Friday, July 14, 2017

ஆனந்துக்குப் பிடிச்சது ஆனந்த பைரவராமே! (இந்திய மண்ணில் பயணம் 30)

ஹரிகி பௌடி எல்லாம் வண்டியிலிருந்தே தரிசனம். அப்பதான்  ஆனந்த்,  'ஒரு அஞ்சு நிமிசம்  ஒரு கோவிலுக்குப் போயிட்டுப் போகலாமு'ன்னார்.   அவருடைய குலதெய்வமாம்.  சரின்னு போறோம்.  மூணு பக்கமும்  ஏராளமான அறைகளுடன் பெரிய கட்டடங்கள்.  ஆனந்தைப்பின் தொடர்ந்து   இங்கே அங்கேன்னு திரும்பிப்போய்  ஒரு கோவில் வளாகத்துக்குள் நுழைஞ்சோம்.
ஆனந்த பைரவர் கோவில்!  அட....  இங்கே போன பயணத்தில் வந்துருக்கோமே!  இது மாயாதேவி கோவில் வளாகம்தானே?   ஆமாமாம்!
போய் கும்பிட்டாச்.  பக்கத்துலே  ஒரு நவக்ரஹக் கோவில் இருக்கணுமே....  ஆமாம்னு அங்கே கூட்டிப்போனார். போறவழியில்  நிறைய மாடுப் பாப்பாக்கள். கோசாலா இருக்காம்!

நவக்ரஹக்கோவிலில் போனமுறை பார்த்தப்ப ஒரு பெரிய மரத்தை வெட்டாமல்  அதைச் சுற்றியே சந்நிதி  அமைச்சுருந்தாங்க. இப்பப் பார்த்தால் மரத்தைக் காணோம்!

நேரம் இருந்தால் ஒரு எட்டு எட்டிப் பாருங்களேன்  இங்கே :-)


இங்கெல்லாம் நாம் ஏற்கெனவே வந்துருக்கோமுன்னு தெரிஞ்சதாலோ என்னவோ ஆனந்தின் முகத்தில் கொஞ்சம் இளக்கம் வந்ததாக எனக்கொரு தோணல் :-)
தில்லி போகும் சாலையில்  ஹரித்வார் எல்லைக்குள்ளேதான் புதுசா முளைச்சுருக்கு  சனி பகவான் கோவில். சனிப்பூர்!  அஞ்சாறு வருசத்துலே எத்தனை மாறுதல்கள் பாருங்க!  அடையாளமே தெரியறதில்லைபா! கட்டி முடிச்சு அது பழசாவும் ஆகிப்போச்சு பல கட்டடங்கள் !

ஸஹரன்பூர் வந்தவுடன்  உத்தரகண்ட் மாநில எல்லை முடிஞ்சு  நாம் ஹர்யானாவுக்குள் போகணும். இங்கே  வேற மாநில எல்லைக்குள் போக பர்மிட் வாங்கிக்கணும். அதுக்கு  ரெண்டாயிரத்தைஞ்ஞூறு  வாங்கிக்கிட்டாங்க.

கொஞ்சம் அதிகமாத் தோணுச்சு :-(  ஒன்னாவது இது  டூரிஸ்ட் வண்டியாம். ஆறுமாசம் வரை  இந்த பர்மிட் செல்லுமாம்.  ஆமாம்... நாம் இப்போ எங்கே போறோமுன்னு சொல்லலை இல்லை?  சண்டிகர் போறோம்.  அதுசரி.  நம்மைப்போல தினம் தினம் சண்டிகர் போகும் சவாரி கிடைக்குதாமா?

சண்டிகருக்கு   இப்ப     எதுக்கு?

  ஹாஹா... க்ரிமினல்ஸ் எப்பவும் க்ரைம் நடந்த இடத்தைப் போய்ப் பார்க்க ஆசைப்படுவாங்களாமே!!  :-)

ரிஷிகேஷில் இருந்து சண்டிகர் ஒரு  219 KM தூரம்.  அஞ்சே  முக்கால் மணி நேரம் ஆகலாம்.

பகல் சாப்பாட்டுக்கு  யமுனா நகருக்கு முன்னாலே வரும் சாகர் ரத்னா என் ச்சாய்ஸ்.  அதேதான் நானும் நினைச்சேன்னார் நம்மவர்.  இதெல்லாம் நமக்கு நல்லாவே நினைவிருக்கும் :-) அந்த அத்துவானக் காட்டுலே இப்படி ஒரு  இடம் ஏதோ கனவு ஸீன் மாதிரிதான். கூடவே ....    எத்தனையோ மாறி இருக்கும்போது  இதுவும் இருக்கோ இல்லையோன்னு லேசா ஒரு சம்ஸயம்.  இருந்துச்சு :-)



இன்னும் லஞ்ச் டைம் ஆரம்பிக்கலை. இந்தியாவில் அநேகமா எல்லோரும்  லேட் லஞ்சுதான்.  பகல் ரெண்டுமணிக்குப்போனா ரெஸ்ட்டாரண்ட் எல்லாமே நிரம்பி வழியும்!  இப்போ மணி பனிரெண்டே முக்கால்தான்.


தயிர்சாதம், இட்லி வடை ஒரு கேஸரி நமக்கு.  கூடவே ஒரு ஃபில்ட்டர் காஃபி. ஆனந்த்க்கு  தோஸா  சாம்பார்  அண்ட் சாயா!

யமுனாநகர் தாண்டுனதும்  இன்னொரு இடத்துலே  காசு கட்டவேணும்.  என்னவோ கணக்கு போட்டு  வச்சுருந்தாங்க.  ஆனந்த் போய் கட்டிட்டு வந்தார்.  நமக்கு  நவீன் இதெல்லாம் சேர்த்துதான் ஒரு சார்ஜ் செஞ்சுருந்தார். ப்ளைட் எடுக்கலாமுன்னா....  ரிஷிகேஷ், டெஹ்ராடூன், தில்லி, சண்டிகர்னு  சுத்தணும்.
பஞ்ச் குலா போகும் சாலையில் பறக்கறோம்.  அவ்வளவாப் போக்குவரத்து இல்லை. சொன்னால் நம்பமாட்டீங்க.....  முத்தூட் ஃபைனான்ஸ் இவ்ளோதூரம்  வந்துருக்கு !!!  இடம்  ஜகாத்ரி !


சண்டிகர் செக்டர் 17, ஹொட்டேல் ஷிவாலிக் வ்யூ வந்து சேர்ந்தப்ப மணி  மாலை நாலே முக்கால்.  கிளம்புனதுலே இருந்து  கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் ஆகி இருக்கு.  லஞ்ச் ப்ரேக் சேர்த்துதான்.    இப்ப ஆனந்த்  இதே ஏழு மணி நேரம்  தனியா வண்டி ஓட்டிக்கிட்டுப் போகணும் ஹரித்வாருக்கு.  பத்திரமாப் போகச் சொல்லி, வழிச்செலவுக்குக் கொஞ்சம் அன்பளிப்புக் கொடுத்து அனுப்பினோம். அப்படியே ஒரு க்ளிக்  :-)
சண்டிகர் முழுக்க  ரௌண்டபௌட்ஸ்ன்னு சொல்லும் வட்ட டிஸைன்கள்தான் நாற்சந்தி முழுக்க.....  இந்த   வட்டங்களில்  செடிகள் வச்சு அலங்காரம் செஞ்சுருப்பாங்க. ஒன்னொன்னும் ஒரு டிஸைன். இதுதான் நமக்கு  அடையாளம் அங்கெ இருந்தப்ப.  இப்பவும் மாறாமல் இருக்கறது இந்த அடையாளங்களே!  அப்பாடா.....   வழி கண்டுபிடிக்க  கஷ்டப்படவேணாம்....
இதுக்கு இவுங்க சொல்லும் பேர் என்ன தெரியுமோ?   கோல்ச்சக்கர்.  ஊர் முழுக்க கோல்சக்கர்கள்தான்  :-)

இன்னொரு முக்கியமான சமாச்சாரம் என்னன்னா.....   இந்த கோல்ச்சக்கர்களில் சிலைகள் முக்கியமா அரசியல்வியாதிகளின் சிலைகள் எதுவுமே கிடையாது!  பொது இடங்களில் நோ நோ நோ  !

தொடரும்......  :-)

10 comments:

said...

திட்டமிட்ட நகரம் சண்டிகர்.... இன்னும் பராமரிப்பது நல்ல விஷயம். அங்கேயும் பஞ்ச்குலாவிலும் உள்ள தீம் பூங்காக்கள் எனக்குப் பிடித்தவை. பஞ்ச்குலாவில் ஒரு கேக்டஸ் பூங்காவில் எத்தனை வகை கேக்டஸ்!

பயணம் தொடரட்டும்..... நானும் தொடர்கிறேன்.

said...

அருமை. நன்றி.

said...

மரத்தை வெட்டி கோயில் கட்டி பக்தி வளர்த்து என்ன பயனோ! மரத்தின் பெருமை அறியாத மக்கள்.

அந்த தோசையை பெரிய தட்டுல கொடுத்திருக்கலாம். பாத்தா தோசையை டேபிள்ள போட்டுச் சாப்பிடுற மாதிரி இருக்கு.

சண்டிகர் ரொம்ப அழகான ஊர்னு கேள்விப்பட்டிருக்கேன். அலுவலக வேலையா முந்தி ஒருவாட்டி போக வேண்டி வந்தது. ஆனா வேற காரணங்களால போகல. போக ஆசை உண்டு. சண்டிகருக்கு ஒரு டிரிப் போட்டுற வேண்டியதுதான்.

said...

புகைப்படத்தில் தோசையை தட்டில் இல்லாமல் டேபிளின்மீது அப்படியே வைத்திருப்பது போல இருக்கிறது!​

தொடர்கிறேன்.

said...

நாமும் சண்டிகர் வந்து விட்டோம்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ரொம்ப வண்டிகள் இல்லாத காலத்துலே கோல்ச்சக்கர் வச்சது சரி, இப்ப என்னன்னா வண்டிகள் அதிகமாகி, மனுசருக்கும்பொறுமை இல்லாததால் எப்பப் பார்த்தாலும் விபத்து. ஒவ்வொரு கோல்சக்கர் பக்கத்திலும் ஒரு ஆம்புலன்ஸ் நிக்கும் நாங்க அங்கே இருந்தப்ப. இப்ப கோல்சக்கருக்குள் ட்ராஃபிக் லைட்ஸ் வச்சுருக்காங்க.

அந்த கேக்டஸ் பார்க் எனக்கு ரொம்பப்பிடிச்சதுதான். அப்போ எழுதுனது இங்கே :-)

http://thulasidhalam.blogspot.com/2010/06/blog-post_16.html

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றி.

said...

வாங்க ஜிரா.

நடுவிலே மரத்துக்கு ஒரு துளை ஸீலிங்லே போட்டுக் கட்டி இருந்தாங்க. அப்புறம் என்ன ஆச்சோ? ஒருவேளை மரம் காத்துலே ஒடிஞ்சு விழுந்ததோ என்னமோ....ப்ச். ஆனால் பெருசாத்தான் இருந்தது போனமுறை. இப்பச் சின்னச் செடி ஒன்னு இருக்கு. முளைச்சு வருமுன்னு நினைக்கிறேன்.

தோசைக்குத் தகுந்த தட்டு இன்னும் வாங்கலை போல....

வாய்ப்பு கிடைச்சால் சண்டிகர் போயிட்டு வாங்க. நிறைய சுவாரசியமான சமாச்சாரங்கள் இருக்கு.

said...

வாங்க ஸ்ரீராம்.

தட்டு சின்னதாப் போச்சுங்க... அதான்.... :-)

said...

வாங்க மாதேவி.

வருகைக்கு நன்றிப்பா!