Wednesday, December 23, 2009

மெரீனா

அழகு'படுத்திட்டோம்'ன்னு கொஞ்சநாளா ஒரே பேச்சு. ஆனா நமக்காக இன்னும் திறந்து வைக்கலை. இதுக்கெல்லாம் அசரமாட்டோமுன்னு அங்கே கருவாடெல்லாம் காயப்போட்டு, துணிமணி துவைச்சு, காரைக் குளிப்பாட்டின்னு கழிவறைச் சமாச்சாரமெல்லாம் நடக்குதுன்னு அப்பப்பச் சேதிகள் தாள்களில் வந்துக்கிட்டும் இருந்துச்சு.
ஒருவழியா வேலைகள் முடிஞ்சு ஞாயித்துக்கிழமை(20/12/09) தமிழகமுதல்வர் 'கடற்கரை சொகுசுகளை' மக்களுக்கு அர்ப்பணித்தார். எண்ணி எத்தனை நாளு இது தாங்குமுன்னு தெரியாததால் மறுநாளே அங்கே போனோம். நாட்டுநடப்பை நம் மக்களுக்குச் சுடச்சுடத் தெரிவிக்கவேண்டிய 'கடமை' ஒன்னு நமக்கு இருக்கே! அதுவுமில்லாமல் இது பதிவர் சந்திப்பு நடக்கும் இடம். நமக்காக 'அரசு' என்னென்ன வசதி செஞ்சுருக்குன்னு பார்க்க வேணாமா?

கடற்கரைச் சாலைக்கும், அந்தப் பக்கம் இருக்கும் மணல்வெளிக்கும் இடையில் இருக்கும் இடத்தைத்தான் 'டூரிஸ்ட் ஃப்ரெண்ட்லி'யா சுத்தப்படுத்தி வச்சுருக்காங்க. புல்தரைகளும், ஒளி விளக்குகளும், நீரூற்றுக்களுமா, பளிங்குக்கற்கள், டைல்ஸ் எல்லாம் போட்ட தரைகளுமா அன்றைக்கு(ம்) சுத்தமா இருக்கு.
மணல்வெளியில் பத்தடிக்கு ஒரு தீனிக் கடை. அதைச் சுற்றிலும் பத்திருபது ப்ளாஸ்டிக் இருக்கைகள். அதையும் சுத்தி அம்பதறுவது காக்காக் கூட்டம். கடற்கரைக்கு வந்து போக அநேகமா ஒரு மூணுமணி நேரம் சராசரியா செலவளிப்பாங்க நம்ம மக்கள். இந்தக் கணக்குலே பார்த்தால் தீனிக் கடைகள் அத்தியாவசியமா? அப்படியே அவசியமுன்னு வச்சாலும் ஒரு ஃபுட் கோர்ட் மாதிரி இந்த அலங்கார அமைப்பின் பேஸ்மெண்டில் கட்டி விட்டுருந்தா, மணல்வெளி அழுக்காகாமல் பளிச் ன்னு இருக்குமுல்லே?எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு நிற்கும் ஒரே மௌனசாட்சி
சென்னையைச் சுற்றிவந்த இந்த சிலமாசங்களில் கவனிச்சது பெயர் மட்டுமே. எங்கேயும் எதிலும் இருப்பார் அவர் யாரோ?
மக்களுடைய வரிப் பணத்தில் மக்களுக்காகச் செஞ்சுதரப்படும் வசதிகளுக்கு,அங்கங்கே பொருத்தமான இடங்களில் மெகா சைஸ் எழுத்தில் பெயர் இருக்கு. அரசு'கட்டிலில்' யார் 'அமர்ந்தாலும்' இதெல்லாம் செய்யவேண்டிய கடமைகளில் ஒன்றில்லையா? நான் சொன்னது வசதிகளை!
புலம்பிக்கிட்டு வந்த என்னை ஒரே சொல்லால் தெளிவித்தார் கோபால். 'அரசியல்'

'இது உங்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டது' ன்னு எழுதிவச்சால் ஒருவேளை 'கஷ்டம்'னு வந்தால் அடிச்சு நொறுக்க வர்றவங்க ஒரு விநாடியாவது யோசிக்கமாட்டாங்களா?

கோவிலுக்கு ஒரு ட்யூப் லைட் வாங்கிக் கொடுத்துட்டு அதுலே வெளிச்சம் வெளிவராத அளவுக்குத் தன் பெயரைப்போட்டு' கைங்கர்யம்' செய்பவருக்கும், அரசியல்வாதிகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கு?

யோசிச்சேன். ஆஆஆஆஆ............ கண்டுபிடிச்சேன். கைங்கர்யம் செஞ்சவர் தன் கைக்காசைப்போட்டு வாங்கித் தந்துருக்கார்.
என்னமோ போங்க. ............நான் ஒரு தூக்கம் போட்டுட்டு வரேன்.


படிக்கட்டும் ராட்சஸ ரவாலாடுகளும்

சரி,சரி....நான் புலம்பி என்ன ஆகப்போகுது? சீக்கிரமா புதுசா அழகான இடத்தில், ஒரு பதிவர் சந்திப்பு நடத்த ஏற்பாடு பண்ணுங்க. சந்திப்புக்கு வர இயலாதவங்க, இயலும்போது சோம்பல் பார்க்காம ஒரு நடை மெரீனாவுக்குப் போய் அனுபவிங்க. என்ன ஒன்னு..... காலம் கடத்தாமக் கொஞ்சம் சீக்கிரம் போங்க. அம்புட்டுதான் சொல்வேன். (இப்போ) நல்லாத்தான் இருக்கு. எஞ்சாய்.......

பி.கு: மழைக்கு அறிகுறியாக இருட்டிக்கொண்டுவந்ததால் படங்கள் தெளிவாக இல்லை. பழியெல்லாம் மழைக்கே!

31 comments:

said...

//அரசு'கட்டிலில்' யார் 'அமர்ந்தாலும்' இதெல்லாம் செய்யவேண்டிய கடமைகளில் ஒன்றில்லையா? நான் சொன்னது வசதிகளை!//

அரசு கட்டிலில் யார் அமருகிறார்கள், அதை அப்படியே தூக்கிட்டு வந்து மெரினாவில் உண்ணாவிரதம் இருக்க படுத்துக் கொள்கிறார்கள். :)

********

படங்கள் அட்டகாசம். வெயில் காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் போது நீருற்றில் இருந்து (அந்தப் பகுதி) மக்களுக்கு தண்ணீர் கிடைக்கும்.

said...

//எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு நிற்கும் ஒரே மௌனசாட்சி//

ஓ! அந்தக் காக்காவைச் சொன்னீங்களா?

said...

படங்கள் நல்லா வந்தால் அத்தனை பாராட்டும் உங்களுக்கே. இல்லாட்டா பழி கோபால் சாருக்கு, இங்கே மழைக்கு. நல்லாயிருக்கே உங்க பாலிஸி:))! சொகுசா தூங்கும் செல்லமும் ராட்சஸ ரவாலாடுகளுமாய் படங்கள் நல்லாவே இருக்கு:)!

வரிப்பண விஷயம் ரொம்பச் சரி. குறிப்பாக இது:
//ஒருவேளை 'கஷ்டம்'னு வந்தால் அடிச்சு நொறுக்க வர்றவங்க ஒரு விநாடியாவது யோசிக்கமாட்டாங்களா?//

said...

மௌன சாட்சி உயிருக்கு வருவது பதிவர் கூட்டங்களில்தான்.
துளசி சொல்லி யாராவது கேக்காம இருக்காப்பங்களா:)
புத்தகக் கண்காட்சி வேறு வருதே. மழை வராம நல்லா நடக்கணும்.
படங்கள் நல்லாதான் வந்திருக்கு துளசி.
அரசியல்னா இப்படித்தான் இருக்கும். காமராஜர் மாதிரி இன்னோருத்தர் வந்தாத்தான் பெயர் போடாமல் வேலை நடக்கும்,.

said...

//'இது உங்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டது' ன்னு எழுதிவச்சால் ஒருவேளை 'கஷ்டம்'னு வந்தால் அடிச்சு நொறுக்க வர்றவங்க ஒரு விநாடியாவது யோசிக்கமாட்டாங்களா?//

புதுசா இருக்கே டீச்சர் :) பேசாம இதை எல்லா இடத்திலேயும் அமுல் படுத்தலாம் போல :)

அரசியல் சார்ந்த பதிவுன்னா கோவியார் பின்னூட்டம் ’நச்’னு இருக்கும் போல :)

போட்டோஸ் அந்த மந்த நிலையிலும் நல்லா தான் இருக்கு(உண்மையாகவே டீச்சர்)

said...

வாங்க கோவியார்.

சிரிச்சுச்சிரிச்சு....... இப்போ வயித்துவலி!

வெய்யில் காலத்துலே இங்கே தண்ணீர் ஊறுமான்னு தெரியலை. கடல்தண்ணியை பம்ப் செஞ்சாலுண்டு.

சோப் போட அருமையான பளிங்குத்தரை இருக்கு.

said...

வாங்க தருமி.

ஆஹா..... பறக்கவே இயலாதுன்னு ஒரு முடிவோ?

said...

வாங்க ராமலக்ஷ்மி.

அதெல்லாம் பழிபோட வழி கண்டுபிடிக்கலைன்னா எப்படிங்க?

ஏதோ நம்மால் ஆனது:-)))))

said...

வாங்க வல்லி.

அதான் காமராஜர் ஆட்சியை அமைப்போமுன்னு ஆளாளுக்குச் சொல்லிக்கிட்டே இருக்காங்களே.

'ஆகட்டும், பார்க்கலாம்' வருதான்னு!

said...

வாங்க நான் ஆதவன்.

வங்கக்கடலில் புயல் மையம் கொண்டு இருப்பதால் காற்றின் அழுத்தம் கூடுதலா இருந்து வானிலை மந்தமாக இருந்தது:-)

said...

நல்ல விளக்கம். ஆனா நம்ம ஊருல புதுசா எதை செஞ்சாலும் அது புதுசா இருஅகரது ஒரு 6 மாசமோ 1 வருசமோதான் . அதனால் நாம வருத்தப்பட்டு ஒன்னும் ஆகாது

said...

//'இது உங்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டது' ன்னு எழுதிவச்சால் ஒருவேளை 'கஷ்டம்'னு வந்தால் அடிச்சு நொறுக்க வர்றவங்க ஒரு விநாடியாவது யோசிக்கமாட்டாங்களா?// நோட் பண்ணுங்கப்பா , நோட் பண்ணுங்கப்பா..... :)

said...

/இது உங்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டது' ன்னு எழுதிவச்சால் ஒருவேளை 'கஷ்டம்'னு வந்தால் அடிச்சு நொறுக்க வர்றவங்க ஒரு விநாடியாவது யோசிக்கமாட்டாங்களா?//
டீச்சர், 'இது உங்கள் சொத்து 'அப்பிடீன்னு எழுதுனபிறகு கூட பேருந்துகளை உட்டு வைக்க மாட்டேங்கறாங்க. இங்க என்னத்த எழுதி , என்னத்த யோசிச்சு,.. ஒரே வெப்ராளமா இருக்கு. என்னவோ போங்க:-(((

said...

நல்லா சொல்லியிருக்கீங்க!

கடிச்சது போட்டோவில இருக்கிறவரு இல்லைல்ல? ஹி...ஹி...

பிரபாகர்.

said...

போன பின்னூட்டம் என்னோடதுதான்(அமைதிமழை). சொதப்பிட்டேன். மன்னிக்கவும்.-ஐம்கூல்பாசு

said...

nice pictures and comments. hopefully they will keep the place like this for some time. I do remember that you wrote about the new zealand life experiences. where can i find them to read? thanks n merry Xmas n a happy new year.

said...

வாங்க எல் கே.

சரியாத்தான் சொன்னீங்க. அதுதான் புத்தம்புதுசா இருக்கும்போதே ஓடிப்போய்ப் பார்த்துட்டு வந்தேன்.

said...

வாங்க கயலு.

யோசிக்கும் அளவுக்கு இவுங்களை அரசியல்வியாதிகள் விட்டுவைக்கும? மூளை(!!) சலவை(???) செஞ்சு இஸ்திரி போட்டுருக்கமாட்டாங்களா?

எல்லாம் ஒரு ஆதங்கம்தான்........

said...

வாங்க அமைதி மழை.

வெப்ரவாளம் கண்டு ப்ரமிச்சுப்போயி.

வெறுமனே உங்க சொத்துன்னு போடாம உங்க பாட்டன் சொத்து ன்னு போட்டால் பேரன்மாரெல்லாம் ரைட்ஸ் இருக்கேன்னு மிண்டாதிருக்கான் சாத்யதை உண்டு:-)

said...

வாங்க பிரபாகர்.

இவன் அவனில்லை. இது நாலுகால் அப்பிராணி. அது ரெண்டுகால் பிராணி!

said...

வாங்க குலோ.

ஒரு சில வருசங்களுக்காவது தாக்குப் பிடிச்சால் மகிழ்ச்சி. கிட்டத்தட்ட 26 கோடி செலவாம்!

அதில் தின்றது பாதி.... தின்னாமல் விட்டது மீதி...........

தேன் எடுத்த கைகளை நக்குவது மரபாம்!


நியூஸித் தொடர் 69 அத்தியாயங்கள். ஒரு ரெண்டு மாசம் பொறுத்தீங்கன்னா அதைப் புத்தகவடிவில் பார்க்கலாம். அதற்கான வேலைகள் தொடங்கி நடந்துக்கிட்டு இருக்கு.

said...

//எண்ணி எத்தனை நாளு இது தாங்குமுன்னு தெரியாததால் மறுநாளே அங்கே போனோம். //

இது தான் உண்மை.. இது வரை அழகுபடுத்த செலவழித்த பணத்தை வைத்து... ம்ம் சரி விடுங்க

//எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு நிற்கும் ஒரே மௌனசாட்சி//

:-)

//கோவிலுக்கு ஒரு ட்யூப் லைட் வாங்கிக் கொடுத்துட்டு அதுலே வெளிச்சம் வெளிவராத அளவுக்குத் தன் பெயரைப்போட்டு' கைங்கர்யம்' செய்பவருக்கும், அரசியல்வாதிகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கு?//

நச்சுனு சொன்னீங்க போங்க!

கோவி கண்ணன் பின்னூட்டம் ஹி ஹி கலக்கல்

said...

உங்க கடமையை நல்லாவே செய்யறீங்க அம்மா :) படங்கள் நல்லாத்தானே வந்திருக்கு? படத்தில்தான் இப்போதைக்கு பார்த்துக்கணும். நேரில் போகக் கிடைக்கும் போது எப்படி இருக்குமோ? அதனால நன்றி அம்மா :)

said...

// சரி,சரி....நான் புலம்பி என்ன ஆகப்போகுது?//

உண்மைதாங்க.. ஆனா புலம்பாம இருக்க முடியல்லையே !
நெஞ்சு பொறுக்குதில்லையே , இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்துவிட்டால் ... அப்படின்னு வேனா
பாடலாம்.. அதுவும் புலம்பல் தானே !!

வயசு ஆக ஆக, செய்ய முடிய ற ஒரே காரியம் புலம்பல் தானே !!!

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com

said...

படங்களுடன் நல்ல பதிவு. எங்களுக்கு நேரில் பார்க்க முடியாத கவலை தீர்ந்தது.

said...

துள்சி,

// மெரினாவில் உண்ணாவிரதம் இருக்க படுத்துக் கொள்கிறார்கள். :)//
ரசித்து சிரித்தேன்.

புதுக் கருக்கு மாறுமுன் பார்த்துவிடவேண்டியதுதான்.எக்மோர் போகும் வழியில் பார்த்ததுதான்.

‘ராட்ஷச’ரவாலாடு ஓகே, அந்தப் படிகள் ஏன் உங்களுக்கு ராட்ஷச மைசூர்பாகுகளாகத் தெரியவில்லை?

‘இது உங்கள் வரிப் பணத்தில் வாங்கப் பட்டது’ என்று ஒவ்வொரு அரசு பேரூந்துகளிலும் எழுதி வெக்கலாம்.

said...

வாங்க கிரி.

தாமதமான பதிலுக்கு முதலில் எல்லோரும் என்னை மன்னிக்கணும்.

'மெரினா'வுக்கு அப்புறம் வரவே இல்லை:-)

காசைச் செலவு பண்ணதுகூடத் தப்பில்லை. இன்னும் கொஞ்சம் யோசிச்சு நல்லாப் பண்ணி இருக்கலாம். பேஸ்மெண்ட்லே கடைகள் வச்சுருக்கலாம். மணல்வெளியாவது சுத்தமா இருக்கும்!

said...

வாங்க கவிநயா.

இங்கே உடனுக்குடன் பார்க்கனும். ஒரு மாசம் ஆனாலே............

என்னமோ போங்க(-:

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

அச்சச்சோ........வயசாகிருச்சுன்னா சொல்றீங்க? :-)))))))

said...

வாங்க டொக்டர் ஐயா.

'நமது நிருபர்' வேலை கைவசமாகி இருக்கு, இப்போதைக்கு:-)))))

said...

வாங்க நானானி.

மைசூர்பாகுமேலே ஆட்கள் (ஈக்கள் மாதிரி மொய்ச்சுக்கிட்டு) இருந்தாங்கப்பா!!!!