Saturday, December 26, 2009

பதிவர் வீட்டு விசேஷம்

சும்மாவே ஆடுவேன். இதுலே கொஞ்சம் கள்ளையும் ஊத்திக்கிட்டாக் கேக்கணுமா? ஒரு ஒம்போது மாசமுன்பு சிங்கையில், தோழிவீட்டுக்குப் போயிருந்தப்ப (மசால்வடை ஸ்பெஷலாச் செஞ்சுவச்சுருந்தாங்க இந்த எலிக்காக!) அநேகமா இந்தியா வாசம் அதுவும் சிங்காரச்சென்னையில் லபிக்கப்போகுதுன்னு..........

'அடிச் சக்கை. பொண்ணோட நடனஅரங்கேற்றம் டிசம்பரில் வச்சுருக்கேன். சீக்கிரமாப் போய்ச் சேரு. தோ.... பின்னாடியே வர்றோமு'ன்னாங்க. ஆஹா..... கூடச் சேர்ந்து 'ஆட'க் கூப்புட்டுருப்பாங்க ன்னு பயிற்சி எல்லாம் பண்ணிக்கிட்டே இருந்தேன். ஸ்டாப்...... ரொம்பக் கற்பனைக்க வேணாம். முக்கியமான ஆளா நினைச்சுக்கிட்டு அரக்கப் பரக்க இங்கேயும் அங்கேயுமா ஓடத்தான் பயிற்சி.

விழாவுக்கு ரெண்டுவாரமுன்பு சிங்கைத்தோழி இங்கே வந்துட்டாங்க. அழைப்பிதழ்கள் கொஞ்சம் கையில் வச்சுக்கிட்டு, பதிவுலகத் தோழிகளைப் பார்த்துக் கொடுத்துக்கிட்டு இருந்தேன்.
தினமும் மூணு மணிநேரம் நடனப்பயிற்சி (தோழியின் மகளுக்குத்தான்)நடந்துக்கிட்டு இருந்துச்சு. நம்ம வீட்டிலும் மின்தூக்கி (நம்ம கனம் தாங்காமல்?) மண்டையைப் போட்டதால் படிகள் ஏறி இறங்கியே ஒரு பத்துப் பதினைஞ்சு கிராம் இளைச்சேன்.

தக்ஷிணாமூர்த்தி ஹால். மயிலை பி.எஸ். உயர்நிலைப்பள்ளியில் இருக்கு. போய்ச் சேர்ந்தப்ப வாசலில் அழகான பூக்களமும் நடுவில் வச்ச உருளியில் மிதக்கும் தாமரைகளும். பசுமைச்செடிகள் உள்ள தொட்டிகள் வாசலில் இருமருங்கும். மேடையிலும் ரொம்ப நீட்டா மலர்ச்சரங்களைத் தொங்கவிட்டு அழகுபடுத்தி இருந்தாங்க. நடராசர், பிள்ளையார், கடைசியா நம்ம ருக்மிணி அருண்டேல் அம்மாவின் படமுன்னு மூணடுக்கு. இப்பெல்லாம் எதுக்குமே மெனெக்கெடவேணாமுன்னு ஆகிப்போயிருக்கு. ஹால் அலங்காரம் எல்லாமும் காண்ட்ராக்ட் தானாம். அடடா.... அந்தக் காலத்துலே கல்யாணம், கச்சேரி, விசேஷமுன்னு இருந்தால் நாமே எல்லாத்தையும் இழுத்துப் போட்டு ஆக்கி அரிச்சுன்னு தாவு தீர்ந்துரும். கடைசியில் பார்த்தால் நாம் ஒரு விநாடி நின்னு நிதானிச்சு நம்ம ஏற்பாடுகளைப் பார்த்து ரசிக்கக்கூட நேரம் இருக்காது. இப்ப இந்த ஃபாஸ்ட் உலகத்துலே அத்தனையும் ஃபாஸ்ட்டே. ஒக்கே ஸ்பீடு!
வரும் மக்களை வரவேற்க ரோசாப்பூக்களும் கல்கண்டும், சந்தனமும், பன்னீருமா அட்டகாசம். ரோசாவைத் தலையில் வைக்க ஹேர்ப்பின் இல்லாமத் தவிப்போமேன்னு அதுக்கும் ஒரு ஏற்பாடு! என்னமா உக்காந்து யோசிக்கிறாங்கப்பா! பலே பேஷ் பேஷ்ன்னு சொல்லவச்சது. இதுலே வீடியோக்காரர் வேற கோபாலை நிக்கவச்சு 'ஷூட்' பண்ணிக்கிட்டு இருக்கார். நீங்களும் நில்லுங்க மேடமுன்னு உபசரிப்பு வேற. ரொம்ப ஜம்பமா ஒரு ரோசாவை எடுத்து 1 4 3 சொல்லி என் கையில் கொடுத்தார் கோபால். ஓசிப்பூவில் ஒன்னும் குறைச்சல் இல்லை:-)))))


நடக்கப்போகும்அன்றைய நிகழ்ச்சி முழுசும் அச்சடிச்சுக் கையில் கொடுத்துட்டாங்க. அழைப்பிதழும் நிகழ்ச்சி நிரலும் வடிவமைச்சது நடனமணியின் கைங்கர்யம். நிரலில் விட்டுப்போன ஒரே ஐட்டம் கொஞ்சநேரத்துக்கு மின்சாரவிசிறிகள் ஒட்டுமொத்தமாப் பண்ண வேலை நிறுத்தம். சிங்காரச்சென்னை விஷயம் சிங்கைக்காரர்களுக்குத் தெரியலைப்பா!!!


சிங்கைப்பதிவர் மானஸாஜென் போஸ்டர்களை அங்கங்கே வச்சுக்கிட்டு இருந்தார். இவர் ரொம்ப அழகா படங்கள் வரைவார். ஒரு நாலரை வருசத்துக்கு முன்னே சிங்கையில் நடந்த 'முதல்' அகில உலகப் பதிவர் மாநாட்டில் மீராவின் படமொன்றை எனக்குப் பரிசாகக் கொடுத்தார். அடுத்தமுறை வேற படம் அன்பளிப்பாத் தரச்சொல்லிக் கேக்கணும்:-))))
(மானஸாஜென் என்ற ரமேஷ் சுப்ரமணியம் & கோபால்)


முக்கியமான ஒருத்தரா இருக்குமுன்னு நான் நினைச்சவர் காரில் வந்து இறங்கினார். சிங்கை டாக்டர் காசிநாதன். SIFAS (Singapore indian Fine Arts Society) இப்போதையக் காரியதரிசி. அப்படியே அவரிடம் கொஞ்சம் விஷயம் சேகரிச்சுக்கிட்டேன் உங்களுக்காக.
1949 வது ஆண்டு, அஞ்சு மாணவிகளும், ஒரு ஆசிரியையுமா ஆரம்பிச்ச இந்த கலைச்சங்கம் இன்னிக்கு பெரிய ஆலமரமாக் கிளைவிட்டு வளர்ந்துருக்கு. இன்றையக் கணக்கில் 1500 மாணவ மாணவிகளுடன் 23 ஆசிரியர்கள். காலை 9 முதல் இரவு 9 வரை திறந்திருக்கும் பள்ளி. வெவ்வேறு நேரத்தில் பாட்டு, நடனம்னு வகுப்புக்கள் ந்டந்துக்கிட்டே இருக்காம். நாட்டியம் மட்டுமில்லாமல் வாய்ப்பாட்டு கர்நாடக சங்கீதம் & ஹிந்துஸ்தானி சங்கீதம் ரெண்டும், வயலின், ம்ருதங்கம், தப்லா, வீணை, விஷுவல் ஆர்ட்ன்னு பெயிண்டிங் வகுப்புக்களும், சுருக்கமாச் சொன்னால் எல்லாக் கலைகளும் ஒரே கூரையின் கீழ்!!!!இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவமாணவிகளுக்கு பரிட்சைகள் வச்சு டிப்ளமோ வழங்கறாங்க. இன்னிக்கு நடனமாடப்போகும் ஷ்ருதி, இந்த வருடத் தேர்வில் முதலிடத்தில் வெற்றியடைஞ்சு 'நாட்டிய விஷாரத்' என்ற பட்டம் வாங்கி இருக்காங்க. சங்கத்துக்கு 60 வயசாகுது. புதுவருசம் பிறந்தவுடன் பெரிய திருவிழாவுக்கு ஏற்பாடுகள் நடக்குதாம். டாக்டர் காசிநாதன் வருசாவருசம் ம்யூஸிக் சீசனுக்குச் சென்னை வந்துருவாராம்.
ஷ்ருதியின் குருவைப் பற்றிச் சில வார்த்தைகள். குரு குருன்னதும் ரொம்ப வயசானவங்களா இருப்பாங்கன்னு போனவளுக்குக் குருவைப் பார்த்ததும் வியப்புதான்.சரூப்பா தாஸ், கலாஷேத்ராவில் பயின்றவர். மோகினியாட்டம் படிச்சது த ஃபேமஸ் கல்யாணிக்குட்டியம்மெயிடத்து. அஞ்சு வருசமா சிஃபாஸில் நடன ஆசிரியை. இப்போ சிலமாதங்களா ஷார்ஜாவில். புதுக் கல்யாணப் பொண்ணு.

இசைக்குழுவைப்பத்தியும் சொல்லாமவிடக்கூடாதில்லெ? மங்களம் ஷங்கர். ஆல் இந்தியா ரேடியோவில் 'ஏ' க்ரேடு கலைஞர். ஸ்ரீ டி.எம். தியாகராஜனின் சிஷ்யை. சிங்கை வானொலியிலும் சிலகாலம் பணி செஞ்சுருக்காங்க.
ம்ருதங்கம் வாசிச்சவர் வேதகிருஷ்ண ராம். யாமினி கிருஷ்ணமூர்த்தி, ஸ்வர்ணமுகி, தனஞ்செயன், சுதாராணி ரகுபதி போன்ற பெரிய ஆட்களுக்கு வாசிச்ச கைகள். கேக்கணுமா? தூள் கிளப்பிட்டார்.

ஃபிடில் வாசிச்சவர் அனந்தகிருஷ்ணன். வயலின் பரம்பரைன்னு சொல்லணும். தாத்தா ஸ்ரீ வெங்கட ராமானுஜம் ஐயங்கார் அந்தக் காலத்துலே பெரிய வயலின் வித்துவான்.

குழலிசை ஸ்ரீ பி.என். ரமேஷ். தமிழ்நாடு இசைக்கல்லூரி சென்னையில் சங்கீத வித்துவான் பட்டம் பெற்றவர். நடனத்துக்கு வாசிக்கவே பொறந்தவர் போல இருந்தார்.

பக்க வாத்தியங்கள் எல்லாம் ரொம்ப அருமையா அமைஞ்சு எல்லாம் பக்காவா இருந்ததுன்னு சொல்லி வாழ்த்தியவர் விழாவைத் தலைமையான சிறப்பு விருந்தினர் திருமதி சித்ரா விஸ்வேஸ்வரன் அவர்கள். மைக் பிடிச்சு மேடையில் நிற்கும்போதே தேர்ந்த கலைஞரின் கை அசைவுகள், முகபாவனைன்னு அப்படியே அள்ளிக்கிட்டுப் போகுது. அந்தப் பேசும் கண்களைப் பார்த்து அப்படியே அதிசயிச்சு நின்னேன் என்பதே நிஜம். மூணு வயசில் நடனம் கத்துக்க ஆரம்பிச்சு பதினோராம் வயதில் ஒரு நடனத்தை வடிவமைச்சவர். சித்ராவைப் பற்றிச் சொல்ல ஆரம்பிச்சால் அதுவே ஒரு பத்துப் பதிவுகளுக்கு இழுத்துக் கொண்டுபோகும் அபாயம் இருக்கு. 25.5 வருசங்களுக்கு முன்னே இவுங்க நடனத்தை ஃபிஜித்தீவில் பார்த்தபொழுதில் இருந்து நான் இவரின் ரசிகை.
இந்திய சூழலுக்கு ஒவ்வாதவிதமாச் சரியாச் சொன்னநேரத்துக்கு நிகழ்ச்சியை 'டான்'னு ஆரம்பிச்சாங்க. புஷ்பாஞ்சலி, அலாரிப்பு, ஷப்தம்,ஜதிஸ்வரம், பதம், வர்ணம், தில்லானா, மங்களமுன்னு ரொம்பவே சம்பிரதாயமான கலாஷேத்ராபாணி நடனம். அதிலும் அந்தத் தில்லானாவை வடிவமைச்சது கலாஷேத்ராவின் ருக்மிணி அருண்டேல்தானாம். அவுங்களுக்கே அதை அர்ப்பணிக்கவும் செஞ்சாங்க.
நடனத்தை விமரிசிக்கும் வேலையை நல்லவேளையா எனக்கு வைக்கலை(!!) நம்ம சித்ரா விஸ்வேச்வரன். வசிஷ்டர் வாயால் ப்ரம்மரிஷி. இது போதாதா?

எல்லாம் முடிஞ்சு வெளிவரும் சமயம்தான் வந்திருந்த விஐபி ஒருவரைச் சந்திச்சேன். அவர் வருவார்ன்னு ஏற்கெனவே தெரிஞ்சுருந்தாலும் அவருக்காக ஒதுக்கி வச்ச இருக்கை (எனக்கு முன்வரிசையில்) காலியாவே இருந்துச்சே. வியப்பில் 'நீங்களா'ன்னு நான், 'நான் ஜெயமோ......' ன்னு ஆரம்பிச்சவரை அப்படியே 'கன்' சொல்லவிடாமக் கட் பண்ணினேன். உங்களைத் தெரியாதா என்ன ? "நான் துளசி. துளசி கோபால்." ஒரு ரெண்டே நிமிசப்பேச்சு. படம் ஒன்னு க்ளிக். இங்கே இருக்கு பாருங்க.

கண்ணுக்கும், செவிக்கும் விருந்து போதாதுன்னு வயிற்றுக்கும் விருந்து உணவு பார்ஸல் ரெடியா காத்திருந்தது வந்திருந்த எல்லோருக்கும். சங்கீதாவில் இருந்து மினி டிஃபன். கேசரி, ரவா கிச்சடி, மினி இட்லி, மசால் தோசை, மெதுவடை, சட்டினி சாம்பார்களுடன். கூடவே ஒரு 500 மில்லி....... குடிதண்ணீர். ( பெரியவர்கள் பார்வையில் படுவதால் படம் போடவில்லை! ஆனால் ஒன்னே ஒன்னு சொல்லிக்க ஆசையா இருக்கு. போனவாரம் இதே குடும்பத்து சதாபிஷேகத்துலே காலை ப்ரேக் ஃபாஸ்ட்டும் லஞ்சும் அட்டகாசம். அதே ஞானாம்பிகை கேட்டரர்ஸ்தான்!!)

மரத்தடி காலத்து எழுத்தாளர் குடும்பம் நம்ம சித்ராவும் கணவர் ரமேஷும்.
ரெண்டுபேரும் கொஞ்சம் பிஸியாகிப்போனதால் சமீபத்துலே ஒன்னும் எழுதலை. அதுக்காக.... உறவு விட்டுப்போகுமா?

சிங்கையில் தமிழ் எழுத்தாளர்கள், இலக்கிய அமைப்பில் சித்ரா ஒரு முக்கிய புள்ளி. திண்ணையில் இவரது படைப்புகளைக் காணலாம். இன்னைக்கு முழுக்க முழுக்க குடும்ப நிகழ்ச்சியாப் போயிருச்சு. ரமேஷ் வந்தவர்களை வரவேற்றுப் பேசினார். சித்ரா, ஒவ்வொரு நடனத்துக்கான பொருளையும் பாடல் அமைந்த ராகம், தாளம் எல்லாம் விரிவாகச் சொல்லி விளக்கினார். நன்றி உரை நடனமணி ஷ்ருதி. உதவி செய்த ஒருவரையும் விட்டுவிடாமல் நன்றியுடன் பாராட்டியது விசேஷம்.

ஷ்ருதி ஆடும்போது, என்னவோ என் மகளே ஆடுவதுபோல் ஒரு பெருமிதம் மனசை அடைச்சுக் கண்ணுலே தண்ணீர் (ஆனந்தக் கண்ணீர்ன்னு தனியாச் சொல்லணுமாக்கும்? ) வந்துருச்சு. என்னன்னார் கோபால். தூசி விழுந்துருச்சுன்னேன். புசுக் புசுக்ன்னு இப்பெல்லாம் எதுக்கெடுத்தாலும் கண் நிறைஞ்சுருதுப்பா!

சித்ரா & ரமேஷ் தம்பதியினரின் அன்பு மகள் ஷ்ருதி எல்லா நலன்களும் பெற்று வாழணுமுன்னு நம் அனைவரின் சார்பில் வாழ்த்துகின்றேன்..

பதிவர் நானானி நேரிலும், கவிதாயினி மதுமிதா வான்வழியாகவும் வந்து சிறப்பித்தார்கள். கோவீயார் சாட்டில் வந்து வாழ்த்தினார்.

36 comments:

said...

//சித்ரா & ரமேஷ் தம்பதியினரின் அன்பு மகள் ஷ்ருதி எல்லா நலன்களும் பெற்று வாழ்ணுமுன்னு நம் அனைவரின் சார்பில் வாழ்த்துகின்றேன்..//


ரிப்பீட்டேய்...

Anonymous said...

//நம்ம வீட்டிலும் மின்தூக்கி (நம்ம கனம் தாங்காமல்?) மண்டையைப் போட்டதால் //

உங்க டச்.

உருளியில் பூ அருமை.

said...

//ஷ்ருதி ஆடும்போது, என்னவோ என் மகளே ஆடுவதுபோல் ஒரு பெருமிதம்//

இது எனக்கு ரொம்ப பிடிச்ச்ச்சிருக்கு:-)))

டீச்சர்.. நானும் நீரோட்டத்துல குதிச்சிட்டேன்.
http://amaithicchaaral.blogspot.com
வந்து உங்க கருத்தை சொல்லுங்க.
நீச்சல் தெரியல்லைன்னாஉங்களிடம் தனி மடலில் பேச முடியுமா?.

said...

ஜெயந்தி சங்கர் அவர்களின் பெண்தானே..(மசால்வடைன்னதும் ஞாபகம் வந்தது).

அப்புறம் போட்டோ ஏற்கனவே ஜெயமோகன் அவர்களின் பதிவில் பாத்தாச்சு. உங்க பதிவுக்காகத்தான் வெயிட்டிங்கில் இருந்தேன்.

said...

டீச்சர்..மன்னிக்கவும். சிங்கைன்னதும் அவுங்க பேர்தான் மனசுல நிற்குதா..அதான் மாத்திச்சொல்லிட்டேன்:-(((.
சித்ரா ரமேஷ்..சித்ரா ரமேஷ்
இப்ப சரியா?

said...

/-- கூடச் சேர்ந்து 'ஆட'க் கூப்புட்டுருப்பாங்க ன்னு பயிற்சி எல்லாம் பண்ணிக்கிட்டே இருந்தேன். ஸ்டாப்...... ரொம்பக் கற்பனைக்க வேணாம். முக்கியமான ஆளா நினைச்சுக்கிட்டு அரக்கப் பரக்க இங்கேயும் அங்கேயுமா ஓடத்தான் பயிற்சி. --/

இந்த ஹாஷ்யம் தான் உங்களோட ஸ்பெஷல்... எனக்கு ரொம்ப பிடிச்சதும் கூட.

said...

படங்கள் அற்புதம். விளக்கம் அற்புதம். பளிச்சிடும் பாசம் அற்புதம்.
நல்லதையே பார்க்கும் குணம் அற்புதம். அடிக்கடி,
இந்தக் கண்ணில தண்ணி கட்டுச்சினா, அப்புறம் ஜலுப்பு பிடிச்சுக்கும்னு இப்ப உங்களுக்குச் சொல்றேன். கேட்டுக்கங்க.:(

said...

[[[நம்ம வீட்டிலும் மின்தூக்கி (நம்ம கனம் தாங்காமல்?) மண்டையைப் போட்டதால் படிகள் ஏறி இறங்கியே ஒரு பத்துப் பதினைஞ்சு கிராம் இளைச்சேன்.]]]

ரொம்ப உண்மை பேசுறீங்க டீச்சர்..!

said...

//நீங்களா'ன்னு நான், 'நான் ஜெயமோ......' ன்னு ஆரம்பிச்சவரை அப்படியே 'கன்' சொல்லவிடாமக் கட் பண்ணினேன். உங்களைத் தெரியாதா என்ன ? "நான் துளசி. துளசி கோபால்." ஒரு ரெண்டே நிமிசப்பேச்சு. படம் ஒன்னு க்ளிக். இங்கே இருக்கு பாருங்//

நீங்க இப்ப பிரபல பதிவர்களுக்கெல்லாம் பிரபல பதிவர் டீச்சர் :)

said...

டீச்சர் இந்த வார குமுதத்தில் சித்ரா விஸ்வரனைக் கிழி கிழின்னு கிழிச்சிருக்காங்க.
டயர் மடிப்பும் பெருத்துப் போன உடலுமாக ஒரே இடத்தில் அபியம் பிடிச்சார்னு.

said...

/சித்ரா & ரமேஷ் தம்பதியினரின் அன்பு மகள் ஷ்ருதி எல்லா நலன்களும் பெற்று வாழ்ணுமுன்னு நம் அனைவரின் சார்பில் வாழ்த்துகின்றேன்..//


ரிப்பீட்டேய்..

said...

ரொம்ப பெரிய பதிவு டீச்சர், இரண்டு பாகமா போடக்கூடாதா?

said...

நல்ல சம்பிரதாய நடனம் பார்த்த திருப்தி.

//கூடச் சேர்ந்து 'ஆட'க் கூப்புட்டுருப்பாங்க ன்னு பயிற்சி எல்லாம் பண்ணிக்கிட்டே இருந்தேன்.//
இம்மாதிரி லொள்ளுகள் உங்களுக்கே உரியது. அப்படி ஆடினாலும் பார்க்கலாமென்றிருந்தேன்.

said...

//டயர் மடிப்பும் பெருத்துப் போன உடலுமாக ஒரே இடத்தில் அபியம் பிடிச்சார்னு.//

இப்படிப்பட்டவர்கள் ஆடும் போது டயரையும் ப்ரேக்கையும் க்ளச்சையும் பார்க்கக் கூடாது. அவர்களின்
அனுபவம் மட்டுமே பார்க்கவேண்டும்.
வளரும் இஞ்சி இடுப்பழகிகளிடம் என்ன அனுபவபூர்வமான நடனத்தைக்காணமுடியும்?

இன்றும் பத்மா சுப்பிரமணியம் நாட்டியத்தை அவரது அனுபவத்துக்காகவே ரசிக்கிறேன்.
விராலிமலைக் குறவஞ்சி நாட்டிய நாடகத்தில் பத்மா, சித்ரா,சுதாராணி ஆகியோர் சேர்ந்த கலக்கியிருப்பார்கள்.

said...

\\ புசுக் புசுக்ன்னு இப்பெல்லாம் எதுக்கெடுத்தாலும் கண் நிறைஞ்சுருதுப்பா!//நம்ம மண்ணுக்கு வந்ததும் இப்படி ஆகிடுச்சா விசேசமா..:)

said...

நீங்கள் எழுதிய தாய்லாந்து கட்டுரை சில காலங்களுக்கு முன் படித்திருக்கிறேன். நான் டைகர் டெம்பிள் பற்றி ஏழுதியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வாசித்துப்பாருங்கள்.

said...

வாங்க கைலாஷி.

நீங்களே முதல்லே வந்து வாழ்த்துனது ஷ்ருதிக்கு நல்ல எதிர்காலம் இருக்குன்னு உணர்த்துது. மும்முறை ( இல்லே இன்னும் கூடுதலா?) கயிலையை வலம்வந்தவர் ஆசிகளுக்குப் பவர் கூடுதல்!

நன்றிங்க.

said...

வாங்க சின்ன அம்மிணி.

பதிவில் எழுதுன வேகத்தில் ரிப்பேர் வேலை முடிஞ்சு இப்போ லிஃப்ட் வேலை செய்யுது. ( டச் வுட்!)

தெரிஞ்சுருந்தா இப்படி 51 நாள் தேவுடு காத்துருக்கமாட்டேன்:-)

ஒரு பதிவர் சந்திப்பு நடந்த மறுநாள்தான் மண்டையைப் போட்டுச்சுப்பா!

said...

வாங்க ஐம்கூல்பாஷூ.

உங்க பெயரில் பாதி இன்னொரு பதிவர் ஏற்கெனவே இருக்காங்க. இப்போ நீங்களும் பதிவர் ஆகிவிட்டதால் கன்ஃப்யூஷன் வேணுமான்னு யோசிங்க!

இம்பொஷிஷன் சரியா வந்துருக்கு:-))))))

said...

வாங்க கிருஷ்ண பிரபு.

சிரிப்பைப்போல உற்சாகம் வேற எதுலே இருக்கு?

"அட! சிரிக்கிறயே! நீயாவது எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருக்கணும்."

பிபி ஸ்ரீனிவாஸ் குரலில் சொல்லிப் பாருங்க:-)))

said...

வாங்க வல்லி.
அச்சச்சோ.... ஜலுப்பு இப்படித்தான் வந்துச்சா??????

said...

வாங்க உண்மைத் தமிழன்.

பெயருக்கு ஏத்தாப்போல 'உண்மை' மட்டும் உங்க கண்ணுக்குப் புலப்படுது பாருங்க:-)))

said...

வாங்க நான் ஆதவன்.

சத்தமாச் சொல்லாதீங்க. ரகசியம் நமக்குள்ளே இருக்கட்டும்:-))))

said...

வாங்க கண்மணி.

ஆஹா.... ஒருத்தரைப் பத்தி ஒன்னும் நாம் எழுதிறக்கூடாதோ!!!!!

இன்னும் பார்க்கலை. ஓசி வரும் அண்ணியிடமிருந்து. அப்போதான்...

said...

வாங்க சிங்.செயகுமார்.

அடுத்தமாசம் நேரில் சித்ரா மேடத்திடமே சொல்லும் வாய்ப்பு இருக்கே உங்களுக்கு!

said...

வாங்க குடுகுடுப்பை.

நெசமாவா? ஜக்கம்மா இதையா 'பெருசு'ன்னு சொல்றாள்?

said...

வாங்க நானானி.

இன்னிக்கு சித்ராவின் நடனம் போகணுமுன்னு இருந்தேன். காய்ச்சல் வந்து ரெண்டுபேரையும் சாய்ச்சுப்புடுச்சேப்பா(-:

குமுதம் சொல்வது மெய்யான்னு செக் பண்ணமுடியலைன்னுதான் இப்போதைய சோகம்!

said...

வாங்க கயலு.
ஒரே மண்வாசனை!

said...

வாங்க ரிஷபன்.

அழைப்புக்கு நன்றி. தட்டாமல் வருவேன் நான் உமது மாளிகைக்கு .

said...

தோழியின் மகளுக்கு என்னுடைய வாழ்த்துகளையும் சேர்த்துக்கோங்க அம்மா. வழக்கம்போல உங்க இஷ்டைலில் அருமையா கவர் பண்ணி இருக்கீங்க :)

said...

வாங்க கவிநயா.

ஓக்கே. டன்:-)

said...

டீச்சர்... 'ஐம்கூல், ஐம்கூல்பாஷு' ரெண்டுமே நாந்தான். அமைதிச்சாரலை உருவாக்கும்போது பசங்களைச்சேத்துக்கிட்டதால ஐம்கூல்பாஷு ஆனேன்.'யாராச்சும் இருக்காங்களா'ன்னு கேட்டுப்பாத்தேன்.யாரும் இல்லை,நீயே அந்த பேரை வெச்சுக்கோன்னு ப்ளாக்கர் சொல்லுச்சு. நீங்க சொன்னப்புறம் கூகிளில் பாத்தா.. அம்மாடி..நெஜமாவே அப்பிடி ஒருவர் இருக்கார்.நமக்கு வம்பு வாணாம்ன்னு இமெயில் ஐடி மொதக்கொண்டு எல்லாத்தையும் மாத்திட்டேன்.சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.
நீண்ட பின்னூட்டத்துக்கு மன்னிக்கவும்.

said...

விமர்சனம் அருமை.நேரில் போயிருந்தா கூட இவ்வளவு ரசிச்சிருப்பேனா.. தெரியாது. எம்.எஸ்.வி அவர்களின் சொற்கோலங்கள் ஆஹா...அதுவும் கண்ணதாசன் அவர்களின் கூட்டணி என்றால் கேட்கவும் வேணுமா!!!!!

said...

அமைதிச்சாரல்,

அவனா/ளா நீயின்னு கேக்கலாமா? இல்லை ஒன்றானவன்/ள் உருவில் ரெண்டானவள்/ன் ......னு பாடலாமா? :-)))))

said...

டீச்சரக்கா, அவளா நீயின்னே கேக்கலாம்.:-)).
இவளேதான் அவள், அவளேதான் இவள்.:-))))))).ப்ரொஃபைலை பாருங்க.

said...

ரொம்ப,ரொம்ப, லேட் கமென்ட். அட்டகாசமான கவரேஜ்.