம் வராதே .

நலம் தானே அக்கா நீங்க எல்லாம் அங்கே

said...

நல்லா இருக்கீங்களா? என்ன அநியாயம் அமைதியா இருந்த உங்க ஊர்ல இயற்கைச் சீற்றம் தவிர இந்த மனிதச் சீற்றம் நடைபெற்றிருக்கே... எப்படி துப்பாக்கியோடு அந்த ஊரில் ஒருவர் வர முடியும்? உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாருக்காவது பிரச்சனை ஏற்பட்டதா?

said...

https://www.dinamani.com/religion/religion-news/2019/mar/16/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-3115013.html

said...

Hope everything is alright in Christchurch!

said...

தரிசித்தோம். நன்றி

said...

வாங்க வல்லி.

இப்போதைக்கு வனவாசம்னு நினைச்சுக்கணும். அது முடிஞ்சாட்டு ஒரு சுத்து கும்மோணம் பக்கம் போவீங்க ! போகணும்! பெருமாள் பார்த்துப்பார்ப்பா !

said...

வாங்க விஸ்வநாத்.

தொடர் வருகைக்கு நன்றி !

said...

வாங்க அனுராதா பிரேம்,

எனக்கும் ரொம்பப்பிடிச்ச கோவில்தான்:-)

said...

வாங்க ஜிரா,

எங்கே எல்லோரையும் ஒரே நிறையில் வைக்கிறாங்க? எல்லாம் காசு..... காசு...

said...

வாங்க ஏஞ்சலீன்,

நலமா? நாங்கள் நலம்தான்! எங்கே ரொம்ப நாளா காணவே காணோம்?

பொதுவாப் படத்துலே அழுக்குத் தெரியாது. அதையும் மீறித் தெரியுதுன்னா..... எப்படி வச்சுருப்பாங்க பாருங்க.....

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

அண்டை நாட்டுலே இருந்து இங்கே வந்தபின் துப்பாக்கி எல்லாம் வாங்கி இருக்கார் அந்த ஆள். சுடுவதற்குப் பயிற்சியும் இங்கே ரைஃபிள் க்ளப்பிலே எடுத்தாறது.....

சரியா அவுங்க சாமி கும்பிடும் நேரமெல்லாம் கவனிச்சுப் பார்த்து இந்தக் காரியம் நடந்துருக்கு.

நம்ம கோவில் இல்லாததால் நமக்கு அங்கே போக வேண்டிய வேலை ஒன்னுமில்லை.

என்ன ஒன்னு..... ரெண்டரை வருஷமா ஒற்றை நோக்கோடு செயல்பட்டுருக்காருன்னா..... பாருங்க.... எவ்ளோ ஆங்காரம் இருந்துருக்கணும்....

அண்டைநாட்டு நபர், அங்கேயே தன் நோக்கம் நிறைவேத்திக்காம, அமைதியா இருக்கும் நாட்டில், அதுவும் எங்க ஊரில் வந்து இப்படிச் செஞ்சதுதான் எங்களில் பலருக்கும் மன உளைச்சல்..... ப்ச்.....

said...

வாங்க துரியோதனன்.

முதல் வருகை போல !

சுட்டிக்கு நன்றி !

said...

வாங்க தெய்வா,


ஆச்சு ரெண்டு வாரம். இன்றைக்குத்தான் நேஷனல் ரிமெம்பரன்ஸ் டே!

ஒருவிதம் டெர்ம்ஸ்க்கு வந்துக்கிட்டு இருக்கோம்..... ஆனாலும் இப்படி நடந்து போச்சேன்னு மன உளைச்சல்தான்...

said...

வாங்க மாதேவி,

வருகைக்கு நன்றிப்பா!