ஹொட்டேலுக்கு வந்து சேரும்போது ஏழே முக்கால். லாபியில் இருக்கும் சாமிகளுக்குப் பூஜை செஞ்சுக்கிட்டு இருக்கார் ஒரு பண்டிட். தினமும் காலை ஒரு வேளைப் பூஜையாம். அதுவும் ஆறு மாசத்துக்குதான். அப்புறம் ஹொட்டேலையும் பூட்டிக்கிட்டுத்தான் கிளம்பணும். சரோவர் போர்ட்டிகோ செயின் ஹொட்டேல் என்பதால் பணியாட்கள் மற்ற கிளைகளுக்குப் போய் வேலையைத் தொடர்ந்துருவாங்களாம்.
ப்ரேக்ஃபாஸ்ட்க்குப் போனோம். இட்லி, பூரி உருளைக்கிழங்கு இருந்துச்சு. ஒரு இட்லி ஒரு பூரி, சாய்னு முடிச்சுக்கிட்டேன். இந்தப் பக்கமெல்லாம் காஃபி குடிக்காம இருப்பது நல்லது.
உத்தரகண்ட் போலீஸ், எல்லா வழியும் க்ளியர்னு டெக்ஸ்ட் மெஸேஜ் அனுப்புச்சு. நல்ல ஸேவைதான்.
எட்டரை மணிக்கு செக்கவுட் செஞ்சோம். நேத்து வாங்குன ஜோல்னாப் பை நல்லாத்தான் இருக்கு.
வந்த வழியாவே திரும்பிப் போறோம். முகேஷ் இன்றைக்கு உப்வாஸ் என்றதால் சாய் மட்டும் குடிச்சாராம்.
நேத்து வந்த அதே பாதையில் திரும்பிப்போறோம். சின்ன நீர்வீழ்ச்சியில் யாருமில்லை. மணி ஒன்பதாகப்போகுது. சாலைப்பணியாளர்கள் வேலைக்கு வந்துட்டாங்க.
இரும்புப்பாலம் கடந்து அந்தாண்டை போறோம். சாலை குறுகலாவும் வளைஞ்சு வளைஞ்சும் இருக்கு. கொஞ்சம் அகலப்படுத்தினால் நல்லது. மலையைப் பெயர்க்கணுமே....
கொஞ்சதூரத்தில் எதோ தடுப்பணை கட்டறாங்க போல....
நமக்கு முன்னால் போகும் வண்டி சட்னு தண்ணிக்குள்ளே போகுதேன்னு பார்த்தால் சாலை முழுசும் தண்ணி... நாங்களும் தொடர்ந்து போறோம். முன்னால் போகும்வண்டி சட்னு நின்னதும் நாங்களும் நிக்கறோம்.
கொஞ்ச தூரத்தில் சிகப்புக் கொடி. டேஞ்சர். என்ன ஏதுன்னு போய் பார்த்துட்டு வந்த முகேஷ், நிலச்சரிவுன்னார். அட ராமா....
காலையில் உத்தரகண்ட் போலீஸ் எல்லாம் சரியா இருக்குன்னு சேதி அனுப்பிய பிறகு நடந்துருக்கும் போல! இப்படி ஆகிப்போச்சுன்னு சேதி அனுப்பக் கூடாதோ? சாலையைச் சரிப்படுத்திக்கிட்டு இருந்தாங்க. கீழே சேதி போயிருக்கு போல.... எதிர்ப்பக்கம் வண்டி வரிசைகள் இல்லை. நாங்களும் கீழே இறங்கி வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தோம். சின்னதா ஒரு வீடியோ க்ளிப் எடுத்தேன்.
இப்ப இங்கே உங்களுக்காகப் போடலாமுன்னா... அதைக் காணோம்.. தவறுதலா டிலீட் ஆகிப்போச்சோ என்னவோ? போகட்டும்....
ஆஆஆஆ..... கிடைச்சுருச்சு :-) கொஞ்ச தூரத்துலெ இருந்து எடுத்தது அவ்வளா க்ளியரா இல்லையோன்னு ஒரு சம்ஸயம்...
ஒரு அரைமணி நேரக் காத்திருப்புக்குப் பின், சிகப்புக்கொடியை எடுத்துட்டுப் போகலாமுன்னு கை காமிச்சாங்க. குறிப்பிட்ட இடத்தைக் கடக்கும்போது ரொம்ப மெதுவாகப்போனார் முகேஷ். கற்கள் சரிஞ்சு கிடக்குப் பாதையில். நல்லவேளை வண்டி ஒன்னும் அந்த சம்பவ சமயத்தில் அங்கே இல்லை..... சிலசமயம் காத்திருப்பு ஒரு நாள் கூட ஆகுமாம். இன்று தப்பிச்சோம்.
சம்பவம் நடந்தது ஜோஷிமத் சமீபம். நாம் அங்கே தங்காமல் நேராத்தான் போகப்போறோம். இன்னொருக்கா கோவிலைப் பார்க்கலாமான்னு தோணுச்சு. நம்மவரிடம் சொல்ல வாயைத் திறந்தால் அவரும் அதையேதான் சொல்றார். 'பெருமாளைப் பார்த்துட்டுப் போயிடலாமா?'ன்னு! (நான் பேச நினைப்பதெல்லாம் இப்ப நல்லாவே ஒர்க்கவுட் ஆகுது! )
போகும்போதே ஒரு இடத்தில் வண்டியை நிறுத்திய முகேஷ், கீழே கொஞ்ச தூரத்தில் இருந்த கோவிலைக் காமிச்சார். நவீன் கொடுத்த ஐட்டநரியில் இருக்கும் இடம்தான், பாண்டுகேஷ்வர் கோவிலாம். ரெட்டைக் கோபுரங்களுடன் இருக்கு. ரொம்பப் பழமையானதுன்னு பார்த்தாலே தெரிஞ்சது. ஆனால் சுத்திக்கிட்டுத்தா போகணும். ஒரு இருவது கிமீ இருக்குமாம். அங்கிருந்து ஒரு அரைகிமீ நடை வேற இருக்காம். நடைன்னதும் ஜகா வாங்கிட்டேன். நம்மவரும் இங்கிருந்தே கும்பிட்டுக்கலாம்னுட்டார்.
மலைச்சரிவு பயம் காமிச்சுருச்சு போல.... பொழுதோட போய் சேரலாமே... ருத்ரப்ரயாக் மோனலுக்கு!
பாஞ்ச் பத்ரின்னு சொல்லும் அஞ்சு பத்ரி கோவில்களில் இந்த பாண்டுகேஷ்வர், யோக் த்யான் பத்ரி. நம்ம பாண்டு மஹாராஜா (பாண்டவர்களின் தந்தை) இங்கே மான் உருவில் தவம் இருந்தாராம். கதை தெரியுமா? சுருக்கமாச் சொல்லப் பார்க்கிறேன்... நடக்குற காரியமா? இது பாரதம்.................
பாண்டு மஹாராஜா... அரசனா இருந்த காலத்தில் ஒரு சமயம் வேட்டைக்குப் போறார். அப்போ ஒரு இடத்தில் ரெண்டு மான்கள் உறவு கொண்டாடிக்கிட்டு இருக்கு. மிருகம் என்றாலும்.... இந்த சமயத்துலே தொந்திரவு செய்யலாமோ? புத்திகெட்டுப்போன அரசர் மான்களின் மேல் அம்பை எய்தார். உடலில் தைத்த மறுவிநாடி, அங்கெ ஒரு ரிஷியும் அவர் மனைவியுமா ரெண்டு பேர் கிடக்கறாங்க.
இந்த முனிவர்கள், ரிஷிகள் எல்லாம் சுயரூபத்துலே சந்தோஷத்தை அனுபவிக்கக்கூடாதா? எதுக்கு மான், மீன் இப்படி உருவம் எடுத்துக்கறது இந்தமாதிரி சமயங்களில்...ப்ச்....
பாண்டு பதறிப்போய் மன்னிப்பு கேட்டாலும், ரிஷிக்குப் பயங்கரக் கோபம். 'பிடி சாபம்..... நீ உன் மனைவியுடன் உறவு கொண்டால் உடனே மரணம்' சாபம் கொடுத்துட்டு ரிஷித் தம்பதிகள் இறந்துடறாங்க.
பாண்டுவுக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை.... தானும் மான் வேஷம் கட்டிக்கிட்டு இந்தக் கோவிலில் தவம் செஞ்சாராம். ரிஷி சாபம் பொல்லாதது. கொடுத்தாக் கொடுத்ததுதான். அதை மாத்த யாராலும் ஆகாது. இங்கே கோவிலில் தவம் இருந்தப்ப, பெருமாள் தோன்றி, ' தலைசிறந்த புத்திரர்களைப் பெறுவாய்'னு வரம் கொடுத்தாராம். மஹாவிஷ்ணுவும் லேசுப்பட்டவரா? சாதுர்யம் நிறைஞ்ச சாமியாச்சே! அதான் எப்படின்னு சொல்லலை :-)
சிறந்த புத்திரர்களா ஆறுபேர் பிறந்தாங்கதான். அதுலே மூத்தவரைத்தான் குந்தி அம்போன்னு ஆத்துலே விட்டுட்டாங்க. மீதி அஞ்சும் பஞ்ச பாண்டவர் ஆனாங்க. அதுக்குப் பிறகும் ஒரு சமயம் இளையமனைவி மாத்ரியுடன் இருந்தப்ப, சாபத்தை மறந்து உறவு கொள்ளப்போக, மரணம் அடைஞ்சதும் மனசுக்குக் கஷ்டமாகிப்போன இளையமனைவி உடன்கட்டை ஏறியதும், மூத்த மனைவி குந்தி பிள்ளைகளை வளர்த்ததும்....... பாருங்க... நாஞ்சொல்லலை.... ஆரம்பிச்சால் பாரதம் ஆகிப்போகுமுன்னு....
பாண்டவர்களும் தங்கள் கடைசி காலத்தில் பேரன் பரீக்ஷத்துக்கு பட்டம் கட்டி, ராஜ்யத்தை ஒப்படைச்சுட்டு, உடலோடு சொர்கம் போக பயணப்பட்டதும் இதே கோவிலில் இருந்துதானாம். 2011இல் போன பயணத்தில் ஹரித்வாரில் ஒரு ஆஷ்ரமத்தில் சொர்கப்பயணம் போகும் பாண்டவர் & த்ரோபதி வரிசையையும், தருமன் கூடவே போன நாயையும் சிலைகளாப் பார்த்தது நினைவுக்கு வருது.
இந்தக்கோவிலில் பாண்டு மஹாராஜாவின் சிலையும், இளையமனைவி மாத்ரியின் சிலையும் இருக்காம். நம்ம கைலாஷி அவருடைய பதிவில் எழுதி இருந்தார்.
இப்ப எதுக்கு இதையெல்லாம் இங்கே சொல்றேன்னா.... நீங்க யாராவது பத்ரி பயணம் போக நேர்ந்தால் இந்தக் கோவிலை விட்டுறாதீங்கன்றதுக்குத்தான். சரியா?
நம்ம கேமெராக் கண்ணைஅனுப்பிக் கோவிலைக் கொஞ்சம் கிட்டே கொண்டுவந்து கும்பிட்டுக்கிட்டுப் புறப்பட்டோம். ஒரு பத்து நிமிட்ஸ் போயிருப்போம்... அங்கங்கே க்ளிக்கிட்டே போறேன். ஐயோ... கீழே ஒரு கார் நசுங்கிக்கிடக்கு :-( அதுலே பயணம் செஞ்சவங்க கதி என்ன ஆச்சோ? ப்ச்.... மனசே சரியில்லை...
இரும்புப்பாலம் கடந்து போறோம். விஷ்ணுப்ரயாக் ! போறபோக்கில் ஒரு கும்பிடு! இப்ப எடுத்த சில க்ளிக்ஸில் ரெண்டு வெவ்வேற நிறம் லேசாத் தெரிஞ்சது.
அடுத்து கொஞ்ச நேரத்தில் ஒன்வே வழியா ஊருக்குள் வந்தாச்சு. கோவிலாண்டை வண்டியை நிறுத்தினார் முகேஷ்.
ஜோஷிமத் ஸ்ரீ நரசிம்ஹஸ்வாமி (ஸ்ரீந்ருஸிங் மந்திர்)சந்துவழியாப் போறோம்.
படிகள் இறங்கிப்போய் எல்லோரையும் தரிசனம் பண்ணிக்கிட்டு போயிட்டு வரோமுன்னு சொல்லிக்கிட்டேன். அடுத்த முறை வந்தால்.... எல்லோரும் புதுக்கோவிலில் இருப்பாங்க. புது இடத்தில் இன்னும் சீரும் செழிப்புமா இருங்கன்னு மனசார வாழ்த்தினேன்.
படிகளேறி வெளியே வந்தப்ப, யாரோ ஒருத்தர் வாசலாண்டை உக்கார்ந்து டும் அடிச்சுக்கிட்டு இருந்தார். ஒரே லயம் .... டுமுக்கு டுமுக்கு டுமுக்கு...... தொடர்ச்சியா இதையே கேட்டுக்கிட்டு நின்னால்.... நாமும் அதுக்குள்ளே லயிச்சுருவோமோ என்னவோ? அவருக்கு ஒரு சின்ன அன்பளிப்பு ஆச்சு.
புதுக்கோவில் கட்டும் பணியில் பங்குபெறச் சொல்லி எழுதி வச்சுருந்தாங்க.
புதுக்கோவில் பின்னணியில் த்ரோணகிரி கம்பீரமா இருக்கு!
தொடரும்....... :-)

13 comments:
அருமை. நன்றி.
இந்த இடங்களில் எல்லாம் தரிசனம் செய்ய உடம்பு மட்டும் ஃபிட் ஆக இருந்தால் போதாது போலிருக்கே. கால நிலை, நம்ம நேரம் எல்லாமே ஃபிட்டா இருக்கணுமே. நிலச் சரிவு, ஒடுங்கின பாதைகள், அந்தப் பக்கம் கிடு கிடு பள்ளம்... பிரயாணம் ரொம்ப கஷ்டம்தான் போலிருக்கு.
எல்லா இடங்களுக்கும் போகும் உத்வேகம் அவசியம் ஆனால் அது இருப்பது என் போன்றோருக்கு துர்லபம்
பயமுறுத்தும் பாதைகள். பாண்டுவின் கதை தெரிந்ததுதானே!
பயண்த்தின்போதுதான பயங்கரங்களைப் பார்க்கும்போது மனம் வலிக்கிறது.
இதுமாதிரியான மலைப்பகுதிகளில் நிலச்சரிவுகள் நிறைய உண்டு. இமயமலையை மண்மலைன்னு சொல்றாங்க. கல்லை விட நிறைய மண்ணடுக்குகள் உட்புறம் இருக்குதாம். அதுனாலதான் சரிவுகள் உருவாகுதுன்னு சொல்றாங்க. சமயத்தில் மண்ணோடு கல்லும் கூட உருண்டு விழுந்திரும். எல்லா நேரத்திலும் ஆண்டவனே துணை. அரைமணி நேரத்தில் பாதை சரியானது நல்லதாப் போச்சு.
வட இந்தியாவில் காபியே குடிக்கக் கூடாது. என்னோட பெங்காலி நண்பர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தாதான் காபியே குடிப்பாங்க. பெங்களூர்ல இருந்தப்போ வீட்டுக்கு வந்தாதான் காபி குடிப்பாங்க. வெளிய குடிக்க மாட்டாங்க. தமிழ்க்காரங்க காபிதான் நல்லாருக்குன்னு அவங்க கருத்து. என்னோட கருத்தும் கூட. வடக்க யோசிக்காம டீ குடிக்கலாம். ஆனா இனிப்பா இருக்கும்னு சொல்வாங்க.
வாங்க விஸ்வநாத்.
நன்றீஸ்.
வாங்க நெல்லைத் தமிழன்.
விவரம் ஒன்னுமே தெரிஞ்சுக்காம எத்தனையோ லக்ஷம் பேர் போயிட்டு வந்துக்கிட்டுத்தான் இருக்காங்க.
அவன் கூப்பிட்டால் போகத்தான் வேணும், 'எங்கேன்னாலும்' :-)
எப்பக் கூப்பிடுவான்னு தெரியாது பாருங்க!
வாங்க ஜி எம் பி ஐயா.
என்னதான் நாம் திட்டம் போட்டாலும்.... நடப்பதும் நடத்தி வைப்பதும் 'அவன்' செயல் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கே!
வாங்க ஸ்ரீராம்.
ச்சும்மா... பயங்காமிக்க அந்தப் படங்களைப் போட்டுருக்கேன் :-)
பாண்டுவின் கதை தெரியாத சனமும் இருக்கே!!!
வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
இந்த மாதிரி காட்சிகள் .... மனசைக் கஷ்டப்படுத்திருது :-( ப்ச்...
வாங்க ஜிரா.
உண்மையில் இந்த காஃபி டீ சனியன்களை விட்டொழிச்சால் நல்லது. ஆனால் நாக்கை வளர்த்து வச்சுருக்கோமே..........
பெருமாளே துணைன்னுதான் வீட்டைவிட்டே வெளியே கிளம்பணும். ....
இப்பகுதிகளில் நிலச்சரிவு எப்போது நடக்குமோ என்ற பயத்துடனே பயணிக்க வேண்டியிருக்கிறது.
கார் - அப்பளமாய் நொறுங்கி இருப்பதைப் பார்த்த உடன் பதைப்பு.... அதில பயணித்தவர்கள் என்னவானோர்களோ என்ற பதைபதைப்பு....
தொடர்கிறேன்.
Post a Comment