Monday, January 28, 2019

எல்லாத்துக்கும் வேளை வரணுமுன்னு இருக்குல்லே? (பயணத்தொடர், பகுதி 60 )

திருச்சி வரும்போதெல்லாம் பலமுறை கேட்ட பெயர், போக நினைச்சதும் உண்டு. ஆனால் எதுக்கும் நேரங்காலம்  வரணுமுல்லெ?  சரவணபவனில் சாப்பாடானதும் கிளம்பி ஸ்ரீரங்கத்துக்கு வந்துக்கிட்டு இருக்கோம்.  நூறு கிலோ மீட்டர் பயணம் இதுவரை ரெண்டுமணி நேரம் எடுத்துருக்கு.
இன்னும் ஒரு பதினெட்டு கிமீ பாக்கி என்ற நிலையில்  கூகுள் வழியைப் பார்த்துக்கிட்டே வந்த 'நம்மவர்' முக்கொம்பு அணை இங்கெதான் இருக்கு. பார்த்துட்டுப் போகலாமான்னார்.
அணையில் தண்ணீர் இருக்குன்னாலும் மதகுகள் அடைச்சுருப்பதால் இந்தாண்டை எல்லாம்  காஞ்சுகிடக்கும் மண்தான்.
உள்ளே போக எதோ கட்டணம் வாங்குனாங்க. சுற்றுலாத்தளமாம். சிறுவர் பூங்காவாம்.  இறங்கி நடந்தப்ப, ஒரு ராமர் கோவில் கண்ணில் பட்டது.
நாங்க போனப்ப ஒரு சில குடும்பங்களைத்தவிர கூட்டம் ஏதும் இல்லை.  பெரியவங்கதான்  சிறுவர் விளையாட்டுக்கானவைகளில் விளையாடிக்கிட்டு இருந்தாங்க.  சிலரைத் தவிர  எல்லோரும் பெண்கள் என்பதால் படம் ஒன்னும் எடுக்கலை.

யானைகள் இருந்தாலும்  எனக்கு அவ்வளவா ஸ்வாரஸ்யப்படலை.
இன்னும் கொஞ்சம் நல்லாப் பராமரிக்கலாம்....

திருச்சிக்கு ரொம்பப் பக்கத்துலே இருக்கு என்பதால்  விடுமுறை நாட்களில் பிள்ளைகளைக்கூட்டி வந்து 'தண்ணீரை'க் காமிக்கலாம் !
நம்ம  கல்லணையைப் பார்த்துட்டு, வாயைப் பிளந்த வெள்ளைக்காரன் காலத்துலே கட்டுன அணை.  நாப்பத்தியஞ்சு மதகுகள் வைக்கத்  திட்டம் போட்டு இதைக் கட்டிமுடிக்க முப்பத்தியாறு வருஷம் ஆனதாம். ஏறக்கொறைய, கல்லணையின் அதே டெக்னிக்தான். ஸ்ரீரங்கம் போற காவிரி முதல்லே இங்கே வர்றதால் இதை மேலணைன்னும்  சொல்றாங்க.
மதகுகளுக்கு மேலே  போக்குவரத்துக்கான சாலையும் போட்டுருக்காங்க.  இதுவும் அகலமாத்தான் இருக்கு.  இருபதடி ரோடு.
அதுலேயே  அந்தாண்டை  போயிடலாமுன்னு போனோம். முத்தரசநல்லூர் அந்தப்பக்கம்தான்னு அப்புறம் தெரிஞ்சது. அடுத்த பத்து நிமிட்டில்  அரசியல்வ்யாதிகளின் கூத்து.
ஸ்ரீரங்கம் நோக்கிப்போகும்போது பாலத்தில் நம்மாள் ! நல்ல சகுனம்.. :-)
அடுத்த அரைமணியில் ஹயக்ரீவா போயாச்.  அங்கிருக்கும் பணியாளர் ஒருவரிடம்,  கீழே பாலாஜி பவனில் இருந்து காஃபி கொண்டுவரச் சொன்னால்....  அன்றைக்கு விடுமுறைன்னுட்டார்.  அடடா.....  ன்னும்போது 'முரளியில் இருந்து வாங்கிவரவா'ன்னு அவர் கேட்டது, காதில் தேனாகப் பாய்ந்தது:-)

அதுக்குள்ளே நம்மவர்  முரளிகடை வாசலில் சாயங்காலம் மட்டுமே கிடைக்கும்  'மற்ற சமாச்சாரங்களை' நினைவில் வச்சு ரெவ்வெண்டு வாங்கிவரச் சொன்னார்.

வயித்துக்குள் போச்சோ இல்லையோ..... உடலுக்குத் தெம்பு வந்தாச்சு.  இன்றைக்கு ஒரு பதிவர் சந்திப்பையும் நடத்திடலாமான்னார்.  ஆஹா.... கேட்பானேன்?

வரவா என்று கேட்டுட்டுப் போய்ச் சேர்ந்தோம். நமக்கு இன்னுமொரு குடும்பமும் இங்கிருக்குன்னு சொன்னா நம்புவீங்கதானே?

ஒரு மணிநேரம் போனதே தெரியலை.  நலம். நலமான்னு பேச்சும் ஓடுச்சு! டின்னர் டைம் வேற!  சாப்பிடுங்கன்னு வற்புறுத்தினாலும்.... திடுக்னு போய் நின்னு தொல்லைப்படுத்தறோமோன்னு நினைச்சது நிஜம்.
அப்பதான்  ஸ்ரீரங்கத்துச் சாப்பாட்டுக்கடைகள் பற்றிய பேச்சில் ஸ்ரீ ரங்காஸ் பவனில் பரவாயில்லாம நல்லா இருக்குன்னாங்க நம்ம கீதா!
அதையும்தான் என்னன்னு பார்த்துடலாமே!  நம்ம ஹயக்ரீவா இருக்கும் அதே அம்மாமண்டபம் ரோடு. ஜஸ்ட் அஞ்சு கட்டடம் தள்ளி!   நாங்கள் இறங்கிக்கிட்டோம்.
ஹயக்ரீவாவில் வண்டியை விட்டுட்டுத் திரும்பி வந்து   சேர்ந்துக்கிட்டார் ரமேஷ்.

இடம் பரவாயில்லை. சுத்தமாத்தான் இருக்கு!  வாசலில் இவுங்களோட ஸ்வீட் கடை வேற !
'பார்சலுக்கு வரும்போது பையைக் கொண்டு வா' !  சூப்பர்!
லெமன் சேவையும் நெய்ரோஸ்டுமா  டின்னர் முடிஞ்சது.

ரமேஷ் அவருக்குத் தேவையானதை வாங்கிக்கிட்டார்.
போய்க் கொஞ்சம் வலை மேய்ஞ்சுட்டுப் படுக்கையில் விழணும்.

மேய்ச்சல் முடிஞ்சு பார்த்தால் வெள்ளரிப்பழம் சிரிக்குது!  டிஸ்ஸர்ட் :-)

ஆச்சு இன்றைய காந்தாயம்.

தொடரும்............ :-)

PINகுறிப்பு:  இந்த முக்கொம்பு அணையிலே ஒரு ஒன்பது மதகுகள் இடிஞ்சு விழுந்துட்டதாக செய்தி பார்த்ததும்  மனசுக்குக் கஷ்டமாப் போச்சு.  நல்லவேளையாத் திரும்பக் கட்டிட்டாங்க போல !


13 comments:

said...

முக்கொம்பு திருச்சி மக்களின் இன்ப சுற்றுலா இடம் ..திரும்ப திரும்ப போனாலும் எங்க பசங்க போக ஆசைபடும் இடம் இது ...ஜாலி place


அட கீதா மா உடன் சந்திப்பு மகிழ்ச்சி ..
படங்கள் பளிச் பளிச்...

said...

அருமை நன்றி

said...

வாழக்காயை ரெண்டா நறுக்கி பஜ்ஜி போட்டிருக்காங்க. ஆனாலும் பாக்க பதமாயிருக்கு. தொட்டுக்க சட்டினி எதுவும் குடுக்கலையா?

எலுமிச்சை சேவையெல்லாம் கடைல கிடைக்குதுன்ன அருமைதான். எனக்கு ரொம்பப் பிடிச்ச பதார்த்தம். அதே போல புளி சேவை, தக்காளி சேவை, தேங்காய் வெல்ல சேவைன்னு பட்டியலே இருக்கு.

அணைகளுக்கு காய்ச்சல் வந்தது தெரியாதா டீச்சர்? முதல்வரே சொன்னாரே. அதான் மதகு ஒடஞ்சதுக்கு காரணம்.

said...

முக்கொம்புக்கு அருகில் தானே மன நலம்குறைந்தவர்களை காட்டும் குணசீலம் இருக்கிறது மறதி அதிகம்வாட்டுகிறது

said...

உங்கள் பார்வையில் தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தளங்களில் எந்த இடம் அற்புதமாக பராமரிக்கப்படுகின்றது? எந்த இடம் ரொம்ப மோசம்? சிறு குறிப்பு வரைக?

said...

முக்கொம்பு பராமரிப்பு கொஞ்சம் கூட கிடையாது. பக்கத்தில் தான் எங்கள் பெரியம்மா வீடு.

திருவரங்கத்தில் உங்களுக்கு இரண்டு வீடு!

said...

இல்லை. முக்கொம்பு காவிரியின் ஒரு பக்கம் என்றால் குணசீலம் கொள்ளிடக் கரையில்.... குணசீலம் சேலம் சாலையில், முக்கொம்பு கரூர் சாலையில்....

said...

வாங்க அனுராதா ப்ரேம் ,

ஆஹா.... பிள்ளைகளுக்குப் பிடிக்குதுன்னா கட்டாயம் போய் வரத்தான் வேணும்!

கீதா ஊரில் இருந்தால் கட்டாயம் ஒரு விஸிட் உண்டு !

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க ஜிரா,

எல்லாம் சின்ன வாழைக்காயா இருக்கும் போல.... இங்கே எங்களுக்கு வரும் வாழைப்பழம் எல்லாம் இந்தியப் பழத்தில் நாலு மடங்கு ! அண்ணனும் அண்ணியும் இங்கே வந்துருந்தபோது, ஆளுக்குப் பாதின்னுதான் சாப்பிடுவாங்க!

சட்னி ரெண்டு வகை இருக்குதான். ஆனால் எனக்கு வேணாம்....

சேவை நல்லாவே இருந்தது அங்கே!

மதகுக்கு ஜூரம், பராமரிப்பு இல்லைன்னா வந்துறாது?

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

உங்களுக்கு பதில் நம்ம வெங்கட் நாகராஜ் சொல்லிட்டார் !

said...

வாங்க ஜோதிஜி.

தமிழ்நாட்டுச் சுற்றுலாத் தளங்கள் எல்லாத்துக்கும் எங்கே போனேன்? அநேகமா இதுவரை போனதெல்லாம் சுற்றுலாத்தலங்களே! அங்கேயும் இருக்கும் அழுக்கு, அழகு எல்லாம் அப்பப்பச் சொல்லிக்கிட்டுத்தானே வரேன்!

சுத்தம், பராமரிப்பு ரெண்டும் அவசியம்னு எப்பதான் நம்ம மக்கள் உணரப்போகிறாங்களோ?

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

இந்த அன்புக்கு என்ன கைமாறு செய்வேன்? மூணாவது வீடா நம்ம ஹயக்ரீவாவைச் சொல்லலாம். ஆடம்பரம் இல்லாத ஹோம்லி வகை இருப்பிடம்!

பராமரிப்பு செய்யத் தோணவே தோணாதா? ப்ச்...