Monday, July 10, 2017

ரகுநாத்ஜியை இன்னொருக்கா........... மூச். படிகளைப் பார்த்துமா? (இந்திய மண்ணில் பயணம் 28)

பாலம் கட்டும் வேலைகளும், இருக்கும் பாலத்தை அகலப்படுத்தும் வேலைகளுமா நடந்துக்கிட்டே இருக்கு இங்கெல்லாம்....


சாலையை மட்டும் இன்னும் கொஞ்சம் அகலப்படுத்தினால் இன்னும் நல்லதுதான்....   ஆனால்  அதுலே என்னென்ன கஷ்டங்கள் இருக்கோ?    வண்டியின் கன்ட்ரோல் கொஞ்சூண்டு  போனாலும்.... சரிவிலே விழ வேண்டியதுதான்....


தாரி தேவியைக் கடந்து தேவ்ப்ரயாக் சமீபிக்கும் இடத்தில் சாலை அகலமாவும் அதுக்கேத்த மாதிரி நிறைய வண்டிகளின் நடமாட்டமுமா இருந்துச்சு.   எங்களுக்கும் உரிமை இருக்குன்னு  மாடுகள் அங்கங்கே  சாலை மறியல் செய்றாப்போல   உக்கார்ந்துருக்கு:-)
 உக்கார்ந்து சாப்பிடலை....   உழைச்சுத்தான் சாப்பிடறோமுன்னு சொல்லும்  குதிரைகள்  ஒரு பக்கம்.....



தேவ்ப்ரயாக் சங்கமம் தரிசனம் ஆச்சு. இனி அலக்நந்தாவை மறந்துடலாம்.  இவள் பெயர் கங்கா!

இங்கேயும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து பார்த்தால்..... மொத்த வ்யூவும் ஹா.....   போறப்ப இதையெல்லாம் சொல்லலை பாருங்க, இந்த முகேஷ்!


ரகுநாத்ஜிக்கு இங்கெருந்தே ஒரு கும்பிடு.  இவ்ளோ படிகளா அன்றைக்கு ஏறி இருக்கோமுன்னு  ஒரு ப்ரமிப்பு!   பரவாயில்லையே... துள்ஸி...  முக்கி முனகி போயிட்டுவந்துட்டியே!   (இதுக்குத்தான் உடல்நிலை நல்லா ஆரோக்கியமா  இருக்கும்போதே  பயணம் செஞ்சுடணுங்கறது!)
ஒரு சாயா குடிக்கன்னு  தேவ்ப்ரயாக் மோட்டல் தேவ் போனோம்.  இங்கே பின்பக்க பால்கனி வெராந்தாவில் இருந்து பார்த்தால்.... அற்புதம்!
கூடுதல் தகவல்: இங்கே கழிப்பறை சுத்தமா இருக்கு !!! பக்கத்துலே  ஹொட்டேல் உமா.  ரிஸ்ஸார்ட்டாம்.


நம்ம சனம் லேசுப்பட்டதா?  பொறுமைன்னா என்னன்னு  தெரியாது....  இத்துனூண்டு சாலை. அதுலே ஒரு நிமிட் பொறுக்கமுடியலை பாருங்க....   கரணம் தப்பினால்.... மரணம் இல்லையோ...   எனக்குத்தான் திக் திக்குன்னு  இருந்துச்சு




கோவிலோ இல்லை குருத்வாராவோ...   பாதியிலே   நிக்குது. ஆனால் ஆள் அதுலே வசிக்கிறாங்க.....   கோவிலாத்தான் இருக்கணும்.  பஞ்சாப் சீக்கியர்கள் எடுத்த வேலையை முடிக்காம விடமாட்டாங்க....
போறப்ப பார்த்த எல்லாமே இப்ப ரிவர்ஸில் ஓடுது :-) சிவன் அங்கேயே நிக்கறார் !
  வளைவுகளில் திரும்பும்போது   நாம் வந்த பாதையைப் பார்க்கலாம். இறக்கம் தெரியுதே!
ராஃப்டிங் ஆட்களைப் பார்த்தவுடன் ரிஷிகேஷ் சமீபிக்கிறோமுன்னு  புரிஞ்சது. ரெண்டே கால் மணி மணி நேரத்துலே  தேவ்பிரயாகில் இருந்து ரிஷிகேஷ் வந்துருக்கோம்.  நம்ம கூடவே கங்கையும்தான் வந்துருக்காள்.
கங்காவியூவில் செக்கின் ஆச்சு. நாம் விட்டுட்டுப் போன அதே அறை!   பொட்டிகளைப் போட்டுட்டு  ஷுப் ட்ராவல்ஸ் நவீனைப் பார்க்கப் போறோம்.  ஐட்டிநரி சொல்லியபடி இதோடு முகேஷின் சேவை  முடிஞ்சுருது.

ட்ராவல் ஆஃபீஸில் நவீன் இல்லை.  ஆஃபீஸ் மேனேஜர் ப்ரியாவுக்கு நம்மை (உயிரோடு?) பார்த்ததில்  அத்தனை சந்தோஷம். அவுங்க நாட்டுக்குப் போயிட்டு வந்ததால் நம் மீது தனியா ஒரு பிரியமாம் :-) நேபாள் நேபாள்.!
அங்கே உக்கார்ந்து என்ன செய்ய... போய் லஞ்சை முடிச்சுட்டு வரலாமுன்னு நம்மவர் சொன்னதால்  மெட்ராஸ் ஹொட்டேலுக்குப்  போனோம்.
நாலுநாளா தாலியைப் பார்க்கலை பாருங்க....   பார்த்ததே போதுமுன்னு ஆச்சு எனக்கு!
முகேஷ் , சாப்பிடலை. வீட்டுக்குப்போய் சாப்பிடுவாராம்.  மனைவி சாப்பாடு ரெடி பண்ணி வச்சுட்டுக் காத்திருக்காங்க!

இதோ நாம் ஒரு முறை போயிட்டு  நல்லபடியா வந்துருக்கோம்.  ஆனால் முகேஷ் போல  இந்தப் பாதையில் ஓட்டுனரா இருக்கறவங்க, ஒவ்வொரு  முறையும்  மலைப்பாதையில் போய்  பத்திரமாத் திரும்பி  வரணுமேன்னு குடும்பத்துக்குத்தானே  கவலை அதிகமா இருக்கும், இல்லையோ?

சாப்பாடானதும் திரும்ப ஷுப் ட்ராவல்ஸ் போய் நவீனைப் பார்த்து  கணக்கு செட்டில் பண்ணிட்டோம். நாளைக்கு இன்னொரு வண்டி வேணும். ஜஸ்ட் ட்ராப்தான். ஆனாலும் போகவர காசு வாங்கிடறாங்க. அப்படித்தான் எல்லா இடங்களிலும்.....  இதுலே  மட்டும்     நார்த் சௌத் பேதமே இல்லை!

எல்பீ கங்கா வியூ வந்தவுடன்  முகேஷுக்கு நன்றி சொல்லிட்டு ஒரு நல்ல தொகையை அன்பளிப்பாகக் கொடுத்ததும்  அவருடைய மகிழ்ச்சி முகத்தில் தெரிஞ்சது.  பத்திரமா நம்மைக் கொண்டுபோய் கொண்டு வந்து சேர்த்தது  பெரிய விஷயம் இல்லையா?
பத்ரி பத்ரின்னு  ஜெபம் பண்ணது நிறைவேறுன திருப்தி நமக்கும்தான்!
சாயங்காலம் எங்கியாவது போகத் தோணுச்சுன்னா ஒரு ஆட்டோ எடுத்தால் ஆச்சு.  இப்ப நல்ல ஓய்வு  வேணும். ஒரு பகல் தூக்கம் போடலாமா?

தொடரும்.........  :-)


15 comments:

said...

​​படங்கள் அற்புதம்! ரகுநாத் ஜி கோவில் படிகளின் அருகிலேயே அடுக்கடுக்காய் மேலே மேலே வீடுகள்! பால்கனி வியூ சூப்பர். எங்கே பேப்பர், எங்கே பேப்பர், ஒரு கவிதை எழுதலாம் என்று தோன்றுகிறது!!!

குறுகிய சாலையில் பஸ்ஸும், லாரியும்... திக்திக்த்திக்... ஆனாலும் டிரைவருக்கு துணிச்சல் அதிகம்!

said...

பாதையையும் போக்குவரத்தையும் பார்த்தாலே பகீர்னு இருக்கு.. பத்திரமா போய்வருவதே சாதனைதான். நீங்கள் சொல்வது போல ஓட்டுநர்கள் நித்தமும் சாகசப் பயணம் மேற்கொள்ளவேண்டிய கட்டாயம்.. கூடவே பயணித்த உணர்வு. நன்றி டீச்சர்.

said...

அகலப்படுத்தப்படும் ரோட்டைப் பார்க்கும்போதே பயமாக இருக்கிறதே. அகலப்படுத்த அவர்கள் படும்பாட்டினை நினைத்துப் பார்க்க முடியவில்லை.

said...

அருமை. நன்றி.
தொடர்கிறேன், தொடர்ந்து;

said...

தேவ்ப்ரயாக் சங்கமம் படம் அழகு....

said...

படங்களும் சென்ற இடங்களும் அருமை. அதுவும் ஒவ்வொரு ப்ரயாக்கும், இரு நதிகளின் சங்கமம் ஆகும் இடங்களில் படித்துறை படங்களும் ரொம்பவும் நல்லா இருக்கின்றன. பயணமும் சாகசப் பயணம்தான் போலிருக்கிறது. தொடர்கிறேன்.

said...

வாங்க ஸ்ரீராம்.

எட்ட இருந்து பார்த்த அழகு பிரமிப்பைத் தந்தது உண்மை!

said...

வாங்க கீதமஞ்சரி.

நாமும் ஒரு சாகசப்பயணம் போயிட்டு வந்தாச் :-)

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

ரொம்பக் கஷ்டமான வேலைதான். உயிருக்கும் உத்திரவாதம் இல்லை :-(

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றி.

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

இவ்ளோ தூரத்தில் இருந்து பார்க்கும் போதுதான் முழு அழகும் தெரிஞ்சது !

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

சங்கமங்களில் இவ்ளோ அழகாப் படிகளைக்கட்டிவிட்டவங்களுக்குத்தான் நாம் நன்றி சொல்லிக்கணும். மலையையே எப்படி வெட்டி இருக்காங்கன்னு பாருங்க!

அழகோ அழகு!

என்ன ஒன்னு.... கீழே இறங்கிப்போய் வர முடியலை, இந்த முழங்கால் பிரச்சனையால்....

said...

இனிய பயணம். அருமையான இடங்கள். படங்கள் அருமை.

said...

மலையில பாதை போடுறதே ஒரு பெரிய மண்டையிடி பிடிச்ச வேலை. அப்படியே போட்டாலும் மழை மட்டைன்னு அப்பப்போ சரிவுகள். இந்த மாதிரி பாதையில அடிக்கடி போய்ட்டு வர்ராங்கன்னா... அது குடும்பத்தைக் காப்பாத்ததான். இப்பப் பாருங்க, சைனாக்காரன் வம்பு பண்றான். ஆண்டவா... எல்லாரையும் நல்லபடியா பாத்துக்கப்பா.

said...

ரிஸ்க் கொஞ்சம் உண்டு என்றாலும் இனியதோர் பயணம். நல்ல பல அனுபவங்களைக் கொடுத்திருக்கிறது இப்பயணம். பயணங்கள் தொடரட்டும்.....

நானும் தொடர்கிறேன்.