'த சொஸைட்டி'யை இழுத்து மூடிட்டு, எதிரில் இருக்கும் Bபாரில் ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடுங்கன்னு நோட்டீஸ் ஒட்டி வச்சுருந்தாங்க. நானும் இதுவரை பாருக்குப்போய் 'சாப்பிடலை' பாருங்க..... சரின்னு அங்கே போனால் ஒன்னும் சரி இல்லை. நம்மவர் இட்லி இருக்கான்னு கேட்டதுக்கு கொண்டுவரேன்னு போன பணியாளர் வேறெங்கிருந்தோ ரெண்டு இட்லி வாங்கி வந்தமாதிரி இருந்தது.
ஹொட்டேலில் அனக்கமே இல்லை. ராத்ரி கல்யாணம் முடிஞ்சு வந்து எல்லோரும் தூங்கிக்கிட்டு இருக்காங்க போல.... ஹொட்டேல் முழுசும் கல்யாண வீட்டுக்காரர்கள்தான் தங்கி இருக்காங்க. அவுங்களுக்கு ப்ரேக்ஃபாஸ்ட், வேற ஏற்பாடு இருக்கலாம். அதான் நம்ம ரெண்டு பேருக்காக ஒன்னும் சமைக்கலை. அந்த இட்லி கூட கல்யாணவீட்டுக்காரங்க சமையலில் இருந்து வந்துச்சோ? சம்ஸயம்தான்..........
கல்யாணப்பந்தல் பக்கம் பார்த்தால் சுத்தமாத்தான் இருக்கு. கொஞ்சம் டீஸன்ட் விருந்தினர்கள் வந்துருந்தாங்க போல! தோட்டத்தில் நாய்களும் காளையும் ஆஜர்......
இந்த ஸ்டைல் குடம் இடுப்புலே வைக்க வாகாவே இல்லை.....
ஒன்பதுக்கு வண்டி கொண்டு வந்துருந்தார் சையத். உள்ளூர் சுத்தல் என்பதால் சீனியர் ட்ரைவர்கள் !
நகர நுழைவு வாசலா ஒரு காலத்துலே இப்படி சுத்திவர இருந்துருக்கு! இப்ப நகரம் வளர்ந்துட்டதால் இது ஊருக்குள்ளே ! இதைக் கடந்து ஔரங்காபாத் குகைகளுக்குப் போறோம். நதீம் கொடுத்த பட்டியல்தான். ஒரு குன்றின் மேலே போகும் பாதை..... ஒரு இடத்தில் வலமும் இடமுமாய் ரெண்டாப் பிரியுது . வலப்பக்கம் போறோம். ரெண்டு தொகுதிகளா இருக்காம் இந்தக் குகைகள்.
ஏழாம், எட்டாம் நூற்றாண்டு சமாச்சாரம். புத்தமதம் சார்ந்தவை. வாசல் கேட்டுலே டிக்கெட் ஆஃபீஸ் இருக்கு. இந்தியர்களுக்கு இருபத்தியஞ்சும், வெளிநாட்டவர்களுக்கு முன்னூறுமா வாங்கறாங்க.
பாதையில் நடக்க ஆரம்பிச்சா, கட்டை சுவத்துல ஒருத்தர் நிஷ்டையில்! ஓசைப்படாமல் கடந்து போனோம். ஏராளமான கிளிகளும், அணில்களுமா அருமையான இடம். அதோ தூரத்துலே ஔரங்காபாத் நகர்!
தொல்லியல்துறை சார்ந்த ஒருவர் எதோ வேலையாக வந்துருந்தவர், நம்மோடு கூடவே வந்து சுத்திக் காமிச்சு விளக்கம் சொன்னார். பெயர் சந்தீப் னு நினைவு. சத்தீஸ்கர் சொந்த மாநிலமாம்.
அங்கிருந்த அறிவிப்பு பார்த்துட்டு எந்தமாதிரி ரிலிஜியஸ் ஆக்ட் கூடாதுன்னு கேட்டதுக்கு, பூஜை புனஸ்காரம், ஊதுபத்தி கொளுத்தரது, பூப்போடறது, படையல் வைக்கிறது இத்யாதிகளாம்..... ஓக்கே.....
இதைத்தவிர இன்னொரு குகைத் தொகுதி, இதே மலையின் அந்தாண்டைப் பக்கம் இருக்குன்னும், அங்கேயும் போய்ப் பாருங்கன்னு சொன்னவரிடம், நன்றி சொல்லிட்டுக் கிளம்பினோம்.
மலையேறி வரும்போது ரெண்டு பக்கமும் பாதைகள் பிரியுதுன்னு சொன்னேன் பாருங்க.... அதே இடத்தில் இடது பக்கம் போனால் கொஞ்ச தூரத்துலே அந்தப்பகுதிக்கான நுழைவுவாசல் வந்துருது. இங்கேயும் டிக்கெட் ஆஃபீஸ் இருக்கு. ஆனால் எதாவது ஒரு இடத்தில் டிக்கெட் வாங்கினால் போதும், ரெண்டு குகைத் தொகுதிகளையும் பார்க்கலாம். பார்க்கிங்தான் கொஞ்சம் கீக்கிடம் என்பதால் எங்களை இறக்கி விட்டுட்டு சையது வெளியே போய் வண்டியை நிறுத்திக்கிட்டார்.
இந்தப் பகுதியில் இருக்கும் குகைகள் இன்னும் உயரத்துலே இருக்கு. படிகளேறிப் போகணும். என் கால் வலியால் கொஞ்சம் தயங்கினேன். 'நம்மவர்' தான் போய்ப் பார்த்துட்டு வர்றதா மேலே ஏறிப்போனார்.
நான் கட்டை சுவரில் உக்கார்ந்துக்கிட்டு இருந்தேன். இதே இடத்தில் இருந்து இன்னொரு பாதையும்.... அங்கே இன்னும் உயரத்துலே குகைகள் இருப்பதும் தெரிஞ்சது. பார்க்கும்போதே மலைப்புதான்.
நான் இருந்த இடத்தில் இருந்தே அக்கம்பக்கம் வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தேன். கடலை வறுக்க வர்றாங்க ஜோடிகளா..... மேலேறிப் போகாமல்... கிளை பிரியும் பாதையில் அங்கங்கே கட்டைச் சுவத்துலே உக்கார்ந்துக்கறாங்க. என்னடா நமக்கு வந்த சோதனைன்னு.... அந்தப் பக்கம் க்ளிக்காம விட்டேன்....
மேலே போன 'நம்மவர்' ஒரு அரைமணியில் திரும்பி வந்துட்டார். ஆறு குகைகள் இருக்காம். ஒரு குகையில் சைத்யா (ஸ்தூபி) இருக்காம். நமக்காக படங்கள் க்ளிக்கி வந்துருந்தார். துளசிதளத்தின் புரவலர் இல்லையோ !!!!
நாங்கள் கீழே இறங்கி வரும்போது, ரெண்டு சக்கர வாஹனங்களில் உள்ளூர் மக்கள் எதிரே போய்க்கிட்டு இருக்காங்க. அம்பது ரூபாய் செலவில் உக்கார்ந்து பேச இடம் கிடைச்சுருது..... முகம் மூடி மறைச்சுக்கும் உடை இருப்பதால் டோண்ட் கேர்தான் !
தொடரும்........... :-)
கல்யாணப்பந்தல் பக்கம் பார்த்தால் சுத்தமாத்தான் இருக்கு. கொஞ்சம் டீஸன்ட் விருந்தினர்கள் வந்துருந்தாங்க போல! தோட்டத்தில் நாய்களும் காளையும் ஆஜர்......
இந்த ஸ்டைல் குடம் இடுப்புலே வைக்க வாகாவே இல்லை.....
ஒன்பதுக்கு வண்டி கொண்டு வந்துருந்தார் சையத். உள்ளூர் சுத்தல் என்பதால் சீனியர் ட்ரைவர்கள் !
நகர நுழைவு வாசலா ஒரு காலத்துலே இப்படி சுத்திவர இருந்துருக்கு! இப்ப நகரம் வளர்ந்துட்டதால் இது ஊருக்குள்ளே ! இதைக் கடந்து ஔரங்காபாத் குகைகளுக்குப் போறோம். நதீம் கொடுத்த பட்டியல்தான். ஒரு குன்றின் மேலே போகும் பாதை..... ஒரு இடத்தில் வலமும் இடமுமாய் ரெண்டாப் பிரியுது . வலப்பக்கம் போறோம். ரெண்டு தொகுதிகளா இருக்காம் இந்தக் குகைகள்.
அங்கிருந்த அறிவிப்பு பார்த்துட்டு எந்தமாதிரி ரிலிஜியஸ் ஆக்ட் கூடாதுன்னு கேட்டதுக்கு, பூஜை புனஸ்காரம், ஊதுபத்தி கொளுத்தரது, பூப்போடறது, படையல் வைக்கிறது இத்யாதிகளாம்..... ஓக்கே.....
இதைத்தவிர இன்னொரு குகைத் தொகுதி, இதே மலையின் அந்தாண்டைப் பக்கம் இருக்குன்னும், அங்கேயும் போய்ப் பாருங்கன்னு சொன்னவரிடம், நன்றி சொல்லிட்டுக் கிளம்பினோம்.
மலையேறி வரும்போது ரெண்டு பக்கமும் பாதைகள் பிரியுதுன்னு சொன்னேன் பாருங்க.... அதே இடத்தில் இடது பக்கம் போனால் கொஞ்ச தூரத்துலே அந்தப்பகுதிக்கான நுழைவுவாசல் வந்துருது. இங்கேயும் டிக்கெட் ஆஃபீஸ் இருக்கு. ஆனால் எதாவது ஒரு இடத்தில் டிக்கெட் வாங்கினால் போதும், ரெண்டு குகைத் தொகுதிகளையும் பார்க்கலாம். பார்க்கிங்தான் கொஞ்சம் கீக்கிடம் என்பதால் எங்களை இறக்கி விட்டுட்டு சையது வெளியே போய் வண்டியை நிறுத்திக்கிட்டார்.
இந்தப் பகுதியில் இருக்கும் குகைகள் இன்னும் உயரத்துலே இருக்கு. படிகளேறிப் போகணும். என் கால் வலியால் கொஞ்சம் தயங்கினேன். 'நம்மவர்' தான் போய்ப் பார்த்துட்டு வர்றதா மேலே ஏறிப்போனார்.
நான் கட்டை சுவரில் உக்கார்ந்துக்கிட்டு இருந்தேன். இதே இடத்தில் இருந்து இன்னொரு பாதையும்.... அங்கே இன்னும் உயரத்துலே குகைகள் இருப்பதும் தெரிஞ்சது. பார்க்கும்போதே மலைப்புதான்.
மேலே போன 'நம்மவர்' ஒரு அரைமணியில் திரும்பி வந்துட்டார். ஆறு குகைகள் இருக்காம். ஒரு குகையில் சைத்யா (ஸ்தூபி) இருக்காம். நமக்காக படங்கள் க்ளிக்கி வந்துருந்தார். துளசிதளத்தின் புரவலர் இல்லையோ !!!!
நாங்கள் கீழே இறங்கி வரும்போது, ரெண்டு சக்கர வாஹனங்களில் உள்ளூர் மக்கள் எதிரே போய்க்கிட்டு இருக்காங்க. அம்பது ரூபாய் செலவில் உக்கார்ந்து பேச இடம் கிடைச்சுருது..... முகம் மூடி மறைச்சுக்கும் உடை இருப்பதால் டோண்ட் கேர்தான் !
தொடரும்........... :-)
6 comments:
குகை சிற்பங்கள் மிகுந்த அழகு.
கடலை வறுக்க வருபவர்கள்தான் எங்கும இருந்திட்டுப் போகட்டும்.
அருமை நன்றி
வாங்க மாதேவி.
கடலை வறுப்பதில் மதங்களுக்குள் பேதமே இல்லை!
வாங்க விஸ்வநாத்,
நன்றி !
அழகான படங்கள்.
கடலை வறுக்க! :) இங்கே தில்லி பூங்காக்களில் நிறையவே! அக்கம் பக்கம் பார்க்காமல் போக வேண்டும்! பூக்கள் அழகாக இருக்கிறதே எனத் திரும்பினால் “ஏண்டா திரும்பி எங்களைப் பார்க்கிறாய்?” என்று கேள்வி வேறு வருகிறது! அதுவும் கையில் கேமராவுடன் சென்று விட்டால், முறைப்பு தான்! பல சமயங்களில் அழகான பூக்கள், இடங்களாகக் கிடைக்கும் - படம் எடுக்கலாம் என்றால் அங்கே எடுக்க முடியாது!
ஔரங்காபாத் குகைகள்...
சூப்பரா இருக்கு மா...
இதை போல உங்க இலங்கை பயணத்திலும் ஒரு இடம் போட்டீங்க...எனக்கு பேர் நியாபகம் இல்ல மா...
அந்த படிகளும் வளைவுகளும் அது போல இருக்கு
Post a Comment