Friday, October 05, 2018

போற போக்கில் பாஹூபலி ! (பயணத்தொடர், பகுதி 18)

மேல்கோட்டையில் இருந்து கிளம்பின  ஒரு முக்கால் மணி நேரத்தில் சாலையில் போகும்போதே  ஒரு மலையும், உச்சியில் ஒரு கோவிலுமாத் தெரிஞ்சது. கூகுள் மேப் பார்த்துக்கிட்டே வந்த நம்மவர், அது
ஷ்ரவணபெளகொலான்னார்!

இந்தக் கோவிலை ஒரு இருபத்திநாலு வருஷங்களுக்கு முன்னே பார்த்துருக்கோம். அப்போ மலையேற ஒரு பிரச்சனையும் எனக்கில்லை.  மகளும் கூட  இருந்த பயணம். சின்னப்பிள்ளைகளுக்கு மலையேற்றம் எல்லாம் வெல்லம் தின்னாப்லெ இல்லையோ! அவள்பாட்டுக்குக் கிடுகிடுன்னு ஏறிப்போயிட்டாள்!  அப்போ நாங்க ஒரு கர்நாடகா கவர்மென்ட் டூரிஸம் பஸ்ஸில் வந்துருந்தோம். ஒரு நாள் பயணம்தான். பெங்களூரில் இருந்து கிளம்பி, ஷ்ரவணபெளகுலா, பேலூர், ஹளபீடுன்னு மூணு கோவில்கள் பார்த்துட்டு அன்றைக்கு இரவே பெங்களூர் போயிட்டோம்.
இப்பப் பார்க்கும்போது மலையேறும் படிகள் வித்தியாசமா இருந்ததாக ஒரு தோணல்.  ஊருக்குள் போனதும்,  கல்யாணிக்குப் (திருக்குளம்)பக்கத்துலே வண்டியை நிறுத்தினார் அசோக். எதிர்வாடை முழுசும் கடைகள். இந்தாண்டை  மலைக்கு ஏறும்  முகப்பு வாசல் புதுசாக் கட்டி இருக்காங்க.
கோமடேஸ்வரருக்கு இன்னொரு பெயர் இருக்கு தெரியுமோ? பாஹூபலி! அரசகுமாரனாகப்பிறந்து,  தகப்பனுக்குப்பின் பட்டம் ஏற்கத் தமையன் இருந்தும் அவன் கூட சண்டைபோட்டு ஜெயித்து அரசனானவர். கொஞ்சநாளில் இந்த பதவிக்காக என்னெல்லாம் செஞ்சுட்டோமுன்னு மனசுக்குள்ளே உறுத்தல் வந்து, பொறுக்கமாட்டாத ஒரு கணத்தில், அண்ணனுக்கே பதவியை விட்டுக்கொடுத்துட்டுச் சாமியாராப் போனவர்!
ஒரே கல்லில் செதுக்கிய சிலையின் உயரம் 58 அடி 8 அங்குலம்! தோள்பட்டைகள் அளவு 26 அடியாம்! நின்ற திருக்கோலம்! ஒரே இடத்தில் நின்னு அவரைச் சுத்திப் புத்து வளர்ந்துபோச்சு. அதுலே இருந்து முளைச்ச செடிகொடியும் காலைச் சுத்திப்போய்க்கிட்டு இருக்கு! சுருட்டை முடி, எதிலும் பற்றில்லாமல்  ஒரு வெத்துப் பார்வை.... திகம்பர ஸ்வரூபம் !

 பத்தாம் நூற்றாண்டு சமாச்சாரம்.  அப்பெல்லாம்  இந்தப் பகுதியை ஆண்டுவந்த  மன்னர்கள் எல்லோரும் சமணமதம் சேர்ந்தவர்கள்!  சவுந்தராயா என்னும்  சேனாதிபதி, தன்னுடைய தாய் விரும்பியதால்  இந்தச் சிலையை அமைக்க ஏற்பாடு செஞ்சாராம்!  பொருளுதவி, வழக்கம்போல் மன்னர்தான்!
மலையை அண்ணாந்து பார்த்தால்.....  முந்தி எப்படி ஏறினேன்னு மலைப்பு! 641படிகள்!

பனிரெண்டு வருஷத்துக்கொருமுறை பாஹுபலிக்குப் பால் அபிஷேகம் செய்யறாங்க. பால் மட்டுமில்லை, தேன், நெய், குங்குமப்பூ,  சந்தனம், குங்குமம், தங்கக்காசு, வெள்ளிக்காசு இப்படி...  மஹாமஸ்தகாபிஷேகமுன்னு  சொல்றாங்க. சமணர்களுக்கு இது மஹா பெரிய விழா!  கோடிக்கணக்குலே கூட்டம் வருமாம்!
மொத்தக்கூட்டமும் ஏறிப்போகுமா என்ன? இப்படி சாரம் கட்டி இருக்காங்க பாருங்க!  ஒருவேளை  நாட்டின் பெரிய தலைகள் வர்றதால் இவ்ளோ பெருசாக் கட்டிட்டாங்க போல ! 

இவ்ளோ உயரமான சிலைக்கு  அபிஷேகம் செய்யறதுக்காகவே சிலைக்குப் பின்பக்கம் சாரம் கட்டி இருக்காங்க. இந்த  வருஷம் விழா நடக்கும் வருஷமாம்.  ஃபிப்ரவரி 2018 இல் நடந்துருக்கு!
நான் சொன்னேன் பாருங்க, 1994 மே மாசம் இங்கே வந்தோமுன்னு, அந்த வருஷமும் விழா நடந்த வருஷம்தான்!
ரகு போர்டிங் அண்ட் லாட்ஜிங் கூட்டிப்போன அசோக்,  இங்கே நீங்க சாப்பிடலாம், சுத்த சைவம்னு சொன்னார்!  எனக்கு சாப்பிட வேணாம். ரெஸ்ட் ரூம் கிடைச்சால் போதும்!
மாடியிலே இருக்குன்னு அங்கே போனோம். ஒரு ஏழெட்டுப் பெண்கள் மாடி ஹாலில் தரையில் உக்கார்ந்து பேசிக்கிட்டு இருக்காங்க. பெண்கள் பகுதியாம்!  டாய்லெட்டுக்கு சின்னதா  ஒரு காத்திருப்பு.  ரொம்ப சுமார். ஆனால் சுத்தமா இருந்தது!
லேடீஸ் எல்லாம் ராஜஸ்தானில் இருந்து யாத்திரை வந்துருக்காங்க கோமடேஸ்வரர் தரிசனத்துக்கு! கொஞ்ச நேரம் அவுங்களோடு (நம்ம ராஜஸ்தான் போனது) கதையடிச்சுட்டு ரெண்டு க்ளிக்ஸ் ஆச்சு! சாயங்காலம் கிளம்பறாங்களாம்! நல்லபடியாப் போயிட்டு வாங்கன்னோம்!

கல்யாணின்னா குளம்!
 பாத்திரக்கடை கலகல....

கிளம்பிட்டோம். வழியில் ஒரு ஆஞ்சி நிக்கறார்!  போறபோக்கில் ஒரு கும்பிடு!
கொஞ்ச தூரத்துலே டோல் ரோடு வந்துருச்சு! எங்கேயும் நிறுத்தாம (ஹைவே யில் அடையார் ஆனந்த பவன் பார்த்தும் கூட !)போய்க்கிட்டு இருந்தவங்க,  அகேரா என்ற ஊரில் காந்தம்மா கடையில் வாழைப்பழங்கள் வாங்கிக்கிட்டு, எங்க மூணுபேருக்கும் இளநீர்னு ஆக மொத்தம் ரெண்டு மணி நேரத்தில் பேலூர் வந்து சேர்ந்தோம்.  எங்க கூடவே மழையும் வந்து சேர்ந்துச்சு.

கர்நாடகா ஸ்டேட் டூரிஸம் நடத்தும் ஹொட்டேலில் தங்கறோம். ஹொட்டேல் மயூரா வெலாபுரி ! ஏஸி காட்டேஜ் புக் பண்ணி இருந்தோம். நல்ல வசதி! பெரிய ஹால், அட்டாச்டு பாத்ரூமோடு  பெரிய படுக்கை அறை, கிச்சன், இன்னொரு டாய்லெட்ன்னு  நல்லாவே இருக்கு!
காட்டேஜைத் திறந்து கொடுக்க வந்த  பணியாளர் கிட்டே ரெண்டு காஃபி கொண்டுவரச் சொன்னதும், கூட வேறெதாவது வேணுமா? பக்கோடா செஞ்சு தருவாங்கன்னார்.  ஆகட்டுமே! மழைக்கு நல்ல இதம் :-)
ராத்திரி சாப்பாடும் அங்கேயேதான்.  ரூம் சர்வீஸில் ஆச்சு.
மொத்த ஹொட்டேலிலும் நாம் மட்டும்தான் தங்கி இருக்கோமாம்! அதுக்காக சமைச்ச சோறு முழுசும் நமக்கே அனுப்புனா எப்படி?  ஒரு கிண்ணம்  சோற்றை உடனே எடுத்துக்கிட்டுப் போகச் சொன்னோம்.   பணியாளர்கள் எல்லாம் ரிலாக்ஸா இருக்காங்க.

அதிகாலை கண் முழிச்சப்ப , புழக்கடைப்பக்கமிருந்து விஷ்ணு சகஸ்ரநாமம்  கேட்டது.   எதாவது போவில் இருக்கோ? கதவைத் திறந்து பார்த்தால்  கோவில் எதுவும் கண்ணில் படலை. ஆனால் விஷ்ணுசகஸ்ரநாமம் மட்டும் கேட்டுக்கிட்டே இருந்தது.... அசசீரி போல!
எழுந்து ரெடியாகி டைனிங் ஹால் போக வெளியே வந்தால் மழையும் காத்துமா.....  நம்மவர் ஓடிப்போய் பையில் இருக்கும் குடையை எடுத்து வந்தார். அடிச்ச காத்தில் குடை புட்டுக்கிச்சு! புத்தம் புதுசு....  இந்தக் குடையை காவு வாங்கன்னே வந்த காத்தும் மழையும் அடுத்த நிமிட்  நின்னு போனது ஆச்சரியம்தான்.

அசோக் வண்டியிலே தூங்கிக்கிட்டு இருந்தார்.  அடராமா....

இவருக்கு  ட்ரைவர்களுக்கான ஓய்வுக்கூடம் இல்லையா?  இருக்காம்.  அதான் யாருமே இல்லையே.... அவ்ளோ பெரிய  ஹால் வேணாமுன்னு  இங்கேயே படுத்துட்டாராம்.(பயமா இருந்துருக்குமோ? )  குளிக்கும் வசதி எப்படின்னதுக்கு  'சுமார். வெந்நீர் இல்லை'ன்னார். நம்ம காட்டேஜ் சாவியைக் கொடுத்து, பாத்ரூமை பயன்படுத்திக்கச் சொல்லிட்டு, நாங்க டைனிங் ஹால் போனோம்.
அங்கேயும் யாரும் இல்லை. பணியாளர்கள் எல்லாம்  எழுந்து வரவே இல்லைன்னு பால் கேனோடு வந்தவர் சொல்றார். நம்மவர் குடை ரிப்பேர் பண்ணிக்கிட்டு இருந்தார். நான் டைனிங் ஹால் சுவரில் இருந்த படங்களை க்ளிக்....
ஒரு பணியாளர் (பெயர் ரகு) வந்து காஃபி ரெடின்னார். கொண்டு வாங்கன்னதும்  காமணி நேரத்துலெ  வந்தது ஃபில்ட்டர் காஃபி இல்லை. காலை ப்ரேக்ஃபாஸ்டுக்குப் பூரி செய்யப்போறாங்களாம், சமைக்க ஆள் வந்தவுடனே....  கிழிஞ்சது போ.....
அதுக்குள்ளே குளிச்சு ரெடியான  அசோக், 'நேத்து எதிர் கடைவீதியில் சாப்பிட்டேன். நல்லா இருந்தது'ன்னாரா.. நாங்களும் சரி அங்கேயே போகலாமுன்னு  போனோம். அங்கேயும் ஒரு ரகு!
எனக்கு இட்லி வடை கிடைச்சது. மத்த ரெண்டு பேருக்கும் அவரவர் விருப்பம். காஃபி பத்தே ரூபாய்! சூப்பர்  டேஸ்ட்! நியூ அன்னபூர்ணேஸ்வரி ஹொட்டேல்.  சுமுகா ரெஸிடன்ஸி !  கர்நாடகா சுற்றுலா  மையம், அங்கீகாரம் செஞ்சுருக்கு!
வாசலில் நின்னு பார்த்தாலே  கோவில் கோபுரம் தெரிஞ்சதேன்னு நேரா கோவிலுக்குப் போயிட்டோம்.
அங்கே நாராயணனை சந்தித்தேன்!

தொடரும்....... :-)

12 comments:

said...

படங்கள் வெகு சிறப்பு.

said...



ஷ்ரவணபெளகொலா...எங்க லிஸ்ட் ல இருக்க அடுத்த இடம் ..

பசங்ககூட சிக்கீரம் போகணும்..

உங்க பழைய படம் ரொம்ப அழகா இருக்கு ..சூப்பர்..

said...

ஷ்ரவணபெளகுலா சென்ற இடம். தொடர்கிறேன்.

said...

அருமை நன்றி

said...

சரவணபெளகொளா... கொளான்னா கொளம். பெள/பெளி- வெள்ளை. சரவண வெள்ளைக்கொளம். அதான் அந்த ஊரோட பேருக்குப் பொருள். பதிவைப் படிச்சதும் அந்த ஊருக்குப் போன நினைவுகள்ளாம் வந்துருச்சு. ப்ப்ப்ச்...

மலைல ஏற பல்லக்கு நாற்காலி மாதிரி ஒரு வசதி இருக்குமே. அதைப் பயன்படுத்தியிருக்கலாமே. இந்த மலைல நேரான படிகள் இல்ல. ஒரு மாதிரியான பாம்புப்படிகள்.

1994ம் வருடத்துப் படம் அருமை. அந்த வாட்டியும் இதே திருவிழாவுக்குதான் போயிருக்கீங்க. அடேங்கப்பா.

கோமதீசுவரர் இருக்கும் மலைக்கு எதிரே சந்திரகிரின்னு ஒரு மலை. அதுலயும் நிறைய சமணக்கோயில்கள். நண்பர்களோட பெங்களூர்ல இருந்து பைக்ல போன சமயம் அது. மதிய வெயில். அலைச்சல் அலுப்பு. சின்னக் கோயிலுக்குள்ள குளுகுளுன்னு இருந்தது. அப்படியே தியானத்துல உக்கார்ர மாதிரி உக்காந்து கண்ணசந்துட்டேன். திடீர்னு எதோ சத்தம். முழிச்சிட்டேன். ஒரு சேட்டு அல்லது மார்வாடி குடும்பம் வந்து கைதட்டி பாடி சாமி கும்பிட்டிட்டிருந்தாங்க. நான் முழிச்சதைக் கவனிச்சிட்டு எங்கிட்ட வந்து என்னவோ கேட்டாங்க. ஒன்னும் புரியல. பக்பக்குன்னு முழிச்சேன். நல்லவேளையா நண்பன் உள்ள வந்தான். அவன் கிட்ட கேட்டாங்க. அவன் என்னவோ சொல்லி அவங்கள அனுப்பி வைச்சான். என்னடான்னு கேட்டா... நான் எதோ தீவிர தியானத்துல இருந்ததாக அவங்க நெனச்சுட்டு என்னோட தவத்தைக் கலைச்சதுக்கு பயந்து மன்னிப்பு கேட்டாங்களாம். என்னையுமா உலகம் நம்புதுன்னு நெனச்சுக்கிட்டேன். :)))))))))))))))

said...

இந்த இடங்கள் பற்றிய சேதிகள் படிக்கும்போதுமனசு நினைவுக் குளத்தில் மூழ்க ஆரம்பிக்கிறது

said...

வாங்க ஸ்ரீராம்.

நன்றி !

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

கோடை முடிஞ்சதும் போங்க. வெறுங்காலால் மலையேறும்போது சூடு அதிகம்!

said...

வாங்க மாதேவி.

பழைய நினைவுகளும் அருமையே!

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றி.

said...

வாங்க ஜிரா.

நீங்க சொன்னது ரொம்பச் சரி!

சிலை ஸ்தாபிச்சபின் (கிபி 983) நடந்த மஹாமஸ்தகாபிஷேகத்தில் அபிஷேகம் செய்த பால் வழிஞ்சோடி பள்ளத்தில் குளம் கட்டுச்சுன்னும், பால்குளம் என்பதால் வெள்ளைக்குளம்னு சொல்ல பெளகுளான்னு சொல்லப்போய், பேச்சுவழக்கில் பெலகொலான்னு ஆச்சுன்னும் சொல்றாங்க.
பேலூர், ஹளேபீடு, ஷ்ரவணபெலகொலா ன்னு ஒரு சுற்றுலா வழிகாட்டி புத்தகம் ஒன்னு கிடைச்சது. ஜூ.எச். பிரஹாசனா என்பவர் எழுதி இருக்கார். இது தமிழாக்கமாக இருக்கணும். பிழைகள் மலிவு என்றாலும் சாரம் இருக்கு. படங்களும் அழகா இருக்கேன்னு வாங்கினேன். இந்தப் பதிவில் இருக்கும் கோமடேஷ்வர் சிலை, புத்தகத்தில் இருந்து எடுத்ததே!

மலைஏற பல்லக்கு, வாழ்வில் முதலும் கடைசியுமா சோளிங்கர் கோவில் பயணத்தில்தான்.

ஜிரா சாமியார் ஜிராபாபான்னு ஆகும் ச்சான்ஸ் போயிருச்சே ! :-)

said...

வாங்க. ஜிஎம்பி ஐயா.

திரும்பிப்பார்ப்பதும், நினைவுகளும் கூட ஒரு சுகம்தானே!

நன்றி !