வாழ்க்கையில், ஆசிரமம் என்னும் இடத்துக்குள் முதல்முதலாப்போறோம். ஒரு முப்பத்தியஞ்சு வருசத்துக்கு முன் பூனா நகரில் (இப்ப இது புணே!) ரஜ்னீஷ் ஆஸ்ரமத்துக்குள் நுழைஞ்சிருக்கோம். ஜஸ்ட் முன்பகுதியில் இருக்கும் ஹால்வரை மட்டுமே அனுமதி. அதுவும் பூனா நகர சுற்றுலா பஸ்ஸில் போனதால் இருக்கலாம்.
கண்ணை அகலத் திறந்து பார்க்கிறேன். பளிச் சுத்தம் எங்கே பார்த்தாலும். நம்மை வரவேற்ற தன்னார்வலர் ( இவுங்கதான் அலுவலக வேலைகளைப் பார்த்துக்கறாங்க) அங்கே விளையாடிக்கிட்டு இருந்த ரெண்டு சிறுவர்களைக் கூப்பிட்டு , நம்ம தோழி இருக்கும் இடத்துக்கு நம்மை கூட்டிப்போகச் சொன்னாங்க. இங்கேயே படிக்கும் சிறுவர்கள்தானாம். சட்னு நம்மோடு ஒட்டிக்கிட்டாங்க.
நாதஸ்வரம் மேளத்தோடு வரவேற்பு. நமக்கும் உள்மனசு பயம் சட்னு விலகிருச்சு. சித்த யோகி சிவசங்கர் பாபாவின் ஆஷ்ரமம் என்றுதான் கூகுள் வழி காட்டுது. பெரிய பெயரை நீட்டி முழக்காமல் மக்கள் அனைவரும் இவரை பாபா என்றே குறிப்பிடறாங்க. அதிலும் நம்ம நியூஸி நண்பர் இவரை இன்னும் செல்லமாச் சுருக்கிட்டார். பாப்ஸ் ! ஜஸ்ட் பாப்ஸ்!
மரங்களும் புல்வெளிகளுமா சட்னு ஒரு கிராமத்தை நினைவூட்டும் எழில். நாம் ஸ்வாமிமலை ஆனந்தத்தில் பார்த்த கிராமத்தை விட இது ரொம்ப மாடர்னா இருக்கு. சிறுவர்கள், சின்னதா கேட்ட கேள்விக்கு விளக்கம் சொல்லிக்கிட்டே வர்றாங்க. வலது பக்கம் ஒரு கோவில். துர்கையாம். தோழி காத்திருப்பாங்க. அவுங்களுடன் திரும்ப வந்து சேவிக்கணும். கல்பாவிய அகலமான தெருக்கள்.ரெண்டு பக்கமும் இடுப்புயரத் தடுப்புச்சுவர். மொட்டையா விட்டு வைக்காமல் உலகில் உள்ள அற்புதப்பறவைகளின் படங்கள் இரு புறமும் அலங்கரிக்குது. மனசுக்குள் ஒரு மகிழ்ச்சி பரவியது உண்மை. கண்ணுக்கெதிரே தூரத்தில் ஒரு இரட்டை மாடிக் கட்டிடம். அங்கிருந்து இடது புறம் திரும்பி நடக்கிறோம். ஒரு நாவநாகரிகக் குடியிருப்புக்குள் இருக்கோம் இப்போ!
பொதுவா காலனிகளில் வீடுகள் எல்லாமே ஒன்று போல இருக்கும் பாருங்க. அப்படி இல்லாமல் தனித்தனி டிஸைன்களில் இருக்கு இங்கே! அடுக்கு மாடி குடியிருப்பு இல்லை இது. விருந்தினர்களுக்கான கட்டிடத்துக்குள் நுழையவும் தோழியும் நண்பரும் வெளியில் வரவும் சரியா இருந்துச்சு. சிறுவர்களுக்கு நன்றி சொல்லிட்டு அவர்கள் அறைக்குப்போனோம். நல்ல காற்றோட்டமுள்ள விஸ்தாரமான அறை. அட்டாச்டு பாத்ரூம். கூடவேஒரு வாஷிங் மெஷினும் இருக்கு! ரொம்ப ப்ராக்டிகலா சிந்திச்ச அமைப்பு! ஹொட்டேல்களில் தங்கும்போது பயணங்களில் துணி துவைச்சுக்கறதுக்கு வசதியே இருப்பதில்லை:(
விருந்தினர் மாளிகையை சுத்திக் காமிச்சாங்க தோழி. ஸிட்டிங் ரூம் அட்டகாசம். மூங்கில் யானை ஒன்னு அழகோ அழகு. புத்தர் பத்மாசனத்தில் உக்கார்ந்துருக்கார் ஒரு பக்கம். இதை எல்லாம் விட சுவரில் இருந்த ஒரு சித்திரம் அபாரம். குழலூதும் கண்ணன். ஆனால்நாம் வழக்கமாகப் பார்க்கும் போஸ் இல்லை!
இருட்ட ஆரம்பிச்சது. முதலில் கோவில்களுக்குப்போகலாம் என்ற தோழி துர்கையா, பிள்ளையாரான்னு கேட்டாங்க. ஆனைமுகத்தோனுக்கு முன்னுரிமை என்றேன். கணேஷ்புரிக்குப் போறோம். எல்லாம் இந்த கேம்பஸில்தான் இருக்கு. போகும் வழியெங்கும் பூச்செடிகளும், செயற்கை நீரூற்றுடன் புல்வெளிகள் தோட்டங்கள் என்று கண்ணுக்குக் குளிர்ச்சியான சமாச்சாரங்கள். அங்கங்கே இவைகளை உக்கார்ந்து ரசிக்க பார்க் பெஞ்சுகள் வேற!
அஞ்சே நிமிச நடையில் கணேஷ்புரி அலங்காரவளைவுக்குள் நுழைஞ்சு போனால்..... அழகான முன்மண்டபத்தை அடுத்து கருவறை. பிள்ளையார்பட்டிக்காரர் சிரிச்ச முகத்துடன் இருக்கார். ஹைய்யோ! ஒரு சமயம் பாபா, பிள்ளையார்ப்பட்டிக்குப் போயிருந்தபோது, அவர் மனசில் தோன்றிய எண்ணம்தான் இப்படி இங்கே கோவிலாக இருக்கு. 'நானும் கூடவரேன்'னு சொல்லி இருப்பார்போல நம்ம புள்ளையார். கடவுளைவிட அங்கிருக்கும் பளீர் சுத்தம்தான் என் மனசை நிறைச்சது.
இளம்பெண்கள் இருவர் மண்டபத்தின் முன்படிகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். தோழி அவர்களிடம் நலம் விசாரிச்சார். அடிக்கடி வந்து போவதால் அநேகமாக எல்லோரும் பரிச்சயமானவர்களே! மீண்டும் புள்ளையாருக்கு ஒரு கும்பிடு போட்டுட்டு துர்கை அம்மன் கோவிலுக்கு நடந்தோம். சடார்னு இருட்டு கவிழ்ஞ்சதில் எனக்குச் சின்ன தடுமாற்றம். டார்ச் எடுத்துக்கிட்டு வரேன்னு நண்பர்(தோழியின் கணவர்) அறைக்குப்போய் வந்தார். பொடி நடையில் நடந்தாலும் அஞ்சே நிமிசத்தில் அஷ்டதச புஜ துர்க்கையின் முன் நின்றோம்.
நிகுநிகுன்னு ஆளுயரச் சிலை. கண்ணும் வாயும் காண்பிக்கும் இளஞ்சிரிப்பு. வாடீம்மான்னு கூப்பிட்டாப்போல் ஒரு ப்ரமை!
முன்மண்டபமும் கருவறையுமா ஒருஜொலிப்பு. இந்தக்கோவில் இருக்குமிடம் ஸ்ரீபுரம்! நம்ம கற்பகம் (கபாலி) போல இருக்காளோ?அதே உயரமோ? ஊஹூம்....இல்லையாம். பதினெட்டு கைகளுடன், பத்தரை அடி உசரமாம். ஹைய்யோ!!!!!
பூஜை செய்து கொண்டிருந்த ஒருவர் (அர்ச்சகர்?) குங்குமப்ரசாதம் கொடுத்தார். கோவிலின் அழகை பாராட்டினேன். ஹைடெக் வசதிகள் உள்ள சாமிகளாம் இங்கே. அபிஷேகத்துக்கு மெனக்கெடாமல் ஷவர் இருக்கு பாருங்கன்னார். ஸோலார் பவர்! இளம் சூட்டில் குளியல்! ஆஹா ஆஹா.....
சமீபத்தில் 2011 வது ஆண்டு இங்கே கோவில்கொள்ள வந்திருக்காள் இந்த அஷ்ட தச புஜ துர்கா லக்ஷ்மி சரஸ்வதி! முப்பெரும் சக்திகளைத் தன்னுள் கொண்டவள். பார்க்கப்பார்க்க என் மனம் நிறைஞ்சாலும் கண்ணு நிறையலை. ஆனால்..... இங்கேயே டேராப் போட்டால்....? இன்னும் என்னென்ன அதிசயங்கள் இருக்கோ?
புள்ளையாரும் அம்மனும் வெறும் மூணே மாச இடைவெளியில் ஸ்தாபிதமாகிட்டாங்க. என்ன ஒரு வேகம்! 2011 ரொம்ப நல்லவருசமா இருக்கணும், இல்லே!!!
அம்மன் சந்நிதிக்கு எதிரில் ஒரு யாகசாலை. அங்கே லிங்கரூபத்தில் சிவன். காசி விஸ்வநாதரோன்னுதான் மனசில்தோணுச்சு. ப்ச்.... கேட்டுக்கலை பாருங்க:(
சர்வமதமும் சம்மதமுன்னு சின்னப்பிள்ளையா இருக்கும்போதே மனசுக்குள்ளே பதிஞ்சு போயிருந்ததை இப்ப அனுபவிக்கிறேனோன்னு கூட ஒரு எண்ணம் வந்துச்சு. சமண தீர்த்தங்கரரின் கோவில், புத்த விஹாரம், மசூதி, வைஷ்ணவி, மூகாம்பிகை இப்படி சில பல அம்மன்கள். இடைக்கிடை நம்மை நினைவுலகுக்குக் கொண்டு வந்த யானைகள் என்று பார்த்துக்கிட்டே போறோம். குட்டியாப் பாலங்களும் அடியில் ஓடும் நீரோடைகளும், செடிகளும் கொடிகளும் என்று பசுமைப்ரதேசம் கண்ணை இழுத்துக்கொள்வது உண்மை. அம்யூஸ்மெண்ட் பார்க்கில் இருக்கேனோன்னு சிலதடவை யாருக்கும் தெரியாமல் மெள்ள என் கையைக் கிள்ளிப் பார்த்துக்கிட்டேன்.
இல்லையே........ இது ஆஸ்ரமமாத்தானே இருக்கணும்? புதுவருச விழாவுக்குல்லே வந்துருக்கோம்?
புத்த விஹாரில் இருக்கும் ப்ரேயர் வீல் !
பூரணப்ரம்மம் கோவிலுக்குக் கூட்டிப்போனாங்க தோழி. இங்கேதான் விழா நடக்கப்போகுது. மின்சாரவிளக்கு அலங்காரத்தில் மின்னும் மினி தேவலோகம் ! இங்கேயும் ஸோலார் பவரில் வேலை செய்யும் விளக்குகளே ஒளிவெள்ளத்தைக் கொட்டிக்கிட்டு இருக்கு. சும்மாக் கிடைக்கும் சூரிய சக்தியை ஏன் தமிழ்நாடு பயன்படுத்திக்கலை, இவர்களைப்போல:(
இந்த வளாகத்தில் இருக்கும் ஒவ்வொரு கோவிலுக்கும் வெவ்வேறு விதமான கோபுரங்களும் கருவறை விமானங்களுமா கவனமாத் தேர்ந்தெடுத்த டிஸைன்கள். செண்டர் ஆஃப் அட்ராக்ஷன் என்று இருக்கும் மெயின் கோவிலான பூரண ப்ரம்மத்துக்கு மகுடம் போன்ற அமைப்பு. (நம்ம கிண்டிப்பூங்காவின் காந்தி மண்டபம் அடுத்து இருக்கும் மூதறிஞர் ராஜாஜி அவர்களின் நினைவு மண்டபம் சட்னு மன்சில் வந்து போச்சு)
எந்தெந்த பெயரில் அழைச்சாலும் இறைவன் ஒருவனே என்பது போல் எல்லா சாமிகளும், அவதாரங்களுமாச் சேர்ந்து ஒரு இடத்தில் லபித்திருப்பது இந்த பூரண ப்ரம்மத்தில்தான். ஹப்பா என்ன ஒரு பொருத்தமான பெயர்!
தச அவதாரங்களும், லிங்க ரூப சிவனும், அர்த்தநாரீஸ்வரரும் (உமையொருபாகன்) எண்கரத்தானாகவும் ஒன் அண்ட் ஆல் , ஆல் ஈஸ் ஒன் என்று அஞ்சே முக்காலடி உசரமா நிக்கிறார் பெருமாள்! ராமனின் வில்லும் அம்பும், க்ருஷ்ணனின் புல்லாங்குழல், பரசுராமரின் கோடாரி, பலராமனின் ஏர்க்கலப்பை , வாமனரின் குடை, விஷ்ணுவின் சங்கும், சக்கரமும், கதையும், முத்தாய்ப்பாக நிகழப்போகும் கல்கி அவதாரத்தின் வாள் ஒன்றும் தாங்கி நிற்கும் எட்டுக் கைகள்! இப்படி ஒரு உருவம் எந்த சாஸ்த்திரங்களிலும் சொல்லப்படவில்லை. பாபாவின் ஞானக்கண்ணில் தோன்றியதை வடிவமைக்கச் செஞ்சுருக்கார். நமக்கோ அங்கே இங்கே ஓடாமல் ஒரே இடத்தில் அனைத்துக் கடவுளரையும் ஊனக்கண்ணால் பார்க்க முடிகிறது!
1984 ஆம் ஆண்டு மனக்கண்ணில் வந்தவரை, கோவில் கட்டி இருத்திய ஆண்டு 2001. . ஆச்சு பதிமூணு வருசம்! ஆனால்,எதோ நேத்துதான் கட்டி முடிச்சதுபோல் புதுக்கருக்கு மாறாமல் அப்படியே இருக்கு. எந்த பேதமும் எங்களுக்குள் இல்லை என்பது போல் இவரே பரிபூரணமாக உள்ளவர். சஷ்டிக்கு இவரே முருகன், திருவாதிரைக்கு இவரே நடராஜர், ஏகாதசிக்கு இவர் விஷ்ணு இப்படி அந்தந்த நாளின் சிறப்புக்குத் தகுந்தாப்போல் வெவ்வேற உருவில் அருள் செய்யறார். நாம் போன சமயம் பச்சைப் பட்டு உடுத்தி, நெற்றியில் குறுக்கே பட்டையுடன் சிவன் அலங்காரம். தியாகேசர்!
அலங்காரம் முழுக்க தன்னார்வலர்களாலேதான். சந்நிதியின் பூ அலங்காரத்தின் கடைசிப்பகுதி நடக்குது. ராமருக்கு உதவின அணில் போல் கோபால் ஓடிப்போய் ஏணியைப் பிடிச்சார். நம்ம கோபாலிடம் எனக்குப் பிடிச்சமான குணம் இது. தன்னால் முடிஞ்ச உதவியை அது எத்தனை சிறிதானாலும் தயங்காமல் செய்வார்.
நான்கு பக்கங்களும் 'பதினெட்டுப் படிகள்' ஏறி தரிசனம் செஞ்சுக்கலாம். அழகான கொடி மரம். உச்சியில் நம்ம நேயுடு! படிகள் ஆரம்பிக்கும் இடத்தில் ஒரு தீபஸ்தம்பம். அடுக்கு விளக்குகள்! இதையொட்டி கொஞ்சமா அலங்கரிச்ச ஒரு சின்னூண்டு ஊஞ்சல்!
பெருமாளைத் தேடின என் கண்களை கவனித்த தோழி , அங்கெ இருக்கார்னு சொன்னதும் படிகள் இறங்கி ஓடினேன். அஞ்ஞானம்தான்:( ஆனால் ஓடோடி வந்த என்னை ஏமாற்றாமல் காட்சி கொடுத்தார் சீனு!
கோவிலைச் சுற்றித் தூணழகைச் சொல்லவா, மின்னும் தரை அழகைச் சொல்லவான்னு வியந்து நிற்கும் வகையில் ஒரு ரெட்டை மாடிக் கட்டிடம் எழும்பி இருக்கு. அதன் மாடிக்குக் கூட்டிப்போன தோழி சுற்றிக் காமித்த சமாச்சாரங்கள் என் கண்களை இன்னும் அகலமா விரியவைத்தது உண்மை. மாடியில் ஒரு கண்ணாடி மண்டபத்துள் புள்ளையாரும் முருகனும் சக்தியுமா கண்ணைப்பறிக்கும் அலங்காரத்தில் இருக்காங்க. விதானத்தில் இருக்கும் கண்ணாடிச் சித்திரங்கள் எல்லாம் ராமராஜ்யத்தின் பள்ளிக்கூடப் பிள்ளைகளின் கைவேலை(யாம்!!) கட்டிடத்தின் நான்கு பக்கங்களிலும் அழகான குட்டி கோபுரங்கள். தங்கக்கருடர் சிறகை விரிச்சு இதோன்னு பறக்கத் தயாராக இருக்கார்.
அழகை முழுசுமாக் கண்ணில் நிரப்பிக்க, பகல் பொழுதில் வராமப்போயிட்டோமேன்ற துக்கம் நெஞ்சில் நிறைஞ்சது. பதிவுக்கு மேட்டர் அள்ளித்தரும் சுரங்கமான்னா இருக்கு!
கோவிலையொட்டி இருக்கும் பூங்காவில் நல்லகூட்டம். போளி, ஆப்பம், தோசை, இட்டிலி, அது இதுன்னு ஏராளமா.....வயிற்றுக்கு உணவு! சலுகைவிலையில் விற்பனை. வாங்கிக்கலாமுன்னு போனால், காசைக் கொடுக்க கோபாலை அனுமதிக்கலை தோழி. விருந்தினருக்கு உணவு அளிப்பது பாபாவின் முக்கிய கொள்கைகளில் ஒன்னுன்னு சொல்லி எங்க கையைக் கட்டிட்டாங்க.
எட்டுமணிக்கு பாபா இங்கே வந்துருவார். விழா ஆரம்பம் என்பதால் நாங்களும் இரவு உணவை முடிச்சுக்கிட்டோம். தோழியும் நானும் மண்டபத்துக்குள் வர, கோபாலும் நண்பரும் வெளியில் நின்னு பேசிக்கிட்டு இருக்கும்போது பாபா வந்துட்டார். நண்பர் 'இவர் கோபால்' என்று அறிமுகப்படுத்தினதும், 'துள்சி கோபாலா' என்று கேட்டாராம். (அத்தனைக்கு மின்மடலில் அவரைப் பாடாய் படுத்தி இருக்கேன் போல!)
வரும்வழியெங்கும் நிற்கும் மக்கள்ஸ்க்கு புன்னகையையும், விசாரிப்புகளையும் வழங்கியபடி உள்ளே வந்தவரிடம், நம்ம தோழி, இவுங்க தான் துளசி என்று அறிமுகம் செஞ்சாங்க. மலர்ந்த கண்களுடன் 'வெல்கம் டு இண்டியா' என்றார். கூட்டத்தில் இருந்த அனைவருக்கும் ஒரு தலை அசைப்புடன் நல்வரவு ஆனதும் ஊஞ்சலில் போய் அமர்ந்தார். காட்சிக்கு ரொம்பவே எளியவர். முக்கியமா 'காவி' போட்டு மிரட்டலை:-)
கலைநிகழ்ச்சிகள் ஆரம்பமாச்சு. சுருக்கமா ஒரு சங்கீதக் கச்சேரி முதலில். வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள பக்தர்களின் பிள்ளைகள் சில நடன நிகழ்ச்சிகளைக் கொடுத்தாங்க. சினிமாப் பாட்டுகள் என்றாலும் இங்கே 'ஸப் சலேகா'. ஆஸ்ரமம் நடத்தும் பள்ளியின் சிறுவர் சிறுமியரின் இராமாயண நாட்டியம் அருமை. இலங்கைக்கு பாலம் கட்டும் ஸீன். குட்டிக்குட்டி அணில்கள் முதுகில் மூன்று கோடுகளுடன்! போன வருசம் நடந்த நடனமாம். மக்கள்ஸின் வேண்டுகோளை முன்னிட்டு இப்போ ரிப்பீட்டு! ரசிச்சேன். ஆனால் நாம் உக்கார்ந்திருந்த இடத்தில் இருந்து எட்டி எட்டி எடுத்த படங்கள் ஒன்னும் சரியா வரலை:(
சிலர், தங்கள் அனுபவங்களைப்பற்றிப் பேசினார்கள். நம்ம நண்பர் எழுதிய மூணாம் புத்தகம் 'மஹான்' வெளியீடு நடந்துச்சு. ஒரு ஐ ஏ எஸ் ஆஃபீஸர் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து நண்பரின் சிற்றுரை. சமீபமாக பாபாவால் கவரப்பட்டு அவரது அனுபவங்களை எழுத ஆரம்பிச்சு இப்போ அந்த வரிசையில் இது மூணாவது. 1. ‘Close Encounters of the Third Order’ 2. ‘Seriously Searching Shiva.’ 3. Mahaan . அனைத்தும் ஆங்கிலத்தில். பேசாம மொழி பெயர்த்துறலாமான்னும் ஒரு யோசனை வந்தது உண்மை:-)
எழுத்தாளரின் உரை!
இரவு மணி பனிரெண்டும் கடந்து ஓய்ந்து போக ஆரம்பிச்சதும் பூரணப்ரம்மத்துக்கு தீப ஆரத்தி நடத்திட்டு வந்திருந்த அனைவருக்கும் தன் கையால் பிரஸாதம் வழங்க ஆரம்பிச்சார்.தள்ளு முள்ளு ஏதுமில்லாமல் பக்தர்கள், விருந்தினர்கள் அனைவரும் வரிசையில் போய் வாங்கியபடி நகர்ந்தனர். லட்டு, நமக்கும் கிடைத்தது. அதன்பிறகு அதிக நேரம் நிற்காமல் தோழியிடம் சொல்லிட்டுக் கிளம்பினோம்.
நம்ம சீனிவாசன் வெளியில் நமக்காக வண்டியோடு காத்திருந்தார். அவருக்கு ஹேப்பி நியூ இயர் சொல்லி லட்டு வழங்கினேன். ஷேர் பண்ணிக்கறது நல்லதில்லையோ:-)
இதை ஆசிரமம் என்று சொல்வதை விட மக்கள் சேர்ந்து வாழும் ஒரு சமூக அமைப்புன்னு சொல்லணும். பாபா இந்த எண்ணத்துடன்தான் இதை ஆரம்பித்துள்ளார். சுமார் இருநூறு குடும்பங்களுக்கான வீடுகள் நிறைஞ்ச அமைப்புதான் இப்போதைக்கு. எல்லோரும் ஒற்றுமையுடன் சேர்ந்து வாழ்வது எவ்வளவு முக்கியம் என்பதை உலகத்தினருக்கு அறிவிக்கும் ஒரு மாடர்ன் மாடல் வில்லேஜ். தனித்தனி வாழ்க்கையுடன் ஒரு பெரிய கூட்டுக்குடும்பம்!
இங்கே ஒரு முதியோர் இல்லம் மட்டும் பாக்கியோ? இருக்கணும் என்று உள்ளூர ஆசை இருக்கு எனக்கு. நகரத்தின் சலம்பல்கள் இல்லாமல் ஓய்வாகவும், அமைதியாகவும் நினைச்சபோது நினைச்ச கோவில்களுக்கு அலைச்சல் இல்லாமப்போய் கொஞ்ச நேரம் தியானம் செய்து மனதை லகுவாக்கிக்கவும் நம்மையொத்த வயதினருடன் பேசியும் சிறார்களுடன் பழகியும் நம்மால் ஆன உதவிகளைச் செய்து கொண்டு வானப்ரஸ்த வாழ்க்கை நடத்தலாமே என்ற பேராசைதான்! கையெட்டும் தூரத்தில் கடவுள்! கசக்குமா என்ன?
இன்னும் ஏராளமான கோவில்களும் அழகும் கொட்டிக்கிடக்கும் ராமராஜ்யத்துக்கு இன்னொருமுறை பகலில் நிதானமா வந்து அனுபவிக்கணும். முடிஞ்சால் ரெண்டு மூணு நாள் தங்கவும் ஆவல். பார்க்கலாம்............. கிடைக்குதான்னு. விஜய மாருதின்னு நம்ம நேயுடு இருக்காராம்!
என்னக் கவர்ந்த இன்னொரு சமாச்சாரம்......... ஜாதி, மதம், அந்தஸ்து, பொருளாதாரம், மொழி, கல்வி என்ற பேதம் ஒன்றுமே இல்லாமல் எல்லோருக்கும் ஒரே மாதிரி கவனிப்பு. உண்மையில் கடவுளுக்கு முன்னும் நீதிக்கு முன்னும் சகலரும் சமம் என்பதுதானே உண்மை! பக்தர்கள் அவரைக் கடவுளாகவே நினைக்கின்றனர். கணினி யுகத்துக்குக் கடவுள் !
எனக்கு மனப்பக்குவம் அவ்வளவாக இல்லையோன்னு கூட தோணுச்சு. ஆனால் மனசுக்குப் பக்கத்தில் இருக்கும் நண்பராக என் மனசு ஏத்துக்கிட்டதை மறுப்பதற்கில்லை.
புது அனுபவத்தோடு புது வருசம் தொடங்கி இருக்கு நமக்கு என்ற திருப்தியோடு அறைக்கு வந்தப்ப ராத்திரி ரெண்டு மணி.
PIN குறிப்பு: நியூஸிக்குத் திரும்பி வந்தபின் சிலநாள் கழிச்சு மின்மடல் ஒன்று அனுப்பி வச்சேன்.
அதில் ஒரு பகுதி :
'படிகளில் இருந்து உங்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். ரொம்பப்பிடிச்ச விஷயம், நீங்கள் காட்சிக்கு எளியோனாக இருப்பது. உங்களைச் சுற்றித் தேவையில்லாத நாட்டாமைகளை வைத்து ஒரு அரண் அமைத்துக்கொள்ளாமல் தேடி வரும் அனைவருக்கும் எளிய தரிசனம். இந்தப் பண்பு இருக்கும் குருவை என் வாழ்நாளில் அன்றுதான் முதன்முதலாகக் கண்டேன்.மனம் நெகிழ்ந்து போச்சு.'
சரியாச் சொல்லி இருக்கேனா?
தொடரும்............:-)

18 comments:
பளிச் சுத்தம் கவர்கிறது. இப்படியொரு இடமா!!!
அருமையான தரிசனம் தங்களின் படங்கள் மூலம் கிடைத்தன டீச்சர்.
படங்களை பார்த்து கொண்டே இருக்கலாம் அம்மா...
நாங்கள் பலவருடங்களுக்கு முன்பு போனோம். இப்போது நிறைய மாறுதல் தெரிகிறது.
அப்போது வீடுகள் முன்னே மரங்கள் இருக்கும்.
பசுமையாய் காட்சி தரும் தபோவனம் போல் இருந்தது.
அங்கு எங்களுக்கு தெரிந்தவர்கள் வீடு வாங்கி தங்கள் ஓய்வு காலத்தை அங்கு நிம்மதியாக கழிக்கிறார்கள்.
அங்கு அவர் அவர்களுக்கு முடிந்த சேவைகளை செய்யலாம், பாட்டு, நடனம், பள்ளி பாடங்கள் சொல்லிக் கொடுத்தல், சமையலில் உதவி, ஸ்வாமிக்கு அலங்காரம் என்று எதுவேண்டும் என்றாலும் செய்யலாம்.
கோபால் சாரும் உதவிசெய்து விட்டரே!
படங்கள் எல்லாம் அழகாய் இருக்கிறது.
அருமையான இடம் துளசி. முழுவதும் அழகும் பக்தியும் நிரம்பி வழிவதைப் படங்கள் காட்டுகின்றன. எல்லோருக்கும் ஒரு குரு வேண்ட்ம் என்பதும் உண்மைதானே. அதைத்தானெ நம் நண்பர் எப்பொழுதும் சொல்கிறார். அந்த முதியோர் வீடுகள் மிகவும் பிடித்தன. கோமதி சொல்வதைப் பார்த்தால் ஏற்கனவே முதியோர்கள் இருக்கிறார்கள் போல. துர்க்கையும் கணபதியும் அட்டகாசம்.பட்டீஸ்வர நாயகியாகவே எனக்குத் தெரிகிறாள். ரொம்ப நன்றிப்பா.
வாங்க ரோஷ்ணியம்மா.
இப்படி ஒரு இடம், அதுவும் சிங்காரச் சென்னையிலே என்பதை என்னாலும் நம்ப முடியலை!!!
வாங்க திண்டுக்கல் தனபாலன்.
இன்னும் கொஞ்சம் நல்லாப் படமெடுத்து இருக்கலாமுன்னு புலம்பிக்கிட்டு இருக்கேன் நான்.
ப்ரமிப்பில் கை நடுக்கம் கூடிப்போச்சு!
வாங்க கோமதி அரசு.
தோழியும் கணவருமே கூடச் சொன்னாங்க..... இந்த அஞ்சு வருசத்தில் ஒவ்வொருமுறை போகும்போதும் எதாவது அழகான மாற்றங்கள் தெரிஞ்சுக்கிட்டே இருக்குன்னு!
ஆனால்.... அந்த தபோவனம் இருந்தால் இன்னும் அட்டகாசமா இருக்கும். ஒருவேளை அந்தப்பகுதிக்கு நாங்கள் போகலையோ என்னவோ?
நேரமில்லாமல் போச்சுன்னு சொன்னாலும் இந்தியாவில் சட்னு இருட்டிருது:( அதுக்குப்பிறகு வெளியில் போக சுணக்கம்தான்.
ஆனால்.... இப்ப கண் நல்லாத் தெரியுதுதே! அடுத்தமுறை விடுவதில்லை:-)))
படங்கள் பளிச்.... இருந்தாலும் முப்பத்தொன்பது என்பது கொஞ்சம் அதிகம் தான்.
வாங்க வல்லி.
அந்த முதியோர்வீடுகள்?????
அப்படி ஒன்னும் தனியா இல்லையேப்பா:(
அங்கெல்லாம் நம்மைப்போன்ற மக்கள்ஸ்தான் வசிக்கிறாங்க. பாபாவை 'பற்றி' இருக்கும் 200 குடும்பமக்கள்ஸ்தான்.
நார்மல் லைஃப்தான். பள்ளிக்கூடம், ஆஃபீஸ் போய்வரும் பிஸியிலும் கோவில்வேலைகளை ஆர்வமாக்ச் செய்கிறார்கள்.
இன்னும் நிறைய சுவாரசியமான விஷயங்கள் இருக்கு. ஆனால் அவை எல்லாம் நண்பர்கள் வாய்மொழி.
எனக்கும் அவைகளை நேரில் அனுபவிக்கும் பாக்கியம் கிடைக்கும்போது நம்ம அனுபவத்தை எழுதுவேன்.
சும்மாச் சொல்லக்கூடாது..... சூப்பர் துர்கைப்பா!
வாங்க ஸ்கூல் பையன்.
அடடா..... 39 ஆ போட்டுருக்கேன்? எதைவிட எதைப்போடன்னு தெரியாத மயக்கம்தான்!
இன்னும் ஒன்னு கூடப்போட்டு ரவுண்ட் செஞ்சுருக்கலாம்:(
அங்கே எடுத்த 199 ( அது பாருங்க, இன்னும் ஒன்னே ஒன்னு எடுத்திருந்தால் ரவுண்ட் ஆகி இருக்கும்!) படங்களில் 39 ,பதிவில் போட்டது ஒரு 20% தானேன்னு ஜஸ்டிஃபை பண்ணிக்கிட்டேன்:-)))
தில்லியில் இருந்த ஒருவர் அங்கே போய் பணி செய்வார்..... இப்போதும் அங்கே தான் இருப்பதாகத் தெரிகிறது....
படங்கள் அனைத்தும் அருமை.
உண்மையில் மனம் கவர்ந்த இடமாகவே இருந்தது ஆஷ்ரமம். நீங்கள் சொல்வது போல நெருக்கடியான சென்னையில் இப்படி ஒரு அமைதி தவழும் இடமா என்று வியப்பாக இருந்தது.
உங்கள் பதிவு மூலம்தான் முதல் முறையாக இந்த இடம் பற்றிக் கேள்விப்படுகிறேன்.
வாங்க வெங்கட் நாகராஜ்.
உலகின் பல்வேறு பாகங்களில் பக்தர்கள் இருக்காங்க. பாபாவும் அடிக்கடி வெளியூர், வெளிநாடுன்னு சுற்றுப்பயணம் போறவர்தான். ஆளு, அம்பு, அடிபொடிகள் என்றில்லாமல் தன்னந்தனியாப் புறப்பட்டுப் போயிடறார்!
நம்மால் பிறருக்கு எந்தவிதமான கஷ்டங்களும் இருக்கக்கூடாதுன்னு திடமாச் சொல்றார். நெவர் ஹர்ட் எனி ஒன். அதுவும் மனதாலும் மெய்யாலும் என்கிறார். ரொம்பவே ஈஸி கோயிங்.
வாங்க ரஞ்ஜனி.
எனக்கும் முதல்முறையா அங்கு போனதும் கண்கள் விரிஞ்சது உண்மை. இன்னும் சரியாப் பார்க்கலை என்ற குறையும் இருக்கு:(
கோமதி அரசு:
அங்கே ராமராஜ்யத்தில் வேறொரு பகுதியில் நீங்க சொல்லும் தபோவனம் இருக்காம். ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு பெயர். தபோவனம் இருப்பது மஹாஜோதியில்!
(பதிவை வாசித்த தோழி அனுப்பிய தகவல் இது!) அவருக்கு நன்றீஸ்.
சுத்தம்,அமைதி,பக்தி அனைத்தும்ஓரிடத்தில்.
கவர்ந்தது.
இங்கும் வியாபாரம் நன்றாக இன்றும் நடக்கிறதா அம்மா...?
புத்தரும், குழல் மட்டும் ஊதும் கண்ணனும் நேர் எதிர்மறையாச்சே... இதைப்பற்றி ஏதேனும் ஆய்வு உண்டா அம்மா...
Post a Comment