Friday, April 25, 2014

ஒலியின்றி ஒரு லொள் லொள் ம்யாவ் ம்யாவ்

ஒரு சின்னத் தாம்பாளத்தில் சப்பாத்தி மாவு உருண்டை.  லாட்னாவைக் காணோமேன்னு  பார்த்தேன். அதுக்குள்ளேஅங்கே வந்த நம்ம சிவகுமார்  தட்டை என்னிடம் நீட்டி, சின்னச் சின்ன உருண்டைகளா உருட்டி வைக்கச் சொன்னார். எத்தனை சப்பாத்திக்குன்னு தெரியலையே?   ஙே....   மாவைக் கிள்ளி எடுத்து  அரிநெல்லிக்காய் சைஸில் உருட்டிக் காமிச்சார் அவரே!

அங்கிருந்த ஒரு பெஞ்சில் உக்கார்ந்து உருட்ட ஆரம்பிச்சேன். இந்த வீடும் முற்றம் உள்ளதே. ஆனால்  முற்றத்தின் அளவு சின்னூண்டு. கூடத்தில் இப்போ நாம் இருக்கோம். இன்னொரு தாம்பாளத்தில் பூ, வெற்றிலைபாக்கு, மஞ்சள், ஊதுபத்தி,தர்ப்பை,பால், கங்கை  இத்யாதிகளுடன்  திரும்பி வந்தவர்  தரையில் அமர்ந்ததும், கோபாலும் அவருக்கு எதிரில்  உட்கார்ந்தார்.  மசாலா டப்பாவில் மங்கலப்பொருட்கள்.




இந்தப் பக்கங்களில் கோதுமை மாவு உருண்டைகளில்தான் பிண்டம் வைக்கிறாங்க..  ஆனால் நம்மூரில்  சோற்றால் ஆன பிண்டங்கள் இல்லையோ?

குருக்ஷேத்ராவில் ப்ரம்மகுண்டத்தின் கரையில் இப்படி சப்பாத்தி மாவு உருண்டைகளுடன்  காத்திருந்த பண்டாக்களின் நினைவு வந்தது.  நம்ம பக்கம் சோற்றுருண்டை. வடகத்திக்காரங்களுக்கு சப்பாத்தி மாவு உருண்டை! அவுங்கவுங்க சாப்பாடு அவுங்கவுங்களுக்கு. மேலே போனாலும்கூட உணவுப் பழக்கம் மட்டும் மாறாது போல!





தரையில் தர்ப்பையை  நீளவாக்கில் அடுக்கி  கீழே இருந்து ஆரம்பிச்சு குட்டி உருண்டைகளை வைக்கணும்.  பண்டிட் விசாரிக்க விசாரிக்க தன் தலைமுறைகளின் பெயர்களைச் சொல்லிக்கிட்டே போறார் நம்ம கோபால்.  எள்ளுத் தாத்தா பாட்டி, அதுக்கும் மேலே எள்ளுத்தாத்தாவின் அம்மா அப்பா, தாத்தாவின்  தாத்தா பாட்டின்னு  ஆறு தலைமுறைப்பெயர்கள் அஸால்டா வாயில் இருந்து வருது!   அட! இத்தனை தலைமுறைகள் பெயரும் இவருக்கு தெரியுமான்னு  என் கண்கள் விரிஞ்சது உண்மை. அடுத்து  கோபாலின் மாமனார் மாமியாரில் தொடங்கறாங்க. என்னைத் திரும்பிப் பார்த்தார்.  எனக்கு அப்பாம்மா, தாத்தா பாட்டி, கொள்ளு வரிசையில் ஒரு  தாத்தா பாட்டி  (அதுவும்  எங்க அம்மா சைடில் மட்டுமே !) தெரியும். அப்ப   மூதாதையர்  நினைவில் கோபாலில் பாதி(தான் ) நான்!

அப்புறம் நம்ம அண்ணன் தம்பி அக்கா தங்கை  என்ற  உறவினர் வரிசையில் என் சார்பா  என் இன்னுயிர்த்தோழியின்   கணவரையும் , அவருடைய பெற்றோரையும் , தம்பியையும்,  மாமனார் மாமியாரையும் சேர்த்துச் சொன்னேன்.  அப்புறம் மற்ற  ஆத்மாக்கள். சிண்டு என்றதும் நிமிர்ந்து பார்த்த சிவகுமாரின்  கேள்வி  நிறைஞ்ச  முகத்துக்கு, அது நம்ம செல்லம், நாய் என்றார் கோபால். சின்ன உருண்டை ஒன்னு!

கப்பு என்ற கற்பகம், கோகி என்ற கோபாலகிருஷ்ணன், ஷிவா, வரதன்,வெள்ளச்சு,  இப்படி வரிசையாச் சொல்லிக்கிட்டுப்போறேன். கப்பு என்று ஆரம்பிச்சதுமே ,  என்னைப் பார்த்து 'லொள்?'  என்று ஓசையில்லாமல்  வாயசைத்த  சாஸ்த்ரிகளுக்கு, இல்லைன்னு தலை அசைச்சு, ம்யாவ் என்று ஓசையில்லாமல் நானும் பதில் சொன்னேன். அப்புறம் ஒவ்வொரு பெயரைச் சொன்னதும்  அதே ம்யாவ், லொள்,  ம்யாவ்தான்.  லிப் ரீடிங்க்  இப்ப அவருக்குப் பழகிப்போச்சு. நல்ல புரிதல்.  சரசரன்னு உருண்டைகளைக் கிள்ளிக்கிள்ளி ( சின்ன ஜீவன்களுக்கு  சின்ன உருண்டை இல்லையோ?  தட்டிலிருந்த  மாவு உருண்டைகள்  முக்கால்வாசி மனிதர்களுக்கே தீர்ந்து போயிந்தே!  அப்ப  உருண்டை அளவைக் குறைச்சால்தானே என் படைகளுக்கு வரும்?) கோபாலுக்குக் கொடுக்க இவர் வாங்கி வரிசையா அடுக்கறார். ஒரு கட்டத்தில் தர்ப்பை நுனி வரை வந்து இடம் போதாமல் ஆச்சு!

கொஞ்சம் தயக்கத்தோட  நமக்கும் கூட வச்சுக்கலாமுன்னு (காசி போய்வந்த தோழி சொல்லி இருந்தாங்க) கேட்டேன்.  செத்தபின்   இதுக்குன்னு வரமுடியாதில்லையா? இல்லைம்மா..... நான்  அப்படிச் செய்யறதில்லை. கயாவில் அப்படி செய்வாங்க. இங்கே நான் 'வாழும் மக்களுக்கு'ச் செய்யமாட்டேன் என்றவர்,   உங்க  மகன்கள் (?)   உங்களுக்காக  அதைச் செய்வாங்களேன்னார்.  ஓ...... மகள் செய்வாளான்னு தெரியலையே:(  போகட்டும்...



மஞ்சள், குங்குமம், மலர்கள்  இட்டு  ஊதுபத்தி கொளுத்தி வணங்கிய பின்னே மந்திரங்கள் சொல்லி பூஜை நடந்தது.  கடைசியில்  தரையில் இருக்கும்  எல்லாவற்றையும்  சேகரித்துத் தாம்பாளத்தில் இட்டதும், போய் கங்கையில்  கரைத்துவிட்டு வரச்சொன்னார் சாஸ்த்ரி சிவகுமார். மாவு உருண்டைகள் மீனுக்கு இரை!

எனக்கும் கோபாலுக்கும்  இந்த  பிண்டப்ரதானம் அனுபவம் இதுதான் முதல்முறை. கோபாலின் பெற்றோர் மறைஞ்சு இப்போதான் முதல்முறையா  இவர் செய்யறார்.  அவுங்க போய் ரெண்டு வருசம் ஆகி இருந்தாலும், ஊரில் மற்ற தம்பிகள்தான் வைதீகக் காரியங்களையெல்லாம் தவறாமல் செஞ்சுக்கிட்டு வர்றாங்க. இளைய பண்டிட் ஒருத்தர் குடும்பத்தில் (ஓர்ப்படி. மச்சினர் மனைவி) இருக்கார்! அப்ப மூத்த பண்டிட்? அதான் நானிருக்கேனே:-)

பேச்சுவாக்கில் குலதெய்வம் எதுன்னு கேட்டவருக்கு, பெருமாள் என்று  சொல்லவந்த வாய்,  அநந்தபத்மநாபன் என்றது!  அட! இங்கே  அஸ்ஸி காட்டில்  அநந்தபத்மநாபன் கோவில் இருக்கு. ஆனால் ரொம்பப்பேருக்குத் தெரியாதுன்னு  தகவல் கிடைச்சது.  சேதி சொல்லி அனுப்பிட்டான் நம்ம  பெரும் ஆள்! ஆஹா....ஆஹா...

மீண்டும் கங்கைக்குப்  போனோம்.  நான் உசரப்படிகளில்  மெள்ள இறங்கிக்கிட்டு இருக்கேன்.  கோபால் விடுவிடுன்னு  பாய்ஞ்சு போய்  கங்கையில் தட்டைக் கவிழ்த்துட்டு,  மேலேறி வந்தவர் பாதி வழியில் என்னை சந்தித்தார்.  எல்லாம் அவசரடி. ஏன்....  நான் வரும்வரை கொஞ்சம் பொறுத்து இருக்கக்கூடாதா?  ரெண்டு க்ளிக்கி இருப்பேனே!



 நதியில்  மக்களுக்காகக் காத்திருக்கும் படகுகளின் வரிசை!   உச்சிவெயிலின் சுகத்தை அனுபவித்தபடி  கிடக்கும் பைரவர்கள். விளையாட்டில் கவனமா இருக்கும்  குழந்தைகள்.


படிக்கட்டில் கொஞ்சம் உட்கார்ந்து அக்கம்பக்கம் பார்த்துக்கிட்டு இருக்கோம்.   ரெண்டு  படித்துறைகள் தள்ளி ஒரே புகையும் கூட்டமும்.  அட! இங்கெதானா இருக்கு?  தாம்பாளத் தட்டைத் தூக்கிட்டு(!!!) அங்கே  போனோம்.




ஒரு உயரமான பீடத்தில்  சிவன். மேலேறிப்போக படிகள் இருக்கு.  அடிவாரத்தில் படுத்திருக்கும்  குழந்தையின்  மேல்  குழந்தையுடன்(??) அமர்ந்துள்ள காளி!  கோவில்! ஐயோ...  ஏன் குழந்தை மேல் உக்கார்ந்துருக்கான்னு  உத்துப் பார்த்தால்  கீழே உள்ள குழந்தைக்கு வால் இருக்கு!  ஓ....  சிம்மவாஹினியா!  ஆனால்  சிங்கம், புலி போல  இருக்கே!

 

அடுத்து ஒரு கட்டிடம். மண்டபத்தில் ஒரு நாகா சாது இருக்கார். அங்கேயே சமையல் போல! கல்லடுப்பு ஒன்னு ஓரமா இருக்கு.  சாது சேவைக்கு இன்னும் சிலர் இருக்காங்க. எக்ஸ்ட்ரா படுக்கை இருக்கே!

மண்டபத்தின்   ஒரு ஒரத்தில்  சின்னதா ஒரு சந்நிதி. கம்பிக்கதவின் உள்ளே  எட்டிப்பார்க்கலாம். மஹாராஜா  ஹரீஷ்சந்த்,  மனைவி தாராமதி, மகன் ரோஹித்தாஸ். (எல்லாம் நம்ம அரிச்சந்திரன், சந்திரமதி,லோகிதாசன் தான்) ஜஸ்ட் ஒரே ஒரு பொய்யைச் சொல்லி இருந்தால்  நிம்மதியாக குடும்பத்துடன் இருந்துருக்கலாம். ஆனானப்பட்ட தருமனே  அசுவத்தாமா இறந்தான்னு சொல்லலையா?



ஹரீஷ் முகம் தெரியாமல்  ஒரு  கம்பி குறுக்கே:(  கேட்டிருந்தால்  கதவைத் திறந்து விட்டுருப்பாங்க,இல்லே:(

நம்ம தாடிகூட என்ன சொல்லி இருக்கார்.... எதாவது நன்மை
இருக்குமுன்னால் ஒரு பொய்யைச் சொன்னாலும் குற்றமில்லைன்னுதானே?

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்.

நம்ம அரசியல்வியாதிகளைப் பாருங்க.....   நன்மை பயக்காதுன்னாலும் கூட  அயோக்கியத்தனமா பொய்களை வாரி இறைக்கலையா?

நான்கூடத் தீமையில்லாத பொய்களைச் சொல்வேன்.  ஒருநாளைக்கு பசியே இல்லை, சாப்பிட வேணாமுன்னு தோணுச்சுன்னா.....   கோபாலுக்கு மட்டும் சோறு  போட்டுட்டு நான் சும்மா இருந்தால்... நீயும் சாப்பிடுன்னு வற்புறுத்துவாரா....  "பசியா இருந்துச்சுன்னு   இப்பதான் சாப்பிட்டு முடிச்சேன். நீங்க வந்துட்டீங்க"  ஆனா இது லஞ்சு டைமுக்குத்தான் பொருந்தும் கேட்டோ!

ஆனா ஹரீஷ்?  மஹாராஜாவா இருந்து மனைவி மகனைப் பிரிஞ்சு, கடைசியில்  சுடுகாடு காக்கும் வெட்டியான் வேலைக்கு வந்துட்டானே:( ஐய... இவன் பொல்லாத அரிச்சந்திரன் பாருங்க....

இவன் வெட்டியானா வேலை செஞ்சது இங்கே இந்தப் படித்துறையில்தான் போல!  அதான் காலங்காலமா பிணங்களை எரிக்கும் இந்த  இடத்துக்கே  பேரு வச்சுட்டாங்க, ஹரீஷ்சந்த்ர  காட்!

வாங்க, படி இறங்கிப் போய் பார்க்கலாம்!



தொடரும்..............:-)




27 comments:

said...

/ மற்ற ஆத்மாக்கள். சிண்டு என்றதும் /

நெகிழ்வு.

said...

"சோற்றால் ஆன பிண்டங்கள் இல்லையோ?"

தமிழ்நாட்டை பொறுத்தவரை சோற்றால் "அடித்த" பிண்டங்கள் தான்...!

said...

"அவுங்கவுங்க சாப்பாடு அவுங்கவுங்களுக்கு. மேலே போனாலும்கூட உணவுப் பழக்கம் மட்டும் மாறாது போல!""

இது உண்மை என்று அமெர்க்க தமிழர்கள் நம்பினால்...அவர்கள் கொண்டு வரும் உணவைப் பார்த்தல்..எல்லாம் கறி மீனு தான்!

தமாஷா இருக்கும்!

said...

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

said...

நம்ம அய்யன் சொன்ன பொருள் வேறு...

மகள்(கள்) செய்ய மாட்டார்கள் - வாழும் வரை தந்தை மனதில் வாழ்வதால்...

said...

பிண்டம் வாங்கிக் கொண்ட அத்தனை ஆத்மாக்களும் கோபாலை வாழ்த்தி இருப்பார்கள். இருவரும் நன்றாக இருங்கள் துளசி. ஒருவழியாக கப்பு சிண்டு கோகி ஆத்மாக்கள் காத்திருந்திருக்கும். அம்மா அப்பாவைக் காணலியே என்று. படங்கள் அற்புதம்.

said...

மியாவ்/லொள் /கீச்சுன்னு சத்தம் கேட்டுதா .இந்த பக்கத்தில் ஓடி வந்துட்டேன் :)
வாயில்லா ஜீவன்கள் மேல் நீங்க வைச்ச அன்பு கிரேட் "!
நிறைய நாலு கால் ஆட்கள் அங்கே சுத்தறாங்க போலிருக்கு .

அக்காவ் யாரோ ஒரு நல்ல மனசுக்காரர் ஒரு பைரவருக்கு போர்த்தியும் விட்ருக்கார் !!! 17 வது படத்தில் தூங்கரவரை பாருங்க !

நம்ம அரசியல்வாதிங்க// இவங்களுக்கு .Pinocchio மாதிரி பொய் சொல்லும்போது எல்லாம் மூக்கு மரம் ,இலை என்று வளர்ந்தா எப்படி இருக்கும் ஹா ஹா :) ..

said...

பொழுது கோபால் அனுப்பிய பிரசாதங்கள் போய்ச்சேர்ந்திருக்கும்.அதுகளுக்கு.

said...

கோதுமை மாவுப்பிண்டங்கள்... வளர்ப்புச் செல்லங்களையும் மறவாத அன்புமனம்... ஒலியில்லாமல் லொள்..லொள்.. ம்யாவ்..ம்யாவ்...
நெகிழ்வும் மகிழ்வும் கலந்த சுவாரசியம்.

said...

செல்லங்களுக்கும் ஆத்ம பூஜை செய்தது நெகிழ்ச்சி!!

said...

ஆஹா டீச்சர், நம்ம 'பாரதியார்' அண்ணாக்கிட்ட அவரோட முன்னோர் பற்றிய நிறைய 'கொசுவத்திச் சுருள்' இருக்கும் போலிருக்கே.. அவருக்கும் ஒரு Blog தொடங்கச் சொல்லுங்கோ :-)

said...

கோதுமை மாவுருண்டை, சோற்றுருண்டைன்னு சைவப் பிண்டங்களா இருக்கே. அசைவப் பிரியர்கள் பாவமில்லையா?

படங்கள் ஊருக்குள்ளயே கூட்டிக்கிட்டு போற மாதிரி இருக்குன்னு ஏற்கனவே சொல்லிட்டேன். மறுபடியும் சொல்றேன்.

மகாகாளி கைல இருக்கும் குழந்தை முருகனா இருக்குமோ? யாரா இருந்தா என்ன.. அவளுக்கு நம்ம எல்லாருமே குழந்தைகள் தான்.

அரிச்சந்திரன் கதையைத் தெரிஞ்சிக்கனும். அதை இன்னைக்கு நெலமைக்கு மாத்திப் புரிஞ்சுதான் வாழனும். அப்படியே எடுத்துக்கக் கூடாதுங்குறது என் கருத்து.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

புரிதலுக்கு நன்றிப்பா.

said...

வாங்க நம்பள்கி.

தமிழர்களுக்கு அந்த 'அடித்த' சொல்லை ஒரு பெரும்தலை ஒதுக்கி வச்சுட்டாரே.அதான்... நான் அதில் குறுக்கிடலை:-)))

இருப்பவர்களுக்கு 'அடித்த'

போனவர்களுக்கு 'ஆன'

சரிதானே:-)

said...

நம்பள்கி,

சைட் டிஷ் பற்றிய பேச்சே இல்லை:-)

said...

வணக்கம் நிகண்டு. காம்.

நன்றி.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

அடடா.... அய்யன் இப்படி என்னைக் கைவிட்டுட்டாரே:(

'வாய்மை எனப்படுவது யாதெனில்..... '

சரியா வருமா பாருங்க!

மருமகன் செய்யணுமுன்னு வேண்டிக்கவா?

said...

வாங்க வல்லி.

மனம் நெகிழ்ந்து போன தருணங்களில் இதுவும் ஒன்று!

said...

வாங்க ஏஞ்சலீன்.

ஆஹா.... பசங்க உங்களை இட்டாந்துட்டாங்களா!!!!

காலபைரவர் குடி கொண்டுள்ள இடம் என்பதால் அவர்களுக்கே முன்னுரிமை!

இனப்பற்று இருக்கேப்பா.

http://thulasidhalam.blogspot.com/2014/04/blog-post_7.html

பசு கூட எவ்ளோ தாய்மை உணர்வோடு தாலாட்டுது பாருங்க இங்கே 12 வது படத்தில்!

said...

வாங்க வல்லி.

நான் வந்து, பார்சலை சரி பண்ணி அனுப்பறதுக்குள்ளே டபக்ன்னு தண்ணீரில் போடுவாரோ இவர்:(

said...

வாங்க கீதமஞ்சரி.

எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாத தூய அன்பைத் தரும் உன்னத உயிர்கள், இவர்கள்தானே?

எல்லாம் போன ஜன்மத்து சொந்தங்கள்தான்.

said...

வாங்க சசி கலா.

ரிஷிகேஷில் அஸ்தி கரைச்சபோது மனம் வெம்பி அழுதேன்.

இப்போ நெகிழ்வு மட்டும் என்று இருந்தாலும் கண்கள் நனைவது நிக்கலை:(

said...

வாங்க ரிஷான்.

உங்க அண்ணன் பின்னூட்டப்பிரியரல்லவா? ஒரு பதிவுக்கு 100 பின்னூட்டம் உறுதி என்றால் அவர் வேலையிலிருந்து ஓய்வு பெற்றதும் ப்ளொக் தொடங்குவார்:-))))

said...

வாங்க ஜிரா.

மேலே உடுப்பி ஹொட்டேல்ஸ்தான் இருக்கு. முனியாண்டிவிலாஸ் இல்லைன்னு கேள்வி!

நம்ம சொந்தக்காரங்க ஒருத்தர் எமலோகம்போய்த் திரும்பி வந்தாங்கன்னும், போனவுடன் அகத்திக்கீரை குழம்போடு பாசுமதி அரிசிச்சோறு போட்டாங்கன்னும் சொல்லி இருக்காங்க.

அரிச்சந்திரன், சத்தியத்துக்காக கடைசி வரை போராடினான். இந்தக் காலத்தில்........ ப்ச்....

said...

நம் ஊரில் அரிசி சாதம் என்றால் இங்கே கோதுமை....

தில்லியில் பல சமயங்களில் பார்த்ததுண்டு. எது கிடைக்குதோ அதைத் தான் செய்ய முடியும். சில திவச தினங்களில் தமிழர்கள் வராமல், வட இந்தியர்கள் வரும்போது பூரி-சோளே கொடுத்து திவசம் செய்வதைப் பார்த்திருக்கிறேன்!

மியாவ், லொள் - மனதைத் தொட்டது....

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

எது கிடைக்குதோ அதை வச்சுத்தான் செய்யணும். நான் மாங்காய் இனிப்பு பச்சடியை க்ரானி ஸ்மித் வச்சு செய்யலையா:-)))

said...

ஆத்ம பூஜை நெகிழ்ச்சியான பகிர்வு.