Friday, April 04, 2014

புதுவருசம், ஆரம்பமே சூப்பர்!!!!

இந்தப் படத்தில் இருக்கும் இளம்ஜோடி யார்?  புதிருக்கான விடை பதிவில் வருது:-) க்ளூ கொடுக்கணுமுன்னா..... பதிவர்!



வருசம் முழுசும் வருசப்பிறப்புன்னு ஆகிப்போயிருக்கு நம்ம கதை. இந்திய நாட்டின் வெவ்வேற மாநிலங்களின் புதுவருசத்தைக்கூட விட்டு வைக்கறதில்லை நாங்க நியூஸியில்:-) ஆனாலும் அப்பப்ப வரும் புதுவருசத்தைக் கொண்டாடும் வகையில் (அன்னிக்கு லீவு வேற இருக்கே!)   நம்ம உறவினர்களை (மைத்துனர்  & நாத்தனார் குடும்பம்) சாப்பாட்டுக்குக் கூப்பிட்டு இருந்தோம். சேர்ந்து சாப்பிடாலே ஒரு குஷி வந்துருதில்லை!

ஒரு வாரத்துக்குத் தேவையான அவரவர்  உடைகளை  ரெண்டு கேபின் பேகில் எடுத்து  வச்சோம். மற்ற பெரிய பெட்டிகளை இங்கேயே   இதே கெஸ்ட் ஹவுஸின் க்ளோக் ரூமில் வச்சுட்டுப்போவதா முடிவு செஞ்சுருந்தோம். திரும்பி வந்து  இங்கேதானே தங்கப்போறோம்.

ஜன்னலில்  தெருவை எட்டிப்பார்த்தால் பூம்பூம் மாடு ஒன்னு தெரிஞ்சது. அட! இன்னும் இதெல்லாம் இருக்கான்னு  கீழே போய்ப் பார்க்க நினைச்சப்ப அது நகரத்தொடங்கிருச்சு. பேசாம அவசரடியில் ஒரு க்ளிக்.   அடுத்த வாரப் பயணத்துக்கு  கொஞ்சம்  லைட்  ஸ்நாக்ஸ் வாங்கி வச்சுக்கலாமேன்னு  நாலு வாசல் தள்ளி இருக்கும்  சுஸ்வாத்  போய் கொஞ்சம் கடலை மிட்டாய், முறுக்கு, சீடை வகைகளை வாங்கிக்கிட்டு அறைக்குத் திரும்பிவந்தால் நம்ம வாசலில் இளநிக்காரர்.

 'ஹேப்பி நியூ இயர்' சொன்னேன். ஒரு விநாடி திகைச்சுட்டார்:-) ஆளுக்கொரு  இளநி ஆச்சு. வியாபாரம்  இப்பெல்லாம்  சரியாப்போறதில்லையாம்.  ஒருமுறைக்கு ஆயிரம் இளநியாத்தான் வாங்கணும். அதுக்குக்குறைஞ்சு தரமாட்டேங்கறாங்க. விலையும் கூடிப்போச்சு.  இளநி விலை அதிகமா இருக்கு.ஆனால் நம்ம சனம் விலை அதிகமுன்னு  வாங்கத் தயங்குறாங்க. காலையிலிருந்து இந்தப்பக்கங்களில் வண்டியைத் தள்ளிக்கிட்டு மாலை வரை சுத்துனாதான்  எதோ கொஞ்சமாவது லாபம் பார்க்கமுடியும் என்றார். முகத்தில் சலிப்பு தெரியுது.  கவலைப்படாதீங்க..... இந்த புது வருசத்தில் எல்லாம் நல்லதா நடக்கும் என்றேன்.  நம்பிக்கைதானே வாழ்க்கை, இல்லையோ?

அறைக்கு வந்த கொஞ்ச நேரத்தில், கீழே இருந்து வரவேற்பாளரின் ஃபோன்.

"மேடம் உங்களைப்பார்க்க மஹாராணி வந்துருக்காங்க"

அட! இன்னும்  நாம் அவர்களின் குடிகள்  என்பது  உண்மைதானே! அதான்....

  "மேலே வரச் சொல்(லுங்க)"

அறைக்கதவைத் திறந்தால்  ராணி!

'வாங்க மஹாராணி' என்றேன்.  அவுங்க உமாராணின்னு சொன்னது  வரவேற்பாளருக்கு மஹாராணின்னு காதில் விழுந்துருக்கு.மனுஷன் ஆடிப்போயிருப்பார் போல!

வந்த குழுவினருக்கு( மைத்துனர் குடும்பம் அண்ட் நாத்தனார்  ) 'ஹேப்பி நியூ இயர்' சொல்லி,  கைவசம் இருந்த  பாபா ப்ரஸாத லட்டைச் சட்னு பூந்தியாக்கிக் கொடுத்தேன். இனிப்பிலே ஆரம்பிக்கலாம்.

காசிக்குப்போறோமுல்லெ.... வழியனுப்பு விழா! சமீபத்தில் (ரெண்டு வருசங்கள் ஆச்சு) சாமிகிட்டே போன  மாமனார் & மாமியாரின்  வேஷ்டியையும் புடவையையும்  கங்கையில் விடச் சொல்லி  யாரோ சொன்ன 'அறிவுரை'கேட்டு  அதை(யும்) கொண்டு வந்திருந்தாங்க.   அதுலேகூடப் பாருங்க..... மாமனாரின் வேஷ்டியும் மேல்துண்டும் மட்டும்தான் கிடைச்சதாம். அப்போ புடவை?  மாமியாரின் புடவையைத்தேடிப்பார்த்தும் சட்னு ஒன்னும் கிடைக்கலையாம்! (  செத்துப்போன பின்பும் பெண்கள் புடவையை இழக்கச் சட்னு சம்மதிக்க மாட்டோம். அதான் மாமியார் யார் கண்ணிலும் படாம ஒளிச்சுட்டாங்க! )


பழைய காலங்களில் காசி யாத்திரை போகும் தம்பதிகளுக்கு  உற்றார் உறவினர் கூடி விருந்து வைபவங்கள் நடத்துவாங்களாம்.போனால் திரும்ப வருவது நிச்சயமில்லாத காலக்கட்டம் அது. பலமாசங்கள் நீடிக்கும் பயணம் அப்போ.  இப்போதான்  கன்ஃபர்ம்டு  ரிட்டர்ன் டிக்கெட் வாங்கிக்கறோமே:-)

கொஞ்ச நேரம்,  கிடைச்ச இடத்தில் கூட்டமா உக்கார்ந்து  பழங்கதைகளைப் பேசிக்கிட்டு இருந்தோம்.  வாலிபப் பிள்ளைகள்தான்  'ஆ'ன்னு பார்த்துக்கிட்டு இருந்தாங்க. மூளையில் சேகரிப்பு இருந்தால் பின்னால் ப்ளாக் எழுதலாம்:-)

சாப்பாட்டுக்கு  எங்கே போகலாமுன்னு  யோசிச்சு,  டாக்டர் நாயர் ரோடு க்ராண்ட் ஸ்நாக்ஸ் என்றே முடிவாச்சு. பொடிநடையில்  போனால் கூட அஞ்சே நிமிசம்தான்.  அங்கே நமக்குத் தெரிஞ்ச (!) மேனேஜர் ஸ்ரீதரன் இருந்தார்.  குடும்பத்துக்கு தனி இடம் ஒதுக்கிக் கொடுத்தார்.  பேச்சும் சிரிப்புமா அவரவருக்கு வேண்டியதை வாங்கி உள்ளே அனுப்பிக்கிட்டு இருந்தோம்.
 (கோபாலின் தம்பி,  அவர் மகன் அண்ட் கோபால்)


மீண்டும் அறைக்கு வந்து பேசி முடிச்சுக் கிளம்பும்போது மணி மூணரை.  இளைஞர்களுக்கு  எக்ஸ்ப்ரெஸ் மால் போகணுமாம்.  அதானே..... வருசப்பிறப்பன்னிக்கு  மூத்தோருடன் இருந்தால் அதில் என்ன ஜாலி இருக்கப்போகுது?

கிளம்பும்போது, 'மஹாராணி'யின் மகள், தன் கையில் உள்ள காசிக் கயித்தைக் காமிச்சு  'இதே போல் வாங்கிட்டு வாங்க பெரியம்மா' என்றாள்.  அப்பாடா.... காசியில் ஷாப்பிங் செய்ய ஒரு 'மக்ஸத் 'கிடைச்சுருச்சு எனக்கு:-) காரணமே இல்லாமக் கடைக்குப்போனால் நல்லாவா இருக்கும்?

'அக்காவை' ஒரு நடை போய் பார்த்துக்கணும் என்று செல்லில் கூப்பிட்டேன்.  வருஷப்பிறப்புன்னு எங்கியாவது கோவிலுக்குக் கிளம்பி இருந்தாங்கன்னா?  வீட்டுலேதான் இருக்காங்களாம்.  சட்னு கிளம்பினோம்.  வளசரவாக்கம் போகவே  முக்கால்மணி  நேரமாச்சு.  இதில் வீட்டுக்குப்போகும் வழி எனக்குச்  சரியா நினைவில் இல்லை:( ஆனால் கோபால் கரெக்ட்டா வழி சொல்லிக்கிட்டே வந்தார் நம்ம சீனுவுக்கு.

வளாகத்துக்குள் நுழைஞ்சதும்  அக்காவின் கணவர்  ஓட்டமும் நடையுமாக நம்மை நோக்கி வர்றார்.  அக்கா?  நாம் எந்த கேட்டில் வருவோம் என்று தெரியாததால் அடுத்த பகுதி வாசலில் நிக்கறாங்களாம்!போச்சுடா.....  இவ்வளவு அன்பு கிடைக்க நாம் என்ன தவம் செஞ்சோம்?  அடுத்த ரெண்டாவது நிமிட்லே அக்கா வந்துட்டாங்க.  மிடுக்கா காட்டன் புடவையும் அதுக்கேத்த க்ளிப்புமா சூப்பர்.

அப்படி என்னதான் பேச இருக்குமோ...........   கிட்டத்தட்ட ஒன்னரை மணி நேரம் ஓடிப்போயிருந்துச்சு. இதில்  கோபாலுக்கு கணினியில்  படங்களுடன் பாடல்கள் சேர்ப்பது பற்றிய பயிற்சி வேற !  தினமும் ஒரு பாட்டு பாடி அதைத் தன் பதிவில் வெளியிட்டு வாழ்க்கையை ரசிப்பவர் இவர். பளிச்ன்னு இருக்கும் பிள்ளையாருடன், நந்தியும்  சிவனுமா  சாமி அறை!




வரவேற்பில்   ஒரு இளஞ்சோடி ஃப்ரேமுக்குள்.!   ஆஹா!!!  அக்காவும் அத்திம்பேரும் கல்யாணக்கோலத்தில்!  கை பரபரன்னு இருக்குன்னு சுட்டுக்கிட்டேன்   நம்ம கெமெராவில்.  (படம் நம்பர் 1)

உங்களுக்கெல்லாம் நல்லாவே தெரிஞ்சவங்கதான்!   'சுப்புத்தாத்தா, மீனாட்சிப் பாட்டி'ன்னு  உங்க  பதிவுகளில்  பின்னூட்டம்  போடும்  பிரபலப் பதிவர்!  காசி போகும்விவரம் சொல்லி ஆசி வாங்கிக்கிட்டோம்.

வருச ஆரம்பமே  ஒரு பதிவர் சந்திப்பு!  அப்ப......  வருசம் பூராவும்  கொண்டாட்டம்தான்:-)

அங்கிருந்து கிளம்பி  சாலிக்ராமத்தில்  நம்ம  காவேரி விநாயகரோடு  ஒரு சந்திப்பு.  முந்தி நம்ம மாமாதான்  ட்ரஸ்டி. இப்போ அவர் மறைவுக்குப்பின்  மாமாவின் மகன் பாபு நிர்வகிக்கிறார். கோவிலின் வளர்ச்சி இந்த  முப்பத்திநான்கு வருடங்களில் அபாரம்.

சினிமாக்காரர்களின் கண்கண்ட தெய்வம் இவர்.  நம்ம சென்னைப்பயணத்தில் இவரை தரிசிக்காமல் திரும்பி வந்ததா சரித்திரமே இல்லை;-)

கோவிலில் தரிசனம் நல்லாக் கிடைச்சது. ஆனால் பாபுவைக் காணோம். என்ன ஏதுன்னு அங்கே விசாரிக்கப்டாதா? பக்கத்துலே  ஒரு நிமிச நடையிலேதானே வீடுன்னு அங்கே போய்த்தேடினால்....கோவிலில் இன்னிக்கு  விசேஷம்.  வராத மக்கள்ஸை நாமே போய்ப் பார்த்தால் என்னன்னு  உற்சவர் நகர்வலம் கிளம்பிட்டாராம். கூடவே  பாபுவும் போயிருக்கலாமுன்னு அவரோட தங்கமணி  சொன்னாங்க.

அப்புறம் ஒரு நாள் வரோமுன்னுட்டு கிளம்பினோம். வழக்கமான தெருவில் திரும்பாமல்  வேற ஒரு தெருவில் திரும்பச் சொன்னார் கோபால். ஏன்? புரிபடாமல் இருந்தேன். கொஞ்ச தூரத்தில்  நாதஸ்வர  ஓசை மெல்லிசாக் கேட்டது.  நமக்கு  எதிரில்  கொஞ்சதூரத்துக்கு முன்னால்  சாமி ஊர்வலம்.  வண்டியை ஓரமாநிறுத்தச் சொன்னேன்.  ஆனால் புள்ளையார்  சட்னு  ரைட் திரும்பறார்.   நாங்களும் இறங்கி, சந்துமுனையில் அவரைப் பிடிச்சுட்டோம்.  நம்மை எதிர்பாராமல் பார்த்ததில் பாபுவுக்கும்  அர்ச்சகருக்கும் வியப்பு!

அங்கேயே அஞ்சு நிமிசம் நின்னு  நமக்கு ஸேவை சாதிச்சார் நம்ம 'புள்ளையார்'. ஸ்பெஷலா தீபாராதனை காட்டி,  ப்ரஸாதமும் கிடைச்சது. நன்றி புள்ளையாரே, ஹேப்பி நியூ இயர்ன்னு சொல்லி ஒளிவெள்ளத்தில் திளைக்கும் புள்ளையாரை உத்துப் பார்த்தால் கழுத்தில் வடைமாலை!  என்னடான்னு  இன்னும்  கூர்ந்து கவனிச்சேன்.  அச்சச்சோ...... புள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிஞ்சிருக்கு !  அட ராமா.....  இன்னிக்கு நம்ம நேயுடுக்குப் பொறந்தநாள் இல்லையோ!!!  எப்படி மறந்தேன்:(   'தேடி வந்து தரிசனம் கொடுத்த என் செல்லமே'ன்னு கொஞ்சிட்டு அவர் போனாவுட்டு கிளம்பினோம்.

ராச்சாப்பாடு............  சரவணபவனில்  சப்பாத்தி வடகறி காம்பினேஷன்!

நாளைக்குக் காலையில் ஆறு மணிக்கு வந்துருங்க.  வெள்ளெனக் கிளம்பணும்.  சீனிவாசனுக்குச் சேதி சொல்லி, அறைக்கு வந்து சேர்ந்தோம்.

தொடரும்...........:-)





19 comments:

said...

காசிக்கு போக waiting !!

said...

சிறப்பான எங்க பதிவரை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி அம்மா... என்றும் கொண்டாட வாழ்த்துக்கள்...

said...

ஆஹா காசிக்குக் கிளம்பியாச்சா. சுப்பு சார ,மீனாட்சி மாமியைப் பார்த்ததில் சந்தோஷம். என்ன ஒரு அன்பு தம்பதியர். நல்லபடியாகப் போய் வரவும். துளசி. நெடு நாளக்குப் பிறகு வெங்கட்ராமன் தெருவைப் பார்த்ததும் சந்தோஷம்.

said...

சுப்புத் தாத்தாவை சென்னை பதிவர் சந்திப்பில் சந்தித்தேனே. உங்கள் அத்திம்பேரா.பேஷ் பேஷ். மிக்க சந்தோஷம்.

said...

ஏ கிழவி.!! ஓடியா இங்கே..

இன்னா விஷயம்.? என்ன சத்தம் இங்கே?

இங்கன பாரு ...

. அட... நம்ம இல்ல !!

ஆமாம். ஒரு காலத்துலே
நீ ரொம்ப அழகா இருக்கே இல்லே !!

கூட துளசி சகிதம் அந்த கோபாலனும் இருந்தா
நம்ம என்ன !! இந்த லோகமே
அழகுதான்.

ஆஹா...

தங்கச்சி துளசிக்கும் கோபால் சாருக்கும்
நன்றி அப்படின்னு இங்க்லீசிலே சொல்லிடுங்க.

தாங்க்ஸ்.

சுப்பு தாத்தா.
மீனாச்சி பாட்டி.
www.subbuthatha.blogspot.com

said...

சுப்பு தாத்தா தம்பதியர் அன்றும் இன்றும் வெகு அழகு !!
@சுப்புதாத்தா ,மீனாட்சி பாட்டி; எனக்கென்னவோ மீனாட்சி அம்மா அன்று , அழகு ,இன்று,.... அழகோ அழகு !!

said...

New year wishes.
Lucky to have so much friends and relatives.

said...

நீண்ட நாட்களாயிற்று உங்கள் பதிவுகளைப் படித்து. அதற்கு முதலில் ஒரு மன்னிப்பு.

நீங்கள் இந்தியா வந்திருந்தபோது என்னால் உங்களைப் பார்க்க முடியவில்லையே என்றிருந்தது. பதிவுகளைத் தொடர்ந்து படித்து அந்த வருத்தத்தைப் போக்கிக் கொள்ளுகிறேன்.

சுப்பு ஸார், மீனாட்சி அம்மாவை நாங்களும் கண்குளிரப் பார்த்து ஆனந்தப்பட்டோம்.

said...

வாங்க சசி கலா.

காசி வண்டி கிளம்பிருச்சு. ஓடி வந்து ஏறிக்குங்க:-)

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ஒவ்வொரு பதிவர் சந்திப்பும் மகிழ்ச்சியைப் பெருக்குதே! இதுதான் அதன் ஸ்பெஷாலிட்டியாக்கும் கேட்டோ:-)))

said...

வாங்க வல்லி.

சுஸ்வாத் வாசலில் அழகானகோலம் போட்டுருந்தாங்கப்பா.

அன்புத்தம்பதியரைப் பார்த்ததும் அந்த அன்பு கூடவே ஒட்டிக்குது:-)))

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

என்ன சுப்புத்தாதாவா????? உங்களுக்கு(ம்) அவர் தாத்தாதானா!!!!

எங்க அக்காவின் கணவர் எனக்கு அவர் அத்திம்பேராக்கும்!

பதிவர்கள் என் குடும்பம் என்பது உண்மைதான்:-)

said...

மீனாட்சி அக்கா,

என்ன இப்படி உங்களைக் 'கிழவி கிழவி'ன்னு சத்தாய்க்கிறார்? நீங்களும் சும்மா இருக்கீங்களே!!!!

எதுக்குக்கா இங்கிலீஷில் சொல்லணும்?தமிழில் சொன்னால் போதுங்க்கா. புரிஞ்சுக்குவேன்:-))))

said...

சசி கலா,

'அம்மா' என்பதே சரி! அழகின் மறுபெயர் அம்மா!!!

said...

வாங்க நான் அவன் இல்லை.

பதிவர் குடும்பம் ரொம்பவே பெரூசு. அதான் உறவினர் பெரிய கூட்டமாத் தெரியறாங்க:-)))

பதிவர்கள் அனைவரும் லக்கீஸ்தான்:-)

said...

வாங்க ரஞ்ஜனி.

அடடா..... பதிவுலகில் எனக்குப் பிடிக்காத வார்த்தை மன்னிப்பு என்று (விஜயகாந்த்) சொல்லி இருப்பது மறந்து போச்சா:-)))


அநேகமாக உங்க பெண்களூருக்கு அடுத்த ஆண்டு வரலாம்! அஜெண்டாவில் இருக்கு:-)

said...

நிச்சயம் வாருங்கள், துளசி. நானும் உங்களையும், கோபால் ஸாரையும் சந்திக்க ஆவலாக இருக்கிறேன்.

said...

சாலிக்கிராமம் வரை வந்து....என்னை மறந்திடீங்களே,பரவாயில்லை அடுத்த முறை நேரமிருந்தால் வாங்க.வடுவூர் போன போது மறக்காமல் கூப்பிட்டதே எனக்கு போதும்,மீதியெல்லாம் எக்ஸ்டிராவாக வைத்துக்கொள்கிறேன். :-)

said...

சுப்பு தாத்தா மீனாச்சி பாட்டி இனிய சந்திப்பு.