இது ஒரு சமையல் குறிப்பு ..........
OLAN at Tulsi's
மக்கள்ஸ் அனைவருக்கும் வணக்கம்.
முந்தாநாள் சீனக்கடைக்குப் போனப்பப் பார்த்த காய்கறிகளில் இதுவும் ஒன்னு. மெலன்னு பெயர் போட்டு வச்சுருந்தாங்க. விண்ட்டர் மெலன்னு ஒரு சமாச்சாரம் சீனர்கள் கடையில் கிடைக்கும். அசப்புலே அப்படியே நம்மூர் பூசணிக்காய் மாதிரியே இருக்கும். ஆனால் மேலே சொரசொரன்னு லேசா ஒரு ஃபர்.... கிவி ஃப்ரூட் போல....
பல வருசங்களுக்கு முன்னே முதல்முதலாப் பார்த்தப்ப.... நம்ம பூசணின்னு ஆசைஆசையா வாங்கி வந்து மோர் குழம்புலே போட்டேன். பெரிய துண்டுகளா நறுக்கித்'தான்'. அப்புறம் பார்த்தால்.... குழம்பைக் கிளறிப்பார்க்கிறேன். காய்த்துண்டம் ஒன்னுகூட இல்லை!!
சேமியா போல திரித்திரியா குழம்புலே மிதக்குது. அப்புறம் என்னோட சீனத்தோழி கிட்டே இதைப் பத்திச் சொன்னப்பா, அடடா..... எங்கே கிடைச்சது? இது சூப் செய்யத்தான் பயன்படுத்துவோம். வெரி டேஸ்டின்னு பாராட்டுப் பத்திரம் வாசிக்கறாங்க. இந்தா ... இந்த மோர்க் குழம்பையும் 'குடிச்சுப்பாரு'ன்னேன். அதுவும் டேஸ்ட்டியாம்! அப்புறம் மோர்க்குழம்பு ரெஸிபி எழுதிக்கிட்டுப் போனாங்க :-)
இந்த அனுபவத்துக்குப்பின்..... எப்போ கடையில் பார்த்தாலும் உடம்பை மெல்லத்தடவிப் பார்ப்பேன். ஐ மீன் காயோட உடம்பு :-)
இந்த நாட்டுக்குள்ளே ஒரு பூவோ, பழமோ, இலையோ, விதையோ கொண்டுவரப்படாதுன்னு சட்டம் இருக்கு. ஏர்ப்போர்ட்லே மோப்பநாய் வந்து நம்ம பொட்டி, பைகளை செக் பண்ணும். பிடிபட்டோமுன்னா பத்தாயிர டாலர் வரை அபராதம் கட்டணும். பத்தாயிரத்தை அம்பதால் பெருக்கிக்குங்க..... அப்படியாவது தேவையா இதெல்லாம்?
ஆனா.... சீனர்கள் கடையில் எப்படி இதெல்லாம்? நியூஸியில் விளைவிச்சதுன்னு வேற சொல்றாங்க. எப்படி எங்கே விதைகள் கிடைச்சதாம்.... ஙே.....
சரி. கிடைக்கும்வரை வாங்கித்தின்னால் ஆச்சு...இல்லையா?
அதுக்குப்பிறகும் இன்னும் சில சீனக்கடைகளில் பார்த்து வாங்கியும் இருக்கேன். ஒரு கடையில் கிலோ என்ன விலைன்னா ட்ரு ஃபிஃப்டின்னாங்க. ஒரு துண்டு வெட்டி வாங்கிட்டுக் காசைக் கொடுத்தா சொன்னதைவிட அதிகமா எடுத்துக்கிட்டுப் பாக்கியைத் தந்தாங்க. அப்புறம்தான் எனக்கே (!) விவரம் புரிஞ்சது. அது ட்ரிஃபிஃப்டி. அந்தக் கடைக்கே அப்புறம் ட்ரிஃபிஃப்டின்னு பெயரும் வச்சுட்டோம். சும்மாச் சொல்லக்கூடாது..... பலசரக்குக் கடை வச்சே பென்ஸ் கார் வாங்கிட்டாங்க அந்த அம்மிணி! கடின உழைப்பும் இருக்கே... இந்த உப்புப்புளி மிளகாய் வியாபாரத்துலே....
இந்தப் பூசணி இப்போ சில வருஷமாக் கண்ணுலே படவே இல்லை. அப்பதான் திடீர்னு ஒருநாள் பார்த்தேன். விடமுடியுமோ? அவுங்களே துண்டு போட்டு வச்சுருந்தாங்க. விலைதான் இந்த இடைவெளியில் டபுள் ஆகி இருக்கு :-(
ஒரே ஒரு துண்டைக் கண்ணே மணியேன்னு வாங்கி வந்து ஃப்ரிட்ஜில் போட்டேன். சமையலில் அதற்கான நாள் இன்றுதான்.
ஓலன் செஞ்சுக்கலாமுன்னு முடிவு செஞ்சேன். காலையில் முதல் வேலையா கொஞ்சம் காராமணி (Bப்ளாக் ஐ Bபீன்)எடுத்துக் கழுவிட்டு, கெட்டிலில் வெந்நீர் கொதிக்கவச்சு அதன் தலையில் ஊத்தினேன். சமையல் நேரத்தைக் குறைக்க இப்படிச் செய்வதுண்டு. (To speed up the cooking process ) ரைஸ் குக்கரில் சாதம் செய்யும்போதும் இப்படி கொதிநீரைச் சேர்த்தால் ஒரு காமணியில் சாதம் ரெடி ஆகிரும் :-)
ராத்ரியே மறுநாள் சமையல் என்னன்னு முடிவு பண்ணினால், அப்பவே காரமணியை ஊறப்போட்டு இருக்கலாம். அதென்னவோ எப்பவும் பொழுது விடிஞ்சுருச்சுன்னு கண்ணைத் திறக்கும்போதே மனசுக்குள்ளே 'டாண்'ன்னு வந்து நிக்கறது.... இன்றைக்கு என்ன சமைக்கலாம் என்பதே.... தினம்தினம் தலைவலி :-(
அப்புறம் நம்ம பூசணித்துண்டைப் பொன்னே போல வெளியில் எடுத்து அதை ரெண்டு துண்டங்களா வெட்டினேன். ஒரு துண்டத்தை மறுபடி ஃப்ரிட்ஜுக்கு அனுப்புனபோது, 'சின்னத் துண்டுதானேம்மா.... எதுக்கு அதுலே பாதியை எடுத்து வைக்கிறே?'ன்னு 'நம்மவர்' கேட்டார்.
துண்டுகளில் சின்னது பெருசுன்னு கணக்கில்லை. அதுக்கு எவ்ளோ விலை கொடுத்துருக்கோமுன்னு கணக்குப் போட்டு அதுக்கேத்தாப்ல பாதியை எடுத்து வைப்பதோ, முழுசுமாச் சமைப்பதோன்னு திட்டம் போட்டுக்கணும்னு சொன்னேன்.
பார் ... உன் மனைவியை நன்றாகப்பார்..... வரவர எவ்ளோ பிசுக்காக மாறி இருக்கிறாள் என்று பார்..... (பிசுக்கு= கஞ்சம். மலையாளச் சொல்)
ரெண்டு பேருக்கான சமையலில் எவ்வளவுதான் கொஞ்சமாச் சமைச்சாலும் அதிலும் கொஞ்சம் மீந்துதானே போயிருது.... இல்லையோ?
முதல் வேலையா நடுவில் இருந்த விதைகள் நிறைஞ்ச பகுதியில் இருக்கும் விதைகளைக் கவனமாகப்பிரிச்சுத் தனியா எடுத்துக் காயவச்சுடணும். பொழைச்சுக்கிடந்தால் வரும் கோடைகாலத்துக்கு ஒரு மாசம் முந்தி நட்டுவச்சுப் பார்க்கலாம். சரியான முறையில் காய்ச்சதுன்னா கடை ஒன்னு போட்டுடலாம், ஓக்கே!
பபுள் ராப் எல்லாம் கண்டுபிடிக்காத காலத்துலே இயற்கை என்னும் கடவுள் இந்த விதைகளை எப்படி ஸ்பாஞ்சில் பேக் பண்ணி பத்திரப்படுத்தி இருக்குன்னு பாருங்க! க்ரேட்!
எடுத்த பாதியைத் தோல் சீவிப் பொடியா நறுக்கினேன். புழக்கடைத் தோட்டத்தில் இருந்து ரெண்டு பச்சை மிளகாய், ரெண்டு ஈர்க்குக் கறிவேப்பிலை கொண்டு வந்தேன்.
பச்சை மிளகாயைச் சின்னத் துண்டுகளா நறுக்கி வச்சேன்.
இதுக்குள்ளே ஊறி இருந்த காராமணியைக் குக்கரில் ரெண்டு விஸில் வரும்வரை வேகவச்சு எடுத்தாச்சு. ஜஸ்ட் வெந்து இருக்கணுமே தவிர கூடுதலா மெத்துன்னு வெந்துறக்கூடாது...கேட்டோ....
வாணலி ஒன்னில் ரெண்டு டீஸ்பூன் சமையல் தேங்காயெண்ணெய் ஊத்தி, அது சூடானதும் சின்னத்துண்டுகளா நறுக்கி வச்சப் பச்சைமிளகாயைபோட்டு சிறுதீயில் வதக்கணும். தீஞ்சு போகாமல் பச்சை நிறம் மாறாமல் இருக்கணும். சிலர் பச்சைமிளகாயை வதக்காமல் சேர்த்துருவாங்க. எனக்கு அந்த பச்சை வாசனை, நெடி பிடிக்காது. லேசா வதங்கி வந்ததும் ஒரு ஈர்க்குக் கறிவேப்பிலையை உருவி அதுலே போட்டுட்டு, குட்டிக்குட்டியா நறுக்கி வச்ச பூசணியைச் சேர்த்து ஒரு அரை டம்ப்ளர் தண்ணீரும் ஊத்தி வேகவிடணும். முக்கால்வாசி வெந்ததும் உப்பு ஒரு முக்கால் டீஸ்பூன் போட்டேன்.
முழுசுமா வேகறதுக்கும், தண்ணீர் வற்றிவரவும் சரியா இருந்தது. அதன்பின் வேகவைச்சக் காராமணியையும் சேர்த்துக் கிளறிவிட்டு ரெண்டு மூணு நிமிட் சிறுதீயில் வெந்ததும், கெட்டியானத் தேங்காய்பால் அரைக்கப் சேர்த்தால் போதும். நான் முக்கால் கப் சேர்த்தேன். ஜஸ்ட் ஒரு கொதி வந்தால் அடுப்பை அணைச்சுடலாம்.
தேங்காய்ப்பால் இங்கே நல்ல கெட்டியாகவே டின்னிலும் டெட்ரா பேக்கிலும் கிடைக்குது. இந்தோனேஷியா சமாச்சாரம். சமையலுக்குப்போக மீதி இருந்தால் சின்னக் கன்டெய்னரில் போட்டு ஃப்ரீஸரில் வச்சுடலாம். தேவைப்படும் நாளில் கொஞ்ச நேரம் வெளியில் எடுத்து வச்சு டீஃப்ராஸ்ட் ஆனதும் சமையலில் பயன்படுத்திக்கலாம்.
ஓலனுக்கு வறுத்திடவேண்டிய ஆவஸ்யமில்லை என்றாலும், நம்ம culinary skills வீணாப்போகலாமோ?
இன்னொரு தாளிக்கும் கரண்டியைச் சூடாக்கி அதில் ரெண்டு டீஸ்பூன் சமையல் தேங்காயெண்ணெய் ஊத்தி, அரைத் தேக்கரண்டி கடுகு சேர்த்துக் கடுகு வெடிச்சதும் எடுத்துவச்ச ஓலனில் தாளிப்பைச் சேர்த்து அந்த ரெண்டாவது கருவேப்பிலை ஈர்க்கில் உள்ள இலைகளை உருவிப்போட்டால் ஆச்சு!
இன்றைய ஓலனில் சேர்த்த (தேவையான ) பொருட்கள் இவை:
வெள்ளைப்பூசணிக்காய் - 386 கிராம் (!!!)
காராமணி - அரைக்கப்
தேங்காய்ப்பால் - அரைக்கப்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 2 ஈர்க்கு
தேங்காய் எண்ணெய் - 4 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
ஓலன், கேரள நாட்டுப் பாரம்பரிய சமையல் ஐட்டங்களில் ஒன்னு! விருந்துகளில் இடம் பெறும். அதிலும் முக்கியமா ஓணசத்ய களில் ஓலன் இல்லாமல் விருந்தே இல்லை.
பதிவுதான் நீளமே தவிர சமையல் செய்யும் நேரம் குறைவுதான்!
எஞ்சாய் !!!
OLAN at Tulsi's
மக்கள்ஸ் அனைவருக்கும் வணக்கம்.
முந்தாநாள் சீனக்கடைக்குப் போனப்பப் பார்த்த காய்கறிகளில் இதுவும் ஒன்னு. மெலன்னு பெயர் போட்டு வச்சுருந்தாங்க. விண்ட்டர் மெலன்னு ஒரு சமாச்சாரம் சீனர்கள் கடையில் கிடைக்கும். அசப்புலே அப்படியே நம்மூர் பூசணிக்காய் மாதிரியே இருக்கும். ஆனால் மேலே சொரசொரன்னு லேசா ஒரு ஃபர்.... கிவி ஃப்ரூட் போல....
பல வருசங்களுக்கு முன்னே முதல்முதலாப் பார்த்தப்ப.... நம்ம பூசணின்னு ஆசைஆசையா வாங்கி வந்து மோர் குழம்புலே போட்டேன். பெரிய துண்டுகளா நறுக்கித்'தான்'. அப்புறம் பார்த்தால்.... குழம்பைக் கிளறிப்பார்க்கிறேன். காய்த்துண்டம் ஒன்னுகூட இல்லை!!
சேமியா போல திரித்திரியா குழம்புலே மிதக்குது. அப்புறம் என்னோட சீனத்தோழி கிட்டே இதைப் பத்திச் சொன்னப்பா, அடடா..... எங்கே கிடைச்சது? இது சூப் செய்யத்தான் பயன்படுத்துவோம். வெரி டேஸ்டின்னு பாராட்டுப் பத்திரம் வாசிக்கறாங்க. இந்தா ... இந்த மோர்க் குழம்பையும் 'குடிச்சுப்பாரு'ன்னேன். அதுவும் டேஸ்ட்டியாம்! அப்புறம் மோர்க்குழம்பு ரெஸிபி எழுதிக்கிட்டுப் போனாங்க :-)
இந்த அனுபவத்துக்குப்பின்..... எப்போ கடையில் பார்த்தாலும் உடம்பை மெல்லத்தடவிப் பார்ப்பேன். ஐ மீன் காயோட உடம்பு :-)
இந்த நாட்டுக்குள்ளே ஒரு பூவோ, பழமோ, இலையோ, விதையோ கொண்டுவரப்படாதுன்னு சட்டம் இருக்கு. ஏர்ப்போர்ட்லே மோப்பநாய் வந்து நம்ம பொட்டி, பைகளை செக் பண்ணும். பிடிபட்டோமுன்னா பத்தாயிர டாலர் வரை அபராதம் கட்டணும். பத்தாயிரத்தை அம்பதால் பெருக்கிக்குங்க..... அப்படியாவது தேவையா இதெல்லாம்?
ஆனா.... சீனர்கள் கடையில் எப்படி இதெல்லாம்? நியூஸியில் விளைவிச்சதுன்னு வேற சொல்றாங்க. எப்படி எங்கே விதைகள் கிடைச்சதாம்.... ஙே.....
சரி. கிடைக்கும்வரை வாங்கித்தின்னால் ஆச்சு...இல்லையா?
அதுக்குப்பிறகும் இன்னும் சில சீனக்கடைகளில் பார்த்து வாங்கியும் இருக்கேன். ஒரு கடையில் கிலோ என்ன விலைன்னா ட்ரு ஃபிஃப்டின்னாங்க. ஒரு துண்டு வெட்டி வாங்கிட்டுக் காசைக் கொடுத்தா சொன்னதைவிட அதிகமா எடுத்துக்கிட்டுப் பாக்கியைத் தந்தாங்க. அப்புறம்தான் எனக்கே (!) விவரம் புரிஞ்சது. அது ட்ரிஃபிஃப்டி. அந்தக் கடைக்கே அப்புறம் ட்ரிஃபிஃப்டின்னு பெயரும் வச்சுட்டோம். சும்மாச் சொல்லக்கூடாது..... பலசரக்குக் கடை வச்சே பென்ஸ் கார் வாங்கிட்டாங்க அந்த அம்மிணி! கடின உழைப்பும் இருக்கே... இந்த உப்புப்புளி மிளகாய் வியாபாரத்துலே....
இந்தப் பூசணி இப்போ சில வருஷமாக் கண்ணுலே படவே இல்லை. அப்பதான் திடீர்னு ஒருநாள் பார்த்தேன். விடமுடியுமோ? அவுங்களே துண்டு போட்டு வச்சுருந்தாங்க. விலைதான் இந்த இடைவெளியில் டபுள் ஆகி இருக்கு :-(
ஒரே ஒரு துண்டைக் கண்ணே மணியேன்னு வாங்கி வந்து ஃப்ரிட்ஜில் போட்டேன். சமையலில் அதற்கான நாள் இன்றுதான்.
ஓலன் செஞ்சுக்கலாமுன்னு முடிவு செஞ்சேன். காலையில் முதல் வேலையா கொஞ்சம் காராமணி (Bப்ளாக் ஐ Bபீன்)எடுத்துக் கழுவிட்டு, கெட்டிலில் வெந்நீர் கொதிக்கவச்சு அதன் தலையில் ஊத்தினேன். சமையல் நேரத்தைக் குறைக்க இப்படிச் செய்வதுண்டு. (To speed up the cooking process ) ரைஸ் குக்கரில் சாதம் செய்யும்போதும் இப்படி கொதிநீரைச் சேர்த்தால் ஒரு காமணியில் சாதம் ரெடி ஆகிரும் :-)
ராத்ரியே மறுநாள் சமையல் என்னன்னு முடிவு பண்ணினால், அப்பவே காரமணியை ஊறப்போட்டு இருக்கலாம். அதென்னவோ எப்பவும் பொழுது விடிஞ்சுருச்சுன்னு கண்ணைத் திறக்கும்போதே மனசுக்குள்ளே 'டாண்'ன்னு வந்து நிக்கறது.... இன்றைக்கு என்ன சமைக்கலாம் என்பதே.... தினம்தினம் தலைவலி :-(
அப்புறம் நம்ம பூசணித்துண்டைப் பொன்னே போல வெளியில் எடுத்து அதை ரெண்டு துண்டங்களா வெட்டினேன். ஒரு துண்டத்தை மறுபடி ஃப்ரிட்ஜுக்கு அனுப்புனபோது, 'சின்னத் துண்டுதானேம்மா.... எதுக்கு அதுலே பாதியை எடுத்து வைக்கிறே?'ன்னு 'நம்மவர்' கேட்டார்.
துண்டுகளில் சின்னது பெருசுன்னு கணக்கில்லை. அதுக்கு எவ்ளோ விலை கொடுத்துருக்கோமுன்னு கணக்குப் போட்டு அதுக்கேத்தாப்ல பாதியை எடுத்து வைப்பதோ, முழுசுமாச் சமைப்பதோன்னு திட்டம் போட்டுக்கணும்னு சொன்னேன்.
பார் ... உன் மனைவியை நன்றாகப்பார்..... வரவர எவ்ளோ பிசுக்காக மாறி இருக்கிறாள் என்று பார்..... (பிசுக்கு= கஞ்சம். மலையாளச் சொல்)
ரெண்டு பேருக்கான சமையலில் எவ்வளவுதான் கொஞ்சமாச் சமைச்சாலும் அதிலும் கொஞ்சம் மீந்துதானே போயிருது.... இல்லையோ?
முதல் வேலையா நடுவில் இருந்த விதைகள் நிறைஞ்ச பகுதியில் இருக்கும் விதைகளைக் கவனமாகப்பிரிச்சுத் தனியா எடுத்துக் காயவச்சுடணும். பொழைச்சுக்கிடந்தால் வரும் கோடைகாலத்துக்கு ஒரு மாசம் முந்தி நட்டுவச்சுப் பார்க்கலாம். சரியான முறையில் காய்ச்சதுன்னா கடை ஒன்னு போட்டுடலாம், ஓக்கே!
பபுள் ராப் எல்லாம் கண்டுபிடிக்காத காலத்துலே இயற்கை என்னும் கடவுள் இந்த விதைகளை எப்படி ஸ்பாஞ்சில் பேக் பண்ணி பத்திரப்படுத்தி இருக்குன்னு பாருங்க! க்ரேட்!
பச்சை மிளகாயைச் சின்னத் துண்டுகளா நறுக்கி வச்சேன்.
இதுக்குள்ளே ஊறி இருந்த காராமணியைக் குக்கரில் ரெண்டு விஸில் வரும்வரை வேகவச்சு எடுத்தாச்சு. ஜஸ்ட் வெந்து இருக்கணுமே தவிர கூடுதலா மெத்துன்னு வெந்துறக்கூடாது...கேட்டோ....
முழுசுமா வேகறதுக்கும், தண்ணீர் வற்றிவரவும் சரியா இருந்தது. அதன்பின் வேகவைச்சக் காராமணியையும் சேர்த்துக் கிளறிவிட்டு ரெண்டு மூணு நிமிட் சிறுதீயில் வெந்ததும், கெட்டியானத் தேங்காய்பால் அரைக்கப் சேர்த்தால் போதும். நான் முக்கால் கப் சேர்த்தேன். ஜஸ்ட் ஒரு கொதி வந்தால் அடுப்பை அணைச்சுடலாம்.
ஓலனுக்கு வறுத்திடவேண்டிய ஆவஸ்யமில்லை என்றாலும், நம்ம culinary skills வீணாப்போகலாமோ?
இன்னொரு தாளிக்கும் கரண்டியைச் சூடாக்கி அதில் ரெண்டு டீஸ்பூன் சமையல் தேங்காயெண்ணெய் ஊத்தி, அரைத் தேக்கரண்டி கடுகு சேர்த்துக் கடுகு வெடிச்சதும் எடுத்துவச்ச ஓலனில் தாளிப்பைச் சேர்த்து அந்த ரெண்டாவது கருவேப்பிலை ஈர்க்கில் உள்ள இலைகளை உருவிப்போட்டால் ஆச்சு!
இன்றைய ஓலனில் சேர்த்த (தேவையான ) பொருட்கள் இவை:
வெள்ளைப்பூசணிக்காய் - 386 கிராம் (!!!)
காராமணி - அரைக்கப்
தேங்காய்ப்பால் - அரைக்கப்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 2 ஈர்க்கு
தேங்காய் எண்ணெய் - 4 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
ஓலன், கேரள நாட்டுப் பாரம்பரிய சமையல் ஐட்டங்களில் ஒன்னு! விருந்துகளில் இடம் பெறும். அதிலும் முக்கியமா ஓணசத்ய களில் ஓலன் இல்லாமல் விருந்தே இல்லை.
பதிவுதான் நீளமே தவிர சமையல் செய்யும் நேரம் குறைவுதான்!
எஞ்சாய் !!!
14 comments:
400 கிராம் பூசணிக்கு இரண்டு மிளகாய்கள் போறுமா?
செஞ்சுடலாம்.
பிசுநாறி னு மதுரைப் பக்கத்து வழக்குச் சொல்! இஃகி,இஃகி! இங்கேயும் அப்படித் தான் இந்தப் பூஷணிக்காய் வாங்கினால் 3 நாளைக்கு வந்துடும்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கொஞ்சமாவும் தரமாட்டாங்க!
ஆஹா... இங்கே ஓலன் சுவைச்சாச்ச்!...
மலையாள நண்பர்கள் வீட்டில் சுவைப்பதோடு சரி. எனக்கு இந்தப் பூசணியைக் கண்டால் கொஞ்சம் அலர்ஜி! :)
ஆனால் பூசணி வைத்து செய்யப்படும் இனிப்பு பேடா பிடிக்கும்!
இந்தக்காய்க்கு இங்கு கேரளத்தில் இளவன் என்று பெயர். கல்யாண சத்யகளில் இதை புளிசேரியுடன் பரிமாறுவார்கள். சாதாரணமாக கடுகு தாளிப்பது இல்லை. தேங்காய் எண்ணெய் மட்டும் 2 ஸ்பூன் சேர்ப்பார்கள்.
Jayakumar
ஓலன்..அட்டகாசமா இருக்கே
ஜேகே அவர்களின் கவனிப்பு அசாதாரணம்
வாங்க சாந்தி,
எனக்குக் காரம் ஆகறதில்லைன்னுதான் ரெண்டு மிளகாய். நம்ம வீட்டுலே விளைஞ்சது. இதுவே காரம் கொஞ்சம் அதிகமுள்ள வகைதான். நீங்க ஒரு மூணு போட்டுக்குங்க.
வாங்க கீதா,
ரெண்டேபேர் இருக்கும் வீடுகளில் இது ஒரு பிரச்சினைதான். எவ்ளோ கொஞ்சமாச் சமைச்சாலும் மீந்து போறதே.....
எடுத்துவச்ச மற்ற பாதி பூசணி, இப்போ மோர்க்குழம்புக்குள்ளே குதிக்கப்போறது :-)
வாங்க வெங்கட் நாகராஜ்.
எனக்கு மஞ்சள் பூசணி அதான் நம்ம பரங்கிக்காய்தான் அவ்வளவா பிடிக்காது. இப்போ நியூஸி வந்த பின் அதுவும் ரொம்பவே பிடிச்சுப்போச்சு..... வீட்டிலும் விளைகிறதே....
அந்த இனிப்புப் பேடா எனக்கும் பிடிக்கும். ரொம்பக் குட்டித் துண்டுகளா இப்போ ஒரு பேக்கட்டில் வருது. நம்ம பக்கங்களில் மிட்டாய்க் கடைகளில் பெரிய பெரிய துண்டங்களா அடுக்கி வச்சுருப்பாங்க பாருங்க.... ஆஹா....
வாங்க jk22384,
நானும் வறுத்திடுதல் ஆவஸ்யமில்லைன்னு எழுதி இருக்கேனே:-)
வாங்க அனுராதா பிரேம்,
நன்றி !
வாங்க ஜிஎம்பி ஐயா,
அவரோட கவனிப்பை நீங்க கவனிச்சதுமட்டும் அசாதாரணம் இல்லையோ !!! :-)
இதுதான் ஓலனா? தேங்காய் எண்ணெய் தேங்காய்ப்பால்னு கேரளச் சாப்பாட்டுக்கே உரிய பொருட்கள். கிட்டத்தட்ட மோர்க்குழம்புதான். என்ன தட்டாம்பயறு போட்டிருக்கு. ஊற வெச்ச பருப்பு அரைச்சு விடலை. அவ்வளவுதான் வேறுபாடு.
சீனாக்காரங்க ஒரு ஊருக்கு மொதமொதலாப் போகும் போதே கைல வேண்டியதெல்லாம் கொண்டு போயிருவாங்க போல. அதான் இந்தக் கட்டுப்பாடுகள் இல்லாத காலத்துலயே விதைகளைக் கொண்டு போயிருக்கனும்.
அருமை. பரங்கிக்காயில் அல்லவா ஓலன் செய்வார்கள். பூசணி(மாதிரி)யிலும் செய்யலாமா. I wish material transportation is invented!! So that We can taste it Also!!
Post a Comment