Monday, August 27, 2007

இனிமே சமைக்க மாட்டேன்:-)

தினமும் அஞ்சு காய்கறிகள் சாப்புடணுமுன்னு டாக்டர் சொல்லி இருக்காறாம்.இப்படிச் செஞ்சுவைக்கத் தெரிஞ்சா இனி சமையலே இல்லைன்னு சொல்லிருவேன்.


மகள் அனுப்பித் தந்த படங்களில் சில உங்களுக்கு.

ச்சைனீஸ் கேபேஜ் ஏஞ்சல் மீன்கள், கத்தரிக்காப் பெங்குவின்கள்,அழுதுக்கிட்டு இருக்கும் ஆரஞ்சுன்னு கலக்கலா இருக்கு ஒவ்வொண்ணும்!!!!42 comments:

said...

டீச்சர்,
இதை முன்னமே யாரோ போட்டுட்டாங்க. அதனால என்ன?

இதையெல்லாம் சாப்பிட்டா அழகா சாப்பிட்டேன்னு சொல்லிக்கலாமா!!

said...

வாங்க கொத்ஸ்.

அட! முன்னமே போட்டுட்டாங்களா?

அப்ப இதை டிஸ்ப்ளேயில் இருந்து எடுத்துச் சமைச்சுறவா? (-:

said...

இதைப் போடக்காரணம் காய்கறிலாம் அசைவம்னு சொல்ல வராப்போல இருக்கே.

அஞ்சு காய்கறி சாப்பிடனும்னா எப்படி , 3 கத்திரிக்கா , 2 வெங்காயம் சமையலில் சேர்த்துகணுமா?

said...

இங்கும் தொலைக்காட்சியில் 5 மரக்கறி விளம்பரம்தான்.
சாப்பாட்டுக்கிடையில் நொறுக்குத் தீனியும் வேண்டாமாம்

said...

காய்கறியெல்லாம் என்ன அழகு. என்ன அழகு. இதப் பாத்தா காய்கறியச் சமைக்கவே தோண மாட்டேன்குதே. பேசாம மீனு கோழின்னு திங்க வேண்டியதுதான்.

said...

//இனிமே சமைக்க மாட்டேன்..//

உங்க வூட்டுக்காரர், "அப்பாடா"ன்னு சொல்றது காதுல எக்கோ ஆகுது :)

Anonymous said...

ஹையா, இனி சமைக்கவே வேணாம். ஆனா நாக்கு ருசியா இல்ல கேக்கும்

said...

வாங்க வவ்வால்.

நானே தக்காளி, வெங்காயம், பச்சமிளகாய் எல்லாம் ஒவ்வொரு காய்ன்னு அஞ்சுக் கணக்கு
காமிச்சுக்கிட்டு இருக்கேன். இப்ப உங்க உத்தியின் படி வேற கணக்கு காமிச்சுறட்டா? :-))))

said...

வாங்க யோகன்.

அஞ்சு மரக்கறி............. திரும்பத்திரும்ப கேரட், காலி ஃப்ளவர், முட்டைக் *சுன்னு போரடிச்சுப்போய்
கிடக்குப்பா(-:

said...

வாங்க ராகவன்.

//பேசாம மீனு கோழின்னு திங்க வேண்டியதுதான். //

இது.................:-))))))

said...

வாங்க சர்வேசன்.

//உங்க வூட்டுக்காரர், "அப்பாடா"ன்னு சொல்றது காதுல எக்கோ ஆகுது :) //

ச்சும்மா இருக்க மாட்டீங்களா? மனுஷன் 33 வருசமா வாய்செத்துக் கிடக்குறது
உங்களுக்குக் கேலியாப் போச்சு:-))))))

இனி நல்லது கிடைச்சாலும் நாக்குக்கு ருசிக்காது. நம்ம ட்ரெயினிங் அப்படி:-)

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

சமைக்க வேணாங்கறதை விட என்ன சமைக்கலாங்கறதுதான் பெரிய் தலையிடி (-:

said...

சே இம்புட்டுட்தானா. நான் சமையல் dept கை மாறிடுச்சுன்னு நினைச்சேன்

said...

ஒருத்தர்: எனக்கு சில உயிரினங்கள்னா ரொம்ப புடிக்கும். அதனாலே அசைவம் சாப்பிடமாட்டேன்!

இன்னொருத்தர்: எனக்கும் சில உயிரினங்கள் பிடிக்கும். அதனாலேதான் நான் அசைவம்!!

கொன்னா பாவம் திண்ணா போச்சுன்னு சொல்வாங்க. இது காய்கறிங்களுக்கும் பொருந்துமே.

said...

காய்கறியெல்லாம் என்ன அழகு. என்ன அழகு. இதப் பாத்தா காய்கறியச் சமைக்கவே தோண மாட்டேன்குதே. பேசாம மீனு கோழின்னு திங்க வேண்டியதுதான்///
ரிப்பீட்!

said...

காலி ப்ளவர் ஆடு அருமை, அடிச்சுப் போட்டால் மட்டன் குருமா, நானும் சாப்பிடுவேன் இதை !

:)

said...

ரொம்ப நன்றி உங்க கருணைக்கு ( இனிமே சமைக்க மாட்டேன்)

//தினமும் 'அஞ்சு'

காய்கறிகள் சாப்புடணுமுன்னு டாக்டர் சொல்லி இருக்காறாம்.//

ஆமா தேவைதான். அஞ்சு ரொம்ப குண்டாயிட்டாங்க. தினமும் காய்கறி சாப்டாத் தான் உடம்பை குறைக்க முடியும்.

(ஆமா நீங்க 'அஞ்சு'ங்கற சினிமா/டிவி நடிகையைத்தானே சொன்னீங்க)

:-))))))))))))))

said...

என்னங்க இளா,

நானும் 'அந்த நாளும் வந்திடாதோ...'ன்னு இருக்கேன்.

said...

வாங்க தஞ்சாவூரான்.

வேற யாராவது கொன்னா வர்ற பாவம், நாம தின்னா போயிருமா?
இல்லே நாமே கொன்னும், தின்னும் முடிக்கணுமா?

said...

வாங்க டெல்ஃபீன்.

'நான்வெஜ்'க்கும் காய்கள் சேர்க்கணும் இல்லையா? யூ நோ வாட் ஐ 'மீன்':-)

said...

வாங்க ஜிகே.
நீங்க வந்தவுடன் நடக்கப்போகும் வலை மாநாட்டுக்கு , காலிப்பூ மட்டன் பிரியாணி
போட்டுறலாம்:-)

said...

வாங்க விஜயன்.

நலமா? முதல்முறையா வந்துருக்கீங்க போல!
ஜிகே சொன்ன பிரியாணியோடு வரவேற்கிறோம்:-))

பாவங்க அந்த 'அஞ்சு'. இத்தனைக்கும் ச்சின்ன வயசுதான். எதோ ஹார்மோன்
பிரச்சனை போல(-:

ஊதுன உடம்பை இளைக்க வைக்கறது மகா கஷ்டம். மன அழுத்தம் வேற
வந்துரும். பாவம்.

Anonymous said...

//இனிமே சமைக்க மாட்டேன்:-) //

ஆகா கேட்கவே நல்லா இருக்கே, என்னால தான் சொல்ல முடியல....! :)

said...

நான் கூட யாரோ தப்பிச்சுட்டாங்க அப்படினு நினைச்சேன்.

ச்சே... இவ்வளவுதானா?...

said...

தலைப்பைப் பார்த்துட்டு ஒரே ஓட்டமா ஓடி வந்தேன். ஆஹா நாமும் தப்பிக்கலாமேன்னு !!!

ஹ்ம்ம்... ஆனாலும் படங்கள் அருமையோ, அருமை. அந்த "ஸீ - சா" ஆடும் வாண்டுகள் பிரமாதம். அது காளான் தானே துளசி?

said...

நானும் சமைக்க மாட்டேன்... பெரியவங்க சொல்றத நான் தட்ட மாட்டேன்..:-))

said...

இது சிஜியிடமிருந்து தனிமடலில் வந்த பின்னூட்டம்

//இனி சமைக்கமாட்டேன்//

ஆஹா! கோபால்சார் உங்களைப்போல் கொடுத்துவச்சவர்
உலகத்தில் யாருமில்லேஇப்படி பின்னூட்டம் போட்டு எவ்வளவு அழுத்தினாலும் ஏற்க மறுக்குது

said...

வாங்க வள்ளி.

நல்லா இருக்கீங்களா? முதல்முறையா வீட்டுப்பக்கம் வந்துருக்கீங்க.
சந்தோஷம்.

ஏங்க உங்களாலே சொல்ல முடியலை?

என்னப்போல சொல்லுங்களேன், 'இனிமே சமைக்க மாட்டேன் அடுத்த
சாப்பாட்டு வேளை வரை


:-))))

said...

jk வாங்க.

அந்த 'யாரோ' தப்பிக்கவே முடியாதுங்க. ரொம்பப் பா(வி)வங்க:-)

said...

நாங்கூட..சாப்பிட மாட்டேன்னு சொல்லலீயே அப்படின்னு சொல்லலாமின்னு வந்தேன்..
பாத்தா வேற மேட்டரு...நல்ல..இருக்கு..

said...

வாங்க அருணா.

இப்படி ஓடோடி வந்த உங்களை ஏமாற்றிவிட்டேனா? :-))))

அது காளானே தாங்க. அதுங்க விளையாடும் ஸீ-சா போர்டு 'ருபார்ப்' தண்டு.

said...

மங்கை,

இதுதான் நல்ல பெண்ணுக்கு அடையாளம்.
பெரியவங்க சொன்னா பெருமாளே சொன்ன மாதிரி.:-))))

நாளை முதல் சமைக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்
இன்னிக்குப் பசி எடுக்குது, சமைச்சு வையுடீ கொஞ்சம்:-)

said...

வாங்க சிஜி.

இப்படி அநியாயத்துக்கு நீங்க எல்லாரும் கோபாலுக்கே சப்போர்ட் செய்யறது,
நம்ம ப்ளொக்கர் பகவானுக்கே பொறுக்கலை பாருங்க :-))))

said...

Ithennadaa thalaippunu Odi vanthaal iththanai azhakaap padam pottu irukku.
eppadippaa samaikkiRathu. kaaykaRikke valikkume.
naaLai mudhal samaikka maatten sathiyamadi thangam...
innikku raaththirikku pasikkume enna seyyarathu::))))))

said...

அழகான காய்கறிகளை பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல. இப்போதெல்லாம் சென்னை திருமணங்களில் காய்கறி காட்சி ஒரு கட்டாயம். நம் ஆட்களும் அழகழகாக செய்றாங்க.

காட்சிதரும் அழகிற்கே காய்கறிகளை சமைக்காதபோது உயிருள்ளவற்றை சமைக்க தோன்றுமா ?

நான் கோபால்சாரை சப்போர்ட் செய்யப் போவதில்லை; நீங்களே எத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் :-)

said...

ஏனுங்க! எல்லோருமே இயல்பா அவங்க அவங்க வேலைய கவனிக்கும் போது இந்த ஆரஞ்சு குட்டிகளும்,பெருசும் ஏன் இந்தக் கத்து ஊரக்கூட்டிர மாதிரி.அதுல வேற அத்தன பல்லையும் நற நறத்துகிட்டு...

said...

நீங்க சமைக்கலைன்னாலும் உங்க காய்கறியெல்லாம்(இடுகை) சூடா(ன இடுகையில்)இருக்கு. எப்படி (-/பெயரிலி மாதிரி எழுதுறேனா)?

said...

வாங்க வல்லி.

நான் எப்படா ஒரு சாக்கு கிடைக்கும், சமையலில் இருந்து
தப்பிக்கலாமுன்னு இருக்கேன். வரவர 'காம்ச்சோர்' ஆகிட்டேன்:-)))

இந்தியாவில் இருந்தால் கொஞ்சம் தப்பிச்சுறலாம். சமையலுக்கு ஒரு உதவியாளர்
கிடைப்பாங்க.
இங்கே வெள்ளைக்கார மேடத்துக்கு, பொரிச்ச கூட்டு, சாம்பார் எல்லாம்
எப்ப சொல்லித்தந்து, அவுங்க சமைச்சு நான் சாப்புடறது? (-:

ஆனாலும், நமக்கு நாக்கு நீளம்.இல்லே? :-))))

said...

வாங்க மணியன்.

கல்யாணத்தில் காய்கறி கண்காட்சியா?
அருமையா இருக்குமே!!!!

//நான் கோபால்சாரை சப்போர்ட் செய்யப் போவதில்லை...//

நன்றி, நீங்களாவது இப்படி சொன்னதுக்கு:-)

said...

வாங்க நட்டு.

//இந்த ஆரஞ்சு குட்டிகளும்,பெருசும் ஏன்
இந்தக் கத்து ஊரக்கூட்டிர மாதிரி.அதுல
வேற அத்தன பல்லையும் நற நறத்துகிட்டு... //


இது வலைப்பதிவர் மாநாடு நடத்திக்கிட்டு இருக்கோ?

இல்லே பதிவு சரியில்லைன்னதும் ஊரைக்கூட்டி ஞாயம் கேட்டு அழுவுதோ?

முதல்தடவையா வந்துருக்கீங்க போல?

நலமா?

said...

வாங்க உமையணன்.

//உங்க காய்கறியெல்லாம்(இடுகை) சூடா(ன இடுகையில்)இருக்கு.

அதாங்க நான் சமைக்கமாட்டேன்னு இங்கே கத்திக்கிட்டு இருக்கேன், அங்கே யாரோ
சூடா அடுப்பைப் பத்த வச்சுட்டாங்க? :-)))


//எப்படி (-/பெயரிலி மாதிரி எழுதுறேனா)?//

நடை வரலைன்னுட்டு இப்படிச் சொன்னா எப்படிங்க?

வலை உலகில் அவர் இவரோ இவர் அவரோன்னு எப்பவும்
ஒரு ஆராய்ச்சி நடந்துக்கிட்டு இருக்கு. இதுலே நீங்க வேற
பெயரிலி மாதிரி ன்னு ..............


அப்புறம் மாலன் மாதிரி ன்னு யாராவது வருவாங்க.
என்னாத்துக்கு? நாம நாமாய் நம் 'நடை'யோடு இருந்துடலாம்.
அது உத்தமம்:-)))

said...

வாங்க TBCD.

மேட்டரு நல்லா இருந்தாச் சரி. இல்லீங்களா? :-)