Wednesday, April 06, 2022

பாலும் பனியும் :-)

கார்த்திகை தீபம் முடிஞ்சதுன்னா....  அடுத்த பண்டிகை வருஷக்கடைசியில் வைகுண்ட ஏகாதசிதான். திதி அனுசரித்து வர்றதால் சிலசமயம் ஜனவரியிலும் வரும். எப்படியும் மார்கழி மாசம்,   போகி பண்டிகைவரை இருக்குத்தானே!  இந்த வருஷம் என்னவோ  டிசம்பர் 14 ஆம் தேதியே ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசியாம்.  எப்படி? இன்னும் கார்த்திகையே முடியலை....  பத்தொன்பது வருஷத்துக்கொருக்கா இப்படி  வருமாம்.  ஆங்...  இருந்துட்டுப் போகட்டும். நமக்கு மார்கழி பொறந்தாட்டு வர்றதுதான் கணக்கு.  அதென்னவோ போகியன்னிக்கு வருது.  வரட்டும்....  நாம்  இந்த 2021 ஆம் வருஷத்துக்குக் கடைசிப் பண்டிகையான க்றிஸ்மஸ்ஸைப் பார்க்கலாம்.
இங்கே நியூஸிக்கு  வந்ததில் இருந்து கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் பங்கெடுப்பது வழக்கமா ஆகிருச்சு. ஊரோடு ஒத்து வாழும் வகையில் இதுவும் ஒன்னு.  
நாங்க இங்கே வந்த புதுசில்  க்றிஸ்மஸ் பண்டிகைக்கு முதல்நாள் ராத்ரி ஒரு பத்தரை மணிபோல் கிளம்பி நகர்வலம் போவோம். நமக்கு அப்போ கோடைகாலம் இல்லையோ !  ஆனாலும் ஒரு ஸ்வெட்டர், ஜாக்கெட் இல்லாமப் போக முடியாது. கோடைன்னு சொல்லிக்கும் குளிர்தான் அப்பவும்.  நகரில்  விளக்கு அலங்காரம் அங்கங்கே இருக்கும். வேடிக்கை பார்த்துட்டு அப்படியே நம்ம கதீட்ரலுக்கும் போய்  அங்கே நடக்கும் கேரல்ஸ் சர்வீஸில் கலந்துக்குவோம். க்றிஸ்துவப்பள்ளியில் படிச்சதால் ( அங்கே நான் கொயர் மெம்பர் வேற )அந்தப் பாட்டுகள் எல்லாம் தெரிஞ்சபாட்டுகளே!  பக்கத்தில் நிக்கும் 'நம்மவருக்கு' ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பேன்.  'எல்லாம்  எப்படிம்மா மறக்காம நினைவு வச்சுருக்கே !'    .... ஹாஹா... யானை யானை ....

க்றிஸ்மஸ் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள்  அங்கங்கே நடக்கும். முக்கியமா கேரல் சர்வீஸ். நம்ம கேரளா சங்கத்தில் 99% அங்கத்தினர் க்றிஸ்துவமதத்தினர் என்பதால் ஒரு குழுவாகச் சேர்ந்து க்றிஸ்மஸ் கேரல்ஸ்களை வீடுகளுக்கு வந்து பாடுவார்கள். நம்ம வீடும் உண்டு. கோவிட் காரணம் கடந்த ரெண்டு வருஷங்களா இது நடக்கலை. 
போதாக்குறைக்கு 2011 வருஷம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில்  ஊரின் நடுநாயகமா இருந்த கதீட்ரல் வேற இடிஞ்சு போய்க்கிடக்குது. இதுவரை ஒன்னும் சரிப்படுத்தலை.   எங்க ஊருக்குப் பெயரே இந்த சர்ச்சை வச்சுத்தான் என்பதால்... இனி ஊரின் பெயரை மாத்திருவாங்கன்னு நினைக்கிறேன் :-)  

ஒரு ஜப்பான் கட்டடக்கலைநிபுணர் முன்வந்து கார்ட்போர்டு சர்ச் ஒன்னு கட்டிக்கொடுத்தார். இதை இப்போ டூரிஸ்ட் அட்ராக்‌ஷனா ஆக்கிட்டாங்க. அட்டைக்கோவில். ப்ச்....  
அட்டைக்கோவில் விவரம் இங்கே இந்தச் சுட்டியில்!

http://thulasidhalam.blogspot.com/2012/05/blog-post_17.html


இங்கே டிசம்பர் ஒன்னாம் தேதிமுதல் வீட்டை அலங்கரிப்பது தொடங்கும். அதுவும் ரொம்ப  ஒழுங்கா ஞாயிறுகளில் சர்ச்சுக்குப் போற மக்கள் வீடுகளில்தான். குறைஞ்சபட்சம் ஒரு க்றிஸ்மஸ் மரத்தை அலங்கரிப்பாங்க.  ஒரிஜினல் மரம் கொண்டு வந்து அலங்கரிக்கிறதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாப்போய் இப்போ செயற்கை மரம் வீட்டுக்குள் வந்துருச்சு.  வீடுகள்தான் இப்படி.... ஆனால்  கடைகள், மற்ற வியாபார நிறுவனங்கள் எல்லாம் சம்ப்ரதாயப்படி ஒரு (செயற்கை)மரத்தை அலங்கரிச்சு வச்சுருவாங்க.  இதுலே மால்களைக் கேக்கவே வேணாம்.... தரைக்கும் கூரைக்குமாய்  மொத்த அலங்காரமும் அங்கேதான்.  சாண்ட்டா க்ளாஸ் வேற அங்கே இருப்பார். பிள்ளைகளைக் கூட்டிவந்து படம் எடுத்துக்குவாங்க பல பெற்றோர்.  ஃபொட்டோக்ராஃபர் வேற கூடவே இருப்பாங்க. நல்ல வியாபாரம் ! அதுவும் டிஜிட்டல் ஃபோட்டோ காலம் வந்த பிறகு கையிலே காசு வாயிலே உடனடியாத் தோசை !

இப்போதைய இளைய தலைமுறைக்கு மதமே வேணாமாம்.  சாமியே இல்லைன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. போகட்டும்.....  நல்லா இருங்க.  சாமின்றது ஒரு உணர்வுதான்.  அது எப்பவேணுமுன்னாலும் வரும். தானே வர்றபோது வரட்டுமே!  'ஐ டோண்ட் பிலீவ் இன் Gகாட் ' ன்னு சொல்லிக்கிட்டால் அறிவு ஜீவிகள் !

டிசம்பர்  ஒன்னாம்தேதி....   நானும்  வீட்டலங்காரமுன்னு சின்னதா ஒரு ரீத் வாசல் விளக்குலே தொங்க விடுவேன். அது புதுவருஷம் மூணு தேதிவரை அங்கே இருக்கும். நம்மூட்டு ஃபோயரில் ஒரு இடம் அலங்காரத்துக்குன்னே நேர்ந்து விட்டுருப்பதால்  அங்கேதான் எல்லாமும்.  சாண்ட்டா'ஸ்  ஒர்க்‌ஷாப் &  ஹௌஸ்னு வருஷாவருஷம் செய்யும்  அலங்காரப் பொருட்களையெல்லாம் பத்திரமா எடுத்து வச்சுருவேன். அதையே கொஞ்சம் இப்படி அப்படின்னு மாத்திச் செஞ்சுட்டால் ஆச்சு.   

இப்போ அலங்காரப்பித்து வேற வந்துருக்கே...  அதனால்  வேற மாதிரி அலங்கரிக்கணும்.  ஒரு சர்ச் வீட்டுலே இருக்கேன்னு அதையெடுத்தேன்.  மாடியும் கீழுமா டபுள் டெக் அலங்காரம்  செய்யணும். ஒரு மாதிரி செட் ஆகிருச்சுன்னாலும்....  மாடிப்படி இல்லாதது ஒரு குறையா இருக்கு.  மரப்பலகைகளை வச்சுப் படி கட்டித்தரேன்னார் 'நம்மவர்'.  எப்படி ? கொலுப்படி கட்டிவிடறது மாதிரியா ? குட்டிக்குட்டிப்பலகைகள் அறுத்தெடுப்பது கஷ்டமில்லையோ ?  Tool Man மாதிரி ஏகப்பட்ட மெஷின்களை வாங்கி வச்சுருக்காரே... அதுலே வெட்டித் தருவாராம். ஸர்க்குலர் சா......   ஐயோ... 

எனக்கு ஏதாவது ஐடியா  வேணுமுன்னா எங்கூர்  ECO SHOP போவேன். அங்கிருக்கும் பொருட்களைப் பார்த்தால் ஏதாவது ஐடியா கிடைச்சுரும்.  அடுத்து நம்ம வீட்டில் ஏதாவது தேறுமா இல்லை இங்கே எதாவது வாங்கலாமான்னு  மனசுக்குள் ஒரு விவாதம் நடத்திக்கணும்.  அன்றைக்குப் போனப்ப பழைய காலத்தில்  சுவரில்   துணிகள் மாட்டும்  கோட் ஸ்டேன்ட் கண்ணில் ஆப்ட்டது.  டைமண்ட் வடிவில் குறுக்கும் நெடுக்குமாப் போகும் கட்டைகள் படிக்குச் சரியாக இருக்குமுன்னு சொன்னார் நம்மவர்.  வாங்கியாச்.



வீட்டுக்கு வந்து  அந்தக் கட்டைகளைப் பிரித்தெடுக்கும் போது, கோட் மாட்டும்  மரக்குச்சிகள் (Wooden Pegs)இன்னொரு ஐடியாக் கொடுத்துச்சு. சின்ன மனுஷன் மாதிரி இருக்குல்லே ?  கண், வாய் வச்சுப் பார்த்தால்  ஆஹா.....   காகித இறக்கைகள்  ஒட்டுனதும்  ....    ஹா... அல்லேலூயா.... அல்லேலூயா.....
அப்பப் படிக்கட்டு ?  அட்டையில் செஞ்சுட்டேன். பிரிச்செடுத்தக் கட்டைகள்? இருக்கட்டும் வேறெதாவது தோணும்போது பார்க்கலாம் :-)




பரபரன்னு வேலைகள் ஆச்சு. ஸாண்ட்டா வீட்டுக்கூரையில் பனி விழுந்துருக்கு :-)   அடடா....    வீட்டு  அடையாளத்துக்கு  என்ன செய்யலாமுன்னு 'யோசிச்சுக் கூரையில் பெயரை எழுதியாச்.  மேலே இருந்து பார்த்தால் யார் வீடுன்னு தெரிஞ்சுரும். ஸாண்ட்டாவின்  லிட்டில் ஹெல்பெர்ஸ் , ஹெலிக்காப்டரில் வந்து  ஸாண்ட்டா வீட்டில் பரிசுகளைப் போட்டுட்டுப் போவாங்க. அவைகளைத்தான்  இவர் ரெயின்டீர் பூட்டுன வண்டியில் கொண்டுபோய் 'நல்ல பிள்ளைகள்' இருக்கும் வீட்டில் வச்சுட்டு வருவார் என்பது ஐதீகம். 


நமக்கு இங்கே சம்மர் க்றிஸ்மஸ்தான் எப்பவும். இந்த வருஷம்  Lapland in Finland ஆக இருக்கட்டும் :-)  எடு அந்த பனியை.... அட!  இது போன பொங்கலுக்குப் பொங்கிவந்த பால் இல்லையோ ?  ஆமாம். அப்போ பால். இப்போ பனி :-)




ஆமாம்.... அலங்காரம் சரியா வந்துருக்கா ? 


10 comments:

said...

//அலங்காரம் சரியா வந்துருக்கா ? // Excellent.

said...

அலங்காரம் அட்டகாசம் துளசிக்கா...அடி பொளியாணு!

வெரி க்ரியேட்டிவ்!

என்னோட சின்ன வயசு நினைவுகளும் கூடவே வருது. ஒரு சாமான் கூடத் தூக்கிப் போட மாட்டேன். ஏதாச்சும் செய்யலாம்னு வெல்த் ஃப்ரம் வேஸ்ட் நு வேற காலேஜ்ல செஞ்சுருக்கோம்ல! அடி பொளியான்னு அப்போ.

அதெல்லாம் ஓடுது மனசுல. விவேக் டயலாக் கூடவே!

ரொம்ப ரசித்தேன் உங்கள் கற்பனை கை வண்ணத்தை.

கீதா

said...

முதல் படமாக பள்ளி கொண்ட பெருமாள் தரிசனம்.

1970 களில் எங்கள் வீட்டில் கோட்ஸ்டேன்ட் இப்படித்தான் இருந்தது.  அதை வாங்கி பிரிச்சு விளையாடிட்டீங்க...   அலங்காரம் நல்லா வந்திருக்கு.

said...

அலங்காரம் சிறப்பாக இருக்கிறது. கொண்டாட்டங்கள் அனைத்தும் நன்று.

said...

'அலங்காரங்கள் சிறப்பு 'என ரஜ்ஜூ சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.
எங்கள் வீட்டில் நான்கு வயதாகும் பேரன் கிறிஸ்துமஸ் றீ அலங்காரங்கள் எங்களுடன் செய்தான். :)

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க கீதா,


குச் காம் கோ ஆயேகான்னு நிறைய சேர்ந்து போச்சு. எதையும் தூக்கிப்போட மனசே வர்றதில்லை :-)

said...

வாங்க ஸ்ரீராம்,

நன்றி !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

மிகவும் நன்றி !

said...

வாங்க மாதேவி,

குழந்தைகள் கைவண்ணம் இன்னும் சிறப்பு, இல்லையோ !!!!