குளிர்காலம் முடிஞ்சு வசந்தமும் வந்து போய் கோடை எட்டிப் பார்க்கும்வரை இங்கே கிடைக்கும் காய்கறிகளை வச்சுத்தான் ஒப்பேத்தணும்.
முட்டைக்கோஸ், காலி ஃப்ளவர், ப்ரோக்கொலி, கேரட் , உருளைக்கிழங்கு இதுகளை வச்சு எத்தனை விதம்தான் சமைக்கிறது சொல்லுங்க......
இன்றைக்கு ஒரு குருமா செஞ்சுடலாமா?
மேலே சொன்ன காய்கறிகளில் உருளையை விட்டுட்டு மத்த நாலையும் கொஞ்சம் எடுத்துக்கலாம்.
படத்துலே காண்பிச்ச மாதிரி நறுக்கி வச்சுக்கணும். ஏறக்கொறைய ஒரே சைஸுலே இருந்தால் பார்க்கக் கொஞ்சம் நல்லா இருக்கும்:-)
முட்டைக்கோஸ் ஒரு 200 கிராம் அளவு. பொடியா நறுக்க வேண்டாம். கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் அலசி எடுத்து வடிகட்டியில் போட்டு வடிய விடலாம்.
இஞ்சி, பச்சமிளகாய், பூண்டு மூணும் சேர்த்து அரைச்ச பேஸ்ட் இருந்தால் அதுலே ஒரு டீஸ்பூன். நம்ம வீட்டில் இதைக் கொஞ்சம் அதிகமாகவே அரைச்சு ஐஸ் குயூப் ட்ரேயில் வச்சு ஃப்ரீஸ் பண்ணி எடுத்துக்கிட்டு அதை ஒரு ஃப்ரீஸர் பையில் போட்டு ஃப்ரீஸரில் போட்டு வச்சுக்குவேன். க்ரீன் மஸாலான்னு இதுக்குப் பெயர்.
தக்காளி, வெங்காயம் தலா ஒரு அம்பது கிராம். ( அய்ய.... ரெண்டு தக்காளி, ஒரு வெங்காயம்!) பொடியா அரிஞ்சு வச்சுக்கணும். நாந்தான் இதையுமே வதக்கி ஃப்ரீஸ் செஞ்சுருக்கேனே.... அதில் இருந்து ஒரு நாலு க்யூப்.
கசகசா, தேங்காய், அஞ்சு பாதாம், அஞ்சாறு முந்திரிப் பருப்பு நல்லா மைய்யா அரைச்சு வச்சுக்கணும். சட்னி ஜாரில் முதலில் கசகசாவை மட்டும் போட்டு அரைக்கணும். எல்லாத்தையும் சேர்த்து அரைச்சால் கசகசா அரைபடறதில்லையாக்கும்....
நல்லா மசிஞ்ச பிறகு பாதாம், முந்திரி சேர்த்து அரைச்சுட்டு, அப்புறம் தேங்காய்த்துருவல் சேர்த்து அரைக்கணும். அப்பப்பக் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைச்சுக்குங்க. தேங்காய்ப்பால் இருந்தால் அதையேகூடப் பயன்படுத்திக்கலாம். எல்லாம் நம்வசம் இருக்கும் பொருட்களைப் பொறுத்துதான் சமையலே :-)
எல்லாம் எடுத்து தயாரா வச்சாச்சா? இனி ஆரம்பிக்கலாம்.... நம்ம கச்சேரியை :-)
ஒரு பெரிய வாணலி எடுத்து அடுப்பில் வச்சு ஸ்டவை ஆன் பண்ணிருங்க. மிதமான தீயிலே இருக்கட்டும். நெய் ஒரு மூணு டீஸ்பூன் அதுலே சேர்க்கலாம். நெய்யேதான் வேணுமுன்னு இல்லை. ஆனா நெய்யா இருந்தால் நல்லா இருக்கும். சுவை கூடுதல். இல்லைன்னா உங்களிடம் இருக்கும் சமையல் எண்ணெய் ரெண்டு டீஸ்பூனும், ஒரு டீஸ்பூன் நெய்யுமா இருந்தாலும் ஓக்கேதான்.
முக்கால் டீஸ்பூன் சோம்பு போட்டு வெடிக்கவிட்டு, க்ரீன் மஸாலா ஒரு டீஸ்பூன் சேர்க்கலாம். நான் கிரீன் மஸாலா க்யூப் ஒன்னு சேர்த்தேன். பச்சை வாசனை போனதும் மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்துட்டு, அரிஞ்சு வச்சுருக்கும் வெங்காயம் சேர்த்து வதக்கணும். அப்படியே அதுலே ஒரு டேபிள் ஸ்பூன் தனியாப் பவுடர் போட்டுக்கணும். கூடுதலா காரம் வேணுமுன்னா நாலு பச்சை மிளகாயைக் கீறிப்போட்டு வெங்காயத்துடன் வதக்கிக்கலாம்.
நம்மிடம் சகல சமையலுக்கும் ஒரே வித்தைன்னு தக்காளி வெங்காயம் க்யூப்ஸ் இருப்பதால் அதை அப்புறமாச் சேர்த்தேன். ஏற்கெனவே வதக்கப்பட்ட சமாச்சாரம் என்பதால் நோ பச்சை வாசனை.
வெங்காயம் வதங்கும் நேரத்தில் மைக்ரோவேவ் ஸ்டீமரில் கேரட்டை வச்சு ஒன்னரை நிமிட் ஸ்டீம் செஞ்சுக்கலாம். வெங்காயம் வதங்கியதும் கேரட்டைக் கடாயில் போட்டுட்டுக் கையோட காலிஃப்ளவர், ப்ரோக்கொலியை அதே ஸ்டீமரில் இன்னும் ஒன்னரை நிமிட் மைக்ரோவேவில் வச்சு எடுக்கலாம். இதெல்லாம் சமைக்கும் நேரத்தைக் குறைக்கும் உபாயம்.
நோ ஸ்டீமர்? நோ ஒர்ரீஸ். வெங்காயம் வதங்குன கையோடு முதலில் கேரட்டை மட்டும் சேர்த்து கால் கப் தண்ணீரும் ஊத்தி வேகவிடலாம். கேரட் சட்னு வேகாது என்பதால் அதுக்கு முன்னுரிமை.
ஆச்சா.... இப்ப பச்சையும் வெள்ளையுமா காலிஃப்ளவர், ப்ரோக்கொலியைச் சேர்த்துக்கிளறி, தண்ணீர் இருக்கான்னு பார்த்துட்டு தேவைன்னா இன்னும் கால் கப் தண்ணீர் சேர்த்து வேகவிடணும். முக்கால் வாசி வெந்ததும் ஈரம் வடிய விட்டுருக்கும் முட்டைக்கோஸ் போட்டுடணும். தண்ணீர் விட வேணாம். இதுவே தண்ணி விட்டுக்கும். ஒரு மூடி போட்டு அடுப்பின் தீயைக் கொஞ்சம் குறைச்சுக்கலாம்.
நாலு நிமிட் ஆனதும், எல்லாத்தையும் சேர்த்து நல்லாக் கிளறிவிட்டுட்டு, அரைச்சு வச்சுருக்கும் தேங்காய் கசகசாக் கலவையை வாணலியில் சேர்த்துட்டு, சட்னி ஜாரில் இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அதில் பாக்கி ஒட்டிப்பிடிச்சு இருக்கும் கலவையை முழுசாக் கலக்கி அடுப்பில் வேகும் காய்கறிகளில் சேர்க்கணும். அதெல்லாம் ஒட்டக் கறந்துட்டுத்தான் விடுவேன் :-)
ஒரு கொதி வரட்டும். துள்ஸீ'ஸ் மசாலா அரை டேபிள் ஸ்பூன் அதன் தலையில் போட்டுட்டு நறுக்கியக் கொத்தமல்லி இலைகளையும் போட்டு ஆசிர்வதிச்சால் உங்கள் குருமா ரெடி!
ஆமாம்... துள்ஸீ'ஸ் மசாலா இல்லைன்னா கொஞ்சம் கரம் மசாலாத் தூள் போட்டுக்குங்க. ஆனாலும் துள்ஸீ'ஸ் ருசி வராது கேட்டோ :-)
சரின்னும் இதுக்கும் ஒரு செய்முறை சொல்லிடறேன். அரைச்சு ஒரு பாட்டிலில் போட்டு வச்சுக்குங்க. தேவைப்படும்போது பயன்படுத்திக்கலாம். சரியா?
மசாலா தயாரிக்க :
கிராம்பு 30 கிராம்
பட்டை 30 கிராம்
ஏலக்காய் 30 கிராம்
மிளகு 10 கிராம்
சோம்பு 100 கிராம்
கொஞ்சமாத் தயாரிச்சால் போதுமுன்னா ஒரு டீஸ்பூன் கிராம்பு, பட்டை, ஏலக்காய், அரை டீஸ்பூன் மிளகு, சோம்பு ரெண்டு இல்லை மூணு டீஸ்பூன் என்ற அளவில் செஞ்சு பாருங்க.
இது எல்லாத்தையும் ஒரு வாணலிலே லேசா வறுக்கணும். அடுப்பை மெலிசா எரிய விடுங்க. எண்ணெய் வேணாம்.
சும்மா 'ட்ரை'யா, இளஞ்சூடா வறுத்து, ஆறியவுடனே, 'மிக்ஸி ட்ரை ஜார்'லே போட்டு அரைச்சு வச்சிரணும்.
காத்துப் போவாத டப்பாலே வச்சிருங்க. அவ்வளவுதாங்க! ஜமாய்ங்க!
இந்த குருமாவுக்குத் தேவையான மசாலா வகைகள் எல்லாம் ஃப்ரீஸரில் வச்சுருந்ததால் சட்னு செஞ்சுமுடிச்சுட்டேன். ஸிம்பிள் அண்ட் சுலபம் :-) இப்படியெல்லாம் நேரம் மிச்சம் பிடிச்சுத்தான் எழுத்துலகில் நம்ம சேவை நடக்குதுன்னு சொன்னால் நம்புங்க ப்ளீஸ்....
மேலே படம்... நம்ம வீட்டாண்டை இருக்கும் கறிகாய்க் கடை!
இந்த சமையல் குறிப்பு வரப்போகும் ஈஸிபீஸி இண்டியன் ரெஸிபியில் இடம் பெறுகிறது!

8 comments:
Nice kurma!! Adding dessicated coconut தான் கொஞ்சம் இடிக்குது..ஃப்ரெஷ் அல்லது ஃபரோஸன் தேங்கா கூட ஓகேதான்!! இந்த தேங்காபொடி பொரியலுக்கு மட்டும்தான் யூஸ் பண்ணறது!! என்ன செய்ய..நாக்கு ஒண்ணரையடி நீளம் டீச்சர்! 😊
வாங்க மஹி.
ஆஹா.... எல்லாம் கூந்தல் இருக்கறவங்க கொண்டை போட்டுக்கலாம்!!!! இதுவாவது கிடைக்குதேன்னு சந்தோஷப்பட்டுக்கணும் நாங்க. சமீபகாலமா ஃப்ரோஸன் செக்ஷனில் (இண்டியன் கடைகளில்) தேங்காய்த்துருவல் கிடைக்க ஆரம்பிச்சுருக்கு. அதை ரொம்ப அருமையா எடுத்துவச்சு புட்டு, தேங்காய்ச் சட்டினிக்கு பயன்படுத்திக்கறேன். இந்த தேங்காய்த்தூளைக் கொஞ்சம் வெந்நீரில் பிசறி வச்சுட்டால் ஹைட்ரேட் ஆகிரும்ப்பா.
நல்லாத்தான் இருக்கு. ஏகப்பட்ட ஃப்ரோசன் ஐட்டம்ஸ். அடுத்ததடவை கசகசா முந்திரி... கலவையையும் மொத்தமா தயார் பண்ணி ஃப்ரீஸ் பண்ணச் சொல்லிருவீங்க போலிருக்கு.
செய்யவில்லை என்றாலும் துளசி சொல்லும் அருமையான செய்முறை விளக்கம் படிக்க சூப்பர்.
காய்கறிகள் வெட்டி வைத்து இருப்பது பார்க்கவே அழகு.
வாங்க நெல்லைத் தமிழன்.
ஐடியா அருமை. ஆனால் அடிக்கடி செய்யறதில்லைன்னுதான்........
பேசாம ஃப்ரீஸர் குக்கிங்னு தலைப்பு வச்சுறலாம்! :-)
வாங்க கோமதி அரசு.
கெமெராவுக்குத்தான் நன்றி சொல்லணும் :-)
வாங்க வெங்கட் நாகராஜ்.
தவறுதலா உங்க பின்னூட்டம் டிலீட் ஆகிருச்சு. மன்னிக்கணும். செல்லில் பார்த்துக்கிட்டு இருந்தேன் அப்போ :-(
பின்னூட்டம் இது.
'நல்லா இருக்கு.... வீட்டுல சொல்லி செய்து தர சொல்லணும்! :) '
ரொம்பக் கஷ்டமில்லை. உங்க தில்லி சமையலிலும் செஞ்சுக்கலாம் :-)
குருமா சுவை.
மசாலாப்பொடி செய்து வைத்துவிடுவேன்மற்றவை தேவையானபோது
Post a Comment