Wednesday, September 29, 2004

சுந்தர்

சுந்தருடைய நினைவலைகள்தான் என் னுடைய சொந்த நினைவலைகள் பெட்டியத் திறக்க வச்சதே! இதைக் குறிப்பிட மறந்துட்டேன் பாத்தீங்களா?
சுந்தர், தயவுசெய்து என் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். இன்னும் யாரையாவது விட்டுட்டேனா? எதுக்கும, விட்டுட்டதா நான் நினைக்கறவங்ககிட்டேயும் ஒரு மன்னிப்பைக் கேட்டுடறேன்.


(அப்புறம் அரசியலிலே இறங்குறப்ப வசதியா இருக்கும்லெ)


1, 2, 3 என்று வரிசைப் படுத்திப்.....


ஒரு நாளு ச்சும்மா அப்படியே வலை மேய்ஞ்சுகிட்டு இருந்தப்ப 'கிரியேட் யுவர் ஓன் ப்ளாக்' ன்னுமேலே ஓடிக்கிட்டு இருந்தது. அதைப் பார்த்தேனே தவிர, வேற ஒண்ணூம் மனசுலே தோணலை.

இதுக்கு ரொம்ப நாள் கழிச்சு, வேற ஒரு சமயத்துலே இதே ஓட்டத்தைப் பாத்தேன்.

ரொம்ப பழைய சினிமா ஒண்ணு, பேரு 'ரத்னகுமார்' அதுலே கதாநாயகன் ரொம்ப ஏழை. சாப்பாடு இல்லாமஒரு பாழுஞ்சத்திரத்திலே தூங்கிகிட்டு இருப்பார். அப்ப 'திடீர்'னு ஒரு பயங்கரமான சத்தம் வரும். பூமிஎல்லாம்நடுங்கும். பாத்தா ஒரு எலும்புக்கூடு, பெரிய பாறாங்கல்லைத் தலைக்குமேலத் தூக்கிகிட்டு நிக்கும்!

'போடட்டுமா போடட்டுமா'ன்னு கேக்கும். நம்ம நாயகன் பயந்து ஓடுவாரு. எங்கே? எல்லாம் அந்தக் கட்டிடத்துக்குள்ளேய தான்!
எலும்புக்கூடும் விடாம அவரு போற இடத்துலே எல்லாம் 'டாண்'னு ஆஜராகும். நாயகன் சலிச்சுப் போய் 'போட்டுதான் தொலையேன்'அப்படிம்பாரு. அது கல்லை 'டமார்'னு கீழே போடும். இன்னொரு பூகம்பம், புகை.......


அடுத்த நொடியிலே ..! அட!

அதே பாழடைஞ்ச இடம் ஒரு அரண்மனையாக மாறி இருக்கும். நாயகனும் 'ராஜா'உடுப்பு போட்டுகிட்டு இருப்பார்.எலும்புக்கூடு சாப விமோசனம் கிடைத்து ஒரு தேவனா இருக்கும். ஒரு மோதிரத்தை நம்ம கதாநாயகனுக்குக் கொடுக்கும்! இப்படிப் போகும் கதை!

இப்ப இதை எதுக்குச் சொல்லறேன்னா, நானும், அடிக்கடி இந்த 'வலப்பதிவு ஆரம்பிங்க'ன்னு ஓடறதைப் பார்த்துட்டு, என்னதான் சொல்லுதுன்னு உள்ள போனா, 'திருவிளையாடல் படத்துலே அவ்வையே, எமை 1 ,2 ,3 என்று வரிசைப் படுத்திப் பாடுக'ன்னு வரமாதிரி வருது!

க்ளிக்,க்ளிக்,க்ளிக். வந்துருச்சு. எல்லாம் உங்க போதாத காலம்! 'என்ன பேரு வைக்கலாம், எப்படி வைக்கலாம்'னு முடிவு செய்யததாலே மனசுலே வந்த பேரையும் போட்டாச்சு.

முதல் பதிவு போட்டுப் பாக்கிறேன். ஐய்யோடா? எழுத்து என்னவோ போல வருதெ!

நம்ம 'காசி' இருக்கற தைரியத்துலே, அவருக்கு மடலுக்கு மேலே மடலா அனுப்பி, அவருக்குப் பைத்தியம் பிடிக்கற லெவலுக்குக் கொண்டுபோனேன்.

நம்ம காசிக்கு,'பொறுமையின் பூஷணம்' என்ற பட்டத்தை நியூஸிலாந்து வட்டம் சார்பாக அளிக்கின்றோம்!

அப்புறம் அவரோட 'தமிழிலில் வலை பதிக்க வாரீங்களா?' வை (இப்பத்தான் நிதானமா)படிச்சு, குழப்பம் எல்லாம் நாம வச்சிருக்கற ஒண்ணா நம்பர் கலப்பையாலெதான். ரெண்டு நம்பர் கலப்பை இருக்கணும்னு தெரிஞ்சிக்கிட்டு,அதை இறக்கினப்புறம் எல்லாம் சரியாச்சு! இன்னும் சிலது சரியா இல்லெ, ஆனா அதையெல்லாம் மெதுமெதுவா சரி செஞ்சுரலாம். உதவறதுக்கு நீங்கெல்லாம் இருக்கறீங்கதானே?

இதை இப்ப எழுதறது எதுக்குன்னா, என்னைபோல சில பேரு எங்கேயாவது இருக்கலாம். 'கணினி கைநாட்டான' எனக்கே புரியறமாதிரி, நம்ம காசி எழுதியிருக்கிறாரு. அவுங்க இந்த சேவையைப் பயன்படுத்திக்கிட்டு, வலைப் பதிவு செய்யுங்க. 'வந்து இந்த ஜோதியிலே கலந்துருங்க'னு அன்போடு அழைக்கிறேன்!

இன்னொரு முக்கியமான விஷயம்.

இந்த வலைப்பதிவுகளிலே நான் இடம் பிடிச்சு உக்கார்ந்து இருக்கறதுக்குப் பின்னாலே பலபேருடைய உழைப்பு அடங்கியிருக்கு!அவுங்களுக்கெல்லாம் என் நன்றியைத் தெரிவிக்காம இருந்தா நான் ஒரு 'நன்றி கொன்ற பாவி'யாக இருப்பேன்.

முதலிலே என்னையும் ஒரு படைப்பாளியா ஏத்துகிட்ட நம்ம 'மரத்தடி'க்கு, ( எனக்கு ஏதாவது எழுத வருமான்னே எனக்குத்தெரியாது)அதன் மட்டுறுத்தினர்களுக்கு, அப்புறம் மதி, காசி, ரவியா,சுபமூகா, ஷக்தி, உஷா,குமார்,கேவிஆர்,பரி,பத்ரி,அருள்குமரன்,யூனா,ஜெயந்தி சங்கர்,சங்கமம் விஜயகுமார், இன்னும் தனி மடல்களிலே அன்போடு வாழ்த்துக்கள் தெரிவிச்சவங்க, ஐய்யய்யோ பட்டியல்ரொம்ப நீளமாப் போகும்போல இருக்கே, ஐந்நூறு பேருக்குமேல ( இப்ப மரத்தடிலே எவ்வளவு உறுப்பினர் ? )அனைவருக்கும் என் நன்றியை ( நன்றிக்கு வேற் வார்த்தைத் தமிழிலலே இருக்கான்னு சொல்லுங்க ப்ளீஸ்) தெரிவித்துக் கொண்டு இந்த சிற்றுரையை(!) முடிக்கிறேன்.

ஏம்ப்பா, யாராவது ஒரு சோடாவை உடைச்சுத் தாங்க!


Tuesday, September 28, 2004

பெரிய எழுத்து விக்கிர.....கதை

பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை என்று கேள்விப்பட்டிருப்பீங்க தானே?
இங்கே நூலகங்களில், பெரிய எழுத்து கதைப் புத்தகங்கள் நிறையவே இருக்கின்றன. வயதானவர்கள், பார்வைக் ்குறைபாடுள்ளவர்கள் படிக்கக் கஷ்டப்படுவார்களே என்ற உண்மையான அக்கறையுடன் இதை ஏற்பாடு செய்திருப்பார்கள் போல!

முதியவர்கள் யாருடைய உதவியும் இன்றி அவர்களுக்குத் தேவையான புத்தகங்களைப் படித்து ஆனந்திக்க இதைவிட சுலபமான வழி ஏதும் உண்டோ?

இந்த வலைப் பதிவிலே இதுவரை பெரிய பெரிய எழுத்துக்களாக வருவதைப் பார்த்தாலே 'யாரோ வயசான ஆத்மா இதைப் பதிஞ்சுருக்கு' என்று நினைப்பீர்கள்.அப்படியும் வைத்துக் கொள்ளலாம்தான்!
இது ஒரு குறையாக இருக்கிறதென்று நீங்கள் நினைத்தால், சிறிய எழுத்தாக மாற்றி விடலாம்.
ஏம்ப்பா, யாராவது சொல்லுங்களேன், என்ன செய்யலாம் என்று!

Monday, September 27, 2004

வத்தலகுண்டு- வேப்பமரம்!

இன்னைக்கு 'தினகரன்' நாளிதழ் பார்த்தீர்களா?
நம்ம, ரெயில்வே மந்திரி, வேப்பங்குச்சியிலே பல் தேய்க்கறது சுற்றுச்சூழலுக்கு நல்லது என்று சொல்கிறார்.
நேற்று என்னன்னா, வத்தலகுண்டுக்கு அருகே மாரியம்மன் கோவில் மேலே இடி வீழ்ந்தது என்று ஒரு செய்தி!

இப்பத்தான், 'மரத்தடி'யிலே இந்த ரெண்டு விஷயங்களைப் பற்றிய ஒரு நினைவலைகளை எழுதினேன்.

இனிமே எதையும் எழுதக்கூடாதா?
கவலையா இருக்கே!

வணக்கம்.

ஒருவழியாகக் குழப்பங்கள் தீர்ந்துவிட்டன என்று நிைனக்கின்ேறன்

Saturday, September 25, 2004

Žì¸õ

«¨ÉÅÕìÌõ Žì¸õ.
¦¾Ã¢Â¡ò¾ÉÁ¡ ±¨¾§Â¡'ìÇ¢ì' ¦ºïÍ þ¨¾ ¬ÃõÀ¢îÍð§¼ý. ¯¾Å¢ ¦ºöÂÈÐìÌ¿¢¨È ¿ñÀ÷¸û þÕì¸¡í¸ ±ýÈ ¨¾Ã¢Âõ¾¡ý!
±ø§Ä¡Õõ ¦¸¡ïºõ ¬§Ä¡º¨É¸¨Çî ¦º¡øÖí¸!
±ýÚõ «ýÒ¼ý,ÐǺ¢.