Monday, January 14, 2019

இருளில் ஒளிரும்....... (பயணத்தொடர், பகுதி 54 )

நெருங்கிய தோழி , 'சென்னையில் இருந்து   ஸ்ரீரங்கம் மச்சினர் வீட்டுக்கு வந்துட்டேன்'னு சேதி அனுப்பினாங்க. எப்படியும் நமக்கும் அங்கே போகத்தான் வேணும் என்பதால் இன்றைக்கே போனால் என்னன்னு தோணுச்சு.  தோழி வேறெங்காவது போறாங்களான்னு  தெரிஞ்சுக்கணும்.   வாட்ஸ் அப்பில் சேதி அனுப்பினேன்.  எங்கேயும் போகும் எண்ணம் இல்லையாம்.


அஞ்சரை வாக்கில் கிளம்பி, முரளி கடையில் காஃபியைக் குடிச்சுட்டுக் கிழக்கு உத்திரை வீதி போனோம். இந்த வீதி எனக்கு ரொம்பவே ஸ்பெஷலாக்கும்!   வெள்ளை கோபுரம் இங்கேதான்.  நம்ம ஆண்டாளுடைய வீடும் இங்கேதான்!
மேலே படம்:  அக்கா  மன்னியும் துளசியும் :-)

நமக்குப் பலமுறைகள் போய் பழக்கம் இருக்கும் வீடுதான் தோழியின் மைத்துனர் வீடு!  அரங்கன் பார்வையில் இருக்கவேணும் என்றுதான் இங்கே ஜாகை வச்சுருக்காங்க அண்ணாவும் மன்னியும்.

போன முறை எழுதியது இங்கே! 
மேலே படம்: அண்ணாவும் தம்பியும்!

குடும்பமே நண்பர்களா ஆனதால்  வழக்கம்போல் கலகலன்னு பேச்சுதான்.   'நீங்க மன்னி கையால் காஃபி சாப்பிட்ருக்கணும்' என்று  ஒவ்வொரு  சந்திப்பின் போதும் தோழி சொல்லிக்கிட்டே  இருப்பாங்க.  அதென்னவோ இதுவரை தட்டிக்கிட்டெ போகுது. இப்பவும்தான்.... முரளி கடையில் குடிச்சுட்டேன்னு சொன்னதுக்கு,  'இங்கே வர்றப்ப அங்கே ஏன் போகணுமு'ன்னு  கோச்சுக்கிட்டாங்க :-)
தோழியின் கணவர் ,  'அதென்ன முரளி கடை'ன்னு விசாரிச்சார்.  வருஷத்துக்கு நாலைஞ்சு முறை ஸ்ரீரங்கம் வந்து  போறவர் கேக்கும் கேள்வியா இது? டூ பேட் !  நானே  கூட்டிப்போறேன்னு  'நம்மவர்' சொன்னார் :-)
நானும் தோழியுமா மொட்டை மாடிக்குப் போனோம்.  இருட்டில் ஜொலிக்கும் ரங்கவிமானத்தின் அழகை என்னன்னு சொல்ல !!!!  ஊரே ஒரு அழகில் இருக்கு இந்த நேரத்தில்!  அமைதியான அழகு!


 காஃபிக்குப் பதிலா மாம்பழம் ஆச்சு :-)எட்டேகால் போல கிளம்பினோம். அப்பதான் குணாவின் ஃபோன் !  நாளைக் காலையில் விஸ்வரூப தரிசனத்துக்குப் போக விருப்பமா?
ஹைய்யோ....

எத்தனை பேருக்குச் சொல்லட்டுமுன்னு கேட்டார். தோழியும் இப்போ இங்கே இருக்காங்களேன்னு அஞ்சு பேர் பரவாயில்லையான்னு கேட்டதுக்கு 'நோ ப்ராப்லம்'னு சொல்லிட்டார்.
தோழிக்குச் சேதி சொன்னதும், ஆவலோடு சரின்னவங்க, கணவர் வரலைன்னார். நான் காலையில் அஞ்சே காலுக்குப் பிக் பண்ணிக்கறேன்னேன். குணாவுக்கும்  நாங்க நாலு பேர், நாலே பேருன்னோம்:-)

பாலாஜி பவனில் ராச்சாப்பாடு ஆச்சு.   இவருக்குச் சப்பாத்தி , எனக்குப் பூரி மசாலா.......


'சீக்கிரம் எழுந்துக்கணும், சீக்கிரம் படு'ன்னு மிரட்டறார் இவர். தூக்கம் வந்தால்தானே?  இந்தத் தூக்கத்துக்கு மட்டும் பூனைபோலவே ஒரு குணம்.  வர்றதும் போறதும் அதனிஷ்டமே!    போன முறை கண்ட  விஸ்வரூபம் நினைவுக்கு வருதே..... ஒரு நாப்பத்தியஞ்சு, நாப்பத்தியாறு வருஷம் இருக்குமா?

முதுகுக்குப்பின் யானை பிளிறினதும்,  அந்தக் காற்றில் பறந்து ரெங்கன் முன்வாசலாண்டை போனதும் ......  ஹப்பா.....  ஒல்லிக்குச்சி உடம்பு அப்போ ....   முப்பத்திரெண்டே கிலோ !

இப்ப அதே போல் ஆச்சுன்னா... உருண்டுதான் போவேன், இல்லையோ....  :-)

தொடரும்....... :-)


8 comments:

said...

தோழியின் சந்திப்பு இனிமை. படங்கள் அருமை. அதுவும் குறிப்பாக இரவில் மொட்டை மாடியில் எடுத்த படங்கள்.

அதென்ன முரளி கடை காஃபி? கீதா அக்கா, வெங்கட் கிட்ட கேட்கணும்!

said...

வாங்க ஸ்ரீராம்.

துளசிதளத்துலேயே முரளி காஃபி கடையை பலமுறை எழுதி இருக்கேனே..... இங்கே பாருங்க.....

http://thulasidhalam.blogspot.com/2013/04/blog-post_17.html

said...

ஜொலிக்கும் விமானத்தின் அழகுக்கு நிகர் அதுவே.

said...

//முப்பத்திரெண்டே கிலோ !// ஹஹஹஹஹ.

said...

ஸ்ரீரங்கம் விஜயமா..(ஜூலை 2018ல்).. எப்போதும்போல் அருமை. தொடர்கிறேன்.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

உண்மைதான்.... அந்த ஜொலிப்புக்கும் அழகுக்கும் வேறேதும் ஈடாகாது !

said...

வாங்க விஸ்வநாத்.

எங்க கல்யாணத்தின் போது வெயிட் வச்சுட்டேன். நான் முப்பத்தியேழு, 'நம்மவர்' நாப்பத்தி ரெண்டு.

மகள் பழைய படங்களைப் பார்த்துட்டு, நீங்க ரெண்டுபேரும் Anorexic என்று சொல்வாள் :-)

அது ஒரு கனாக் காலம் :-)

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

தொடர் வருகைக்கு நன்றி !