ஆச்சு இன்றைக்கு ஏழாம்நாள் ! கோலமும் போட்டு, ஆல்மண்ட் ரவா லாடும் செய்தேன்.!
வழக்கமா நம்ம வீட்டுக் கொலுவுக்கு வர்ற தோழிதான், நாம் சொன்ன நாளில் வரமுடியாமல் போச்சுன்னு இன்றைக்கு வர்றாங்க. காலை பதினொரு மணிக்குன்னு சொன்னபடி வந்தாங்க. வீரா & அன்புன்னு ரெண்டு குட்டீஸ் வேஷ்டி கட்டிக்கிட்டு !!! நமக்கு நல்ல பழக்கம் உள்ள குடும்பம் என்றபடியால் நம்மவரோடு ஒட்டிக்கிட்டாங்க.
என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை.... அடடா... என்ன அருமையான பாட்டு ! அயனம்பட்டி ஆதிசேஷைய்யர் எழுதிய பாட்டு இது. ஆனால் பாட்டைக்கேட்டவுடன் எழுதியவர் பெயர் நினைவுக்கு வராது..... பாடிப்பாடி பிரபலமாக்கியவர் பெயர்தான் டக் னு மனசில் வந்து நிக்கும். அதிலும் நம்மவர் இந்தப் பாடகரின் விசிறி ! கோவில் திருவிழாக் கச்சேரின்னா..... அவ்ளோதான்..... ராத்ரி தொடங்கி விடியும்வரை ஏழெட்டுமணி நேரம் கூட அசராமல் பாடுவார் இவர். முருகன் பாட்டுன்னா போதும்.... வெல்லம். மருதமலை மாமணியே.... முருகைய்யா.... கேட்டு மயங்காதவர்கள் யாராவது இருக்காங்களா என்ன ?
'நம்மவரின்' சிறுவயதில் வீட்டாண்டை இருக்கும் முருகன் கோவில் திருவிழாவில் இவர் பாடுனதை இப்பவும் ரசிச்சுச் சொல்லுவார். 'நாதர்முடி மேலிருக்கும்..' பாட்டுலே ஆடு பாம்பே, நெளிந்தாடு பாம்பே... வளைஞ்சு வளைஞ்சு பாடுவாராம் ! இப்பவும் மதுரை சோமுதான் நம்மவரின் ஃபேவரிட் !
தோழி, கொலுவுக்கு முன் அமர்ந்து பாட ஆரம்பிச்சதும் சபையோர் வந்து உக்கார்ந்தாங்க. நானும் ஒரு சின்ன வீடியோ க்ளிப் எடுத்தேன்.
ஃபேஸ்புக்கிலேயும் போட்டுருந்தேன். இங்கே ப்ளொக்ஸ்பாட்டில் என்னவோ எந்த லிங்க் கொடுத்தாலும் வேலை செய்யமாட்டேங்குது. அதன் சுட்டியை இங்கே போட்டுருக்கேன். விருப்பம் இருந்தால் பாருங்களேன் !
https://www.facebook.com/1309695969/videos/568940787665777/
இவுங்க ஒரு கலைக்குடும்பத்தின் அங்கம். இங்கே நம்மூரில் பரதநாட்டியம், பாட்டு எல்லாம் சொல்லித்தரும் பள்ளி நடத்தறாங்க. தாயார் கலைமாமணி. கொள்ளுப்பாட்டியின் பெயர்தான் இவுங்களுக்கும். பவித்ரா 'மதுரம்'. மதுரம் என்றதும் மனசில் மணி அடிச்சதோ ? எனக்கு அடிச்சது :-)
இன்றைக்குக் காலையில் எனக்கொரு சேதி, இன்பாக்ஸில் வந்தது. உள்ளூர் மருத்துவர். நம்ம தோழிதான். "குழந்தைகளுக்குக் கொலுவைக் காட்ட ஆசை. வரலாமா?" வாங்களேன்னேன். மாலை நேரம் பரவாயில்லையா ? 'இல்லை. எங்களுக்கு யோகா வகுப்புக்குப் போகணும். காலை வேளை பரவாயில்லை'ன்னதும், ஒரு மணி நேரம் டைம் கொடுங்க. பிள்ளைகளை தயார் செய்து கூட்டி வர்றேன். நோ ஒர்ரீஸ். பகல் 12 ன்னு முடிவாச்சு.
பவித்ரா இருக்கும்போதே அவுங்களும் வந்துட்டாங்க. ஸ்நேஹாவே (மருத்துவர்)பவித்ராவின் மாணவிதானாம் ! மகளும் அங்கேயே குழந்தைகள் பிரிவில் நடனம் பயில்கிறாள். ஆஹா ஆஹா....
நடனமும் பாட்டுமா நம்ம கொலுவில்.... சூப்பர்தான் போங்க.
https://www.facebook.com/1309695969/videos/236550801838152/
https://www.facebook.com/gopal.tulsi/posts/10221193363686229
இப்பெல்லாம் ரொம்ப வேலை செய்ய முடியலைன்னு உள்ளுர் இண்டியன் கடைகளில் இருந்து சில தீனிகள் வாங்கி வச்சதால், தினப்படி செய்யும் பிரஸாதங்களோடு விளம்பக் கொஞ்சம் சுலபமாத்தான் இருக்கு. இந்த முறை 'நம்மவர்' பேச்சைக் கேட்டுட்டேன் :-)