Friday, November 28, 2014

மதுரை வாரத்தில் இன்னும் சிலர்:-)

நடந்தது என்ன?
சட்டப்பார்வை ஜெயராஜனும், அவருடைய பதிப்பாளர் திருமதி  காஞ்சனமாலா அவர்களும்.(இவர் ஜெயராஜனின் தாய் என்பது கொசுறுத் தகவல்) 
உணவுக்கூடமா உருவெடுத்த  பள்ளிக்கூட வெராந்தாவில் இருந்த தகவல்.


மாணவருக்கான  பொது அறிவுக்கேள்விகளும் பதில்களும்

நம்ம  சரிதாயணம் புகழ் பாலகணேஷ்
எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன்
பதிவர் கரந்தை ஜெயக்குமாரின் புத்தக வெளியீடு
பதிவர் தமிழ் இளங்கோவுக்கு பொன்னாடை/சால்வை  போர்த்தி, நினைவுப்பரிசு வழங்குதல்
பதிவர் ரத்தினவேலும் அவர் மனைவியும்

பதிவர் கீதாவின் புத்தக வெளியீடு
பதிவர் ஜி எம் பி  சிற்றுரை ஆற்றினார்
பதிவர் செல்வி ஷங்கரும்,  பதிவர் ஜி எம் பி அவர்களின்  மனைவி கமலாவும்.


இந்த வாரம், மதுரை வாரமாகவே அமைந்து விட்டது.  விழாவை மிகவும் சிறப்புடன் நடத்திய  திரு.சீனா & குழுவினருக்கு நம் அனைவருடைய அன்பையும் வாழ்த்துகளையும் இங்கே பதிவு செய்கின்றேன்.

வாழ்க, வாழ்க!!!

கல்யாணம் நடத்துவதைப்போல்தான் இந்தத் திருவிழாவையும் நடத்தினாங்கன்னு சொன்னேன் பாருங்க. அது ரொம்பச் சரி.  விழாவுக்கு  வருகை தந்த அனைவருக்கும்  மஞ்சப்பை கிடைச்சது:-) உள்ளே  தேங்காய் வெற்றிலை பாக்கு மட்டும் மிஸ்ஸிங்!  அப்ப என்னதான் இருந்துச்சு உள்ளே?


உலக விஞ்ஞானிகள் பன்னிருவரின் படங்களுடன் அவர்களைப் பற்றிய சிறு குறிப்புகளும்! கூடவே  ப்ளானர்  அமைச்சதும் சிறப்பு.  வருடம் முழுதும்  வச்சுக்க முடிஞ்ச, நல்ல நினைவுப் பரிசு இது!  வடிவமைச்சவருக்கு  நன்றிகளும், வாழ்த்துகளும்.

பைக்குள் பையாக இன்னொரு  சிறிய பையும் இருந்துச்சு. மெய்யாவே கல்யாண நினைவுப் பரிசாகவும் இருந்துச்சு. மணமக்கள் பெயர் நினைவில் இல்லை:(   மன்னிக்கணும்.

(பையை, பயன்படுத்தக்கூடிய  சென்னை நண்பர் ஒருவருக்குக் கொடுத்துவிட்டேன்)
PIN குறிப்பு:  வரும் திங்கள் முதல் பயணத் தொடர் ' நான்கு வாரங்களில் மூன்று மாநிலம் '  ஆரம்பமாவது   இப்படி :-)

"மார்கழியை நீயே வச்சுக்கோ.  ஐப்பசி எனக்கு!  மாதங்களில் நான் மார்கழி என்றவன்,  அந்தக் குளிரிலும் தைலக்காப்பு போட்டுக்கிட்டு, திரைமறைவில் உட்கார்ந்துக்கறானே!  ஒவ்வொரு  பயணத்திலும்  கண்ணுலே படுவானான்னு  ஏக்கம்தான்.  யோசிச்சுப் பார்த்தேன்..... மார்கழியை நீயே வச்சுக்கோ. எனக்கு ஆகாதுன்னு  ஐப்பசியைக் கையில் எடுத்தேன்."


Wednesday, November 26, 2014

தெரிந்த (!) சிலரும் தெரியாத சிலரும்


ரமணி, மதுரை சரவணன், சீனா

 கிரேஸ்
 தாமோதர் சந்துரு
 பகவான்ஜி
 திரு வா.நேருவின் மகன்,

 முனைவர் வா.நேரு.


 தமிழ் இளங்கோ
 சுரேஷ்குமார்
 வெற்றிவேல்
 சித்தையன் சிவகுமார் .
 ?
   மணவை ஜேம்ஸ்
?
 கில்லர்ஜி
  கங்காதரன்
 மைதிலி கஸ்தூரி (மகிழ்நிறை),

முத்து நிலவன்
  மாலதி,
 கஸ்தூரிரெங்கன்(மலர்த்தரு),
ஏஇஓ ஜெயலட்சுமி (கற்க கசடற),
 ஸ்டாலின் சரவணன்,
?
 ?
 ஜெயராஜன்

  மகா. சுந்தர்(எண்ணப்பறவை)


வருங்காலப் பதிவர்!  மகிக்குட்டி (மைதிலிகஸ்தூரியின் மகள்)

இன்னும் கொஞ்சம் படங்கள் அடுத்த பதிவில். இந்தவாரம், மதுரை வாரமாப் போச்சு:-)

PINகுறிப்பு:  பெயரைத் தெரிந்தவர்கள்  சொன்னால், படத்துடன் பெயரை இணைத்துக் கொள்வேன்.

Monday, November 24, 2014

மதுரைக்கு முன்னுரிமை!

திருவிழாவின் முதல்நாள்  (அக்டோபர் 25 ) இரவு  எட்டேமுக்காலுக்கு  மதுரை வந்து சேர்ந்தோம். உடனே சீனா ஐயாவுக்கு ஃபோன் செய்தேன், யானை வந்த விவரம் அறிவிக்க:-)   நோ ஆன்ஸர் .....  கல்யாணவீட்டு வேலைகள் தலைக்கு மேல் கிடக்கும் எனப் புரியாதவளா நான்? அடுத்த எண்ணை  அழுத்தினதும் தமிழ்வாசி  எடுத்தார்.  விவரம் சொன்னதும் சீனா ஐயாவிடம் அலைபேசியைக் கொடுத்தார். நலம். நலம்.  அதே ராயல் கோர்ட். நாளை காலை 9 மணி. தெப்பக்குளம் அருகில். ஓக்கே.... நோ ஒர்ரீஸ்.

போது விடிஞ்சதும் தயாராகி  காலை எட்டு நாற்பதுக்குக் கிளம்பியாச்.   கிட்டத்தட்ட அஞ்சு கி.மீ தூரம். ட்ராஃபிக் கூடுதலா இருந்துச்சு.  பதிவர் விழாவுக்கு வந்த மக்களா !!!  ஜேமின் காரணம்,  ஞாயிற்றுக்கிழமை கோவிலுக்கு வரும் கூட்டமாம்.  கோபுரத்தைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக்கிட்டு, 'அப்புறமா வரேண்டி மீனு'ன்னு  மனசுக்குள் சொல்லிக்கிட்டேன்.  கால்மணியாச்சு தெப்பக்குளத்தாண்டை போக.


குளத்தில் தண்ணீர் குறைவு.  செடிகொடிகள் மண்டி புதர்கள் காட்சி கொடுத்தன. பார்த்தே  25 வருசமாச்சு. இப்பெல்லாம் இப்படித்தான் போல. சித்திரை வரட்டும் என்ற காத்திருப்போ என்னவோ!  தலையைத் திருப்பினால் கண்ணுக்கு நேர நடனகோபால நாயகி மந்திர்!  கோபால்தான் கண்டுபிடிச்சார்:-)

வண்டியை உள்ளே விட்டார் நம்ம சாரதி சீனிவாசன்.  ஹாலுக்குள் நுழைகிறோம்.  முதலில் கண்ணில் பட்டவர் நம்ம செல்வி ஷங்கர். (சீனாவின் மறுபாதி)  கோபால் உள்ளே போய் என் பெயரைப் பதிவு செஞ்சு, எனக்கான  ஐடியை வாங்கியாந்தார். சீனா ஐயாவும் வரவேற்க வந்துட்டார்.  நம்ம தருமி கேமெராவும் கையுமா!


க்ளிக்க ஆரம்பிச்சவள் கை ஓயவே இல்லை:-)  பெயர்மட்டுமே தெரிந்த பதிவர்களின்  முகங்களைக் கண்ட மகிழ்ச்சி.

 கில்லர்ஜியுடன்.... இன்னொருவர்?
 பாலகணேஷ், கோவை ஆவி
 கோவை ஆவி,  பகவான் ஜி

 பகவான் ஜி, அரசன்
 சீனு, ரூபக்ராம்
 ஸ்கூல் பையன்

கடைசி நேரப் பரபரப்பில்  மாநாட்டுப் பொறுப்பாளர்கள், ஆடியோ, வீடியோ, மேடை  ஒழுங்கு எல்லாம் பார்த்துச் சரி செஞ்சுக்கிட்டு இருந்தாங்க.  படம் எடுக்க வசதியான இருக்கைகளில் போய் உக்கார்ந்தோம்.

ஒன்பது ஐம்பதுக்கு  முதல்  'ஹலோ' வந்துச்சு  மைக்கில்.  வந்த அனைவரையும் வரவேற்று ,  இன்னின்னாரை மேடைக்கு அழைச்சுக்கிட்டு இருந்தாங்க. காதில் விழுந்துச்சு நம்ம பெயர்... 'திடுக்'

அம்புட்டுதான்...கேமெரா கை மாறியது:(
தமிழ்த்தாய் வாழ்த்துகளுடன்.....


மேடை நிகழ்ச்சிகளைப் பற்றி நிறையப்பேர் எழுதிட்டாங்க. அதனால்  இங்கே நான் எழுதலைப்பா.


நிகழ்ச்சி நிரலைப் பார்த்துக்கோங்க.

வசந்த மண்டபம் வலைப்பூவின் அதிபர், மகேந்திரன், ரொம்பவும் அருமையா நிகழ்ச்சிகளைத் தொகுத்து சுவைபட அருமைத் தமிழில்  வழங்கிக்கிட்டே இருந்தார்  முன்பாதி வரை.

எனக்கான  ரெண்டு வரிகளைப் பேசிட்டு பக்கத்தில் இருந்த மதுரை சரவணனிடம் சொல்லிட்டு, நைஸா மேடையை விட்டுக் கீழேவந்துட்டேன்.  கையிலே கேமரா இல்லாம  நடுக்கம் வர ஆரம்பிச்சதே காரணம்:-)))
அதுக்குள்ளே பேசி முடிச்சுட்டீங்களா?  இனிமேல் பேச்சில்லையா? ன்னார் நம்ம தமிழ் இளங்கோ:-)

சுமார் பதினொன்னரைக்கு ஜில்லுன்னு  ஜிகர்தண்டா வந்தது!  என்ன ஆனாலும் சரி (!)ன்னு  குடிச்சுட்டேன்:-)

மேடையில் பதிவர்களின் சுய அறிமுகம் நடந்துக்கிட்டு இருக்கும்போது , திண்டுக்கல் தனபாலன் இன்னொருவருடன் வந்து 'உங்களை  தினமலர் நிருபர்  பேட்டி எடுக்கணுங்கறார்' என்றார்.  ஓ... இலவச விளம்பரமா?  எழுந்து வெளியே  வந்தேன்.  சிலபல கேள்விகளைக் காட்டு அதுக்குண்டான பதில்களும் ஆச்சு. 'ஃபொட்டாகிராஃபர் வெளியெ போயிருக்கார்.  அவர் திரும்பி வந்ததும் ப்ளீஸ், இன்னொருக்கா வந்துட்டுப்போங்க மேடம் . எதுக்கும்  நானே சில படங்களை எடுத்துக்கறேன்'னு  செல்ஃபோனில் க்ளிக்கினார்.  நாம் சும்மா இருக்கலாகுமோ? பதிலுக்கு நானும் அவரைக் க்ளிக்கி வச்சேன்:-)
நிருபர்:-)

முக்காமணி போல ஆனதும், நிருபர் வந்து  மீண்டும் அழைத்துப்போனார். ஃபொட்டாக்ராஃபர் வந்துட்டாராம்.  இந்தப் பக்கம் பாருங்க, அந்தப் பக்கம் பாருங்க.  உங்க புத்தகத்தோடு போஸ் கொடுங்க.  என்ன..... கைவசம் இல்லையா? பரவாயில்லை, இதோ இந்த மேஜையில் இருக்கும் புத்தகம் ஒன்னை எடுத்துக் கையில் வச்சுக்கிட்டு  அதை வாசிப்பது போல் போஸ் கொடுங்க. (அதானே...அறிவு ஜீவிக்கான  போஸ் வேணும் இல்லையோ!!!!)  இப்படி ஒரு அஞ்சு  நிமிசம் ஆட்டி வச்சாங்க. 

அப்புறம் தினமலரில்  வந்த படத்தில் என் 'தலை' இருந்தது:-))))


மதியம் ஒன்னேகாலுக்கு  உணவு இடைவேளை. முதல் பந்தியில் இடமில்லை. அதுக்காக..?  மெனு என்னன்னு கேட்டு, நமக்காகக் காத்திருக்கும் ஐட்டங்களைக் க்ளிக்கினேன். 'கடல் பயணங்கள்' சுரேஷ்குமார்  வந்து சேர்ந்துக்கிட்டார்.  அஸ்ட்ராலியா வரை வந்தவர் அடுத்த வீட்டுக்கு  வரலையேன்னு   ஒரு அழைப்பைத் தந்தோம். துளசிவிலாஸ் சாப்பாட்டை அவர் பதிவுக்கு மேட்டர் ஆக்கலாமேன்னு:-)


ரெண்டாம் பந்தியில் இடம் கிடைச்சது. வயிற்றுக்குக் கேடு செய்யாத  உணவு, வீட்டுச் சாப்பாடு போல.   சௌராஷ்ட்ரா சமையலாம். நம்ம ஜி எம் பி ஐயாவின் குடும்பத்தினர்  நம்ம பக்கத்து இலைகளில். மதுரைக்கு நேற்றே வந்தவங்க, இப்போ சாப்பாடு ஆனதும் சென்னைக்குத் திரும்பறாங்களாம். நாளை (திங்கள்) மகன் அலுவலகம் போகணுமே!  ஒரு வாரம் முன்பு  சிங்கத்தை, அதன் குகையில் சந்திச்சதெல்லாம் பயணப்பதிவில் வரும். இப்போ ஜஸ்ட் மதுரை மாநாட்டுக்குத்தான்  முன்னுரிமை. சம்பவம் நடந்து ஏற்கெனவே நாலு வாரம் கடந்து போச்சு. லேட்டாத்தான் எழுதறேன். லேட்டஸ்ட்டா இருக்கட்டுமே:-)

மூணாம் பந்திக்கு மக்கள்ஸ் வர ஆரம்பிச்சாங்க. எப்படியும் அரைமணியாவது ஆகும். ஹொட்டேல் அறைக்குப் போய் வந்தோம். ஹாலில் சுகாதார வசதிகள்  போதாது.

மாநாட்டின் இரண்டாம் பகுதி நிகழ்வாக, ஒரு குறும்படம் வெளியீடும் திரையிடலும்.  நம்ம பாலகணேஷ் வந்து,  நம்ம கோபால், படத்தின் குறுந்தகட்டை வெளியிடணுமுன்னு  கேட்டுக்கிட்டார். வேண்டாமேன்னு மறுத்தவரை  அதெல்லாம் முடியாது.  நீங்க வெளியிடணுமுன்னு  வற்புறுத்தினதும்,  தயங்குனவரை,  நீங்கதான் நம்மூட்டில் சதா நாளைய இயக்குனர், சினிமா எல்லாம் பார்க்கிறவர்.  பொருத்தமான நபரை, பாலகணேஷ்  பிடிச்சுட்டாருன்னேன்:-)
என்னத்தை தேடுறாங்க????

இடதுபக்கம் மூலை திண்டுக்கல் தனபாலன், குடந்தை சரவணன், கோபால், தமிழன் கோவிந்தராஜ்,  பாலகணேஷ், மதுரை சரவணன்.

பிற்பகல் நிகழ்வுகளை மிகவும் அழகாக நடத்திக்கொண்டு போனவர் நம்ம 'தீபா' நாகராணி. குடந்தை சரவணனின்  'சிலநொடி சிநேகம்' பார்த்தோம். சிறப்புரை வழங்கினார்  எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன். முக்கால்மணி நேரப்பேச்சு.
நிஜமா? நியூஸியில் இருந்தா வந்தீங்க???? (தீபா நாகராணி)


அதன்பின்  பதிவர்களின் நூல் வெளியீடு.

கரந்தை  மாமனிதர்கள் : கரந்தை ஜெயக்குமார்
ஒரு கோப்பை மனிதம் :  'தென்றல்' மு.கீதா
துளிர்விடும் விதைகள் :  'தேன் மதுரத் தமிழ்'  கிரேஸ்
நல்லா எழுதுங்க, நல்லதையே எழுதுங்க : 'சட்டப்பார்வை'  ஜெயராஜன்.

நாலரை மணி போல  சுடச்சுட வடையும் டீயும் விநியோகம் ஆச்சு.  அப்பாடா..... வலைப்பதிவர் சந்திப்பின்  உயிர்நாடி  நம்ம வடையல்லவோ!  (போண்டா இல்லாத பதிவர் சந்திப்பு சாத்தியமே!)

இதில்  நம்ம  சட்டப்பார்வை ஜெயராஜனின் பதிப்பாளர்  திருமதி  காஞ்சனமாலா அவர்கள், புத்தகத்தை வெளியிட, முதல் பிரதியை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.'நல்லா எழுதுங்க, நல்லதையே எழுதுங்க என்பதுடன் நல்லாவும் பதிவுகளை வாசிங்க. தற்சமயம் பதினோராயிரத்துக்கும் மேற்பட்டு பதிவுகள் வருகின்றன. கூடியவரை வாசியுங்க.  வாசிப்பதோடு நின்னுடாமல்  நல்லா இருக்குன்னு நீங்க நினைக்கும் பதிவுகளுக்குப் பின்னூட்டம் ஒன்றையும் தட்டி விடுங்க. பதிவருக்கு பின்னூட்டமே  ஊக்கம் தரும். மேலும் நல்லா எழுதத்தூண்டுவதும் அதே'ன்னு 'என் ரெண்டு பைஸா'வையும் சொல்லி வச்சேன்.

நன்றி உரை நவில, நம்ம திண்டுக்கல் தனபாலன் மைக் பிடிக்கும்போது  மணி சரியா அஞ்சு, ஆறு. உரைக்குப்பின் தேசிய கீதத்துடன் மாநாடு இனிதே முடிஞ்சது.

பொறுப்பாளர்கள் தமிழ்வாசி பிரகாஷ், தமிழன் கோவிந்தராஜ், திண்டுக்கல் தனபாலன்  மற்றும் நம்ம தலைவர் சீனா ஐயா  எல்லோரும்  பம்பரம் போல் சுத்திப் பரபரன்னு இருந்தாங்க.  ஒரு திருமணம் நடத்தி முடிக்கும் அளவு பொறுப்பும் வேலைகளும்.  அதிலும் பொண்ணு வீட்டுக்காரங்க நிலையில்தான் இருந்தாங்க. யார் மனசும் நோகாமல் நடத்துவது சும்மா இல்லையாக்கும், கேட்டோ!

அனைத்தையும் கவனிச்சு வெற்றிகரமா ஒரு திருவிழாவை நடத்திய இவர்களுக்கு  என் அன்பும் ஆசிகளும்!

PIN குறிப்பு :  இன்னும் கொஞ்சம் படங்களை அடுத்து வரும் பதிவுகளில் படப்பதிவாகப் போட்டு  வைக்கப் போறேன்.  மேடையில்  சுய அறிமுகம் செஞ்சுக்கிட்டவங்களில் பலரின் பெயர்கள் நினைவில் இல்லை. அதனால் ஜஸ்ட் படங்கள் மட்டும்தான்.