Monday, April 28, 2014

பணமும் பிணமும்

முஸ்கி:  , மனதை திடப்படுத்திக் கொண்டு உள்ளே வாங்க.

மகா மசானம் இது.  எதுக்கு  காசிக்கும் சாவுக்கும்  இத்தனை பெருமை?

இங்கே வந்து செத்துப்போனா மோட்சம் உறுதி. அதுவும் சாகக்கிடக்குறவங்களைத் தன் மடியில் வச்சுக்கிட்டு அந்த பராசக்தியே தன் சேலை முந்தானையால் விசிறி விடுவாளாம்.  பரமசிவன்,  அவுங்க காதில் ராம நாமத்தைச் சொல்லி டைரக்ட்டா மோட்சத்துக்கு அனுப்பிருவாராம். புனரபி ஜனனம், புனரபி மரணம் என்ற  பிறப்பு இறப்புன்னு  தொடரும் சங்கிலியிலிருந்து விடுபட்டுடலாம்.

அதுக்காக  சாகக்கிடக்கையில் பயணம் பண்ணி வரமுடியுதா? நோ ஒர்ரீஸ். செத்த பிறகு இங்கே கொண்டுவந்து எரிக்கப்பட்டாலும் இதே பலன் உண்டு. அக்கம்பக்கத்துப் பதினெட்டு பட்டிகளில் இருந்தும் பிணங்களை இங்கே கொண்டு வந்து எரிப்பது தினசரி நிகழ்வுகளில் ஒன்னுதான்.   ஏதோ சரக்கு கொண்டு வர்றது போல   நீள மூட்டையாக் கட்டி, அதை சைக்கிள் ரிக்‌ஷா, ஆட்டோ, இல்லை வெறும் சைக்கிள் இப்படி எதுலேவேணா வச்சுக்கொண்டு வந்துடறாங்க.  உள்ளூர் மக்கள்ஸ்க்கு ... ? அதான் எல்லாம் ரெடிமேடா  கிடைக்குதே!  பொண்ணுன்னா  ஆரஞ்சு, ரோஸ், சிகப்பு நிறங்களில் சரிகை வச்சுத் தச்சது. ஆம்பளைன்னா......  வெறும் வெள்ளை வேட்டி.

பிணத்தை இம்மாந்தூரம் கொண்டு வர வழி இல்லைன்னாலும்..... கவலை வேணாம்.  அந்தந்த ஊரில் எரிச்ச  அஸ்தியைக்கூட இங்கே கொண்டு வந்து கங்கையில் கரைச்சாலும்  மோட்சம்தான்.  அதுவும் முடியலைன்னா?   எதுக்குப்பா கவலை? இங்கே வந்து பித்ரு கர்மம் செஞ்சாலும்  போதும்.  ஆகக்கூடி காசியை நினைச்சாலே மோட்சம்தான்.  இல்லாமலா மோட்சபுரின்னு பெயர் கிடைச்சுருக்கு!

மரணத்தைக் கொண்டாடணும் என்பதே  உண்மை.  இதையெல்லாம் தெரிஞ்சோ தெரியாமையோ நம்ம பக்கங்களில் கொண்டாடிக்கிட்டுத்தான் இருக்கோம்.  சென்னையில் சவ ஊர்வலங்களைப் பார்த்துருக்கீங்கதானே?  என்னமா ஒரு  கூட்டம்  போடும் ஆட்டம்!  அந்த பறையொலி நம்மைக்கூட நாலு ஸ்டெப் போடவச்சுருமுல்லே!

மேலே: சென்னை வாசத்தில் ஒரு  ஊர்வலம். நம் வீட்டு மாடியில் இருந்து எடுத்தது.

மரணபயம் துளியும் இல்லை. இன்னிக்குச் செத்தா இன்னிக்கே பால்!  காசி எப்பேர்ப்பட்டவரையும்  ஞானியாக்கித் தத்துவம் பேச வச்சுரும் போல.

பாருங்களேன்.... நான் எப்படி பேசிக்கிட்டு இருக்கேங்கறதை!!

எனக்கு என்னவோ சின்ன வயசுலே இருந்து  மரணம் என்ற சமாச்சாரம் ரொம்பவே  சுவாரசியமாகிப் போச்சு.  அதைப்பற்றி நம்ம துளசிதளத்தில்   பதிவு ஒன்னு கூட எழுதிட்டேன். ஒரே ஒப்பாரின்னு நினைக்காம க்ளிக்கிருங்க:-)


பொதுவா மயானங்களுக்குப் பெண்கள் வர்றதில்லை (அதாவது உயிரோடு!)  என்றதால் எங்கே பார்த்தாலும் ஆண்களே இங்கு!  டூரிஸ்ட் கூட்டம்தான் (பெண்கள் உட்பட)  இங்கே என்ன நடக்குதுன்ற  ஆர்வத்தோடும் பயத்தோடும்  வந்து பார்த்துக்கிட்டு இருக்காங்க. தரையில் நின்னு பார்க்கும் அதே அளவுக் கூட்டம் படகிலும் வந்து அந்தாண்டை தண்ணீரில்  'நின்னு' பார்க்குது!  படித்துறையில்  ஒரு  இடுப்புயரக் கம்பித்தடுப்பு அருகில் நின்னுக்கிட்டு இருந்தோம் நாங்க.  கீழே ஒரு  அஞ்சாறடியில் நடப்பது எல்லாம் துல்லியம்.

இதுலே ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி  என்னாண்டை கோவிச்சுக்கிட்டாங்க.  'அதெப்படி உனக்கு மட்டும் போட்டோ எடுக்க பர்மிஷன் கொடுத்தாங்க'ன்னு?

சரியாப்போச்சு.  என்ன இருந்தாலும் நான் இந்தியள் இல்லையோன்னு சொல்ல வாய் வந்தாலும்...... ஒன்னும் சொல்லாம இருந்துட்டேன். இதுலே நம்ம கையிலே தாம்பாளம் பார்த்துட்டு ....  சாவுச்சடங்கு செய்யும் குடும்பத்து ஆட்கள்ன்னு  நினைச்சுக்கிட்டாங்களோ என்னவோ!

ஆனாலும் கடுகடுன்னு மூஞ்சை வச்சுக்கிட்டு இருந்தாங்க  அந்தம்மா. கூட வந்த ஒரு பெண்ணும்,  இன்னொரு ஆளும் வச்ச கண் வாங்காம அங்கே நடப்பதைப் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. டூர் ஆப்பரேட்டர் ஒருவேளை சொல்லி இருப்பார் போல,  மயானத்துலே படமெடுக்கக்கூடாதுன்னு.

வெளிநாடுகளில் க்ரெமெடோரியம் இருக்குன்னாலும்.....  சவப்பொட்டியோடு  அது கன்வேயர் பெல்ட் மூலம் உள்ளே போயிரும்.  நாம்தான் மூத்த பிள்ளை இல்லை கடைசிப்பிள்ளை கொள்ளி வைக்கணும் என்ற  சாஸ்த்திரவிதிப்படி,  அவுங்க சொல்லும் ஸ்விட்சை அமர்த்திட்டு  வருவோம். ஆனால்  உடனே  எரிக்க மாட்டாங்களாம்.  பின்னிரவில் தான் எரியூட்டல். அப்பதான் காற்றில் அவ்வளவா பொல்யூஷன் கலக்காது. இது தெரியாமல் முதலில் எல்லாம் இங்கே சாவுக்குப்போய் சர்வீஸ் முடிஞ்சு   வெளியே வந்தவுடன், சிம்னியில் புகை வருதான்னு அண்ணாந்து பார்ப்பேன்! ஒன்னும் வரலையேன்னு ஏமாற்றமா இருக்கும்.  புகைகூட வராம எரிக்கறாங்கன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.  அப்பதான் ஒரு நாள் நம்ம ரமண்பையா விஷயத்தைச் சொன்னார். இப்ப அவரும் உலகில் இல்லை:(

 இந்தப் படித்துறைகள்   ஹரிஷ்சந்த்ராவுக்கும், மணிகர்ணிகாவுக்கும் ஒருநாளைக்கு சுமார் நூறு பிணங்கள் வருதாம்.  நல்லா எரிஞ்சு முடிக்க  நாலுமணி நேரம் எடுக்குது. இந்தப் படித்துறை மேடையிலே ரெண்டு தகனமேடை காங்க்ரீட்லே  கட்டி இருக்கு.  அதுலேதான் எரிக்கணுமுன்னு  காத்துக்கிட்டு இருந்தால்  வேலை முடியாது பாருங்க. அதனால் படிகள் விட்டிறங்கி கங்கைத் தண்ணீருக்குப் போகும் வழியில்  ஒருபத்து மீட்டர் அகலத்தரையில் அங்கங்கே சிதைகளை மூட்டிடறாங்க.  நாளின்  இருபத்தினாலு மணி நேரமும் எதாவது ஒரு சிதை எரிஞ்சுக்கிட்டேதான் இருக்கு இங்கே. அணையா நெருப்பு.

தொடர்ந்து வரும் புகையினால், அக்கம்பக்கத்து மரங்கள், கட்டிடங்கள்  கூட புகைபடிஞ்சுதான் கிடக்கு.


நாராயண தீக்‌ஷிதர் என்ற மகான் தான்  1740 ஆம் ஆண்டில் இந்த  படித்துறைகளைச் சீரமைச்சுக் கொடுத்தாராம். அப்போ ஜனத்தொகை ரொம்பக் குறைவோ என்னவோ  ரெண்டே ரெண்டு மேடை! இன்னொரு மயானப் படித்துறையான மணிகர்ணிகாவில் எத்தனை மேடை இருந்ததோ?  கிட்டப்போய் பார்க்க முடியலை. படகில் போகும்போது  மட்டுமே  ஒரு பார்வை:(

நாங்க நின்னு பார்த்துக்கிட்டு இருந்தபோதே  பிணங்கள் வந்துக்கிட்டுத்தான் இருக்கு. ஒரு பக்கம் நாலு பேர் எரிஞ்சுக்கிட்டு இருந்தாங்க.  படிகட்டுகளில்   இப்ப வர்றது ஒரு பெண். மஞ்சள் நிறப்புடைவையில்  இருக்காங்க.  தூக்கிட்டு வந்தவங்க நேராப்போய்   கரையோரத்தண்ணியில்  பாடையை அப்படியே  பிடிச்சு  ஒரு முக்கு முக்கி எடுத்தாங்க.

 திரும்ப இந்தப்பக்கம்  கொண்டு வருவாங்கன்னு  பார்த்தால்......   அங்கேயே  கரையின் ஓரத்தில் அப்படியே தண்ணீரில் போட்டுவச்சுட்டு ஒரு நாலைஞ்சு ஆட்கள் கூட்டத்தில் என்னமோ பேசிக்கிட்டு இருக்காங்க. பாவம்....அந்தம்மா  தண்ணிக்குள்ளேயே கிடக்கு.  அந்த இடத்தில் மண்ணும் சாம்பலும் கலந்து சகதி போல  இருக்கு:(  எரிப்பவர்களோடு பேரம் படியலை போல!

இங்கே வரும்போது  பிணத்துடன் பணமும் கொண்டாரணும்.  நகரசபை நிர்ணயித்த  தொகைன்னு ஒன்னு இருந்தாலுமே......   இங்கே வெட்டியான்களோடு  ஒரு பேரம் பேசிக்கணும்தான்.  எல்லாம் அன்ஃபீஸியல். வேற வழி?  தொகை படியலைன்னு  திரும்பி வீட்டுக்கா கொண்டு போக ?

அவுங்களையும் சொல்லி என்ன பயன்?  இங்கே நெருப்பு எரிஞ்சால்தான் அங்கே வீட்டுலே அடுப்பெரியும்:(

வசதி இல்லைன்னா  கஷ்டம்தானே?  நகரசபை இங்கே மின்சார மயானம் ஒன்னு அமைச்சுக் கொடுத்துருக்கு.  கட்டணம் ஐநூறு மட்டுமே! ஆனாலும் மக்கள் அங்கே போக அவ்வளவா விரும்பலை? மரபு  முக்கியம்.  இங்கே கங்கைக்கரையில் கட்டையில் வெந்தால்தான்  சொர்கம் என்ற நினைப்பு.

எரிக்கும்  இடத்தில் ஆடும் மாடும் நாய்களுமா இடையில் உலாத்திக்கிட்டே இருக்குதுகள். ஆட்டுக்கும் மாட்டுக்கும்   மெரிகோல்ட் பூக்களின் மேல்தான் கண்.  ஆனால்... நாய்கள்?  பார்பெக்யூ வாசனை இழுக்குது போல!  காலபைரவர் கோவில் கொண்டுள்ள காசி மாநகரத்தில் பைரவர்களுக்கு  நல்ல மரியாதை. யாரும் அவைகளை விரட்டுவதில்லை. அதுகளும்  குறுக்கே போகும் மக்களைக் கடிப்பதுமில்லை. குரைப்பதுமில்லை.

 இதுக்குள்ளே இன்னொரு பெரிய சாவு வருது.  பின்னால் வந்த  ஜனத்திரள் சைஸ் வச்சுப் பார்த்தால், கொஞ்சம்  பெரிய குடும்பம் போல.    வயசான பெரியவர். அவரைச் சுமந்து வந்தவர்கள்  நேரா கங்கைக்குப்போய் முக்கி எடுத்து கையோடு  மேலே கொண்டு போயிட்டாங்க.  தகன மேடை கிடைச்சிருக்கு. ஒரு  பதின்ம வயசுப்பையன்  (பேரன் போல! ) உடைக்கு மேலொரு வெள்ளைத் துணியைப் போர்த்திக்கிட்டு  கொள்ளி வைக்கப் போறார்.   அதுக்கு முன்னால் எதோ சாஸ்த்திரம்..... குச்சி ஒன்னுஎடுத்துக்கிட்டு  கங்கையில்  முக்கி எடுத்தாந்தார்.

படித்துறைக்கோவிலில்  பலநூற்றாண்டுகளாக அணையாமல் எரியும் தீயில் இருந்து  குச்சியைப் பத்த வச்சுக்கணும்.  நம்ம பக்கங்களில்  தீச்சட்டி வீட்டில் இருந்தே கொண்டு போவாங்க இல்லையா? இங்கே அப்படி இல்லை!

தனியா பண்டிட் வந்து  மந்திரங்கள் ஓதி  சம்ப்ரதாய முறைகளைச் செஞ்சதும்  கொள்ளி போட்டார்.  நிறைய நெய்யை ஊத்துனாங்க.  பெரியவரைச் சுத்தி நல்ல கூட்டம்.

ஒரு  எரிப்புக்கு குறைஞ்சபட்சமா அஞ்சாயிரம்.அதிகபட்சமா  நாப்பதாயிரம் செலவாகுதாம், இங்கே எரிப்பதற்கு மட்டும்.  எல்லாம்  எரிக்க உதவும் மரக்கட்டைகளின் அளவைப் பொறுத்தும்  செலவுக் கணக்காம்.  மலை போல குவிச்சு வச்சுருக்கும்  மரத்துண்டுகளைத் தோளில்  சுமந்து போய்   சிதை அடுக்க, குறுக்கும் நெடுக்குமாய் ஆட்கள் போய்வந்துக்கிட்டு இருக்காங்க.  எரிப்பவர்கள்  ஆறடி மூங்கில் கழிகளைக் கையில் வச்சுருக்காங்க.   அப்பப்போ அதால்   எரியும் கட்டைகளைக் குத்தித் திருப்பி தீயைத் தூண்டிவிடறாங்க.

சரியா  தீப்பிடிக்கலையா? நோ ஒர்ரீஸ்.....இன்னொரு   நெய் பேக்கட்டைப் பிரிச்சு  ஊத்துனால் ஆச்சு!  நம்ம பக்கங்களில் விறகு அடுக்கி எரிப்பதைப்போல இல்லாமல் முழு மரத்தின் தண்டுகளை அப்படியே அடுக்கி எரிப்பதால் சட்னு தீ பத்தறது கஷ்டம். ஆனால்..... பத்திக்கிச்சோ.....  ஆளுயர தீவட்டிதான்!


பிணங்களைப் போர்த்திக் கொண்டுவரும் சரிகைத்துணிகளை  நைஸா எடுத்துக்கிட்டுப்போய்  திரும்ப சாவுசாமான் விற்கும் கடைகளில் வித்துருவாங்கன்னு ஒரு சேதி  முந்தி எங்கியோ வாசிச்ச நினைவில், அப்படி எடுக்கறாங்களான்னு பார்த்துக்கிட்டு இருந்தேன்.  அப்படி ஒன்னும் கண்ணில் படலை. அங்கங்கே  அழுக்கிலும் சேற்றிலும்  அவைகளில்  சில கிடந்தன.  ஒரு வேளை அதி அலங்காரமா வேலைப்பாடுகள் நிறைஞ்ச துணிகளை எடுத்துக்குவாங்க போல.   எல்லாத்திலும்  காசுக்கேத்த பணியாரம் இருக்கத்தானே செய்யும்!

பாடைகளின் மூங்கில்களை மட்டும் தனியா எடுத்து ஒரு பக்கத்தில் வச்சுருக்காங்க. ரீஸைக்ளிங் இருக்கு போல.   அதுக்கான டிமாண்ட் இருக்கும் போது தேவையில்லாமல் அதை எதுக்கு எரிக்கணும், இல்லே இன்னொண்ணு  அது ஆறடி நீள மூங்கில். அடுக்கும் சிதையோ  நாலரை அடி, இல்லே அஞ்சடி  நீளம்தான். தலையோ, காலோ கொஞ்சம் வெளியே நீட்டிக்கிட்டுதான் இருக்கு படுக்க வைக்கும்போது.  அங்கே கும்மாச்சியாக் கொஞ்சம் கட்டைகளை வச்சு மறைச்சுடறாங்க.

என்ன   நடக்குமோன்னு  பார்த்துக்கிட்டு இருக்கும்போது, ஒரு பத்தே நிமிசத்தில்  நாம் இருக்குமிடம் மசானம்,  சாவு, பிணமென்ற பதற்றம், பயம்  இல்லாமப் போயிருது.  பார்ட் ஆஃப் த  லைஃப்  என்ற உணர்வு வந்துருது.   மயான வைராக்கியம்.....    உலகே மாயம், வாழ்வே மாயம்.... காசி என்பது  வெறும் க்ஷேத்ரம்  இல்லை, மஹாமயான க்ஷேத்ரம் என்பதே உண்மை.

வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தாலும்  என் கண்கள் அடிக்கடி போனது அந்தம்மாவிடமே.  இன்னுமங்கேதான் சேற்றில் கிடக்குறாங்க:(   சீக்கிரம்  ப்ரச்சனையை முடிங்கப்பா....பிறப்பு, வாழ்வு, இறப்புன்றது  எல்லாருக்கும்  உண்டு!  மயானம் , சமரசம் உலாவும் இடம்தான்!  ஆனால் காசு இருந்தால்தான் காசி!

ப்ச்........   நேரம் ஓடுதேன்னு  பண்டிட் வீட்டுக்குத் திரும்பினோம். கைகால் அலம்பிக்கிட்டு  மேலே மாடிக்குப்போய் உடையை மாற்றிக்கிட்டு கீழே வந்தோம்.  இலை போட்டாச்சு, சாப்பாடு தயாரா இருக்குன்னாங்க. முற்றத்தையொட்டிய தாழ்வாரத்தில் சிலர் உக்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டு  இருந்தாங்க.  நமக்கு ஒரு பெஞ்சில் இலைகள் போட்டு வச்சுருக்காங்க.





தொடரும்.............:-)


PINகுறிப்பு:  உனக்கு வெல்லம் தின்னாப்போல இருக்கும், இந்தப்பதிவு என்றார் கோபால்.





24 comments:

said...

நம்பிக்கை எனும் பெயரில் முடிந்தளவு நாசம் செய்கிறார்கள் என்று மட்டும் உறுதி... அந்தம்மா பாவம்...

said...

Mrs.துளசி & Mr.கோபால்...!

இது மாதிரி இடங்களுக்கு நீங்கள் இருவரும் எதுக்கு போக வேண்டும்? அங்கு போய் எதற்கு நம் மன நிம்மதியை இழக்கவேண்டும்?

மனிதன் பயப்படும் ஒன்றே ஒன்று--இறப்பு தான்! அதை அங்கு சென்று ஏன் சென்று பார்க்கவேண்டும்? உலகத்தில் எவ்வளவோ நல்ல இடங்கள் இருக்க!

என் அம்மா + அப்பா இங்கே போகணும் என்று எவ்வளவு முறை சொன்னாலும் நான் அவர்களிடம் ஏதாவது பொய் சொல்லி அவர்களை அங்கு போகாதபடி பார்த்துக்கொண்டேன்.

என் மனைவி அங்கு போகணும் என்று சொன்னதற்கு, நான் போகாலாம் என்று சொல்லி ஏமாத்தி கொடைக்காணலில் தான் ரூம் போட்டேன்..

நான் இங்கு என்றும் என் குடும்பத்தை கூட்டி கொண்டுண்டு செல்லமாட்டேன்.

இது தேவை இல்லை--ஒரு முறை பிறக்கிறோம்; ஒரு முறை இறக்கிறோம்--இடைப்பட்ட நேரத்தில் ஜில் ஜில் கொடைக்கனால் போவது தான் முறை! சாவு கிடங்கு கங்கைக்கு போவது தேவையில்லை என்பது என் கருத்து...

said...

பயம் வரணும். ஆனால் அருவருப்பு தான் வருது ....அறுவெருப்பு ..இரண்டில் எது சரி?

said...

// மயானம் , சமரசம் உலாவும் இடம்தான்! ஆனால் காசு இருந்தால்தான் காசி!//

சரியான வார்த்தைகள்.....

நானும் இங்கே சென்றதுண்டு - இரண்டு முறை. புகைப்படங்கள் எடுக்கத் தோன்றவே இல்லை.... முதல் முறை சென்றபோது பாதி எரிந்த நிலையிலேயே இழுத்து தண்ணீரில் விட்டதைப் பார்த்தேன். இப்போது பரவாயில்லை....

அந்த அம்மா... :(((( பேரம் பேசி ஒரு முடிவுக்கு வரமாட்டார்களோ....

said...

காசி வாடை இங்கே மதுரையில்
நேரடியாகப் பார்ப்பதைப் போன்ற
உணர்வினை ஏற்படுத்திப் போகிறது
தங்கள் அற்புதமான புகைப்படங்களும்
விளக்கங்களும்.....
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

said...

சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே

இந்த வரிகள் கூட உண்மையில்லை போல இருக்கே.

நீங்க சொன்ன மாதிரி காசு இருந்தாதான் காசி.

எங்க ஊர்ப்பக்கங்களில் பெண்கள் சுடுகாட்டுக்குச் செல்லும் வழக்கம் உண்டு. ஆனால் காசி போல கட்டைகளை அடுக்கிக் கொளுத்துவதில்லை. களிமண் மூட்டம் போட்டு விடுவார்கள்.

ஆயிரம் இருந்தாலும் இறப்பு என்ற சொல் மனிதனுக்குக் கொடுக்கும் அச்சம் அதிகம் தான். இறப்பு என்பது இழப்பு என்பதாகவும் இருப்பதால் அச்சம் இன்னும் பெரிதாகிறது.

மனிதன் எவ்வளவு ஆடினாலும் அடங்கித்தான் ஆக வேண்டும் என்பது உலக நியதி. இது எல்லாருக்கும் புரிந்தால் உலகம் அமைதியாக இருக்கும்.

said...

கொஞ்சம் ஒரு மாதிரி தான் இருக்கு படிக்க ....
எல்லாத்துக்கும் பணம் என்றாகிவிட்டது
.
//உனக்கு வெல்லம் தின்னாப்போல இருக்கும், இந்தப்பதிவு என்றார் கோபால்.//
:)

said...

ஆமாம் சசிகலா. துளசிக்கு ஓவரா இந்த விஷயத்தில அக்கறை. அச்சமும் இல்லை. ஞானிதான். அநாத சம்ஸ்காரம் அங்கே இல்லையோ துளசி.சமரசம் வாழ்விலும் இல்லை. இறப்பிலும் இல்லை.

said...

எப்படியோ, மரண பயத்தை வென்று விட்டீர்கள். பாராட்டுகள்.

said...

இந்த பதிவை, நின்று நிதானமாக நிறுத்தி பொறுமையாகப் படித்தேன், இரண்டு தடவை! காசி என்றாலே (இதுவரை சென்றதில்லை) எனக்கு அரிச்சந்திர புராணத்தில் வரும் மயான காண்டம், சந்திரமதி புலம்பல்தான் ஞாபகம் வரும்.

கடைத் தேறுவதற்குக் கூட காசு இருந்தால்தான் காசி! நன்றாகச் சொன்னீர்கள்! உடலில் உயிர் பட்ட பாட்டிற்கு பறந்து விட்டது. உடல்கள் படும் பாடு, படங்கள் நெஞ்சைத் தொட்டன.

said...

காசியின் இன்னொரு பக்கத்தையும் விரிவாக தங்களால் அறிந்துகொள்ள முடிந்தது. நன்றி டீச்சர்.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

இன்னும் என்னால் அந்தம்மாவை மறக்கமுடியலை:( ப்ச்.....

said...

வாங்க நம்பள்கி.

காசி என்றாலே ரொம்ப ஃபேமஸ் படித்துறைகளே. அதிலும் எரியூட்டும் இடமாக ரெண்டே ரெண்டு படித்துறைகள்தான்.

மயானம் பார்க்காமல் காசி யாத்திரை பூர்த்தி ஆகாது.காசியே ஒரு மயான க்ஷேத்ரம்தான்.

உங்களுடைய கருத்துகளுக்கு நன்றி.

said...

வாங்க தருமி.

எதுக்கு பயம் வரணும்?

நீங்க சொன்ன ரெண்டுமே சரி இல்லைன்னு நினைக்கிறேன்.

அருவெறுப்புன்னு இருக்க வேண்டாமோ?

எதுக்கும் நம்ம வகுப்பு லீடர் 'ஜாலியா தமிழ் இலக்கணம்' எழுதிய கொத்ஸ் வந்து பதில் அளிப்பார் என்று நம்புகின்றேன்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

இப்பெல்லாம் இப்படி இழுத்துவிடுவது இல்லைன்னுதான் சுரேஷ் (நம்ம பண்டிட் ஏற்பாடு செஞ்ச படகோட்டி) சொன்னார்.

அந்தம்மா........:(((((((

said...

வாங்க ரமணி.

உங்கள் பின்னூட்டம், ஊக்கத்தையும் மனமகிழ்ச்சியையும் தருகின்றது.

நன்றி.

said...

வாங்க ஜிரா.

பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்ற பழமொழி நினைவுக்கு வருது.

களிமண் மூட்டம் போட்டால், மண் வெடித்துச் சிதறாதா?

said...

வாங்க சசி கலா.

ஒருமாதிரி இருக்கா?

என்ன செய்வது? நம்ம ஹெட்டர்லே என்ன போட்டு வச்சுருக்கேன் பார்த்தீங்களா:-))))

நினைத்தது, கண்டது..... கேட்டது!

said...

வாங்க வல்லி.

அநேகமா நகராட்சி, அநாதை சம்ஸ்காரம் செய்யுமோ என்னவோ!

மற்ற தர்ம ஸ்தாபனங்கள்கூட உதவும் என்று நினைக்கிறேன்.

கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு இருக்கலாம். ஆனால் சட் னு இது நினைவுக்கு வரலை:(

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

எல்லாத்துக்கும் எக்ஸ்பைரி டேட் இருப்பது போலத்தானே மனிதனுக்கும்.
அப்புறம் ஏன் பயப்படணும்?

என்ன ஒன்னு அது எப்போன்னு நமக்குத் தெரியாது :( சஸ்பென்ஸில் வச்சுட்டானே கடவுள்:-)

said...

நன்றி கார்த்திக்சேகர்.

said...

வாங்க கீதமஞ்சரி.

நாணயத்துக்கு மட்டுமா? எல்லாத்துக்கும் ஒரு மறுபக்கம் இருக்கத்தானே செய்யுது!

வருகைக்கு நன்றிப்பா.

said...

வாங்க தமிழ் இளங்கோ.

நெஞ்சு பொறுக்குதில்லையேன்னு அன்று முண்டாசு பாடி வச்சதுதான் நினைவுக்கு வந்தது.

வருகைக்கும் கருத்துக்கும் மனம் நிறைந்த நன்றி.

said...

"மயானம் பார்க்காமல் காசி யாத்திரை பூர்த்தி ஆகாது"

கண்டுகொண்டோம்.