Friday, July 07, 2017

நாரதா நாரதா.......... (இந்திய மண்ணில் பயணம் 27)

காலை ஆறேகாலுக்கு  எந்த ஒரு அனக்கமும் இல்லை மோனாலில்.   பால்கனிக் கதவைத் திறந்தால்  அலக்நந்தாகூட ஓசைப்படாமல் ஓடிக்கிட்டு இருக்காள்.  செவன் சிஸ்டர்ஸ்  இதோ கிளம்பி மோனலைச் சுத்திப் பார்த்துக்கிட்டு இருக்காங்க. சின்னதா ஒரு வீடியோ க்ளிப் ஆச்சு :-)



சீக்கிரமா தயாராகி, பேக்கிங் எல்லாம் முடிச்சோம்.  நேரா ப்ரேக்ஃபாஸ்ட்தான். நம்ம கலாவும் சுஜாதாவும் வந்து சேர்ந்தாங்க.
நமக்கு இட்லி ! தயிரும் கிடைச்சது.  மத்தது ஒன்னும் எனக்கு வேணாம்.  அஸ்ஸியும் டீம் லீடரும் (இவர் பெயர்தான் மறந்து போச்சு.....)  நல்லாவே உபசரிச்சாங்க.
பேசாம ஒரு பத்துநாள் இங்கே வந்து தங்கிடணும்.  நிம்மதியா இருக்கலாம்.
எட்டுமணிக்கெல்லாம் செக்கவுட்  பண்ணிட்டோம். அப்படியே  சேதி அனுப்ப வேண்டிய சொந்தங்களுக்கும் நண்பர்களுக்கும்  தகவலை அனுப்பினோம்.  காற்றுள்ளபோதே என்பதைப்போல   வைஃபை உள்ளபோதே செஞ்சுக்க வேண்டியவைகள் இவை:-)

 ரிஷிகேஷில் இருந்து     மேலே போனவழியாகவே திரும்பி  வந்துக்கிட்டு இருக்கோம்.   முதலில்  அன்றைக்கு  (எல்லாம்  நாலுநாளைக்கு முன்னேதான்!) மூடி இருந்த ருத்ரநாத் கோவிலைப் பார்த்துட்டுப்    போகணும்.  அதே சந்து. அதே பாதை!  ஸ்ரீராமஜெயம் எழுதுன பெரியவரைத் தான் காணோம்.  மத்யானமா உக்கார்ந்து எழுதுவார் போல!
நாரதர் தவம் செஞ்ச ப்ராச்சீன் கோவில் மேலே இருக்கு. போய் தரிசனம் செஞ்சுக்குங்கன்னு  ஒரு தகவல் பலகை  வச்சுருக்காங்க :-)
பாதையின் கடைசிக்குப்போய்   வலப்பக்கம் படிகள் ஏறி மேலே போனோம்.
படிகள் ஏறும்போதே மணி அடிக்கும் வகையில் மணிகள் மேலிருந்து  வருது!  துள்ஸி அண்ட் கோபால் ஆஜர் ஹோ....
சின்னச்சின்னதா தனித்தனி சந்நிதிகளா அங்கங்கே இருக்கு.  புள்ளையார் சந்நிதியிலும்  சிவன் இருக்கார்!
இன்னொரு சிவன் சந்நிதியில் ரெட்டை நந்திகள் செல்லம்போல இருக்கு.  நந்திகளுக்கு இடையில் ருத்ரரின் பாதம்!


 உள்ளே கருவறையில் லிங்கரூப சிவன், ருத்ரநாத்!      பண்டிட்  இருந்தார். அபிஷேகம் செய்ய செப்புக்குட கங்கையை நம் கைகளில் வார்த்தார். ருத்ரரின்  பாதங்களுக்கு அபிஷேகம் ஆச்சு.
கோவிலுக்கு மணிகள் வாங்கித் தந்தவர்கள் பெயர்கள் என்னன்னு மணியிலேயே எழுதி இருந்தது.  எனக்கு நம்மூர் ட்யூப்லைட் உபயம் நினைவுக்கு வந்துச்சு :-)
நம்மாட்களின் நடமாட்டம் அதிகம். எல்லா சந்நிதிக் கதவுகளையும் திறக்கும் முயற்சியில் இருக்காங்க :-)



வளாகத்தில் நிறைய சந்நிதிகள் ரொம்பவே சின்னதாத்தான் இருக்கு.  உடலைக்குறுக்கி உள்ளே போய் வரணும்.   பண்டிட் உள்ளே போய்  அப்ஷேகம் செஞ்சு நமக்குத் தீர்த்தம்  கொடுத்தார்.

நாரதருக்கு ஒரு தனிச்சந்நிதி.
கையில் தம்பூர் வச்சுருக்கார்.

ஒன்பதுதலை ஆதிசேஷன் பின்னால் இருக்க ஸ்ரீ லக்ஷ்மிநாராயணர் ஒரு சந்நிதியில்.
பைரவர் சந்நிதின்னு நினைக்கிறேன்.
ஒரே ஒரு பண்டிட். அதுவும் காலை நேர பிஸியில் இருந்தார். ஒவ்வொரு சந்நிதியையும் திறந்து அபிஷேகம் செஞ்சதும் உடனே கதவை மூடிக்கிட்டு அடுத்த சந்நிதி போகணும். கொஞ்சம் மறந்து போனால் அவ்ளோதான்...............  நடமாட்டம்  ஜாஸ்தி :-)
பாருங்க.... எப்படி பாவம் போல்  உக்கார்ந்துருக்கு :-)



சிம்மவாஹினி, ஆஞ்சி இப்படி சந்நிதிகளை தரிசனம் பண்ணிக்கிட்டே படிகளில் இறங்கி வந்து, இன்னொருக்கா  ருத்ரப்ராயாக் சங்கமத்தையும் ரசிச்சு கொஞ்சம் க்ளிக்ஸ்.  எவ்ளோதான் படங்கள் எடுத்துக்கிட்டே இருந்தாலும் தாகம் தணியறதில்லை....   டிஜிட்டல் கெமெரா வசதி :-)
ஆத்துலே போறதை அள்ளிக்குடி.... (கண்டுபிடிச்ச புண்ணியவான் நல்லா இருக்கணும்!)
கீழே இறங்கிப்போனால் அங்கிருக்கும் கோவிலையும் தரிசிக்கலாம் என்ற ஆசை இருந்தாலும்.........  படிகளைப் பார்த்துக் கொஞ்சம் பயந்துட்டேன். முழங்காலும் வேணாமுன்னு தடுத்துருச்சு.

இவ்வளவு பழைய கோவிலில் புதுசா ஒரு பளிங்கு மண்டபத்தில் ஸ்வாமிநாராயண் (நீல்கண்ட்) இருக்கார்!  இங்கே நம்மூரில்  இருக்கும் ஒரே கோவில் ஸ்வாமிநாராயண் கோவில்தான் என்றதால் எங்களுக்கு ஓரளவு  இவரைப்பற்றியும் தெரியுமே!  அட! நம்ம சாமின்னு போய் கும்பிட்டுக் கிட்டோம்.

ஆனாலும் என்னவோ பொருத்தமில்லாமல் இருக்கு இந்த மண்டபம்......
இந்த பத்ரிநாத் பயணத்தில் இன்னுமொரு விசேஷம் என்னன்னா....  பாஞ்ச் ப்ரயாகைகளை ரெவ்வெண்டு வாட்டி தரிசிப்போம்! போறதும் வாரதும் ஒரே வழி :-)
கோவிலில் இருந்து கிளம்பி  சாலைக்கு வந்தபின் ஒரு இடத்தில்  இருந்து பார்த்தால்  ருத்ரப்ரயாகின் முழு அழகையும் பார்க்கலாம்.  அங்கே நிறுத்தி நமக்குச் சமாச்சாரம் சொன்ன முகேஷுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.   ஹைய்யோ.... பார்க்கப் பார்க்கப் பரவசம்!

தொடரும்............  :-)

நம்முடைய  பதிவுலக   நண்பரும், துளசிதளத்தின் நெடுநாள் வாசகரும் ஆன பித்தனின் வாக்கு (சுதாகர்  திருமலைஸ்வாமி) திடீரென பூவுலகை விட்டு மறைந்து விட்ட சேதி கேட்டு மனசுக்கு  ரொம்ப வருத்தமாவும் அதிர்ச்சியாவும் இருக்கு  :-(   அன்னாருக்கு  நம் அஞ்சலிகளுடன், இந்தப் பதிவை  அவருக்கு சமர்ப்பிக்கின்றேன். 

13 comments:

said...


​படங்கள் அருமை. நண்பனின் கதவைத் திறக்கும் முயற்சி பெற்று விட்டதா, நாமும் உள்நுழையலாமா என்று மேலிருந்து ஆராயும் வாலாவதாரம் ரசிக்க வைக்கிறார்.

said...

//பித்தனின் வாக்கு (சுதாகர் திருமலைஸ்வாமி) திடீரென பூவுலகை விட்டு மறைந்து விட்ட சேதி கேட்டு மனசுக்கு ரொம்ப வருத்தமாவும் அதிர்ச்சியாவும் இருக்கு //


​அடடா..... இப்போது கூட சமீபத்தில் கீதாக்காவின் கண்ணன் பதிவுகளில் பின்னூட்டம் இட்டிருந்தாரே... எங்கள் அஞ்சலிகளும்..

said...

ஒன்பதுதலை ஆதிசேஷன் பின்னால் இருக்க ஸ்ரீ லக்ஷ்மிநாராயணர் சன்னதி...
ரொம்ப அழகா இருக்கு..

said...

பித்தன் என்ற சுதாகர் திருமலைஸ்வாமியின் ஆன்மா ஆண்டவன் திருவடிகளில் அமைதி பெற வேண்டுகிறேன். _/|\_

குரங்கர்கள் மண்ணில் நாம கோயிலைக் கட்டீட்டு குரங்கர்களை விரட்டப் பாக்குறோம். மனிதன் கொடியவனே.

நாரதர் மகாவிஷ்ணுவையெல்லாம் பாத்தா சமீபத்திய படைப்புகளாத் தெரியுதே.

ஓடும் நதி அழகு. அதைப் பார்ப்பதும் இன்னும் அழகு. படம் பிடித்தால் பெரும் அழகு. அதை அனைவரும் காணக் கொடுத்தால் பேரழகு.

said...

ஆங்காங்கே உங்கள் இருவரது புகைப்படங்களும் பார்க்க சந்தோஷமாய் இருக்கு

said...

அப்பாடா... ஒரு வழியா Backlog முடிச்சாச்சு.... பயணப் பதிவுகளை படிக்காமல் விட முடிவதில்லை - அதிலும் உங்கள் பயணப் பதிவுகளை.....

பித்தனின் வாக்கு - அதிர்ச்சி தந்த செய்தி.... அவரது ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகளும்.....

படங்கள் வழியே எல்லா இடங்களையும் தரிசிக்கத் தந்தமைக்கு நன்றி டீச்சர்.

said...

பயணத்தில் தொடர்கிறேன்.

பித்தனின்வாக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

said...

வாங்க ஸ்ரீராம்.

வாலாவதாரம்.......... ஆஹா.. ரசிக்க வைத்த சொல்லாடல் :-)

பித்தனின் வாக்கு.... எல்லோருக்கும் இப்படி அதிர்ச்சி கொடுத்துட்டார் பாருங்க :-(

நவீன கால வாழ்க்கையில் ஸ்ட்ரெஸ் அதிகமா ஆவதன் பலனோ....

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

நன்றி.

said...

வாங்க ஜிரா.

யானைகள் வாழ்விடத்தை இப்போ அழிச்சுக்கிட்டு இருக்கோம். இப்படி மற்ற யாருக்கும் இடமில்லாத வகையில் எல்லாத்தையும் சுயநலமா ஆக்ரமிச்சுக்கிட்டு இருக்கும் மனுஷனைவிடக் கொடிய விலங்கு வேறேதும் உண்டோ?

எனக்கும் அப்படித்தான் தோணுச்சு. ஒருவேளை பழைய சிலை பழுதாகிப்போய் புதுசு வச்சுருக்காங்களோ என்னவோ? என் ஆதங்கம் எல்லாம்.... இடங்களை முக்கியமாக் கருவறை, சந்நிதிகளை இன்னும் சுத்தமா வைக்கக்கூடாதான்னுதான்.... கங்கையே ஓடும்போது தண்ணிக்கென்ன பஞ்சம்?

நதியும் ஆறும் ஓடுனால்தான் அழகே!

சுதாகர் மறைவு உண்மையில் அதிர்ச்சியும் மனவேதனையும் கொடுத்துருக்கு.... :-(

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

மிகவும் நன்றி.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ஹைய்யோ..... படிச்சதும் இல்லாம எல்லாத்துக்கும் கையோட பின்னூட்டிக்கிட்டே போயிருக்கீங்க!!!!

இது என்னால் முடியாத ஒன்னு. அப்புறம் எழுதலாமுன்னு வாசிச்சுக்கிட்டே போயிருவேன், போயிருக்கேன்.


பித்தனின் வாக்கு..... சோகம்.......

said...

வாங்க மாதேவி.

நலம்தானே? உங்களைப் பார்த்தே ரொம்பநாள் ஆச்சு!


பித்தன்... ப்ச்.