Monday, December 14, 2009

சாருவுடன் ரெண்டு வார்த்தை(கள்)

அங்கங்கே சின்னச் சின்ன முடிச்சா ரெண்டு மூணு ஆட்கள் நின்னுருந்தாங்க. மேடை அமைப்பு வச்சு பரபரன்னு சிற்றுண்டி செக்ஷன் ரெடியாகிக்கிட்டே இருக்கு. அதோ வர்றாருன்னு கோபால்தான் சொன்னார். சம்கி வச்சக் காவிக் கலர் புடவையில் அவந்திகா, அவரைப் பிந்தொடர்ந்து கறுப்பு ஸ்வெட்டரில் சாரு.

வணக்கம் சாரு. எப்படி இருக்கீங்க? நான் துளசி.

நல்லா இருக்கேன். எப்ப வந்தீங்க? ( 2003 அவர் வீட்டுக்குப் போய் சந்திச்சு இருக்கேன்)

இளைச்சுப் போயிட்டீங்க போல( இது நான் அவரைக் கேட்டது!) மாற்றி யோசிக்க வேணாம்:-)

பசங்க (கையை ஒரு மூணடி உசரத்தில் காமிச்சு) நல்லா இருக்காங்களா? (இதுவும் நாந்தான்)

ஆமாம். நல்லா இருக்காங்க. வடை, பஜ்ஜி எல்லாம் இருக்கு.

போச்சுறா....... துளசி = வடை?

உங்க பௌன்ஸர்கள் எல்லாம் எங்கே?

ஹாஹா....தொடர்ந்து படிச்சுக்கிட்டு வர்றீங்களா?

அப்புறம் பார்த்தால் போண்டா கூட இருக்கு. இது பதிவர் சந்திப்பேதான்!!!!


கேசரி, போண்டா, வடை, சட்டினி, சாம்பார், காஃபி இப்படி..... பயங்கரக்கூட்டம். கட்டிடத்தின் வாசலருகே எல்லாம். பரவாயில்லையே... டிஃபனை முடிச்ச கையோடு போயிடலாம் என்ற சுளுவான ஏற்பாடு.அரங்கின் உள்ளெ எட்டிப் பார்த்தேன். அவந்திகா, நிர்மலா, கல்கி முன்வரிசையில். குரலில் பவ்யம் காட்டக் குரல்வளையைப் பிடித்தபடி ஒருத்தர் பேசிக்கிட்டு இருந்தார்.

அரங்கில் ஒரு பத்துபேர்தான் இருந்தாங்க. இடம்தேடி அமர்ந்தோம். சிற்றுண்டி தயார். போய் சாப்பிடுங்கன்னு அறிவிப்பு. வெளியே போனால் அசப்பில் அந்தக் காலப் பார்த்திபனைப்போல இருந்த ஒருத்தர் சாருவோடு நின்னுக்கிட்டு இருந்தார். அப்புறம் நமக்குப் பக்கத்து இருக்கையில் வந்து உக்கார்ந்தார். இலக்கியக் கூட்டத்துக்கு(???) வருவது முதல் முறையாம். எனக்கும் இப்படிப் புத்தக வெளியீட்டுக்கு வருவது முதல் முறைதான். டாக்குட்டர். அச்சுப் பிரதிகளை மட்டுமே வாசிக்கும் வழக்கமாம். காலம் மாறிப் போயிந்தி. கணினியில் படி(ங்க)ன்னு சொல்லி, தமிழ்மணத்தைப் பற்றி நான் சொல்ல, நம்ம கொ.ப.செ, துளசிதளத்தைப் பாருங்கன்னு என் கார்டை எடுத்துக் கொடுத்தார். (அதெல்லாம் பக்காவா கார்ட் அடிச்சாச்சு!)

சரசரன்னு இருக்கைகளே இல்லாத நிலைக்கு வந்தது அரங்கம். 'உன் பாத்திரம் நிரம்பி வழிவதாக!' உண்மைதான். மேடையிலும் நல்ல கூட்டம். நிர்மலா எல்லோரையும் வரவேற்று தமிழையும் புகழ்ந்தாங்க. அப்பப்பக் கை தட்டுங்களேன், சிரிங்களேன்னு கேட்டுக்கிட்டே இருந்தாங்க. எல்லோரும் 'ட்ரான்ஸ்'லே இருந்தமாதிரி அமைதியா இருந்தோமே:-) உயிர்மை இந்த வருசம் 90 போடுதாம்!!!!
இடமில்லாமல் வண்ணத்துப் பூச்சி நின்றிருக்கக் கண்டேன். ரெண்டு தலை ஆட்டல். எனக்கொன்னு, கோபாலுக்கொன்னு!

சா. கந்தசாமி தலைமை உரை. (தலையைப் பார்த்து இவரை நான் ஜெ.கா.ன்னு ஒரு வினாடித் தப்பாப் புரிஞ்சுக்கிட்டேன். டாக்குட்டர் பார்த்திபன், இவர் அவர் இல்லை. தப்பாப் புரிஞ்சுக்கிட்டீங்கன்னு சொல்லி, அவர் பங்குக்கு இன்னொரு பெயரைத் தப்பாச் சொன்னார்.( ஓவிய ஆதிமூல(மா)ம்) அச்சச்சோ.......... கடைசியில் இவர் கந்தசாமி!

மனுஷ்யபுத்திரனின் சம்பிரதாயமான வரவேற்பு. புத்தக வெளியீடு(கள்) இன்னார் கொடுக்க இன்னார் வாங்கன்னு.......

மதன்பாப் உண்மை பேசினார். புத்தகத்தைப் படிக்கவே இல்லை. ஆனாலும் ஒரு ரெண்டு எழுத்துப் பிரபல எழுத்தாளர் சொன்னாராம். பரவாயில்லை. ஒன்னு ரெண்டு அத்தியாயம் 'பார்த்துட்டு' ரெண்டு வார்த்தைச் சொன்னாப் போதுமுன்னு. 'சாரு'வேதான்.

இதே கூட்டம் நாளைக்கும் வருமான்னு தெரியலையே?சாரு & பார்த்திபன்? :-)


விழா நாயகனைப் பாராட்டி, ஆக்சுவலா அந்த எழுத்தைப் பாராட்டியோ, இல்லை ஆராய்ஞ்சோ பேசணும் என்பதுதான் இந்தமாதிரி புத்தக வெளியீடுகளின் நோக்கமா இருக்கும் என்றெல்லாம் நினைச்சுக்கிட்டுப் போன எனக்கு, இது அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லைன்னு ஒருந்தர், இந்தப் புத்தகங்களுக்குச் சம்பந்தமில்லாத ஒருத்தரை அதுவும் அவர் இங்கே இல்லவே இல்லைத் தாக்கிப் பேசி, விழா நாயகனுக்கு ஒரு அசௌகரியத்தை உண்டாக்கினார்! தாடிக்காரர் நினைவில் வந்து போனார். இவரும் அவரில்லை, குமரியில் நிற்பவர்.


மெல்லிய குரலில் ஷாஜி பேச ஆரம்பிச்சது ரொம்ப நல்லா இருந்துச்சு. கடைசியில் அவரும் புத்தகத்தைப் பிரிச்சு வச்சுக்கிட்டு ஒவ்வொரு அத்தியாயமா (அங்கேயே மேய.....) ஊஹூம்.............

ஏம்ப்பா..... இன்னும் பத்துப்பேர் இருக்காங்கல்லே மைக் பிடிக்க?

நிர்மலாவும் குறிப்பால் உணர்த்தினார்கள் வரப்போகும் உரையாளர்களுக்கு. சிறிய உரை ஆற்றுவார் என்று. இருக்கும் பதற்றத்தில் சின்னதை யாரும் கவனிக்கலை! செலக்டிவ் லிஸனிங்.

குழந்தைக்கு உடல்நிலை சரியில்லைன்னு கொஞ்சம் தாமதமா வந்த இயக்குனர் வஸந்த பாலன் கடந்துபோன 'வெய்யில்' காலத்துலே இருந்து ஆரம்பிச்சார். சாரு, தடிமனான புத்தகம், அதுவும் சினிமா சம்பந்தமுள்ளதைக் கொடுத்துட்டாருன்னு குற்றம் சாட்டி, அடுத்தமுறை சின்னதா இலக்கியப் புத்தகம்தான் கொடுக்கணுமுன்னு ...... (சிற்றிலக்கியம் பேச ஆசை?)

அஞ்சரைக்கு போனதால் நமக்கும் நேரமாகிருச்சேன்னு எட்டுக்குக் கிளம்பிட்டோம்.


சரி மத்ததெல்லாம் நமக்கெதுக்குன்னு ஒரு பேப்பர் ஸர்வியட்டில் கோபால் (கூட்டத்தில் வரிசையில் ஊடுருவி )கொண்டுவந்தார்.

முருகனை இப்படிச் சோதிச்சால் அவர் என்ன செய்வார்? சின்ன மகிழ்ச்சி முகத்துலே தெரியுது:-) (அவரே சொல்லட்டும்)


ஆக மொத்தத்துலே நல்லா கிறிஸ்ப்பாச் சுடச்சுட வடை அருமை.

41 comments:

said...

//ஆக மொத்தத்துலே நல்லா கிறிஸ்ப்பாச் சுடச்சுட வடை அருமை.//

);

said...

ஆகா.. வடை போச்சே..:)

said...

ம்...அப்புறம் என்ன ஆச்சு டீச்சர்?

:)))

இப்படி திண்ணைல உட்கார்ந்து சுவாரஸ்யமா பேசற மாதிரி இருக்கு உங்க அனுபவப் பதிவுகள் .அடுத்து எங்க போகப் போறீங்க டீச்சர்?

Anonymous said...

சாருவையெல்லாம் தெரிஞ்சுவைச்சிருக்கீங்க. பெரிய ஆள்தான் டீச்சர் நீங்க :)

said...

ரீச்சர்..

பந்திக்கு முந்தி மாதிரி எங்களுக்கு முந்தி காலி செஞ்சது நீங்கதானா..?

அவ்வ்வ்வ்வ்வ்..!

முருகனை நான் எங்க சோதிச்சேன்..? அவன்தான் சோதிச்சு.. சோதிச்சு.. நம்ம உடம்பையும், லைபையும் சோதனைக்கூடமா ஆக்கிட்டான்..!

said...

[[[சின்ன அம்மிணி said...
சாருவையெல்லாம் தெரிஞ்சுவைச்சிருக்கீங்க. பெரிய ஆள்தான் டீச்சர் நீங்க :]]]

மிகப் பெரிய ஆளுங்க..!

said...

//....சுடச்சுட வடை....//

மசால்வடை யா?

said...

கலக்கறீங்க மேடம், பதிவுலயும் சரி, புத்தகவெளியீட்டுல இருக்குற போட்டோவிலும் சரி :))

said...

உங்க கார்டை கண்ணுல காட்டலயே..:)

said...

வாங்க கரிசல்காரன்.

ஆஹா...... பாயிண்டைப் பிடிச்சிட்டீங்க!

said...

வாங்க கேபிளார்.

அச்சச்சோ.... ஜஸ்ட் மிஸ்ஸிங்????

said...

வாங்க காவேரி.

அருமையாத் தொகுத்துப் போட்டுருக்கீங்க.

நமக்கு அவ்வளவெல்லாம் பத்தாது!

கண்டுகிட்டதுக்கு நன்றிப்பா.

செல்ஃபோன் படங்களா? அருமை!!!!

said...

வாங்க மிஸஸ் தேவ்.

அடுத்து??????

யாருக்குத் தெரியும்? எப்படி அமையுதோ அப்படி.

நீர்வழிப்படும் புணை!!!!

said...

ஆஹா.. டீச்சர், நீங்களும் வந்திருந்தீங்களா?? நானும் வந்திருந்தேன். சந்தித்திருக்கலாம். சூர்யாவும் நானும் ஒன்றாகத்தான் வந்திருந்தோம். அவரும் சொல்லவே இல்லை. அடுத்தமுறை பார்க்கலாம்.

said...

வாங்க சின்ன அம்மிணி.

பெரியோர் என்று வியத்தலும் இல்லை சிறியோர் என்று மிதித்தலும் இல்லை!

அம்புட்டுத்தான்.

எல்லாம் சகமனிதர்கள்தான்.

said...

வாங்க உண்மைத் தமிழன்.

காலையில் இருந்து சுத்திக்கிட்டே இருந்தோம். அந்த களைப்புதான். பாதியில் எழுந்து போகும்படி ஆச்சு.

said...

வாங்க சிஜி.

நோ ம.வடை.

ஓட்டை வடைதான்:-))))

புண்ணியத்துக்குக் கிடைச்சதை......

said...

என்ன கொடுமை டீச்சர் இது??? இப்போதான் காவேரி கணேஷ் பதிவுல புகைப்படங்களைப் பார்த்தேன். உங்க ரெண்டு பேருக்கும் அடுத்து நீல நிற டீசர்ட்ல இருப்பவர் என் அலுவலகத் தோழர். நான் நின்றிருந்த இடத்திலிருந்து அவரை பலமுறை பார்த்து சைகையில் பேசிக்கொண்டிருந்தேன். ஆனால் அவர் அருகிலேயே இருந்த உங்களை பார்க்கவே இல்லை.. கண் டாக்டரை பாக்கணுமோ? :)))

said...

வாங்க அமித்து அம்மா.

கொஞ்சநாள் போனால் இந்த ஃபன் எல்லாம் மிஸ் பண்ணுவேன்!

said...

வாங்க கயலு.

நேர்லே பார்த்தவுடன் கார்டை எடுத்து நீட்டினால் ஆச்சு:-)

said...

வாங்க வெண்பூ.

சூர்யா எப்படி இப்படி? காவேரிக்குச் சொல்லிட்டு உங்களுக்குச் சொல்லலை பாருங்க(-:

தேடினால் (ஒருவேளை) கண்டடைந்து இருப்பீர்கள்:-)

said...

அடுத்து சங்கீத சீசன் பதிவுகளும் உடனுக்குடன் சுடச்சுட( வித் உங்க ஷ்பெஷல் டச் கமெண்டுடன்) வரும்னு எதிர் பார்த்து ஆவலுடன் காத்திருக்கேன்

said...

நேரில் செல்ல வாய்ப்பு கிடைக்காத எங்களுக்கு, உங்களின் புகைப்பட தொகுப்பையும் வர்ணனையும் படித்தபின் அது
கிடைத்ததாகவே உணர்கிறேன்...

அருமை...

said...

நல்ல கவரேஜ் டீச்சர் :)

அதுவும் அந்த பார்த்திபன்.... :)))

ராமகிருஷ்ணன் போட்டோ கமெண்ட் நல்ல டைமிங் சென்ஸ் :)

ஒரு புத்தக வெளியீட்டு விழாவையே பதிவர் சந்திப்பா மாற்றிய போண்டா,வடையைப் பார்த்து ஆச்சர்யம் தான் வருது :))))

அப்புறம் துபாய் வரும் போது கார்டு எடுத்துட்டு வாங்க :)

said...

{இளைச்சுப் போயிட்டீங்க போல( இது நான் அவரைக் கேட்டது!) மாற்றி யோசிக்க வேணாம்:-)}

அதானே ! பகீர்னு ஆகிப் போச்சு போங்க !!!

{நம்ம கொ.ப.செ, துளசிதளத்தைப் பாருங்கன்னு என் கார்டை எடுத்துக் கொடுத்தார். (அதெல்லாம் பக்காவா கார்ட் அடிச்சாச்சு!)}

இது எப்பலேர்ந்து???!!!!!!! சரி,சரி நடக்கட்டும் !

{சா. கந்தசாமி தலைமை உரை. (தலையைப் பார்த்து இவரை நான் ஜெ.கா.ன்னு ஒரு வினாடித் தப்பாப் புரிஞ்சுக்கிட்டேன். டாக்குட்டர் பார்த்திபன், இவர் அவர் இல்லை. தப்பாப் புரிஞ்சுக்கிட்டீங்கன்னு சொல்லி, அவர் பங்குக்கு இன்னொரு பெயரைத் தப்பாச் சொன்னார்.}

ஆக,எல்லோரும் சரியா,தப்பாப் புரிஞ்சுகிட்டிருக்கீங்க !! வெல்டன்!

{ஆக மொத்தத்துலே நல்லா கிறிஸ்ப்பாச் சுடச்சுட வடை அருமை.}

ஆகா ! வடை போச்சே!!!!!

(எல்லாம்,கொஞ்சம் வடிவேலு ஸ்டைல்ல!)

said...

வாங்க புதுகைத் தென்றல்.

இப்பதான் எஸ். கண்ணன் போட்டுருக்கும் ப்ரோக்ராம்ஸ் கைடு ( ஓசிதான்) கிடைச்சது.

அதெல்லாம் கூடியவரை விடறதில்லைன்னு இப்போதைய முடிவு.

பயங்கர பிஸி சீஸன்!!!!

said...

வாங்க லோகன்.

நானும் இப்படித்தான் உலகின் தென்கோடியில் இருந்தேன். இப்போ கொஞ்சநாள் சென்னை வாசம் என்பதால் ஏதோ கொஞ்சம் எல்லாம் லபித்துள்ளது. இன்னும் ரெண்டு மூணு மாசங்களில்.....பழையபடி....ஆகிரும்.

said...

வாங்க நான் ஆதவன்.

நூறு கார்டு போதும்தானே? :-))))))

said...

துளசியம்மா! நானும் வந்திருந்தேன். வந்ததிலேயே ‘பழம்’கிழம் நானாகத்தான் இருக்கும்!

உங்களைப்பார்க்கமுடியவில்லை.பதிவு பிரமாதம். தலைப்பில் (கள்) ஏன் பிராக்கெட்டில் வருகிறது? சாருவுக்கு இதெல்லாம் ரொம்பப்பிடிக்கும்!

said...

//ஆக மொத்தத்துலே நல்லா கிறிஸ்ப்பாச் சுடச்சுட வடை அருமை.////


வடை அருமை.
அவ்வப்போது நுகர்ந்த
தமிழ் வாடையும் அருமை.
ஒவ்வொருவர் பேச்சையும் கேட்டு மகிழ்ந்த
உங்கள் பொறுமையும் அருமை.

சுப்பு ரத்தினம்
http://vazhvuneri.blogspot.com

said...

வாங்க அறிவன்.

இப்போ உண்மையிலேயே இளைச்சுத்தான் போயிட்டேன் 20 கிராம். லிஃப்ட் ஒன்னரை மாசமா வேலை செய்யலை. யாரோட சதின்னு ஆராயணும்:-)

சென்னையில் கிடைக்கும் சுகங்களில் ஒன்னுதான் இந்த வடைகள்:-)

said...

வாங்க பாரதி மணி.

அடடா...நானும் உங்களை இப்படி 'மிஸ்' பண்ணிட்டேனே!

கோபாலுக்குப் பழம் பிடிக்கும்.

எனக்கு.....?

எல்லோருக்கும் விளம்பமுடியாதுன்னுதான் கள்ளுக்குப் பிராக்கெட் போட்டேன். அது சாருவுக்கு:-)

said...

வாங்க சுப்புரத்தினம்.

பொறுமையில் நான் பூமா தேவியாக்கும்:-))))))

said...

பதிவர்கள் எல்லாம் சேர்ந்து நடந்த மாநாடு போல இருக்கு. நீங்க இன்னோரு பதிவில வந்திருக்கீங்க.
தமிழ் எழுத்துலகம் பொன்னான காலத்தை நோக்கியே நகர்ந்துகொண்டிருக்கிறது என்பதற்கு இதை விட வேறு நல்ல சான்று இருக்க முடியுமோ.
பத்து நூல் வெளியிடறதுன்னா சும்மாவா!!
இங்க ஒரு பதிவுக்குப் பதில் சொல்லவே நேரம்,படிக்கறதில நேரம்னு போகிடறது:)
கடைசிவரை அந்தக் குரல்வளையை நீங்க அடையாளம் சொல்லவில்லையே:0)

said...

வாங்க வல்லி.

குரல்வளையை அடையாளம் காட்டலாமுன்னா....தொண்டைக்குள்ளேயே இருக்கேப்பா. வெளியில் வரச் சிக்கல்:-)))))

அவரே வந்து சொன்னால் உண்டு!

said...

ஆகா ஆகா

அருமையான நேரடி வர்ணனை

கொடுத்து வச்சவங்க - இது மாதிரி கிரிஸ்பா கொடுக்கறதுக்கு ஒரு கொ.ப.சே - ம்ம் - வாழ்க

said...

வண்ணத்துப் பூச்சி நின்றிருக்கக் கண்டேன். ரெண்டு தலை ஆட்டல். எனக்கொன்னு, கோபாலுக்கொன்னு!/////

ஆனா லேட்டா வந்ததால் வடை போச்சே...

said...

வாங்க சீனா.

எப்படி நம்ம ட்ரெய்னிங்? :-))))))

said...

வாங்க சூர்யா.

இதுக்குத்தான் அவையத்து முந்தி இருக்கணுமுன்னு அன்றே தாடிக்காரர் குறுமொழிஞ்சுருக்கார்.

போகட்டும். படத்துலே பார்த்துக்குங்க:-)

said...

இளைச்சுப் போயிட்டீங்க போல( இது நான் அவரைக் கேட்டது!) மாற்றி யோசிக்க வேணாம்:-)

மாத்தியே யோசிக்க விடமாட்டீங்களா? :-)

said...

வாங்க குமார்.

இப்ப ஒரு ஒன்னரை மாசமா மின்தூக்கி வேலை செய்யலை, நம்ம கட்டிடத்தில்.

10 கிராம் இளைச்சுட்டேன்!