Tuesday, August 28, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 14

இன்னைக்கு 'மார்னிங் கோர்ட்'க்கு ஃப்ரேம் வருதுன்னு சொல்லியிருந்தாங்க. பொல்லா......த மார்னிங் கோர்ட்! கூரையின் சரிவில் வானம் பார்க்க ஒரு ஜன்னல் மாதிரி கண்ணாடி பதிக்கிறாங்க. ஸ்லைடிங் கதவு திறந்து, இந்தக் கண்ணாடிக்குக் கீழே இருக்கும் இடத்தில் காலையில் உக்கார்ந்து காஃபி குடிக்கலாமாம். கூரைக்குள் வரும் அவுட்டோர் ஏரியா. மத்தியானம் 12.15க்குக் கிளம்பி நடந்தே போனேன். நல்ல வெய்யிலு இருக்குதே, ஒரு எக்ஸர்ஸைஸ் ஆச்சுன்னு! சரியா 30 நிமிசம் எடுக்குது.


அங்கெ போனா ஒரு 'ஈ, காக்கா' இல்லே. அந்த ஃப்ரேம் வர்ற இடத்தை அண்ணாந்து பாத்தா, நட்ட நடுப் பகலிலெ நீலவானத்துலே நிலா தெரியுது! 'நிலாக் காய்கிறது'ன்னு பாட்டைப் பாடிக்கிட்டு கொஞ்சநேரம் நம்ம 'அரண்மனை'யைச் சுத்துப் பாத்துக்கிட்டு இருந்தேன்.அப்புறம் வெயிலு எங்கெங்கே வருதுன்னும் பாத்தேன். மாஸ்டர் பெட்ரூம், டைனிங், சாமி அறை இங்கெதான் கொஞ்சம் வெயிலு இருக்கு! அப்புறம், அங்கெ போட்டுவச்சிருக்கற கட்டைங்க மேல உக்காந்து, ரெண்டு 'ஸ்லோகம்' சொல்லிட்டுக் கிளம்பி வந்துட்டேன்.
நம்ம 'லைப்ரரி'யிலே என்னோட வேலை செய்யற எலிநோரும், அவுங்க வீட்டுக்காரர் ஜானும் இன்னைக்குக் காலையிலே ஒம்பதேமுக்காலுக்கு இங்கேவந்து என்னக் கூட்டிக்கிட்டு போனாங்க. எங்கே? இதென்ன கேள்வி? புது வீட்டைப் பாக்கத்தான்! ரொம்பநாளாக் கேட்டுக்கிட்டே இருந்தாங்க. அதான் இன்னிக்குன்னு ஒரு முன்னேற்பாடு.
அப்ப 'ப்ளம்பிங் வொர்ல்ட்' ஆளு வந்து 'இன்ஃபினிடி கேஸ் ஹாட் வாட்டர் ஹீட்டர்' போடறதுக்கு அடுக்களையிலே 'பான்ட்ரி' வர்ற இடத்துலே, ப்ளைபோர்டுலே ஒரு செவ்வகமா வெட்டி, அதுக்கு வெளிப்பக்கம் அந்த 'பாக்ஸ்' வச்சிகிட்டு இருந்தாரு. அப்புறம் ஒரு பெரிய மஞ்சள் கலர் பைப் ஹோஸ் இழுத்துக்கிட்டு வந்தாரு.


அதுக்குள்ளெ நான் நம்ம 'அரண்மனை'யைச் சுத்திக் காமிச்சிட்டு, லைப்ரரிக்கு நேரமாயிடுச்சுன்னு வந்துட்டோம். இதுக்கே 10 நிமிசம் லேட்டாயிடுச்சு லைப்ரரி திறக்க. சரி.......... ஃபீல்ட் ட்ரிப்னு நினைச்சுக்க வேண்டியதுதான்!
நானு மூணு ·போட்டோவும் எடுத்துகிட்டேன். எலிநோருக்கும் ஜானுக்கும் வீடு ரொம்பப் பிடிச்சுப் போச்சாம். வாசல்லே இருக்கற 'ஹாலி ட்ரீ' நல்லா இருக்கு. அது, புதுசா வச்சா, வளர ரொம்ப நாளாகும். இது நல்ல பெரிய மரம். பழம் வந்தவுடன் பறவைகள் கூட்டமா வரும். அப்படியே விட்டிரு'ன்னு சொன்னாங்க! நம்ம 'ஜாப்பனீஸ் அம்பர்லா' மரத்தையும் வெகுவாப் புகழ்ந்தாங்க! எனக்கும் சந்தோஷமா இருந்துச்சு!
இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாலேதான் கோபால் ச்சீனாலே இருந்து கூப்பிட்டாரு. அந்த ஃப்ரேம் இன்னைக்கு வரலையாம். நாளைக்குத்தான் வருதாம். பில்டருகிட்டே கேட்டப்ப சொன்னாராம். நானும் 'கேஸ்' போடற விஷயத்தைச் சொன்னேன். விஞ்ஞானம் முன்னேறுனதுலே எவ்வளவு நன்மை பாருங்க! எந்த ஊர்லே இருந்தாலும், உள்ளூர்லே இருக்கற மாதிரியே எல்லாரையும் தொடர்புகொண்டு பேச முடியுது! கைத்தொலைபேசி இருக்கறது ரொம்ப நல்லதாப் போச்சு! நாளைக்குப் போய் பார்க்கறேன்! என்ன ஆவுதுன்னு?


இன்னைக்கு மத்தியானம் 2 மணிக்குத்தான் போக முடிஞ்சது. 'க்ரேக்' தனக்கு உதவியா ஒரு பையனை ஏற்பாடு செஞ்சுருக்கார். பேர் க்ளிண்டன். Bill பில் இல்லே! சாதா:-) ரெண்டுபெரும் வேலை செஞ்சுகிட்டு இருந்தாங்க. ஃப்ரேம் வந்து இறங்கியிருக்கு! பாத்தா பெரூசா இருக்கு! ஒண்ணரை மீட்டர் நீளம் இருக்கும்போல!நாளைக்கு அதை மேலே ஏத்துவாராம்! முன்னாலே வர்ற தூணுக்கு 'பில்லர்' ஆள் வந்துட்டுப் போனாராம். நாளைக்கு 'கராஜ்' முன்னாலே வர்ற வளைவுக்கு அளவெடுக்க ஒரு ஆளு 9 மணிக்கு வர்றாராம்!அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்! பாத்ரூமில் 'கேஸ்'சுடு தண்ணிக்கு வர 'கண்ட்ரோல் பேட்' 'கேவிடி டோர்' வரும் இடத்துலே வச்சிட்டாங்க. அதை இடம் மாத்தணுமாம். ஸ்பா பக்கம் வர்ற சுவத்துக்கு மாத்தணும்.
மெயின் லவுஞ்சிலே வரப்போற 'ஷோ கேஸ்' பத்தி முடிவு செஞ்சுடணுமாம். 'வாக் இன் ரோப்'க்கு எப்படி செட்டிங், எந்த மாதிரி 'ஷெல்ஃப்' ன்னும் முடிவு செய்யணுமுன்னு க்ரேக் சொன்னாரு. நான் அப்படியே 'லினன் கப்போர்டுக்கு கதவு எப்படி, ஷெல்ப் எங்கே இருந்து தொடங்கும்னு சொன்னேன். சரின்னுட்டு பெரிய வீடு பெரிய வீடுன்னு சொல்லிக்கிட்டு இருந்தாரு! அப்புறம், முன்னாலே பில்லர் மேலேபோய் முடியுற இடத்துலே, ஃபேஷியா சரியா உக்காராம இருந்ததை சரி பண்ணியாச்சுன்னு காமிச்சார். டிம்பர் சப்ளை செஞ்சவுங்க நீளம் கூடுதலா செஞ்சுட்டாங்கன்னும், அதைக் கொஞ்சம் நடுவுலே வெட்டி எடுத்துட்டு இணைச்சேன்னும் சொன்னாரு. இப்ப நல்ல உயரமா இருக்கு முன்வாசல்!நேத்து ராத்திரி, 'லக்ஸ்' ( செண்ட்ரல் வேக்குவம்)ஆளு பேசுனாரு. நாளைக்கு காலேல 10 மணிக்கு நான் 'சைட்'க்குப் போகணும். 'வேக்பேன்' வைக்கற இடத்தை முடிவு செய்யணும்! எங்கெங்கே இன்லெட், அதுக்கு வரும் பைப் எப்படி இணைக்கணுமுன்னு பார்க்கணுமாம்.


திட்டப்படி போய்ச் சேர்ந்தேன். எங்கெங்கே போர்டு வைக்கறாங்க,ஹோஸ் நீளம் எல்லா இடத்துக்கும் எட்டுமான்னு பார்த்து, இடங்களையெல்லாம் குறிச்சுத் தந்தாச்சு! 'வேக் பான்' அடுக்களையிலே சிங்க் வருதுல்லே, அதுக்கு இடது பக்கம் இருக்கற ட்ராயருக்குக் கீழே வைக்கலாம்னு முடிவாச்சு!
அந்த ஆளு, க்ராம்( கிலோ இல்லைங்க) வேலையை ஆரம்பிச்சுட்டாரு. க்ராம்கூட வந்த டோனி எல்லா ஜிப் வேலையும் முடிச்ச பிறகு யூனிட்டை கனெக்ட் செய்வோம்ன்னு சொன்னாரு. கார்பெட்/ வைனல்/வெறும்தரை, சோஃபா மூலை இண்டு இடுக்கு இப்படி ரெண்டு விதமான ப்ரஷ் நமக்குக் கிடைக்குது. இது இல்லாம கர்ட்டன், அப்ஹோல்ஸ்ட்ரின்னு சுத்தம் செய்யும் 'அப் க்ரேட்' ப்ரஷ் விக்கறதுலேயே கவனமா இருக்காங்க! நானும் எல்லாம் முடிச்ச பிறகு, இந்த ரெண்டு ப்ரஷ்-ம் உபயோகிச்சுப் பாத்துட்டு சொல்றேன்னு சொன்னேன்!
கராஜ்லே ஒரு மூலையில் 60 செ.மீ x 60 செ.மீன்னு ஒரு ச்சின்ன கப்போர்டுக்கான இடம்தான் வாக்குவம் க்ளீனர் யூனிட் வைக்கறதுக்கு. அதுக்கு வந்து சேரும்படியான பைப் லைன் போட்டாங்க.

கராஜ் வளைவுக்கு 'பாலீஸ்டைரீன்' செய்யற ஆளு அளவெடுக்க வந்தார். போய்ட் வரைஞ்ச செவ்வக டிஸைன் 'கீ'க்கு பதிலா யானை வருமான்னு கேட்டேன். வரும். என்ன மாதிரி? தும்பிக்கை மேலே தூக்குனதான்னு கேட்டாரு, ஆமாம்னு சொன்னேன். படம் வரைஞ்சு கொண்டுவந்து காட்டிட்டு அப்ரூவ் செய்யலாம்னு சொன்னார். ஹைய்யா யானை வருது!
கிரேக் கிட்ட பேசுனேன். பாலீஸ்டைரீன் வேற யாரு செய்யறாங்கன்னு கேட்டதுக்கு, வேற யாரும் இல்லையாமே! இவரை(யே) நாந்தான் அரேஞ்ச் செஞ்சேன்னு சொன்னாரு.சரின்னு கேட்டுக் கிட்டேன்.இன்னைக்கு ஃப்ரேம் மேலெ போகுதாம். அப்புறமாப் போய் பாக்கலாம்!


ப்ளம்பிங் வொர்ல்ட்க்குப் ·போன் போட்டு 'ஸ்டீவ்' கிட்டே இந்தமாதிரி, சுடுதண்ணிக் கன்ட்ரோல் தப்பான இடத்துலே இருக்குது. அங்கே கேவிடி டோர் வருதுல்லே? ஆனா கோபால் கொடுத்த ட்ராயிங்லே அந்த மாதிரி இல்லையாம். இவரு பழைய ப்ளானைக் கொடுத்துட்டாரோ? அதை இடது பக்கம் மாத்தணும்னு சொன்னேன். ஜிப் இன்னும் போடலேன்னும் சொன்னதுக்கு, ஆளு வந்து மாத்துமாம், ஆனா அதுக்குக் கொஞ்சம் செலவாம். என்னன்னா, ஆளு வந்து போக $40 தரணுமாம். இப்படித்தான் ஒவ்வொண்ணா ஏறிக்கிட்டே போகுது!24/9
இவ்வளவு களேபரத்துக்கு மத்தியிலும் இணையத்துலே தமிழ் வாசிச்சுக்கிட்டு இருந்த நான் , இன்னிக்குப் புதுசா எனக்கே எனக்குன்னு ஒரு வலைப்பதிவைத் தொடங்குனேன். என்ன பெயர் வைக்கலாமுன்னு முதலில் கொஞ்சம் யோசிச்சவுடன், சட்னு மனசுலே வந்து நின்னுச்சு 'துளசிதளம்.' என்றதுதான். இன்னிக்கு கோபாலுக்குப் பொறந்தநாள். அதனாலே இன்னிக்கே ஆரம்பிச்சு முதல் பதிவும் போட்டேன். கலப்பையை 2 சால் ஒட்டணுமுன்னு தெரியாது. பழைய கலப்பை 1 ணாலே எழுதுனா, எல்லாம் திஸ்கிலெ வருது. காசியை, ஙொய் ஙொய்ன்னு பிடுங்கி, அப்புறம் கலப்பை 2 ஐ இறக்கி ஒருமாதிரி, வலை உலகத்துலே காலு குத்தினேன்:-))))

தொடரும்.........................

22 comments:

said...

ஓ அப்பத்தான் துளசிதளம்னு பேர் வெச்சீங்களா...நல்ல பேரு. புது வீடு..புது வலைப்பூ...கலக்குறீங்க டீச்சர். கலக்குறீங்க.

said...

வாங்க ராகவன்.

ஆமாம், உங்களுக்கெல்லாம் அப்பப் புடிச்ச கிரகம்தான்.
இன்னும் விடலை பார்த்தீங்களா:-)))))

said...

//இன்னிக்குப் புதுசா எனக்கே எனக்குன்னு ஒரு வலைப்பதிவைத் தொடங்குனேன். என்ன பெயர் வைக்கலாமுன்னு முதலில் கொஞ்சம் யோசிச்சவுடன், சட்னு மனசுலே வந்து நின்னுச்சு 'துளசிதளம்.' என்றதுதான்//

இப்போ மட்டும் எப்படி இது பழைய கதைனு அடையாளம் காட்டுறாப்போல இதை சொன்னிங்க, இப்படி முன்னறே எனக்கும் அடையாளம் காட்டி இருக்கலாம் :-))

ஆனாலும் உங்க வீடு கட்டுற கதையே இத்தனை விஸ்தாராமா சொல்றிங்கனா உங்க வீடும் விஸ்தாரமா பெரிசா தான் இருக்கும் அதன் க்ரேக்கும் பெரிய வீடுனு சொல்றார் போல!

said...

வாங்க வவ்வால்.

இது ஃப்ளாஷ் பேக்குக்குள்ளே இன்னொரு ஃப்ளாஷ் பேக்( இன்னொரு தடவை ஆள்காட்டிவிரலால்
வட்டம்) :-)))

நம்ம பதிவர்களில் பலருக்கும் இந்த வீடு கட்டுன விவரமும், அதை எழுதிவச்சுருக்க விவரமும் தெரியுங்க.
நேரம் வரும்போது அதைப் பதியறேன்னு சொல்லி வச்சுருந்தேன். இப்பப் பாருங்க. உங்க.........'.நேரம்':-)))

சரி. இப்ப உங்க சந்தேகம் எல்லாம் தீர்ந்ததா?

பெரிய வீடெல்லாம் இல்லைங்க. 'கடுகையும் மலையாக்க' எனக்குத் தெரியாதா? :-)))))

said...

புது வீடு, புது வலைப்பூ - கலக்கறீங்க டீச்சர். :))

Anonymous said...

//அதுக்குள்ளெ நான் நம்ம 'அரண்மனை'யைச் சுத்திக் காமிச்சிட்டு, லைப்ரரிக்கு நேரமாயிடுச்சுன்னு வந்துட்டோம். இதுக்கே 10 நிமிசம் லேட்டாயிடுச்சு லைப்ரரி திறக்க. //
ஏழைக்கேத்த எள்ளுருண்டை. அவங்கவங்க வீடு அவங்கவங்களுக்கு அரண்மனைதானே

said...

அப்பப்ப சின்ன குழப்பம் வந்திடுது..
பெயரா இல்லை மேட்டரா என்று
உ-ம் மார்க்,ஜிப்,
அந்த பிரேம் (Frame) :-)) முதலில் எதுக்கு என்று புரியாமல்.. தொடர்ந்த போது படம் போட்டு காண்பித்ததால் தெளிவாயிற்று.
அது போட்ட இடத்தில் இருந்து 4' அடி நடந்து வெளியில் நாற்காலி போட்டு அமர்ந்தால் இன்னும் வெளிச்சம் கிடைக்கும் அல்லவா?
சும்மா தமாசுக்கு. :-)

said...

வாங்க கொத்ஸ்.

//புது வீடு, புது வலைப்பூ //

இன்னும் என்ன புதுசு? பழசாயிருச்சு. இது ரெண்டுக்கும் ஒரே வயசு:-)))

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

//அவங்கவங்க வீடு அவங்கவங்களுக்கு அரண்மனைதானே//

இல்லையா பின்னே? My home my castle :-)

said...

வாங்க குமார்.

நானும் ஆளுங்க பேரையெல்லாம் எழுதிக் குழப்பிடறேனோ? :-)))

மார்க்- ஆள் பெயர்

ஜிப்- மேட்டர்.

//இடத்தில் இருந்து 4' அடி நடந்து வெளியில் நாற்காலி ...//

வெட்டவெளியிலே குளிர் அதிகமாச்சே. நாற்காலிகள் சீக்கிரம் பழுதாயிருமே.
அதுவுமில்லாம பனி, மழை எல்லாம் நம்ம தலையிலேதானே விழும்(-:

தலைக்குமேலே ஒரு கூரை வேணுங்கறது இதைத்தானே? :-)))))))

said...

வவ்வால் ஐயா, மரத்தடி யாஹூ குழுவே சேர்ந்து துளசி வீட்டில் ஊஞ்சல் மாட்டினோமில்லே :-)
துள்ஸ், வீட்டு டிராயிங் இருந்தா எனக்கு அனுப்புங்களேன்.

said...

உஷா,
நீங்கலாம் மரம் வச்ச காலத்தில இருந்து இருக்கவங்க போல :-))

இதில கொடுமை என்னவென்றால், நானும் வடுவூர் குமாரும் இது ஏதோ இப்போ நடக்கிஏஅ வேலை போல இருக்குனு , அஸ்திவாரம் இல்லையே, சுவற்றுக்கு செங்கல் வைக்கலையே ஏன்னு கேட்க , இவங்களும் ஒன்னும் தெரியாத போல இனிமே தான் அஸ்திவாரம் போடுவாங்க போல , செங்கல் இபோ தான் இறங்குதுனு ஒரு பதில் வேற :-(
பதிவு செய்த கிரிக்கெட் மேட்ச் பார்த்து என்ன மெதுவாக ஆடுராங்க வேகமா ஆடுங்கப்பானு சொல்றாப்போல ஆகிடுச்சு எங்க நிலமை!

said...

தேதியும் மாதமும்(தீதியும் மதாமும் அல்ல) குறிப்பிட்டு எழுதியது படிக்கவும் புரிந்துகொள்ளவும் வசதியாக இருந்தது
மீண்டும் அப்படியே டைப்புங்களேன்

said...

24/9பிறந்தநாளா.வாழ்த்துக்கள் Kஓபால்.
ஹை.

நல்லது எல்லாம் ஒரே நாள்ள நடக்குதா.
வலைப்பதிவருக்கு வாழ்த்துக்கள்.
அதென்ன துளசி,
தொடப்பம் சரி.
அப்புறம் வாக்குவம்னு இன்னோரு பேரா.

said...

லக்ஸ்னு ஒருத்தர்,
அப்புறம் செங்கல்,சுவர், எல்லாம் வரலியா:))
கண்ணு க்அட்டுத்ஹுனு கேள்விப் பட்டு இருக்கேன்.
யப்பாடி. ரொம்பப் பொறுமைப்பா.

இந்த வீடு உண்மையாவே அசையாம சாப்பிட்டு இருக்கு.

said...

வாங்க உஷா.

வவ்வாலுக்கு ஏகப்பட்ட சந்தேகம்.நிவர்த்தி செஞ்சதுக்கு நன்றி.

தனிமடலில் அனுப்பறேன் பார்ஸல்:-)))

said...

வவ்வால்,
இந்தியா வந்தப்ப ஒரு சேனலில் எப்பவோ நடந்த கிரிக்கெட் மேட்சையும் விடாம
ஜனங்க பார்த்து ரசிக்கறதைக் கண்டுக்கிட்டுத்தான் இப்ப இங்கே நானும்
அடிச்சு ஆடிக்கிட்டு இருக்கேன்:-))))


வடுவூர் குமாருக்குத் தெரியும் இதெல்லாம் ப்ளாஷ் பேக்குன்னு:-)))))

said...

வாங்க சிஜி.

பேராசிரியரே சொன்ன பின்னால் அப்பீல் ஏது?
அடுத்த பகுதி வருவது தீதியுடன்:-))))

said...

வாங்க வல்லி.

கால்வலி தேவலையா? உங்களை இந்த வலி குழப்பி விட்டுருக்குபோல:-)
கண்ணைக்கட்டிக்கிட்டு வருதா?

ஒரு மணி நேரத்துலே அவதி அவதின்னு எல்லாப்பதிவுகளையும் படிச்சுப் பின்னூட்டறதுன்னா
இப்படித்தான்(-:

வாக்குவம் க்ளீனர் போடற கம்பெனி 'லக்ஸ்'

துடைப்பம் நமக்கு வேலை செய்யவந்து செய்யாமப்போன எல்க்ட்ரீசியன்.


//பொறுமை....//

இதைப் பத்துன புலம்பல் ஒண்ணு வந்துக்கிட்டு இருக்கு:-))))))

said...

//இன்னும் என்ன புதுசு? பழசாயிருச்சு. இது ரெண்டுக்கும் ஒரே வயசு:-)))//

அது தெரியாதா? நீங்களும் இந்த பின்னூட்டத்தைப் படிக்கும் போது ஆள்காட்டி விரலை கண்ணுக்கு முன்னாடி வெச்சு சுத்திக்கிட்டு 'அன்னிக்கு' கேட்டா மாதிரி நினைச்சுக்கணும். :))

said...

கொத்ஸ்,

கொசுவத்திக்கே ஒரு கொசுவத்தியா? :-)))))

said...

அது தெரியாதா? நீங்களும் இந்த பின்னூட்டத்தைப் படிக்கும் போது ஆள்காட்டி விரலை கண்ணுக்கு முன்னாடி வெச்சு சுத்திக்கிட்டு 'அன்னிக்கு' கேட்டா மாதிரி நினைச்சுக்கணும்//

இது கூட நல்லா இருக்கே.
அப்படி எத்தனை கொசு வத்திச் சுருள் வச்சு இருக்கீங்க துளசி. சொல்லவெ இல்லையே. கால் வலியோட நேத்திக்குப் பஸ்ஸில போயி
புடவை பார்டர் மாட்டிப் புனர் ஜன்மம் எடுத்து வந்து இருக்கேன்:(((