Friday, January 04, 2019

புலிக்குட்டி ..... !!! (பயணத்தொடர், பகுதி 50 )

வெரிவெல் ஆர்கனைஸ்டுன்னு சொல்வாங்க பாருங்க.....    அந்தச் சொல் இந்தப் புலிக்குட்டிக்குத்தான் பொருந்தும்!   அன்பு, பணிவு, இன்முகம், வயதில் பெரியவர்களுக்குத் தரும் மரியாதை,  டீச்சர் மேல் ப்ரியம் இப்படி எல்லாமும் அமைந்த குணநலன்களுடன் இருக்கும்  புலிகளுக்குப் பிறந்த இந்தப் புலிக்குட்டி வேற எப்படி இருக்குமாம்?
இந்த ஏழு வருஷப் பழக்கத்தில்  சீரான வளர்ச்சியுடன் இருக்கும் குழந்தை 'நல்லா இருக்கட்டும்' என்றுதான் எப்பவும் மனதார விரும்புகிறோம்!
படிப்பிலும் புலியேதான். கைவேலைகளிலும்  சூப்பர்!   குழந்தைகளுக்கான ஓவியம் வரைவதில் கில்லாடி!
எல்லாத்துக்கும் மேலே தாய்க்கு ரொம்ப அனுசரணையா நடந்துக்கும் குணம்!
அததுக்கு ஒரு இடம்,   சொந்தமாச் செஞ்ச அணிகலன்கள்  வரிசை, எல்லாமே பிரமாதம்!
அப்பா, அம்மா, மகள்னு மூவருமே பதிவர்கள்!  பதிவுலக நண்பர்கள்னு ஆரம்பிக்கும் நட்பு, ஒரு காலக்கட்டத்தில்  குடும்ப நண்பர்கள் என்பதையும் தாண்டி ஒரு உறவினர் என்ற மனநிலைக்குப் போயிருது !

 செல்லில் கூப்பிட்டதும், வாங்கன்னுட்டாங்க. தோழியும் மகளும்  நம்மை எதிர்பார்த்துக் காத்திருந்து  உபசரிச்சது மனநிறைவு!
ஏழுமணிக்குப் போனவங்க ஒன்பது மணிவரை பேசிக்கிட்டே இருந்தோம்! நண்பர், வேற ஊரில் இருந்து(ம்) நம்மோடு பேசினார்!  2011   ஜூலையில் தான் இவரை முதல்முதலாக சந்திச்சோம்.  அந்த நட்பு இவ்ளோ  வருஷங்களாத் தொடர்ந்து உறுதிப்பட்டு இருக்கு பாருங்க!

சமீபத்திய ஓவியங்கள், (ஃபேஸ்புக்கில் பதியாதவைகள் உட்பட) எல்லாமும் பார்த்து ரசித்தேன்.  குழந்தை மனம் பளிச். படங்களில் தெரியுது!
என்னென்னமோ சாப்பிடவும் கிடைச்சது. குலோப் ஜாமுனோ?  பேச்சு சுவாரஸியத்தில்  முழுங்கினது நினைவில்லை!

'வச்சுக்கொடுத்தவை'களை வாங்கினதும்  கிளம்பினோம்!  :-)
தோழியிடம்,   அங்கே எடுத்த படங்களை இங்கே பகிர்ந்துக்க அனுமதி வாங்கிக்கலை. அதனால்  ரங்கனுடைய 'அரண்மனை'ப் படங்களை இங்கே போட்டுருக்கேன் :-)

சம்பவம் நடந்தது  ஸ்ரீரங்கத்தில் தான் !  இதுக்குள்ளே ஸ்ரீரங்கம் பதிவர்கள் யாராக இருக்குமுன்னு ஊகிச்சு இருப்பீங்கதானே?   நம்ம வெங்கட் நாகராஜ், ஆதி வெங்கட்  அண்ட் ரோஷ்ணி வெங்கட்தான் :-)


ஹயக்ரீவா திரும்பினதும், பாலாஜி பவனில் டின்னர்!  அதே ரெண்டு  இட்லிதான். கூடவே ஒரு  கப்  பாதாம் பால் !
மன்னரிடம் இருந்து சேதி வந்தது! காலையில் ஆறரைக்கு ரெடியாக இருக்கணுமாம்!

தொடரும்....  :-)


14 comments:

said...

ஆரம்பித்த உடனேயே தெரிந்து விட்டது புலிக்குட்டி ரோஷ்ணி என்று. போதாக்குறைக்கு கீழே உள்ள ஓவியங்கள் காட்டிக் கொடுத்து விடுகிறது. தாய்க்கு அனுசரணை என்பது இன்னும் கூடுதல் பாஸிட்டிவ். வாழ்த்துகளும் பாராட்டுகளும் ரோஷ்ணிக்கு.

said...

ஆஹா.... இது நம்ம இடம் ஆச்சே! :)

தொடரட்டும் நட்பு.... சில சந்தர்ப்பங்களில் சந்திக்க்க இயலாமல் போகிறது. அடுத்த பயணத்தில் சந்திக்க அரங்கன் அருள் புரியட்டும்....

தொடர்ந்து பயணம் செல்ல நானும் ரெடி.

said...

ரொம்ப பெருந்தன்மையா எழுதியிருக்கீங்க டீச்சர்..உங்களையும் சாரையும் சந்திக்கறதில் எங்களுக்கு எப்பவுமே மகிழ்ச்சி.. இன்னும் உங்களை சரியா உபசரிக்க முடியலையேன்னு தான் வருத்தம்..எங்களுடைய உறவு வட்டத்தில் ஒருவராகத் தான் நினைத்துக் கொண்டிருக்கோம்.. இது என்றும் தொடரணும்..உங்களுக்கு வத்தல்களை கொடுக்க முடியாமல் போய்விட்டதே என்று வருத்தப்பட்டேன்..:)

said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் துளஸிக்கா குடும்பத்தாருக்கு ..
ரஜ்ஜு செல்லம் எப்படி இருக்கான் .
புலிகுட்டின்னு தலைப்பு பார்த்ததுமே கண்டுபிடிச்சிட்டேன் அது ரோஷினியாதான் இருக்கும்னு .
நேரில் பார்த்ததில்லை .ஆனால் அவளுடைய கைவேலைகள் சித்திரங்கள் எல்லாம் சொல்லும் குழந்தை அன்பான நற்குணமுள்ள பிள்ளை என்பதை ..வாழ்த்துக்கள் அண்ட் பிளெஸ்ஸிங்ஸ் செல்லத்துக்கு .

said...

ரோஷ்ணி கைவண்ணம் எல்லாம் மிக அருமை ....ரசித்தேன்

said...

நண்பர்களைச் சந்திக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உங்கள் சந்திப்பில் நீங்கள் உணர்ந்ததும் அதுவேதான். வாழ்க. வாழ்க.

”வச்சுக் கொடுக்குறது” மங்கலப் பொருட்களாகக் கொடுக்கனும். சடங்குக்குன்னு பிளாஸ்டிக் வெத்தலை, பிளாஸ்டிக் தேங்காய், பிளாஸ்டிக் பூன்னு கொடுக்குறது பொருத்தமாப்படல. காரணத்தை விட்டுட்டு காரியத்தைப் பிடிச்சுக்கிறது சரியில்லைன்னு தோணுது. இதைச் சொல்லலாமா வேண்டாமான்னு ரொம்ப யோசிச்சேன். ஏன்னா... பதிவை நீங்க சந்தித்த நண்பர்களும் படிப்பாங்க. ஆனாலும் முருகக்கடவுள் மேல பாரத்த போட்டுட்டு சொல்லீட்டேன். மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்.

said...

வாங்க ஸ்ரீராம் !

ரோஷ்ணியின் கைவண்ணம் நம்ம வலையுலகம் முழுசும் பாராட்டிய ஒன்றுதானே!

நல்ல குழந்தை என்றது என் மனசுக்கு ரொம்பவே திருப்தி !

நல்லா இருக்கட்டும், செல்லம் !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

சிலசமயங்களில் இப்படித்தான் அமைஞ்சு போகுது.....

அன்னமூர்த்தியை தரிசனம் செய்யும்போதெல்லாம் அப்பாவின் நினைவு. அவர் சொல்லலைன்னா, இவரைப்பற்றித் தெரிஞ்சே இருக்காது எனக்கு!

மிகவும் அன்புடன் விசாரிச்சதாகச் சொல்லுங்க.

said...

வாங்க ரோஷ்ணியம்மா,

உங்கள் உபசரிப்புக்கு என்ன குறைச்சலாம்? நேரம் போறது தெரியாம பேசி இருக்கோம்! மனசுக்குப் பக்கத்தில் இருக்கும் நட்பு உங்களோடது!

ரோஷ்ணியையும் அருமையாக வளர்த்துருக்கீங்க !

நல்லா இருங்க ! எங்கள் அன்பும் ஆசிகளும்!

வடாம் எல்லாம் இங்கெ கொண்டுவர முடியாதேப்பா.....

said...

வாங்க ஏஞ்சலீன்.

நலமா? உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்து(க்)கள்!

ரஜ்ஜு ரொம்பவே கெட்டுக்கிடக்கு. காலையில் நாலுமணிக்கே பிடுங்கல் ஆரம்பிச்சுருது. சோறு போடு, சோறு போடுன்னு படுக்கைச் சுத்திவந்து கார்பெட்டைப் பிறாண்டுறதும், என் மேலே குதிச்சு நடந்து போறதுமா....

நானும் இரு, இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டுமுன்னு சொல்லிக்கிட்டே தூங்குவேன். ஆறுமணிக்கு சாப்புட்டதும், எங்கெயோ போயிடறான். ராத்திரி பது, பத்தரைக்குத்தான் வீடு திரும்பல். கண்ணில் கொலைப்பசியோடு வருவான். வந்த விநாடியே சாப்பாடு கொடுத்தாகணும்.

சிலமாசங்களா இப்படித்தான். ரகசிய நடவடிக்கை.

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

மகிழ்ச்சிப்பா ! ரோஷ்ணி சார்பில் நன்றி !

said...

வாங்க ஜிரா.

அடடா..... தட்டைச் சரியாக் கவனிக்கலையே.....

எல்லா மங்கலப்பொருட்களும் (நிஜமானவை, நிழல் அல்ல!) ரவிக்கைத்துணியும், பூ மாதிரி இருக்கும் அகல் விளக்குகளுமா வச்சுக்கொடுத்தாங்க. நான் போட்ட படமும் அவைகளில் ஒன்று. அது ஒரு அலங்காரப்பொருள்! சுவரில் மாட்டி வைக்கலாம். இங்கே கொண்டுவரவும் முடிஞ்சது. நிஜப்பொருட்களைக் கொண்டுவர முடியாதே!

மேலும், இப்பெல்லாம் வெத்தலைபாக்கு போட்டுக்கறதே இல்லை. டென்ட்டிஸ்ட் கொள்ளை அடிச்சுடறாங்க. பயணத்துலே நிஜத் தேங்காயை வச்சுக்கிட்டு என்ன செய்ய?

தட்டை வாங்கினதும், தப்பா நினைச்சுக்காதீங்கன்னு சொல்லி இங்கே கொண்டுவரக்கூடியவைகளை மட்டுமே எடுத்துக்கறது ஒரு வழக்கமாப் போயிருக்கு.

நம்ம மக்களும் புரிஞ்சுக்கறாங்க. நினைவுப்பரிசைவிட நினைவுகளே முக்கியம், இல்லையோ!!!!

said...

உண்மையில் புலிக்குட்டிதான். வாழ்த்துகள்.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா!

புலிக்குட்டியின் சார்பில் நன்றி !