Tuesday, December 15, 2009

யோவ், உம்பேரு பார்த்சார்திதானே?


காலை 9.05 மணி. இவராத்தான் ட்ரைவிங் ஸ்கூலுக்கு ஃபோன் போட்டார். ரெண்டு மூணு மாசத்துக்கு முன்னே சென்னையில் வண்டி ஓட்டிப் பார்க்கும் விபரீத எண்ணம் வந்து தொலைச்சுருக்கு. வேணாம் வேணாமுன்னு தலைதலையா அடிச்சுக்கிட்டாலும் யார் கேக்கறா?

என்னென்ன செய்யணுமுன்னு விசாரிச்சப்ப, ட்ரைவிங் ஸ்கூலைத் தொடர்பு கொள்ளணுமுன்னு சொன்னார் ஒருத்தர். யார் என்ன செஞ்சாங்கன்னே தெரியலை அடுத்த பதினைஞ்சாவது நிமிஷம் வாசக் கதவைத் தட்டிக்கிட்டு ஒருத்தர். மறுநாள் காலையில் வந்து கூட்டிப்போறென்னு சொன்னார். வந்தார். ரெண்டு பேரும் போனாங்க.


ஒரு ரெண்டு மணி நேரம் கழிச்சு வந்த கோபால், எனக்கு லேர்ணர்ஸ் லைசன்ஸ் கொடுத்துருக்காங்கன்னார். குறிப்பிட்ட (?) பணம் கட்டி ஒரு ஃபாரம் பூர்த்தி செஞ்சு சாலைவிதிகள்( ஹா.....) தேர்வு கணினியில் செஞ்சுறணுமாம். தலைக்குமேலே சுவத்துலே எல்லாம் இருக்கு. நிதானமாப் பார்த்துக் காப்பி அடிச்சாலும் போதுமாம். ஆச்சு. பாஸ்.

இனி வண்டி ஓட்டிப் பழகிட்டு(!!???) டெஸ்ட் ட்ரைவ் போகணும். ஒரு மாசத்துலே எடுத்துறலாமுன்னு பேச்சு. இவரோ ஊர் தங்குறதில்லை. இருக்கும் நாட்களில் நினைவும் இருப்பதில்லை. எப்பவாவது நினைவு வந்து 'எப்பய்யா ஓட்டிப் பழகணுமுன்னா?' வாத்தியாருக்கு வேலை பிஸி. நமக்கு வேளை வரலை.

இன்னிக்கு என்னமோ நினைவுக்கு வந்து ட்ரைவிங் ஸ்கூலைக் கூப்புட்டா, ஒம்போது மணிக்கு ஆர் டி ஓ வந்துருங்கன்றார். இப்பவே ஒம்போது ஆச்சே, இன்னும் அரைமணியில் அங்கே இருப்பேன்னு சொல்லி அலறி அடிச்சுண்டு ஓடறார்.................

கொஞ்சம் இருங்க. நம்ம ட்ரைவரைக் கூப்பிட்டு வண்டியை எடுக்கச் சொல்லலாமுன்னா...............கேட்டுட்டாலும்.........

அங்கே போய் தேவுடு காத்தபிறகு பத்தரைக்கு ட்ரைவிங் ஸ்கூல் வாத்தியார் வந்துட்டார். இன்னும் அங்கே காத்திருந்த தன் பள்ளி மாணவர்களை எல்லாம் நோட்டம் விட்டுட்டு, அங்கே இருந்த ரெண்டு பெண்களை ஒரு பள்ளிக்கூடக் காரில்(அறுதப் பழசு சுஸுகி ஆல்டோ 800) ஏத்திட்டு, 'பார்த்தச்சாரதி, நீயே சாரத்யம் பண்னிக்கிட்டு எம்பின்னாலேயே வா' ன்னுட்டு அவர்பாட்டுக்கு ஒரு டூவீலரில் முன்னாலே போக, நம்மாள் ரெண்டு புர்க்கா போட்ட லேடீஸை ஏத்திக்கிட்டு ஜோரா வண்டி ஸ்டார்ட் பண்ண, ரெண்டாம் கியர்மட்டும் வுழறதில்லையாம்! ஒரே இழு........கையோட வந்துருமோ? .ஓட்டிக்கிட்டுப் போறார். (ரெக்கைகட்டிப் பறக்குறதைக் கற்பனைக் கண்ணால் பார்த்தேன்.( யா அல்லா....யே கபி நஹி ஹோ சக்தா.........) அதென்னமோ அந்த ரோடில் அவ்வளவா ட்ராஃபிக் இல்லையாம். போய்ச் சேர்ந்த இடம் திருவான்மியூர் கடற்கரையை ஓட்டிப்போகும் ரோடு.


"ஓக்கே நல்லாத்தான் சார் ஓட்டுறே.. இப்படி எல்லோரும் உக்காருங்க . இந்த டுவீலர் ஆளுங்களுக்கு ட்ரெயினிங் கொடுத்துட்டு வர்றேன்."

"எல்லோரும் எட்டுப் போட்டுப் பழகுங்க..எட்டு எட்டு எட்டு." அதுலே சிலபேர் ஒழுங்காப் போட சிலர் ஒன்னு ரெண்டைக் கழிச்சுக்கிட்டு ஏழு ஆறுன்னு போட்டுப் பார்த்துக்கிட்டு இருக்காங்க.

எனக்கு அப்பப்பக் கமெண்ட்ரி வந்துக்கிட்டே இருக்கு செல்லுலே. "இன்னும் இன்ஸ்பெக்டர் வரலைம்மா. அவர் வந்து டெஸ்ட் வச்சதும் வந்துருவேன். எப்படியும் பன்னிரெண்டரை ஆகிரும். "

"ஏங்க பசியா இருந்தா, பக்கத்துக் கடைகளில் எதாவது வாங்கிக்குங்க. தண்ணி பாட்டில்வேற கொண்டு போகலையே."

"கடை ஒன்னும் இங்கே இல்லை. எதிரிலே கடல் மட்டும்தான். எனக்காக வெயிட் பண்ணாதேம்மா. நீ சாப்புட்டுரு."

" ட்ரைவரை வரச்சொல்லித் தண்ணி பாட்டில் கொடுத்து அனுப்பவா? "

"அதெல்லாம் வேணாம்"

அவர் அவருக்கு, அவரோட ஃபோன் வந்துக்கிட்டே இருக்கு. இப்பத்தான் இன்ஸ்பெக்டரைக் கூப்புட்டுவரப் போயிருக்கார் வாத்தியார். ரெவெண்டு ட்ரைவிங் ஸ்கூலுக்கு ஒரு இன்ஸ்பெக்டர். எட்டுப் போட்டுக்கிட்டு இருக்காங்க.

"அப்ப நீங்க பதினொண்ணா போட்டீங்க?"

"அட! உனக்கு எப்படித் தெரியும்? அதேதான் நேராப் போய், கொஞ்ச தூரத்துலே ப்ரேக் போட்டு நிறுத்தி நேரா ரிவர்ஸ் எடுக்கணும். அம்புட்டுத்தான்."

"பாஸ் பண்ணீங்களா இல்லையா?"

"தெரியாது. நம்மை இறக்கிவிட்டாச்சு. நேரா ஆஃபீஸுலே போய் இருக்கச் சொல்லிட்டாங்க. இதோ ஒரு ஆட்டோ புடிச்சுப் போய்கிட்டு இருக்கேன்."

இன்னும் ஒருமணி நேரங்கழிச்சு........."இன்னும் வாத்தியார் திரும்பி வரலை.
நாங்கெல்லாம் வரிசையில் உக்கார்ந்துருக்கோம். நீ காத்துருக்காதே. சாப்பிட்டுரு."

"ஏங்க நீங்க இன்னும் சாப்புடலையே? பசிக்கலையா? "

"அதெல்லாம் ஒன்னும் இல்லை. ஒரு நேரம் சாப்புடலைன்னா செத்தா போயிருவொம்?"

"அடி ஆத்தீ.........."

அரைமணி நேரம் கழிச்சு.....

"ஆத்தா....நான் பாஸாயிட்டேன். ஆனா இன்னும் சில வேலைகளை முடிச்சுட்டு வரணும். "

இன்னொருமுறை ஃபோட்டோ எடுத்து, கணினியில் பதிஞ்சு, விலாசம் எல்லாம் சரிபார்த்து, கையெழுத்துப்போட்டுன்னு இருந்து வீடு வரும்போது மூணரை..

" நாளைக்கு லைசன்ஸ் வந்துரும். ட்ரைவிங் வாத்தியார் கொடுத்தனுப்பறேன்னார். இங்கே ரூல்ஸ் எல்லாம் இருக்கு. ஆனா மிடில்மேன் இல்லாம எந்த வேலையும் ஆகாதுன்றமாதிரி ஒரு சிஸ்டம் வச்சுருக்காங்க."

"ஏங்க கவுண்டமணியைப் பார்த்தீங்களா?

ஆமாம்....நிறையப் பார்த்தேன்.

நாம் பாஸா ஃபெயிலான்னு கூட நமக்குச் சொல்றதில்லை. நம்ம பேப்பர்ஸ் எல்லாம் ட்ரைவிங் ஸ்கூல் வாத்தியார் கைலேதான். அவர் வந்து இன்னொரு க்ளார்க் கிட்டே சொன்னபிறகுதான் வேலையே ஆகுது.

அவர்தான் செந்திலா? போகட்டும். செலவு என்னாச்சு?

ரெண்டாயிரம்.

இருவத்தியெட்டு வருசம் கார் ஓட்டுன ஆளுக்குப் புது உரிமம் வாங்க....... இந்தப் பாடா?
பேசாம இண்டர்நேஷனல் லைசன்ஸ் எடுத்துட்டு வந்துருக்கலாமுல்லெ?
இனி தெருச்சண்டை வகுப்புக்குப் போகணுமோ? Be an Indian!!!

"ஏம்மா...உனக்கும் லைசன்ஸ் வாங்கிக்கறயா? நீ பாட்டுக்கு ரூல்ஸ் பேசிக்கிட்டுப் போனா...இந்த ஜென்மத்துலே உனக்கு லைசன்ஸ் இல்லை"

"என்னா தில்லு? யோவ்....உம்பேரு பார்த்சார்திதானே?"

(நன்றி க்ரேஸி)

51 comments:

said...

நான் கூட லைசென்ஸ் வச்சிருக்கேனே.. :)
( வச்சிருக்கேன்னா அவ்வளவுதான் வச்சிருக்கேன்.)

said...

செம ப்ளோ கலக்கல் டீச்சர் :)))))))

சிரிச்சுக்கிட்டே இருக்கேன் - டிரைவிங்க் லைசென்சு புரொசிஜர் எல்லா ஊர்லயும் ஒரே மாதிரிதான்போல!

//ஏங்க கவுண்டமணியைப் பார்த்தீங்களா?

ஆமாம்....நிறையப் பார்த்தேன்.//

டாப்பு!

said...

Mee the first :)

Anonymous said...

//இனி தெருச்சண்டை வகுப்புக்குப் போகணுமோ? Be an Indian!!!//

கோபால் சாரை நாய் கடிச்சுருச்சு பதிவை ஒரு ரெண்டு தரம் நல்லா படிக்கசொல்லுங்க :)

said...

வாங்க கயலு.

நானும் வச்சுருக்கேன். ஆனா நியூஸியோடது.

தினமும் பயன்படுத்தியது அது:-)

டாக்ஸி ஓட்டிப் பிழைச்சுக்குவேன். ஆனா அது அங்கே!

said...

வாங்க ஆயில்யன்.

நியூசியிலே ப்ரொஸிஜர் இப்படி இல்லை. நோ மிடில்மேன். எல்லாம் ஸீதா...ஸாதா.....

நாடே நோ டிப்ஸ் ப்ளீஸ்:-))))))

said...

வாங்க லோகன்.

யூ த தேர்ட்:-)

said...

வாங்க சின்ன அம்மிணி.

நாய் கடிச்சப்பப் பக்கத்துலே இருந்தார் கோபால்!

அனுபவப்பாடம் கிடைச்சுருக்குமுன்னு நம்புவோம்:-)

said...

நாய் கடிச்சப்பப் பக்கத்துலே இருந்தார் கோபால்!

அனுபவப்பாடம் கிடைச்சுருக்குமுன்னு நம்புவோம்:-)
aha.:)

said...

அட ஒரு நாள்ல வாங்கிட்டாரா லைசென்ஸை:)
11 வேற போட்டாரா.
அப்ப கவுண்டமணி பக்கத்தில கமல் இல்லையா:)

இதுதான்பா நம்ம ஊரு:((
நல்லவேளை கைல கொடுத்தாங்க இல்ல.
இல்லாட்ட இன்னும் கொடுக்கணுமா??

said...

இப்படியே தான் டீச்சர் நானும் வாங்கினேன்...சமீபத்திலே நானும் அண்ணியும் சேர்ந்து கார் ஓட்டி பண்ணின கலாட்டாவுல கார் கதவுக்கு ஐயாயிரம் பணால்...

கோபால்ஜிக்கு என்னோட வாழ்த்துக்கள்.

said...

ஒரே ஒரு சின்ன கரெக்‌ஷன் - உன் பேரு பார்த்சாரதிதானே? (த வரக்கூடாது கவுண்டரோட ஸ்லாங்க்ல :))) )

said...

வாங்க வல்லி.

வாழ்க்கை முழுசும் பாடம்தான்:-)

கைக்கு வரலை இன்னும். அப்போ கைக்கு இன்னும் என்னன்னு தெரியவரும்:-)

said...

வாங்க சிந்து.

நம்ம தோழி ஒருத்தர் இந்தியாவுலே வந்து காரைத் தொடாமலேயே லைசன்ஸ் எடுத்துக்கிட்டு வந்தார்.

வீட்டுலேயே கொண்டுவந்து தந்தாங்களாம்:-)

said...

வாங்க லக்ஷ்மி.

ஆஹா....... கோட்டைவிட்டுட்டேன். எடுத்துக்கொடுத்ததுக்கு டேங்கீஸ்.
இன்னும் சொல்லப்போனா அது பார்த்சார்தி.

மாத்திப்புட்டேன்:-)

said...

//"என்னா தில்லு? யோவ்....உம்பேரு பார்த்சார்திதானே?"//

:))))))) முடியல டீச்சர். சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.

said...

//
"ஏங்க கவுண்டமணியைப் பார்த்தீங்களா?//

//அவர்தான் செந்திலா? போகட்டும். செலவு என்னாச்சு?//

சூப்பரோ சூப்பர் :)

said...

:)))))))))))))))))

said...

//"யோவ், உம்பேரு பார்த்சார்திதானே?"//

:)))

கலக்கல்

said...

துளசிஜி, அருமை, அருமை... சுவாரஸ்யம் + ஹ்யூமர். நானே லைசன்சே வாங்கிட்டு வந்த மாதிரி இருக்கு. ஒரே ஒரு அப்ஜக்ஷன், ஒரு இடத்திலே ஆல்டோவை கிண்டல் விட்டிருக்கீங்க. ஆல்டோதான் என் காதல் வாகனம்.


http://kgjawarlal.wordpress.com

said...

//துளசி கோபால் said...
நியூசியிலே ப்ரொஸிஜர் இப்படி இல்லை//

இப்ப‌டி இருந்தா அது நியுசி இல்ல‌ டீச்ச‌ர்

said...

வாங்க நான் ஆதவன்.

குண்டூசிகளையெல்லாம் டீக் கப்புலே போட்டவுடன், செந்தில் கொஞ்சம்கூட அலட்டிக்காமல் பேசிக்கிட்டே ஒரு காந்தம் காமிச்சு அதையெல்லாம் எடுத்துட்டு அந்த டீயைக் குடிக்கும் ஸீன் ஞாபகம் வருது:-)))))))

said...

வாங்க கீதா.

சிரிச்சு 'வாழ வேண்டும்'!

said...

வாங்க மிஸஸ்.தேவ்.

ஆஹா....நன்றி.

said...

வாங்க ஜவஹர்.

அச்சச்சோ.....

ஓக்கே அப்ஜெக்ஷன் ஓவர்ரூல்டு &

அப்ஜெக்ஷன் சஸ்டெய்ண்டு இதுலே எது வேணுமோ அதை எடுத்துகுங்க:-)

(எத்தனை சினிமா பார்த்துருக்கோம்!!!!)

said...

வாங்க கரிசல்காரன்.

அதுவுஞ்சரிதான். நியூஸி நியூசியாவே இருக்கட்டும்:-))))

உலகத்தை மாத்தறோம்ன்னு புறப்பட்டு..... வேணாம்!

said...

:)) டீச்சர் சாருக்கு ஏழரை போடத் தெரிந்திருந்தா இன்னும் சீக்கிரம் லைசன்ஸ் கெடைக்குமே :))

said...

ஆமா பதிவுக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம்னு யாராச்சும் சொல்லுங்க

said...

படத்தைப் பத்தி எழுதலையே...ஏன்?

said...

கலக்கல்.

." அதுலே சிலபேர் ஒழுங்காப் போட சிலர் ஒன்னு ரெண்டைக் கழிச்சுக்கிட்டு ஏழு ஆறுன்னு போட்டுப் பார்த்துக்கிட்டு இருக்காங்க./////

சூப்பர்.. இதெல்லாம் எங்க ஊரில் சகஜம் டீச்சர்.

said...

@thulasi madam
ippathan middle manla tukkiachunu paperla padichen innum maralia.. ..

unga blog follow panren ana update varaliye enaku?

LK

said...

காரோட்ட கத்துக்கன்னு
நம்ம பார்த்தசாரதி எம்புட்டு தடவையோ கேட்டு பாத்தும் நான் இல்ல, நான் மாட்டேன்னு அழிச்சாட்டியம் செஞ்சுக்கினு இருக்கேன். :))

இலங்கையில் இருந்தப்போ கத்துக்கலாம்னு தான் நினைச்சேன். அப்ப என் ஃப்ரெண்ட் ஒருத்தங்க கத்துக்கிட்டா உன்னிய வண்டி ஓட்டச்சொல்லிட்டு ஐயா ஹாயா வருவாங்கன்னு சொல்ல, அந்த ஹாயா நாமத்தானே இருக்கணும்னு!! முடிவு செஞ்சிருக்கேன்.

:))))

said...

//Jawahar said...
துளசிஜி, அருமை, அருமை... சுவாரஸ்யம் + ஹ்யூமர். நானே லைசன்சே வாங்கிட்டு வந்த மாதிரி இருக்கு. ஒரே ஒரு அப்ஜக்ஷன், ஒரு இடத்திலே ஆல்டோவை கிண்டல் விட்டிருக்கீங்க. ஆல்டோதான் என் காதல் வாகனம்.//

//கண்மணி said...
ஆமா பதிவுக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம்னு யாராச்சும் சொல்லுங்க//

ஜவஹர்,
அந்த படத்துல இருக்குற குதிரைதான் :)) ஆல்டோ வாம். டீச்சர் சொல்லாம சொல்லுறங்க.. நாராயண...நாராயண...

said...

இதுதான் இந்தியா

said...

ஆகா...கலக்கிட்டிங்க...;)) டீச்சர் ரெண்டு பேராக போயிருந்தால் கொஞ்சம் தள்ளுபடி கிடைச்சிருக்குமல்ல..சீக்கிரம் போங்க இல்லைன்னா 2000 4000 ஆயிரமாகிடும் ;))

said...

ம்ம் உண்மை நிலை இயலபான நகைச்சுவையுடன் எழுதப்பட்ட இடுகை - அப்பப்ப கோபால் நினைவு வந்து சாப்ட்டிங்களா - எனன் பண்றீங்க - எப்ப லைசன்ஸ் வரும் - நிமிஅடத்திற்கு ஒரு முறை விசாரிப்புகள் - கோபாலின் அப்டேட்ஸ்கள் - அட்டா அடடா - பாவம் கோபாலு - துளசி கொஞ்சம் நைநைங்காம் ஃப்ரீயா வுடுங்களே

இது எப்படி இருக்கு

said...

வாங்க கண்மணி.

கோபாலை 'அது' பிடிச்சு முப்பத்தியஞ்சரை ஆகுது. இதுலே எங்கே 'அதை'ப்போட!

படம் ஒரு புதிர்தான். கண்டுபிடிங்க:-)

said...

வாங்க சிஜி.

சும்மா ஃப்ளாட்டா..... போனா?

கண்டு பிடிங்க நீங்களே:-)

said...

வாங்க சூர்யா.

சகஜம் சகஜமுன்னு சொல்வதே சகஜமாப் போச்சேப்பா!

said...

வாங்க எல்.கே.

மிடில்மேனைப் பத்திரிக்கைச் செய்திகளில் இருந்து மட்டும் தூக்கி இருப்பாங்க.

நிழல்போயிருச்சு. நிஜம் இருக்கு!


ரீடர்லேயா போட்டுருக்கீங்க?

said...

வாங்க புதுகைத் தென்றல்.

அயித்தான் கூடப்போறப்ப ஹாயாப் போங்க. ஆனால் காரோட்டக் கத்துக்குங்க. இது இக்காலக் கட்டத்தில் ரொம்ப அவசியம்.

பி.கு: தேவைப்பட்டால் டாக்ஸி ஓட்டிப் பொழைச்சுக்கலாம் பாருங்க:-)))))

said...

வாங்க விஜய்.

நாரதர் வேலைக்கு ப்ரமோஷன் ஆனதுக்கு மகிழ்ச்சி:-)
நல்லதா முடியட்டும்.

said...

வாங்க அண்ணாமலையான்.

நம்ம வீட்டுக்கு முதல் வருகையா?

ரொம்ப மகிழ்ச்சி. நலமா?

இதுதான் இந்தியான்னுட்டு விட்டுட்டா...இன்னும் சீரழிஞ்சுப்போயிரும். மாற்றி அமைக்க முயற்சிக்கணும். முடியலையா? மாறுமான்னு ஏங்கணும்.

எல்லாம் 'கலி' வேலையாம்!

said...

வாங்க கோபி.

திரௌபதி மாதிரி நான் ஒரு சபதம் போட்டுட்டேன்.

இந்தியாவில் ஸ்டீரிங் வீலைத் தொடமாட்டேன்(என்ன தான் ஹார்ன் அடிச்சுப் பார்க்க ஆசை இருந்தாலும்!)

said...

வாங்க சீனா.

அச்சச்சோ...... இது ரிவர்ஸ் (கியர்)

அவர் அவருக்கு 'அவருடைய' ஃபோன் தான் வந்துக்கிட்டு இருந்துச்சு.

நான் அவருக்கு தொலைபேசவே மாட்டேன். ரொம்பத் தேவைன்னா 'மிஸ்கால்' விடுவேன்! (காசு செலவாயிருமுல்லே?)
இப்பச் சொல்லுங்க....மனுஷியை நைநைய்யாம ஃப்ரீயா விடக்கூடாதா? :-)))))

said...

டீச்சர்..

நீங்க கார் ஓட்ட நான் பின்னாடி உக்காந்து திருப்பதிமலைல ஏறணும்னு ஆசையா இருக்கு..!!!

எப்ப போகலாம்..?

said...

வாங்க உண்மைத் தமிழன்.

அச்சச்'சோ'....விநாசகாலே விபரீத புத்தி!!!!!

said...

//ஆத்தா....நான் பாஸாயிட்டேன்//
இன்னும் சிரிச்சு முடியலை:-)))))

//இனி தெருச்சண்டை வகுப்புக்குப் போகணுமோ?//
ரெண்டு நாள் வண்டி ஓட்டுனா வேண்டியமட்டும் பட்டறிவு கெடைச்சுரும்.
நீங்க லைசன்ஸ் எடுக்கறதா இருந்தா சும்மா பத்து, பதினஞ்சு எல்லாம் போட்டு காமிங்க.பதினொண்ணு எல்லாம் சின்னப்புள்ளைங்க போடுறது.:-)))

said...

வாங்க ஐம்கூல்.

நாமெல்லாம் பதிவர்கள் இல்லையோ?

22தான் போடணும்:-))))

said...

நான் 96ல சென்னையில ஓட்டுனர் உரிமம் வாங்குறப்பவும் இப்படியே தான் நடந்துச்சு. அப்புறம் அந்த போட்டோ கார்டை அப்புடியே வச்சிருக்கேன். அதுக்கப்புறம் நம்ம ஊருல காரே ஓட்டலை.

said...

வாங்க குமரன்.

ஒரு நாள் பக்கத்துத் தெருவுக்குக் காரில் போய் முடி வெட்டிக்கிட்டு வந்துட்டார்:-)))))