இந்தப் பயணத்துலே கடைசி நேர ஷாப்பிங்னு அம்பிகா ஸ்டோர்ஸ் தி. நகர் போனப்ப ஒரு தினை மா பேக்கட்டை வாங்கினார் நம்மவர். எதுக்கு இதெல்லாம்? ஊருக்குள்ளே விடுவானோ என்னவோன்னால்.... கொண்டு போகலாம். விட்டால் சரி. விடலைன்னா போயிட்டுப் போகட்டுமுன்னார். அதுக்கு அதிர்ஷ்டம் இருந்துச்சு நாட்டுக்குள் நுழைய :-)
இன்றைக்கு தற்செயலாக் கண்ணில் பட்டது.
எடுத்துப் பார்த்தால் அடுத்தமாசம் காலாவதியாம். எதாவது செய்ஞ்சுடலாமேன்னு பேக்கின் பின்புறம் பார்த்தால் செய்முறை இருக்கு.
லட்டாம், போளியாம், பணியாரமாம், கொழுக்கட்டையாம்.............
நல்லாப் பாருங்க.... செய்முறைக்குப் புது விளக்கம் போட்டுருக்காங்க. கிழிஞ்சது க்ருஷ்ணகிரின்னு......
உக்கார்ந்து யோசிக்கெல்லாம் முடியாது. குளிர் ஒரேடியா..... சட் புட்னு எதையாவது ஆக்கி வச்சுட்டு, எலெக்ட்ரிக் ப்ளாங்கெட்டுலே போய் உக்காந்துக்கணும்.
நானோ இடும்பி என்பதால்.... அவுங்க சொன்ன செய்முறையைத் தூக்கிப்போட்டுட்டு, அல்வா செய்யலாமுன்னு தீர்மானிச்சேன்.
அடுப்பைப் பத்தவச்சு அதன் தலையில் ஒரு வாணலி ஏத்தி பொதியைப் பிரிச்சு மாவை அதில் கொட்டி வறுக்க ஆரம்பிச்சேன். அஞ்சு நிமிட் போல வறுத்ததும் அதுலே நாலைஞ்சு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து இன்னும் கொஞ்சநேரம் வறுத்தேன். நல்லதா ஒரு முறுகல் மணம் வந்தவுடன், ஒரு கப் ரா ஷுகர் சேர்த்தேன். பொதியில் 200 கிராம் தினை மாவுன்னு போட்டுருந்தாங்க.
அதுகூட அழுத்தம் திருத்தமா திணைன்னு.... ஐந்தாம் திணை, ஆறாம் திணை...... இது ஏழாம் திணையோ?
அதனால் ஒரு கப் சக்கரை. கூடவே ஒரு கால் கப் தண்ணீர். இப்ப எல்லாம் சேர்ந்து இளகி வந்துச்சு. இன்னும் ரெண்டு ஸ்பூன் நெய் சேர்த்தேன்.
பார்க்க போரா இருக்கேன்னு கொஞ்சம் நிறம் சேர்க்கலாமுன்னு தோணுச்சு. என்ன நிறமுன்னு சட்னு தீர்மானம் எடுக்க முடியலை. கைக்குக் கிடைச்சது ரெட் ஃபுட் கலர். அல்வான்னா அது சிகப்புதானே? கோதுமை அல்வா இப்படித்தான். இப்ப வெவ்வேற அல்வா வெவ்வேற நிறம் என்பதெல்லாம் வந்தாச்சு. அது கிடக்கட்டும்.
துளி சிகப்புக் கலர் சேர்த்தேன். கொஞ்சம் ஏலக்காய்ப் பொடியும். ரெண்டு கிளறு கிளறுனதும் நல்லா மொத்தையா வந்துருச்சு.
நெய் தடவிய தட்டில் அதைக் கொட்டி சமப்படுத்தினேன். பார்க்க ஓரளவு பரவாயில்லை. எதுக்கெடுத்தால் முந்திரி எதுக்குன்னு, எடுத்தது வால்நட்ஸ்! முழுசா வாங்கி வீட்டுலே உடைச்சு வச்சுக்கறதுதான். வீட்டு வால்நட்ஸ் :-)
ஆச்சு ஒரு அலங்காரம். சாமிக்குப் படையலும் போட்டாச்சு. எப்படி இருக்குமோ பெருமாளே............
பரிசோதனை எலிக்கு முதல் பரிமாறல். "நல்லா இருக்கும்மா!" ஹப்பா....
அடுத்த எலி வாயில் போட்டுப் பார்த்தது :-) அசோகா மாதிரி இருக்கே! பேஷ் பேஷ்!
முழு செய்முறையைப் படம் எடுக்க விட்டுப்போச்சு. ஆனால் எண்ட் ரிஸல்ட் இங்கே!
எஞ்சாய் .... எஞ்சாய் !!!

19 comments:
பார்க்கையில் கொஞ்சம் கேசரி போலவும் தெரிகிறது. சுவையாக இருந்திருக்கும் என்றும் தெரிகிறது. தி"ணை" அல்வா!
எனக்குத் தெரிஞ்சு திணைமாவில் அல்வா செய்து சாதித்தது நீங்கள்தான்!!!
இதைப் பார்க்கும்போது, ஆறாம் வகுப்பில் இருந்தபோது, கேப்பைக் களியை எங்க அம்மாவைச் செய்துதரச் சொன்னேன் (இதெல்லாம் எங்க வம்சத்திலேயே செய்ததில்லை). அம்மாவும், ஜீனி போட்டு அல்வா பதத்துக்குச் செய்து தந்தா. என்ன நீங்க பண்ணியிருக்கறமாதிரி, அலங்காரம்லாம் கிடையாது.
முதல்ல 'திணை'ன்னு பார்த்ததும், 'தினை'ன்னா வரணும்னு தோணித்து. அப்புறம் 'திணை'தானோன்னு சந்தேகம் வந்துடுத்து.
குளிருக்கு, பேசாமல், கேப்பை கஞ்சி மாதிரி சுடச் சுட தினைக்கஞ்சி (ஜீனி போட்டுத்தான்) பண்ணியிருந்தீங்கன்னா, ராத்திரி சாப்பாட்டுக்குப் பதிலாவும் ஆச்சு, குளிருக்கு இதமாகவும் இருந்திருக்கும்.
இங்கு வரகரிசி சாமை கேப்பை எல்லாமே முழுதாக, பொடித்து(உப்புமா செய்ய தகுந்தபடி) மற்றும் மாவாக உங்கள் முயற்சி போல அல்வா ரொட்டி என பல கலந்து கட்டி அடிக்கலாம். உங்கள் முயற்சி எங்களுக்கு உற்சாகமாக இருக்கு. அடுத்த தடவை செய்திட வேண்டும்
அல்வா...பார்க்கவே ஆசையாய் இருக்கே...
அடேங்கப்பா... தினை அல்வா. இதுல ஜீனிக்குப் பதிலா வெல்லம் போட்டா எப்படியிருக்குமோன்னு யோசிக்கிறேன். பாக்க அதிரசமாவு மாதிரி இருக்கே. இதையே அதிரசமாத் தட்டிப் பொறிச்செடுத்தா எப்படியிருக்குமோ!
வாங்க ஸ்ரீராம்.
டேஸ்ட் நல்லாவே இருக்கு. நெய்யும் சக்கரையும் இருக்கே :-)
வாங்க பிரகாசம்.
என்னைப்போல் இடும்பிகள் அங்கங்கே இருப்பாங்க. எல்லாம் 'பரி' சோதனைகள்தான் :-)
வாங்க நெல்லைத் தமிழன்.
கஞ்சி வச்சுட்டு, ஐயா குடி அம்மா குடின்னு இருக்க வேணாமேன்னுதான் :-) இப்போ ஃப்ரிஜ்ஜுக்குள்ளே இருக்கு. ஒரு வாரம் பத்து நாளுக்கு டெஸர்ட் பிரச்சனை இல்லை !
வாங்க பராசக்தி.
மில்லட்ன்னு ஒரு சமயம் ஒன்னு வாங்கியாந்தேன். பார்க்க தினைபோலவே இளமஞ்சள் நிறம். அதை வறுத்து அரைச்சுக் கேசரி, தேன் சேர்த்து லட்டுன்னு செஞ்சு பார்த்தேன். ஒரே ஒரு பிரச்சனை.... தின்ன ஆள் இல்லை. நம்மவரையே எவ்ளோன்னுதான் படுத்தறது? எதுக்கும் ஒரு எல்லை இருக்குல்லே ? :-)
வாங்க அனுராதா ப்ரேம்.
நீங்க இப்படிச் சொல்றீங்க. மேலே பாருங்க... நம்ம நெல்லைத் தமிழன், களின்னுட்டார் :-)
வாங்க ஜிரா.
இப்பெல்லாம் கேஸரி செய்யக்கூடப் பனைவெல்லம்தான் பயன்படுத்தறேன். தாய்லாந்து சமாச்சாரம். நல்லாவே இருக்கு! நிறம் கூட அல்மோஸ்ட் வெள்ளை. துளி டிகாஷன் விட்ட லைட் காஃபிக் கலர்.
வெள்ளைச் சக்கரை வாங்கறதை ஒரு பத்து வருசமா நிறுத்தியாச்சு. சக்கரை சேர்க்கும் சமாச்சாரங்களுக்கு (காஃபி, டீ) ரா ஷுகர் என்னும் வெளுப்பாக்காத சக்கரைதான்.
அதிரசம் நல்லாத்தான் வரும். அதுக்கு எண்ணெய்ச் சட்டி அடுப்புலே ஏத்தி, மீந்து போகும் எண்ணெயைக் குழி தோண்டிப் புதைக்கணும். வேஸ்ட் வாட்டர் பைப்லே ஊத்தக்கூடாது. யாராலே இப்போ மெனெக்கெட முடியுது....
// மீந்து போகும் எண்ணெயைக் குழி தோண்டிப் புதைக்கணும். வேஸ்ட் வாட்டர் பைப்லே ஊத்தக்கூடாது. யாராலே இப்போ மெனெக்கெட முடியுது.... //
வேஸ்ட் வாட்டர் பைப்ல ஊத்தக்கூடாதுங்குறது அங்க உள்ள சட்டமா?
அவங்கள்ளாம் சிக்கன் மட்டன் பிஷ் பீப்னு போர்க்னு எல்லாத்தையும் பொறிச்சுச் சாப்பிடுவாங்களே. அந்த எண்ணெயெல்லாம் குழி தோண்டித்தான் புதைக்கிறாங்களா?
நான் கேட்கணும்னு நினைச்ச கேள்வியை ஜி.ரா அவர்கள் கேட்டுட்டார். இங்க நான், எல்லா எண்ணையையும் வாஷ்பேசின்ல ஊத்திடுவேன். போதாக்குறைக்கு, இப்போ ஒரு மாசமா, ஆயில் புல்லிங் காலைல பண்றேன்னு அதையும் பாத்ரூம் வாஷ்பேசின்ல துப்பிடறேன். சில மாதத்துல தண்ணி போகலைனா மெயின்டெனன்ஸ் ஆட்கள்ட என்ன பிரச்சனைன்னு முகத்தைப் பாவமா வச்சுட்டுக் கேட்கவேண்டியதுதான்.
ஊருக்குள்ளே விடுவார்களோ நியாயமான பயம்தான் நான் ஜப்பான் சென்றிருந்தபோது எடுத்துக் கொண்டுபோன பருப்புப் பொடியை ஏதோ போதைப் பொருள் என்று நினைத்து கேள்விகள் கேட்டார்கள்
வாங்க ஜிரா.
இங்கே கமர்ஸியல் வேஸ்ட் எண்ணை டிஸ்போஸல் தனி. நாம் வீட்டுலேயே காருக்கு எஞ்சின் ஆயில், மாத்துனாக்கூட... பழைய எண்ணெயை அதுக்குன்னு ஒரு இடம் டம்ப் ஸ்டேஷனில் இருக்கு அங்கே கொண்டுபோய் வச்சுடலாம்.
வீட்டுலே மீந்து போகும் வேஸ்ட் எண்ணெயை, ஒரு ப்ளாஸ்டிக் பையிலோ, குப்பியிலோ போட்டு நம்ம வீட்டு ரப்பிஷ் டிஸ்போஸலுக்குக் கொடுத்துருக்கும் சிகப்பு BIN இல் போட்டாலும் சரி. ஆனால் பை பிஞ்சுபோச்சுன்னா... அந்தத் தொட்டியைக் கழுவி எடுக்கணுமே... அதுவுமில்லாமல் இப்பெல்லாம் எண்ணெய்சட்டி வச்சுப் பலகாரம் செய்யறதையே விட்டாச்சு. எப்பவாவது செய்யும்போதும், நான் ரொம்பக் கொஞ்சமா எண்ணெய் ஊத்திச் செய்வேன். கருமி :-) ஒரு ரெண்டு டேபிள் ஸ்பூந்தான் மீந்துருக்கும். அதைத்தான் தோட்டத்தில் குழியில் ஊத்துவேன். இல்லைன்னா... நியூஸ் பேப்பர் துண்டுகளைப் போட்டு வச்சால் கடாயில் இருக்கும் எண்ணெய் உறிஞ்சுரும். அப்புறம் அந்த பேப்பர் துண்டுகள் சிகப்புத் தொட்டிக்கு.
மூணு தொட்டி கொடுத்துருக்கு சிட்டிக் கவுன்ஸில். பச்சை...மக்கும் குப்பைகளுக்கு (கிச்சன் வேஸ்ட்) மஞ்சள் ரீ சைக்கிள் செய்ய பயனாகும் பொருட்கள். எந்தெந்த நம்பர் போட்ட ப்ளாஸ்டிக் பாட்டில் ரீஸைக்கிள்னு பாட்டிலிலேயே நம்பர் இருக்கும். சிகப்பு.... ஒன்னுமே செய்ய முடியாத பொருட்கள்.
ஒரு குப்பை சமாச்சாரம்..... எவ்ளோ எழுத வேண்டி இருக்கு பாருங்க.
கூடுதல் சேதிகளுக்கு இங்கே நம்ம தளத்தில்...........
http://thulasidhalam.blogspot.co.nz/2009/08/blog-post.html
வாங்க ஜிஎம்பி ஐயா.
இங்கே பயோ செக்யூரிட்டிக்கு பயம் அதிகம். கட்டுப்பாடுகள் ஏராளம். நாமும் பொறுப்பா நடந்துக்கிட்டால்தானே நல்லது?
உப்பிட்ட உலர்ந்த நார்த்தங்காய் போன பயணத்தில் ஏர்ப்போர்ட் டஸ்ட்பின்னுக்குள்ளே போயிருச்சு.
@ நெல்லைத் தமிழன்.
மேலே ஜிராவுக்குச்சொன்ன பதில் உங்களுக்கும் தான் :-)
திணை மாவில் ஹல்வா! அதுவும் வால்நட் சேர்த்து.....
பார்க்கும்போதே இனிக்கிறது! நடத்துங்க!
Post a Comment