Wednesday, January 23, 2019

குகைக்குள் சிங்கம்! (பயணத்தொடர், பகுதி 58 )

இந்த நாமக்கல்ன்ற ஊருக்குள் நுழையறதுக்கு முந்தியே மலையும் மலைமேல் கோட்டை போல மதில்சுவரும் கண்ணில் பட்டது. அதே மலையாண்டை இப்போ வந்துட்டோம்.   நம்ம ஆஞ்சி கோவிலில் இருந்து சுமார் முன்னூறு மீட்டர் இருக்கலாம்.  கடைகளையும்,  வழியில் இருக்கும் ஆஞ்சி சந்நிதிகளையும் பார்த்துக்கிட்டே  அஞ்சே நிமிட்டில் நாமக்கல் நரசிம்ஹர்.....  கோவில் முகப்பு வாசலுக்கு  வந்துட்டோம்.

ராஜகோபுரம் எல்லாம் இல்லை. பேக்ட்ராப், இந்த மலையேதான். பெரிய கதவுகளைத் தாண்டி உள்ளே போனதும்  பெரிய கல்பாவிய (!) முற்றத்தில்  நேரெதிரா இன்னொரு பெரிய  கல்மண்டபம். அதுக்கு முன்னால் கல் தீபஸ்தம்பம், பலிபீடம், கொடிமரம்.

இங்கே ஒரு நல்ல ஏற்பாடு என்னன்னா.... சந்நிதிகள் விவரம் அழகாக  போட்டு வச்சுருக்காங்க.  நாம் எதையும் விடாமல் தரிசிக்க நல்ல உதவி!
முதல்  சந்நிதியே தாயாருக்குத்தான். நாமகிரித் தாயார்.  தரிசனத்துக்குப் போனால், திருமஞ்சனம் முடிஞ்சு அலங்காரம் நடந்துக்கிட்டு இருக்குன்னு திரை போட்டுருந்தாங்க.  சரி மூலவரைக் கும்பிட்டு வரலாமுன்னு போனோம்.

துளசி மாடம் ஒன்னு உசரமா! 'நல்லா இருக்கியா'ன்னு  விசாரிச்சுட்டுப் படியேறிப் போறோம்.  கொஞ்சம் உசரமான மண்டபத்து வாசலுக்கு  ரெண்டு பக்கமும்  நர்த்தன கிரிஷ்ணனும், நவநீத கிரிஷ்ணனுமா  நம்ம க்ரிஷ்ணாஸ் !



படிகளேறி உள்ளே இறங்கினால் உள் பிரகாரம்!

மண்டபத்துக்குள்ளே நுழைஞ்சு மூலவரை நோக்கிப்போகும்போது  சேனைமுதல்வர் சந்நிதியில் ஒரு நமஸ்காரம்!  மண்டபத்துக்குள்  நமக்கு வலப்பக்கம் பெரிய திருவடியும் அவருக்கு நேரெதிரா இந்தாண்டைக்கோடியில்  குகைக்குள்  மூலவரும்!

இடக்காலை மடிச்சு, வலக்காலைத் தொங்கவிட்டு அமர்ந்த கோலத்தில் ஸ்ரீ நரசிம்ஹர்.  அவருக்கு இடமும் வலமுமா சிவனும் பிரம்மாவும்.
ஆயிரத்து முன்னூறு வருஷத்துக்கு முந்தி பல்லவர்கள் கட்டுன கோவில் இது!  இந்தப் பல்லவர்களுக்குக் குகைன்னாவே ரொம்பப் பிடிக்கும்போல!  குடவரைக்கோவில்களின் ஸ்பெஷலிஸ்ட்டுகள் !   ஒரு மலையைப் பார்த்தால் போதும், குடைஞ்செடுத்துப் பெருமாளைச் செதுக்கியே ஆகணும் !  அதுவும் மஹாவிஷ்ணுவின் திருக்கோலங்களில் ரொம்பவே பிடிச்சது  நரனும் சிங்கமுமா இருக்கும் நரசிம்மவதாரம்தான் போல!  சிம்மம் பிடிக்குதுன்னுதான் அவுங்க கொடியில் கூட சிம்மமே இருக்கு!
போன பதிவில் சொன்ன புராணக் கதையில்  மஹாலக்ஷ்மிக்கும், ஆஞ்சிக்கும் தரிசனம் கொடுத்த அதே  வடிவில் இங்கே  எழுந்தருளியாச்சு!  சமாச்சாரம் கேள்விப்பட்ட சிவனும், ப்ரம்மனும் ஓடி வந்து தரிசனம் செஞ்சுருக்காங்க போல!
கோவிலில் இருக்கும் கல்வெட்டுகளில், இந்த க்ஷேத்திரத்தை அதியேந்த்ர விஷ்ணுகிருஹம்னு குறிப்பிட்டுருக்காங்களாம்!
நாம் கொஞ்ச நேரத்துக்கு முன்னால் தரிசனம் செஞ்ச பதினெட்டடி ஆஞ்சி இங்கே இருக்கும் மூலவரின் திருவடியை நோக்கிக் கைகூப்பியபடி நிற்பதாகவும்,  மூலவருக்கு முன்னால் இருக்கும் ஜன்னல் (!) வழியாகப் பார்த்தால் ஆஞ்சி தெரிகிறார்னும்  சொல்றதைக் கேட்டேன்.  மூலவருக்கு முன்னால் சாளரம் ஏது? ஙே.....  உண்மையாத் தெரியுதான்னு பார்க்க நாம் மூலவருக்குப்பின் போய் நின்னால்தான் உண்டு.  குடவரைக்கோவிலில்  மூலவருக்குப் பின்னே எப்படிப் போக முடியுமாம்? குகைச்சுவரில்தானே   பெருமாளைச் செதுக்கி இருக்காங்க.....   என்னமோ போங்க......  எப்படியெல்லாம்  திரிக்கிறாங்கன்னு பார்த்தால்...... ப்ச்.  ஒரு வேளை நரசிம்ஹரின் அகக்கண்களுக்கு ஆஞ்சி தெரியலாம், இல்லை?

எல்லா மண்டபங்களிலும் எக்கச்சக்கமான தூண்கள் ! அதுலேயும்  சிற்பச் செதுக்கல்கள் உண்டு!
பிரகாரத்தில் வலம் வந்து ஸ்ரீலக்ஷ்மிநாராயணர் சந்நிதிக்கு வந்துருந்தோம்.  தனிக்கோவில்போலத் தனி மண்டபத்தில் இருக்கார்.




பட்டர் ஸ்வாமிகள் தீபாராதனை  செஞ்சு, தீர்த்தம் சடாரி கிடைச்சது!  படம் எடுக்க அனுமதி கேட்டதும், எடுத்துக்கச் சொல்லிட்டார்!
பெரிய விசாலமான வெளிமுற்றத்தின் ஒருபக்கம் கிணறும்,  மரத்தடி மேடையில் நாகர்களுமா ஒரு சந்நிதி.

ஸ்தலவிருட்சம் பலா.... பட்டுக்கிடக்கு.....  ப்ச்.....  பால் மரம் பட்டுக்கிடக்கேன்னு மனசுலே  கொஞ்சம் கஷ்டமாத்தான் போச்சு....

திரும்பத் தாயார் சந்நிதிக்குப் போனோம். நல்ல கூட்டம். எதோ  பயணக்குழு மக்கள்!   கர்நாடகாவா இருக்கணும்.  கன்னடம் பேசிக்கிட்டு சந்நிதி முன்மண்டபம் நிறைச்சு நிக்கறாங்க.   சந்நிதிக்கு முன்பக்கம் பிரகாரத்தில் இருக்கும் திருமாமணி மண்டபத்தில் ஒரு பத்து நிமிட் போல நாங்க காத்திருந்து தாயாரை தரிசனம் பண்ணிக்கிட்டோம்.

இந்தாண்டை  மூணு சந்நிதிகள் நம்ம உடையவருக்கும், ஸ்ரீ ராம் & கோ வுக்கும், நம்மாழ்வாருக்குமா இருக்கு. தரிசனம் ஆச்சு. அப்புறம் பாமா, ருக்மிணியோடு கிருஷ்ணன், அந்தாண்டை நம்ம தேசிகர்னு தனிச்சந்நிதிகள்!
குட்டிவிமானத்தோடு ஒரு குட்டி மண்டபம்.   பெருமாள் பாதமோன்னு  சம்ஸயம். மஞ்சள் வஸ்த்ரத்தாலே மூடி வச்சுருக்காங்க.
இந்த  சாளக்ராம மலையின்  கிழக்குப் பக்கத்தில் ரங்கநாதர் சந்நிதி இருக்காம். நாம்   மலையின் மேற்குப் பக்கம் நிக்கறோம்.  மேலே நாமக்கல் கோட்டையும் அங்கே ஒரு  கோவிலும், ஒரு மசூதியும் இருக்காம்.  அங்கெல்லாம் போகலை.......
பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டக் கோட்டை இது.  அப்புறம் நம்ம திப்பு சுல்தான், ப்ரிட்டிஷ் படையை எதிர்த்து நின்ன  காலத்தில் கோட்டையைப் பலப்படுத்திப் பயன்படுத்திக்கிட்டாராம். மசூதி அந்த சமயம் கட்டி இருக்கலாம்.


கோவில் பகல் ஒரு மணி வரை திறந்துருக்கும்.(காலை  ஆறு மணிக்குத் திறந்துடறாங்க )சாயங்காலம்  அஞ்சு முதல் எட்டுவரையிலாம்.
இப்பவே மணி பனிரெண்டாச்சு. என்னுடைய விஷ் லிஸ்ட்டில் இருக்கும் இன்னொரு கோவிலையும் இன்றே பார்த்துட்டு ஸ்ரீரங்கம் திரும்பணும்.

வாங்க....  போகலாம்....

தொடரும் .....  :-

13 comments:

said...

கொல்லிமலை போனப்போ நாமக்கல் வழியா போன நினைவு. எறங்கி வெள்ளிரிப்பிஞ்சு வாங்கிய நினைவு. மத்தப்படி ஊருக்குள்ளயோ கோயிலுக்குள்ளயோ போனதில்ல.

said...

நல்ல சுத்தமாவும் ...

மெயின் ரோட்டில் இருந்தாலும் அமைதியான கோவில் இது ..

மீண்டும் ஒரு முறை நரம்மர் தரிசனம் ..அருமை

said...

அண்மையில் இக்கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றுவந்தேன். அருமையான கோயில்.

said...

/ஒரு வேளை நரசிம்ஹரின் அகக்கண்களுக்கு ஆஞ்சி தெரியலாம், இல்லை?/ எப்படியெல்லாம் மனதை சமாதானப்படுத்தும் முயற்சி

said...

அழகான கோவில். உங்கள் மூலமாக இக்கோவில் தரிசனம். நன்றி.

said...

Salaram is behind the periya thiruvadi sannadhi. You can see anjis eyes from periya thiruvadi sannadhi

said...

வாங்க ஜிரா.

வெள்ளரிப்பிஞ்சு இப்பவும் கிடைச்சது ! அருமை!

அடுத்தமுறை அந்தப்பக்கம் போனால் ஆஞ்சியையும் பார்த்துட்டு வாங்க ! பெருமாள் கோவிலும் அருமை!

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

உண்மை! நல்லா சுத்தமாத்தான் வச்சுருக்காங்க !

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா!!

இன்னும் ஒருமுறை போக எனக்கும் ஆவலே!

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

மனசு எப்போதும் சமாதானம் தேடுமே!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

உங்களுக்கும் பக்கம்தான். ஒருநாள் பயணமாப் போய் வாங்க, நேரம் கிடைக்கும்போது!

said...

வாங்க ராஜன்,

அடடா.... பெரிய திருவடியின் பின்பக்கச் சாளரமா!!!! பெருமாள்னு சொன்னதால்தான் குழம்பிட்டேன்.

பார்க்கலாம்.... இன்னொருமுறை வாய்க்குமான்னு.....

தகவலுக்கு நன்றி !

said...

Renganathar temple is also good and bigger than srirengam.
Here, sayanam is called as karkodaka sayanam because renganathar is lying on karkodaka snake.
The face of the snake resembles lion face