நன்றி சொல்ல வந்துருக்கோம். ஒரு மரியாதைக்கு மாலை போட்டு சக்கர ராஜாவைக் கும்பிடலாமுன்னு தோணுச்சு! பூமாலை ஒன்னு வாங்கினோம். கோவில் வாசலில் சிரிச்ச முகத்தோடு மங்களகரமா இருக்கும் பூக்காரம்மாவிடம், அர்ச்சனைத் தட்டு ஒன்னும் வாங்கிக்கிட்டுக் கோவிலுக்குள் போறோம்.
ரொம்ப விசேஷமானவர் மூலவர். முக்கண் படைத்தவரா இருக்கார்! உலகத்துலேயே இப்படி இருக்கும் வைணவக்கோவில் மூலவர் இவர் மட்டும்தானாம்! பெருமாளின் சக்கரத்துக்குன்னே இருக்கும் ஒரே கோவிலும் இதுதானாம்!
திருமழிசை ஆழ்வார் இவரைப்பாடி மங்களாசாஸனம் செஞ்சுருக்கார். ஆனால் இந்தக் கோவில் 'அந்த 108 லிஸ்ட்' டிலே இல்லை !!!! (ஏனாம்? ஙே...... )
போனமுறை உத்தராயண வாசல் வழியாப்போனோம். இப்ப ஐப்பசி மாசம் நடப்பதால் தக்ஷிணாயண வாசலில் பிரவேசம்.
சக்கரராஜா... சூரியன், பிரம்மன், மார்க்கண்டேயர், அகிர்புதன்ய மகிரிஷி, அக்னிபகவான் ஆகியோருக்கு நேரில் தோன்றி தரிசனம் கொடுத்துருக்கார். முகத்தில் வேற முக்கண்! அதனால் இவர்களுரிய செவ்வரளி, செம்பருத்தி, வில்வம், வன்னி, துளசி , குங்குமம் ஆகிய பொருட்களை கொண்டு சுவாமிக்கு அர்ச்சனை செய்யறாங்க. உலகில் வேறெங்கும் இப்படி இல்லையாம்.
போனமுறை நம்ம துளசிதளத்தில் எழுதுனது இப்படி :-)
ரெண்டு அர்ச்சனை சீட்டுகள் வாங்கி இருந்தோம், மகள்களுக்காக! அர்ச்சனை முடிஞ்சதும், நம்ம கோபு சக்கரைப்பொங்கலைக் கொண்டு வந்து சமர்ப்பித்தார். அமுது படைச்சாச்சு.
பாத்திரத்தை எடுத்துக்கிட்டு நம்ம கோபு எங்களை வரச்சொல்லிட்டு படி இறங்கிப்போய் எதிரிலிருந்த மண்டபத்திண்ணையில் வச்சுட்டு, ஒரு நிமிஷம் னு சொல்லி எழுந்துபோனார். இதுக்குப் பக்கத்துலேதான் நேத்து நாம் பார்த்த கோபுவின் அறை இருக்கு :-) இதுதான் மடப்பள்ளி. திரும்பி வரும்போது கையில் தொன்னைகள் இருக்கும் பை ஒன்னு .
அங்கே ஏற்கெனவே உக்கார்ந்துருந்த சிலரிடம், ' பிரஸாதம் வாங்கிக்குங்க'ன்னு அழைப்பு விடுத்தேன். அவுங்களுக்கு விநியோகம் ஆனதும், நமக்கும் கிடைச்சது. நம்மவர் ரொம்ப பயபக்தியோடு வாங்கின மாதிரி தெரிஞ்சது.
அளவான இனிப்பும், நெய்யுமா அருமையான ருசி! அதானே எத்தனை வருஷமா தினமும் செய்யும்போது பிரச்சினை இருக்குமா? அளவெல்லாம் ஒரு ஒழுங்குக்கு வந்துருக்காதா?
கொஞ்சம் எடுத்துண்டு போறேளான்னதுக்கு வேணாமுன்னு தலையை அசைச்சேன். இன்னும் வரப்போகும் பக்தர்களுக்குக் கொடுத்தால் ஆச்சு! நமக்கு இந்த ஊருலே பெருமாளைத் தவிர வேற யாரைத் தெரியும்?
ஆதிகாலத்தில் பாயஸமா இருந்த பிரசாத வழிபாடு, எப்போ சக்கரைப்பொங்கலா மாறுச்சுன்னு தெரியலை? ஒரு வேளை கையில் வாங்கிக்கக் கஷ்டமா இருக்குன்னு மாத்தி இருப்பாங்களோ? திருக்கண்ணமுது.... இப்போ அக்காரவடிசலா ஆனது ....
காலையில் காசியை தரிசனம் செஞ்சுட்டு இங்கே வந்தோமா.... இப்போ இங்கிருந்து அயோத்திக்குப் போறோம் :-) தென்னக அயோத்தி!
எனக்குப் பிடிச்ச கோவில்களில் இதுவும் ஒன்னு! நம்ம ஆஞ்சி இங்கே வீணை வாசிச்சுக்கிட்டு உக்கார்ந்துருக்கார், தெரியுமோ?
கருவறையில் சீதையும் ராமனும் அரியாசனத்தில் அமர்ந்த நிலையில் இருக்க, பரதன் பொற்குடை பிடிக்க, சத்ருக்னன் சாமரம் வீச, நம்ம லக்ஷ்மணன், வழக்கம்போல் கையில் வில்லும் அம்புமாய் காவலுக்கு நிக்க, அதோ இந்தாண்டை ஒரு ஓரமா உக்கார்ந்து கையில் வீணையை வச்சு மீட்டிக்கிட்டு இருக்கும் ஆஞ்சிதான் என் ஃபேவரிட்!
முதல்முதலில் இவரைத் தேடி இங்கே வந்தது .... இங்கே இப்படி :-)
முன் மண்டபத்துலே மட்டும் அறுபத்தியிரண்டு தூண்கள்! ஒவ்வொன்னும் ஒருன் கலைப்பொக்கிஷம்! நின்னு பார்க்க இப்பவும் நேரம் இல்லாமல் போச்சு. ஒரு பயணத்துலே நாலுன்னு கணக்கு வச்சுக்கிட்டு ஆற அமரப் பார்க்கணும்.
இந்தப்பக்கம் ஒரு அழகுன்னா.... இன்னொரு பக்கம் அதைவிட....
பிரகாரம் வலம் வந்துக்கிட்டே ராமாயணம் தெரிஞ்சுக்கலாம். குழந்தைகளுக்குக் கதை சொல்லும் பிரகாரங்கள்! உள்ளூர்க்குழந்தைகள் கொடுத்து வச்சவங்க. கதையைப் பார்த்துத் தெரிஞ்சுக்கிட்டே போய் முடிக்கும்போது பிரகாரம் சுத்துன பலன் தானே லபிச்சுரும்!
மணி இப்போ பதினொன்னு சமீபிக்குது. நாளைக்கு கும்மோணத்தை விட்டுக் கிளம்பிடறோமே.... இன்னும் இந்த ஊரில் இருக்கும் முக்கியமான பெருமாள் ஐவரில் இருவரை தரிசனம் செஞ்சுக்கலையேன்னு நினைக்கும்போதுதான் தாராசுரம் பாதி பாக்கி இருக்குன்றதும் ஞாபகம் வந்தது.
சார்ங்கபாணி கோயில்,
சக்கரபாணி கோயில்
இராமஸ்வாமி கோயில்
ராஜகோபாலஸ்வாமி கோயில்
வராகப்பெருமாள் கோயில்
முதல் மூணு கோவில்களில்தான் திரும்பத்திரும்ப தரிசனம் கிடைக்கறது. கடைசி ரெண்டுபெருமாளும் நம்மீது கருணை காமிக்கலை. அடுத்த முறை கட்டாயம் போகணும். மூளையில் முடிச்சு :-)
தாராசுரம் போகலாம். பக்கம்தானே.... மூணு கிமீக்கும் குறைவு! வெய்யில் ரொம்ப ஏறுமுன் போயிடலாமே....
தொடரும் :-)
ரொம்ப விசேஷமானவர் மூலவர். முக்கண் படைத்தவரா இருக்கார்! உலகத்துலேயே இப்படி இருக்கும் வைணவக்கோவில் மூலவர் இவர் மட்டும்தானாம்! பெருமாளின் சக்கரத்துக்குன்னே இருக்கும் ஒரே கோவிலும் இதுதானாம்!
திருமழிசை ஆழ்வார் இவரைப்பாடி மங்களாசாஸனம் செஞ்சுருக்கார். ஆனால் இந்தக் கோவில் 'அந்த 108 லிஸ்ட்' டிலே இல்லை !!!! (ஏனாம்? ஙே...... )
போனமுறை உத்தராயண வாசல் வழியாப்போனோம். இப்ப ஐப்பசி மாசம் நடப்பதால் தக்ஷிணாயண வாசலில் பிரவேசம்.
சக்கரராஜா... சூரியன், பிரம்மன், மார்க்கண்டேயர், அகிர்புதன்ய மகிரிஷி, அக்னிபகவான் ஆகியோருக்கு நேரில் தோன்றி தரிசனம் கொடுத்துருக்கார். முகத்தில் வேற முக்கண்! அதனால் இவர்களுரிய செவ்வரளி, செம்பருத்தி, வில்வம், வன்னி, துளசி , குங்குமம் ஆகிய பொருட்களை கொண்டு சுவாமிக்கு அர்ச்சனை செய்யறாங்க. உலகில் வேறெங்கும் இப்படி இல்லையாம்.
போனமுறை நம்ம துளசிதளத்தில் எழுதுனது இப்படி :-)
ரெண்டு அர்ச்சனை சீட்டுகள் வாங்கி இருந்தோம், மகள்களுக்காக! அர்ச்சனை முடிஞ்சதும், நம்ம கோபு சக்கரைப்பொங்கலைக் கொண்டு வந்து சமர்ப்பித்தார். அமுது படைச்சாச்சு.
பாத்திரத்தை எடுத்துக்கிட்டு நம்ம கோபு எங்களை வரச்சொல்லிட்டு படி இறங்கிப்போய் எதிரிலிருந்த மண்டபத்திண்ணையில் வச்சுட்டு, ஒரு நிமிஷம் னு சொல்லி எழுந்துபோனார். இதுக்குப் பக்கத்துலேதான் நேத்து நாம் பார்த்த கோபுவின் அறை இருக்கு :-) இதுதான் மடப்பள்ளி. திரும்பி வரும்போது கையில் தொன்னைகள் இருக்கும் பை ஒன்னு .
அங்கே ஏற்கெனவே உக்கார்ந்துருந்த சிலரிடம், ' பிரஸாதம் வாங்கிக்குங்க'ன்னு அழைப்பு விடுத்தேன். அவுங்களுக்கு விநியோகம் ஆனதும், நமக்கும் கிடைச்சது. நம்மவர் ரொம்ப பயபக்தியோடு வாங்கின மாதிரி தெரிஞ்சது.
கொஞ்சம் எடுத்துண்டு போறேளான்னதுக்கு வேணாமுன்னு தலையை அசைச்சேன். இன்னும் வரப்போகும் பக்தர்களுக்குக் கொடுத்தால் ஆச்சு! நமக்கு இந்த ஊருலே பெருமாளைத் தவிர வேற யாரைத் தெரியும்?
எனக்குப் பிடிச்ச கோவில்களில் இதுவும் ஒன்னு! நம்ம ஆஞ்சி இங்கே வீணை வாசிச்சுக்கிட்டு உக்கார்ந்துருக்கார், தெரியுமோ?
கருவறையில் சீதையும் ராமனும் அரியாசனத்தில் அமர்ந்த நிலையில் இருக்க, பரதன் பொற்குடை பிடிக்க, சத்ருக்னன் சாமரம் வீச, நம்ம லக்ஷ்மணன், வழக்கம்போல் கையில் வில்லும் அம்புமாய் காவலுக்கு நிக்க, அதோ இந்தாண்டை ஒரு ஓரமா உக்கார்ந்து கையில் வீணையை வச்சு மீட்டிக்கிட்டு இருக்கும் ஆஞ்சிதான் என் ஃபேவரிட்!
முதல்முதலில் இவரைத் தேடி இங்கே வந்தது .... இங்கே இப்படி :-)
முன் மண்டபத்துலே மட்டும் அறுபத்தியிரண்டு தூண்கள்! ஒவ்வொன்னும் ஒருன் கலைப்பொக்கிஷம்! நின்னு பார்க்க இப்பவும் நேரம் இல்லாமல் போச்சு. ஒரு பயணத்துலே நாலுன்னு கணக்கு வச்சுக்கிட்டு ஆற அமரப் பார்க்கணும்.
இந்தப்பக்கம் ஒரு அழகுன்னா.... இன்னொரு பக்கம் அதைவிட....
மணி இப்போ பதினொன்னு சமீபிக்குது. நாளைக்கு கும்மோணத்தை விட்டுக் கிளம்பிடறோமே.... இன்னும் இந்த ஊரில் இருக்கும் முக்கியமான பெருமாள் ஐவரில் இருவரை தரிசனம் செஞ்சுக்கலையேன்னு நினைக்கும்போதுதான் தாராசுரம் பாதி பாக்கி இருக்குன்றதும் ஞாபகம் வந்தது.
சார்ங்கபாணி கோயில்,
சக்கரபாணி கோயில்
இராமஸ்வாமி கோயில்
ராஜகோபாலஸ்வாமி கோயில்
வராகப்பெருமாள் கோயில்
முதல் மூணு கோவில்களில்தான் திரும்பத்திரும்ப தரிசனம் கிடைக்கறது. கடைசி ரெண்டுபெருமாளும் நம்மீது கருணை காமிக்கலை. அடுத்த முறை கட்டாயம் போகணும். மூளையில் முடிச்சு :-)
தாராசுரம் போகலாம். பக்கம்தானே.... மூணு கிமீக்கும் குறைவு! வெய்யில் ரொம்ப ஏறுமுன் போயிடலாமே....
தொடரும் :-)
16 comments:
பார்த்த சேவித்த நினைவுகளை மீட்டெடுத்தேன்..
We do say thanks to the Lord for the wishes granted. That's good manners. At the same time, to the Lord, it is for our own satisfaction as the Lord is not going to be vengeful to us if it becomes genuinely impossible for us to go and thank. In fact all worship is like that. But humans won't take like that. They complain.
The thanksgiving becomes complete only if you extend it to humans. Do you think it is complete with offering of the sweet rice to the Lord? Should one travel from so far away as NZ to just offer a handful of sweet rice or a pot of it and meet the cook?
In your place, I would not be fulfilled if I didn't extend it. Let's show the thanks in the form of help to the needy and the poor. Service to the people (even in the smallest way possible) is service to the Lord Chakrapani).
You're also completely avoiding the remembrances of Azhwaars despite telling you once. Ignorance is ok so far. Not any more. Please remember them. Before going to a desam, read about it: one or more Azhwaars connected to it. This Chakrapani temple is connected to many Azhwaars, the famous being Thirumazhisai Azhwaar. Say a word or two about him and if possible, extract a paasuram from him, In Vaishanvaism, it is laid down that reverence to Azhwaars and Achaariyaars is more important than worship of the Lord. Like a mother so pleased if you love her baby :-)
வாங்க ரிஷபன்.
உங்களை இங்கே பார்த்தது.... அந்தச் சக்கரைப்பொங்கலில் தேன்மாரி பெய்தது போல !!!!
வருகைக்கு நன்றி !
வாங்க வினாயகம்.
தங்கள் மேலான கருத்துக்கு நன்றி.
கற்றது கைமண் அளவு கூட இல்லை. கடுகளவே! !
கோவில் அழகு. கோபுரம் அழகு. சர்க்கரைப் பொங்கல் அழகு. படங்கள் அழகு. விவரங்கள் அழகு.
வாங்க ஸ்ரீராம்.
அழகோ அழகு! நம்மைச் சுற்றி எல்லாமே அழகுதான்! இல்லையோ :-)
மணமணக்கும் சர்க்கரை பொங்கல்...
மடப்பள்ளி பொங்கலுக்கு இணை ஏது..
தென்னக அயோத்தி கோவிலின் ராமாயண ஓவியங்கள் வெகு அழகு...
சர்க்கரைப்பொங்கலுக்கு நன்றி.
பார்க்கும்போதே பசியாறிய பரமதிருப்தி.
காலையில் சார்ங்கபாணி கோவில் தரிசனம், சுடச் சுட சர்க்கரைப் பொங்கல் பிரசாதம்.... விவரங்கள் அருமை.
கொஞ்சம் விட்டால் தானும் சூடிக்கொடுத்த நாச்சியார் லெவலுக்குப் போயிடுவார் போலிருக்கிறதே கோபால் சார் மாலையை வைத்திருக்கும் தோரணை.
திருமழிசை ஆழ்வாரின் திருவரசு கும்பகோணத்தில்தான் இருக்கிறது எனப் படித்திருக்கிறேன். அவர்தானா 'கிடந்தவாறு எழுந்திருந்து' எனப் பாடியது?
விநாயகம் சார் - நீங்க எழுதியிருப்பதன் உட்கருத்து சரிதான். ஆனால், இந்தத் தளத்தை நான் வெகுகாலமாகப் படித்துவருகிறேன். கோவில் தரிசனம் மட்டுமல்ல, எளிய உள்ளங்களையும் இங்கு காண்பிக்க துளசி டீச்சர் தவறுவதில்லை. இந்த இடுகையிலும், பூ விற்கும் பெண்மணி முதல்கொண்டு. அதுபோல் அவங்க பயணங்களில் கூட வரும் டிரைவருக்கும் உணவு ஏற்பாடு போன்றவற்றையும் முடிந்த அளவு கவனித்துக்கொள்வதை படிப்பவர்கள் புரிந்துகொள்ள முடியும்.
இரண்டாவதாக, திருமழிசை ஆழ்வார் பற்றியும் கோடிகாண்பித்துள்ளார்கள். (எனக்குமே இந்த சக்ரபாணி பற்றி ப்ரபந்தத்தில் படித்த ஞாபகம் இடுகையைப் படிக்க ஆரம்பிக்கும்போதே வந்தது) ஒரு டைரி மாதிரி தான் சென்ற இடங்களைப் பற்றி எழுதும்போது மிக அதிகமாக கட்டுரைபோல் எழுதுவது அவ்வளவு சரியாக இருக்காது. எல்லா திவ்ய தேசங்களைப் பற்றி எழுதும்போது ஆழ்வார்களின் பாடல்களையும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதுக்காக பெரிய கட்டுரைபோல் (நிறைய திவ்யதேசங்களைப் பற்றி 50 இடுகைகளுக்குமேல் எழுதலாம்) எழுதுவது அவரது நோக்கம் இல்லை. டைரிபோல், அதேசமயம் ஒவ்வொரு தடவை கோவிலுக்குச் செல்லும்போது வித்தியாசமான ஒன்றைப்பற்றி எழுதுவது என்று எழுதிச்செல்கிறார்.
'ஆழ்வார்கள் இல்லையேல் அருளிச் செயல்கள் இல்லை, ஆச்சார்யர்கள் இல்லையேல் வைணவம் இல்லை' என்பது சரியான புரிதல்தான்.
'இந்த offering பற்றிய செய்தி'-பலவற்றைப் புரிந்துகொள்ள வைக்கிறது. நம்பிக்கை, இந்தச் செய்தி எத்தனைபேருக்கு உபயோகமாக இருக்கிறது, அதனைக் கடமையாகச் செய்துவரும் பரிசாரகர், அந்தப் பிரசாதத்தை கோவிலிலேயே விநியோகிக்கச் செய்த பாங்கு - இவை எல்லாம் நாம் படிக்கும்போது புரிந்துகொள்ளத் தக்கது.
நீங்கள் எழுதியது துளசி டீச்சருக்கு என்றாலும், படிக்கும் வாசகன் என்ற முறையில் என் எண்ணத்தை எழுதியிருக்கிறேன். தவறாக எண்ணல் வேண்டா.
படங்கள் அருமைம்மா. சர்க்கரை பொங்கல் படம் போட்டு இன்றைய தின பதிவை நிறைவு செய்திட்டீங்க
பூக்காரம்மா முகத்தில் புன்னகை செழுமை.
சர்க்கரைப் பொங்கலைப் பார்த்தாலே பக்குவம் சரியாக இருப்பதும் சுவை அளவாக இருப்பதும் தெளிவாகத் தெரிகிறது. ஆண்டாண்டாக கரண்டி பிடித்த கையல்லவா. அந்த பிரசாதத்தை எல்லாருக்கும் கொடுத்தது சிறப்பு. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்னு ஐயன் சொல்லியிருக்காரே.
பூக்காரம்மா குழந்தையாய் சிரிக்கிறார் ..
அக்கா படங்கள் ஒவ்வொன்றும் அழகு .இந்த ஆலயங்களை பார்க்கிறப்போ ஒன்று தோணுது ஒவ்வொரு நேரமும் துப்புரவு செஞ்சிட்டே இருப்பாங்களோ !! அபப்டியே படுத்து தூங்க;லாம் போல என்னே ஒரு அமைதியான சாந்தமான இடம் ..
அந்த சக்கரை பொங்கல் பார்க்கவே ஆசையா இருக்கு ..லட்டு புளியோதரை மட்டுமே சாப்பிட்டிருக்கேன் ப்ரசாதமாய் .
ஒரு சந்தேகம் அந்த சர்க்கரை பொங்கலை எடுக்க யூஸ் பண்ற கரண்டியில் எதுக்கு பிளாஸடிக் கவர் சுத்தியிருக்காங்க ?
ஒட்டாமல் வருவதற்கா ?
ராமசாமிக் கோவிலுக்குப் போய் இருக்கிறோம் பலதடவை
அழகிய படங்கள் - சுற்றுச் சுவர் ஓவியங்கள் மூலம் இராமயணம்....
குடந்தைக்கு போவது எப்போது என்ற கேள்வி இப்போது மனதில்..... போக வேண்டும் விரைவில்!
Post a Comment