Saturday, January 04, 2020

நியூஸிக்கு வந்த அத்தி

நடந்தது என்ன ? எப்படி  அத்தி கடல்கடந்து வந்தார்?

போனவருஷம் நம்ம   காஞ்சி அத்திவரதர், வைபவத்துக்கு நம்மால் போக முடியலை. இந்தியப்பயணம் போயிருந்தால் கூட,  ஏகப்பட்டக் கூட்டமும்,  பலமணி நேரக் காத்திருப்புமா  அமர்க்களமா நடந்த விழாவுக்கு நாம் நேரில் போறது என்பது கனவிலும் நடக்காத சமாச்சாரம்.......

அந்த வருஷக் கொலுவிலும்  அத்திதான் 'ஹாட் கேக்' காக இருந்துருக்கும், கேட்டோ!   நம்ம பயணம் நவம்பர் மாசக்கடைசி வாரம் என்பதால், கொலுவுக்காக அத்தி வாங்கிக்கச் சான்ஸே இல்லை.  எல்லாம் வித்துப் போயிருக்காதோ?

நம்ம நெருங்கிய தோழி வலைப்பதிவர் 9 West Nanani (கல்யாணி ஷங்கர்)அவர்களிடம்,  'கொலு சீஸன் முடிவதற்குள் ஒரு அத்தி வாங்கி வைக்க முடியுமா'ன்னு  விண்ணப்பம் அனுப்பினேன்.

இந்தியப்பயணம் தொடங்கி, நவம்பர்  24 ஆம் தேதி ராத்ரி 11.40க்கு நம்மூர் போய்ச் சேர்ந்தோம். மறுநாள் பொழுது விடிஞ்சதும், திநகர் வெங்கடநாராயணா சாலையிலிருக்கும் திருப்பதி தேவஸ்தானக் கோவில் பெருமாளைப் போய்க் கும்பிட்டு நாளை ஆரம்பிச்சாச்!
சென்னைக்குப்போனதும்  தினசரின்னா அது ஹிந்து பேப்பர்தான். அதுலேதான்  அன்றைய சபா நிகழ்ச்சிகள் போடறாங்க.  லோட்டஸில் காலையில் ஹிந்து நம்ம அறைக்கு வந்துரும். பேப்பரைப் புரட்டிப் பார்க்கும்போது வள்ளுவர் கோட்டத்தில் புடவை எக்ஸ்பிஷனாம்.  ஆந்திராப் புடவைகளில் கத்வால் வேணுமுன்னு பல வருஷங்களாத் தேடிக்கிட்டே இருக்கேன். ஒரு பத்து வருசங்களுக்கு முன் ஹைதராபாதில் ஒரு அசல் கத்வால் வாங்குனது முதல் அதன் மேல் ஒரு ப்ரேமை.  சென்னையில் கத்வால் கிடைக்குமிடமுன்னு சென்னை ஸில்க்ஸ்னு போட்டுருந்தாலும், அது எல்லாம் பொய்.....  சேல்ஸ்மேன் அதுதான் கத்வால்னு அவர் தலையில் அடிச்சுச் சத்தியம் செய்வார். நம்ப வேணாம், கேட்டோ !
வள்ளுவர் கோட்டத்துக்கு மத்யானமாக் கிளம்பிப் போனோம்.  ஆந்த்ரா செக்‌ஷனில்  புடவைகள் கிடைச்சது.  அசல் கத்வால் நாப்பதாயிரம் வரை போகுது. பட்டு!  சீச்சீ ... இந்தப் பழம் ரொம்பவே புளிக்குதேன்னு....  கொஞ்சம் கொஞ்சமா இறங்கி வந்து  ரெண்டு புடவை எடுத்தாச்சு. எங்க  நியூஸிக்கு இதுவே அதிகம் :-)  அப்புறம் பனாரஸ் பட்டு(!)விற்கும் கடையில்  சுமாரா ஒன்னு. போதுமுன்னு கிளம்பி வரும்போது ஒரு நகைநட்டுக் கடையில் முல்லை மொட்டு ஹாரம் கண்ணில் பட்டது. ஆசையாக் கையில் எடுத்ததும் 'வாங்கப்போறியா'ன்னு கேட்ட நம்மவருக்கு ஆமாம்னு ஒரு தலையாட்டல்.  அட்டகாசமா இருக்குன்னு தோணல்!
அதுக்கு அடுத்தநாள்,  நம்ம அடையார் அநந்தபதுமனைப் போய்க் கும்பிட்டதும், பெருமாளுக்கு அடுத்தபடி வழக்கமாப் போகும் கல்யாணி ஷங்கர் வீட்டுக்குப்போய் 'ஆஜர் ஹோ' சொன்னோம்.

அப்பதான்  ஒரு அட்டைப்பொட்டியைக் கொண்டு வந்து காமிச்சு 'இதோ உங்க அத்திவரதர்'னு சொன்னாங்க.
ஹைய்யோ!!!! 
அப்படியே ஆடிப்போயிட்டேன்!!!

நிகுநிகுன்னு மின்னும் கருப்பில் ஒன்னரை அடி நீளத்தில்  மஞ்சமெத்தையில் வெல்வெட் தலையணைகளுடன் கம்பீரமாக் கிடக்கார்!
அத்திமரத்தில் செதுக்கின சிலையாம்!  அசல் அத்திவரதர்!
மரம்னு கேட்டதும், மனசுக்குள் ஒரு 'திக்' வந்தது உண்மை. நியூஸியில் பயோசெக்யூரிட்டி இப்பெல்லாம் ரொம்பவே கடுமை காமிக்க ஆரம்பிச்சுருக்கு! சரி. இதுமாதிரி கொண்டு வந்துருக்கோமுன்னு டிக்ளேர் பண்ணிடலாம்.  மேற்கொண்டு ஃப்யூமிகேஷன் பண்ணச் சொன்னால், அதுக்கும் ஆமாம்னு தலை ஆட்டிடலாமுன்னு  தீர்மானம் செஞ்சுக்கிட்டோம்.
அத்திவரதர்ன்னு  அவுங்க தேடிப்போய்  ஒரு பொம்மை/சிலை வாங்கி வச்சுட்டு, இன்னும் நல்லதாக் கிடைக்குமான்னு தேடிக்கிட்டு இருந்துருக்காங்க.
முக்கியமா நம்ம கல்யாணியின் மகர் ஆனந்த் சொன்னாராம், 'துளசி ஆண்ட்டிக்கு நல்லதா ஒன்னு வாங்கித்தரணுமு'ன்னு......  (மகர் நல்லா இருக்கட்டும்!)

இப்படிப் பல இடங்களில் தேடிப்பார்த்ததும் அதிர்ஷ்டவசமா,  பூம்புகார் கைவினைப்பொருட்கள் கடைக்கு மரச் சிற்பங்கள்   செஞ்சுதரும் சிற்பியின் கலைக்கூடத்துக்குப் போய் இருக்காங்க. சிற்பி,  அத்திவரதர்  வைபவம் போய்ப் பார்த்துட்டு வந்து, ஆர்வத்தில்  அத்திமரத்திலேயே  ஒரு வரதரைச் செதுக்கி இருக்கார்.  தன்னிஷ்டம் கொண்டு வடித்த சிலைக்கு கிடந்த நிலைக்காக மெத்தையும், தலையணைகளுமா தயாரிச்சும்  வச்சுருந்துருக்கார்.

பார்த்தவுடன், இதுதான் துளசிக்குன்ற எண்ணம் வலுவாயிருக்கு.  அதே சிற்பத்தை நமக்காக வாங்கி வந்துட்டாங்க.!
ஆனந்தின் முயற்சியில் வாங்கிய அத்தி வரதருக்கு,  இன்று முதல் இவர் 'ஆனந்த அத்திவரதர்' என்று நாமகரணம் செஞ்சுட்டு, அவுங்க வீட்டுலேயே  நாம் ஊருக்குக் கிளம்பும் சமயம் வரை இருக்கட்டுமுன்னு  சொல்லி, நாலைஞ்சு க்ளிக்ஸ் மட்டும் எடுத்துக்கிட்டேன். நேத்து வாங்குன முல்லைமொட்டு ஹாரம்  இவருக்குச் சரியா இருக்கும், இல்லே?  ஆஹா.... தனக்குத் தேவையானதை எப்படி முன்கூட்டியே நம்மை வாங்க வச்சுருக்கார்! நகை வரும் முன்னே.... சிலை வரும் பின்னே !

எப்ப வந்தாலும், கொஞ்சநேரம் இருந்துட்டு ஓடிடறேன், சாப்பிட வர்றதே இல்லைன்னு தோழிக்கு ஒரு குறை!  ஆஹா.... அதுக்கென்ன கட்டாயம் சாப்பிட வந்துடறேன்னு 'வாக்கு'க் கொடுத்துட்டேன்.  ஒரு 24 மணி நேர நோட்டீஸ் கொடுக்கச் சொன்னாங்க :-)

உள்நாட்டுப்பயணம், அதுலே ஒரு வெளிநாட்டுப்பயணமுன்னு முடிச்சுக்கிட்டு, ஊருக்குக் கிளம்ப ரெண்டு நாட்கள் பாக்கி இருக்கும் போது, சாப்பிட வரேன்னு  சேதி அனுப்பினேன்.  'என்ன ரெடி பண்ணட்டுமு'ன்னு  கேட்டாங்க. 'சிம்பிளாக் கொடுத்தால் போதும். சாதம், பருப்பு நெய்' என் உடனடி பதில் :-)

இதுக்கிடையில்  அத்தியைப் பார்த்த நாளில் இருந்து எப்படிக் கொண்டு போறதுன்னு சிலபல ஐடியாஸ்  மனசுக்குள் ஓடிக்கிட்டே இருக்கு.  கடைசியில் நான் 'நம்மவரிடம்' சொன்னேன், 'அத்தி என் கேபின் பேகில் வர்றார்.  செக்கின் பேகில் வைக்க எனக்குச் சம்மதம் இல்லை. தட்ஸ் ஆல் யுவர் ஆனர்!'

பபுள் ராப்  கொண்டு போயிருந்தோம். அதில் பொதிஞ்சு வச்சுட்டு,  என்ன எடைன்னு பார்த்துட்டு, மீதி எடைக்குக் கொஞ்சம் துணிமணிகள்  வச்சுக்கணும்.
சாமிக்கு நகைநட்டுன்னு ரொம்ப ஒன்னும் வாங்கலைன்னாலும் ஒரு சங்குசக்கரமாவது வாங்கிக்கணுமுன்னு திநகர் பாண்டிபஸாரிலேயே  களஞ்சியம் கடைக்குப் போய் ஒரு செட் வாங்கினபிறகு பார்த்தால் , அதைவிட க்யூட்டா இருக்கும் இன்னொரு ஜோடியைக் காமிக்கிறார் கடைக்காரர். அடடா........    சட்னு அதை எடுத்துக்கிட்டு, ஏற்கெனவே வாங்கினதைத் திருப்பிக் கொடுத்தோம்.
டிசம்பர் 27.... கல்யாணி வீட்டுக்குச் சாப்பிடப் போனோம்.  கொஞ்சம் லேட்டாத்தான் ஆகிப் போச்சு.  அட்டகாசமான அசல் திருநெல்வேலி சொதிதான் அன்றைய ஸ்பெஷல் !  ஒரு வெட்டு வெட்டினேன் :-)


பருப்பு, நெய், மைஸூர்பாக், உருளைக்கிழங்கு கறி, உருளைக்கிழங்கு சிப்ஸ்,  இஞ்சி இனிப்புத் தொக்கு, தயிர், ஃப்ரூட் வித் கஸ்டர்ட்னு ஜமாய்ச்சுருந்தாங்க !!!

விருந்து முடிஞ்சதும், சாமி அலமாரியாண்டைக் கூட்டிப்போய்  துளசியில் 'கிடக்கும் 'அத்திவரதரை, ஆசிகளோடு என் கையில் கொடுத்தாங்க நம்ம கல்யாணி!
லோட்டஸ் திரும்பியதும்  நம்ம ஆனந்த அத்தி வரதருக்குச் சின்னதா ஒரு உபச்சாரம்.
எவ்வளவு கனமோன்னு பார்த்தால் வெறும் 700 கிராம்தான். காத்தா இருக்கார்!  அப்புறம் அவரை, பபுள்ராப்பில் நல்லபடிப் பொதிஞ்சு என் கேபின் பேகில்  வச்சு, சுத்திவர துணிகளை அடுக்கிட்டேன். அவருடைய மெத்தையைத் தனியாக ஒரு பையில் வச்சுக்கணும். விமானத்தில் ஒரு பெர்ஸனல் பில்லோவுக்கு அனுமதி உண்டு :-)

சிங்கை வந்ததும் ,  கூடவே  அத்தியும் நம்ம ஹொட்டேல் அறைக்கு வந்துட்டார்.  மறுநாள் கொஞ்சம் சீக்கிரமாகவே கிளம்பி சாங்கிக்குப் போயிட்டோம்.  அங்கே டெர்மினல் ஒன்னில்  புதுசா திறந்துருக்கும் 'ஜூவல்' போய்ப் பார்த்துட்டு, அப்படியே நம்ம   மூணாம் டெர்மினல் போயிடணும்.
கேபின் பேகில் இருந்த அத்தியும் நம்ம கூடவே ஜூவலைச் சுத்திப் பார்த்தார்.  நாப்பது மீட்டர் உயரத்தில் இருந்து விழும் இன்டோர் வாட்டர் ஃபால் அவருக்கும் பிடிச்சுருக்கும்தான்!
ஆச்சு. நியூஸி விமானம் ஏறி நம்மூரில் வந்திறங்கியாச்சு. டிக்ளேர் பண்ண வேண்டிய ஐட்டங்களில் முதலாவது  ஒரு மரச்சிலை.  எல்லாம் எழுதிக்கொடுத்துட்டு, மனசு திக் திக்ன்னு  காத்திருந்தோம். பயோ செக்யூரிட்டியில் பொட்டியைத் திறந்து, ட்ரீட்டட் வுட் என்று சொல்லி அத்தியைக் காமிச்சதும், ஓக்கேன்னுட்டார் ஆப்பீஸர் !  ஹப்பாடா........
ஆனந்த அத்தி நம்ம வீட்டுக்கு வந்தாச்சு!  இனி எல்லாம் (அவருக்கு) சுகமே!


இண்டியன் கடைக்குப்போய், அவருக்கான பீடாசனம்  வாங்கிவந்து, தனிச்சந்நிதியில் பிரதிஷ்டை பண்ணியாச்!
பாருங்க எப்படி ஜொலிக்கிறார்னு!
மகர் ஆனந்துக்கு எங்கள் விசேஷ நன்றிகளுடன், அன்பும் ஆசிகளும்!
ஆனந்த அத்திவரதரின் அன்பும் ஆசிகளும் இனி  எப்போதும் நம்முடன் !

19 comments:

said...

இந்தியாவுக்கு வரும்போதெல்லாம் 4 புடவை வாங்கிடுவீங்க. ஆனால் எல்லா போட்டோவிலும் சல்வார்  அல்லது சுடிதாரில் தான். புடவைகளை என்ன செய்வீர்கள்? அத்தி வரதர் சிலை அழகு. எடை 700 கிராம் என்கிறீர்கள். அப்படியானால் அது கும்பில் மரம் ஆக இருக்கும். சிலை செய்ய ஏற்ற மரம். மிகவும் சாப்ட் ஆக இருக்கும். 

said...

அத்திவரதர் இப்போ காஞ்சியிலிருந்து நியூசிலாந்திற்கும் வந்தாச்சா? மிக்க மகிழ்ச்சி

said...

ஆஹா... நியூசியில் ஆனந்த அத்திவரதர்...

நல்லதொரு விஷயம் டீச்சர். அனுபவம் சிறப்பாக இருக்கிறது.

வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

said...

பிரச்னையில்லாமல் அந்த அத்திவரதரே பார்த்துக் கொண்டார் போலும்.  மிக அழகாய் இருக்கிறார்.  அவருக்கான சிறு மெத்தை, மஞ்சளாடை, துளசி இலைகள் எல்லாம் பிரமாதம்.

said...

when next epidode?

said...

வெகு சிறப்பு அருமை நன்றி

said...

"நியூஸிக்கு வந்த அத்தி"...அட்டகாசமா இருக்கார் மா ..


அந்த வெல்வெட் தலையணை , படுக்கை எல்லாம் அழகு ..

said...


அருமை அம்மா உங்களுக்கும் அத்திவரதருடன் ஒரு ஆனந்த அனுவபம் கிடைத்து இருக்கிறது





என் blog :https://gangaisenthilprasad.blogspot.com/ பிடித்துவிட்டு சொல்லுங்கள்

said...

பயண தொடர் எப்போ ஆரம்பிக்க போறீங்க அவளுடன் காத்து இருக்கோம்

said...

வாங்க ஜயகுமார்,

பெரும்பாலும் புடவைகள் உறவினர்களுக்கு அன்பளிப்பாக் கொடுத்துடறதுதான். இங்கே கொண்டுவரும் புடவைகள் மகளுக்கு. இப்பெல்லாம் எங்க ஊரிலேயே சத்சங்கங்கள் நடப்பதால் அங்கே போகும்போது, சில நாட்கள் புடவைகள் உடுத்துவேன் :-)

கும்பில் மரம் என்ற சேதி எனக்குப் புதிது. நன்றி !

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

அத்திக்கு இங்கே வர விருப்பம். நடத்திக்கிட்டார் !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

நம்ம வீடு அவருக்குப் பிடிச்சுப்போச்சு பாருங்க :-)

வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி !

said...

வாங்க ஸ்ரீராம்,

இல்லையா பின்னே? தனக்கு வேணுங்கறதைத் தானேதானே செஞ்சுக்கணும்:-)

said...

வாங்க பாபு.

இன்றைக்கு ஆரம்பிச்சாச் :-)

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க அனுப்ரேம்,

நன்றிப்பா !

said...

வாங்க செந்தில்பிரசாத்,

அருமை. நீங்க அங்கே குடும்பத்துடன் போய் சேவித்தது நல்லது! மறக்க முடியாத அனுபவம், இல்லையோ!!!

எங்களுக்கு அவரைக் காஞ்சியில் நேரில் தரிசிக்கும் வாய்ப்பு இல்லை என்பது தெரிஞ்சு அவரே நம்மூருக்கு வந்துட்டார் :-)

பயணத்தொடரை இன்று ஆரம்பிச்சுருக்கேன்.

ஊர் திரும்பியபிறகும் உடல்நிலை ஓரளவு சரியாக இந்த முறை ரெண்டு வாரம் ஆச்சு.....

said...

ஆகா! அத்தி வரதரும் வந்துவிட்டாரே எல்லாம் நலமே.

said...

வாங்க மாதேவி,

அவருக்குத் தனி சந்நிதியும் கிடைச்சுருச்சே !