நம்ம துளசிதளம், கோமாவில் இருக்கு ! எப்பவாவதுதான் விழிப்பு வருது. உடனே மீண்டும் கோமா நிலை..... இந்த வருஷத்தில் இதுவரை வெறும் ஒன்பதே பதிவுகள்தான். இதுதான் பத்து........... போதுமடா சாமி..... இப்படி ஒரு நிலை....
என்னதான் கோவிட் முடக்கிப்போட்டுருச்சுன்னாலும் பொழுது விடியறதும் பொழுது முடியறதும் நிக்குதா ? அதுபாட்டுக்கு அது......
அந்தக் கணக்கில் பதினேழு முடிஞ்சு பதினெட்டாவது வயசில் அடி எடுத்து வச்சுருக்கு நம்ம துளசிதளம் !
இனியாவது எழுந்து உக்கார்ந்து எழுதறதுதான் நல்லது....
பார்க்கலாம், எப்படி போகப்போகுதுன்னு.....
ம்ம்ம்ம்ம் சொல்ல விட்டுப்போச்சே.... இன்றைக்குத்தான் நம்ம கோபாலுக்கும் பொறந்தநாள் !
கோவிட் காரணம் மூடி வச்சுருக்கும் கோவிலில் தரிசனம் கிடைச்சதும் பாக்கியம்! ஒரு லெவல் படியிறங்கி இருக்கோம்.
பெருமாளே.... காப்பாத்து....