Tuesday, December 08, 2009

எழுத்தாளருன்னா...... வாசிக்கணும். ஆமா!

எழுதுற மக்களுக்கு வாசிப்பு(ம்) ரொம்ப முக்கியமுன்னுதானே அறிஞர்கள் எல்லாம் தலைதலையா அடிச்சுச் சொல்றாங்க? எல்லா வாசிப்பும் வாசிப்பாயிருமா? மேலோட்டமா, ஆழ்ந்து, இப்படிப் பலநிலைகளில் வாசிப்பனுபவம் இருக்குல்லையா? நான் ஒரு எழுத்தாளரின் வாசிப்பை ரொமபவே ஆழ்ந்து கேட்டேன்னா...... நம்பணும். நம்புங்க:-)

மயிலை மாதவப்பெருமாள் கோயிலுக்குப் பக்கத்துலே இருக்குன்ற விவரத்தைத் தொலைபேசியில் தெரிஞ்சுக்கிட்டுப் போனோம். வந்ததுதான் வந்தோம், பெருமாளையும் சேவிச்சுக்கிட்டே போனால் ஆச்சு. அவர்பாட்டுக்கு அழகா, அலங்கார ஸ்வரூபனா 'நின்னு' சேவை சாதிக்கிறார். வெளிப்பிரகாரத்தில் வலம்வந்தப்ப, அங்கே 'கதை அளந்து'க்கிட்டு இருந்த இருவரிடம் விவரம் கேட்டதுக்கு, இப்படி ஒன்னு இருக்கா என்ன? ' என்ற வியப்பு. கோபுரவாசலில் சந்திச்ச ஒருத்தரிடம் , இங்கே வித்வத் சமாஜம்'னு சொல்லும்போதே, 'அதோ அங்கே'ன்னு கை காமிச்சார்.

கோபுர வாசலில் நின்னு, உள்ளே கோவிலைப் பார்த்து நின்னால்.... நமக்கு வலக்கைப் பக்கம் உள்ள தெருவின் கடைக்கோடி.
'ரா ரா தேவாதி தேவா, ரா ரா மஹானு பாவா'ன்னு 'குடில்' வாசலில் நின்னு ராமலக்ஷ்மணர்களை வரவேற்கிறார் தியாகராஜர். சரியா எண்பது வருசமாகுது இதை ஆரம்பிச்சு. உள்ளே எட்டிப் பார்த்தோம். வரிசையா நாற்காலிகளைப் போட்டு வச்சுருக்காங்க. காலணிகளை வெளியே விடவுமுன்னு வாசலில் ஒரு அறிவிப்பு.
சந்நிதி ஒன்னு கண்ணுலே தெரிஞ்சது. அட! நம்ம தியாகைய்யர்! பின்பக்கமா அட்டகாசமான தஞ்சாவூர் ஓவியம் ஒன்னு. 75 வருசப் பழசாம். ரெண்டு வருசம் முன்புகூட ஒவ்வொரு ஸ்ரீராமநவமிக்கும் அந்தப் படத்தைக் கழட்டி எடுத்து ஹாலில் வச்சுப் பூஜை பண்ணுவாங்களாம். படம் ரொம்பப் பெருசு. உடைஞ்சுகிடைஞ்சுப் போயிரப்போகுதேன்னு பயத்துலே அதைக் கழட்டி எடுப்பதை விட்டுட்டாங்களாம். (இப்போதான் அதோட அருமை தெரிஞ்சுருக்கும் போல). படத்தில் வானர சேனைகளுக்கு, பரிசு எடுத்துக் கொடுத்துக்கிட்டு இருக்காங்க. வரிசையில் நின்னு வாங்கும் வா-நரர்-களின் முக அழகு...ஹைய்யோ
சந்நிதியின் முகப்பு பேஷ் பேஷ். ஹனுமனின் பாவம் அட்டகாசம்.
25 வருசமா இங்கே தினம் ரெண்டு வேளையும் வந்து விளக்கேத்தி வச்சுக் கவனிச்சுக்கும் சூர்யா சொன்னார். எல்லாம் சேவைதானாம். இல்லையா பின்னே? சூர்யநாராயணனுக்கு பல்லாவரத்துலே வீடு. இன்னிக்குக்கூடப் பாருங்க.... அக்கா பையனுக்கு ஜானவாஸம். மனுஷர், அங்கே போகாம இங்கே வந்துருக்கார்.
சந்நிதிக்கு முன் நாலைஞ்சு பெஞ்சைச் சேர்த்துப்போட்ட ஒரு மேடை. இந்த பெஞ்சு, நம்ம எம்.எஸ். அம்மா வாங்கித் தந்தாங்களாம். எத்தனையோ பிரபலங்கள் வந்து நிகழ்ச்சி கொடுத்த சபா இது. இங்கே வந்து தியாகைய்யருக்கு முன்னால் பாடுவதே ஒரு பாக்கியமுன்னு கலைஞர்கள் நினைக்கிறாங்களாம்.

மேற்கூரைக்குள்ளே இருக்கும் 'ஃபால்ஸ் ஸீலிங்' அமைப்பை நம்ம ஓபுல் ரெட்டிகாரு செஞ்சுகொடுத்துருக்கார்.(வாணிமஹால் போகணும். ரொம்ப நாளாச்சு) திறந்தவெளியா , ஆர்பாட்டமில்லாம அமெரிக்கையா இருக்கு இந்த 'ஹால்' (மனக்குறிப்பு: கொசு மருந்து ஒன்னு எடுத்துக் கைப்பையில் மறக்காமல் வச்சுக்கணும்)

ஆறரைக்கு நிகழ்ச்சி ஆரம்பம். சரியா ஒரு பத்து நிமிஷம் இருக்கும்போது கையில் ஏந்திய வீணையுடன் கீதா(ராமநாதன்) பென்னெட் ஆஜர். பரபரன்னு மைக், ஸ்பீக்கர் எல்லாம் அவுங்களே எடுத்துவச்சு செட் செய்ய ஆரம்பிச்சாங்க. மிருதங்கக்காரர் ஆஜரானார். பாலஷங்கர் என்ற பெயராம். கைப்பையில் இருந்து சின்னதா எதையோ எடுத்துக் கண்ணில் ஒத்திக்கிட்டு ஆம்ப்ளிஃபையர் மேல் வச்சாங்க கீதா. அது என்னன்னு தெரிஞ்சுக்கலேன்னா எனக்குத் தலை வெடிக்கும்போல இருக்கு. கிட்டப் போய்ப் பார்த்தால் அட! நம்ம செல்லக்குட்டி புள்ளையார்.
ரொம்ப எளிமையான உடையில் வந்துருந்தாங்க. அலங்காரங்கள் அதிகம்...அதிகமென்ன அதிகம்? ஒன்னுமே இல்லைன்னுதான் சொல்லணும். வாய் நிறையச் சிரிப்பு. அவுங்க கண்ணும் சிரிக்குது.

எப்பேர்ப்பட்ட இசை மேதை டாக்டர் ராமநாதன்! அவரையே குருவாக அடையும் பாக்கியம் பெற்றவர் கீதா. குரு மட்டுமா? கீதாவின் தந்தையும் அவர்தான்.

வீணை பேசுமுன்னு சொல்றதை...அன்னிக்குத்தான் பார்த்தேன்! சௌராஷ்ட்ரா ராகத்துலே 'கணபதே' கடவுள் வாழ்த்து. மோகனம், கன்னடா(அப்படித்தான் சொல்லணுமாம்!) ரஞ்சனி, மனோஹரின்னு அடுக்கடுக்கா வந்துபோனாங்க. ஆஹா..... எனெக்கெப்படி இவ்வளோ இசை ஞானம் வந்துச்சு? ஒவ்வொரு வாசிப்புக்கும் முன்னே என்ன ராகம், என்ன தாளமுன்னு சொன்னது எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்துச்சு.

தெரிஞ்ச பாட்டுகளும் தெரியாத பாட்டுகளுமா அமர்க்களம். 'பஜரே மானஸம், எந்த வேடுகோ ஓ ராகவா' தெரியலைன்னு சொன்னா அக்கிரமம் இல்லையோ? சபைத் தலைவர் மைக் பிடிச்சப்போ.... இசைமேதை ராமநாதன் வீணை வாசிச்சுக்கிட்டே பாடுவார். நீங்க அவரோட நேரடி(!) சிஷ்யைன்னதும் கீதாவும் ஒரு காவடிச்சிந்து பாடிக்கிட்டே வாசிச்சாங்க. மங்களம் வாசிச்சு முடிச்சவுடன் தியாகராஜைய்யருக்கு ஆரத்தி எடுத்து குங்குமப்பிரசாதம் ஆச்சு. ஏகப்பட்டப் பக்க வாத்தியங்கள் இல்லாம ஜஸ்ட் மிருதங்கம் மட்டும்தான் என்றது வாசி + வாசின்னு வித்தியாசமான ஒரு அனுபவமா இருந்துச்சு எனக்கு. பாலஷங்கரும் நல்லாவே 'வாசி'ச்சார்.
கீதாவின் எழுத்துக்களை மட்டுமே வாசிச்சு ஒரு பரிச்சயமான எனக்கு இப்போ அவுங்க வாசிப்பையும் கேட்கும் சந்தர்ப்பம் அமைஞ்சதை என்னன்னு சொல்வது? நிகழ்ச்சி முடிஞ்சவுடன் அஞ்சு நிமிஷம் கீதாவுடன் பேசிட்டுக் கிளம்பினேன். அப்பப்ப மடல் தொடர்பு இருப்பதால் 'சட்'னு புரிஞ்சுக்கிட்டாங்க. இந்த மாசம் டிசம்பர் பாதிவரை சென்னைதானாம். இன்னும் நாலைஞ்சு நிகழ்ச்சிகள் இசைவிழாவுலே இருக்காம். பார்க்கிறேன்னு சொல்லிட்டு வந்தேன். (என்னா கெத்து பாரேன் இந்த துளசிக்கு! குறைக்குடமுன்னாலும் பரவாயில்லை. ஆனா இது காலிக் குடம்)

பொதுவாக அரங்கத்தில் இருப்பது போல 'பளிச்' வெளிச்சம் இல்லாம எல்லாமே படு 'ஹோம்லி'யா இருந்ததால் படங்கள் கொஞ்சம் ஏறத்தாழத்தான் வந்துருக்கு.

48 comments:

said...

//கீதாவின் எழுத்துக்களை மட்டுமே வாசிச்சு ஒரு பரிச்சயமான எனக்கு இப்போ அவுங்க வாசிப்பையும் கேட்கும் சந்தர்ப்பம் அமைஞ்சதை என்னன்னு சொல்வது? நிகழ்ச்சி முடிஞ்சவுடன் அஞ்சு நிமிஷம் கீதாவுடன் பேசிட்டுக் கிளம்பினேன்//

எழுத்தாளர் கீதாபென்னட் என்று சொல்லுவாங்களே அவிங்களா ?

said...

எழுத்தாளர் கீதா பென்னட் வாசிச்சாங்கன்னு இப்பதான் தலைப்பே புரிகிறது !!!

அட்டகாசம் !

said...

இது எல்லாம் கத்துக்கணும் டீச்சர். இவ்ளோ தெரிஞ்ச்ச நீங்களே காலி குடம்னா, அப்போ நாங்க.... குடத்தையே காணோமே.... சரி...சரி... மாதவ பெருமாள் கோயிலுக்கு அடிக்கடி போய் இருக்கேன். அங்க சாமி ரொம்ப அழகா இருப்பாரு.. கோயிலும் சுத்தமா இருக்கும்... ம்ம்... இது தான் நம்ம ரேஞ்ச்... அட...மீ த பர்ஸ்டாஆ....

said...

ஓ அந்த வாசிப்பா சரி சரி :)))

செவிக்குணவு தினம் கிடைக்குது போல..

Anonymous said...

எழுத்தாளர்னா வாசிக்கணும் - தலைப்பு வைக்க உங்க கிட்ட தான் கத்துக்கணும்.

said...

சரி...சரி...மீ த செகண்டு...சந்தோஷமா கண்ணன் சார்..

said...

அடடே இவங்க கதையெல்லாம் நிறைய வாசிச்சிருக்கேனே! ஹி ஆனா இந்த வாசிப்பு நமக்கு வராதுங்க. நானானி வாசிப்பாங்க நல்லா.

said...

தலைப்புக்கான காரணம் பதிவை படிச்சதும் தான் புரியுது :)

said...

எழுத்தாளர் வாசித்தால் தானே எழுதவும் முடியும்:)
நாங்களும் வாசிக்கிறோம். நீங்க கேளுங்க , எழுதுங்க, நாங்க மீண்டும் வாசிக்கிறோம்.
இது நல்லா இருக்கே.:)
அந்தக் கடைசிப் படத்தில முதுகு காட்டி ,ஆரஞ்சுப் புடவை சுத்தி உட்கார்ந்திருவங்க யாருன்னு யோசிக்கிறேன்.
ரொம்பப் பழக்கமானவங்கப் பா. சற்றே திரும்பியிருந்தா நிச்சயமா தெரியும்.,

உங்களுக்கு கீதா சினேகிதியா!!!!!!!!!!!!
நான் உங்க தோழி. அதனால் அவங்களும் எனக்குத் தோழின்னு சொல்லட்டுமா.:))
படங்கள் வழக்கம்போல் சூப்பர்.

said...

துளசி,

நல்ல அனுபவ பகிர்தல். சென்னையில், என் வீடு மாதவப் பெருமாள் கோயிலுக்கு வெகு அருகில்தான். சீஸனில் சந்திக்கலாம்.

லலிதா ராம்

said...

வாங்க கோவியாரே.

அவுங்களேதான். வருகை ஃப்ரம் அமெரிக்கா.

ரொம்பவும் அமெரிக்கையா அமர்ந்து வாசிச்சாங்க.

ரசிப்புக்கு நன்றி.

said...

வாங்க விஜய்.


மாணவர் மாதிரிதான் டீச்சரும். கற்றது கைமண் அளவுதான். அதுகூட இத்தனை வயசானதுக்கப்புறமே:-)

லோக விவரம் அறியாம எப்படியெல்லாம் இருந்துருக்கோமுன்னு நினைச்சா.... அதிர்ச்சியாவும் ஆச்சரியமாவும் இருக்கும்!

இதே கோவிலைப் பற்றி முன்னே ஒரு இடுகை போட்டுருந்தேன். சுத்தம் என்பதைக் குறிப்பிட்ட நினைவு.

said...

வாங்க கயலு.

கண்ணுக்கு விருந்தும் செவிக்குணவும் பஞ்சமே இல்லை.

கவனமா இருந்தால் எல்லாம் இலவசமாக் கிடைச்சுரும். செந்தில் மாதிரி ஒரு டேட்டா பேஸ் வச்சுக்கணும். அம்புட்டுதான்:-)

said...

வாங்க சின்ன அம்மிணி.

தலைப்புக்கு மட்டும் எதாவது பரிசுத்திட்டம் இருக்குதுங்களா? :-)

said...

வாங்க ராமலக்ஷ்மி.

வாசிப்புக் கேட்கும்போது நம்ம பதிவர் குடும்பம் நினைவுக்கு வராம இருக்குமா?
நானானியையும், ஜெயந்தி சங்கரையும் நினைச்சுக்கிட்டேன்.

எனக்கும் வீணை வாசிக்க வரும். ஆனா வீ....ணைன்னு பேப்பரில் இருக்கணும்:-)

said...

வாங்க நான் ஆதவன்.

படிக்க வைக்க என்னெல்லாம் யுக்தி செய்யவேண்டி இருக்கு பாருங்க!!!!!

said...

வாங்க வல்லி.

தோடா...... முகம் பார்த்துச் சொன்னது போதாதுன்னு இப்ப முதுகு பார்த்துச் சொல்றீங்களா!!!!!!

ஒரு சபாவுலே நிஜமாவே தெரிஞ்ச முகம் ஒன்னு பார்த்துட்டு யாரா இருக்குமுன்னு ரொம்ப நேரம் யோசிச்சுக்கிட்டே இருந்தேன். பேசாம வல்லியையும் கூட்டிவந்துருக்கலாமுன்னு கோபாலிடம் ஒரே புலம்பல்:-)


நீலப்புடவையின் முந்தானை பார்க்கலையா?

நம்மாள் வரிசையில் நடந்து போறார்.

said...

வாங்க லலிதா.

என்னை நீங்கதான் கண்டு பிடிக்கணும், எப்பவாவது சந்திச்சால். கஷ்டமில்லைன்னு நினைக்கிறேன்.

சனிக்கிழமை சஞ்சய் சுப்ரமண்யம் கேட்கப்போயிருந்தோம். ஒரு பெண் சட்னு வந்து துளசிதளம்னு சொல்லிக் கையைப் புடிச்சுக்கிட்டாங்க. எனக்கு பயங்கர இன்ப அதிர்ச்சி.

நான் திகைச்சதைப் பார்த்துட்டு, நாய் கடிச்சுருச்சுப்பான்னு சொன்னதும் ஒரே சிரிப்பு எங்களுக்கு. ரெகுலர் வாசகியாம். நம்ம கீதா சாம்பசிவம் ஆன்மீகப்பதிவுகளும் விரும்பிப் படிப்பாங்களாம்.

எப்படிக் கண்டுபிடிச்சீங்கன்னேன்.... கோபாலைப் பார்த்தாம். இது எப்படி இருக்கு:-)

said...

துளசிஜி, அந்த ராமநாதனை குருவாககப் பெற்ற இன்னொரு ஆள் சங்கீத உலகை கலக்கிகிட்டு இருக்காங்க அது யார் தெரியுமா?

http://kgjawarlal.wordpress.com

said...

//கன்னடா(அப்படித்தான் சொல்லணுமாம்!) //


கானடாவோட கன்பியூஸ் பண்ணிக்காதீங்க. கானடா வேற கன்னடா வேற! :)

said...

மிக அருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றி

said...

Once upon a time Geetha Bennet , Prakash swami, sudhaangan helped (contributed) a lot to Grow Vikatan, Aaa Vi & Joo vi.

Today vikatan is in bad stage thats a separate story.

said...

எழுத்தாளர்ன்னா எல்லா வாசிக்க வந்திரும் போல!!!

இத்தன விஐபிகளை டீச்சர் தெரிஞ்சிருந்தாலும் எங்களை மாதிரி ஸ்டூடன்ஸையும் மேய்க்கறீங்களே!

said...

அன்புள்ள துளசி கோபால் அவர்களுக்கு
இராஜ.தியாகராஜனின் வணக்கம்.

மரத்தடிக்குப்பின் உங்கள் நீண்ண்ண்ண்ட நாட்களுக்குப்பின் சந்திக்கிறேன் என்றெண்ணுகிறேன். நான் அதிகம் வலைப்பூக்கள் பக்கம் வருவதில்லை. அன்றைக்கு செல்ல செல்வங்கள்/ எண்ணைக் கத்தரிக்காய் எழுதியது போலவே அழகான கோர்வை வரிகள். வாழ்த்துகள்
இவண் அன்பன்
இராஜ.தியாகராஜன்
www.pudhucherry.com
www.tyagas.wordpress.com
www.thamizhmozhi.blogspot.com

said...

தலைப்பும் பதிவும் கலக்கல் டீச்சர் ;))

said...

அன்பின் துளசி

வாசிப்புன்னா இபடி ஒரு அர்த்தம் இருக்கா - அதுவும் எழுத்தாளரோட வாசிப்புன்னா .... என்னமோ போங்க

வழக்கம் போல கட்டுரை அருமை படங்கள் அருமை

நல்வாழ்த்துகள்

said...

நீங்களே காலிக்குடம்னா நாங்கள்ளாம் ஓட்டைக்குடம் :)

ரசனையையும் தலைப்பையும் ரசித்தேன் :)

said...

கீதா ஒரு நிறை குடம். நீங்கள் ஒரு நிறை குடம்.


//எழுத்தாளருன்னா வாசிக்கணும்.//

உண்மை.

said...

//இத்தன விஐபிகளை டீச்சர் தெரிஞ்சிருந்தாலும் எங்களை மாதிரி ஸ்டூடன்ஸையும் மேய்க்கறீங்களே!
//

ரிப்பீட்டே...

நல்ல பகிர்வு.

said...

துளசி

>>>>என்னை நீங்கதான் கண்டு பிடிக்கணும், எப்பவாவது சந்திச்சால். கஷ்டமில்லைன்னு நினைக்கிறேன்.
>>>>>

24-ம் தேதி கலாரசனா கச்சேரி அல்லது ஜனவரி 5-ம் தேதி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸில் நிச்சயம் என்னைக் காண முடியும். மற்ற நாள் விவரங்களை என் வலைப்பூவில், எனக்குத் தெஇர்யும் போது போடுகிறேன். முடிந்த போது சந்திக்கலாம்.

லலிதா ராம்
http://carnaticmusicreview.wordpress.com/

said...

வாசிக்கிறவர் என்றால்? சரி வாசிச்சுட்டு, எழுதறேன்... (ஏதோ எனக்குத் தெரிஞ்சதை)

said...

வாங்க ஈரோடு நாகராஜ்.

வாசிப்பு(கள்) எங்கெங்கேன்னு ஒரு வார்த்தை சொல்லக்கூடாதா?

பதிவரே வாசிப்பதும் வாசிப்பவரே பதிவதும் எத்தனைபேருக்கு சாத்தியம்?

இந்த இசைவிழாவில் பதிவர்சந்திப்பு அவசியம் வேணும்:-)

said...

100 years, just now updated schedule :)in my blog...

looking forward to meeting you...

said...

தியாகராஜ வித்வத் சமாஜம் எங்கேனு என்னைக் கேட்டிருக்கக்கூடாதோ? அங்கே போயிட்டுத் தான் வல்லி வீட்டுக்கே போனேன், ரெண்டு மாசம் முன்னால். கீதா பென்னெட்டின் கச்சேரியை வானொலிகளில் கேட்டதுதான். ஒரு இசை நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி விடறதில்லை போல, போயிட்டு வாங்க, வந்து எழுதுங்க, படிச்சுத் தெரிஞ்சுக்கறேன். நமக்குத் தொலைக்காட்சி தான் சங்கீத சபா. மார்கழி மாசம் பூராவும் வருமே! விடறதில்லை எதையும்!

said...

வாங்க ஜவஹர்.

புதிருக்கு விடையைச் சொல்லுங்க:-)

இந்தக் கணக்குலே இப்ப நிறையப்பேர் இருக்காங்க:-)

said...

வாங்க கொத்ஸ்.

நலமா?

க்ளாஸ் லீடரைக் காணாமப்போக்கின டீச்சர் நானாத்தான் இருப்பேன்:-)

ராகங்களில் கானடா & கன்னடா ன்னு விவரமே இப்பத்தான் தெரிஞ்சது:-)

said...

வாங்க சரவணகுமார்.

வருகைக்கு நன்றி. ஆதரவுக்கும் இன்னொரு ஸ்பெஷல் நன்றி.

said...

வாங்க குப்பன் யாஹூ.

பின்னூட்டங்களில் பல சுவாரசியமான விவரங்கள் கிடைக்குது பாருங்களேன்!

நன்றி.

said...

வாங்க சிந்து.

நிறைய வி ஐ பி களை எனக்குத் தெரியும். ஆனா.....அவுங்களுக்குத்தான் என்னைத் தெரியாது:-)

ஆசிரியர்ன்னாவே ஏணிதானேப்பா.

said...

வாங்க தியாகராஜன்.

வணக்கம். நலமா? ஹைய்யோ....'பார்த்து' எவ்வளோ நாளாச்சு!!!

மரத்தடியை விட்டுத் தனிக்குடித்தனம் வந்து அஞ்சு வருசத்துக்கு மேலே ஓடிப்போச்சே!

அந்த எண்ணெய்க் கத்தரிக்காய் தவறுதலா என் பெயரில் வந்துருக்கு. நானும் நிர்வாகத்திடம் சொல்லிப் பார்த்துட்டேன். மாற்றவே இல்லை.
உண்மையான பெருமை நம்ம ஆஸாத் அவர்களின் தங்கமணிக்குப் போய்ச் சேரணும்.

நேரம் கிடைக்கும்போது நினைவும் இருந்தால் துளசிதளத்தின் சில இடுகைகளைப் பாருங்கள்.

said...

வாங்க கோபி.

தொடர்ந்த அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிப்பா.

said...

வாங்க சீனா.

அதான் வாசி வாசி என்று வாசிக்க வச்சுட்டேனே:-))))

said...

வாங்க கவிநயா.

ஆஹா..... தேன்... தேன்.

கவியே சொன்னதுக்கு நோ அப்பீல்:-)

said...

வாங்க கோமதி அரசு.

எல்லாம் உங்க அன்பும் நட்பும் செய்யும் வேலைதான்:-)

said...

வாங்க நன்மனம்.

பின்னூட்டமும் உங்க நல்ல மனசுதான்:-)))))

said...

வாங்க கீதா.

ஆஹா..... இதுக்குத்தான் எல்லாத்தையும் பதிஞ்சு வைக்கணும்.

நான் தடுமாறாம உங்ககிட்டே கேட்டுருப்பேனே:-)

said...

நானும் ஒவ்வொரு வருஷமும் கீதா பென்னட் வீணை கேக்கணும்னு நினைப்பேன் இன்று வரை முடியவில்லை.
ஆனா ஒரு சந்தேகம் வீணையைக் கேட்டா கொடுப்பாங்களா....
ஹி ஹி வீணைக்கும் எனக்கும் எவ்வளவு தூரம்ன்னு இப்போ தெரிஞ்சிருக்குமே...

said...

வாங்கோ கோமா!

கேட்டாப் பேஷாக் கொடுக்குமிடம் ஒன்னு எனக்குத் தெரியும்.அவுங்க உங்களுக்கும் ரொம்பவே வேண்டப்பட்டவுங்க.

ரெண்டு இருக்கு. அதிலே ஒன்னு கேட்டால் தப்பா?