Wednesday, October 24, 2018

தொட்டகட்டவல்லி மூலவர் யார்? !!!!! (பயணத்தொடர், பகுதி 24)

ஹளபீடுவில் இருந்து ஒரு அரைமணிநேரப்பயணம், வெறும் பதினெட்டு கிமீ தூரத்தில் தொட்டகட்டவல்லி (Doddagaddavalli) என்னும் சிற்றூருக்கு வந்திருந்தோம். என்ன விசேஷமா இருக்கும்?  ஹாஹா.... மஹாலக்ஷ்மி கொலுவிருக்கும் கோவில்!
தொட்டன்னு  ஒரு அடைமொழி இருக்குன்னா மூத்ததுன்னு சொல்லிக்கலாமா, பெருசுன்னு ஒரு பொருள் இருந்தாலும் ?  கட்டவல்லின்னு ஒரு ஊர் பக்கத்துலேதான் இருக்கு.
நம்ம விஷ்ணுவர்தன் காலத்துலே கட்டுன கோவில்தான். ஆனால்  ராஜா கட்டுனது இல்லை!  உள்ளூர் வியாபாரி குல்லாஹனா ரஹுதாவும் அவர் மனைவி சஹஜா தேவியும் கட்டி இருக்காங்க !  காலம் 1113ஆம் ஆண்டு!
சின்ன சந்து போல இருக்கும் தெருவில் இருந்து கொஞ்சம் கீழே இறக்கத்தில் இருக்கு கோவில்.  ஒழுங்காக் கத்தரிச்சு விட்ட புல்வெளியும், ஓரங்கட்டுன செடிகளுமா  பார்க்கவே பசுமை!

தோட்டத்தில் வேலை செஞ்சுக்கிட்டு இருந்த நபர், கேட்டுச் சத்தம் கேட்டு எழுந்து வந்தார்.  புல்வெளி பராமரிப்பு இவரே!  எக்ஸ் ஆர்மி மேன் !
'கோவில் பட்டர் வீட்டுக்குப் போயிருக்கார். என்னாண்டை சாவி இருக்கு. நான் திறந்துவிடறேன்'னார். இந்தக் கோவில் காலை  6 முதல் மாலை 8 வரை திறந்திருக்கும்தான்!
 உருளைத்தூண்களுடன் ஒரு முன்மண்டபம்.  அதுக்குப் பக்கத்தில்  தலையில்லா நந்தி.
தோட்டத்தில் ஒரு ஆஞ்சி!
மண்டபத்துக்குள் போனா கடைசியில்  பூட்டி இருக்கும் ஒரு கம்பி கதவு!
ஆர்மி கதவைத் திறந்ததும்... அந்தப்பக்கப் படிகளில் கீழே இறங்கினோம். நல்ல சுத்தமான பிரகாரம். கண் எதிரில் இன்னொரு பூட்டிய கதவு!  முதலில் திறந்து உள்ளே போனவர், லைட் ஸ்விட்ச் போட்டார். ஒளி வெள்ளம் பாய்ஞ்சதோ? ஊஹூம்.... பவர் இல்லை :-(கும்மிருட்டு!

கொஞ்சம் இருங்கன்னுட்டு இருட்டுக்குள் போனவர் ஒரு டார்ச் லைட்டோடு  வந்தார். உள்ளே போறோம்....  பூதங்கள் நிக்குது....  வேதாளமாம்!  ஐயோ......   விக்ரமாதித்யன் எங்கே?

படம் எடுக்கலாமான்னு கேட்டு அனுமதி வாங்கினேன்.  கருவறை வாசல் நிலைப்படியில் பூதகிகள் முகங்கள்.  மூலவர்  மஹாலக்ஷ்மித் தாயாராம். டார்ச் அடிச்சுக் காமிக்கிறார் அஹ்மத்.  ஆனாலும் படங்கள் ஒன்னும் சரியா வரலை.  'வந்தே பத்மகராம், ப்ரஸன்ன வதனாம்.....  ஸ்ரீ லக்ஷ்மி அஷ்டோத்ரத்தில் ஒரு ஸ்லோகம் (மனசுக்குள்ளேதான்) சொல்லிக் கும்பிட்டுக்கிட்டேன். தாயார் பக்கத்தில் ஒரு சூலாயுதம்..... ஙே.....  நல்லா உத்துப் பார்த்தால்  கையிலே உடுக்கை இருக்கு போல....  அப்ப இது அம்மனாத்தான் இருக்கணும், இல்லே?  அஹ்மத் குழப்பிவிட்டுட்டாரோ....

இந்தப்பக்கம் ஒரு பெரிய திருவடி! வாஹனம் ..... 
தலைக்கேத்த உடம்பு இல்லை..... நோஞ்சானா இருக்காரேன்னு பார்த்தால்  அவருக்கு எதிர்ப்பக்கம்  படு நோஞ்சானா நம்ம யானை....


 தாண்டவேஸ்வரான்னு ஒரு சிற்பம் காமிச்சார் அஹ்மத்.  சிவன்!
உள்விதானத்தில் அங்கங்கே வட்டமான டிஸைன் நடுவில் சிற்பங்கள்!
ஐராவதத்தில் இந்திரனும், இந்திராணியும் !

நரஸிம்ஹம்   வந்த வேலையை முடிச்சதும் யோகத்தில் உக்கார்ந்தாச் !
குதிரை உலா !
பெருமாள்

தரையில் ஒரு இடத்தில் தாயக்கட்டம் கல்லில் கீறி வச்சுருக்காங்க. சிற்பிகள் பொழுதுபோக்கா ஆடி இருப்பாங்களோ?
கொஞ்சம் தாழ்வான விதானம்தான். கடைஞ்செடுத்தப் பளபளத் தூண்கள் நிறையதான் இருக்கு!  மற்ற சந்நிதிகள் தாயாருக்கு(!?) எதிர்ப்புறமா நீண்டு போகும் மண்டபத்தில்....  டார்ச் வெளிச்சத்திலும், நம்மவரின் செல்ஃபோன் வெளிச்சத்திலும் கொஞ்சம் தடுமாறிக்கிட்டேதான் போறேன்.  மாக்கல்தரைதான்னாலும், விழுந்துவச்சா வம்புதான். கேட்டோ!

ஒரு சந்நிதியில் வெளிச்சம் காமிச்சப்ப..... அட! விஷ்ணு துர்கை....  ஓ.... அதுதான் நாத்தனாரோடு பேசிட்டு வரும்போது சூலாயுதத்தை அங்கே மறந்து விட்டுட்டு வந்துருக்காள் :-) இல்லையே.... இவள்தான் மஹாலக்ஷ்மியோ?
'விஷ்ணு துர்கை' சந்நிதிக்கு நேரெதிரா பெருமாள் சந்நிதி!
சிவன் ஒரு சந்நிதியில்  லிங்க ரூபத்தில்!   பூதநாதர் னு திருநாமம்!   பூதம் ஏன் இருக்குன்ற கேள்விக்கு விடை கிடைச்சுருச்சு!
சந்நிதி முகப்பில் கல் கஜலக்ஷ்மி!
இங்கே முக்கியமானதா இருக்கும் நாலு சந்நிதிகளுக்கும் தனித்தனி விமானங்கள்!  அதான் வெளியே நாம் பார்த்தப்பக் கூட்டமாத் தெரிஞ்சது! தாயார்(?) சந்நிதி விமானத்தில்தான் அழகான வேலைப்பாடு. மற்ற விமானங்களில்  அடுக்கடுக்காப்போகும் ஒரு டிஸைன்.

தாயார் விமானத்தின் பக்கம் ஹொய்சாலா ராஜ்ஜியத்தின் இலச்சினை ....  புலியும் வீரனும்!

இருட்டுலே முடிஞ்ச அளவு வர்றது வரட்டுமுன்னு க்ளிக்கினதும்,  வெளியே வந்தோம்.
வெளிப்ரகாரத்தின் நாலு மூலையிலும் நாலு சந்நிதிகள் விமானத்தோடு! ஆனால் ஒரு சந்நிதியில் கூட சாமி இல்லை :-(



கோவிலின் வெளிப்புறச் சுவர்களில் மாடக்கோவில்  போல சிற்பச் செதுக்குகள். கற்பலகையில்தான்  செதுக்கிவச்சுருக்காங்க.

ச்சும்மாச் சொல்லக்கூடாது.... இடம் படு சுத்தம்!

கோவிலுக்குப் பின்பக்க வாசலுக்கந்தாண்டை ஒரு ஏரி இருக்கு!

வெளி மண்டப விதானத்தில் தர்மராஜன் சிற்பம்!
சிற்பங்கள், சந்நிதிகள் பற்றியெல்லாம் பட்டரிடம் விசாரிச்சால்  இன்னும் கொஞ்சம் விவரம் கிடைக்கலாம்.
பட்டர் வந்துருவாருன்னு பார்த்தால் இன்னும் காணோம்.  நமக்கும் இன்னும் ஒரு  முக்கால்மணி நேரப்பயணம் இருக்கே   பேலூர் போக....
அஹ்மதுக்கு நன்றி சொல்லிட்டுக் கிளம்பிட்டோம்.
அகேரா வழியாகத்தான் பேலூர் திரும்பறோம். நம்ம காந்தம்மா கடையில்  நிறுத்தி இளநீர் ஆச்சு.
காந்தம்மாவுக்கு மகிழ்ச்சி! நமக்கும்தான்!  என்னுடைய செல் நம்பர் வேணுமுன்னு ஆவலோடு கேட்டாங்க.   கொடுக்கலாம். ஆனால் இது இந்தியா நம்பர் இல்லையே....  ஒருமுறை இதுலே கூப்பிட்டாலே... காந்தம்மாவின் ஒருநாள் வருமானம் போயிடாதோ? அதுவும் ரோமிங் சார்ஜ்ன்னு தாளிச்சுடறாங்களே!  தர்மசங்கடமாப் போச்சு. 'பரவாயில்லை, காந்தம்மா. இந்த வழியா  வரும்போது உங்களைப் பார்க்காமப் போகமாட்டேன்'னு 'வாக்கு'க்கொடுத்தேன். பேலூருக்குள் நுழைஞ்சதும் அறைக்குப் போகாமல் நேராப் போனது அன்னபூர்ணேஸ்வரிக்கு!   ரகுவின் வரவேற்பு ! காஃபி நல்லா இருந்தது.  பத்தே ரூ!

கர்நாடகா ஸ்பெஷல் என்ன பண்ணுவீங்கன்னு விசாரிச்சதில் அக்கி ரொட்டின்னாங்க.  டின்னருக்குச் செஞ்சு  வைக்கிறேன்னு சொன்னார் முதலாளி!  எட்டு மணிக்கு மேலே வர்றதா இங்கேயும் 'வாக்கு' கொடுத்தாச் :-)

 அதே போல ஒரு எட்டரைவாக்கில் அங்கே போனோம். பயமுறுத்தும் பச்சைமிளகாயோடு அக்கி ரொட்டி ரெடி! எனக்கு மட்டும் தொட்டுக்கக் கொஞ்சம் சட்னியும் பருப்புக் கூட்டும்.  அக்கி ரொட்டின்னா அரிசிமாவில் செய்யும் ரொட்டிதான். சுமாரான அட்டை போல இருந்துச்சு. இதைவிட அருமையா நான்  செய்வேன்....  என்னவோ போங்க....

இங்கே அடுக்களை சாப்பிடும் இடத்தையொட்டியே இருக்கு. சமையல் நடப்பதை நாம் பார்க்கலாம்.  பொதுவாக ரெஸ்ட்டாரண்டுகளில் ஆண் சமையல்காரர்கள் இருப்பாங்கல்லே.... இங்கே நாலைஞ்சு பெண்கள் சமையல் செய்யறாங்க.  வீடு போலவே!  ஹோம்லி டச் :-)

இன்றைக்கு ரொம்பவே சுத்தியாச்சுல்லே!  வாங்க.... இனி ரெஸ்ட் எடுக்கலாம்.  நல்லாத் தூங்கி எழுந்தால்  உடலுக்குப் புத்துணர்ச்சி!

நாளைக்கு பேலூர் விட்டுக் கிளம்பலாமா !

PINகுறிப்பு: இன்னும் எனக்கு அம்மனா தாயாரான்ற சந்தேகம் இருக்கு. ஒருவேளை சிலையை  சந்நிதி மாத்தி வச்சுட்டாங்களோ?  இன்னும் கொஞ்சம் யோசிச்சால்  சிவனும் அம்மனும் எதிரும் புதிருமா.... அதே போல தாயாரும்  
பெருமாளும்  எதிரெதிரான்னுதான்  வச்சுருக்காங்க போல (ஐ மீன் சந்நிதிகளை)  எப்படி மஹாலக்ஷ்மி கோவில்னு பெயர் வந்துருக்குன்னு புரியலையே....  காசேதான் கடவுளடான்னு......

தொடரும்......... :-)


12 comments:

said...

அந்தக் காலத்தில் இப்படிதான் இருட்டில் இருந்திருப்பார்கள் இந்த இறைவர்கள்... ஸோ, இயற்கை ஒளியில் படாமல் பிரமாதம்! வெளிப்ரகாரச் சிறுகோவில் சிலைகளைத் திருடியிருப்பார்களோ!

said...

** // படாமல் //

படங்கள்.

said...

எங்கள் பயணத்தில் நாங்கள் போகாத கோயில். அடுத்த முறை அவசியம் செல்வேன்.

said...
This comment has been removed by the author.
said...

அம்மா படங்கள் அருமை கண்டிப்பா பார்க்க வேண்டிய இடம்
உங்கள் பதிவிற்கு நன்றி

said...

இலட்சுமி கோயில்ல பூதகணங்கள் வேதாளங்கள்... ஒத்துவரலையே. எனக்கென்னவோ இது எதோ பௌத்தக்கோயிலா இருந்திருக்குமோன்னு ஐயம் வருது. காலப்போக்குல மத்ததைச் சேத்துருக்கலாம்.

இந்தக் கோயிலைப் பத்தி தேடிப்பாத்தப்போ இந்தக் கோயிலைக் கட்டியது அந்தக் காலத்து வணிகரான குல்லகான ரகுத்தா (Kullahana Rahuta)வும் அவரோட மனைவி சகஜாதேவி (Sahaja Devi)ன்னு போட்டிருந்தது. ரகுத்தாங்குற பேரைத் தேடிப் பாத்தா வங்காளத்துக்குப் போகுது. இந்தக் கோயிலைப் பத்தி முழுசான விவரங்கள் தெரியல. அல்லது முழுசான விவரங்கள் வெளியிடப்படலைன்னு தோணுது.

கோயில் பட்டர் கோயிலுக்குக் கூட வராம அப்படி என்ன வேலையோ தெரியல.

காந்தம்மாவுக்கு வெளியாட்களைப் பாத்தா ஒரு சந்தோஷம்னு நெனைக்கிறேன். அவங்க மொகத்துல அப்படியொரு மலர்ச்சி.

said...

வாங்க ஸ்ரீராம்,

அந்தக் காலத்தில் என்ன.... இந்தக் காலத்திலும் இப்படியேதான். வெளிச்சமே வராத 'கருவறை'கள்தான் அங்கே!

வெளிப்புறம் தனியாகக் கற்பலகையில் செதுக்கி ஒட்ட வச்சுருப்பாங்களோ? எப்படி?

சில சிற்பங்கள் வளாகத்துக்குள் மதில் சுவராண்டை இருக்கறதைப் பார்த்தேன்.....

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

அமைதியான பகுதியில் இருக்கு இந்தக் கோவில். கூட்டமா நிற்கும் கோபுரங்கள், விமானங்கள் எல்லாம் ஒரு அழகே!

நீங்கள் போகும்போது பட்டர் இருந்தால் மேல்விவரம் கேட்டு வாங்க.

said...

வாங்க செந்தில்ப்ரசாத்,

பார்த்து ரசிக்க வேண்டிய கோவில்தான் !

said...

வாங்க ஜிரா.

பூதநாதர் & பூதநாயகி கோவில் என்பதை எப்போ, யார் மஹாலக்ஷ்மி கோவிலுன்னு சொல்ல ஆரம்பிச்சு அப்படியே பெயர் நிலைச்சுப் போச்சோன்னு தெரியலை. அதிலும் ஒரு விமானம்/கோபுரம் மட்டும் மற்றவகைகளில் இருந்து வேறுபட்டுருக்கே ! அப்ப அதுதானே கோவிலின் மூலவர் சந்நிதியா இருக்கணும், இல்லையோ? காசுக்கு முன்னுரிமை வந்தவுடன், மஹாலக்ஷ்மிக்கு முக்கியத்துவம் கொடுத்துட்டாங்க போல... அப்பத்தானே நாலு சனம் வரும்!

நாலு விமானம், நாலு சந்நிதின்னு எல்லாம் கணக்காத்தான் இருக்கு. ரெண்டு குடும்பம். கணவனும் மனைவியும் எப்பவும் எதிரும் புதிருமாத்தான் இருப்பாங்கன்னு சந்நிதி அமைப்பிலேயே சொல்லிடறாங்க :-) நேருக்கு நேர் !!!

நாள் முழுசும் திறந்துருக்கும் கோவிலில், யாரும் வரலைன்னா பட்டருக்குப் போரடிக்காதா? பகல் சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் போனவர், சாயங்காலமா வருவார் போல !

said...

black and white படங்கள் ..ok தான்..

அங்க அங்க உங்க கமெண்ட் ஆஹா..

said...

இங்கயும் போனோம் ...உங்களுக்கு சொன்ன அந்த நண்பர் எங்களுக்கும் சூப்பரா சொன்னார் ..அதுவும் பசங்களுக்கு ரொம்ப சிறப்பா பொறுமையா சொல்லி ...

கடைசியில் எங்க குடும்ப படம் எல்லாம் எடுத்து தந்தார் ...


இனிய பயணம் ...