Saturday, August 18, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 10

நல்லவேளையா ராத்திரியிலேருந்து மழை . நல்லதாப்போச்சு, சிமெண்டுக்கு!
காலையிலே மொத வேலையா 'பாத்ரூம்' டிஸைனுங்களைப் பாத்தோம். வீட்டுலேதான் ' இன்·பர்மேஷன் புக், ப்ரோஷர்ஸ்' கொட்டிக் கிடக்கே! முடிவு செஞ்சது என்னன்னா, இப்போதைக்கு பேசாம இருந்துட்டு, ஃப்ரேம் வந்தபிறகு யோசிக்கலாம்னு.( சும்மா இருப்பதே சுகம்)
மத்தியானம் 'பனிமழை' பெய்ய ஆரம்பிச்சது. ராத்திரி தூங்கறப்பக் கூட ஓயாமல் பனி விழுந்துகிட்டு இருக்கு.

காலையிலே ஊர் முழுசும் 'வெள்ளைப் போர்வை' போத்திக்கிச்சு! வெளியே தலை காட்ட முடியாது. ஆனா பார்க்க ரொம்ப அழகாவும் இருந்ததை மறுக்க முடியாதுல்லே!இன்னைக்கு 'காங்க்ரீட்' தரையை ஒரு சின்ன மெஷின் வச்சு கீறுவாங்களாம். அப்போதான், அது உஷ்ணத்துலே விரியும்போது தரைபிளந்து, வெடிக்காம இருக்குமாம். ஒரு 'இஞ்ச்' ஆழம்தான் வெட்டுவாங்களாம். அடியிலே இருக்கற அழுத்தம் வெளியாகும்போது ஆபத்து வராதாம் இப்படி வெட்டுனா.
இவர்தான் இன்னைக்குப் போய்ப் பார்த்தார். அவுங்க வெட்டிட்டு போயிட்டாங்களாம். இனி வேலை புதன்கிழமைதானாம்.

'West lakes timber' கம்பெனியில் இருந்து மரச்சட்டங்களும், போஸ்ட்களும் வந்திறங்கிவிட்டன. சாயந்திரமாக, 'கிங்'கைப் பார்த்து, சமையலறை 'பெஞ்ச் டாப்' கலரை உறுதி செய்து விட்டு, $8000 அட்வான்ஸ் கொடுத்தோம்.

நல்ல வேளை, இதுவரை மழை பெருசா வரலே! வீடு 'வளர' ஆரம்பிச்சுடுச்சு! 'மாஸ்டர் பெட்ரூம்' லே இருந்து ஆரம்பிச்சிருக்காங்கன்னு இவர் சொன்னாரு. நான் அப்புறம் போனேன். அடுக்களையிலே பாதிவரையும், செகண்ட் பாத்ரூம் வரையும் ·ப்ரேம் வந்தாச்சு. இப்பத்தான் வீடு மாதிரி ஷேப் வருது! நல்லாத்தான் இருக்கு!எல்லா மரச்சட்டமும் அப்படியே ஆணி அடிச்சு ஜன்னலுக்கு இடம் விட்டு, ஃப்ரேம் ஃப்ரேமா வந்திருக்கு. கொஞ்சம் வேலை தெரிஞ்சவனா இருந்தா நாமே கட்டிரலாம்போல! 'லட்டு லட்டு' டா இருக்கு. அப்படியெ எடுத்து எடுத்து அடிக்கறாங்க. நம்பர் எல்லாம் போட்டு, வரிசையா அடுக்கி வந்திருக்கு. வீடு கட்டறது இவ்வளொ சுளுவா?.......... 'கிரேக்' நிறையக் கூலி கேட்டுட்டாரோன்னும் இருக்கு! இனிமே ஒண்ணும் செய்ய முடியாதில்லே! வெறும் மரச் சட்டமா வாங்கிதான் எல்லோரும் தருவாங்களாம். பில்டர்தான் அங்கங்கே தேவையான அளவு வெட்டிக்கணுமாம். இப்ப எல்லாமே அளவுப்படி இணைச்சு வந்தது லகுவா இருக்காம். நல்ல கம்பெனியில்தான் ஆர்டர் கொடுத்தீங்கன்னு எங்களுக்குப் பாராட்டுவேற வழங்குறார் கிரேக்! எல்லாம் கடவுள் விட்ட வழின்னு மனசைச் சமாதானப் படுத்திக்க வேண்டியதுதான்!நம்மூர்லே அந்தக் காலத்துலே சுத்தியலை வச்சுக்கிட்டு 'டொக் டொக்குன்னு ஆணி அடிக்கிறமாதிரி இல்லாம மின்சாரத்துலே இயங்கும் ட்ரில்போல ஒண்ணை வச்சுக்கிட்டு படபடன்னு ஆணியைத் தட்டிவிடறார்.ஆணி புடுங்கறதும் சுலபம். அதே ட்ரில், ரிவர்ஸ்லே வேலை செய்யுது.
ஒரு பில்டர், ஒரு உதவியாளர். அவ்ளொதான் மொத்த டீம்:-)இப்பத்தான் போய்ப் பாத்துட்டு வந்தேன். முழு வீட்டுக்கும் ·ப்ரேம் அடிச்சாச்சு! எல்லா ரூம்லேயும் உள்ளே போய் உலாத்திட்டு வந்தேன்! க்ரேக் சொன்னது ' வீடு பெருசா இருக்கு!' எனக்கு அப்படி ஒண்ணும் பெருசாத் தெரியலை. இப்ப நாம இருக்கற அளவுதான் இருக்கு! என்ன ஒரு 'வாக் இன் ரோப் & பாத்ரூம்' மாஸ்டர் பெட்ரூம்லே இருக்கு! மேல்கூரைக்குள்ள 'பீம்கள் அடுத்தவாரம்தான் போடறாங்களாம். கொஞ்சம் ·போட்டோக்கள் எடுத்தேன்!மறுநாள் நாங்க ரெண்டுபேரும் போய்ப் பார்த்தப்ப, 'கிரேக்' எல்லா மரச்சட்டங்களுக்கும், இன்னொரு தடிமனான சட்டத்தை வச்சுச் 'சப்போர்ட்' கொடுத்துட்டு, எல்லா அளவையும் சரிபார்த்துகிட்டு இருந்தார். அங்கங்கே தட்டிக் கொட்டி நேராக்கணுமாம்!நம்ம அடுக்களைக்கு ஆர்டர் செஞ்சிருந்த 'சிங்'கும், குழாயும் வந்துருச்சுன்னு 'ப்ளேஸ் மேக்கர்' கடையிலெருந்து ·போன் வந்துச்சு. போய்வாங்கிட்டு வந்ததும், நம்ம 'கிங்' வந்து எடுத்துகிட்டுப் போனார். வீடு முடியறதுக்குள்ளெ அடுக்களை ரெடி ஆகிடும்போல இருக்கு! அடுக்களையில் ரெட்டை சிங். வலதுபக்கம் சிங் அடியில் வேஸ்ட் மாஸ்டர் ஒண்ணு வைக்கணும். அதனாலே அந்தப் பக்கத்து சிங்லே தண்ணி வெளியே போகும் வழி விட்டம் கொஞ்சம் பெருசா இருக்கணும். சமையல், சாப்பாடு மீதி எல்லாம் அதுக்குள்ளே தள்ளிவிட்டால் அது கூழா அரைச்சு தண்ணீரோடு கலந்து கழிவு நீர் குழாயில் சேர்ந்துரும். நம்ம மிக்ஸி மாதிரி அரைச்சுரும். முருங்கைக்காய் தோல், வாழைப்பழத்தோல் எல்லாம் போட்டுறக்கூடாது. ப்ளேடுலே சிக்கிக்கும். எந்த மிஷின் ஆனாலுமே கொஞ்சம் கவனமா இருக்கணும். சிலசமயம் ஸ்பூன் உள்ளே விழுந்துருச்சுன்னா,அடிபட்டு மாட்டிக்கும்.


இன்னைக்கு வீட்டுக் கூரையோட மரச்சட்டம் அடிக்கறாங்க! இவரு போய்ப் பார்த்தார். அப்படியே 'தாற்காலிகமா பவர் சப்ளை' கேட்டிருந்தோம்ல. அதுக்கு ஒரு ஆளு வந்து தெருவுலே இருந்து 'பவர் போர்டு' வரை கனெக்ஷன் கொடுத்தாச்சு. நாளைக்கு வேறஆள் வந்து அந்த 'ஃப்யூஸ்' போடுவாராம்! இதுவரை நடந்துக்கிட்டு இருந்த வேலைக்கு நம்ம பக்கத்து வீட்டுலே இருந்து மின்சாரம் எடுத்துக்கிட்டு இருந்தோம். அந்த மாச மின்சாரக் கட்டணத்தை நாங்க அடைச்சுடறோமுன்னு சொல்லி, அப்படியே செஞ்சோம்.'சிங்'குலெ ஏதோ 'டென்ட்' இருக்குன்னு 'கிங்' ·போன் செஞ்சார். நாளைக்கு அதைத் திருப்பிக் கொடுத்துட்டு வேற வாங்கணும்! இங்கே கடையில் பிரச்சனைகள் செய்யமாட்டாங்க.


இன்னைக்கும் சரியான மழை! அதனாலே யாரும் வேலை செய்யலே! மரச்சட்டங்கள் மழையிலே நனைஞ்சா ஊறிக்கிட்டு பொதபொதன்னு ஆயிருமோன்னு இன்னொரு கவலை. எல்லாமே ட்ரீட்டட் மரம். நனைஞ்சாலும் ஒண்ணுமே ஆகாதுன்னு இவர் சொல்லிக்கிட்டு இருந்தார்.

நிறைய (அஞ்சாறு) நாளா இந்தப் பக்கம் வரலை? இல்லையே, சனிக்கிழமை அந்த அவசரத்துலேயும் காலையிலெ கோயிலுக்குப் போறதுக்கு முன்னே வந்து பாத்தமே............. இப்பத்தான் ஞாபகம் வருது!
ராத்திரி இருட்டுனபிறகு போனோம். வீட்டுக்கு முன்னாலே ரெண்டு பக்கமும் தெருவிளக்கு இருக்கு. அதனாலெ எல்லாம் 'பளிச்'ன்னு தெரியுது! மேல் கூரைக்கான ஃப்ரேம் கிட்டத்தட்ட போட்டாச்சு. நாளைக்கு வந்து மீதியை முடிச்சுடுவாங்களாம்! ரூஃப் போடறவங்க, கலர் ஸ்டீல் ஓடுகளைக் கொண்டுவந்து போட்டுவச்சிட்டு போய் இருக்காங்க! மரச்சட்டங்கள் கூட்டமாக் காடுபோல நிக்குது. ஒரு வீட்டுக்கு இவ்வளொ மரமா? காடுகள் அழிஞ்சுக்கிட்டு வர்ற காரணம் இதானா?

தொடரும்...................

12 comments:

said...

அப்பாடியோவ் உங்க பதிவுக்குப் பின்னூட்டம் போட முடியுது டீச்சர். :)

நீங்க எழுதுனப் படிக்கும் போது எனக்கு அப்படியே அப்பார்மெண்ட் எழும்புனது நெனைவுக்கு வருது. அப்பப்பா...அது ஒரு சுகம். இல்லையா டீச்சர்?

said...

//இது மரவீடா இல்லையான்னு தெரியலை. செங்கல் சிமெண்டு எல்லாமே வருது அப்புறம்.//

மரவீடானு கேட்டப்போ தெரியலைனு சொல்லிட்டு இப்போ மரத்தில கட்டுறிங்க, என்ன பொருளில் கட்டுவாங்கனு தெரிஞ்சிக்காமலே கட்ட சொல்லிடிங்களா?

குளிர் பிரதேசம்ல எல்லாம் மரத்தால் தான் கட்டுவாங்கனு தெரியும் , ஆனலும் நீங்க அஸ்திவாரம் பத்திலாம் பேசியதால் சந்தேகம் ஆகிபோச்சு!

மரம் என்பதால் தான் அஸ்திவாரம் இல்லாமலே தளம் மட்டும் போட்டு கட்டுராங்க!

said...

வாங்க ராகவன்.

நம்ம கண்ணுமுன்னாலே வளர்ந்துவரும் வீடு பார்க்க சுகம்தான். அதுக்கு ஓடுன
ஓட்டம் பின்னாளில் நினைச்சுப் பார்த்து ரசிக்க வேண்டியதில் ஒண்ணு.

said...

வாங்க வவ்வால்.

இங்கே நம்ம பக்கம் மரவீடுன்னா.....முழுக்க முழுக்க மரம் எக்ஸ்டீரியர் உள்பட.
நம்ம வீட்டுக்கு மரம் சாண்ட்விச் போலத்தான் வருது. மூணு வருசத்துக்கு முன்னாலே
இது இங்கே லேட்டஸ்ட் டெக்னாலஜி & டிசைன். முழுக்க முழுக்க பாலிஸ்டைரீன் ப்ரிக்
வச்சும் கட்டுறது அப்ப வந்துக்கிட்டு இருந்துச்சு. கொஞ்சம் செலவு கம்மி. ஆனா நமக்கு
பயம்(-:

நம்ம ப்ளான்லேயே எங்கெங்கே என்னென்னன்னு விலாவரியா இருக்கு. அதை வச்சுத்தான்
கவுன்ஸில் அனுமதி கொடுத்து, அதை அப்படியே ஃபாலோ பண்ணறோமான்னும் கவனிக்குது.

said...

இந்த சிங்க் டிச்போசர் ஒரே தொல்லை.. அப்பப்ப புளியங்கொட்டை மாட்டிக்கும். சின்ன சின்ன சுபூன் மட்டிக்கும்..அதை எடுக்க போதும் போதும்ன்னு அயிடும்..அப்பார்ட்மெண்ட் இருக்கும்போது அவர்களை கூப்பிட்டு செய்தோம் அவர்கள் ஒரு டூள் ஒன்னை கொடுத்து நீனே செய்துக்கொள்.. என்னை அடிக்கடி கூப்பிடாதே அப்படின்னுட்டான்.

இங்கும் மரவீடுதான் வெளிப்புரம் அட்டைக்குமேல் சிமென்ட் பூசிவிடுவார்கள்.

said...

நல்ல கம்பெனியில்தான் ஆர்டர் கொடுத்தீங்கன்ன
சரியான லின்க்காகத்தான் இருக்கு.இது கட்டுமானப்பாஷை.

said...

வாங்க அரவிந்தன்.

பெரிய துளைகள் இருக்கும் ஸிங் ஸ்ட்ரெயினர் கிடைக்குது. அதை வாங்கிப் போட்டுருங்க.
தண்ணி தேங்காமப் போகும் அதே சமயம், தப்பித்தவறி விழுந்தாலும் ஸ்பூன், முருங்கக்காத்
தோல் எல்லாம் மேலேயே நின்னுரும்.

said...

வாங்க குமார்.

கட்டுமானத்துறை பாஷை:-)))))

said...

ம்....மரவீடு பாக்க அழகாத்தான் இருக்கு சட்ட்மெல்லாம் அடிச்சு..
ம்..அப்பறம்...

said...

உள்ளேன் டீச்சர். படிக்கும் போது ப்ளஸ் படங்களைப் பார்க்கும் போது வீடு கண்ணு முன்னாடி ரெடியாகுற மாதிரி இருக்கு. :)

said...

வாங்க முத்துலெட்சுமி..

//ம்..அப்பறம்...//

அந்தக் காக்கா வந்து 'வடை' போயிருச்சேன்னு அழுதுச்சாம்:-)))))

said...

வாங்க கொத்ஸ்.

முந்தி எழுதிவச்சதை இப்பப் படிக்கும்போது எனக்கும் அப்படித்தான் இருக்கு. இவ்வளவா
ஓடியிருக்கோமுன்னு.......... வியப்புதான்:-)