Monday, April 29, 2019
Friday, April 26, 2019
சென்னை என்னும் கிராமத்தில் (பயணத்தொடர், பகுதி 96 )
மால்களையும், ஷாப்பிங் ஏரியாக்களையும் தவிர்த்துப் பார்த்தால் சென்னை ஒரு கிராமம்தான் இல்லே ? என்ன ஒன்னு..... கிராமம்னால் வயல்வெளிகள் இருக்கும். இங்கே பயிர் செஞ்சுருப்பது வீடுகளை! அதுவும் நகரை விரிவாக்கறோமுன்னு கொஞ்சம் கொஞ்சமா அக்கம்பக்கம் சுத்துப்பட்டுலே இருந்த உண்மையான கிராமங்களைக் கபளீகரம் செஞ்சாச்சு. கிராமக் கோவில்கள் மட்டும், அங்கிருக்கும் மக்களின் பக்தியால் கொஞ்சம் தப்பிச்சுருச்சுன்னு சொல்லலாம்....
இன்றைக்கு முத்துமாரியம்மன் நம்மளைக் கூப்டுட்டாள் ! நானும் வரேன்னு வாக்குக் கொடுத்துட்டேன்:-)
அதென்னமோ காலையில் எழுந்துருக்கும்போதே.... பதுமனின் நினைவு. அங்கே போயிட்டு மயிலையில் கொஞ்சம் ஷாப்பிங் செஞ்சுக்கிட்டுப் போகலாமுன்னு திட்டம். ஆனால் தோழி வீட்டு அரிசியிலும் ஸேமியாவிலும் நம்ம பெயரை 'லஞ்சு'ன்னு .... ஆண்டவன் எழுதிட்டான்.....
வேளச்சேரிக்குப் போய்ச் சேர்ந்தோம். மச்சினர் வீட்டாண்டைதான் முத்துமாரி குடியிருக்காள். கோவிலுக்கு எதிரில் அகலமான மெயின் ரோடு வந்துட்டதால் கடந்துபோறதே கஷ்டமுன்னு ஆகி இருக்கு!
ஒரு காலத்துலே பக்கத்துலே பெரிய ஏரியும், சின்னக்கோவிலுமா இருந்துருக்கு. இப்போ ஏரியும் சின்னதாப் போச்சுன்னு ஒரு அம்மா சொன்னாங்க.
இன்றைக்குக் கோவிலில் தீ மிதித் திருவிழாவின் கடைசி நாள் !! பதினொரு நாள் விழா. கடைசி மூணுநாள் பெரிய அளவில் விழா நடத்தறாங்க. அம்மனுக்குக் காப்புக் கட்டி ஒன்பதாம் நாள் பால் குடம், பத்தாம் நாள் கரகம், பதினோராம் நாள் தீமிதினு....
மச்சினர் மனைவி கோவிலுக்குப் போகத் தயாரா இருந்தாங்க. இப்போ போய் பூஜைகளை முடிச்சுக்கணுமாம். நாலுமணிக்குத் தீமிதி. லேடீஸ் மட்டும் கிளம்பிப்போனோம்.
வெளி முற்றத்தில் கொளுந்துவிட்டு எரியும் தீ! இது முழுசும் எரிஞ்சதும் தீக்கங்குகளைப் பரத்தி விடுவாங்களாம்..... கட்டைகள் எரிஞ்சு அடங்கட்டும். கோவிலுக்குள்ளே போனோம். பூசாரி ஐயா பலமாகவே வரவேற்றார்! இந்தப் பகுதியின் ஆரம்பகாலத்தில் (!) இங்கே வீடுகட்டிக் குடிவந்தவர்களில் மச்சினரும் ஒருவர்.
அம்மனுக்கு அலங்காரம் அருமையாத்தான் பண்ணி இருந்தாங்க. கருவறையில் ரெண்டு பெரிய மூர்த்தங்கள். உற்சவர் தனியா இருக்கார். படம் எடுத்துக்க அனுமதியும் கிடைச்சது. அம்மனுக்கு எதிரில் காவல்தெய்வமா வீரபத்திரர்!(அப்படின்னு நினைக்கிறேன்!)
தரிசனம் முடிச்சுக்கிட்டுக் கோவிலை வலம் வர்றோம். சின்னக் கோவில்தான். ஒரு பக்கம் நாகர் சந்நிதி. புத்து ஒன்னு புடவையில் இருக்கு!
இந்தாண்டை நவகிரஹ சந்நிதி!
சின்ன மாடத்தில் தக்ஷிணாமூர்த்தி ! இன்னொரு பெரிய மாடத்தில் அம்மனும்!
இன்றைக்கு திருவீதி உலாவுக்கு அலங்காரம் ஒருபக்கம் நடந்துக்கிட்டு இருக்கு!
வெளிவளாகத்தில் ஒரு புறம் சமையல் நடக்குது.
சி.ராம், பிரியாணி நிபுணராம். பத்து வயசில் கையில் பிடிச்ச கரண்டியை இன்னும் விடலை!!
ரெண்டு ஆடுகளாமே !!! (ஐயோ.... )
என் கண் போன போக்கைப் பார்த்துட்டு, 'இப்ப இல்லை மேடம்.... அப்புறமா....... '
அம்மன் திருவீதிவலம் வந்து கோவிலுக்குத் திரும்பியதும் 'விருந்து' தானாம். அதுவே நடுராத்ரி ஆயிருமுன்னு சொன்னார்!
அப்ப தீ மிதி? நாலுமணின்னு போட்டுருக்கே.... அதான் நாலுமணிக்குக் கொளுத்தியாச்சுல்லே.... எப்படியும் ஆறு மணி ஆகிருமுன்னு மச்சினர் மகள் சொன்னாள்.
அதுவரை இங்கே என்ன செய்யறது? உங்களுக்கு ஷாப்பிங் செஞ்சுக்கணுமான்னு கேட்டதுக்குச் சரின்னேன்.
நாங்க இன்னொருக்கா அம்மனைக் கும்பிட்டுக் கிளம்பினோம்.
ஜெயசந்திரன் டெக்ஸ்டைல்ஸ்.... பள்ளிக்கரணை. வாசலில் யானையும் அது தின்னக் கரும்புக்குவியலுமா இருந்துச்சு :-) யானைக்குப் பக்கத்துலே மிக்கி!!!
கடையில் திருவிழாக்கூட்டம். ஆடி ஸேல்ஸாம். திகைச்சு நின்ன என்னைக் கைபிடிச்சுக் கூட்டத்தில் நீந்திப்போனாள் மகள்! "பெரியம்மா.... இப்படி நின்னுக்கிட்டு இருந்தால் இங்கேயே நிக்க வேண்டியதுதான்" ரொம்பத் தேறிட்டாளே :-)
புடவைக்குவியல்கள் கிட்டேயே போக முடியலை..... யானை இருக்கு..... தரம் சுமார்னு நினைக்கிறேன். இப்பெல்லாம் ஒரு புடவை வாங்கினால் அதிகபட்சம் மூணு முறைதான் கட்டறாங்களாம். யூஸ் அண்ட் கீப். அதான் லேடீஸ் அலமாரியைத் திறந்தால் புடவைகளா அடுக்கி இருப்பதைப் பார்த்து ஆண்கள் வயிறெஞ்சு போறாங்க. இவ்ளோ இருக்கே..... இனியும் எதுக்குன்னு?
இதுலே பாருங்க..... ஃபேஷன் போயிருச்சு, இனி கட்டச் சான்ஸே இல்லை, ஏற்கெனவே மூணு நாலு முறை கட்டியாச்சு, அது இதுன்னு கோடிக் காரணம் சொன்னாலும், புடவை விஷயத்தில் மட்டும் யூஸ் அண்ட் த்ரோவுக்கு மனசே வர்றதில்லை. எப்பவும் யூஸ்டு ஒன் கீப் ஸே(க்)ஃப் தான்:-)
தரம் சுமாரா இருந்தாலும் யானை.... யானைன்னு மனசு அடிச்சுக்கிட்டது உண்மை. இங்கே நியூஸியில் யார் தரம் எல்லாம் பார்க்கறாங்க... சொல்லுங்க.... கலர்ஃபுல்லாக் கட்டுனோமா, யூ லுக் ஒன்டர்ஃபுல் என்ற (போலி) கமென்ட்ஸை ஏத்துக்கிட்டோமான்னு இருந்துடணும்:-) ஆனாலும் வாங்கிக்கலை..... என்ன ஒரு மன உறுதின்னு என்னை நானே மெச்சிக்கும் வேளையில் ஜிமிக்கிக்கம்மல் ஒன்னு என்னை இழுத்துப் பிடிச்சுருச்சு. ஆனால் புடவை ஸேல் ஆஃபரில் இல்லை. நியூ ஸ்டாக்.
ஷாப்பிங் முடிச்சு வீட்டுக்கு வந்தால் , கை/பையில் புடவை பார்த்ததும் முகம் போன போக்கைப் பார்க்கணுமே.... மகளும் கட்டிப்பாள் என்று சொன்னதும் அப்பன் கப்சுப் :-)
சரி, தீமிதி பார்க்க எல்லோரும் கிளம்புங்கன்னா.... அதெல்லாம் நீங்க கடையில் இருக்கும்போதே முடிஞ்சுருச்சுன்னு சொல்றார் மச்சினர்.
அட ராமா.....
ராத்திரி வீட்டுவாசலில் 'சாமி வர' பதினொரு மணிக்கு மேல் ஆகுமாம். அதுவரை காத்திருக்க முடியாதாம் 'நம்மவருக்கு'. மகளிடம் திருவீதிவலம் வரும் அம்மனைப் படம் எடுத்து அனுப்புன்னு சொல்லிட்டுக் கிளம்பினோம்.
படம் வந்ததோ?
ஊஹூம்..... தூங்கிட்டாளாம்.... சுத்தம்...
தொடரும்........ :-)

Posted by துளசி கோபால் at 4/26/2019 04:30:00 PM 4 comments
Labels: அனுபவம்
Wednesday, April 24, 2019
கனவு மெய்ப்பட....... (பயணத்தொடர், பகுதி 95 )
ராமராஜ்யத்தில் இருந்து திரும்பி வரும் வழியில் அடையார் வந்துருச்சு :-)சட்னு போய் நம்ம அநந்தபதுமனைக் கும்பிட்ட கையோடு தோழி வீட்டுக்கும் போய் தலையைக் காமிச்சுட்டு வந்தோம்!
"இப்படி ஃப்ளையிங் விஸிட் நல்லாவா இருக்கு? வந்து இருந்து பேசி மகிழ்ந்து , சாப்பிட்டுப் போகாம.... " திட்டுனாங்க. வாங்கி வச்சுக்கிட்டேன்.
ரொம்ப நேரம் இருந்து பேச ஆசைதான்..... ஆனால்.....
லோட்டஸுக்குப் போய் வண்டியைக் 'கணக்குத் தீர்த்து' அனுப்பியும் ஆச்சு!
அதுக்குள்ளே நம்ம சீனிவாச ஆச்சாரி (மங்கேஷ் தெரு ) வேலை முடிஞ்சதுன்னு சேதி அனுப்பினார். என்ன ? ஹாஹா.... இதே பயணத்தொடர் முப்பத்தியெட்டுலே சொன்ன வேலைதான்!
கொஞ்சம் வெயில் தாழ வர்றோமுன்னு சொல்லி, அதே போல் ஒரு நாலரைக்குக் கிளம்பிப் போற வழியிலேயே கீதா கஃபே கீரைவடையையும் காஃபியையும் விட்டு வைக்கலை. ஸ்டாண்டர்டு ரேட்.... அம்பது ஆட்டோவுக்கு!
நான் மருமகன் மெச்சிய மாமியார்னு சொல்லி இருந்தேனே.... ஓர்மையுண்டோ?
சீனப்பயணத்தில் நமக்குக் கிடைச்ச மூன்று முத்துகளுடன், மருமகன் கொடுத்த முத்து (கரீபியன் க்ரூஸ் போன மகளும் மருமகனும் கொண்டுவந்த முத்துகளில் மருமகன் தன் பங்கை எனக்குக் கொடுத்தார்) சேர்த்துச் செய்த பென்டன்ட் நல்லாத்தான் இருக்கு!
மகளுக்காக சில மூக்குத்திகள், சில பல ரிப்பேர் வேலைகள், பழசை அழிச்சுட்டுச் செஞ்ச செயின் இப்படி எல்லாத்தையும் கணக்குப் பண்ணி வாங்கினதும் திரும்ப பாண்டிபஸார் வந்தோம்.
டெக்னாலஜி மாறும்தோறும் நாமும் நம்மை மாத்திக்க வேண்டித்தான் இருக்கு இல்லையோ.....
நமக்குக் கிடைத்த தகவலின் படி இன்னொரு 'கடை' யைத் தேடிப்போய்க்கிட்டு இருக்கோம். வழியில் நடைபாதை பூக்கடையில் கண்ணைக் கட்டி இழுக்கும் பூக்களை அப்படியே விட்டுட்டுப் போக முடியுதா?
அதுபாருங்க..... வீடியோ கேஸட்டுகள் நிறைஞ்ச உலகில் நாம் இருந்தப்ப, நாம் எடுக்கும் வீடியோக்கள் எல்லாம் விஹெச்எஸ் கேஸட்டில் பதிவு பண்ணதுதானே..... சரித்திர சம்பவங்கள் நிறைஞ்ச அதுகளை..... ச்சும்மாப் போட்டு வச்சு என்ன பயன்? வரலாறு முக்கியம் இல்லையோ.....
எப்பவாவது போட்டுப் பார்க்கலாமுன்னா இப்ப வீடியோ கேஸட் ப்ளேயர்க்கு எங்கே போறது?
அதனால் அவைகளை டிவிடியாக மாத்திக்கணும்னு ஒரு ஏழெட்டைக் கொண்டு போயிருந்தோம். நம்ம குமார் கடையின் மாடியில்தான்( 101 பாண்டி பஸார், பிக் பஸாருக்கு எதிர்வாடையில்) ஃபோட்டோ ஸ்டுடியோவுடன் இந்தக் கடை(!)யும் இருக்கு. ஓனர் எஸ். ஆனந்த். (Zenith Photo Studio) 'அது ஒன்னும் பிரச்சனையே இல்லை. டிவிடியில் எல்லாத்தையும் மாத்திப் பதிஞ்சுட்டு அப்படியே உங்க பென்ட்ரைவிலும் போட்டுக்கொடுத்துடறேன்'னு சொல்லிட்டார்.
நாலைஞ்சு நாள் ஆகுமே பரவாயில்லையான்னதுக்கு, நாம் சொன்னோம் 'அது ஒன்னும் பிரச்சனையே இல்லை' :-)
அறைக்கு வந்தவுடன், இப்போ கையில் இருக்கும் மாலை நேரத்தை என்ன செய்யலாமுன்னு பார்த்த 'நம்மவர்' நாடகம் ஒன்னு இருக்குன்னார்.
நம்ம பொழைப்பே நாடகமான்னா இருக்கு :-) இல்லையோ!!!
எனக்கு நாடகம் ரொம்பவே பிடிக்கும். அதுலே நடிக்கணுமுன்னா அப்படி ஒரு ஆர்வம். நம்ம தமிழ்ச்சங்கத்துலே ஒரு காலத்துலே மூணு நாடகம் இயக்கியும் இருக்கேன். நாடகம் எழுதுனது யாராம்? நம்ம ரங்கா ! அந்தக் காலத்தில் ஃபோரம்ஹப் ஒரு யாஹூ குழு இருந்துச்சு. தமிழில் பேசி எழுதறாங்கன்ற சேதியைச் சொன்னவர் 'நம்மவர்'தான். எப்படிக் கண்டுபிடிச்சார்னு நான் கேட்டுக்கவே இல்லை. அப்பம் தின்னால் போறாதா? குழி எத்தனைன்னு ஏன் எண்ணனும்?
நாமும் வீட்டுக்கம்ப்யூட்டர் வாங்குன புதுசு(1994) என்பதால் எப்பவும் அதுலே என்ன செய்யலாமுன்னு அதீத ஆர்வம் வேற :-)
அந்தக் குழுவில் போய்ச் சேர்ந்துக்கிட்டேன். இப்ப இருப்பதுபோல் எளிதாத் தமிழ் எழுத முடியாது...... டிஸ்க்கின்னு ஒரு எழுத்துருவில் வரும். இப்ப நினைச்சால் கனவு போல இருக்கு! அப்ப இருந்து துளசிதளம் ஆரம்பிக்க பத்துவருசம் ஆகி இருக்குன்னு சொன்னா நம்பணும், ஆமா! நல்லவேளை நம்ம காசி ஆறுமுகம், யூனிகோடு தயாரிச்சு வாழ்க்கையை எளிதாக்கினார் ! அவருக்கு என் நன்றியை இங்கே பதிவு செஞ்சுக்கறேன்.
ஃபோரம் ஹப்பில் சிறுகதைகளும், நாடகங்களும் நிறைய வந்துக்கிட்டு இருந்துச்சு. அதுலே இருந்து, நம்ம ரங்காவின் 'தச்சக் கவிஞர்' நாடகத்தை அவர் அனுமதியோடு நம்ம தமிழ்ச்சங்கத்துலே நடத்தினோம். நான் தான் அந்த தச்சக் கவிஞன் :-) அது பயங்கர வெற்றி ! அதற்குப்பின் இன்னும் ரெண்டு நாடகங்களையும் நடத்தினோம். அதெல்லாம் ஒரு 'கனவுக் காலம்'!!! போகட்டும்.... இப்போ நனவுக்கு வரலாம்.
இங்கே பக்கத்துலே வாணிமஹாலில்தான் கனவு மெய்ப்பட என்ற நாடகம் ஆறேமுக்காலுக்கு இருக்குன்னார். சட்னு கிளம்பிப் போனோம். டிக்கெட் வாங்கிக்கலாமுன்னு போனால்.... ஆல் ஆர் வெல்கம்னு சொல்லிட்டாங்க. அட! நாடகமுமா!!! இதுவரை இலவச நாடகம் ஒன்னுகூடப் பார்க்கலையேன்னு இனி நினைக்கக்கூடாது.... எல்லாம் ஒரு அனுபவம் :-)
டம்மீஸ் ட்ராமான்னு ஒரு குழு சென்னையில் நாடகம் நடத்திக்கிட்டு இருக்காங்க. ஸ்ரீவத்ஸன், கிரிதரன் அண்ட் கிருஷ்ணமூர்த்தி என்ற மூவரின் கனவு, நலிந்துபோய்க் கொண்டிருக்கும் நாடகக்கலைக்குப் புத்துயிர் கொடுத்து அதை மக்களுக்குக் கொண்டு செல்வது! இதுக்காக அவுங்க ஆரம்பிச்ச இந்த டம்மீஸ் ட்ராமா க்ரூப், டம்மீஸ் க்ரியேஷன்ஸ் என்ற அமைப்பில் 1998 இல் முதல் நாடகமான Womens Rea மேடையேறி இருக்கு.
நாடகம் முழு வெற்றி ! அதுக்குப்பிறகு மேலேமேலே வெற்றிப்படிகளில் ஏறிப்போய்க்கிட்டே இருக்காங்க. இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் நாடகம் இந்த வரிசையில் முப்பத்தியொன்னு!
கனவு மெய்ப்பட என்ற இந்த நாடகம், இந்த வருஷத்தின் புதுசு. ஜூன் 1, 2018 இல் மேடை ஏறி இருக்கு. இன்று ரெண்டாம் முறையாக !
வருஷத்துக்கு ஒன்னு இல்லே ரெண்டு, கூடிவந்தால் மூணு இந்தக் கணக்குதான். செய்யும் வேலையைத் திருந்தச் செய்யணும் என்ற உணர்வு தான் காரணம்!
அரங்கத்தில் அவ்வளவாக் கூட்டமில்லை. ரெண்டாவது வரிசையில் இடம் கிடைச்சது. முதல்வரிசையில் கண்ணை ஓட்டினப்போ.... ஒரு பிரபலம் கண்ணில் பட்டாங்க. நாடகக்கலைஞர் பாம்பே ஞானம்!
சரியா ஆறேமுக்காலுக்கு மேடை நிகழ்ச்சிகள் ஆரம்பம். இன்றைய முக்கிய விருந்தினரை மேடைக்கு அழைத்து கௌரவித்தார்கள். சம்ப்ரதாயப் பேச்சுகள் முடிஞ்சதும் ஏழு அஞ்சுக்கு நாடகம் ஆரம்பிச்சது!
சுமார் ஒன்னரை மணி நேர நாடகம் இந்த கனவு மெய்ப்பட! ஒரு கோவில் குருக்கள், அவர் பூஜை செஞ்சுக்கிட்டு இருக்கற சிவன் கோவிலுக்கு ஒரு ராஜகோபுரம் இல்லையேன்னு மனக்கவலையா இருக்கார். கோவில் தர்மகர்த்தாவும், நிதி நிலமை சரி இல்லாததால் ராஜகோபுரம் கட்டும் எண்ணமே கனவுதான்னு சொல்லிடறார்.
ஆனால்.... இறைவனின் திருவுளம்? கனவை நனவாக்கிக் கொடுத்துருது! எப்படி?
அதை 'மேடையில் காண்க'ன்னு சொல்லணும் :-)
நம்ம மெட்ராஸ்பவன் சிவகுமார், இந்த நாடகத்தின் விமரிசனம் எழுதி இருக்கார். இங்கே பார்க்கலாம்.!
கடைசியில் ராஜகோபுரம் கட்டி, மேளதாளம், பூரணகும்பத்தோடு கோவில் கும்பாபிஷேகம் நடக்குது!
ச்சும்மா சொல்லக்கூடாது, செட் எல்லாம் அருமையாப் போட்டுருக்காங்க. ரொம்பவும் ரசித்தேன்!
மூவரின் கனவாக ஆரம்பிச்ச இந்த டம்மீஸ் நாடகக்குழுவில் இப்போ அம்பது கலைஞர்கள் !
நம்ம பயணம் முக்கால்வாசி ஆன்மிகமா இருப்பதால் கொஞ்சம் லௌகிகமா இருக்கட்டுமேன்னு நாடகம் பார்க்கப்போனால், நாடகமும் ஆன்மிகமா இருந்துருச்சு பாருங்க !
எல்லாம் 'அவன்' செயல்!
தொடரும்......:-)

Posted by துளசி கோபால் at 4/24/2019 07:53:00 PM 2 comments
Labels: அனுபவம்
Monday, April 22, 2019
பலவேசப் பெருமாள் @ ராமராஜ்யம் !!! (பயணத்தொடர், பகுதி 94 )
கொஞ்ச நேரத்துலேயே நம்ம திட்டத்தில் ஒரு மாற்றம் வந்துச்சு. ஓலா கேப் வராதாம். கேன்ஸல் பண்ணறோமுன்னு சேதி ! நல்லவேளை காலையில் நாம் தயாரா இருக்கும்போது கழுத்தறுக்காம இப்பவே சொன்னதும் ஒருவழியில் நல்லாதாப் போச்சுன்னு வச்சுக்கலாம். ஒரு முக்கால் மணி நேரப் பயணம். அங்கே இருந்து திரும்பிவர வாகன வசதி கிடைக்குமான்னு ஒரு யோசனை இருந்துச்சுதான்.
வலையில் தேடி தி.நகரில் ஒரு வண்டியை புக் பண்ணினார் இவர். எதோ மணிக்கணக்குன்னு பேச்சு. என்னவோ மைலேஜ் கணக்கு சொன்னாராம் ஓனர். அந்த டிரைவர் காலை நாம் சொன்ன நேரத்துக்குப் பத்து நிமிட் லேட்டா வந்தார். இடம் தேடிக்கிட்டு இருந்தாராம் ! இதே பேட்டையில் இடம் தேடல்..... எவ்ளோ சரளமா பொய் வருது பாருங்க.... தொலையட்டும்.... காலங்கார்த்தாலே ஒரு வம்பும் வேணாம்.
ராமராஜ்யத்துக்குப் போகணுமுன்னால் எனக்கு எப்பவுமே ஒரே மகிழ்ச்சிதான்! இப்பவும்.... கூட.....
காலையில் அவ்ளோ ட்ராஃபிக் இல்லாததால்.. முக்கால்மணி நேரத்துலே போய்ச் சேர்ந்தோம்.
ராமராஜ்யம் ஒரு கேட்டட் கம்யூனிட்டின்னு வச்சுக்கலாம். ஏற்கெனவே சிலபல முறை எழுதி இருக்கேன். முடிஞ்சால் எட்டிப் பாருங்க.
முதல்முறை அங்கே போன அனுபவம் இங்கே!
முக்கியமா அங்கே தங்க விரும்பினால் அனுமதி கேட்டு மடல் அனுப்பலாம். ஏற்கெனவே தங்கியும் இருக்கோம். கிளம்பி வாங்கன்னுருவார்.
இங்கே உள்ளே ஏராளமான கோவில்கள் இருக்கு. அத்தனையும் ஒரு அழகோடும், ஒழுங்கோடும் நித்யப்படிப் பூஜை புனஸ்காரங்களாலும் ரொம்பவே நல்லா நடந்துக்கிட்டு இருக்கு. கேட்டட் கம்யூனிட்டின்னு சொன்னேன் பாருங்க.... இங்கே வசிக்கும் சுமார் இருநூறு குடும்பத்தினர், எல்லா வேலைகளையும் தங்களுக்குள் பகிர்ந்துக்கிட்டு ஆர்வமுடன் கவனிச்சுக்கும் தன்னார்வலர்களே!
இவர்களில் பெரும்பாலானோர் வெளியிடங்களில் பணி என்பதால் காலை எட்டுமணிக்குள் கோவில்களில் நித்ய பூஜைகள் நடந்துரும். திரும்ப எல்லோரும் ஆஃபீஸில் இருந்து வந்தபிறகு ஏழு ஏழரைக்கு சாயரக்ஷை பூஜைகள் தொடங்கும்.
சனிக்கிழமைகளில் மட்டும் காலையில் ரொம்ப விஸ்தாரமான பூஜை. மாதா அன்னபூரணி, வகைவகையான நைவேத்யங்களோடு தானே பல்லக்கில் வந்து, இங்கிருக்கும் 'பெரியகோவில்' மூலவர் பூரணப்ரம்மத்துக்குத் தளிகை சமர்ப்பிக்கிறாள்!
பூஜை முடிஞ்சதும் எல்லோருக்கும் விருந்துதான். எப்பவும் குறைஞ்சபட்சம் 21 வகைகள்! இந்த சனிக்கிழமைகளில் மட்டும் இங்கே வந்து போக வெளியாட்களுக்கும் அனுமதி உண்டு. அன்று காலை மட்டும் கேட் திறந்தே இருக்கும். அக்கம்பக்கம் உள்ள அன்பர்கள் விஜயமும் அன்றுதான்!
பெரிய கோவில் மூலவருக்கு பூரணப்ரம்மம் என்று பெயர். அனைத்து தெய்வங்களின் அடையாளங்களுடன் பரிபூரணமா நிறைஞ்சு இருக்கார். நாந்தான் இவருக்குப் 'பலவேசப் பெருமாள்'னு ஒரு பெயர் வச்சுருக்கேன்:-)
அந்தந்த நாளின் முக்கியத்தின்படி இவரே சிவன், அம்பாள், ஆண்டாள், கிருஷ்ணன், நரசிம்ஹர், வராஹர்,தாயார், தக்ஷிணாமூர்த்தின்னு காட்சி கொடுப்பார்! முதல்முறை பார்த்தப்ப இவர் 'தியாகேசர்' அலங்காரத்தில் இருந்தார்!
நாங்கள் அங்கே போய்ச் சேர்ந்தப்ப மணி 7.20. முதலில் கேன்டீனுக்குப்போய் ஒரு காஃபி குடிக்கணும். எஞ்சினுக்குப் பெட்ரோல் ஊத்துனதும் ஒரு சுறுசுறுப்பு வந்துருது பாருங்க :-)
அங்கே போனால் பெரிய பெரிய கெட்டில்களில் டீ, காஃபி எல்லாம் தயரா இருக்கு. மேஜைகளில் பிஸ்கெட் வகைகள். கொஞ்சம் மக்களும் அங்கங்கே ! கேன்டீனில் இன்று விற்பனை இல்லை. எல்லாம் இலவசமாம்! அட ! என்ன விசேஷம்? யாராக இருந்தாலும், எதுவாக இருந்தாலும் நல்லா இருக்கட்டும், நலமுண்டாகட்டும்!
இங்கே முதல் தரிசனம் எப்பவும் எனக்கு நம்ம துர்கைதான்! இஷ்டதெய்வம் ஆகிட்டாள். என்ன ஒரு கம்பீரம், நிகுநிகுன்னு என்ன ஒரு அழகு! வச்ச கண்ணை வாங்க முடியாது.... கஷ்டப்பட்டுப் பிடுங்கி எடுக்கணும்... :-)
(இந்தப் பதிவு இப்போ எழுதிக்கிட்டு இருக்கும் சமயம் இவளுக்கு ஆச்சு எட்டு வயசு! அமர்க்களமாப் பொறந்தநாள் கொண்டாடி இருக்காங்க. சேதி வந்தது ஃபேஸ்புக் நண்பர் மூலம்! )
அடுத்துப் போனது பெரிய கோவிலுக்கு! திருமஞ்சனம் , அலங்காரம் எல்லாம் முடிஞ்சு பெருமாள் ஜிலுஜிலுன்னு இருக்கார். பக்தர்கள் அங்கங்கே! பாபாஜியின் ஆஸனம் தயார் நிலையில் காத்துருக்கு! ஏழே முக்காலுக்கு வந்துட்டார். உள்ளூரில் இருக்கும் சமயம் தினமும் மாலையில் சத்சங்கத்தில் கலந்துக்குவார். சனிக்கிழமைகளில் காலையிலும் சத்சங்கம் உண்டு. பகல்வரை இங்கேதான் இருப்பார்.
இவரைக் கணினியுகத்துக் கடவுள்னு சொல்லலாம். யார் வேணுமானாலும் அருகில் போய் பேசலாம். ஜஸ்ட் ஒரே ஒரு சிம்பிள் கொள்கைதான் இங்கே. Love all Love is all.
நாமும் நம்ம வரவைத் தெரிவிக்காமல் போய் இருக்கோம். வரும்போதே எல்லோரையும் வரவேற்கும்வகையில் கைகளை அசைத்து வாழ்த்து சொல்லிக்கிட்டே வருவது இவர் வழக்கம். நம்மைப் பார்த்ததும் 'எப்ப வந்தீங்க'ன்னு சின்ன விசாரிப்பு!
அவரோட ஆஸனத்தில் அவர் போய் உக்கார்ந்தவுடன், விருப்பம் இருந்தால் கிட்டப்போய் வணக்கம் சொல்லிக்கலாம். இவருடைய உதவிக்கு யாராவது இவர் பக்கத்துலே நின்னு ஒரு சின்ன ஸ்டேண்டுலே எதாவது இனிப்பை சாக்லேட்டோ, முட்டாயோ..... நிறைச்சுக்கிட்டே இருப்பார். அடுத்துப்போகும் அனைவருக்கும் எதாவது கிடைச்சுக்கிட்டே இருக்கும். யாரும் வெறுங்கையாத் திரும்பவே முடியாது :-) அவரை வெறுங்கையாப் போய்ப் பார்ப்பதான்னுதான் நாமும் நேத்து கொஞ்சம் இனிப்பு, நம்ம வகையில் வாங்கினோம். எது கிடைச்சாலும் உடனே அதை எல்லோருக்கும் பகிர்ந்தளிக்கச் சொல்லிருவார்.
அதே போல இங்கே பூஜையோ, சத்சங்கமோ நடக்கும் போதெல்லாம் மக்கள் தின்ன, எதாவது வந்துக்கிட்டே இருக்கும். இதுக்கெல்லாம் கணக்குவழக்கே இல்லை! நம் காதும் கண்ணும் வாயும் பயங்கர பிஸி :-) எல்லோரும் ரொம்பவே ரிலாக்ஸா உக்கார்ந்துக்கலாம். நாட்டாமைகள் யாரும் இல்லை. நாங்க எப்பவும் மூலவருக்கு எதிர்ப்பக்கம் இருக்கும் நீளப்படி வரிசையில் உக்காருவோம். சிலசமயம் திண்ணையிலும். இன்றும் அப்படியே....
பஜனைப் பாடல்கள் சிலர் பாடிக்கிட்டு இருக்கும்போது, மாதா அன்னபூர்ணியின் வரவு. பதாகை பிடித்து இரண்டு பெண்கள் வர பல்லக்கில் வரும் அன்னபூரணியின் பின் அன்றையத் தளிகையில் செய்த பதார்த்தங்களின் அணிவகுப்பு! பெரும்பாலும் பெண்களே! மருந்துக்கு சில சமயம் ஒரு சில ஆண்கள் இருக்கலாம்:-)
நைவேத்யங்களை பூரணப்ரம்மத்திற்கு சமர்ப்பித்து, ஆரத்தி முடிஞ்சதும் நாம் போய் மூலவரை தரிசிச்சு வலம் வரலாம். இதற்கிடையில் தரிசனம் செய்ய வரிசையில் நாம் போகும்போது , அந்தப் பதினெட்டுப் படிகளில் நின்றபடி ஒவ்வொருவருக்கும் எதாவது பழங்களைப் பிரஸாதமாகத் தருவார் பாபாஜி. வாங்கிக்காதவர்கள் யாராவது உண்டான்னு கேட்டுக் கூப்பிட்டுக் கையில் தருவார். இதெல்லாம் எனக்கு ரொம்பவே பிடிக்கும் அம்சம். 'நாம்தான் இந்த அமைப்பின் தலைவன்' என்ற எண்ணம் இல்லாமல் நம்மில் ஒருவராக எளிமையாக இருக்கார் பாருங்க !
பூஜை நடந்து முடிஞ்சு நைவேத்யம் சமர்ப்பியாமி ஆனதும் அவைகளைக் கொண்டுபோய் பெரிய பாத்திரங்களில் இருக்கும் அதே வகைகளில் சேர்த்துருவாங்க. எல்லோரும் சாப்பிட்டுப் போகணும், ஆமா.....
இதுக்கிடையில் சிலர் (வட இந்தியர்! ) வந்து மூலவரை தரிசனம் பண்ணினாங்க. அப்புறம் விவரம் கிடைச்சது. இன்றைக்கு இங்கே இன்னொரு ஹாலில் ஒரு ஆர் எஸ் எஸ் மீட்டிங் நடக்குது. அதுக்கு வந்தவங்க இவுங்க. சஹா க்கள் ! இவுங்க வகையில்தான் இன்றைக்குக் கேன்டீனில் சிற்றுண்டி ஏற்பாடுகள்!
நாங்க மூலவர் தரிசனம் முடிஞ்சு சாப்பிடப்போகும் வழியிலேயே நமக்கான உணவுத்தட்டுகளுடன் நண்பர் கோபால் சூடாவும் அவர் மனைவியும் வந்துட்டாங்க. அதிதி ஸேவை!
நண்பர் மூலமாகத்தான் அன்றன்று நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் படங்களாவும் வீடியோ க்ளிப்பாகவும் உலகின் பலபாகங்களில் இருக்கும் பக்தர்களுக்குப் போய்ச் சேர்ந்துக்கிட்டு இருக்கு! நண்பர் கோபால் சூடா அவர்களுக்கு என் நன்றி !
சாப்பாடானதும், திரும்ப பாபாஜியை சந்திக்கப் போனோம். முதல் கேள்வியே 'சாப்பாடு ஆச்சா' ? அப்புறம் நம்ம பயணம் பற்றி விசாரிச்சார். போகும் இடங்களைச் சொன்னதும் 'ஒன்னு தெற்கும் இன்னொன்னு வடக்குமா..... சம்பந்தமே இல்லையே'ன்னு சிரிச்சார் :-) இடும்பியின் பயணம் அப்படித்தான் இருக்கும், இல்லையோ?
ராமராஜ்யாவில் எப்பவும் எதாவது புதுக் கட்டடங்களோ, வசதிகளோ வந்துக்கிட்டே இருக்கும். இந்த முறை என்னன்னு கேட்டதும், உடனே ஒரு சின்னப்பொண்ணை நமக்கு கைடா அனுப்பிட்டார்.
குருவாயூர், ஹரிஹர்னு ரெண்டு கட்டடங்கள் வேலை முடிஞ்சு மின்னுது! காட்டுக்குள்ளே போய் சிங்கம் புலி யானைகளைக் கொஞ்சிட்டு, காம்பவுண்டு சுவர்களில் இங்கிருக்கும் பள்ளிக்கூடப் பிள்ளைகள் வரைஞ்ச ஓவியங்களை ரசிச்சுட்டு, நிதானமா எல்லாம் சுத்திப் பார்த்துட்டுக் கிளம்பினோம்.
இன்னொருக்கா துர்கையின் தரிசனமும் ஆச்சு!
இன்னொரு விஷயம் இந்த ராமராஜ்யத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டி இருக்கு! இங்கே வசிக்கும் மக்கள் எல்லோருமே எதாவதொரு வகையில் இங்குள்ள கோவில்கள், தோட்டங்கள், மற்ற இடங்கள் இப்படி எல்லாவற்றின் சுத்தத்தையும் பேணுவதில் உதவி செஞ்சுக்கிட்டே இருக்காங்க. ஒரு சமூகம் எப்படி ஒருவருக்கொருவர் உதவியா இணைஞ்சு நடக்கணும் என்பதை இவுங்களைப் பார்த்துக் கத்துக்கணும்!
எத்தனையோ புதுமனிதர்கள் வேற அங்கே போய் வந்துக்கிட்டு இருக்கோம். யாரும் நம்மை வெளி ஆட்கள் என்று நினைக்கவிடாமல் அன்பாகப் பழகுகிறார்கள். நமக்கும் புது இடத்தில் இருக்கோமே என்ற தயக்கம் இல்லாமல் அவர்களோடு ஒட்டிக்க முடியுது! முழுமையான அன்பு நிலவும் சூழலில் மன அமைதி கிடைச்சுருதுல்லே!
ராமராஜ்யா மெயின் கேட்டுக்குப் பக்கத்துலே ஒரு அம்மன் கோவில் இருக்கு. மிளகாத்தம்மன் ! முதல்முறையா அங்கேயும் போய், அம்மன் தரிசனமும் ஆச்சு! இது ஆடி..... அவள் மாசம் !

Posted by துளசி கோபால் at 4/22/2019 05:36:00 PM 4 comments
Labels: அனுபவம்
Subscribe to:
Posts (Atom)