சங்கர நேத்ராலயாவில் காலை எட்டுமணிக்கு நமக்கான நேரம். சட்புட்டுன்னு தயாராகி எட்டடிக்க அஞ்சு நிமிட் இருக்கும்போதே போயிட்டோம். எவ்ளோ நேரமாகுமுன்னு தெரியாததால்... நம்ம சீனிவாசனைப் போய் ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுக்கிட்டு வரச் சொல்லிட்டு, நாங்கள் குறிப்பிட்ட பகுதிக்குப் போய்ச் சேர்ந்தோம்.
பெரிய ஹாலில் எக்கச்சக்கமான கூட்டம் ! நாங்களும் ஜோதியில் கலந்தோம்.
கண்ணை ஸ்கேன் பண்ணினாங்க. ஜம்முன்னு கலர் பிரிண்டவுட் எடுத்து ஒரு ஃபைலில் போட்டுக் கொடுத்தாங்க. நாங்க வேற, இங்கே கிடைச்ச ரிப்போர்ட் எல்லாம் கொண்டு போயிருந்தோம்.
அப்புறம் கண்ணுலே ட்ராப்ஸ் போட்டுவிட்டுக் காத்திருப்பு. நாங்க கீழே போய் ஒரு காஃபி குடிச்சுட்டு வந்தோம். கேன்டீன் நல்ல சுத்தமா இருக்கு!
ஒரு பத்தரை மணி போல டாக்டர்அறைக்குக் கூப்பிட்டுப்போனாங்க. இந்தியாவின் தலைசிறந்த மருத்துவ நிபுணர்களில் ஒருவரான டாக்டர் ப்ரமோத் பென்டே வந்து,' உங்க ரிப்போர்ட் எல்லாம் பார்த்தேன்'னு சொல்லிக்கிட்டே கோபாலின் இடது கண்ணைப் பரிசோதிக்கிறார்.
ஐயோ....வலக்கண்ணுலேதான் பிரச்சனைன்னு சொல்ல வாயெடுக்கறேன்....
அதுக்குள்ளே 'நாலைஞ்சு ஹோல்ஸ் டெவலப் ஆகி இருக்கு'ன்னு டாக்டரின் குரல் காதுலே விழுது !
இடக் கண்ணிலா? ஆமாம். இதை லேஸர் மூலம் சரிப் படுத்திடலாம். இங்கேயே பண்ணிக்கறதா இருந்தா நாளைக்கு செஞ்சுடலாம்னு சொல்றார்.
அப்போ வலது கண்?
"அதுலே ஏற்கெனவே சிகிச்சை நடந்தாச்சு. இன்னும் துளி ஃப்ளூயட் உக்கார்ந்துருக்கு. நாளாக நாளாகக் கொஞ்சம் கொஞ்சமா போயிரும். எப்போன்னு சொல்றதுக்கில்லை. அதுலே இப்ப ஒன்னும் செய்ய முடியாது.
லேஸர் செஞ்சுக்கணுமுன்னா வெளியே கவுன்டரில் போய் புக் பண்ணிக்குங்க."
நாங்க வேறொன்னும் சொல்லாம தேங்க்ஸ் சொல்லிட்டு வெளியே வந்தோம்.
பேசாம ஊருக்குத் திரும்பிப்போய் அங்கேயே லேஸர் பண்ணிக்கிட்டா நல்லதுன்னு எங்க ரெண்டு பேருக்குமே தோணுச்சு.
லோட்டஸுக்குத் திரும்பிட்டோம். அங்கிருந்து நியூஸி டாக்டருக்கு ஃபோன் செஞ்சு விஷயத்தைச் சொன்னதும், நாளைக்கு செக்கப்புக்கு வந்துருங்க. பார்த்துட்டு லேஸர் பண்ணிடலாமுன்னு சொல்றாங்க.
பயணத்தில் இருக்கோம் என்றதைச் சொல்லி, எவ்ளோநாள் தள்ளிப்போடலாமுன்னு கேட்டதுக்கு, கண்ணுக்கு அழுத்தம் தர்ற வேலைகள் எதுவும் செய்யாதீங்க. கனம் தூக்க வேண்டாம். கண் இப்போதைக்குத் தெரியுதுதானே... எப்போ திரும்பி வர்றீங்க?
ரெண்டு மூணு வாரம் ஆகலாம். அதுக்கு முன்னேயே கிளம்ப முடியுமான்னு பார்க்கிறோம்னு கோபால் சொன்னதுக்கு , ஊர் திரும்பினதும் உடனே வந்து பாருங்க.
பார்க்கும் காட்சிகளின் இடையில் எதாவது கருப்புப் புள்ளிகள், எதோ தூள் போல ஒன்னு மிதக்குறமாதிரி தெரிஞ்சால் அது ஓட்டை இருப்பதற்கான அறிகுறி. அப்படி இருந்தா கண்ணை டாக்டரிடம் காமிச்சு உடனே லேஸர் பண்ணிக்கணும் என்றார் டாக்டர்.
நான் இவரிடம் சொன்னேன்.... 'பேசாம ஊருக்குப் போயிடலாம். டிக்கெட்டை மாத்தி எடுங்க.'
'இல்லைம்மா... அவ்ளவா பிரச்சனை இருக்காதுன்னு நினைக்கிறேன். பார்க்கலாமு'ன்னு சொன்னது எனக்கு சமாதானமாகலை....
இன்னும் நாலே நாலு கோவில்கள்தானே இருக்கு. ஏற்கெனவே போட்ட திட்டங்களின் படி போயிட்டு வந்துடலாமேன்னு வற்புறுத்திச் சொல்றார்.
பெருமாள் மேலே பாரத்தைப் போட்டுட்டு மறுநாள் காலை எட்டரைக்கு நம்ம சீனிவாசனை வரச் சொல்லிட்டு, ஒரு நாலைஞ்சு நாட்களுக்குத் தேவையான உடுப்புகளையும், டாய்லட்ரிப் பைகளையும் அவுங்கவுங்க கேபின் பேகில் பேக் பண்ணிட்டு, மற்ற சாமான்களைப் பெரிய ஸூட்கேஸில் வச்சுப் பூட்டி இங்கே லோட்டஸ் லாக்கர்ரூமில் போட்டோம். இங்கே லோட்டஸில் இது ஒரு நல்ல வசதி.
மறுநாள் காலை ப்ரேக்ஃபாஸ்ட் குலாப்ஜாமூனும் கொண்டைக்கடலையுமா இட்லியோடு முடிச்சுட்டுக் கிளம்பியாச்சு. தாம்பரம் தாண்டி வண்டலூர் போய்க்கிட்டு இருக்கும்போது ஒரு லாரி நம்ம வண்டி பின்னாலேயே இடிக்கிற மாதிரியே வருது. ஏற்கெனவே நாம் லெஃப்ட் லேனில்தான் போறோம். இன்னும் எப்படி சைடு கொடுக்கமுடியும்? நமக்கிடப்பக்கம் நெடூக வேலிபோட்ட மீடியன் ஸ்ட்ரிப் இருக்கே....
ஓவர் டேக் பண்ணணுமுன்னா ரைட்டுலே போகலாமுல்லே, லாரிக்காரர்? கூடுவாஞ்சேரிக்குப் பக்கம் போறப்ப, திடீர்னு ஒரு பெரிய சத்தம். திடுக்கிட்டு நான் திரும்பி கோபால் பக்கம் பார்க்கிறேன்.... சினிமாலே ஸ்லோ மோஷன் ஸீன் போல இவர் உடம்பு ஸீட்டுலே இருந்து அப்படியே அலேக்காத் தூக்கி வீசுனாப்போல என் பக்கம் வந்துக்கிட்டு இருக்கு! நான் இவரை என் வலக்கையால் தொட்டு நிறுத்தப் பார்த்தேன். தட்..... உடம்பு ஸீட்டில் விழுந்தது!
உண்மையிலேயே என்ன நடந்ததுன்னு புரிஞ்சுக்கவே சில நிமிட்ஸ் ஆச்சு. ட்ரைவர் ஸீட்டூலே சீனிவாசனும் ஒரு குலுக்கலோடு உக்கார்றார்.... நல்ல வேளை ப்ரேக் போட்டார். நம்மைக் கடந்த லாரி இப்போ நம்ம வண்டிக்கு முன்!
ரெண்டு வண்டியும் நிக்குது இப்போ. சின்னக் கூட்டம் நம்மைச் சுத்தி.... ரெண்டு நிமிசம் நின்னு பார்த்துட்டு, நாங்கெல்லாம் அடிபட்டுக்கிடக்காம நல்லாவே இருக்கோமுன்னு கலைஞ்சு போயிட்டாங்க. ரெண்டு ட்ரைவர்களும்தான் இப்போ கையைக்கையை நீட்டிப்பேசிக்கிட்டு வாய்ச்சண்டையில்.
நம்மவர், என்னை இறங்கவே கூடாதுன்றார்.... நான் சரின்னு சட்னு இறங்கி நம்ம வண்டி என்ன ஆச்சுன்னு பின்பக்கம் போய்ப் பார்த்துக் கிளிக்கினேன். கோபால் உக்கார்ந்துருந்த பக்கம்தான் அடிச்சுருக்கு. அதான் அவரை இந்தப் பக்கம் தூக்கிப்போட்டுருக்கோ!
'ரைட் சைட் இறங்காதீங்க, ட்ராஃபிக் அதிகமா இருக்கு'ன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன். ' எங்கே இறங்கறது.... டோர் லாக் ...ஜாம் ஆகிக்கிடக்கு'ன்றார்.
இடிச்சதும் இல்லாம சண்டை போட்டுக்கிட்டு இருந்த லாரிக்காரன், சட்னு போய் வண்டியைக் கிளப்பிக்கிட்டு போயிட்டான்....
திகைச்சு நின்ன சீனிவாசன், வண்டிக்குள் வந்தார். 'ஓனருக்கு ஃபோன் பண்ணிச் சொல்லணும். வேற வண்டி அனுப்புவாங்க'ன்னார். முகம் சரியா இல்லை. விசாரிச்சோம். இவர் தப்பு ஒன்னும் இல்லைன்னாலும்.... ரிப்பேர் செலவு முழுசும் இவர் சம்பளத்துலே இருந்துதான் புடிச்சுக்குவாங்களாம். வண்டிக்கு இன்ஷூரன்ஸ் இருக்கான்னால்.... 'தெரியலை. எடுத்தாங்களோ இல்லையோ' வாம்.
வண்டி 'ஓடும் கண்டிஷனில்' இருக்கான்னு கேட்டேன். ஸ்டார்ட் செஞ்சால் எஞ்சின் சத்தம் சரியாத்தான் இருக்கு. சரி. அப்படியே கிளம்பிப்போகலாம். எப்படியும் இன்றைக்கு மதுரை ஹால்ட் தானே. அங்கே ரிப்பேர் செஞ்சுக்கலாமுன்னு கிளம்பிட்டோம்.
கண்ணுக்கு அதிர்ச்சி கொடுக்கக்கூடாதுன்னா உடலுக்கு அதிர்ச்சி கொடுத்துட்டுட்டாங்க....
ஒரு பத்து நிமிட்ஸ் போல போயிருப்போம்... இப்பப் பார்த்தா இடிச்ச எமன் முன்னாலே போகுது. அவன் கிளம்புன வேகத்தில் இந்நேரம் ரொம்ப தூரம் போயிருக்கணுமே..... ஒரு வேளை இன்னொருக்கா இடிச்சுட்டுப் போகலாமுன்னு காத்திருந்தானா என்ன?
லாரியின் பின்பக்கம் 'தல வேட்டை ஆரம்பம்' னு வேற எழுதி வச்சுருக்கு! நாம்தான் முதல் போணியோ?
அவன் பின்னாலே போக வேணாம், நாம் நிதானமாப் போகலாமுன்னு சொன்னதுக்கு அப்படியே ஆச்சு. அப்பதான் மிராக்கிள் டிங்கரிங் கண்ணுலே பட்டுச்சு. ஆனா அதைத் தாண்டி வந்துருந்தோம். பிஸி ரோடில் எங்கே யூ டர்ன் எடுக்கறதுன்னு.... கொஞ்ச தூரம் போனதும் வலது பக்கத் தெருவில் திரும்பி, சர்வீஸ் ரோடு போல இருந்ததில் மிராக்கிள் டிங்கரிங்க் போய்ச் சேர்ந்தோம்.
ஓனர் சந்தோஷ் குமார். ஓரளவு சரி பண்ணிடலாமுன்னு தட்டிக்கொட்டி ஒருமாதிரி சரி பண்ணிட்டார். ஒரு சுத்தி, ஒரு மரக்கட்டை, ஒரு இரும்புக் கம்பி. இவ்வளவுதான் டூல்ஸே! இப்ப வலதுபக்கக் கதவு திறக்க வருது, ஆனால் கதவு பார்க்கக் கேவலமா இருக்கு.
'மதுரையில் ஆட்டோ ஜங்க் யார்டில் கதவு கிடைக்கும். வாங்கிப் போட்டுக்கலாம். ரிப்பேர் பண்ண முடியாது'ன்னார் கோபால். இந்த கலாட்டாவால் ஒரு ரெண்டு மணி நேரம் காணாமப்போயிருச்சு.
ஹோட்டல் ஆர்யாஸ்னு பார்த்ததும்தான் லஞ்ச் நினைவே வந்துச்சு. அதுவரை நடந்த சம்பவத்தைப் போஸ்ட்மார்ட்டம் பண்ணிக்கிட்டு இருந்தோம் :-)
வேப்பூர் என்ற இடமாம். வாசலில் புத்தகக்கடை இருக்கு! நம்ம நியாண்டர் செல்வனை அங்கே பார்த்தேன்! பரவலா எல்லா இடங்களிலும் பேலியோ பற்றிய 'ஞானம்' வந்துருக்கே!!!
கருடபுராணம் ஒன்னு வாங்கினேன். லாரிக்காரனுக்கு என்ன தண்டனைன்னு பார்க்கணும்:-)
தொடரும்....... :-)