Monday, April 01, 2019

வீணை வாசிக்கும் ஆஞ்சி (பயணத்தொடர், பகுதி 86 )

ஓ ராமா..............    உனக்கு எப்பவும் வீணை வாசிப்பைக் கேட்டுக்கிட்டே இருக்க, இப்படி ஒரு ஏற்பாடா......
ராமசாமி கோவிலுக்கும் சார்ங்கபாணி கோவிலுக்கும் அதிக தூரமில்லை. அறுநூத்தியம்பது மீட்டர்தான்.
முதலில் பரபரன்னு உள்ளே போய் வீணை வாசிக்கும் ஆஞ்சியைப் பார்த்த கையோடு ராமனின் தரிசனமும் ஆச்சு.
நம்ம இரா.மு இருக்கார் பாருங்க.....  அவர்தான் ஒருக்கா இந்த ஆஞ்சியைப் பத்தி எழுதுனதைப் பார்த்துட்டு, இந்தக் கோவிலுக்குப்போய் தேடினேன்.  கண்டடைந்தேன் !   விவரம் இந்தச் சுட்டிக்குள் !


இதுலேதான் தூண்களைப் பார்க்கன்னே இன்னொருக்காக் கூப்பிடுன்னு கோரிக்கை வச்சேன்....   கூப்டுட்டான் :-)
நம்ம ஆஞ்சி உக்கார்ந்துருக்கும் இடம் இப்போ எனக்குப் பக்காவாத் தெரியும் என்பதால்  முதல் மரியாதை அவருக்கும், ரெண்டாம் வணக்கம் ராமனுக்குமா ஆகிப்போயிருக்கு!  அடியார்க்கு அடியார்கள் வழக்கம்!

தென்னக அயோத்தின்னு இந்தக் கோவிலைக் குறிப்பிடுவது  ரொம்பச் சரி! நம்ம ராமன், தன் உடன்பிறந்த  மூவரோடு காட்சி கொடுப்பது, ராமர் பிறந்த இடமான  அயோத்திக்கு  அடுத்தாப்படி இங்கேதான்.

ஆனா...ஒன்னு பாருங்க..... அயோத்யா பயணத்தில்  ஊர் முழுக்க ராமர் கோவில்களைப் பார்த்தோமா  அங்கெல்லாம்  இப்படி மொத்த குடும்பமும் (சீதை, ஆஞ்சி உட்பட)ஜிலுஜிலுன்னு  மின்னும் உடைகளை யூனிஃபாரமாப் போட்டுக்கிட்டு (ஒரு கோவிலுக்கு ஒரு டிசைன், ஒரு கலர்)காட்சி கொடுப்பாங்க.  ராம் பரிவார் ! 

ராம் ஜென்மபூமி கோவிலில் மட்டும்  ராம்லாலான்னு குட்டியூண்டு குழந்தை ராமன் மட்டுமே!  இங்கே நமக்கு ஏகாந்த ஸேவை  லபிச்சது தெரியுமோ?  நினைச்சுப் பார்த்தா... இப்போக்கூட என்னால் நம்பவே முடியலை!!! ஹா........

கருவறையில் ஒரே டபுள் ஸீட்டில் ராமனும் சீதையும் !  லக்ஷ்மணன் குடைபிடிக்க, பரதன் சாமரம் வீச, சத்ருக்னன் கைகூப்பி வணங்கி நிக்க, ராமன் காலடியில் ஆஞ்சியுமாக பட்டாபிஷேகத் திருக்கோலம்!

"தர்பாரில் உக்கார்ந்துருக்கும்போதும் கையிலே ஏன் அந்தக் கோதண்டத்தைப் பிடிச்சுக்கிட்டு? இப்படிக் கொடுங்கண்ணே..."
 லக்ஷ்மணன் வில்லை வாங்கி வச்சுக்கிட்டது  உண்மை. படம் சொல்லுதே!
மணி ஏழாச்சு......   இருட்டோ இருட்டு!
உள்ப்ரகாரத்தை மட்டும் தவறவிடவே கூடாது.  நின்னு பார்க்க நேரம் இல்லைன்னாலும் போற போக்கில் பார்த்துக்கணும்.  முழு ராமாயணமும் மூணு பக்கச் சுவர்களில் மூணு வரிசையில்.  ஒவ்வொன்னாப் பார்க்க நேரம் இருந்தால் மூணு  வரிசை முடிக்கும்போது நாம் மூணுமுறை வலம் வந்துருப்போம்!  சின்னதும் பெருசுமா மொத்தம் இருநூத்திப் பத்தொன்பது சித்திரங்கள் !  மூலிகை வண்ணங்களாம். அப்பப்ப வண்ணம் பூசி வைக்கறதால் பளிச்ன்னு இருக்கு!  நல்லவேளையா விளக்கும் போட்டு வச்சுருக்காங்க!
திரும்ப ஒருக்காக் கருவறைக்குப்போய்  தரிசனம் பண்ணிக்கிட்டு ஆஞ்சிக்கும் பைபை சொல்லிக்கிட்டேன்.  இந்தக் கோவிலில் மட்டும் எனக்கு ரெண்டுமுறை கருவறை தரிசனம் செஞ்சே ஆகணும். எளிமை எளிமை......   பட்டாபிராமனின் எளிமையை நினைச்சால்  கண்ணு கலங்கிரும் எனக்கு.

(ஆனா பக்கத்து மாநிலப் பணக்காரக் கோவில் இருக்கே.... இடிபட்டு மிதிபட்டு வரிசையில் காத்திருந்து போய்,   கருவறையைப் பார்க்கக் கண்ணை அனுப்பும்போதே..... கைபிடிச்சு இழுத்துக் கடாசிடுவாங்க..... )
முன்மண்டபத்துக்கு வந்தோம். அந்த அறுபத்தியிரண்டு அலங்காரத்தூண்கள் இங்கேதான்!  நல்லவேளையா  தேவஸ்தான ஆஃபீஸ் திறந்துருந்துச்சு.  கெமெரா டிக்கெட்டுகள் வாங்கிக்கிட்டோம்.

பொதுவா நான் ஃப்ளாஷ் பயன்படுத்தவே மாட்டேன்.  இங்கே  மண்டபத்தின் ஓரங்களில்  போதுமான வெளிச்சம் இல்லை. படங்கள் சுமாராத்தான்   வந்துருக்கு.  ஃப்ளாஷ் போட்டு எடுத்த ஒரு சில படங்கள்.....   நல்லாவே இல்லை..... அதுக்கு இல்லாமல் எடுத்ததே தேவலை.

கொஞ்சம் சுமாரா வந்துருக்கும் படங்களை ஒரு ஆல்பமா ஃபேஸ்புக்கில் போட்டு வச்சுருக்கேன். அதுக்கான சுட்டி இது. நேரமும் விருப்பமும் இருந்தால் எட்டிப் பாருங்க :-)

ஆல்பம்.

தூண்களும் நல்ல பெரிய சைஸ், அதில் செதுக்கி இருக்கும் சிற்பங்களும்  இடத்துக்கேத்தாப்பல பெரிய அளவுதான்.  முக்கியமானவைகள் என்னுயரம்! ஒருதூணின் நாலு பக்கமும்  நாலு பேர்!  ராமன், லக்ஷ்மணன், சீதா அண்ட் ஆஞ்சி!



இதைப்போல் நிறைய சிலைகள் இருக்கும் கோவிலுக்குப் போனால்.... நம்மை சிரமப்படுத்தக்கூடாதுன்னே  முக்கியமான சிலைகளுக்கு சனம் எண்ணெய்க் கைங்கர்யம் பண்ணி வச்சுருக்கும்.  இங்கேயும் அப்படியே!

பொதுவாகக் கோவில் தூண்களில் நாம் பார்க்கும் சிற்பங்கள் நரசிம்ஹர், உலகளந்தான், வேணுகோபாலன் இப்படி இருப்பவைகளைத் தவிர சில பல அபூர்வ சிற்பங்கள் இங்கே இருக்கு!
 சுக்ரீவன் பட்டாபிஷேகம் 
அகல்யா சாபவிமோசனம்

  மாவேலியின் கைகளில் மாலவன் !
 கங்கையும் காவிரியும்.....

ரதியும் மன்மதனும்.........
 கருடசேவை
புத்தம்புதுசாப் பளபளன்னு மின்னும் கொடிமரமும் பலிபீடமும், சுத்திவர இருக்கும் அலங்காரத் தூண்களுமா இந்த இருட்டு நேரத்தில்  பார்க்கும்போது....  ஹோன்னு இருந்துச்சு!
நம்ம சேஷராயர் மண்டபக் குதிரைகள் போலவே.... கொஞ்சம் சின்ன அளவில் இருக்கு!
தஞ்சாவூர்ப் பகுதியை ஆண்ட  அரசர் அச்யுத நாயக் ஆட்சியில் (கிபி  1614-1640 ) தாராசுரம் பகுதியில் ஒரு குளம் வெட்டும்போது, ராமர் சீதை சிலைகள் கிடைச்சதாகவும், அரசர்  பெருமாள் பக்தர் என்பதால்  ரொம்பவே  மகிழ்ச்சியோடு  ராமனுக்கு ஒரு கோவில் கட்ட ஏற்பாடு செஞ்சாருன்னும்,  அவருடைய முக்கிய மந்திரி கோவிந்த தீக்ஷிதர் இந்தக் கோவிலைக் கட்டி முடிச்சாருன்னும்  ராமஸ்வாமி கோவில் புராணம் சொல்லுது!
கோவிலைக் கட்டிய புண்ணியவானோ?

மணி எட்டு. கிளம்பி வெளியே வந்தால் கோவிலையொட்டியே இருக்கும்  ஸ்ரீதேவி சிற்பச்சாலையில்  சிலைகள் தயாராகுது!  ரெண்டு நிமிட் நின்னு பார்த்ததோடு சரி!  தேசியவிருது பெற்ற  ஆர். ஜெகன்னாத  ஸ்தபதியாரின் நிறுவனம்!
இன்றையக் கோவில் உலா  முடிஞ்சதுன்னு ராயாஸ் வந்துட்டோம்.

ராச்சாப்பாடு கீழே  ரைஸ் n  ஸ்பைஸில்தான்.  எனக்கு இடியப்பம். நம்மவருக்கு ரவா தோசை.

நாளைக்கு இங்கே இருந்து கிளம்பறோம். நல்லாத் தூங்கி எழுந்தாட்டுப்  பார்க்கலாம்! 

குட்நைட்.

தொடரும்........ :-)


11 comments:

said...

கோவில் சிற்பங்கள் அழகு. கோவிலில் பொதுவாக ஃப்ளாஷ் போட்டு நானும் எடுப்பதில்லை. ஆனால் பல கோவில்களில் போதுமான வெளிச்சம் இல்லை என்பது வருத்தம் தான்!

சில படங்கள் சிறப்பாக வந்திருக்கிறது. கோவில் பற்றிய தகவல்களும் சிறப்பு.

தொடர்ந்து பயணிப்போம்....

said...

பட்டாபிஷேகக் காட்சி

இரண்டு வில்லையும் வைத்திருப்பது சத்ருக்கனனோ ? லக்ஷ்மணன் already busy holding குடை. Another one may be விபீஷணன் ?

said...

இராமஸ்வாமி கோவிலுக்குச் சமீபத்தில் சென்றுவந்த அனுபவத்தை மனக்கண்ணால் மீண்டும் கொண்டுவர முடிந்தது.

சென்றமுறை போயிருந்தபோது இரவில் மார்கழி சிறப்பு உபந்யாசம் அந்த ஓவிய மண்டபத்தில் கேட்டோம்.

said...

கும்பகோணம் புகழ்பெற்ற முராரி ஸ்வீட் ஸ்டாலுக்குப் போகலையா?

ராமஸ்வாமி கோவிலிலிருந்து நேராக சக்ரபாணி கோவிலுக்கு நேர் ரோடு (கடைவீதி) இருக்கிறது. அதில் நடந்தால் இடதுபுறம் கடைத்தெரு ஆஞ்சநேயர் கோவில், ராஜகோபாலஸ்வாமி கோவில், தசாவதாரக் கோவில்லாம் வரும். அதில் ஒரு தெரு வழியா இடது புறம் போனா திருமழிசை ஆழ்வார் திருவரசு, பக்கத்துல வராகப்பெருமாள் கோவில்லாம் வரும்.

said...

மாவேலியின் கைகளில் மாலவன் !....ஆஹா அற்புதம்

said...

சிற்பங்களின் அழகை எங்களுக்காக சிறை எடுத்திருக்கும் உங்களுக்கு நன்றியும், வணக்கங்களும்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

கும்பகோணமும் ஒரு கோவில்நகரம்தான். தடுக்கி விழுந்தால் அது ஒரு கோவில் வாசலாக இருக்கும்:-)

நின்னு பார்த்து ரசிக்க நேரம் இருக்கணும் நமக்கு! பகல் நேரத்தில் கொஞ்சம் வெளிச்சம் இருக்கும் போல.....

said...

வாங்க விஸ்வநாத்,

கருவறையில்தான் லக்ஷ்மணன் குடை பிடிக்கிறார்.

வெளியே படத்தில் லக்ஷ்மணன், தன் வில்லோடு சேர்த்து ராமன் வில்லையும் வச்சுருக்கார்.

அவர் நிறத்தைப் பாருங்கள்!

பரத சத்ருகளில் ஒருவர் ராமனின் நிறத்தில் இருக்கார். அவர் பரதனாக இருக்கணும். குடை பிடிக்கறார். மற்றவர் லக்ஷ்மணனின் ரெட்டை இல்லையோ.... அவர் சாமரம் வீச, அருகில் இருப்பவர் விபீஷணன்தான்!

கலர் கலர்னு பார்த்து ரேஸியல் ஆகிக்கிட்டு இருக்கேனோ :-)

said...

வாங்க நெல்லைத் தமிழன்,

சில கோவிலைத்தவிர வேறெங்குமே போகலை. ஸ்வீட் கடைக்குப் போனாலும் கெமெராக் கண்ணால்தான் தின்னமுடியும்.

பயணத்தில் கூடியவரை வாயைத் திறக்கறதில்லையாக்கும்... :-)

அடுத்த பயணத்தில் இதுவரை போகாத கோவில்களுக்கு முன்னுரிமை கொடுக்கத்தான் வேணும்.

said...

வாங்க அனு ப்ரேம்..

அதென்ன மழைத்துளி நடுவில்?

said...

வாங்க பானுமதி,

ரசனைக்கு நன்றி !