Friday, January 31, 2020

சொனெரி மஹல் (பயணத்தொடர் 2020 பகுதி 8 )

தங்கமாம்!  பெயரில் தங்கத்தை வச்சுருக்கும் இந்த இடம் ஒரு ம்யூஸியம். சின்ன அளவில் இருக்கு. கட்டணமும் சின்னதுதான். வெறும் மூணு ரூ!  ஔரங்கபாத் நகராட்சியின் பொறுப்பில் இருக்கு.
ஔரங்கஸேப் இங்கே வந்தப்ப, அவர் கூடவே வந்த Bundlekhand Chief இந்தத் தங்கமாளிகையைக் கட்டினதாக ஒரு தகவல்.  வேற சிலர் 'சொல்வது   Paharsingh & His brother கட்டுனாங்கன்னு.

(இதுக்குத்தான் சரியான தகவல்களை எல்லாம் ஆவணப்படுத்தணும் என்பது !  ஆனால் பல தகவல்களையும்  எழுதிவைக்கும் போது, அப்போது ஆட்சியில் இருக்கும் மன்னர்/அரசு பக்கம் சார்ந்து அவுங்களுக்கு விருப்பமா இருக்கும் வகையில், அல்லது அவுங்களைப் புகழும் வகையில், இல்லேன்னா அவுங்களோட சம்ச்சாக்கள்/ ஜால்ராக்கள் சொன்னபடி எழுதிவச்சுடறாங்க. புகழ்ந்து பாடினால்தானே பரிசல்/ பரிசுகள் கிடைக்கும். நேர்மையா இருக்கறவங்க, அரிதுதான் எந்தக் காலத்திலும் இல்லையோ.... )
உள்ளே நுழையும் வாசலுக்கு ஹாத்திக்கானா (Hathikhana ) என்று பெயராம். யானை வரும் வாசல்.  நல்ல உயரமாத்தான் இருக்குன்னாலும், இந்த நுழைவுக் கட்டடமே உசரமாத்தான் கட்டி இருக்காங்க.  படிகள் ரொம்பச் சின்னது.  இதுலே யானை எங்கே ஏறிவரும்?  யானை கூட நுழையும் வகையில் பெரிய வாசல்னு சொல்லிக்கலாம்.
இதுவே தனிக்கட்டடம்தான். ஒரு மண்டபம் போல இருக்கு. இதையொட்டியே சுற்றுச்சுவர் போகுது.  இதுக்குள்ளேதான்  இங்கே வேலை செய்யும் பணியாளர்கள் வாஹனங்களை நிறுத்தி இருக்காங்க. அதுவும் இங்கே இருக்கும் அழகான சிலைகள், ஓவியங்களின் முன்னாலே.....  ப்ச்.....  ஒவ்வொரு சாமிக்கும் ஒன்னுன்னு.....   வேணுமுன்னா வண்டியில் ஏறி  ஊருக்குள் போயிட்டு வரலாம்....





டிக்கெட் வாங்கிக்கிட்டு  மண்டபத்தின் அந்தாண்டை வாசல் வழியாப் போறோம்.  அந்தாண்டை கொஞ்ச தூரத்துலே  தங்கமாளிகை!  பின்புலத்தில்  ஒரு  மலை!   இப்ப நாம் பார்த்துட்டு வந்தோமே  ஔரங்காபாத் குகைகள், அவை இருக்கும் மலைதான் இது. ஆனால் வேற பகுதி.
இடைப்பட்ட  இடத்தில்  நடுவில் நீளமா ஒரு நீர்த்தேக்கம்.  மொஹல் ஸ்டைலில் எல்லாம் கட்டடங்கள் முன்னால் தண்ணீர் தேக்கி வச்சு, கட்டத்தின் பிரதிபிம்பம் தண்ணீரில் தெரிவதைப் பார்த்து ரசிக்கும்படிதான்!  நல்ல வேளையா இதில் தண்ணீர் இருக்கு. ஆனால் பிம்பம்தான் தெரியலை......
நல்ல உயரமான மேடையில் மாளிகை (!) இருக்கு.  நடுவில் வளைவு வளைவா இருக்கும் மூணு வாசலும், ரெண்டுபக்கமும் ரெவ்வெண்டா இருக்கும்  துளையுள்ள அடைப்புமா ஏழு இருக்கு.  படிகளேறி  ம்யூஸியம் வாசலுக்குள் போறோம். செருப்பைக் கழட்டி வச்சுட்டுப்போக வாசல் மேடையில் ஒரு ஸ்டேண்டு.
உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை என்பதால் கப்சுப்னு கண்ணால் பார்த்தவைதான்.  ரொம்ப அழகான பழங்கால ஓவியங்கள்  சட்டம் போட்ட கண்ணாடிக்குள்ளே ! தங்கப்பொடியில் வரைஞ்சதாம். அதான் சோனெரின்னு பெயர் வந்துருக்கு!
பழைய காலப் பாத்திரங்கள், மரச்சிற்பங்கள் கொஞ்சம் , கத்தி கப்டான்னு போருக்கான ஆயுதங்கள் எல்லாம் வச்சுருக்காங்க.  எல்லாம் ஒரு நாலைஞ்சு அறைகளுக்குள்தான். ஒரு புள்ளையார்  மாடம் ரொம்பவே அழகு !    மாடியிலும் அறைகள் இருக்குன்னாலும், அங்கே போக அனுமதி இல்லையாம்.

ஒரு மூணு வருஷத்துக்குமுன்னே படம் எடுக்க விட்டுருக்காங்க போல....  ஒரு புண்ணியவான் சின்ன வீடியோ க்ளிப் (நாலரை நிமிட்) எடுத்து யூ ட்யூபில் போட்டுருக்கார். அதை நான் இங்கே போட்டுருக்கேன். அன்னாருக்கு நம் நன்றி !


கீழே படம்: மேடையில் இருந்து நுழைவு வாசல் .
சின்ன இடமா இருந்தாலும் படுசுத்தமா வச்சுருந்தாங்க. ஏகப்பட்ட CCTV  கெமெராக்கள்.  முன்ஹாலில் இருக்கும் பணியாளர் ,  மக்களை வரவேற்பதோடு, இதையும் கவனிச்சுக்கிறார். அதான் தங்கப்படங்கள் இருக்குல்லே?
ஔரங்காபாத்  யுனிவர்சிடி வளாகத்து வழியா இன்னொரு இடத்துக்குப் போறோம். அங்கே...........


தொடரும்......... :-)



Wednesday, January 29, 2020

டூப்ளிகெட் தாஜ்.... (பயணத்தொடர் 2020 பகுதி 7 )

குகை விஸிட் முடிச்சு அடுத்ததாக நாம் போன இடம் பீபி கா மக்பரா.  காலையில் குகை பார்க்க  இதே வழியாத்தான் போனோம். குகையில் இருந்து ஒரு ரெண்டரை கிமீ தூரம்தான். அசப்புலே பார்த்தால் தாஜ்மஹல்தான். ஆனால் சின்ன சைஸ்........  ஒல்லியா இருக்கு.
மக்பரான்றது அரபிச் சொல். இதுக்கு சமாதி, நினைவகம் இப்படிப் பொருள் இருக்கு.   இங்கேயும் உள்ளே போய்ப் பார்க்க  கட்டணம் உண்டு. இந்தியர்களுக்கு இருபத்தியஞ்சு ரூ.  வெளிநாட்டவர்க்கு முன்னூறு ரூ.  காலை  சூர்யோதயம் முதல் ராத்ரி பத்துவரை திறந்து வைக்கிறாங்க.
நம்ம தொல்லியல் துறை, மார்பிள் கல்வெட்டுலேக் கதைச்சுருக்கம்போல் சரித்திரக்குறிப்பு  வச்சுருக்கு.
ஔரங்கஸேபோட அப்பா ஆக்ராவுலே அம்மாவுக்குக்   கட்டுன தாஜ்மஹல்  பார்த்துட்டு,  இவரோட மகன் ஆஸம் ஷா தன்னுடைய அம்மாவுக்குக் கட்டுனது இது.  மாமியாருக்கும் மருமகளுக்கும்  போட்டியே கூடாது இல்லை :-)

மொஹலாயர்கள் ஆட்சி காலத்துலே  இரான் நாட்டு அரசகுடும்பத்து ஷாநவாஸ்,   குஜராத் பகுதிக்கு வைஸ்ராயா இருக்கார். அவர் மகள்   இளவரசி ரபியா உல் துர்ரானி,   ஔரங்கஸேபைக் கல்யாணம் கட்டுனாங்க.  கல்யாணத்துக்குப்பின் இவுங்க பெயர் தில்ரஸ் பானு பேகம். இவுங்க மூத்த மகன்தான் ஆஸம் ஷா. அஞ்சாவது பிரசவத்தின்போது,  இறந்துடறாங்க.

 (இதுலேகூடப் பாருங்க.... மாமியாருக்கும் மருமகளுக்கும் ஒரு ஒத்துமை. அவுங்களும்  பிரசவகாலத்துலே ஏற்பட்ட சிக்கல் காரணம்தான் இறந்தாங்க. பதிநாலாவது பிரசவம் !!!  )

பட்டமகிஷி இறந்துபோனது ஔரங்கஸேபுக்கு  பெரிய துக்கம்.  மகன் ஆஸம்ஷாவுக்கும் தாய் இறந்த சோகம் அதிகம். அப்பாவும் புள்ளையும் ரொம்பநாள் சோகக்கடலில் மூழ்கி இருந்துருக்காங்க. தாய் இறந்த ஏழாம் வருஷம்,  தாய்க்கு ஒரு நினைவகம் கட்டணுமுன்னு மகன் கட்டுனது இந்த பீபி கா மக்பரா.
டிக்கெட் வாங்கிக்கிட்டு உள்ளே போறோம். பெரிய தோட்டம்தான்.  மெயின் கேட்டில் இருந்து நுழைவு வாயில் ஒரு நூறு மீட்டர் இருக்கலாம்.  அதுக்குள்ளே போய் பார்க்கும்போது கண்ணெதிரே ஏறக்கொறைய தாஜ்மஹலேதான்.
அதே போல நாலுபக்கங்களிலும் மினாரா, இடைப்பட்ட தூரத்தில்  நீளமா செயற்கை நீரூற்று (தண்ணி இல்லை.....   காய்ஞ்சு கிடக்கு ) ஃபோட்டொ பாய்ன்ட்க்கு ஒரு பளிங்கு பெஞ்ச் கூட போட்டுருக்காங்க.  கூட்டம் இருந்தாலும் படம் எடுத்துக்க முடிஞ்சது.
கடந்து போய் உயரமேடையில் இருக்கும் கட்டடத்துக்குள் போறோம். ஹாலின் நடுவிலே இடுப்பளவு தடுப்பு சுத்திவரக் கட்டி இருக்காங்க. கீழே எட்டிப் பார்த்தால்  சத்தர் விரிப்பு போட்ட சமாதி.



 அங்கே ஆக்ராவில்   தாத்தா பாட்டி சமாதிகள்  கீழே நிலவறையில் இருக்கு.  நாம் உள்ளே போகும் மேல் தளத்துலே ஒன்னும் இல்லை. அங்கிருந்து நம்மால் பார்க்கவும் முடியாது.  (1994 இல் நாங்க போனபோது, இப்போ இருப்பதைப்போல் பாதுகாப்பு அச்சுறுத்தல் எல்லாம் இல்லை. கீழே நிலவறைக்குள் போய் பார்த்தோம்! 2010 இல் போனபோது கீழே போக அனுமதி இல்லைன்னுட்டாங்க)  இங்கேயும் கீழ்தளத்துலேதான்  பேகம் சமாதி இருக்குன்னாலும்  நாம் மேல்தளத்துலே இருந்து பார்க்கும் வகையில் கட்டி இருக்காங்க.
அங்கே முழுக்க முழுக்கப் பளிங்கே !  இங்கே அதுலே பாதிதான் பளிங்கு  (ஔரங்கஸேப் கொஞ்சம் கஞ்சர்ன்னு வாசிச்சது நெசம்தான் போல! )
உள்ளே  சுவர் முழுக்க இன்லே ஒர்க் வேலைப்பாடும், மேலே உசரக்கே மாடங்களும்,  மார்பிள் பலகணிகளுமா நல்ல வெளிச்சத்தோடு இருக்கு. என்னைக்கேட்டால்,  ஆக்ரா தாஜ்மஹலைவிட இந்த 'டெக்கன் தாஜ் 'ரொம்ப நல்லா இருக்குன்னுதான் சொல்வேன்.

வெளியே இடம் வரும்போது பின்பக்கத்துலே பெரிய தோட்டமும், அங்கே ஒரு வாசலுமா இருக்கு.  அந்த வாசல் இப்போ பயன்பாட்டில் இல்லை.



ஒரு மசூதி ஒன்னும்  கட்டி இருக்காங்க.  அழகானச் சின்னத் தூண்களும் வளைவுகளுமா அருமை.


மொத்த இடத்தையும் ரொம்ப சுத்தமாகவே  வச்சுருக்காங்க.  துப்புரவு செய்யும் மங்கள், உமா இருவரிடமும் பேச்சுக் கொடுத்தேன்.  வெள்ளிக்கிழமைகளில் தொழுகை  உண்டாம்.
சுமார் ஒரு மணி நேரம் அங்கிருந்துருக்கோம்.


பதினொன்னரை ஆச்சுன்னு கிளம்பினோம். நதீம் கொடுத்த லிஸ்ட்டில்  பக்கத்துலே என்ன இருக்குன்னு பார்க்கலாம்....  வாங்க

தொடரும்.....  :-)


Monday, January 27, 2020

ஒரு மலையைக்கூட விட்டு வைக்க மாட்டாங்களோ? (பயணத்தொடர் 2020 பகுதி 6 )

'த சொஸைட்டி'யை இழுத்து மூடிட்டு, எதிரில் இருக்கும் Bபாரில்   ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடுங்கன்னு நோட்டீஸ் ஒட்டி வச்சுருந்தாங்க. நானும் இதுவரை பாருக்குப்போய் 'சாப்பிடலை' பாருங்க..... சரின்னு அங்கே போனால்  ஒன்னும் சரி இல்லை.  நம்மவர் இட்லி இருக்கான்னு கேட்டதுக்கு  கொண்டுவரேன்னு போன பணியாளர்  வேறெங்கிருந்தோ ரெண்டு இட்லி வாங்கி வந்தமாதிரி இருந்தது.



ஹொட்டேலில் அனக்கமே இல்லை. ராத்ரி கல்யாணம் முடிஞ்சு வந்து எல்லோரும் தூங்கிக்கிட்டு இருக்காங்க போல....  ஹொட்டேல் முழுசும் கல்யாண வீட்டுக்காரர்கள்தான் தங்கி இருக்காங்க.  அவுங்களுக்கு ப்ரேக்ஃபாஸ்ட், வேற ஏற்பாடு இருக்கலாம். அதான்  நம்ம ரெண்டு பேருக்காக ஒன்னும் சமைக்கலை. அந்த இட்லி கூட கல்யாணவீட்டுக்காரங்க சமையலில் இருந்து வந்துச்சோ? சம்ஸயம்தான்..........
கல்யாணப்பந்தல் பக்கம் பார்த்தால் சுத்தமாத்தான் இருக்கு. கொஞ்சம் டீஸன்ட் விருந்தினர்கள் வந்துருந்தாங்க போல!   தோட்டத்தில் நாய்களும் காளையும்  ஆஜர்......

இந்த ஸ்டைல் குடம் இடுப்புலே வைக்க வாகாவே இல்லை.....

ஒன்பதுக்கு வண்டி கொண்டு வந்துருந்தார் சையத்.  உள்ளூர் சுத்தல் என்பதால்  சீனியர் ட்ரைவர்கள் !
நகர நுழைவு வாசலா ஒரு காலத்துலே   இப்படி சுத்திவர இருந்துருக்கு!  இப்ப நகரம் வளர்ந்துட்டதால் இது ஊருக்குள்ளே ! இதைக் கடந்து  ஔரங்காபாத் குகைகளுக்குப் போறோம். நதீம் கொடுத்த பட்டியல்தான்.  ஒரு குன்றின் மேலே போகும் பாதை.....   ஒரு இடத்தில் வலமும் இடமுமாய் ரெண்டாப் பிரியுது . வலப்பக்கம் போறோம். ரெண்டு தொகுதிகளா இருக்காம் இந்தக் குகைகள்.

ஏழாம், எட்டாம் நூற்றாண்டு சமாச்சாரம். புத்தமதம் சார்ந்தவை.  வாசல் கேட்டுலே டிக்கெட் ஆஃபீஸ் இருக்கு.  இந்தியர்களுக்கு  இருபத்தியஞ்சும், வெளிநாட்டவர்களுக்கு முன்னூறுமா வாங்கறாங்க.
பாதையில் நடக்க ஆரம்பிச்சா,  கட்டை சுவத்துல ஒருத்தர் நிஷ்டையில்! ஓசைப்படாமல் கடந்து போனோம்.  ஏராளமான கிளிகளும்,  அணில்களுமா  அருமையான இடம். அதோ தூரத்துலே ஔரங்காபாத் நகர்!



தொல்லியல்துறை சார்ந்த  ஒருவர் எதோ வேலையாக  வந்துருந்தவர்,  நம்மோடு கூடவே வந்து சுத்திக் காமிச்சு விளக்கம் சொன்னார். பெயர் சந்தீப் னு நினைவு. சத்தீஸ்கர் சொந்த மாநிலமாம்.





அங்கிருந்த அறிவிப்பு பார்த்துட்டு எந்தமாதிரி ரிலிஜியஸ் ஆக்ட் கூடாதுன்னு கேட்டதுக்கு, பூஜை புனஸ்காரம், ஊதுபத்தி கொளுத்தரது, பூப்போடறது, படையல் வைக்கிறது இத்யாதிகளாம்.....  ஓக்கே.....






இதைத்தவிர இன்னொரு குகைத் தொகுதி, இதே மலையின் அந்தாண்டைப் பக்கம் இருக்குன்னும், அங்கேயும் போய்ப் பாருங்கன்னு சொன்னவரிடம், நன்றி சொல்லிட்டுக் கிளம்பினோம்.




மலையேறி வரும்போது ரெண்டு பக்கமும் பாதைகள் பிரியுதுன்னு சொன்னேன் பாருங்க.... அதே இடத்தில் இடது பக்கம் போனால் கொஞ்ச தூரத்துலே  அந்தப்பகுதிக்கான நுழைவுவாசல் வந்துருது.  இங்கேயும் டிக்கெட் ஆஃபீஸ் இருக்கு. ஆனால் எதாவது ஒரு இடத்தில் டிக்கெட் வாங்கினால் போதும், ரெண்டு குகைத் தொகுதிகளையும் பார்க்கலாம்.  பார்க்கிங்தான் கொஞ்சம் கீக்கிடம் என்பதால் எங்களை இறக்கி விட்டுட்டு சையது  வெளியே போய் வண்டியை நிறுத்திக்கிட்டார்.

இந்தப் பகுதியில் இருக்கும் குகைகள் இன்னும் உயரத்துலே இருக்கு. படிகளேறிப் போகணும். என் கால் வலியால் கொஞ்சம் தயங்கினேன். 'நம்மவர்'  தான் போய்ப் பார்த்துட்டு வர்றதா மேலே ஏறிப்போனார்.





நான் கட்டை சுவரில் உக்கார்ந்துக்கிட்டு இருந்தேன்.  இதே இடத்தில் இருந்து இன்னொரு பாதையும்.... அங்கே இன்னும் உயரத்துலே குகைகள் இருப்பதும் தெரிஞ்சது.   பார்க்கும்போதே மலைப்புதான்.

நான்  இருந்த இடத்தில் இருந்தே அக்கம்பக்கம் வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தேன்.  கடலை வறுக்க வர்றாங்க ஜோடிகளா.....    மேலேறிப் போகாமல்... கிளை பிரியும் பாதையில் அங்கங்கே  கட்டைச் சுவத்துலே உக்கார்ந்துக்கறாங்க.  என்னடா நமக்கு  வந்த சோதனைன்னு.... அந்தப் பக்கம் க்ளிக்காம விட்டேன்....

மேலே போன 'நம்மவர்' ஒரு அரைமணியில் திரும்பி வந்துட்டார்.  ஆறு குகைகள் இருக்காம். ஒரு குகையில் சைத்யா (ஸ்தூபி) இருக்காம். நமக்காக படங்கள் க்ளிக்கி வந்துருந்தார்.  துளசிதளத்தின்  புரவலர் இல்லையோ !!!!
நாங்கள் கீழே இறங்கி வரும்போது,  ரெண்டு சக்கர வாஹனங்களில்  உள்ளூர்  மக்கள்  எதிரே போய்க்கிட்டு இருக்காங்க. அம்பது ரூபாய் செலவில் உக்கார்ந்து பேச இடம் கிடைச்சுருது..... முகம் மூடி மறைச்சுக்கும்  உடை இருப்பதால்  டோண்ட் கேர்தான் !

தொடரும்........... :-)