Tuesday, December 22, 2009

நியூலுக்கில் நம்ம கோகி!

மக்கள்ஸ்,

புதியபார்வையில் நம்ம கோகியைப் பார்த்தீங்களா? செல்லம்போல இருக்கான்.

ஏதோ நீங்கெல்லாம் கொடுத்த & கொடுக்கப்போகும் ஆதரவை 'நம்பி' இப்படி ஒரு முடிவு எடுத்துட்டேன்.

அவர்கள் வெளியிட்ட ஆறு பக்கங்களையும் இங்கே ஸ்கேன் செஞ்சு போட்டுருக்கேன். க்ளிக்கினால் அநேகமாப் பெரிதாகத் தெரியலாம்.

அனைவரின் அன்புக்கு நன்றி.

துளசி(டீச்சர்)
பி.கு: வலையைக் கலையாகப் போட்டுட்டாங்க. அதனால் என்ன வலையும் ஒரு கலைதானே? இந்தக் 'கதை' யை சினிமாவாக எடுக்க நிறைய ஸ்கோப் இருக்காம். யார் யார் நடிக்க விரும்புறீங்க? என்னென்ன ரோல் உங்க சாய்ஸ்ன்னு ஒரு வரி எழுதுங்க. சீட்டுக்குலுக்கிப்போட்டு முடிவு செய்யலாம்:-)

67 comments:

said...

வாழ்த்து(க்)கள்! :)))

said...

ஜூப்பரு!!

விரைவில் வெற்றிப்படம் கொடுக்க இருக்கும் தமிழ்த்தாயின் தவப்புதல்வி அன்னை துளசி என்ற ரீச்சருக்கு வகுப்பறை சார்ப்பாக இந்த அலப்பறை, ச்சீ, இந்த போஸ்டர் மூலம் வாழ்த்துகள்!!

இவண்
க்ளாஸ்லீடர்

said...

டீச்சர் நான் தான் டைரக்டர்

said...

வாங்க அம்மா வாங்க..!

தங்களுடைய படைப்புத் திறன் பற்றி வீடறியும், ஊரறியும், நாடறியும்.. இப்போ உலகமறிஞ்சாச்சு.. இனி நாடு, நாடா ரசிகர் மன்றங்களை ஆரம்பிக்க வேண்டியதுதான்..!

இவண்..

தலைவர்
தமிழ்த் தாயின் தவப்புதல்வி அன்னை துளசியம்மாவின் அகில இந்திய ரசிகர் மன்றம்
துபாய் குறுக்கு சந்து
துபாய் பஸ்ஸ்டாண்ட்
துபாய்..!

said...

பஸ்-லேருந்து இறங்குனதும் 'ஏன் இந்த இருட்டுலே தனியா வந்து இங்க உட்கார்ந்திருக்கே'ன்னு இவரு திட்டறதும், ' நான் ரொம்ப போர் அடிச்சுச்சு'ன்னு சொல்லறதும் தினப்படி 'ரொமான்ஸ்', கதைய 'திரைக்கதையா' எழுதினா இப்படித்தான் மாத்தனும்... ஓ.கே தான?

said...

ஹை நம்ம கோகி:)! இருங்க படிச்சுட்டு வர்றேன்.

said...

சூப்பர்.

said...

வாங்க லக்ஷ்மி.

வாழ்த்து(க்)களுக்கு நன்றி.

தங்கக்கையால் போணி!!!!

said...

வாங்க க்ளாஸ் லீடர்.

ஆளையே காணொமென்னு சுப்பையா வாத்தியார் கேட்டுக்கிட்டு இருந்தார்.

கோகிக்குக் கோகின்னு பெயர் வந்த 'வரலாறு' புத்தகத்தில் இருக்கு:-)

said...

வாங்க நசரேயன்.

ஹாலிவுட் தரத்துக்கு எடுக்கணும். முதலில் பசங்க மொழி(களை) கற்றுக்கொள்ளவும்.

மியாவ்....லொள் லொள்

said...

வாங்க உண்மைத் தமிழன்.

தைரியமா விலாசம் சொல்லலாமா?

ஆனாலும் நீங்க ரொம்ப.............?

said...

வாங்க அரசூரான்.

திரைக்கதை டிஸ்கஷனுக்கு நீங்கதான் டீம் லீடர்:-)

said...

வாங்க ராமலக்ஷ்மி.

காத்திருக்கேன்.

said...

வாங்க சூரியா.

எல்லாம் 'அவன்' செயல்!

said...

சூப்பர் டீச்சர் :)
வாழ்த்துக்கள்.
கலைத்தளத்தில்? வலைத்தளத்தில்தானே?

தொகுப்பு எப்பொழுது வருகிறது டீச்சர்?
கண்காட்சியில் கிடைக்குமா?

said...

வாங்க ரிஷான்.

புத்தகத் திருவிழாவுக்கு வருகிறதாம்!

வலை பதிவது ஒரு கலையாக அவுங்களுக்கு இருக்கு:-))))

said...

ஹைய்யா... மீண்டும் கோகி, வாழ்த்துக்கள்!

said...

சூப்பர் டீச்சர் :)

உங்க ஸ்டைலயே வாழ்த்து சொல்லவேண்டியது தான் வாழ்த்து(க்)கள்! :)

said...

ஆரம்பத்துல சிரிச்சுகிட்டே தான் படிச்சேன். பேன் ஏன் ஓடலன்னு மேல பார்க்குறதும், சேலையை எடுத்துட்டு ஓடுறதும்னு சிரிப்பா இருந்தது. ச்சிண்டு காதல் வயப்பட்டது கூட நீங்க சொன்ன விதம் சிரிக்கதான் வைத்தது. க்ளைமாக்ஸ் வரும் வரை :(

இப்ப வர்ர தமிழ்சினிமா கதையில்லாம மொக்கையா வருது. இந்த மாதிரி வாழ்க்கையில நடக்குற சின்ன சின்ன விஷயங்களை கூர்ந்து கவனிச்சு தொகுத்தாலே நல்ல சினிமா கிடைச்சிரும் போல :)

said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் டீச்சர் ;))

said...

பாராட்டுக்கள் துளசி. ஆனாலும், கோபால் கத்தினார்னு சொல்றதெல்லாம் 3 மச். அவர் பாவம். இப்படியா துவக்கத்தில உண்மைக்கு புறம்பா எழுதறது.

கட்டுரை நல்லா எழுதி இருக்கீங்க. புதியபார்வை இணைய இதழா?

said...

எப்ப கொத்தனார் கிளாஸ் லீடரா ஆனார்? இது தனக்குத்தானே முறைல கொடுத்துகிட்ட பதவியா?

said...

soopero sooper! :)
goki is kalakkings! :)

said...

padathil goki lover-ai own pannum college payyan aa naan nadikkaren teacher :)

Anonymous said...

என்ன இருந்தாலும் ஜூனியர் மாதிரி வருமா :)

said...

அச்சில் வருவதற்கு முன்னயெ பத்திரிகை உலகத்தில் வெளிவந்துவிட்ட,சரித்திரம் படைத்த உங்கள் செல்லங்களுக்கு வாழ்த்துகள். சற்று முன்தான்
இணையம் கனெக்ஷன் கிடைத்தது. மொத்தம் எத்தனை திரைப்படங்கள் வரப் பொகின்றன என்றும் சொல்லி விடுங்க:)
ள்.:)
ஒரு சின்னப் பெண் வேடம் கிடைத்தால் போதும்.!!!! மிகவும் சந்தோஷம் துளசி.கோபலகிருஷ்ணனுக்கும்,சிண்டுவுக்கும் கப்புவுக்கும்
கதை உலகில் சரித்திரம் படைக்க சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.
அட்டைப் படத்தில் இருக்கும் பெண் யார்? பக்கத்துவீட்டுக் குழந்தையா.

said...

ஐய்யோ பாவம் சிண்ட்டு:(

said...

மனமார்ந்த வாழ்த்துகள் அம்மா.

சிண்ட்டு ரொம்ப ச்வீட் :)

said...

ஏற்கனவே மரத்தடியில் ரசிச்சு படிச்சாச்சு. இப்போ புத்தகமா வருதா. வாழ்த்துகள்.

said...

கோகியின் அண்ணன் ச்சிண்டுவின் கதை அருமை. ஸ்டைலா ஃபேனைப் பார்ப்பதும் அதை நீங்க ரசித்து எழுதியிருப்பதும். முடிவு ம்ம்.

கண்டிப்பாக புத்தகத்தை வாங்கி விடுவோம். தொடர்ந்து மற்ற படைப்புகளையும் புத்தக வடிவில் படிக்கக் காத்திருக்கிறோம்.

said...

போங்க டீச்சர்..படிச்சுட்டு ஒரே அழுகையா வருது...

ரசிக மன்றத்தில் மெம்பர்ஷிப் குடுத்தா போதும் எனக்கு.

said...

hearty hearty congrats and best wishes.

said...

சிண்டு கதையில கூடவா இப்படி செண்டிமெண்ட் டச்சு கடைசில?

கொஞ்சம் வருத்தமாத்தான் போச்சு போங்க...

said...

வாழ்த்து(க்)கள் டீச்சர்...

உள்ளேன் டீச்சர்...

said...

வாழ்த்துக்கள் துளசி..ஏற்கனவே படித்தது என்றாலும் இன்னோருமுறையும் படித்தேன். இன்னோரு முறையும் ரசித்தேன்..இன்னோருமுறையும் அழுதேன்..

said...

வாழ்த்து(க்)கள் டீச்சர்...

உள்ளேன் டீச்சர்...

said...

சாரி டீச்சர், எனக்கு இந்தப் படத்தில் நடிக்க ஸ்கேப் இல்லை. படத்தில் பூனையும், நாயும் தான் இருக்கு. குரங்கு இல்லை.
குரங்கு வச்சு படம் எடுத்தா சொல்லுங்க. அப்ப நான் நடிக்க வருகின்றேன். நல்ல பதிவு. வாழ்த்துக்கள் டீச்சர்.

said...

சிண்ட்டுவோட நிலையை நினைச்சுக் கண்ணீர் வருதே???? பாவம் என்ன ஆனானோ???? வலி இல்லாமத் தூங்கினானா?????

said...

சந்தியா பதிப்பகம் மூலம் உங்கள் புத்தகம் வெளிவருவதில் மிக்க மகிழ்ச்சி... உங்கள் ஆட்டத்தைத் தொடருங்கள் துளசி...

said...

வாங்க தமிழ் பிரியன்.

வருகைக்கு நன்றி. மீண்டும் வருக. மியாவ்........

said...

வாங்க நான் ஆதவன்.

வாழ்த்து(க்)களுக்கு நன்றி.

இவ்வளவு கூர்ந்து கவனிப்பதால் நீங்கள்தான் கண்ட்டின்யூடிக்கு இன்சார்ஜ்:-)

said...

வாங்க கோபி.

நன்றி. மீண்டும் மீண்டும் வரணும்.

said...

வாங்க பத்மா.

கட்டுரை நான் எழுதலை. புதியபார்வை மக்கள் எழுதி இருக்காங்க. இது மாதம் இருமுறை வரும் பத்திரிக்கை.

கோபாலின் எண்ணற்ற முகங்களில் ஒன்னே ஒன்னைத்தான் நீங்க பார்த்துருக்கீங்க.

அதிர்ஷ்டக்காரிப்பா நீங்க!!!!!

said...

பத்மா,

அச்சச்சோ........... பதிவு பக்கம் ஒரு மூணுவருசமாத் தலைவச்சுப் படுக்கலைன்னு தெரிஞ்சுபோச்சு.

கொத்ஸ், எங்கிருந்தாலும் மேடைக்கு உடனே வரவும்.

said...

வாங்க கே ஆர் எஸ்.

கோகிக்கு லவ்வர் இல்லையேப்பா. பேசாம பூனிக்கு அப்பா வேஷம் எடுத்துக்குங்களேன்:-)

said...

வாங்க சின்ன அம்மிணி.

ஜூனியரையும் 'பிடிச்சு' படத்தில் போட்டாச்சு:-)

said...

வாங்க வல்லி.

இது கட்டுரைக்கு புதியபார்வை கொடுத்த படம். ஒரிஜனலுக்கு அட்டைப்படம் ஒரிஜனலா வருது.

சின்னப்பொண்..........ம்ம்ம்ம்ம்ம்.ஓகே. ப்க்கத்து வீட்டு ஐலா வேஷம் உங்களுக்கு. ஆறுவயசாச்சே..பரவாயில்லையா?

இல்லை இன்னும் சின்னவளா இருக்கணுமுன்னா இந்தப் பக்கத்துவீட்டுலே ஒரு பாப்பா (8 மாசம்) இருக்கா. அந்த ரோல் உங்களுக்கு!

said...

வாங்க கவிநயா.

ச்வீட்டான பதிலுக்கு நன்றிப்பா.

said...

வாங்க ஐம்கூல்.

மரத்தடியில் வந்ததைவிட கூடுதலான விவரங்கள், அத்தியாயங்கள் எல்லாம் சேர்க்கப்பட்டுருக்கு. அன் எடிட்டட் வெர்ஷன்( எழுத்தாளர்ன்னா இப்படியெல்லாம் அடிச்சு விடணுமாம்)

said...

வாங்க ராமலக்ஷ்மி.

நீங்க, ரிஷான் ஆகமொத்தம் ரெண்டு புத்தகம் விற்பனை கேரண்டி. இன்னும் 997 பேர் எங்கேன்னு தேடலாமா? :-)))))

said...

வாங்க சிந்து.

ஆஹா....பெண்கள் அழறாங்கன்னா அது கட்டாயம் வெற்றிப்படம்தான்.

நீங்கதான் ச்சிண்ட்டு ரசிகர் மன்றத்தலைவி.

said...

வாங்க ப்ரியா.

வருகைக்கும் 'கருத்துக்கும்' நன்றி.

said...

வாங்க அறிவன்.

செண்டி இல்லைன்னா எப்படிப்பா?

என்ன செய்யறது? புனைவுன்னா 'லிவ்டு ஹேப்பிலி எவர் ஆஃப்டர்' னு முடிக்கலாம்!

said...

வாங்க சிங்,செயகுமார்.

ரெட்டிப்பு மகிழ்ச்சி!!!

நன்றி நன்றி.

said...

வாங்க கயலு.

புத்தகமா வந்ததும் அதைப் படிச்சு இன்னொரு முறையும் அழத்தான் வேண்டி இருக்கும்.

ப்ரூஃப் பார்த்த ஒவ்வொரு சமயமும் அழுகையை அடக்கமுடியாமப் போயிருச்சு. மனசைத் திடப்படுத்திக்கிட்டாலும், பின்னோக்கிப் பார்க்கும்போது மனசு கனத்துத்தான் போகுது.

said...

வாங்க பித்தனின் வாக்கு.

என்ன இப்படிச் சொல்லிட்டீங்க?

சிண்ட்டுவுக்கு ஒரு குரங்கு நண்பர் இருந்தார். அவரைப்பார்க்க எதிரில் இருக்கும் கூர்க்கா ரெஜிமெண்ட் ஆலமரத்துக்கு தினமும் போய் வருவான். குரங்கர் விழுதுகளில் ஊஞ்சலாடும்போது, அவரை எட்டிப்பிடிக்கணுமுன்னு ச்சிண்ட்டு தாவித்தாவிக் குதிப்பான்னு ஸ்க்ரிப்டில் சேர்த்துடலாம்.

நோ ஒர்ரீஸ். நீங்க கட்டாயம் இதுலே நடிக்கத்தான் போறீங்க!

said...

வாங்க கீதா.

முட்டாள்தனமா சொல்வார்பேச்சைக் கேட்டு முடிவு செய்ததை எண்ணி வருந்தாத நாளே இல்லை.

மோதியின் நினைவு வருகிறது.

said...

வாங்க கிருஷ்ண பிரபு.

சந்தியான்னதும் கூடுதல் மகிழ்ச்சிக்கு உள்காரணம் இருக்கா?

அதெல்லாம் நல்லாவே ஆடுவேன்,ஆமாம்:-))))

said...

எனக்கு எங்களோட "செல்லம்" ஞாபகம் வந்துவிட்டது.

செல்லத்தின் கதை இங்கே:-

http://simulationpadaippugal.blogspot.com/2006/08/blog-post.html

- சிமுலேஷன்

said...

வாங்க சிமுலேஷன்.

உங்க செல்லம் படிச்சுட்டேன் அங்கே வந்துபோனதுக்கு 'அடையாள மை' ஏற்கெனவே வச்சுருக்கேன்.

ஆனாலும் இன்னொருக்காப் படிச்சேந்தான். பூனைன்னதும்......

said...

கலக்கல், உங்க சொந்தங்களையெல்லாம் ஒண்ணாக் கூட்டிவந்திருக்கிங்க. கோகி பற்றி கட்டுரையில் வரவே இல்லையே. அடுத்தப் பகுதியில் தொடருமா ?

said...

வாங்க கோவியாரே.

இது புதுப் புத்தக முன்னோட்டம் மட்டுமே. புதியபார்வை மக்கள், அவர்களுக்குச் சுவாரசியமாகப்பட்ட சில்வற்றைக் கோடி காமிச்சு இருக்காங்க ஒரு 6 பக்கத்துக்கு.

said...

கோகியின் படம் வந்துருக்கு பாருங்க கோவியாரே.

said...

துளசி ரீச்சர்.. இப்ப நான் ஊருவிட்டு ஊரு வந்ததால் பாடங்கள் எல்லாம் ஒரே மூச்சு தம் கட்டி படிச்சுட்டேன்.. ஐ ஆம் வெறி வெறி ஹாப்பி ஃபார் யூ!!!

said...

வாங்க இலா.

'பசங்க'ன்னதும் எப்படி 'வெறி'வந்துருச்சு பாருங்க:-))))))

said...

உண்மைத்தமிழன் சொன்ன வார்த்தைகள் அத்தனையும் நிஜம். எதிலும் சிக்காமல் மற்றவர்களையும் சிக்க வைக்காமல் ஒரே நேர்கோடு போல் உள்ள எழுத்துலக பயணத்திற்கு என்னுடைய வாழ்த்துகள்.

ஓளி ஓவியர் (?)
ஜோ

said...

வாங்க ஜோதிஜி.

ஒளி ஓவியர்!!!!!

தங்கர் பச்சான் நம்ம வீட்டுக்கு வரமாட்டார் என்ற துணிவுதானே:-))))))))))