Saturday, July 01, 2017

சனிக்கிழமை ஸ்பெஷல் ஸ்டீம்டு வெஜீஸ் :-)

மால் வாக் போனப்ப,  ஒவ்வொரு சந்நிதியாப்போய்  சுத்திட்டு வரணும் என்றது  எழுதப்படாத நியதி. அதுவும் நம்ம வீட்டாண்டை இருக்கும் மால் 'பெரிய கோவில்' போல!  வெளிப்ரகாரங்களும் உண்டு :-)
கடைச்சுருக்கம் இங்கே :-)

1781லே ப்ரிட்டனில் ஆரம்பிச்ச வியாபாரம்.  நியூஸிக்கு வந்து  155  வருசம் ஆகி இருக்கு!  இப்போ 90 கிளைகளுடன் நாடு முழுசும்.  நாடு முழுக்க ஒரே விலை!  1500 பேர் வேலை செய்யறாங்க!  

அப்படி ஒரு சந்நிதிக்குப் போனப்ப, புதுசா ஒரு செட் மைக்ரோவேவ் பாத்திரங்கள் வந்துருக்கு. எல்லாம் நியூஸி மேட்.  நல்ல தரம் கேரண்டீ!  விலைதான் கொஞ்சம்(! ) அதிகமோன்னு பார்த்தால் நாப்பது சதம் கழிவு உண்டாம்.   கையிலே புடிச்சுக்கிட்டுக் காசு அடைக்கப்போனால்  கழிவு நாப்பது இல்லை.... அறுவதாம்!   அட!
 ஒரு ரைஸ் குக்கர், ஒரு ஸ்டீமர், ஒரு ப்ளேட் (?)னு  ஒரு செட். தனித்தனியாவும் வச்சுருக்காங்க.  அது ஒவ்வொன்னும் பயங்கர விலை!  ஒரு செட் இருக்கட்டும். மகளுக்கு ஒருவேளை (!) ரைஸ் குக்கர் தேவைப்படலாம்தானே?  :-)
ஸ்டீமருக்குண்டான காய்கறிகளை நறுக்கி  வச்சேன்.
சில காய்கள் வேக கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும் என்பதால், குட்டிக்குட்டி முட்டைக்கோஸுக்கும் கேரட்டுக்கும்  ஒன்னரை, மற்ற  காலி ஃப்ளவர், ப்ரோக்கல்லி இவைகளுக்கு  ஒன்னு என்ற  கணக்கில் (நிமிசத்தைச் சொல்றேன்) மைக்ரோவேவில் வச்சுப் புழுங்கியாச். ஸ்டீமர் பாத்திரத்தின் அடியில் கொஞ்சம் தண்ணீர் சேர்க்கணும் என்பது முக்கியம்.

ஒரு வாணலியை  அடுப்பில் ஏத்தி  எண்ணெய் ஒரு மூணு டேபிள் ஸ்பூன் சேர்த்துச் சூடாக்கணும். (நான் தேங்காய் எண்ணெய் சேர்த்தேன்)அதில் தாளிக்க சீரகம் சேர்த்தேன்.  இப்பெல்லாம் கடுகைக் கைவிட்டுட்டு, சீரகத்தைக் சிக்கெனப் பிடிச்சுருக்கேன்.  ஒரே பஞ்சாபி தடுகா தான் :-)
சீரகம் வெடிச்சதும், மஞ்சள் பொடி கால் டீஸ்பூன்,  மிளகாய்ப்பொடி கால் டீஸ்பூன், உப்பு காலே அரைக்கால் டீஸ்பூன் சேர்த்து  மிளகாய்ப்பொடி நெடி போனதும்,  ஆவி பிடிச்ச காய்களைப் போட்டு வதக் வதக். அடுப்பு மிதமா எரிஞ்சால் போதும். இல்லேன்னா மி.பொடி கருகிடும்.

அஞ்சு நிமிசக் கூட ஆகாது  வதக்கி எடுக்க. அம்புட்டுதான்....வேலை. ரொம்பவும் வெந்து குழையாமல்  க்றிஸ்பியான நறுக் நறுக் வெஜீஸ்.

  சூப்பர்னு நம்மவர் சொன்னார் :-)

இந்த சமையல் குறிப்பு வரப்போகும் ஈஸிபீஸி இண்டியன் ரெஸிபியில் இடம் பெறுகிறது!


5 comments:

said...

I too have these Akka. Really good. Love them.
I use the very flat one mostly to store dhosa, cutlets and slices. Perfect size.

said...

நான் ஒரு ஸ்டீமர் வாங்கினேன். ஒரே ஒருமுறை கொழுக்கட்டை செய்ய மட்டுமே உபயோகப் படுத்தி விட்டு சும்மாவே இருந்ததை நண்பனுக்குக் கொடுத்துவிட்டேன்!! அப்புறம் இந்த ப்ராக்கோலி... இதுவரை சுவைத்ததே இல்லை!

said...

வாங்க புனிதா.

நன்றி!

said...

வாங்க ஸ்ரீராம்.

வருஷாவருஷம் கொழுக்கட்டை கிடையாதா? அதென்ன ஒரே ஒருமுறை?

இப்பதான் ப்ராக்கோலி எல்லா ஊருலேயும் கிடைக்குதே! கொஞ்சூண்டு வாங்கிப்பாருங்க.

said...

ஸ்டீம்டு வெஜ்ஜீஸ்! :)

பார்க்க நல்லாவே இருக்கு! சாப்பிடவும் நல்லா இருக்குன்னு கோபால் சொல்லிட்டாரே!