Friday, January 31, 2020

சொனெரி மஹல் (பயணத்தொடர் 2020 பகுதி 8 )

தங்கமாம்!  பெயரில் தங்கத்தை வச்சுருக்கும் இந்த இடம் ஒரு ம்யூஸியம். சின்ன அளவில் இருக்கு. கட்டணமும் சின்னதுதான். வெறும் மூணு ரூ!  ஔரங்கபாத் நகராட்சியின் பொறுப்பில் இருக்கு.
ஔரங்கஸேப் இங்கே வந்தப்ப, அவர் கூடவே வந்த Bundlekhand Chief இந்தத் தங்கமாளிகையைக் கட்டினதாக ஒரு தகவல்.  வேற சிலர் 'சொல்வது   Paharsingh & His brother கட்டுனாங்கன்னு.

(இதுக்குத்தான் சரியான தகவல்களை எல்லாம் ஆவணப்படுத்தணும் என்பது !  ஆனால் பல தகவல்களையும்  எழுதிவைக்கும் போது, அப்போது ஆட்சியில் இருக்கும் மன்னர்/அரசு பக்கம் சார்ந்து அவுங்களுக்கு விருப்பமா இருக்கும் வகையில், அல்லது அவுங்களைப் புகழும் வகையில், இல்லேன்னா அவுங்களோட சம்ச்சாக்கள்/ ஜால்ராக்கள் சொன்னபடி எழுதிவச்சுடறாங்க. புகழ்ந்து பாடினால்தானே பரிசல்/ பரிசுகள் கிடைக்கும். நேர்மையா இருக்கறவங்க, அரிதுதான் எந்தக் காலத்திலும் இல்லையோ.... )
உள்ளே நுழையும் வாசலுக்கு ஹாத்திக்கானா (Hathikhana ) என்று பெயராம். யானை வரும் வாசல்.  நல்ல உயரமாத்தான் இருக்குன்னாலும், இந்த நுழைவுக் கட்டடமே உசரமாத்தான் கட்டி இருக்காங்க.  படிகள் ரொம்பச் சின்னது.  இதுலே யானை எங்கே ஏறிவரும்?  யானை கூட நுழையும் வகையில் பெரிய வாசல்னு சொல்லிக்கலாம்.
இதுவே தனிக்கட்டடம்தான். ஒரு மண்டபம் போல இருக்கு. இதையொட்டியே சுற்றுச்சுவர் போகுது.  இதுக்குள்ளேதான்  இங்கே வேலை செய்யும் பணியாளர்கள் வாஹனங்களை நிறுத்தி இருக்காங்க. அதுவும் இங்கே இருக்கும் அழகான சிலைகள், ஓவியங்களின் முன்னாலே.....  ப்ச்.....  ஒவ்வொரு சாமிக்கும் ஒன்னுன்னு.....   வேணுமுன்னா வண்டியில் ஏறி  ஊருக்குள் போயிட்டு வரலாம்....





டிக்கெட் வாங்கிக்கிட்டு  மண்டபத்தின் அந்தாண்டை வாசல் வழியாப் போறோம்.  அந்தாண்டை கொஞ்ச தூரத்துலே  தங்கமாளிகை!  பின்புலத்தில்  ஒரு  மலை!   இப்ப நாம் பார்த்துட்டு வந்தோமே  ஔரங்காபாத் குகைகள், அவை இருக்கும் மலைதான் இது. ஆனால் வேற பகுதி.
இடைப்பட்ட  இடத்தில்  நடுவில் நீளமா ஒரு நீர்த்தேக்கம்.  மொஹல் ஸ்டைலில் எல்லாம் கட்டடங்கள் முன்னால் தண்ணீர் தேக்கி வச்சு, கட்டத்தின் பிரதிபிம்பம் தண்ணீரில் தெரிவதைப் பார்த்து ரசிக்கும்படிதான்!  நல்ல வேளையா இதில் தண்ணீர் இருக்கு. ஆனால் பிம்பம்தான் தெரியலை......
நல்ல உயரமான மேடையில் மாளிகை (!) இருக்கு.  நடுவில் வளைவு வளைவா இருக்கும் மூணு வாசலும், ரெண்டுபக்கமும் ரெவ்வெண்டா இருக்கும்  துளையுள்ள அடைப்புமா ஏழு இருக்கு.  படிகளேறி  ம்யூஸியம் வாசலுக்குள் போறோம். செருப்பைக் கழட்டி வச்சுட்டுப்போக வாசல் மேடையில் ஒரு ஸ்டேண்டு.
உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை என்பதால் கப்சுப்னு கண்ணால் பார்த்தவைதான்.  ரொம்ப அழகான பழங்கால ஓவியங்கள்  சட்டம் போட்ட கண்ணாடிக்குள்ளே ! தங்கப்பொடியில் வரைஞ்சதாம். அதான் சோனெரின்னு பெயர் வந்துருக்கு!
பழைய காலப் பாத்திரங்கள், மரச்சிற்பங்கள் கொஞ்சம் , கத்தி கப்டான்னு போருக்கான ஆயுதங்கள் எல்லாம் வச்சுருக்காங்க.  எல்லாம் ஒரு நாலைஞ்சு அறைகளுக்குள்தான். ஒரு புள்ளையார்  மாடம் ரொம்பவே அழகு !    மாடியிலும் அறைகள் இருக்குன்னாலும், அங்கே போக அனுமதி இல்லையாம்.

ஒரு மூணு வருஷத்துக்குமுன்னே படம் எடுக்க விட்டுருக்காங்க போல....  ஒரு புண்ணியவான் சின்ன வீடியோ க்ளிப் (நாலரை நிமிட்) எடுத்து யூ ட்யூபில் போட்டுருக்கார். அதை நான் இங்கே போட்டுருக்கேன். அன்னாருக்கு நம் நன்றி !


கீழே படம்: மேடையில் இருந்து நுழைவு வாசல் .
சின்ன இடமா இருந்தாலும் படுசுத்தமா வச்சுருந்தாங்க. ஏகப்பட்ட CCTV  கெமெராக்கள்.  முன்ஹாலில் இருக்கும் பணியாளர் ,  மக்களை வரவேற்பதோடு, இதையும் கவனிச்சுக்கிறார். அதான் தங்கப்படங்கள் இருக்குல்லே?
ஔரங்காபாத்  யுனிவர்சிடி வளாகத்து வழியா இன்னொரு இடத்துக்குப் போறோம். அங்கே...........


தொடரும்......... :-)



11 comments:

said...

அருமை நன்றி.

said...

ஔரங்கபாத்தில் பார்க்கவேண்டிய இடங்களில் ஒன்று என்று நான் கேள்விப்பட்ட இடத்திற்கு இப்பதிவு மூலமாகச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி.

said...

இதற்கு முன்னர் இத்தளத்தில் ரவிசுப்பிரமணியனின் கவிதைகளைக் கேட்டுள்ளேன். தற்போது உங்கள் பதிவு. சிறப்பு.

said...

தங்கத்தில் இப்படி மாளிகைகள் - பீஹாரிலும் உண்டு! அங்கேயும் குறைவான பராமரிப்பு தான். :(

உங்களால் நாங்களும் ஔரங்காபாத் பயணத்தில்!

தொடரட்டும் பதிவுகள்.

said...

அழகிய ஓவியங்கள்.

said...

ஓவியங்கள் சட்டம் போட்ட கண்ணாடிக்குள்ளே ! தங்கப்பொடியில் வரைஞ்சதாம். அதான் சோனெரின்னு பெயர் வந்துருக்கு!...


ஆஹா...

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா,

நம் நாட்டில்தான் எத்தனை எத்தனை இடங்கள்! முழுவதும் பார்க்க இப்பிறவி போதுமா ? அதான் போல இருக்கு ஏழேழு ஜென்மம் எடுக்க வைக்கும் ரகசியம்!

ரவிசுப்பிரமணியனின் கவிதைகளை............ ஙே..........

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

எப்பதான் நம்ம சனங்கள் சரித்திரத்தின் அருமைகளைப் புரிஞ்சுக்கப் போறாங்களோ..... ப்ச்...

said...

வாங்க மாதேவி,

ரொம்ப நுணுக்கமானதும் கூட !

said...

வாங்க அனுப்ரேம்,

நன்றிப்பா !