Friday, June 08, 2018

மன்னரை சந்தித்தேன் !

இவர் நம்மை சந்திக்க நம்ம வீட்டுக்கே வந்தார்னு சொன்னா நம்புங்க !துளசிதளத்தின் நெடுநாள் வாசகர் ஒருவர், ஒரு மாசத்துக்கு முன்னே  நம்ம பதிவு ஒன்னில் பின்னூட்டமா ஒரு சேதி அனுப்பி இருந்தார்.  அவருக்கு நம்ம மெயில் ஐடி தெரியாது.

'உங்க ஊருக்கு இத்தனாம் தேதி வர்றேன். நீங்க ஊரில் இருந்தால்  ச்சும்மா பார்த்துட்டு ஒரு ஹை சொல்லிக்கணும்.  செய்தியைப் பின்னூட்டமாப் போட்டதுக்கு மன்னிக்கணும்'

நமக்குத்தான் மாடரேஷன் இருக்கே. செய்தி தெரிஞ்சுக்கிட்டு, நானும் அதே பதிவில் பின்னூட்டமா 'உங்க மெயில் ஐடியை அனுப்புங்கோ. வெளியிடமாட்டேன்'னு ஒரு பதில் அனுப்பினேன். எனக்கும் அவருடைய மெயில் ஐடி தெரியாதே :-)

அப்புறம்  மெயில் மூலமா பேச்சு தொடர்ந்தது. அப்போதான் நம்ம சீனப்பயணம் நடந்துக்கிட்டு இருந்தது. அவுங்க எங்க  ஊரை விட்டுக் கிளம்பும் முதல்நாள் காலைதான் நாங்க ஊருக்கே திரும்பி வர்றோம்.  வந்ததும்  தகவல் சொல்றேன்னுட்டு, அதன்படியே ஆச்சு.

அன்றைக்கு  ஒரு நேரம் ஒதுக்கியாச்சு. ச்சும்மா ஒரு சந்திப்புதான். சமைக்க எல்லாம் மூட் இல்லையாக்கும். ஊர் திரும்புன பயணக்களைப்பு  இருக்கே! செட்டில் ஆக ரெண்டு மூணு நாள் ஆகும்....

சாயங்காலம் ஒரு ஏழு மணிக்கு நம்ம வீட்டுக்கு   மனைவியுடனும்,  நண்பர் குடும்பத்துடனும்  வந்தார்.
புதுசா ஒருத்தரை சந்திக்கறோம் என்ற எண்ணமெல்லாம் வலைஉலகம் வந்தபிறகு காணாமப் போயிருக்கு, இல்லே?

எல்லோருமாப் பேசிக்கிட்டு இருந்தோம்.  குடிக்க ஜூஸா இல்லை காஃபியான்னு உபசரிக்கிறேன்:-) ஒன்னும் வேணாமாம்!  'கொஞ்சம் சாமி ப்ரஸாதமாவது எடுத்துக்குங்க'ன்னுட்டு,   சீனப் பயணத்தை நல்லபடியா முடிச்சுக் கொடுத்த பெருமாளுக்குக் காலையில்  நைவேத்யமாச் செஞ்சுருந்த அக்காரவடிசல் கொஞ்சம் விளம்பியாச்சு :-)

அவுங்க எங்க தெற்குத்தீவு பயணம் என்று, மறுநாள் காலையில் கிளம்பிப்போறாங்க. ரொம்பவே அழகான இடங்கள் இதெல்லாம்.  ரென்டல் கார் எடுத்துக்கிட்டுக் கிட்டத்தட்ட ரெண்டு வாரம் சுத்திப் பார்த்துட்டு, திரும்ப எங்கூருக்கு வந்து, இரவு தங்கிட்டு  மறுநாள் அதிகாலை கிளம்பி வடக்குத்தீவுக்குப் போயிடறாங்கன்னு தெரிஞ்சது!

'பத்திரமா ட்ரைவ் பண்ணிப் போயிட்டு வாங்க'ன்னு சொல்லி, சாமி நமஸ்காரம் பண்ணிக்க சாமி அறைக்குக் கூட்டிப் போனோம்.  படம் எடுக்கலாமான்னு கேட்டாங்க!  (ஆஹா...  நம்ம இனம்! )  நம்ம பெருமாள், சிங்கைச்சீனு போல!  தாராளமாப் படம் எடுத்துக்கலாம்:-) ஆச்சு !  படம் எடுக்க எடுக்கப் பெருமாளுக்குப் பவர் கூடிக்கூடி வரும்! 

'ஒருவேளையாவது நம்ம வீட்டில் சாப்பிட்டுட்டுப்போனால் எனக்கு திருப்தியா இருக்கும். திரும்பி வந்து ஒரு இரவு  தங்கும்போது, அன்றைக்கு டின்னர் நம்ம வீட்டில்'னு சொல்லியாச்.

இதுக்கிடையில் விருந்தினர் வந்தவுடன், ஓடிவந்து பூனை ஜோஸியம் பார்த்துட்டு, 'பாஸிடிவ் வைப்' இருக்குன்னு சொல்லிட்டான் நம்ம ரஜ்ஜு :-)

அழகான உங்க நாட்டைச் சுத்திப் பார்த்துட்டு ** தேதிக்கு  வர்றோமுன்னு சொல்லிக் கிளம்புமுன் மெள்ளப்  பையிலிருந்து  ஒவ்வொன்னா எடுக்கறாங்க...............  ஹைய்யோ!!!!
அப்புறம்?

பனிரெண்டு நாட்கள், நம்ம நாட்டின் தெற்குத்தீவுக்கு மட்டுமே!  இந்த தினங்களில் அன்றாடம் தங்கின இடங்களையும்,  பார்த்து மகிழ்ந்த  சில முக்கிய சமாச்சாரங்களையும் வாட்ஸ் அப்பில் அனுப்பிக்கிட்டே இருந்ததால், நமக்கும் எதெது இன்னும்  பார்க்கணும் என்றெல்லாம்  சொல்ல வசதியாப் போச்சு.

திரும்பி நம்மூருக்கு  வந்த நாள்  மாலை  நம்ம வீட்டில் ஒரு டின்னர் ஆச்சு!
இந்தியா வரும்போது கட்டாயம் சந்திக்கறோமுன்னு வாக்கும் கொடுத்தாச்!

 எப்படியும் அவுங்க ஊருக்குப் போய்க்கிட்டுத்தானே இருக்கோம்!  திருச்சிக்காரர்கள்!

  இந்த வாசக நண்பர்தான் 'மலைக்கோட்டை மன்னன் ' என்ற பெயரில் துளசிதளத்தில் பின்னூட்டம் இடுவார்.  மன்னரின் குடும்பமும்  நண்பர் குடும்பமும்  சேர்ந்து, இப்போ நமக்குக் குடும்பநண்பர்களின் எண்ணிக்கை இன்னும் கூடி இருக்கு!

ரெண்டு குடும்பமும் தனித்தனியா அன்பளிப்புகள் கொண்டு வந்து  அசத்திட்டாங்க!

ஆமாம்....இப்ப எதுக்கு இந்தப் படம்?

ஹாஹா.... நீங்க வர்றப்ப இதைத் தவிர்த்து வேற பரிசுகள்  கொண்டு வரத்தான் ..... :-)
இப்படிப் பதிவர் வாசகர் சந்திப்பு அடிக்கடி நடக்கவேணுமுன்னு பெருமாளை வேண்டிக்கறேன் ! நீங்க வரும்போது, உங்க நண்பர்கள் குடும்பத்தையும் கூட்டிக்கிட்டு வாங்க :-)


16 comments:

said...

வலையுல வாசகர்களின் சந்திப்பு மகிழ்வினைத் தந்தது. அதனை நீங்கள் பகிர்ந்த விதம் நன்று. மன்னர் அறிமுகத்திற்கு நன்றி.

said...

வாழ்க நட்பூக்கள்!

said...

அழகிய சந்திப்பு. வாழிய நலம்.

said...

//ஒரு டின்னர் ஆச்சு!// குலாப்ஜாமூனோட ?

said...

ரொம்ப மகிழ்ச்சியான சந்திப்பு ல மா...அழகாக இருக்கு..

அந்த காலண்டர் தான் சூப்பரா இருக்கு...

என்ஜாய்..

இது மாதரி பல பல சரித்திர நிகழ்வுகள் நடக்கட்டும்..

said...

நன்றி டீச்சர். உங்கள் வீட்டிற்க்கு வந்தபோது எதோ வெகு நாட்கள் பழகிய,இடத்திற்கு வந்த மாதிரி ஒரு feeling. உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். நன்றி சொல்ல வார்த்தையில்லை

said...

மகிழ்ச்சி மகிழ்ச்சி. யாதும் ஊரே. யாவரும் கேளிர்.

said...

வாவ்... சிறப்பான சந்திப்பு பற்றி உங்கள் மூலம் அறிந்து கொண்டேன் மகிழ்ச்சி.

உங்கள் பதிவுகள் படிக்க விட்டுப் போயிருக்கு.... படிக்கணும்! வரேன் சீக்கிரமே.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

பதிவர் வாசகர் சந்திப்புகள் தரும் மகிழ்ச்சிக்கு அளவேது!

said...

வாங்க ஸ்ரீராம்.

மலர்கள் மலர்ந்தன!

நன்றீஸ் !

said...

வாங்க நெ த.

நன்றி!

said...

வாங்க விஸ்வநாத்,

நோ குலாப்ஜாமூன். ஒன்லி பாதாம் கேஸரி :-)

said...

வாங்க அனு ப்ரேம்.

அந்தக் காலண்டர்தான் இன்ப அதிர்ச்சி!

இதுக்காக மெனெக்கெட்டுருக்காங்க, அந்த அன்புதான் நெகிழ்ச்சிப்பா !

said...

வாங்க மலைக்கோட்டை மன்னன்,

நாங்களும் உங்களையெல்லாம் மீண்டும் சந்திக்க ரொம்பவே ஆவலோடு இருக்கோம். எல்லாம் நம்ம ரெங்கன் அருள்!

said...

வாங்க ஜிரா.

ரொம்பச் சரி ! எல்லாம் இணையம் தந்த கொடை!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

வலைப்பதிவில் இது வசதி. நமக்கு நேரம் இருக்கும்போது பார்க்கலாம், வாசிக்கலாம்.

இங்கேயும் இதே கதைதான்!

சந்திப்புகள் எப்போதும் இனியன!