'ஐய்ய.... உப்புமா'ன்றவங்க..... ஓடிப்போயிருங்க. 'ஹை.... உப்புமா'ன்றவங்க நின்னு பாருங்க.
பலஊர்களில் பல சொந்தங்களிடம் இருந்து கத்துக்கிட்ட பல விஷயங்களைப் பல அடுப்புகளில் செஞ்சு பார்த்தாச். அதுலே கொஞ்சம் சுலபமான செய்முறையில் வீட்டில் எல்லோருக்கும்(!) பிடிச்ச ரெஸிபி இது:-)
இது ஈஸிப்பீஸி இண்டியன் குக்கிங் என்ற நம்ம புத்தகத்தில் வரப்போகும் ரெஸிபி.
தேவையான பொருட்கள்:
செட் 1
அரிசி ஒரு கப்
துவரம்பருப்பு ரெண்டு டேபிள் ஸ்பூன்
சீரகம் முக்கால் டீஸ்பூன்
செட் 2
கடலைப்பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
வேர்க்கடலை 3 டேபிள் ஸ்பூன்
வேகவச்ச வெள்ளைச்சனா - அரைக் கப்
துருவிய தேங்காய் கால் கப்
பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன்
உப்பு ஒரு டீஸ்பூன்
கருவேப்பிலை ரெண்டு இணுக்கு
மிளகாய் வத்தல் நாலு/ அஞ்சு
கடுகு முக்கால் டீஸ்பூன்
எண்ணெய் 4 டேபிள் ஸ்பூன்
வெந்நீர் ரெண்டரைக் கப்.
செய்முறை:
ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் துவரம்பருப்பு, சீரகம் சேர்த்து 30 நொடி ஃபுல் பவரில் வைக்கணும். (நம்மது 1100வாட்)
அப்புறம் அரிசியைச் சேர்த்து நல்லாக் கலக்கிட்டு இன்னும் ரெண்டு நிமிட் வச்சு எடுக்கணும். அரிசியின் நிறம் கொஞ்சம் மாறி வெள்ளையா இருக்கும் இப்போ. நல்லா ஆறியதும் மிக்ஸி ட்ரை ஜாரில் போட்டு ஒரு நிமிட் சுத்துனா ஆச்சு. ரவை கிடைச்சுரும்.
இப்ப இன்னொரு வாணலியை அடுப்பில் வச்சு எண்ணெய் சேர்த்து அது காய்ஞ்சதும் கடுகு, பெருங்காயம் தாளிச்சு, மிளகாய் வத்தலை நாலைஞ்சா ஒடிச்சுப் போட்டு கூடவே அந்தக் கருவேப்பிலையையும் சேர்த்துக்கணும். லேசா வறுபட்டதும் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை சேர்த்து வதக்கணும். இதுக்கு ஒரு நிமிட் நேரம் ஆகும். இப்போ தேங்காய் சேர்த்துக் கிளறி பத்து விநாடி ஆனதும் அரைச்சு வச்சுருக்கும் ரவையைப் போட்டு ஒரு கிளறு. கூடவே உப்பும் சேர்த்துடலாம். அடுப்பை அணைச்சுருங்க.
மேற்படி சமாச்சாரத்தை ரெண்டு மடங்கு அளவில் செஞ்சு ஆறவச்சு, உள்நாட்டு டூருக்கு எடுத்துப்போவேன். போற இடத்துலே கையோடு கொண்டுபோகும் ரைஸ் குக்கரில் உப்புமா பண்ணிக்கலாம். இது இருக்கட்டும். இப்ப சமைச்சு உள்ளே தள்ளுவதைப் பார்க்கலாம்.
வாணலியில் இருக்கும் ரவை மிக்ஸை அப்படியே மைக்ரோவேவ் கிண்ணத்துக்கு மாற்றி, ரெண்டரைக் கப் வெந்நீரையும் சேர்த்து, வேகவச்ச சனா இருந்தால் அதையும் கூடவே சேர்த்துக் கலக்கிட்டு, மைக்ரோவேவ் அவனில் வச்சு ஃபுல் பவரில் 7 நிமிட், 70% பவரில் 7 நிமிட், 50% பவரில் 7 நிமிட் வச்சு எடுத்தால் அரிசி உப்புமா ரெடி. அதன் தலையில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்ப்பது என் வழக்கம்.
நம்ம மைக்ரோவேவில் ஆட்டோ ஸெட்டிங் இருந்தால் மேலே சொன்ன மூணு ஸ்டேஜ் குக்கிங்கில் போட்டுட்டு நேரத்தை வீணாக்காம ஃபேஸ்புக், இன்ட்டர்நெட்ன்னு உலவிட்டு வரலாம்.
இதுக்குத் தொட்டுக்க? நேத்து பண்ண கொத்துமல்லிச் சட்னிதான்!
எஞ்சாயிங் அரிசி உப்புமா நௌ :-)
PINகுறிப்பு: வெள்ளைக் கொண்டைக்கடலையை ஒரு எட்டு மணி நேரம் ஊற வச்சுக்கணும். ராத்திரி ஊறவச்சுட்டுத் தூங்கலாம். காலையில் அதை நல்லா நாலைஞ்சு முறை கழுவிட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு வேகவச்சுக்குங்க. ப்ரெஷர் குக்கரில் போட்டால் ரெண்டே ரெண்டு விஸில் போதும். இல்லைன்னா சனாக் கஞ்சிதான் குடிக்கணும். சாதாரணமா அடுப்புலேயே வச்சு வேகவிட்டாலும் சுலபம்தான். ரொம்ப நேரம் எடுக்காது.
வெந்ததும் தண்ணீரை வடிகட்டிட்டு, ஆறுனதும் சின்ன ஃப்ரீஸர் பைகளில் போட்டு ஃப்ரீஸரில் வச்சுக்கிட்டால் குழம்பு, கூட்டு, இல்லை இதுபோல உப்புமா செய்ய எடுத்துக்கலாம். ரொம்ப போரடிச்சா ஒரு பொதியை எடுத்து மைக்ரோவேவில் டீஃப்ராஸ்ட் செஞ்சு சுண்டலா வேணுமுன்னா கொஞ்சம் தாளிச்சுக்கொட்டி(யும்) தின்னலாம். ஈவ்னிங் ஸ்நாக்ஸ் :-)

17 comments:
ஆஹா.... புதுசா இருக்கே... தளத்திலும் புது வழக்கம். டிஷும் (எனக்குப்)( புதுசு...
புது மாதிரியா இருக்கு. செஞ்சு பார்க்குறேன்மா
my all time favorite
அரிசி உப்புமாலயே இது புதுவகையா இருக்கே. அரிசியை உடைக்க நீங்க சொன்ன வழிமுறை எளிமையா இருக்கு.
வாவ் நல்லாயிருக்கு அக்கா !!
என்னை போல ரவையை தொட முடியாதவங்களுக்கு ரொம்பவே நல்லது ..
..அந்த சனா கஞ்சி :) எனக்கு நிறையநேரம் வெள்ளை பட்டானியில் நடக்கும் :)
இங்கே ஒன் டே ட்ரிப்னா நான் கட்டு சாதம்தானக்கா :)
மைக்ரோவேவில் அரிசி உப்புமா செய்தது இல்லை, கொண்டைகடலை சேர்த்து செய்தது இல்லை செய்து பார்க்கிறேன் துளசி.
நான் விரும்பி உண்ணும் உப்புமா
உடன் கத்தரிக்காய் கொத்சு
காம்பினேசன் இருக்குமாயின்
அதன் சுவையே அலாதி
படங்களுடன்..அருமையான பகிர்வு
வாழ்த்துக்களுடன்
அட நல்ல ஐடியாவாச்சே (மிக்ஸை மாத்திரம் பயணத்தில் கோண்டுசெல்வது). அப்புறம் அவனை ஆபரேட் செய்வது.. அப்புறம் கத்துக்கலாம் (நான் சுடவைப்பது மட்டும்தான் செய்வேன்)
வாங்க ஸ்ரீராம்.
தளத்தில் புதுசு? சமையல் குறிப்பையா சொல்றீங்க? நிறைய போட்டுருக்கேனே.... இப்பதான் பயணம் அதிகமா எழுதறதால் சமையல் குறைஞ்சு போச்சு :-)
வாங்க ராஜி.
செஞ்சு பார்த்துட்டுச் சொல்லுங்க.
வாங்க ரம்யா.
நமக்கும் :-)
வாங்க ஜிரா.
முந்தி காலத்துலே அரிசியைக் கழுவி உலர்த்திட்டு மெஷீனுக்கு அனுப்பி திரிச்சு வாங்குவோம். மிக்ஸி வந்த பிறகு எப்ப வேணுமோ அப்போ கொஞ்சம் ரவை செஞ்சுக்கலாம். வாழ்க்கை இப்போ கொஞ்சம் எளிது :-)
வாங்க ஏஞ்சலீன்.
இங்கேயும் ஒன்டே ட்ரிப் கட்டுச்சோறுதான். நாலைஞ்சு நாள் பயணம், அங்கங்கே தங்கிட்டுப் போறோமுன்னா இது கொஞ்சம் நல்லா இருக்கு. போற இடத்திலே சாப்பாட்டைத் தேடி அலைய வேணாம். அரிசி ரவை இல்லாமல் சாதாரண ரவையிலும் இப்படிச் செஞ்சு கொண்டு போவேன். அதுக்கு வெங்காயம் எல்லாம் போட்டுத் தாளிச்சதுதான்.
வாங்க கோமதி அரசு.
கொஞ்சம் சுலப வேலை என்பதுதான். ரெண்டு பேர் சமையலுக்கு மெனெக்கெட முடியலை :-)
வாங்க ரமணி.
கத்தரிக்காய் கொத்ஸு நமக்கும் ஃபேவரிட்தான். ஃப்ரீஸரில் கத்தரிக்காய் வதக்கல் எப்பவும் ஸ்டாக் உண்டு. தேவைப்பட்டால் உடனே செஞ்சுருவேன்:-) சிதம்பரம் கொத்ஸூ!
வாங்க நெல்லைத் தமிழன்.
அவனில் பலரகம் உண்டு. நான் 3 ஸ்டேஜ் ஆட்டோ குக் அவன் தான் வாங்கிப்பேன். சாதம் செய்ய சுலபம். அப்பப்பக் கிளறியெல்லாம் விட வேணாம். அடுப்பை ஸிம்மில் வைக்கும்வேலையும் இல்லை!
http://thulasidhalam.blogspot.com/2004/12/blog-post_17.html
அரிசி உப்புமா - மாடர்ன் பக்குவத்தில்! But I miss, குமுட்டி அடுப்பில், வெங்கலப் பானையில் அத்தைப்பாட்டி செய்து கொடுத்த அரிசி உப்புமா.
Post a Comment