Monday, June 05, 2017

அரச இலையில் அரசர் பெயர்(இந்திய மண்ணில் பயணம் 13 )

இருபத்தியஞ்சு  கிமீட்டருக்கு ஒன்னேகால் மணி நேரமா? அநியாயமா இருக்கோ?  வர்ற வழியில் இன்னுமொரு ஸ்டாப் போட்டுட்டுத்தானே வந்தோம்:-)  நவீன் கொடுத்த ஐட்டிநரியையொட்டியே..  இலக்கைநோக்கிப் பயணிக்கும்போது, போகும் சாலையை விட்டு  வண்டி சட்னு ஒரு லெஃப்ட் எடுத்து  உள்ளே போகுது. சின்ன சந்துபோல இருக்கும் ஒரு இடத்தாண்டை வண்டியை நிறுத்துன முகேஷ்,  'இந்த சந்துவழியாப் போய் பார்த்துட்டு வாங்க. நல்லாத் தெரியும்'னார்.
என்ன ஏதுன்னு கேக்காம நாங்க இறங்கிப்போறோம்.... ஆறேழடி அகலம்தான்.  ரெண்டு பக்கமும் நெருக்கமா வீடுகள், ஓப்பன் கட்டர்னு டிப்பிக்கல் கிராமம்... இடதுபக்கம் நதி தெரியுது. சந்து, சிமெண்டு போட்ட சந்துதான்.  இடதுபக்கம், பாதையை விடக் கொஞ்சம் தாழ்ந்திருந்த பகுதியில் வீட்டுக்கு முன்னாலே உக்கார்ந்துருந்த  பெரியவர், அரச இலையில் என்னமோ எழுதிக்கிட்டு இருந்தார்.
விசாரிக்காமல் போலாமோ? ' ஜெய்ஸ்ரீராம்'  எழுதறாராம்.  தினம் ஐநூறு.  வயசான காலத்தில் ஒரு பொழுது போக்குத் தேவைதானே? அதுவும் போறவழிக்குப் புண்ணியமா இருக்கட்டுமே!
இடதுபக்கம் இருக்கும் நதியைப் பார்த்துக்கிட்டே நாங்க சந்தில் முன்னேறிப்போறோம்,  என்ன பார்க்கப்போறோமுன்னு  தெரியாமலேயே...
பாதை முடிவடையும் இடத்தில்  கோவில் ஒன்னு. வலதுபக்கம் மேலேறிப்போக படிக்கட்டுகள்.  இடதுபக்கம் நதியை நோக்கி இறங்கும் வழி. இதையொட்டினாப்போலவே  ஒரு மொட்டை மாடி போல ஒன்னு.  சரிவுகளில் நிறைய வீடுகளும்...  ஜெய் கங்கா மையா, ஜெய் மா சாமுண்டின்னு எழுதி இருந்துச்சு.

மொட்டை மாடிப்பக்கம் போய்ப் பார்த்தால்.... கீழே ஒரு கோவில் கோபுரம். நாம் இப்போ நிக்கறது ஒரு மலையோர முக்கு.  ரெண்டு பக்கமும் ரெண்டு நதிகள் வந்து  கண்முன்னே சங்கமம் ஆகுது!  ருத்ரப்ரயாக்!   ஒன்னு அலக்நந்தா, இன்னொன்னு    கேதார்நாத் கிட்டே  இருந்து வரும் மந்தாகினி.
கொஞ்ச நேரம் நின்னு பார்த்துட்டுக் கிளம்பலாமுன்னா மனசு வந்தாத்தானே?  என்ன ஒரு  ஓசை.....   சின்னதா ஒரு வீடியோ க்ளிப் எடுத்துட்டு, இப்பப் பார்த்தா அது ஸைட்வேஸ்லே  காமிக்குது :-(

நிறைய அரசமரங்கள் இருக்கு. அதில் ஒரே ஆட்டம்தான் பசங்க.  அம்மா மட்டும் ஓரமா நின்னு பசங்களைக் கவனிச்சுக்கிட்டு இருக்காங்க:-)
 அம்மான்னா சும்மா இல்லை!
படியேறி மேலே போனால்  கோவில் மூடி இருக்கு. நாரதர் வந்து தவம் செஞ்ச இடம். ருத்ரநாத் சன்னிதி.  வர்ற வழியில் கூட நதிக்கு இறங்கும் படிகள் பக்கத்துலே  ஒரு பாலத்துக்குக்கீழே ஒரு சிவன் இருந்தாரே.....
நாரதர் வந்து தவம் செஞ்சப்ப,  கண்முன் தோன்றி   '   என்ன வரம் வேண்டும் கேள் ?'  என்ற  சிவனிடம்  உம் கையில் இருக்கும் வீணையைத் தாரும்'னு  கேட்டு  வாங்கிக்கிட்டாராம்.  பாவம்....  கையில்  இருந்த ஒன்னும் போச்சு!  இங்கேதான் சிவன் ருத்ரத்தாண்டவம் ஆடுனாருன்னும் சொல்றாங்க.  எதுக்காக?  ஒரு வேளை  'அட நாரதா..... எப்பவாவது  அபூர்வமா வீணை வாசிச்சு சந்தோஷப்பட்டுக்குவேன், இப்ப அதுக்கும் வேட்டு வச்சுட்டேயே'ன்னோ?  
திரும்ப சந்து முனைக்கு வந்து சேர்ந்துட்டோம்.  இதுதான் சரியான இடமாம் சங்கமம் பார்க்க!
மலைப்பாதையில்  திரும்பிப்போய் சேர்ந்து முன்னேறும்போது  இதோ நாம் ஏறிவந்த  சாலைன்னு க்ளிக்கிக்கிட்டே வர்றேன். பாதையில்  மண் சரிவாகிக்கிடக்கு. அடராமா.... இப்போதானே  அதைக் கடந்துருந்தோம் ஒரு அரைமணிக்கு முன்னால்.....   நம்பவே முடியாத வகைதான்.
அடுத்த பத்தாவது நிமிட்டில் ஹொட்டேலுக்குப் போயாச்சு. மோனல் ரிஸார்ட். ருத்ரப்ரயாகை.  ஊருக்குள்ளே போகவேணாம்.  முதலிலேயே வந்துருது. இன்னும் மூணு கி.மீ  போனால்தான் ஊர்.  செக்கின் ஆனதும் 616 எண் அறைக்குப்போய்  பால்கனிக் கதவைத் திறந்தால்  அலக்நந்தா.....!!!
எல்லா அறைகளுமே (52 அறைகள்) பின்பக்கத் தோட்டத்தையும்  நதியையும்  பார்க்கும்படியான அமைப்பு. நல்ல வசதியான அறைகள்தான். ஒரே ஒரு கஷ்டம்.... வைஃபைக்கு மாடியேறத் தெரியாது :-(
லாபியில் போய் உக்கார்ந்து  வலை கிடைச்சதும் சடங்குகளை முடிச்சுக்கிட்டு மாடிக்கு வந்து ஓய்வு.  ராத்திரி சாப்பாடும் பேக்கேஜிலே உண்டு என்பதால் எங்கேயும் போகவேணாம். கெமெரா பேட்டரி, செல்ஃபோன் எல்லாம் சார்ஜரில் போட்டுட்டு ஒரு குட்டித்தூக்கம்.

  இந்த ருத்ரப்ராயக்,  சார்தாம் போகும் பயணிகளுக்கு  நடுசென்டரான இடம்.  இங்கிருந்துதான் கேதார்நாத், பத்ரிநாத்  போகும் பாதைகள் பிரியுது.  வரும்போதே  ஒரு இடத்தைக் கடக்கும்போது.... 'இங்கிருந்து கேதார்நாத் போக ஹெலிகாப்டர் சர்வீஸ் இருக்கு'ன்னார் முகேஷ்.  வெறும் ஆறாயிரம் ரூபாய்தானாம்.  ஒருநாள் போயிட்டு  வந்துடலாமேன்னு ஆசை. ஆனால் அங்கே இறக்கி விட்டபின்  அஞ்சு கிமீ தூரம் நடந்து போகணுமாம் கோவிலுக்கு.  'நடக்குற' காரியமா?   போயிட்டுப் போகுது போ.....

 மோனல் அறையில் வைஃபை  இல்லாததால்  சாயங்காலம் ஒரு ஏழு மணி போல லாபிக்குப் போனால் பயங்கரக் கூட்டம்!  பயணிகள்  சார்தாம்  போறவங்க, போய் வந்தவங்கன்னு   .... நாலைஞ்சு பஸ் நிக்குது.

இங்கெயே உக்கார்ந்து வலை மேய்ஞ்சுட்டு எட்டு மணிக்குச் சாப்பிடப் போனோம். பஃபே டின்னர்தான். இண்டியன் ஸ்டைல்.  நமக்குத் தெரிஞ்ச எல்லா வட இந்திய சாப்பாட்டு வகைகளும் இருந்துச்சு. டைனிங் ஹாலில் அப்படியொரு கூட்டம்.  உக்கார இடம் தேடவேண்டியதாப் போச்சு. அடுத்த பந்தி ஆகட்டுமேன்னு திரும்பி வந்து  வலைமேயல்.  இதுலே மட்டும் நுழைஞ்சா நேரம் போறதே தெரியறதுல்லே :-)
அப்புறம் போய் சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு அறைக்குப் போயிட்டோம்.  ஆத்தங்கரை, எக்கசக்கமான மரங்கள், தோட்டம் இருப்பதால் பால்கனிக்கதவை ராத்ரியில் மூடி வைக்கணும்தான்.  கொஞ்சம் திறந்து  அலக்நந்தாவைப் பார்த்துட்டுக் கதவை மூடறதுக்குள்ளே பூச்சி இனங்கள்   உள்ளே வந்துட்டாங்க. ஒருத்தருக்குக் கால் நொண்டி வேற  :-(  எங்கியோ போய் அடி வாங்கி இருக்கு.
மறுநாளைக்கான  துணிமணிகளை எடுத்து வெளியே வச்சுட்டுத் தூங்கணும்.

தொடரும்....  :-)


14 comments:

said...

ஒரு சேஞ்சுக்கு முழு போஸ்ட்டும் ஒரு வரி மிஸ் பண்ணாம படிச்சுட்டேன். :-) வீடியோ அழகு. கார்ல உக்காந்திருக்கிற குட்டியரும் அழகு.

said...

அரச இலையில் அரசர் பெயர் என்றதும் சின்னன்ல படிச்ச கதை நினைவுக்கு வந்துது. 'ஆடு என் ஊரைத் தின்றது,' என்பது போல ஒரு கதை. அதைத் தான் விபரமா சொல்றீங்க என்று நினைச்சேன். ;( நானே கூகுள் பண்ணிப் பார்க்கப் போறேன்.

said...

வைஃபைக்கு மாடி ஏறத் தெரியாது..சிரமம்தான்.

said...

அருமை நன்றி

said...

படத்தையெல்லாம் பாத்தா... பேசாம அந்த ஊருக்குப் போயிறலாம் போலத் தெரியுது. பக்கத்துலயே ஆறு ஓடுறதைப் பாத்துக்கிட்டு அந்தப் பெரியவர் மாதிரி ஆத்தோரம் உக்காந்து எதையாவது எழுதிக்கிட்டு படிச்சுக்கிட்டு முருகன் பேரைச் சொல்லிக்கிட்டு நிம்மதியா இருந்துட்டுப் போயிறலாம். எதுக்கும் கொடுத்து வைக்கனுங்குறது சரியாத்தான் இருக்கு.

அம்மாக்கள் சும்மா இருக்குற மாதிரிதான் இருக்கும். ஆனா என்ன நடக்குதுன்னு கண்காணிச்சுக்கிட்டேதான் இருப்பாங்க. மனித அம்மாவா இருந்தாலும் சரி. விலங்கு அம்மாவா இருந்தாலும் சரி.

ஹோட்டல் அமைப்பெல்லாம் நல்லாவே இருக்கு. சாப்பாடு நார்த்திண்டியன் திண்டித்தனமா இருந்தாலும் நல்லாருக்கும்னு தோணுது. அவங்க பக்கத்து உணவெல்லாம் அவங்க ஊர்ல நல்லாயிருக்கும் இல்லையா.

said...

அதுக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும் போது பார்த்துவிட வேண்டும் என்பது இப்போது நினைத்தால் முடிகிறதா

said...

அந்த அரச இலையை ஒரு க்ளோசப் எடுத்திருக்கக் கூடாதோ! இடங்கள் அழகு. படப்பகிர்வுக்கு நன்றி.

said...

வாங்க இமா.

கதை கிடைச்சால் இங்கேயும் பகிந்துக்கலாம்.

குட்டியர் அசல் வெள்ளி. நகைக்கடைக்காரர் வண்டி இது. வாங்கி ட்ராவல்ஸ்க்கு விட்டுருக்கார். கடையில் தேடிப்பார்த்தேன்.... கிடைக்கலை. ஆனால் மனசுலே இருக்கு.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

நிறைய இடத்துலே இப்படித்தான். தமிழ்நாட்டிலும்கூட மாடியேறச் சொல்லித்தரலை....

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றி.

said...

வாங்க ஜிரா.

நானும் ஆத்தங்கரை வீடு இருந்தால் நல்லா இருக்குமேன்னு நினைச்சேன். அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணாமா?

அம்மா... அம்மாதான் !

அவுங்கவுங்க சமையல்தான் அவுங்கவுங்களுக்கு நல்லா வரும்.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

இளமையில் பயணம் அருமை. ஆனால்.... நேரம் கிடைப்பதில்லை. காசு சம்பாரிப்பதில் கவனமா இருக்கோம். இப்போ காசு, நேரம் இருக்கு. ஆனால் உடல் ஆரோக்கியம் இல்லை. ஒன்னு இருந்தால் ஒன்னு இல்லை..... ப்ச்.

said...

வாங்க ஸ்ரீராம்.

ஆமாம். தோணலையே........ :-(

said...

மந்தாகினியும் அலக்நந்தாவும் இணையும் இடம்..... அழகான இடம். கங்கைக் கரையோரம் இப்படி ஒரு இடத்தில் சில நாட்களாவது தங்க வேண்டும் - அலுப்பு தீர!