Saturday, July 29, 2017

சனிக்கிழமை ஸ்பெஷல்: ஜாம் ஜாம்னு இன்றைக்கு யாம் யாம் !

எதோ   ஐரோப்பிய மொழியில்  J  உச்சரிப்பு இல்லையாமே.... அதுக்கு பதிலா  Y சொல்றாங்க பாருங்க.  ஜெர்மனி கூட  யெர்மனின்னு பார்த்த நினைவு.

இன்றைக்கு நாம் சமைக்கப்போகும்  யாம், இங்கே நியூஸியில் இப்போ ஒரு பத்து, பதினாலு வருசத்திய சமாச்சாரம்.  கிழங்கு வகைதான். மண்ணுக்குள்ளே விளையும் தங்கம்:-)

Yams grown in New Zealand originate from the South American Andes where they are known as oca.

Yams are one of the highest vegetable sources of carbohydrate and energy (kilojoules).  They are a good source of folate and also a source of vitamin A (from beta-carotene) and vitamin B6 plus contain potassium at levels of dietary significance.  Their yellow orange coloured flesh indicates the presence of carotenoids (yellow orange coloured yams) and anthocyanins (red skins and specks in the flesh).  While not as high as carrots, yams are a good source of beta-carotene.

இதைப் பத்தியும் இதை சமைக்கிறதைப் பத்தியும் நானும் ஒரு அஞ்சு வருசத்துக்கு முன்னே எழுதியிருக்கேன்.   அப்போ பார்க்காதவங்க இப்பப்  பார்த்துக்குங்க :-)  இதுலே நம்மூட்டு  சொந்த சாகுபடி இருக்கு.  விட்டுடாதீங்க :-)


பொதுவா குளிர்காலத்துலேதான்  இது கடைகளில் வருது.  உருளைக்கிழங்குலே செய்யும் அத்தனை வகைகளையும் இதுலே செஞ்சுக்கலாம் என்றாலும்.... இதுக்குத் தோலைச் சீவ வேண்டிய அவசியம் இல்லை. பட்டுப்போல் மென்மையான சருமம். பளபளன்னு ஜொலிக்கும்  சருமம் !

மேலே கொடுத்துருக்கும் சுட்டியிலும் சமையல் குறிப்பும் செய்முறையும் இருக்குன்னாலும்....   இப்ப இன்னும் கொஞ்சம் அதிகமா சோம்பல் உடம்புலே ஊறிப்போய் இருப்பதால்  அதைவிட இன்னும் சுலபமா செஞ்சுக்க  வழி கண்டுபிடிச்சாச்சு.

இந்த யாமில் ரெண்டு மூணு வகை  இருக்கு.  ஆரஞ்சு சிகப்பு, தங்கமஞ்சள்,  மஞ்சச் சிகப்புன்னு....



மேலே படம்: நம்ம வீட்டு சாகுபடி :-)

இந்த முறை கிடைச்சது இதுதான். கீழே இருக்கும் படம் :-)





யாமைக் கழுவி எடுத்துக்கணும்.  தலைப்பாகத்துலே கொஞ்சமா சீவிட்டால் போதும்.  செடியின் தண்டு இணைப்பு அது .

துண்டுகளாவும் போட்டுக்கலாம். ஆனால் தங்கக்காசா இருக்கட்டுமேன்னு  வட்டவட்டமா அரிஞ்சாச்சு.

ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து  மைக்ரோவேவில்      மூணு நிமிட்  ஹை பவர் (நம்மது 1100 வாட்)வச்சு எடுத்துடலாம்.  இது சமையலை இன்னும் சீக்கிரமா முடிக்கும் உபாயம்.


அடுத்து  ஒரு வாணலியில் எண்ணெய் நாலு டீஸ்பூன் விட்டுச் சூடானதும் சீரகம், கருவேப்பிலை தாளிக்கணும்.  (இப்பக் கொஞ்ச காலமா  நான் பஞ்சாபி தடுக்காவுக்கு மாறிட்டேன்.  அகத்தை சீராக்கும் சீரகத்துக்கே என் ஓட்டு !)






சீரகம் வெடிச்சதும், மஞ்சள் தூள், கொஞ்சூண்டு பெருங்காயத்தூள், ஒரு அரை டீஸ்பூன் உப்பு,  அரை டீஸ்பூன் கஷ்மீரி ச்சில்லிப்பவுடர்.  இதுலே உறைப்பு இருக்காது. ஆனால் மிரட்டும் நிறம் இருக்கும்! இதையெல்லாம் ஒவ்வொன்னா சேர்த்து இளக்கிட்டு அதுலே  மைவே வில் வெந்துவந்த யாமையும் சேர்த்து வதக்கிட்டு, கைவசம் இருக்கும்    இட்லி மிளகாய்ப்பொடி  ரெண்டு டீஸ்பூன் அளவில்  தூவிக்கணும்.

அச்சச்சோ.... இமி இல்லையா?  நோ ஒர்ரீஸ்......  குழம்புப்பொடி?  அதுலே ஒரு டீஸ்பூன்.  அதுவுமில்லையா.....   அரை டீஸ்பூன் மிளகாய்ப்பொடி, அரை டீஸ்பூன் தனியாப்பொடி.
அம்புட்டுதான்.

பார்க்கக் கொஞ்சம்  சுவாரசியமா இருக்கட்டுமேன்னு  அலங்கரிக்கப் பார்த்தால் புழக்கடைத் தோட்டத்துக்குப் போக முடியாமல் ஒரே மழை. அதான் கொஞ்சம் பூசணி விதை  அலங்காரம்!  பச்சை நிற அலங்காரத்துக்குன்னு பார்ஸ்லிச் செடி  வளர்க்கிறேன் :-)


இன்றையப் பதிவுக்கு சமையல் நடக்கும்போது  படம் எடுத்தவர் நம்மவர் :-)

இந்த சமையல் குறிப்பு வரப்போகும் ஈஸிபீஸி இண்டியன் ரெஸிபியில் இடம் பெறுகிறது!




16 comments:

said...

முதல் பரிசு உங்களுக்கே கிடைக்க வாழ்த்துகிறேன்.

said...

அடுக்கடுக்காய் அடுத்தடுத்த ஸ்டெப்களுக்கு படங்கள். ஸார் அசத்திட்டார்.

யாம்.. யாம் இதை முதலில் பார்க்கிறோம், கேள்விப்படுகிறோம்!

said...

எப்படி இருக்கும் இந்தச் சேனைக் கறி என்று தெரியவில்லை. ஏற்கனவே உங்கள் தளத்தில் படித்தது நினைவுக்கு வந்தது.

ஆமாம்் சமையல் கத்துக்குடுக்கறேன்னு ஆரம்பிச்சு இப்போ போட்டோகிராபியில் வந்து நிக்குதா?

said...

அட ஏதோ பழம் மாதரி ...அப்படியே சாப்பிட தோன்றும் பளபளப்பு யாம்...

ஈசி பிஸி ..சமையல்...சூப்பர்...

said...

கிழங்கு பாக்கவே பப்பளபளபளன்னு இருக்கு. இதெல்லாம் நம்மூர்ல கிடைக்காது.

சீரகம் தாளிக்கிறது நல்லதுன்னாலும் கடுகு தாளிக்கிறத ஏன் விட்டீங்க? கடுகும் நல்லதுதானே. அல்லது சுவைக்காகவா?

காஷ்மீரி சில்லி போட்டா கோழிக்கொண்டை மாதிரி செக்கச்செவேல்னு ஆயிருமே. நீங்க கொஞ்சமா போட்டிருக்கீங்க போல.

said...

யாம் - பார்க்க நல்லா இருக்கு. ருசியும் நல்லாவே இருக்கும்னு தோணுது....

இங்கே கிடைக்காது! கிடைச்சா ஒரு கை பார்த்திடலாம்!

said...

யாம் என்றால் சேனைக் கிழங்கு என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன்

said...

வாங்க கந்தசாமி ஐயா.

முதல் மூன்றும் நமக்கே !!! :-)

said...

வாங்க ஸ்ரீராம்.

சரியானபடி பயிற்சி கொடுக்கறேந்தானே :-)

துளசிதளத்தை எனக்குப்பின் நடத்தப்போவது இவர்தான்!

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

சமையல் ஒரு கலைன்னா.... ஃபொட்டாக்ராஃபியும் ஒரு கலை இல்லையோ? அதான் ஸைடு பை ஸைடா........ :-)

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

இங்கு கிடைக்கும் சமாச்சாரம் நான் சொல்லாட்டா எப்படி?

ஆமாம்.... மொய்மொய் தின்னுருக்கீங்களோ?

said...

படங்களைப் பார்த்தா நம்ம ஊர் சிறுகிழங்கு டேஸ்ட் இருக்கும் போல...

said...

வாங்க ஜிரா.

நேத்து தாளிப்பில் உங்களுக்காகக் கொஞ்சம் கடுகும் சேர்த்தேன்:-)

எல்லாப் பொடிகளும் உப்பு உள்படக் கொஞ்சம் குறைச்சுதான் போடறதே.... எல்லாம் அது போதும்னுதான் :-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.


கிவிபழங்கள் கூட இந்தியாவில் கிடைக்குதே.... அநேகமா இன்னும் கொஞ்ச நாட்களில் யாமும் இந்தியாவுக்கு வந்தாலும் வரும்தான்!

மலேசியாவில் இருக்குன்னு ஒருவர் பின்னூட்டி இருந்தார் ஃபேஸ்புக்கில்!

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

இது யாம் நியூஸி !

நம்ம சேனை இங்கே இல்லை :-( அதனால் சேனைக்குப்பதில் டாரோ
( Taro) பயன்படுத்துவேன்! கன்யாகுமரி/ கேரளாவில் கிடைக்குதே!

said...

வாங்க கொத்ஸ்.

லேசா ஒரு இனிப்பு இருக்கு இதில்!