காலையில் விடுதலைப் பத்திரம் வந்துருச்சு......
அனுபவங்களால் நிறைந்ததே வாழ்க்கை! வாழ்க்கை முழுசும் அனுபவம் அனுபவம்னு அடிச்சுக்குவேனே.... அதுலே ஒன்னு இதோ..... நானும் வர்றேன்... என்னையும் அனுபவிச்சுக்கோன்னு சொல்லி இருக்கு! எனக்குத்தான் காதுலே விழலை !
இந்தக் கொரோனா.... ஊருலகம் எல்லாம் அடிச்சு ஆடிக்கிட்டு இருந்துச்சு பாருங்க..... அப்பதான் விவரம் ஒன்னுமே தெரியாம 2019 ஆம் வருஷம் டிசம்பர் மாசம் பகல் பத்தரைக்கு, இந்தியப்பயணம் முடிச்சு, இங்கே நியூஸிக்கு வந்து இறங்கினோம். எங்களோடு ஒரு விவிவிவிஐபியும் நியூஸிக்கு வந்துருந்தார். 'துல்சி, நியூஸியில் வேற யாரிடமும் இருக்கப்போறதில்லை.... உன்கூடவேதான்'ன்னுட்டார் ! மறுநாள் புதுவருஷம் 2020 பிறந்ததும் இவரை பிரதிஷ்டை பண்ணினதும் மனசெல்லாம் ஒரே பூரிப்பா இருந்தது !
இனி ரொம்ப நாளைக்குப் பயணம் என்ற சொல்கூட நம்ம வாழ்க்கையில் இருக்காதுன்றது அப்போ எங்களுக்குத் தெரியாது....
மார்ச் மாசம் யுகாதிப் பண்டிகை வந்தன்னைக்குத்தான் நியூஸியிலும் கோவிட் தன்னுடைய வேலையைக் காமிக்க ஆரம்பிச்சதுன்னு நாடு முழுக்க லாக்டௌன் ஆரம்பமாச்சு. இத்தனை அமர்க்களத்திலும் நியூஸியின் வடக்குத்தீவில் மட்டுமே ஆட்டம். எங்க தெற்குத்தீவுப் பக்கம் தலையை நீட்டலை. எங்களுக்கு இது மனசமாதானமாக இருந்தாலும்.... லாக்டௌன் மற்ற அரசு சொல்லும் நியமங்கள் எல்லாத்துக்கும் நாங்களும் கீழ்ப்படிஞ்சு நல்ல குடிமக்களாகவே இருந்தோம்.
2020, 2021 ன்னு ரெண்டு வருஷம் பூராவும் கீழ்ப்படிஞ்சு படிஞ்சே தரையோடு தரையாக் கிடந்தோம். இதுக்கிடையில் அண்டை நாட்டுலே இருந்த எங்க மக்களும் பார்டர் தாண்டி வர ஆரம்பிச்சுருந்தாங்க.ஆனால் எல்லாம் வடக்குத்தீவுக்குத்தான். இப்படி வந்த ஒருத்தர் கோவிடின் புள்ளை, பேரனையும் கையோடு கூட்டி வந்துருக்கார்! அப்போ யாருக்கும் தெரியலை. அவருடைய வேண்டாத லக்கேஜ் வடக்குத்தீவு முழுசும் பரவி, கோவிடுக்குக் கொள்ளுப்பேரன் கூட பொறந்துட்டான்.
வடக்கில் மட்டும் கோவிட் குடும்பம் வாழறது சிலபலருக்குப் பொறுக்கலை. எப்படி தெற்குத்தீவு மக்கள் மட்டும் நிம்மதியா இருக்கலாம் ? எங்க சொந்தம் எல்லாம் அங்கே இருக்கு. ரெண்டு வருஷமாப் பார்க்கலை. ரெண்டு க்றிஸ்மஸ் பண்டிகைகூடப் போயிருச்சு. இனியும் பார்க்காம இருக்க முடியாது..... எங்கள் சொந்தங்களைப் பார்த்தே ஆகணுமுன்னு 'அடம்' பிடிச்சு, அரசை நச்சரிச்சு, நச்சரிச்சு 2022 ஜனவரி 23 முதல் வந்து போக அனுமதி வாங்கிட்டாங்க. ஹாலிடேன்னு வந்தவங்க , தெற்குத்தீவு முழுக்கப் பரவலாப் பயணம் வேற !
இவுங்க பங்குக்குக் கொள்ளுப்பேரனைக் கூட்டிவந்து எங்க தீவில் விட்டுட்டாங்க. காணாததைக் கண்டமாதிரி இவன் இங்கே ஆட்டம் போட ஆரம்பிச்சுட்டான். பரபரன்னு எண்ணிக்கை கூடிக்கிட்டே போகுது..... கோவிட் வடக்குத்தீவில் இருந்த காலத்தில் ரெட்டை இலக்கத்தில் தினமும் ஏறிக்கிட்டுப்போன எண்ணிக்கை, இந்த ஓமிக்ரோன் காலத்தில் நாலு இலக்கத்தில் ஆரம்பிச்சு இப்போ அஞ்சிலகத்தில் போய்க்கிட்டு இருக்கு. இதில் முதல் இடம் நம்ம ஊருக்குதான்.
கோவிட் தடுப்பூசி போட்டுக்கச் சொல்லி அரசு ஏற்பாடு செஞ்சதும் நாங்க சுமார் 65 % மக்கள் முதல் ஊசி, அதுக்கடுத்த மூணாவது வாரத்தில் ரெண்டாம் ஊசி போட்டுக்கிட்டோம். அப்புறம் ஒரு ஆறு மாசம் ஆனதும் பூஸ்டர் ஊசி எல்லாமும் ஆச்சு. தோராயமாக் கணக்குப் பார்த்தால் மக்கள் தொகையில் 90% மக்கள் ஊசிகள் போட்டுக்கிட்டாங்க. இதிலும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை இருக்கும் மக்கள், தடுப்பூசிக்கு எதிர்ப்பு காமிச்சுக்கிட்டு இருக்காங்க. தடுப்பூசி போட்டுக்காதவங்களை வேலையில் இருந்து எடுத்துருவோமுன்னு அரசு நடவடிக்கை எடுத்தது சரியில்லையாம். ஆனால் இவுங்க மூலம் மற்றவர்களுக்கு நோய் பரவுதல் சரியான்னு கேட்கணும்..... ப்ச்.....
கூட்டங்கூடிக்கிட்டு ஊர்வலம் போறதும், தலைநகரில் பாராளுமன்றத்துக்கு முன் கூடாரம் போட்டுத் தங்கிக்கிட்டும் வழி பிரதமர் வண்டிவரும்போது வழி விடாமல் கூச்சல் போட்டுக்கிட்டும் இருந்ததால் அவுங்களை கலைஞ்சு போகச் சொல்லி, அப்படியும் மூணு வாரமாச்சு இடத்தைக் காலி பண்ண. கடைசியில் எங்கூருக்கும் வந்து இருக்கும் நாலு சதுக்கங்களில் ஒரு சதுக்கத்தைப் பிடிச்சுக்கிட்டுக் கூடாரம் போட்டுக் குழந்தைகுட்டிகளுடன் சுமார் நாலு வாரம் தங்கி இரு23333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333ந்து
தங்கியிருந்து புல்வெளியை எல்லாம் நாசம் பண்ணிட்டுப் போயிருக்காங்க. எங்க சிட்டிக் கவுன்ஸில் புல்வெளியைச் சரியாக்கப்போகுது. இதுக்கு நிறைய செலவாகும்னு ஒரு கணக்கு சொல்றாங்க. இங்கத்துப் போலிஸும் ச்சும்மா நிக்குமே தவிர நம்மூர்ப்போலிஸ் வேலையெல்லாம் காட்டாது. மேலிடத்து உத்தரவின்படி , ஒரு நாள் சொல்லி அதுக்குள்ளே கலைஞ்சு போங்கன்னு சொல்லும்.
நம்ம தீவுக்கு ஓமிக்ரான் வந்துட்டானேன்னு ஒரே கவலை எங்களுக்கு. முந்திபோல ஊர் முழுக்கக் கோவிட் டெஸ்ட்டிங் ஸ்டேஷன்ஸ் வைக்காமல் எண்ணிக்கையைக் குறைச்சுட்டு, எலிப்பரிசோதனையை வீட்டுலேயே செஞ்சுக்கச் சொல்லுது அரசு. RAT Rapid Antigen Test. எலிக்குட்டிப் பரிசோதனைன்னதும் எனக்கு ஒரு பதிவுலக நண்பர் நினைவுக்கு வந்தார். பழைய வலைஞர்களுக்கும் இதைப் படிக்கும்போது ஞாபகம் வரலாம். இப்ப இந்த உலகத்தில் இல்லை. சாமிக்கிட்டே போயிட்டார் :-(
எதாவது ஒன்னு வந்துருக்குன்னதும் அதைவச்சுக் கடைகளில் காசு பார்க்கும் வேகம் கூடிருதுல்லே ? இந்த எலி டப்பாவில் இருக்கும் பொருட்களை வச்சு அஞ்சு முறை சோதனை செஞ்சுக்கலாம். உடனே இது ஒரு சின்ன அட்டைப்பொட்டி அம்பது டாலர்னு மருந்துக்கடைகளில் மட்டும் கிடைச்சது. அப்புறம் இன்னொரு கடையில் முப்பதுக்குத் தரோம்னு சொன்னாங்க.
அரசு தருவிச்சு இலவச விநியோகம் செய்ய ஆரம்பிச்சது. நமக்கு, நம்ம யோகா வகுப்பில் ஆளுக்கொரு பொட்டின்னு கிடைச்சது. அப்புறம் மருத்துவ நண்பர் இன்னொரு பொட்டி கொண்டுவந்து கொடுத்தார்.
இதுக்குள்ளே பள்ளிக்கூடம் எல்லாம் திறந்துட்டாங்க. புள்ளைகளும் பள்ளிக்கூடத்துலே புடிச்சுக்கிட்டு வந்து வீட்டுக்குள் பரப்பிருச்சுங்க. நம்ம ஊர் முழுக்க இப்படியே.....
ட்ராஃபிக் லைட் சிஸ்டமுன்னு ஆரம்பிச்சு முதலில் நாடு முழுசும் ரெட் சிக்னல். எங்கே போனாலும் வாய் மூக்கு மூடி போட்டுக்கணும். நூறு பேருக்கு மேல் கூட்டம் கூடாது. எல்லா இடத்துலேயும் வாக்ஸீன் போட்டுக்கிட்ட பாஸ்(போர்ட்) காமிச்சால்தான் உள்ளே அனுமதின்னு..... அரசு சொல்படி கோவில், சத்சங்கம், சநாதன் தர்ம சபா பூஜைகள் எல்லாம் மூடறதும் திறக்கறதுமா ..... தப்பித்தவறி திறந்துருக்கும் சமயம் ஒரு பூஜைக்குப் போகலாமுன்னா 'நம்மவர்' போடும் தனிச் சட்டத்துக்குப் பேசாம வீட்டுலேயே இருந்துடலாமுன்னு தோணிப்போகும். அங்கே போனால் யாருகூடயும் ஒட்டாமல் தனியாத் தள்ளி உக்காரணும். எப்பவும் வாய் மூடி கழட்டக்கூடாது. தோழிகளைக் கட்டிப்பிடிக்கக்கூடாது. ஏம்ப்பா.... ஆசையா ஓடிவரும் பிள்ளைகளைக் கிட்டே வராதேன்னு விரட்ட முடியுமா ?
கடைசியில் என்ன ஆச்சு தெரியுமோ ? ஸ்ரீ ராமநவமி பூஜைகள் மூணு இடத்துக்குப்போய் வந்த ரெண்டாம் நாள் சாயங்காலம், இவருக்குக் காய்ச்சல். ரொம்ப லேசாத்தான். நார்மலைவிட பாய்ண்ட் 8 டிகிரி கூடுதல். ஒரு பனடால் போட்டுக்கச் சொன்னேன். ஜூரம் விட்டது.
பொழுது விடிஞ்சதும், நம்மாண்டை இருக்கும் பொட்டிகளில் ஒன்னைத் திறந்து பரிசோதனை செஞ்சுக்கிட்டவர்.... பாஸிடிவ்னு கொணாந்து காமிச்சார். உடனே கிளம்பி டெஸ்டிங் ஸ்டேஷன் போனார். அங்கே உறுதி செஞ்சாங்க. அப்படியே சுகாதார இலாகா கோவிட் பிரிவுக்குச் செய்தி அனுப்பிச்சுட்டாங்க. என்ன செய்யணும், எது கூடாதுன்றதுக்கு அச்சடிச்ச ஒரு தகவல் நோட்டீஸ். இன்னும் ரெண்டு பொட்டி எலிகள். பாஸிடிவ்னு தெரிஞ்சுபோச்சுல்லே.... இனி ஏழாம்நாள் எலிப்பரிசோதனை போதுமாம்.
ஏழுநாட்கள் தனிமைப்படுத்திக்கணும். அது பிரச்சனை இல்லை. ஆனால் வீட்டுலே இருக்கறவங்களும் தனிமைப்படுத்திக்கணுமாம். எள்ளுதான் எண்ணெய்க்குக் காயுது..... எலிப்புழுக்கை ஏன் காயணுமாம் ? ரஜ்ஜுவை விட்டுட்டாங்க. நம்ம குடும்ப மருத்துவரிடமிருந்து ஃபோன் வருது, நான் எப்படி இருக்கேன்னு ? ஏன்னா நம்ம உடல்நிலை இருக்கும் லக்ஷணம் தெரிஞ்சவங்க அவுங்க தானே ?
மூணாம் நாளும் ஏழாம் நாளும் நான் எலிப்பரிசோதனை செஞ்சுக்கணுமாம். தினம் தினம் டாக்டர் ஃபோன் பண்ணி விசாரிக்கறாங்க..... நல்ல வேளை குட் ஃப்ரைடே... ஈஸ்டர்னு நாலுநாட்கள் தொடர்விடுமுறை வந்ததால்..... விசாரிப்பு நின்னு போச்சு......
தனிமைப்படுத்திக்கறேன்னு ஃபைவ் ஸ்டார் ரூமுக்குள்ளே போயிட்டார். அவர் அவருக்கு குடிக்க, தின்னன்னு எதாவது கொண்டுபோய் வாசலில் வச்சுட்டு வரணும். பாஸிடிவ்காரர் மட்டுமில்லாமல் நெகடிவ்காரரும் N95 Mask போட்டுக்கணும். ஃபேஸ்புக்கில் சமாச்சாரத்தைப் போட்டுவிட்டேன். மற்ற உள்ளூர் நண்பர்கள், உதவி வேணுமான்னு கேட்டுக்கிட்டே இருந்தாங்க. வெளியூர், வெளிநாட்டு நண்பர்கள் எல்லோரும் கவலையைத் தெரிவிச்சு எனக்குத் தைரியம் சொன்னாங்க. அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை இத்துடன் தெரிவிச்சுக்கறேன்.
ஆச்சு மூணாம் நாள். என்னோட எலி, எனக்கொன்னுமில்லைன்னு சொல்லிருச்சு. ஒரு கோடு இருந்தால் இல்லை. ரெண்டு கோடுகள் இருந்தால் இருக்கு. சிம்பிள் !
இதுக்கெல்லாம் தனியா மருந்து மாத்திரைன்னு ஒன்னும் இல்லை. தலைவலி, உடல்வலிக்கு பனடால். இருமல் வந்தா அதுக்கொரு இருமல் ஸிரப். வைரஸ் என்பதால்.... எப்படி உள்ளே வந்துச்சோ... அப்படியே வெளியே ஓசைப்படாமப் போயிருமாம். உடலுக்குள் நுழைஞ்சவுடன் வீரியம் காமிச்சு அடுத்தவங்களுக்கு தொற்று பரவ அல்லாடுமாம். ஏழாம் நாள் பொட்டிப்பாம்பு.
எல்லா வேலைகளும் செஞ்சு செஞ்சு எனக்குக் களைப்பாப் போயிருச்சு. கைவேற சரியில்லையே.... அதுபாட்டுக்கு விடாம வலிக்குது. ரூம் ஸர்வீஸ் ஒரு கட்டத்துலே அலுத்துப் போயிருதுப்பா.... முப்பத்தியஞ்சு முறை.... ஒரே ஒரு நல்லதுன்னா..... வீட்டு ஸிட்டிங் ரூம் டிவி வாயையும் கண்ணையும் மூடிக்கிட்டதுதான். தொண தொணன்னு அதுபாட்டுக்குக் கத்திக்கிட்டே இருக்கும் எப்பவும். நம்ம ரஜ்ஜுவுக்குத்தான் வீடு சைலண்ட் ஆனது ஏன்னு தெரியலை.... சுத்திச் சுத்தி வர்றான். தகப்பனைப் பார்க்க முடியலை. என்ன ஆச்சும்மா? என்ன ஆச்சு..... ஏம்மா நீ கத்திச்சண்டை கூடப் போடாம இருக்கே.... 24 மணிநேரமும் வீடே கதின்னு வேற.... ப்ச்....
வீக் எண்ட் வேற.... அதுவும் லாங்க் வீக் எண்ட். நிறைய விசேஷங்களில் பங்கெடுக்கணுமுன்னு இருந்தேன். ஒரு நிச்சயதார்த்தம், ஒரு ஸ்வீட் சிக்ஸ்ட்டீன் பொறந்தநாள், நம்ம புள்ளையார் கோவில் சத்சங்கத்தில் வருஷப்பிறப்பு விழா, நம்ம ஆஞ்சியின் பொறந்தநாளான ஸ்ரீ ஹனுமத் ஜயந்தி, சனிக்கிழமை போகும் ஹரே க்ருஷ்ணா கோவில் விஸிட், நம்ம தமிழ்ச்சங்கத்தில் வருஷப்பிறப்பு விழான்னு..... எதுலேயுமே கலந்துக்க முடியலை.
ஆச்சு நேத்து ஏழாம்நாள். அரசு செய்தி அனுப்புச்சு.... விடுதலை...விடுதலை விடுதலை.....
எனக்கு மட்டும் எலிப்பரிசோதனை. ஒத்தைக்கோடைக் காமிச்சது.....
நாம் ரெண்டு தடுப்பூசி, ஒரு பூஸ்டர் எல்லாம் போட்டுக்கிட்டதால் அவ்வளவா பாதிப்பு ஒன்னும் இல்லாமத் தலைக்கு வந்தது, தொப்பியோடு போச்சுன்றதே உண்மை!
என்ன ஒன்னு..... இது திரும்பியும் வர்ற சான்ஸ் இருக்காம். ஓமிக்ரோனோட வாரிசுகள் ஏற்கெனவே வெளியே வந்து உலாத்த ஆரம்பிச்சுருக்கே.... கொஞ்சம் படிச்ச வைரஸ்கள் போல! பெயரெல்லாம் BA 1, BA 2 ன்னு வச்சுருக்குகள்.
ஊர் உலகமெல்லாம் நோயில் வாட, அதை உண்டாக்கியவனே.... அதைக் கண்டுபிடிக்கவும் தேவையானவைகளைத் தயாரிச்சு இதே ஊருலகமெல்லாம் அனுப்பி நல்ல காசு பார்த்துக்கிட்டு இருக்கற அக்ரமம் இந்த பூவுலகைத் தவிற வேறெங்கும் இருக்காது....
என்னவோ போங்க......
PIN குறிப்பு: இந்தப் பதிவில் ஒரு விசேஷம் இருக்கு. நம்ம ரஜ்ஜுவும் நாட்டுநடப்பைக் கொஞ்சம் எழுதியிருக்கு, பாருங்க. :-)