"காலையில் நாலு மணிக்கு எழுப்பி விடுங்க!"
"எதுக்கு? அவ்ளோ சீக்கிரம்?"
"வேலை இருக்கு..... அஞ்சு மணிக்கெல்லாம் ரெடியாகி கீழே போயிடணும்."
"அதான் எதுக்கு?"
"ஆண்டாள் கூடவே அம்மா மண்டபம் போய் வரப்போறேன்..."
சரி சரின்னு தலையாட்டிட்டு, எழுப்பி விடும்போது காலை மணிஅஞ்சு :-(
ஐயோன்னு அரக்கப்பரக்கக் குளிச்சுட்டுக் கீழே ஓடிப்போய் பார்த்தால் தெருவே விரிச் ! பக்கத்துக் கட்டிட வாசலில் நின்ன ஹயக்ரீவா வாட்ச்மேன் தாத்தா.... என்னம்மான்னு கேட்டுக்கிட்டு ஓடிவந்தார்.
"ஆண்டாள் போயாச்சா? "
"போயாச்சு"
"எந்தப் பக்கம்?"
ஒரு நிமிசம் யோசனை பண்ணிட்டுப் போயாச்சு....ன்னு இழுக்கறார். தினப்படி பார்க்கும் சமாச்சாரம் என்பதால்.... அதுலே மனசு பதியலை போல....
திடுதிடுன்னு ஓடிவந்து சேர்ந்துக்கிட்ட நம்மவர், மேளசத்தம் கேட்டே ரொம்ப நேரமாச்சுன்றார்.....
ப்ச்.... கொடுத்து வைக்கலை. ஆனாலும் இன்றைய சண்டைக்கு அடி எடுத்துக் கொடுத்துட்டாள் ஆண்டாள் :-)
கோவிலுக்குப் போறமாதிரிதான் சத்தம் கேட்டுச்சாம்....
நல்லவேளையா இன்னும் அவ்வளவா ட்ராஃபிக் ஆரம்பிக்கலைன்னு கோவிலைப் பார்த்து நடக்கறோம். வழியில் முரளிக்கடையில் நல்ல கூட்டம்! விடமுடியுதா? நமக்கும் ஆச்சு.
குடிச்சு முடிக்கிற நேரம் லேசா மேள சத்தம் காதுலே விழ சுத்தும் முத்தும் பார்த்தால்.....
ஹைய்யோடா......
தங்கக்குடையும், தங்கக்குடமுமா.....
துலா மாசம் முழுசும் தங்கக்குடமாம்!
எங்கிருந்து வருதோன்னு அப்படி ஒரு ட்ராஃபிக்! சட்னு எப்போ ஆரம்பிச்சது? ஆண்டாளுக்காகவே காத்திருந்தாங்களோ? அந்த பஸ் ஏன் இப்படி அவளை இடிச்சுத் தள்ளறதுபோல் வருது? ஒரு நிமிட் நின்னு வந்தால் என்ன?
இவள்தான் காலையும் வாலையும் வீசிப்போட்டு நடக்கறாளே....
கூட்டத்துக்குப் பழக்கப்பட்டதால் அவளால் எதையும் சட்டை செய்யாம வர முடியுது! நாந்தான் இங்கே ஓரமா நின்னு புலம்பிக்கிட்டு இருக்கேன்:-)
உள்ளூர் சனம்.... அவளைப் பார்த்த நொடியில் நின்னு கைகூப்புறது அருமை! சின்னதா ஒரு வீடியோ எடுத்தேன்!
ராஜகோபுர வாசலுக்குள் நுழைஞ்சு போகும் ஆண்டாளைப் பின்தொடர்வதே இனி என் கடமை!
குறுக்கே போகும் வீதிகளையும், அந்தந்த வீதிகளுக்கான கோபுர வாசல்களையும் ஒவ்வொன்னாக் கடந்து போறாள் செல்லக்குட்டி!
மண்டபங்களையும் கோபுர வாசல்களையும் இத்தனை அகலமாவும், உயரமாவும் முன்யோசனையோடு கட்டுனவர்களுக்கு என் பணிவான வணக்கத்தை மனசுக்குள் சொல்லிக்கறேன்....
'பெருமாளே என்ன கோலாகலம்.... அடுத்த ஜென்மத்தில் எனக்கந்த பாக்கியம் கிடைக்காதா'ன்னு ஏக்கப் பார்வை பார்த்ததோ...... இந்த நாய் ஜென்மம்!
இதோ... ரங்கா கோபுரம் வந்தாச்சு. தடுப்பையெல்லாம் விலக்கி வச்சுருக்காங்க.
திருவந்திக்காப்பு மண்டபம், ரங்கவிலாஸ் மண்டபம், கார்த்திகை கோபுர வாசல் கடந்து ஆர்யபடாள் வாசலுக்கு வந்தாச்சு. இது மட்டும் கொஞ்சம் உயரம் குறைவோ...... லேசாக் குனிஞ்ச தலையுடன் உள்ளே காலடி வைக்கிறாள்.
சட்னு பெரிய கூட்டமா சனம் சேர்ந்ததும்.... இனி அவள் வேலையை அவள் பார்க்கட்டுமுன்னு விட்டுட்டேன்.. பொதுவா இந்த வாசலைத் தாண்டிப் படம் எடுக்க அனுமதி இல்லையே..... விஸ்வரூப தரிசனத்துக்கு சனவரிசையில் மக்கள் நிக்கறாங்க! காலை மணி ஆறு பன்னென்டு இப்போ!
நாங்க அப்படியே பிரகாரத்தில் வலம் போறோம். ஆலிநாடன் தெருதானே?
இந்த சந்நிதின்னு குறிப்பா ஏதும் இல்லை..... ச்சும்மாக் கோவிலுக்குள் நடப்பதே போதுமுன்னு மனசுக்கு நிறைவா இருக்கு! எல்லா சந்நிதிகளும் மூடித்தான் இருக்கும் இந்த நேரத்தில் என்பதும் ஒரு காரணம் :-)
மொதல்லே பெருமாள் கண் முழிக்கட்டும். இவர் காலை ஆறுமணிக்கும், தாயார் காலை ஆறரைக்குமா (விஸ்வரூப) தரிசனம் கொடுக்கறாங்க.!
( ஹாஹா.... நம்ம தாயார் முன்தூங்கி பின்னெழும் பாவையா இருக்காங்க போல! எனக்கு ரொம்பப் பிடிச்சுருக்கு, பிடிச்சுருக்கு !) அடுத்ததாக கண் முழிப்பவர் நம்ம சக்கரம். காலை ஏழு மணி!
தன்வந்திரி சந்நிதி, சொர்கவாசல், சந்த்ரபுஷ்கரணி பார்த்த கையோடு தாயார் சந்நிதிக்கு வந்துருந்தோம். காலை இலவச தரிசனத்துக்கு ஒரு வரிசை நிக்குது. நீளம் குறைவுன்னதும் வாலில் சேர்ந்தோம். அருமையான தரிசனம்! அம்மா எப்பவுமே அருமைதான். பிகு ஒன்னும் அவ்வளவா பண்ணிக்கறதில்லை!
வலம் வரும்போது துளசி மாடமும், அதைத் தொட்டடுத்து நிக்கும் வில்வமரமும் மனசுக்கு சாந்தமான உணர்வைக் கொடுத்தது உண்மை!
அஞ்சுகுழி மூணுவாசல் முன்னாடி லக்ஷ்மிநாராயணர் ஸேவை சாதித்தார்! சின்னதா ஒரு சந்நிதி!
கோவில் பூனைகள் ப்ரேக்ஃபாஸ்ட்டுக்காக அங்கங்கே காத்திருக்குதுகள். என்னம்மான்னு கேட்டதும்... செப்பு வாய் திறந்து சின்னக்குரலில் என்னமோ சொன்னது ஒன்னு! பால் எங்கேன்னு கேட்டுருக்குமோ? இங்கே கோவில் பூனைகளுக்கு காலையில் ஒருவேளை சாப்பாடு கொடுக்கும் கைங்கரியம் நடப்பதை போனமுறையே கவனிச்சேன். பெடிக்ரீ கொடுக்கறாங்க!
ஆயிரங்கால் மண்டபத்துப் பக்கம் இருக்கும் யானை, எதிரில் சேஷராய மண்டபம், வெள்ளைக்கோபுரம் எல்லாம் தரிசனம் ஆச்சு. ஆயிரங்கால் மண்டபத்தில் நம்ம ஸ்ரீ ராமானுஜர் ஆயிரத்தை முன்னிட்டு மயிலை கலைக்குழுவினரின் நிகழ்ச்சி நடக்குதாம். எத்தனை மணிக்குன்னு விசாரிச்சுக்கணும்!
ராமானுஜர் சந்நிதி வழியாப்போய் கும்பிட்டதும், கால் லேசா கெஞ்ச ஆரம்பிச்சது! அநேகமா ஒரு ரெண்டு மூணு கிமீ இதுவரை நடந்துருப்போமோ? திரும்பிப்போக ஒரு கிமீ தூரம் இருக்கு. எப்படியும் ஒரு நாலு கிமீ, காலை நடையை சாதிச்சாச்சு இன்றைக்கு :-)
பெரிய பெரிய கோவில்களில் ப்ரகாரம் சுற்றியே ஆரோக்கியமா உடம்பை வச்சுக்க முடியும்! புண்ணியம் சேர்க்கறதும் அதுக்கான போனஸுமா டு இன் ஒன் :-)
என் கையில் கேமெரா பார்த்துட்டு, டிக்கெட் இருக்கான்னு கொஞ்சம் மிரட்டும் குரலில் ஒரு ஆள் கேட்டதும், இன்னும் டிக்கெட் கவுன்ட்டர் திறக்கலைன்னு சொன்னேன். படம் எடுக்கக்கூடாதுன்னுன்னு கையை ஆட்டிக்கிட்டே இருந்ததும் எரிச்சலா வந்தது. ஆளாளுக்கு நாட்டாமை.... 'போய் கவுன்ட்டரைத் திற. டிக்கெட் வாங்கலாமு'ன்னதும் முணுமுணுத்துக்கிட்டே போனார். கோவில் ஊழியர் இல்லை போல..... சும்மா அடிச்சு விட்டால் எதாவது தேறுமான்னு பார்க்கும் ஆட்களில் ஒன்னு....
ரங்கவிலாஸ் மண்டபத்து முற்றத்துலே இருக்கும் கோவில்கடைகளில் ஒன்னு திறக்கும் ஆயுத்தத்தில்!
ரங்கா கோபுரம், கட்டை கோபுரம், ராஜ கோபுரம்னு ஒவ்வொன்னாக் கடந்து போன வழியிலேயே திரும்பி வர்றோம். வெளியே நடைபாதை கொஞ்சம் பரவாயில்லை. அம்மா உணவகம் பார்த்ததும், இதுவரை உள்ளே போய் பார்த்ததே இல்லையேன்னு உள்ளே போனால் இட்லி தயாரா இருக்கு. சட்னி கிடையாது. சாம்பார் மட்டும்தான்!
இடம் நல்ல சுத்தமா இருக்கு. ஒருநாள் வந்து சாப்பிட்டுப் பார்க்கணும்.
ஹயக்ரீவாவுக்கு வந்து சேர்ந்தப்ப , நம்ம சீனிவாசன் கார்பார்க்கில் வண்டியைத் துடைச்சுக்கிட்டு இருந்தார். ரூமுக்குப் போயிட்டு வந்ததும் இங்கே பாலாஜி பவனில் சாப்பிடலாமுன்னு சொன்னதுக்கு, அவர் அம்மா கடையில் இட்லி சாப்பிட்டாச்சாம்!
பரவாயில்லை. எங்களோடு ஒரு காஃபியாச்சும் குடியுங்கன்னார் நம்மவர்.
நாமும் இட்லி காஃபியை முடிச்சுட்டு, கொஞ்சநேரம் வலை மேய்ஞ்சு, மெயில் அனுப்பின்னு இருந்தோம். ஹயக்ரீவாவில் வைஃபை நல்லாவே இருக்கு!
கொஞ்ச நேரத்தில் கிளம்பலாம். ரெடியா இருங்க.
தொடரும்....:-)