Wednesday, April 17, 2019

மூக்கழகன்...... (பயணத்தொடர், பகுதி 93 )

பொதுவா இந்தியாவுக்கு வர்றதே கோவில்களுக்காகன்னு சொன்னால் நம்புங்க. இந்தக் 'கற்றது கை அளவு'ன்ற பழஞ்சொல் எல்லாம்   நம்ம இந்தியக் கோவில்களுக்கும் பொருந்தியே வருது.
நாஞ்சொல்றது.... சமீபத்திய மாடர்ன்  கோவில்களுக்கு மட்டும் இல்லை.... ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முந்திய கோவில்களே ஆயிரக்கணக்கில் இருக்கே! தினமும் எப்படியாவது ஒரு கோவில் போயிரணுமுன்னு ஒரு கணக்கு வச்சுக்கேன். அது முச்சந்திப் புள்ளையார் கோவிலானாலுஞ்சரி :-)

சௌத் ட்ரிப் முடிஞ்ச அலுப்புன்னு சொல்லிக்கிட்டாலும்....  சின்னதா 'தி நகர்' வலம் வேண்டித்தான் இருந்தது.  நாப்பதம்பதுலே முடிஞ்சுரும்.  கார் வேணாமுன்னு தோணுச்சு. இந்த சீனிவாசன்  கிடைக்காமப்போனதால்.....  கொஞ்சம் சுணக்கம் இருந்துக்கிட்டே இருக்கே....

நம்மவருக்குத் தைக்கக்கொடுத்த உடைகளை வாங்கிக்கிட்டு, நம்ம  டெய்லர் கடைக்குப்போய்  என்னோட துணிகளைத் தைக்கக்கொடுத்துட்டு,  வெங்கியைப் பார்க்கப்போனோம்.
'மலைத் தகப்பன்' தான் பகை. குட்டனுடன் ஒருமாதிரி நல்லுறவே இதுவரை.  இங்கேயும்  ஒரு குறிப்பிட்ட பட்டரின்  அராஜகம்  சகிக்கமுடியாததுன்னாலும்.....  நாம் உள்ளே கிட்டக்கப் போக வேண்டியதில்லை.  வாசலாண்டை நின்னாலும்  காட்சி கொடுத்துருவான். பளிச்ன்னு வெளிச்சம் இருக்கு.  தகப்பன் போல்....   இருட்டுக்குள்ளே நின்னு ஹிம்சைப் படுத்துவதில்லையாக்கும்...

பெரிய திருவடி அட்டகாசமா வெளிமண்டபத்தில் உக்கார்ந்துருக்கார்!  ஹைய்யோ.... மூக்கழகே அழகு!
நேத்து எதோ விசேஷம் போல.....  கருடவாஹன அலங்காரம்.....

முகமும் மூக்கும் கையும் காலும் பாதமும்னு தனித்தனியாப் பார்த்து ரசிக்கலாம்.  கொள்ளை அழகுப்பா!!!



என்னவா இருக்குமுன்னு தகவல் பலகை பார்த்தால் 'ஸ்ரவணம்'னு இருக்கு!  எப்படி... அது அடுத்த மாசமில்லையோ....  போகட்டும்....

அடுத்த வரி சுவாரஸ்யம்.  வயலின் கச்சேரி இருக்காமே..... எப்போ?  இப்பதான்....
ஆடிட்டோரியம் போனோம்.  வரதராஜன் அண்ட் பார்ட்டியாம்! சாயந்திரம் ஆறேகாலுக்கு ஆரம்பிச்சு நடந்துக்கிட்டு இருக்கு.  நாம்தான் ஒருமணி லேட்...  நல்லாத்தான் வாசிக்கிறாங்க.


நல்லவேளை.... தனி தப்பலை:-)

எட்டுமணிக்கு முடிஞ்சது கச்சேரி.  அப்புறம்தான் பெருமாள் தரிசனத்துக்குப் போனோம். ஆச்சு!

பின்பக்கம் இருக்கும் ரங்கநாதனை ஸேவிச்சுக்கிட்டு வலம் வரும்போது......பெரிய ட்ரக் ஒன்னு  வழியை மறிச்சு!
திருப்பதி லட்டு வந்து இறங்குது.  பெரிய பெரிய ட்ரேயில் தட்டு தட்டா.... தட்டு தட்டா.....

முந்தியெல்லாம் மாசம் முதல் சனிக்கிழமை மட்டும் கிடைச்சுக்கிட்டு(! ) இருந்தது, 'ஹை டிமாண்ட்' காரணம் இப்போ வாரா வாரம்.....   எப்படியெல்லாம் காசு பண்ணறான் பாருங்க... இந்த வசூல்ராஜா :-)
வலம் வந்து வாசலில் நின்னு இன்னொரு முறை முகம் கண்டபின்  அடுத்தாப்லே இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்க்குப் போனோம். முந்தி இருந்ததைவிடப் பெருசா விஸ்தாரமா இருக்கு கடை!  சுத்தமாவும் கூட!
நாளைக் காலை ஒரு இடத்துக்குப் போகணும். கொஞ்சம் இனிப்புக் கொண்டுபோனால் தேவலைன்னு தோணுச்சு.
பால் சங்கு... புதுசாத் தெரிஞ்சது!  பாற்கடலில் உதிச்சதோ!  அதுவே ஆகட்டும்!
இவுங்களோட ரெஸ்ட்டாரண்ட்லேயே ராச்சாப்பாடு  முடிச்சுக்கிட்டுப் போகலாமேன்னு பக்கவாட்டுக் கதவில் நுழைஞ்சோம்.  தண்ணிபாட்டிலுக்குள்  என்னைப்போட்டு வச்சுருக்காங்க.

தட்டு இட்லி கிடைச்சது. போதும். உருவ மாற்றம்!  அதே மாவு!  வெரைய்ட்டியா சாப்புடணுமே :-)

காலையில் சீக்கிரம் கிளம்பணும். ஆறரைக்கு ஓலாவில்  போறோம்.

தொடரும்....:-)


2 comments:

said...

மிக அருமை, நன்றி.

said...

பெரிய திருவடியை ரசித்து பலகோணங்களில் படமெடுத்து பகிர்ந்த விதம் அருமை.