எண்ணி மூணாம்நாள் இப்படி நம்ம ஸ்ரீதேவியின் வாக்கு பலிக்குமுன்னு கனவிலும் எதிர்பார்க்கலை! உண்மையான ஆசிகளின் மகிமை இதுதான் போல! அதுவும் ரெண்டு முறை நூத்தியெட்டு ஸேவிச்ச நல்ல மனசு!
நேத்து சாயங்காலம் என்ன ஆச்சுன்னா.... நாம்தான் காட்டுமன்னார் கோவில் வீரநாராயணரை தரிசனம் பண்ணிக்கிட்டுத் திரும்ப கும்பகோணம் வந்தோமில்லையா..... அப்பவும் கங்கை கொண்ட சோழபுரம் வழியாத்தான் வந்தோம். கோவில் அப்போ திறந்துருக்க மாட்டாங்க என்பதால் அங்கே போகாமல் நேரா ராயாஸ் என்று முடிவு. அப்படியே போய்க்கிட்டும் இருக்கோம்....
ஆனால் பாருங்க.... எதுவுமே கண்ணுலே பட்டபிறகு போகாமல் இருக்க முடியுதா? பசி மயக்கமோ என்னவோ அரைத்தூக்கத்தில் இருந்தவ கண்ணில் கோயில் போர்டு விழுந்துருச்சு. ஜெர்க் ஆனேன். இந்த வழியாவா வர்றோம்! பூமாவைப் பார்த்துட்டே போகலாமே.... போனமுறை வந்தப்ப குழந்தை கேம்ப் போயிருந்தாள்... சந்நிதி திறக்கலைன்னா கூடப் பிரச்சனை இல்லை.... இவளைப்பார்த்தால் அவனையே பார்த்த பலன் தான் :-)
வண்டியை நிறுத்தச் சொல்லி, இறங்கி உள்ளே போனால் ரெண்டு தரிசனமும் கிடைச்சது! ஏற்கெனவே பலமுறை பதிவில் எழுதுன கோவில் என்பதால் இதைப்பத்தி எழுதப்போறதில்லைன்னு நம்மவரிடம் சொன்னேன்.
விண்ணிலும் மண்ணிலும், இந்த ஈரேழு உலகத்திலும் எதற்கும் எந்த விதத்திலும் ஒப்புவமை சொல்ல முடியாத அந்த ஒப்பில்லாதவனைப் பார்த்து வணங்கிட்டுப்போகணும். அம்புட்டுத்தான்! அதே போல ஆச்சு.
பூமாவும் தன்னந்தனியா போரடிச்சு நின்னுக்கிட்டு இருந்தாள். பாகரைக்கூடக் காணோம்..... இப்பத்தான் கோவில் திறந்துருக்கு. பக்தர்கள் வர நேரமாகும்.... இன்றைக்கு விசேஷம் ஒன்னும் இல்லை..... எல்லாம் ஏறக்கொறைய ஏகாந்தம்தான் :-)
மொத்தமே காமணிதான் அங்கே! நம்ம துளசிதளத்தில் ஏற்கெனவே எழுதுனதுலே ஒரு ரெண்டு சாம்பிள் இங்கே.... அப்போ பார்க்கலைன்னா... இப்போ பார்த்துக்கலாம்.... :-)
1 ஒப்பிலி
2 ஒப்பிலி
ஐயாவைப் பார்த்த கையோடு அடுத்த பத்தே நிமிட்டில் அம்மா! இது நம்ம கோவில் இல்லையோ! நாச்சியார்கோவில்! வஞ்சுளவல்லி இடுப்பில் சாவிக்கொத்து இருக்குதானேன்னு பார்த்ததும், கல்கருடருக்கு வணக்கம் சொன்னதுமா , சட்டுன்னு ஒரு வலம் வந்ததுமா இங்கேயும் இருவது நிமிட் தான்! கருவறையில் நல்ல கூட்டம், எங்கூர் கணக்கில்! (நாலு பேருக்கு மேல் இருந்தால் கூட்டம் என்று கொள்க !) மாப்பிள்ளை வீட்டுக்கல்யாணப் பார்ட்டிகள்தான் கூட்டமா நிக்கறாங்க!
நாச்சியார் கோவிலில் எனக்கு ரொம்பப்பிடிச்சது, பெருமாளை நாம் தெருவில் இருந்தே பார்க்கலாம். அவருக்கும் அப்படித்தான். நின்ன இடத்துலே இருந்தே வாசல்வழியா போறவர்றவங்களுக்கு ஆசி வழங்கறாப்போலதான் கோவில் அமைப்பு!
நாச்சியார் கோவில் சாம்பிள்ஸ் :-)
1 நாச்சியார்
2 நாச்சியார்
இந்த ரெண்டு கோவில்களுமே திவ்யதேசக் கோவில்கள்தான்! கும்மோணம் போகும்போதெல்லாம் தவறாமல் தரிசிக்கும் கோவில்கள்தான் இவை. இந்தக் கும்பகோணத்துலேயே.... பதினொரு திவ்ய தேசக்கோவில்கள் இருக்கு! ரெண்டு மூணு நாள் தங்கினா கோவில்களை பார்த்துக்கலாம்தான். ஆனால் இங்கே கோவில் தவிர்த்து சிற்பக்கலையின் உச்சம் தொடற சமாச்சாரங்கள் பலதும் இருக்கே..... பேசாம ஒரு ரெண்டு வாரம் தங்கி... இதே வேலையா இருந்தால்..... நினைக்கும்போதே.... 'ஜிவ்'ன்னு இருக்கு !!!
ராயாஸ் க்ராண்டுக்கு வந்து சேரும்போது மணி அஞ்சரை! ரொம்ப சுத்தியாச்சு. இனி எங்கேயும் போக வேணாம். சீனிவாசனை, போய் சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்கச் சொல்லி அனுப்பியாச்சு. அறைக்குப்போனப்ப, வாசலில் நின்னுருந்த தம்பி, காஃபி கொண்டு வரவான்னதும், கூடவே பஜ்ஜின்னார் நம்மவர் :-)
மறுநாள் கிளம்பறதால் கொஞ்சம் பேக்கிங், வலை மேயல் எல்லாம் முடிச்சோம். அப்பதான் கேக்கறார், 'நாளைக்கு பூவராஹனைப் பார்த்துட்டுப் போகலாமா?'ன்னு!
ஹைய்யோ.... ஸ்ரீதேவி வாக்கு பலிச்சுருச்சா !!! வழக்கத்துக்கு மாறா.... மறு வார்த்தை பேசாம , உடனே சரின்னேன்.
கெமெரா பேட்டரிகள், செல்ஃபோன்கள், பவர் பேங்க் எல்லாம் சார்ஜரில் போட்டாச்சு. சார்ஜ் இல்லாததால் பூமாவைக்கூட நாலைஞ்சு படத்தோடு நிறுத்தும்படியாச்சு.
ராச்சாப்பாட்டுக்கு கீழே ரெஸ்ட்டாரண்டுக்குப்போய் எனக்கு இடியப்பம், நம்மவருக்கு சப்பாத்தி குருமா. சாப்பாடானதும் எதிரில் இருக்கும் மஹாமகக்குளத்தாண்டை போய்ப்பார்க்கலாமான்னு தோணுச்சு. இப்ப ஒரு எட்டு மாசத்துக்கு முன்னேதானே கும்பமேளா ஆச்சு. அப்போ சுத்தம் செஞ்சு வச்ச இடத்தை, நல்ல கம்பித் தடுப்பெல்லாம் போட்டு வச்சுருக்காங்க. இஷ்டம்போல் தண்ணிக்குள்ளே இறங்க முடியாது. இப்படியே சுத்தமா மெயின்டெய்ன் பண்ணா ரொம்ப நல்லதுதான்!
குளத்தைச் சுத்தி ஒரு நடை போறோம். இதுதான் முதல் முறை! கரைக்கு நாலுன்னு சுத்திவர பதினாறு கோவில்கள் (சந்நிதிகள்)இருக்கு. விளக்கு வெளிச்சம் போதாமல் எல்லாம் முக்கால் இருட்டில். செல்லில் எடுத்த படங்கள் சுமாராத்தான் வந்துருக்கு. கோணேஸ்வரர், இடபேஸ்வரர், பைரவேஸ்வரர், அகத்தீஸ்வரர்ன்னு சந்நிதிகளில் பதினாறு பெயர் பலகைகள் இருக்கு.
தெற்குக்கரையாண்டை இருக்கும் ரெடிமேட் துணிக்கடைகளில் எட்டிப் பார்க்கலாமேன்னு போனோம். நான் பெண்கள் பகுதிக்குப்போய் எதாவது தேறுமான்னு பார்த்துட்டு வரும்போது இவர் குட்டிப் பாப்பா சைஸில் ஒரு பாவாடை சட்டை எடுத்துக் கையில் வச்சுருக்கார். எல்லாம் நம்ம ஜன்னுவுக்குத்தான். பாவம்.... தீபாவளிக்கு எடுத்ததா இருக்கட்டும்!
ஊர் திரும்பியதும் போட்டு விட்டேன். அளவு சரியா இருக்கு :-)
இப்பெல்லாம் இவரும் ஆர்வமா துணிமணி நகை நட்டுன்னு நம்ம ஜன்னுவுக்கும் க்ருஷ்ணாவுக்கும் வாங்கறார். ஹைய்யோ!!! எனக்கு ரொம்பவே பிடிச்சுருக்கு! நக்லியில் வாங்கினால் ஆகாதான்னு.... :-)
மறுநாள் எட்டுமணிக்கு ப்ரேக்ஃபாஸ்ட். மினி டிஃபன். கூடவே நல்ல கும்பகோணம் ஃபில்ட்டர் காஃபி.
ஒன்பதுக்கு செக்கவுட் செஞ்சுட்டுக் கிளம்பிட்டோம். அம்பத்திமூணரை கிமீ, ஒன்னரை மணி நேரப் பயணம். ஸ்ரீமுஷ்ணம் !!!
கோவிலுக்கு ரொம்ப முன்னாலேயே சாலை பிரியும் இடத்தில் (நடுவில்) பெரிய திருவடி கைகூப்பி வரவேற்கிறார்! ரொம்பவே அழகு!
கம்பீரமா நிற்கும் ஏழு நிலை ராஜகோபுரம், அதுக்கு முன்னே திருமாமணி மண்டபமும் அதுக்குப்பின்னால் நிற்கும் ஜயஸ்தம்பமும். உச்சியில் அழகான மாடத்தில் பெரிய திருவடி கோவிலைப் பார்த்தபடி இருக்கார்! இந்த மாடமே கொள்ளை அழகு! இதுக்கு திருஷ்டிப்பரிகாரமா இருக்கட்டுமுன்னு கம்பம் உசரத்துக்கு மின்சார விளக்கு போட்டு வச்சுருக்காங்க. கூடுதல் றெக்கை..... :-(
ராஜகோபுர வாசலிலேயே சிற்பங்களின் கொண்டாட்டம் ஆரம்பிச்சுருது. ரெண்டு பக்கக் கருங்கல் சுவர்களில் சின்னச் சின்ன செவ்வக அளவில் தெளிவான, அம்சமான சிற்பங்கள் கதை சொல்லுதே!
கோபுரவாசலைக் கடந்து உள்ளே காலடி வைக்கிறோம். தாயும் புள்ளையுமா கண்ணுக்கு முன்னால்.... சகுனம் அருமை!
வாங்க உள்ளே போய்ப் பார்க்கலாம்....
தொடரும்.... :-)

16 comments:
ஸ்ரீமுஷ்ணம் காணும் நாளுக்காகக் காத்திருக்கிறேன். பிற கோயில்களுக்கு பல முறை சென்றுள்ளேன். இன்று உங்கள் பதிவு மூலமாக மறுபடியும் சென்றேன். நன்றி.
அருமை நன்றி.
அந்தப் பட்டுப்பாவாடை அழகு.
வெளியூர் வாசிகளுக்கு கோவில்கள் பற்றி இவ்வளவு விஷயம் தெரியுமா
காட்டு மன்னார்கோவிலின் விவரம் அறிந்தேன்ம்மா
கோவில்கள் தரிசனம் அருமை. ஆனால் ஸ்ரீமுஷ்ணம்-இப்படி ஆரம்பத்திலேயே நிறுத்திவிட்டீர்களே. இப்போதைய ஆண்டவன், ஸ்ரீமுஷ்ணத்தைச் சேர்ந்தவர். தொடர்கிறேன்.
இந்தப் பதிவுலயே சிறப்பு என்னன்னு கேட்டீங்கன்னா... பூமா, உருளை பஜ்ஜி, ஜன்னு டிரஸ், பில்டர் காபின்னு நிறைய இருந்தாலும், மிகச் சிறப்பு எதுன்னா கடைசியா நீங்க பாத்த சகுனம் தான்.
உலகத்தில் தாய்மையைத் தவிர உயர்வா எதைச் சொல்ல முடியும்? என்னைக் கேட்டா கடவுளை விட ஒரு படி உசத்தின்னு சொல்லுவேன். ஆறறிவு நமக்கெல்லாம்னு சொல்றோம். அப்படி ஆறறிவு இருக்கும் மக்கள்ள சிலரே குழந்தைகளை கவனிக்காம விட்டுர்ராங்க. ஆனா அந்த ஐந்தறிவு குரங்கைப் பாருங்க. எந்தக் குரங்காவது குழந்தையை குப்பைல போட்டதா நிகழ்வு உண்டா? வாசல்லயே தாய் வடிவத்தில் பரம்பொருள் உங்க கண்ல பட்டிருக்குன்னு தான் நான் நெனைக்கிறேன்.
ஸ்ரீமுஷ்ணம் கோவில் பார்த்ததில்லை. ஒப்பிலியப்பன் கோவிலில்தான் எங்கள் கல்யாணம் நடந்தது! விசேஷம் என்னவென்றால் எனக்கும் இரண்டும் மகன்கள். இரண்டு பெரும் திருவோணம்.
கும்பகோணத்தினை விட்டு புறப்பட்டாச்சு....
தொடர்கிறேன்.
வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
தாமதமான பதிலுக்கு மன்னிக்கணும்.
வாங்க விஸ்வநாத்.
நம்ம ஜன்னுவுக்கு எப்பவும் உடைகளும் நகைகளும் ரொம்ப நல்லா அமைஞ்சுருது! கொடுத்து வைத்தவள் :-)
வாங்க ஜிஎம்பி ஐயா.
என்ன இப்படிச் சொல்லிட்டீங்க? வெளியூர் போனபிறகுதானே அருமை தெரியுது!!!
வாங்க ராஜி.
வாய்ப்பு கிடைத்தால் நழுவ விடாதீங்க !
வாங்க நெல்லைத் தமிழன்.
முழுசா கோவிலுக்குன்னு ஒரு பதிவு இருக்கட்டுமேன்னுதான் வாசலில் நிக்க வச்சுட்டேன் :-)
வாங்க ஜிரா!
குரங்குன்னு சொல்லிடறோம். ஆனால் அதோட அறிவுக்கு முன் நாமெல்லாம் ஒன்னுமே இல்லை. நாலு எழுத்து எழுதப் படிக்கத் தெரிஞ்சதுதான் வித்தியாசம் இல்லே?
நம்ம வீட்டு ரஜ்ஜு, இத்துனூண்டு தலை, அதுக்குள்ளே குட்டியா ஒரு மூளை. என்னமா சிந்திக்குதுன்றீங்க !!!!
வாங்க ஸ்ரீராம்.
ஒப்பிலியப்பன் கோவிலில் கல்யாணமுன்னா... மதுரைதான் :-)
திருவோணம், பெருமாளின் நக்ஷத்திரம். எங்க அண்ணனும் திருவோணம்தான்!
வாங்க வெங்கட் நாகராஜ்.
தொடர்வதற்கு நன்றி.
தாமதமா பதில் எழுதறேன். எல்லோரும் மன்னிக்கணும்.
Post a Comment