ஆறு மணிக்கு முன்னே நான் தயார்! ஆண்டாள் வர்றாளான்னு ரெண்டுமுறை கீழே போய் பார்த்துட்டு வந்தேன். காணோம்..... தனுர் மாசத்தில் மட்டும் அம்மாமண்டபத்தில் இருந்து தீர்த்தம். மற்ற நாட்களில் கொள்ளிடத்தில் இருந்துன்னு ஒரு செய்தி கிடைச்சது.....
பாலாஜி பவன், கதவு திறந்துருக்கேன்னு உள்ளே போய் ஃபர்ஸ்ட் டிகாக்ஷன் காஃபியும் ஆச்சு! பாலாஜி பவனில் எனக்குப்பிடிச்ச ஒரு விஷயம் என்னன்னா..... நிறைய வயதானவர்கள் வேலை செய்யறாங்க. வீட்டுச் சமையல் போலத்தான்..... அந்தக் காலை நேரத்தில் ஒரு அம்மா, காய்கறி நறுக்கிக்கிட்டு இருந்தாங்க. எப்படி? அரிவாள் மணையில் !!!!
ரமேஷும் காராண்டை வந்து காத்திருந்தார். நான் வாசலில் நின்னபடி எதிர்வாடை மனையில் இருக்கும் மண்டபத்துக்கு இந்தாண்டை என்னத்தையோ இடிச்சுட்டு, இப்போப் புதுசாக் கட்டிக்கிட்டு இருக்கும் கட்டடத்தில் என்ன வரப்போகுதுன்னு பார்த்துக்கிட்டு இருந்தேன். கோசாலை வரப்போகுதுன்னார் ஹயக்ரீவா செக்யூரிட்டி.
டான்னு ஆறரைக்கு வாசலில் ஒரு கார் வந்து நின்னது. காரை ஓட்டிவந்தவர், கண்ணியமான தோற்றத்தோடு இருந்தார். கோபால்? என்றதும் நாங்கதான்னு, குட் மார்னிங் சொல்லிட்டு, நம்ம ரமேஷிடம் வண்டியைப் பின்னால் தொடரச் சொல்லி அவர் வண்டியில் ஏறிக்கிட்டோம். ரங்கராஜன்னு தன்னை அறிமுகப்படுத்திக்கிட்டார்.
ரங்கா கோபுரத்தாண்டை இறங்கி, காலணிகளை நம்ம வண்டியில் விட்டுட்டு (வந்தவர் அவர் வண்டியிலே காலணிகளை விட்டதைப் பார்த்துக் காப்பியடிச்சேன்) ரமேஷையும் வண்டியைப் பார்க்கிங்கில் விட்டுட்டு நம்மோடு வரச்சொன்னோம்.
ரங்கா கோபுரத்து வாசலுக்குள் நுழையும்போதே.... அவருக்கு அங்கே ஏகப்பட்ட மரியாதைன்னு புரிஞ்சது! யாராக இருக்குமுன்னு எனக்குத் தெரியலை.கேட்கவும் ஒரு தயக்கம். கோவில் ட்ரஸ்ட்டிகளில் ஒருவரோ?
சக்கரத்தாழ்வாரில் ஆரம்பிச்சு முக்கிய சந்நிதிகள் (!) எல்லாவற்றுக்கும் அவர் அங்கங்கே விளக்கம் (கோபாலிடம்தான்) சொல்லிக்கிட்டே போக நான் பின்னாலேயே ஓடறேன். இன்னும் நம்மூரில் பெண்களுக்கும் விளக்கங்கள் வேண்டி இருக்குமுன்னு நினைப்பு வரலை பாருங்க. 'நம்மவர்' தலையாட்டிக்கிட்டே கேட்டுக்கிட்டுப்போறார். அங்கங்கே நாலைஞ்சு வார்த்தை என் காதில் விழறது..... என்னன்னு எழுதப்போறேன்? இவரைக் கேட்டுக்கலாமுன்னா.... க்க்கும்..... சொல்லிட்டாலும்....
படம் ஒன்னும் எடுக்கலை. எடுக்கலாமா, கூடாதான்னு தெரியலையே.... எல்லா சந்நிதிகளிலும் அவருக்குப் பட்டர்களின் பலத்த வரவேற்பு. அவரும் பட்டர்ஸ்வாமிகளிடம் பெயர் சொல்லிச் சுமுகமா விசாரிச்சுக்கிட்டே வர்றார்.
சந்நிதிகளில் நமக்கு நல்லாவே தரிசனம் பண்ணிவச்சு, பூச்சரங்களும், மஞ்சள், குங்குமப் பிரஸாதங்களும் தாராளமாவே தர்றாங்க. இவர் யாராக இருக்குமுன்னு மண்டைக்குடைச்சல் எனக்கு.....
பெரிய பெருமாள் சந்நிதிக்குள் போறோம். முதல் முறையா ஒரு ஏழெட்டு நிமிஷம் பெருமாள் முன்னால் நிக்கறோம். பட்டர்கள் தரிசனம் நல்லாவே பண்ணி வச்சாங்க. யாகபேரர் எங்கேன்னு (ஞாபகமா)கேட்டதும், இப்படி இங்கே எட்டிப்பாருங்கோன்னார் பட்டர்ஸ்வாமிகள். கண்ணுலே தண்ணி வந்தாத் தொலைச்சுப்புடுவேன்னு கண்களை மிரட்டிவச்சுருந்தேன். அப்படியும் லேசா ஒரு கசிவு.
நிமிஷ நேரம் நிக்கவிடாம, வாங்கம்மா.... ம்...ம்.... னு விரட்டும் கோவிலாட்கள் யாரும் வாயைத் திறக்கலை....
இது எதுக்கும் நான் தயாரா இல்லாததால் பிரமிப்போடு நிக்கறேன். ஒருமணி நேரம் போனதே தெரியலை. நம்ம உடையவர் சந்நிதிக்கு வந்துருந்தோம். நல்ல தரிசனம்! வெளியே வந்ததும், தரிசனங்கள் எல்லாம் திருப்தியா இருந்ததான்னு 'என்னிடம்' கேட்டார்!
நாந்தான் திகைச்சுப்போய் நிக்கறேனே.... கைகூப்பி அவருக்கு நன்றி சொன்னேன். ரமேஷிடம் அவர் வண்டிச்சாவியைக் கொடுத்து, வண்டியில் இருக்கும் ஒரு பையை எடுத்துவரச் சொன்னதும், ரமேஷ் ஓடிப்போய்க் கொண்டுவந்தார்.
சித்திரத் திருப்பாவை நாச்சியார் திருமொழின்னு ஒரு புத்தகத்தை எடுத்து என்னிடம் கொடுத்துட்டுத், 'திருப்பாவை பிடிக்குமோ'ன்னார்! சிரிச்சேன். (யாரைப்பார்த்து.... என்ன கேள்வி.... ஹாஹா.....)
புத்தகத்தில் திருப்பாவை பாசுரங்கள் ஒவ்வொன்னும் ஒரு படமும் விளக்கமும், நாச்சியார் திருமொழி பதினான்கும் இருக்கு! இது இவருடைய சஷ்டியப்த பூர்த்தியை முன்னிட்டு அச்சிட்டுருக்கார். ஆச்சு ரெண்டு வருஷமுன்னாலும் நமக்குக் கிடைச்சது பாருங்க ! பெருமாளே... பெருமாளே....
ரமேஷுக்கும் ஒரு புத்தகம் கிடைச்சது.
அப்பதான் உங்களை ஒரு படம் எடுத்துக்கலாமான்னு தயக்கத்தோடு கேட்டேன். எதுக்குன்னவரிடம் எழுத வேணாமான்னுட்டுக் கெமெராவை ரமேஷிடம் கொடுத்தேன். க்ளிக்ஸ் ஆச்சு !
'முக்கிய சந்நிதிகள் எல்லாம் ஆச்சு. எனக்கு ஆஃபீஸ் போகணும். நீங்க உங்க சௌகரியம்போல் இருந்து பார்க்கலாமே'ன்னார்.
திருச்சியில் வாசம். தினம் காலையில் ரங்கனை தரிசிக்காமல் இருக்கமுடியாதாம்.
உங்களை சிரமப்படுத்திட்டோமுன்னு உபசார வார்த்தை சொன்னேன். 'என்ன சிரமம்? நான் தினம் போகும் அதே சந்நிதிகள்தானே'ன்னார்.
'ஆனாலும் எந்த வரிசையிலும் நிக்காமப் பெரிய பெருமாளை சட்னு தரிசனம் செஞ்சதை என்னால் மறக்கவே முடியாது'ன்னேன்.
சித்திரத் திருப்பாவையின் பின்பக்கம் இவரைப்பற்றிய விவரம் ஓரளவு தெரியவந்தது ! பிஸினஸ் மேக்னட்! தொழிலதிபர்!
திரு ரங்கராஜன் அவர்கள் விடைபெற்றுப்போனதும், இன்னொருக்காக் கோவில் பிரகாரங்களில் வலம் வந்தோம். மனசு உண்மையிலேயே நிறைஞ்சிருந்தது !
ஆண்டாளும் அவளிடத்தில் நின்னுருந்தாள். அழகி!
தாயார் சந்நிதியாண்டை வந்து கொஞ்ச நேரம் உக்கார்ந்தாச்சு. மகுடம்/மகிழம் பூச்சரம் வாங்கிக்கிட்டேன்.
முதியவர்களாக சில உள்ளூர்வாசிகள் நடமாட்டம் இருந்தது! ரங்கனை, தினசரி ஸேவிக்கலைன்னாலும், அவன் அங்கே பக்கத்துலே இருக்கான் என்ற நினைப்பே பலரையும் வாழவைக்குது, இல்லே?
சேஷராய மண்டபத்துக்குப் போனால் நேரம் போறதே தெரியாது....
எட்டேமுக்காலாகி இருந்தது. சரி கிளம்பலாம், போய் ப்ரேக்ஃபாஸ்ட் முடிக்கணும்.
பலரும் புகழும் பார்த்தசாரதி விலாஸ் போனால் என்னன்னு தோணுச்சு. கூகுளாரிடம் வழிகேட்டுப் போனோம். திருவானைக்காவல் கோவிலுக்குப் பக்கம். அங்கே அப்படி ருசி, இப்படி ருசின்னு 'நம்மவரிடம்' அளந்துக்கிட்டே போனேனா.....
அங்கெ போய்ப் பார்த்தால்..... 'திங்கள் முழுதும் விடுமுறை' யாம்!
விடியாமூஞ்சி வேலைக்குப் போனமாதிரி..... திரும்ப பாலாஜி பவன் வந்து மினி டிஃபன் ஆச்சு.
மேலே அறைக்குத் திரும்பி ஒரு மணி நேரம் ஓய்வு. பதினொன்னுக்குக் கிளம்பணும். மன்னன் வீட்டில் பகல் சாப்பாடு!
மன்னன் விவரம் வேண்டுமெனில்.... இங்கே க்ளிக்கலாம்.
தொடரும்.... :-)

21 comments:
யப்பாடா. எவ்ளோ படம். அந்த மகிழம்பூ சரம் அருமை. கோவில் படங்களும். :)
படங்கள், தகவல்கள் வழக்கம்போல் அருமை. அதுசரி, 'அவர்' காரில் விட்ட உங்கள் காலணிகளை எடுக்கவில்லையா?!!அவர் உங்களை அங்கே விட்டுவிட்டு கிளம்பி விட்டார் போலவே! (நம்ம சந்தேகம் நமக்கு!)
ஒரே படம் இருமுறை வந்திருக்கிறது.
உங்களுக்கு அவன் தரிசனம் நன்றாகக் கிடைக்கவேண்டும் என்று ப்ராப்தம். அதற்காகன பாலமாக அவர் இருந்திருக்கிறார்.
கோவில் தூண்களில் உள்ள சிற்பங்களை எத்தனை முறை படமெடுத்தாலும் அலுக்காது. இதைச் செய்யும்போது சிற்பியின் மனநிலை, புதிதாக இருந்தபோது எப்படி அட்டஹாசமாக இருந்திருக்கும், அந்தச் சிற்பிகளும் சாதாரண வாழ்க்கைதான் வாழ்ந்திருப்பார்களா, எத்தனை பெரியவர்கள் இதனை நம் வாழ்க்கைக்கு முன் கண்டிருப்பார்கள்-அவர்கள் நடந்த, தொட்ட இடங்களல்லாவா என்பதெல்லாம் என் மனதில் இத்தகைய இடங்களில் தோன்றும்.
//இன்னும் நம்மூரில் பெண்களுக்கும் விளக்கங்கள் வேண்டி இருக்குமுன்னு நினைப்பு வரலை பாருங்க//
அட உங்களுக்குத் தெரியாதது எதுவும் இல்லை என்பது அவருக்குத் தெரியும்ல.
என்னுடைய மிகவும் முக்கிய நண்பர். திருச்சி யில் இருந்தால் தினசரி பெருமாள் தரிசனம் கட்டாயம் உண்டு
உங்க நல்ல நேரம் டீச்சர்... கோபால் சார்கிட்ட பல்ப் வாங்கலை.
பார்த்தசாரதி ஹோட்டல் சுமார். நீங்கள் எதிர்பார்க்கும் சுத்தம் இருக்காது. என் மனைவி, பசங்க அவ்வளவா லைக் பண்ணலை.
மண்டப சிற்பங்களைப் பார்க்கும்போது அவற்றில் சில வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலை நமக்கு நினைவூட்டுகின்றன.
கோவிலில் நல்ல தரிசனம் ஆச்சு.... மகிழ்ச்சி.
ஒவ்வொரு முறையும் திருவரங்கம் செல்லும்போதும் கோவிலுக்குச் சென்றாலும், தாயாரை மட்டுமே சேவிப்பது வழக்கம். அம்மா வழியே அய்யாவுக்கு ஒரு ஹாய்!
பயணத்தில் நானும் தொடர்கிறேன்.
திருவரங்கத்துக்குப் போனாலே டீச்சருக்கு சாமி வந்துருது. அரங்கன் உங்களை நல்லா பாத்துட்டான் இந்தவாட்டி. வாழ்க. வாழ்க. பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்க.
பிசினஸ் மேக்னெட் என்றால் எந்த இரும்பும் வந்து ஒட்டிக்கும். கோயில் பணியாளர்கள் மட்டுமென்ன.
பார்த்தசாரதிவிலாஸ் திங்கள் விடுமுறையா? இது எனக்கும் தெரியாது. ஆனா நல்ல கடை. தோசை அட்டகாசம்.
மிக மகிழ்ச்சி ...அவன் அருளால் மட்டுமே இப்படி நல்ல தரிசனம் கிடைக்கும்...
வாங்க தேனே!
என்ன இந்தப் பக்கம் அபூர்வமா!!! ரெங்கன் இழுத்து வந்தானோ!!! எப்படியாயினும் நீங்க வந்தது எனக்கு ரொம்பவே மகிழ்ச்சிதான்!
வாங்க ஸ்ரீராம்.
ஹாஹா.... அவர் காரில் அவர் விட்டார். பின்னால் வந்து நின்ன நம்ம வண்டியில் நாம் விட்டோம் :-)
வாங்க நெல்லைத் தமிழன்.
கவனிப்புக்கு நன்றி. ராமனையும் அனுமனையும் தூக்கிட்டேன் :-)
ஆழ்வார்களும் ஆச்சாரியர்களும் நடந்த பாதையிலும் நின்ற சந்நிதி வாசலிலும் நமக்கும் நடக்கவும் நிற்கவும் வாய்ப்பு கிடைச்சதேன்னுதான் நானும் நினைப்பேன் !
வாங்க விஸ்வநாத்.
க்க்கும்.... அப்படி வேற நினைப்பா? இனிமேல் 'எனக்குத்தான் தெரிஞ்சுக்கணும். என்னிடம் மட்டுமே சொல்லுங்க'ன்னு முந்திக்கப்போறேன் :-)
வாங்க அந்நோன்.
அட! இவர் உங்க நண்பரா !!!!!
வாங்க நெல்லைத் தமிழன்.
ஆஹா..... அதெப்படி பல்பு வாங்காம இருப்பது ???? வாங்கிட்டேன், மறுநாள் :-)
வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
இன்னும் நான் வேலூர்ப்பக்கமே போகலை.... இப்பதான் திருவண்ணாமலை கிடைச்சது. வேலூர் சீக்கிரம் கிடைக்கணும்!
வாங்க வெங்கட் நாகராஜ்.
ஐயா ரொம்பத்தான் பிகு பண்ணிக்கறார். அதுதான் அம்மாவழி போறோம்!
வாங்க ஜிரா.
இந்த திருப்பதி ஏழுமலையானுடன் டெர்ம்ஸ் சரியில்லாமப் போனதில் இருந்து, ரங்கனே என்னை ஸ்வீகரிச்சுட்டான்!
தரிசனம், நான் எதிர்பார்க்காததுதான்! திகைச்சு நின்னேன்! ஹைய்யோ.... எம்பெருமாளே.....
பார்த்தசாரதி விலாஸ் தோசையில் என் பெயர் இல்லை..... ப்ச்....
வாங்க ரமேஷ் ராமர்!
மிகவும் மகிழ்ச்சி!
மீண்டும் வருக!
வாங்க அனுராதா ப்ரேம்.
எல்லாம் அவனே! எல்லாம் அவன் அருளே!
Post a Comment